12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 20/01/2020
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
பயனாளர் சேவையகக் கட்டமைப்பு வகைகள் யாவை?
2.
சிட்டை என்றால் என்ன?
3.
தரவுத்தளங்கள் எவ்வாறு பிரிக்கப்படுகின்றன?
4.
உடன் நிகழ் பரிவர்த்தனை என்றால் என்ன?
5.
TCP / IP என்றால் என்ன?
6.
இணையத்தைப் பயன்படுத்தும் அளவிற்கு மக்களுடைய வாழ்க்கையை மாற்றியமைத்த புதுமையான கண்டுபிடிப்புகள் எவை?
7.
SQL மற்றும் MySQL என்றால் என்ன?
8.
விற்பனை முனை (POS) என்றால் என்ன?
9.
நுண் மின்செலுத்தல் முறை பரிவர்த்தனையில் படிநிலைகளை விளக்குக.
10.
மின் - வணிகத்தில் ஒரு வணிக நிறுவனத்திற்கான குறைகளைப் பட்டியலிடுக.
11.
மின் வணிகத்தின் முக்கிய பங்கேற்பாளர்கள் யார்?
12.
ஈத்தர்நெட் வடமிடல் என்றால் என்ன?
13.
தானமைவு உரைப்பாய்வு மூலம், பிற மென்பொருள்களிலிருந்து உரையை எவ்வாறு செருகுவாய்?
14.
TGA என்றால் என்ன?
15.
பாதுகாப்பு அடையாளம் என்றால் என்ன?
16.
mysqli_connect_error( ) செயற்கூறை வரையறு.
17.
for மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக.
18.
கிளிப்பிங் கருவி பயன்படுத்துவது என்ன?
19.
Switch கூற்றின் பயன் என்ன?
20.
திறந்த மூல மென்பொருள் வரலாற்றை விளக்குக.
21.
வலை சேவையகம் என்றால் என்ன?
22.
தகவல் கசிவு பற்றி எழுதுக.
23.
ஒட்டுப்பலகை என்றால் என்ன?
24.
பல்லூடகத்தில் நிழற்பட கூறினை வகைப்படுத்துக.
25.
BOSS - குறிப்பு வரைக.
1.
பயனாளர் சேவையகக் கட்டமைப்பை மூன்று வகைப்படுத்தலாம்.
1. ஒற்றை அடுக்கு கட்டமைப்பு
2. இரண்டு அடுக்கும் கட்டமைப்பு
3. பல/மூன்று அடுக்கு கட்டமைப்பு
2.
(i) சிட்டை என்பது அதிகபட்சமாக 63 எழுத்துக்களைக் கொண்ட ஒரு சரம். ஒரு மட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு முனையும் வேறுபட்ட சிட்டைகளை கொண்டிருக்க வேண்டும்
(ii) களப்பெயரின் தனித்துவத்தை உறுதிப்படுத்துகிறது
3.
தரவுத்தளங்கள் பரவலாக
1. வலுவான தரவுத்தளம்.
2. எளிய தரவுத்தளம் என பிரிக்கப்படுகின்றன.
1. வலுவான தரவுத்தளங்கள் :
எல்லா டெஸ்க்டாப் பயன்பாடுகளுக்கும் துணை புரிகின்றன.
2. எளிய தரவுத்தளங்கள் :
இணைய பயன்பாடுகளை ஆதரிக்கிறது.
4.
1. பல பயனர்கள் ஒரே பொருளை ஒரே நேரத்தில் அணுகுவதன் மூலமாக செய்யும் பரிவர்த்தனையே உடன் நிகழ் (concurrent) பரிவர்த்தனை எனப்படும்.
2. தரவு மதிப்பில் உள்ள மாற்றங்கள் ஏதேனும் ஒரு கொடுக்கப்பட்ட நேரத்தில் நிலையானதாக இருக்கும். இந்த பண்பு வெற்றிகரமான பரிவர்த்தனைக்கு உதவி புரிகிறது.
5.
1. Transmission Control Protocol / Internet Protocol (TCP / IP) என்பது இணையத்தின் அனைத்து கணினிகளிலும் தகவல் தொடர்புகளை நிர்வகிக்கும் நெறிமுறைகளின் தொகுப்பாகும்
2. TCP / IP நெறிமுறை தகவலை எவ்வாறு தொகுத்து அனுப்புவது, பெறுவது மற்றும் அதனுடைய இலக்கு இடத்தை ஏற்பாடு அடைவது என்றும் கூறுகிறது.
6.
1. மொபைல் தொழில்நுட்பம்
2. சமூக வலைத்தளங்கள்.
எ.கா: முகநூல் (Facebook)
7.
SQL: நிரலாக்கத்தில் பயன்படுத்தப்படும் ஒரு காலம் சார்ந்த மொழியாகும். இது உறவுநிலைக் தரவுத்தள மேலாண்மை அமைப்பில் தரவை வடிவமைக்கவும். மேலாண்மை செய்யவும் பயன்படுகிறது.
MySQL: திறந்த மூல உறவுநிலை தரவுத்தள மேலாண்மை அமைப்பு ஆகும். (Open Source RDBMS)
8.
(i) விற்பனை முனையின் (POS) - இது வாடிக்கையாளர்கள் கடன் மற்றும் பற்று அட்டைகள் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கு பணம் செலுத்த வழிவகை செய்கிறது.
(ii) வாடிக்கையாளர் வசதிக்காக சில வங்கிகள் POS முனையங்களில் பற்று அட்டைகளைப் பயன்படுத்திப் பணத்தை பெற அனுமதிக்கின்றன.
9.
(i) படி 1: செயலாக்குபவர் வாடிக்கையாளரின் அடையாளத்தை உறுதிசெய்த பின் பணத்துக்கு மாற்றாக நுண் பணம் வழங்குகிறார்.
(ii) படி 2: வாடிக்கையாளர், நிகழ்நிலைச் சேவை வழங்குநரிடம் நுண் கட்டணங்களை செலுத்தி விரும்பிய பொருட்கள் அல்லது சேவைகளை அவர்களிடமிருந்து பெறுகிறார்
(iii) சேவை வழங்குநர் வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்ட நுண் கட்டணங்களை செயலாக்குபவர்களிடம் கொடுத்து பணத்தைப் பெறுகிறார்.
10.
1. மக்கள் அனைத்துப் பொருட்களையும் நிகழ்நிலையில் வாங்குவதில்லை
2. போட்டி மட்டும் பெருநிறுவன பாதிப்பு
3. பாதுகாப்பு
4. வாடிக்கையாளர் பற்றிணைப்பு
5. திறன்மிக்க ஊழியர்களின் பற்றாக்குறை
6. பரிவர்த்தனைகள் அளவு மற்றும் பாதிப்பு.
11.
வணிக நிறுவனங்கள், நுகர்வோர் அரசாங்கம் (நிர்வாகம் என்றும் அழைக்கப்படுகிறது) ஆகியோர் மின் வணிகத்தில் முக்கிய பங்கேற்பாளர்கள் ஆவர்.
சில நேரங்களில் ஊழியர்களும் (முறைசாரா தொழிலாளர்கள்) இந்த அமைப்பில் ஈடுபடலாம்.
12.
ஈத்தர்நெட் வடமிடல் (Ethernet Cabling) என்பது ஈத்தர்நெட் வடங்களைப் பயன்படுத்தி கணினிகளை மற்ற சாதனங்களுடன் இணைக்கும் செயலாகும்.
13.
1. உரையை ஏற்றுவதற்கு முன்பு, பட்டிப்பட்டையில் Layout > Autoflow என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் உரையை ஏற்ற வேண்டும். இப்பொழுது உரையேற்றப்பட்ட பணிக்குறி சற்று வேறுபட்டு squiggly arrow வாகத் தோன்றும்.
2. இப்பொழுது உரையேற்றப்பட்ட பணிக்குறியைப் பக்கத்தின் மேல் பகுதியில் கிளிக் செய்தால், உரையானது தானமைவாகத் தேவையான அளவிற்கு அடுத்தடுத்தப் பக்கங்களில் நிரப்பப்படும்.
14.
TGA (Targa) :
1. அதிக தெளிவுத்திறன் நிழற்படங்களுக்கான முதல் பிரபலமான வடிவமாகும்.
2. பெரும்பான்மையான ஒளிக்காட்சி பிடிப்பு பலகைகள் TGA-வை ஆதரிக்கின்றன.
15.
பாதுகாப்பு அடையாளம் என்பது பயனர்களை அடையாளம் கண்டு அங்கீகரிக்கப் பயன்படும் வன்பொருள் கூறு.
16.
PHP நிரல் மொழி வழியாகத் தரவுத்தள சேவையகக் கணினியை இணைக்கும் போது ஏற்படும் பிழை விவரங்களைத் தரப் பயன்படும் செயற்கூறு. பிழையேதுமில்லை எனில், NULL என்ற மதிப்பைத் திருப்பியனுப்பும்.
கட்டளை அமைப்பு:
mysqli_connect_error();
17.
for (init counter; test counter; increment counter) {
code to be executed;
}
18.
கிளிப்பிங் கருவி: வடத்துடன் ஈத்தர்நெட் இணைப்பியை இணைக்கப் பயன்படும் ஒரு கருவி
1. வடத்தை தேவையான நீளம் வெட்டிக்கொள்ளவும்.
2. வடத்தின் இருபுறமும் இருந்து 1 அங்குல அளவிற்கு பாதுகாப்பு உறையை நீக்கவும். இதனால் முறுக்கப்பட்ட இணை கம்பிகள் வெளியே தெரியும்.
3. கம்பி அகற்றப்பட்ட பிறகு, சிறிய கம்பிகளை அவிழ்த்து, சரியான வயரிங் அமைப்பில் வைக்கவும். (T568 B பொதுவாக விரும்பப்படுகிறது).
19.
Switch கூற்று பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் பல்வேறு செயல்களைச் செய்யப் பயன்படுகிறது.
20.
திறந்த மூல மென்பொருள் என்பது மென்பொருளின் மூலக்குறிமுறையை பயன்படுத்த அல்லது மாற்றம் செய்ய பயனர் மற்றும் பிற நிரலருக்கு வாய்ப்பு வழங்கும் முறை ஆகும்.
1. திறந்த மூல மென்பொருள் என்பது பலரது கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டு அனைவரும் இலவசமாக அணுக கூடியதாக உள்ளது
2. பத்தாண்டுகளுக்கு பின்பு அதாவது 1990களில் உருவாக்கப்பட்ட Open Source Software கருத்துருவானது மென்பொருள் மாற்றம், தொடங்குறிமுறை திருத்தம், உரிமம் வழங்கல் மற்றும் விநியோகித்தல் ஆகியவை வலியுறுத்துகிறது
21.
வலை சேவையகம் என்பது பயனர்களுக்கு வலை பக்கங்களை உருவாக்கும் கோப்புகளை வழங்கப் பயன்படுத்தும் ஒரு மென்பொருள் ஆகும்.
22.
1. மின்-ஆவணங்களை இடைமறித்து திருடுதல் தகவல் கசிவு என அழைக்கப்படுகிறது.
2. மின்-வணிகத்தில் வர்த்தக ஆவண இரகசியங்கள் கசிவு இரண்டு முக்கிய பிரிவுகளைக் கொண்டுள்ளது.
3. விற்பனையாளர் மற்றும் வாடிக்கையாளருக்கு இடையிலான பரிமாற்றத்தின் உள்ளடக்கம் மூன்றாம் தரப்பினரால் திருடப்படுவது.
4. வணிகர் (அ) வாடிக்கையாளரால் வழங்கப்பட்ட ஆவணங்கள் மற்றவரால் சட்ட விரோதமாக பயன்படுத்தப்படுவது.
23.
கருப்பு நிற எல்லைக்கோட்டின் உள்ளே இருப்பது ஒரு ஆவணத்தின் பக்கம் ஆகும். கருப்பு நிற எல்லைக் கோட்டிற்கு வெளியில் உள்ள பகுதி ஒட்டுப்பலகை (Pasteboard) என அழைக்கப்படுகிறது.
24.
1. பிட் மேப் (அ) செவ்வக படம்.
2. வெக்டர் படங்கள்
25.
(i) Bharat Operating System Solution என்ற இயக்க அமைப்பானது Center for Development of Advanced Computing (C-DAC) என்ற இந்திய அரசமைப்பால் உருவாக்கப்பட்டது.
(ii) இந்தியாவில் திறந்த மூல மென்பொருள் பயன்பாட்டை அதிகரிக்கப் பயன்படுகிறது.
(iii) பல இந்திய மொழிகளில் வேலை செய்வதை ஆதரிக்கிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards