12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/09/2019
படிவங்கள் மற்றும் கோப்புகள்
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
கீழ்கண்ட எந்த செயற்கூறானது ஒரு கோப்பிலுள்ள அனைத்து உள்ளடக்கத்தையும் படிக்கின்றது.
fgets()
file – get-contents()
fread()
readfile()
2.
PHP என்பது _______ வகை மொழியாகும்
பயனர் பக்கம் (client side)
சேவையக பக்கம் (server side)
பொருள் பக்கம் (object side)
கோப்பு பக்கம் (file side)
3.
நீங்கள் கோப்பினை ஒவ்வொரு எழுத்தாகப் படிக்க __________ எந்த செயற்கூறினை பயன்படுத்தலாம்?
fopen ()
fread ()
fgetc ()
file ()
4.
கீழ்க்கண்டவற்றில் எதனை கடவுச்சொற்கள் (password) அல்லது வேறு (உணர்வுக்காக) முக்கிய தகவல்களை அனுப்பும் போது பயன்படுத்த கூடாது?
GET
POST
REQUEST
NEXT
5.
தரவினை சேகரிக்க $ -GET மாறியினை நீங்கள் பயன்படுத்தும் போது, அந்த தரவினை கீழ்கண்ட யாரால் காணமுடியும்?
யாருமில்லை
பயனர் மட்டும்
எல்லோராலும்
தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர்.
6.
கோப்பினை திறக்கும் செயற்கூறின் பயன் யாது?
7.
உரைப்பெட்டி (Textbox) மற்றும் உரைபரப்பு (Textarea ) ஒப்பிடுக.
8.
HTML ல் உள்ள Browse பொத்தானுக்கான கட்டளை அமைப்பினை எழுது
9.
படிவத்தை கையாளும் செயற்கூறுகள் பற்றி சிறுகுறிப்பு வரைக.
10.
GET மற்றும் POST வழிமுறையினை வேறுபடுத்துக.
11.
படிவத்தை கையாள்வதில் உள்ள சிறப்பம்சங்களை எழுது.
12.
கோப்பினைக் கையாளும் செயற்கூறுகளை பற்றி விரிவாக விளக்குக.
13.
HTML படிவ உறுப்புகளை பற்றி விரிவாக எழுதுக.
1.
(b)
file – get-contents()
2.
(b)
சேவையக பக்கம் (server side)
3.
(c)
fgetc ()
4.
(a)
GET
5.
(c)
எல்லோராலும்
6.
PHP கோப்பினை திறத்தல்:
1. fopen ( ) என்பது PHP ல் உள்ள அமைப்பு செயற்கூறாகும்.
2. இந்த செயற்கூறானது சேவையகத்திலுள்ள ஒரு கோப்பினைத் திறக்க உதவுகிறது.
3. இது இரண்டு அளவுருக்களைக் கொண்டுள்ளது.
4. கோப்பின் பெயரைக் குறிப்பிட ஒன்று மற்றொன்று எந்த முறைமையில் (mode) கோப்பினைத் திறக்க வேண்டும் என்று குறிப்பிடப் பயன்படுகின்றது.
7.
| உரைப்பெட்டி (Textbox) | உரைபரப்பு (Textarea) |
| HTML படிவத்தில் ஒரு வரி உரையை உள்ளிடப் பயன்படுகிறது. | HTML படிவத்தில் பல வரி உரையை உள்ளிடப் பயன்படுகிறது. |
| < Input > ஓட்டின் மூலம் உருவாக்கப்படுகிறது. | < Textarea > ஓட்டின் மூலம் உருவாக்கப்படுகிறது. |
8.
Browse பொத்தானிற்கான கட்டளை அமைப்பு:
< input type ="file"name ="name" id ="id1" >
9.
(i) fopen() என்பது PHP கோப்பினை திறக்கப்பட உள்ள ஒரு அமைப்பு செயற்கூறாகும்.
(ii) fread() செயற்கூறானது திறக்கப்பட்ட ஒரு கோப்பினை படிப்பதற்கு உதவுகின்றது.
(iii) fclose() செயற்கூறானது திறக்கப்பட்ட ஒரு கோப்பினை மூடுவதற்கு உதவுகின்றது.
(iv) fwrite() செயற்கூறானது கோப்பில் எழுத உதவுகிறது.
(v) file_put_contents() செயற்கூறானது ஒரு கோப்பினை சேர்க்க உதவுகிறது.
10.
| GET வழிமுறை | POST வழிமுறை | |
| 1 | உள்ளீடு செய்யப்படும் தரவானது URL முகவரி வழியாக சேவையகத்திற்கு அனுப்பப்படுகிறது. | உள்ளீடு செய்யப்படும் தரவானது கிளைக் கணிப்பொறியின் HTTP request னுடைய கோரிக்கை உடற்பகுதியில் சேமிக்கப்படுகிறது. |
| 2 | உள்ளீடு செய்யப்பட்ட அனைத்துத் தரவினையும் எல்லோரும் பார்க்க முடியும். | உள்ளீடு செய்யப்பட்ட தரவுகளை மற்றவர் பார்க்க முடியாது. |
| 3 | பாதுகாப்பற்றது | பாதுகாப்பானது. |
11.
1. HTML படிவ உறுப்புகளின் முக்கிய நோக்கம் பயனரிடமிருந்து தரவுகளைச் சேகரிப்பதாகும்.
2. HTML படிவ உறுப்புகளில் பயனர் உள்ளீடுகளை வழங்கி submit பொத்தானைக் கிளிக் செய்யும் பொழுது, கோரிக்கை (Request) ஒன்று உருவாக்கப்பட்டு படிவ ஓட்டில் Action பண்புக் கூறில் உள்ள PHP கோப்பினை அடைகின்றது.
3. அனைத்து உள்ளீட்டு மதிப்புகளும் தொகுக்கப்பட்டு Post வழிமுறை (அ) GET வழிமுறை மூலம் சேவையகத்திற்கு அனுப்பப்படுகிறது.
4. Method என்பது HTML -ல் உள்ள படிவ உறுப்பின் ஒரு பண்புக்கூறாகும்.
5. தரவானது சேவையகத்தை அடையும் பொழுது $_Post மற்றும் $_GET என்ற இரண்டு PHP மாறிகள் தரவினை சேகரித்து அதற்கான பதிலையும் (Response) தயார் செய்கின்றன.
12.
1. PHP கோப்பினை திறத்தல்:
1) fopen ( ) என்பது PHP ல் உள்ள ஒரு அமைப்பு செயற்கூறாகும்.
2) இந்த செயற்கூறானது.
3) இரண்டு அளவுருக்களைக் கொண்டுள்ளது.
4) கோப்பின் பெயரைக் குறிப்பிட ஒன்று மற்றொன்று எந்த முறைமையில் (mode) கோப்பினைத் திறக்க வேண்டும் என்று குறிப்பிடப் பயன்படுகின்றது.
கட்டளை அமைப்பு:
$file _ Object= fopen(" File Name " ", "Read/ WriteMode") or die("Error Message! ");
எ.கா:
< ?PHP
$myfile = fopen("Student. txt", "r") or die("Unable to open file! ");
? >
2. PHP கோப்பினை படித்தல்: fread ( ) செயற்கூறு திறந்துள்ள கோப்பிலிருந்து படிக்க உதவுகின்றது. File object என்பது fopen செயற்கூறிலிருந்து பெறப்படுகின்றது.
கட்டளை அமைப்பு:
fread($file _ Object,filesize("FileName"));
எ.கா:
< ?php
fread($myfile,filesize(" Student. txt"));
? >
3. PHP கோப்பினை மூடுதல்:fclose ( )
செயற்கூறானது திறக்கப்பட்ட ஒரு கோப்பினை மூடுவதற்கு உதவுகின்றது File object என்பது fopen செயற்கூறிலிருந்து பெறப்படுகின்றது.
கட்டளை அமைப்பு: fclose($file _Object);
எ.கா:
< ?php
$myfile = fopen("student.txt", "r");
// some code to be executed ....
fclose($myfile );
? >
4. PHP கோப்பினை எழுதுதல்: fwrite ( ) செயற்கூறானது கோப்பில் எழுத உதவுகிறது.
கட்டளை அமைப்பு:
fwrite($myfile, $txt);
எ.கா:
< ?php
$myfile = fopen("new_school_file. txt","W")
or die("Unable to open file! ");
$txt = "School Name\n";
fwrite($myfile, $txt);
$txt = "Student Name\n";
fwrite($myfile, $txt);
fclose($myfile );
? >
5. PHP கோப்பினை சேர்த்தல்:
file_put_contents ( ) செயற்கூறானது ஒரு கோப்பினைச் சேர்க்க உதவுகின்றது.
கட்டளை அமைப்பு :
file_put_contents(file,data,mode,context)
எ.கா:
< ?php
$txt="student id";
$myfile =file_put_contents('logs.txt',
$txt.
PHP_EOL, FILE_APPEND |LOCK_EX);
? >
13.
HTML படிவத்தில் படிவ உறுப்புகளின் வகைகள் பின்வருமாறு:
1. உரைபெட்டி (Text box)
2. தேர்வுப்பெட்டி (Check box)
3. கோப்பு தேர்ந்தெடுத்தல் (File select)
4. பொத்தான்கள் (Buttons)
5. ரேடியோ பொத்தான் (Radio button)
6. படிவ ஒட்டு (Form tag)
1. உரையினை உள்ளிட உரைப்பெட்டி (Text box) மற்றும் உரை பரப்பு (Text area) போன்ற உறுப்புகள் உள்ளன.
2. Submit பொத்தான், reset பொத்தான் மற்றும் cancel பொத்தான் போன்ற பொத்தான்கள் உள்ளன.
3. தேர்வு பெட்டி (Check box) HTML படிவத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மதிப்பினை தேர்ந்தெடுக்கும் அம்சமாகும் .
4. ரேடியோ பொத்தானும் தேர்வுப்பெட்டி போன்றதுதான், ஆனால் ரேடியோ ஒரு மதிப்பினைத் தேர்வு செய்ய முடியும்.
5. கிளை கணிப்பொறியிலிருந்து சேவையகக் கணினியில் உள்ள ஒரு கோப்பினைத் தேர்வு செய்ய File Select உறுப்பு சிறந்ததாகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards