12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 20/09/2019
கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம்
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
E-Readers என்றால் என்ன?
2.
அக்கினிப் போர்கள் என்றால் என்ன?
3.
நச்சுநிரல் என்றால் என்ன?
4.
ஹேக்கர்ஸ் என்பவர் யார்?
5.
வீட்டில் வலையமைப்புக்கள் இணைக்கப்படும் வழிகள் யாவை?
6.
வீட்டில் உள்ள வலையமைப்பின் பயன் யாது?
7.
வளப்பகிர்வு என்றால் என்ன?
8.
இணையத்தைப் பயன்படுத்தும் அளவிற்கு மக்களுடைய வாழ்க்கையை மாற்றியமைத்த புதுமையான கண்டுபிடிப்புகள் எவை?
9.
முனையம் என்றால் என்ன?
10.
கம்பி மற்றும் கம்பியில்லா வலையமைப்புகள் இடையே உள்ள வேறுபாடு.
11.
மொபைல் வலையமைப்பின் சில அம்சங்களை பட்டியலிடுங்கள்.
12.
கணினி வலையமைப்பின் பொதுவான பயன்கள் என்ன ?
13.
இணையத்தை வரையறு.
14.
கணினி வலையமைப்பு வரையறு.
1.
E-Readers (அ) E-book Readers என்பது மொபைல் எலெக்ட்ரானிக்ஸ் மூலம் டிஜிட்டல் இ-புத்தகங்களைப் படிக்கும் நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஓர் சாதனமாகும்.
2.
(i) அக்கினிப் போர்கள் இணையதள பயனர்களிடையே நடைபெறும் ஒரு வாக்குவாதம்.
(ii) ஒருவருக்கொருவர் தனிப்பட்ட தாக்குதல்களை மின்னஞ்சல் மூலம் மற்றும் ஆன்லைன் தொடர்புகளின் பிற வடிவங்களில் தூண்டிவிடுவதாகும்.
3.
தன்னைத்தானே நகல் கொள்ளும் திறனுடைய தீங்கு விளைவிக்கக்கூடிய தீம்பொருள் (அ) கணினி வார்ம்ஸ் நச்சுநிரல் எனப்படும்.
4.
ஹேக்கர்ஸ் என்பவர்கள் திறமையான கணினி வல்லுநர்கள். அவர்கள் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி மற்றவர்களின் கணக்குகளை அணுகுவர்.
5.
வீட்டில் வலையமைப்புகள் இரு வழிகளில் இணைக்கப்பட்டுள்ளன.
1. கம்பி வலையமைப்பு
2. கம்பியில்லா வலையமைப்பு
(i) கம்பி மூலம் இணைக்கப்பட்ட பிணைய அமைப்பு. உதாரணமாக ஒலிபெருக்கி, cctv, அச்சுப் பொறிகள் மற்றும் வருடிகள் போன்ற சாதனங்கள் கேபிள்கள் மூலமாகவும் இணைக்கப்படுகிறது.
(ii) கம்பியில்லா வலையமைப்பு கேபிள்களே இல்லாமல் டேப்லெட் கம்ப்யூட்டர், உட்புற கேமராக்கள் மற்றும் e-readers போன்ற சாதனங்களை இணைக்கிறது.
6.
1. வீட்டில் உள்ள வலையமைப்பு என்பது கணினிகள், மொபைல், ஸ்பீக்கர்கள், கேமரா, விளையாட்டு முறை மற்றும் அச்சுப் பொறி போன்ற வலையமைப்பு வழியாக ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட சாதனங்களின் குழுவாகும்.
2. வீட்டு வலையமைப்பில் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டில் பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
7.
1. வளப்பகிர்வு என்பது பல அமைப்புகள் அணுகும் ஒரு சாதனமாகும். இது அனைத்து வகையான நிரல்கள், உபகரணங்கள் மற்றும் கிடைக்கக்கூடிய தரவுகளை வலையமைப்பு வழியாக அதன் இருப்பிடத்தை பொருட்படுத்தாமல் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.
2. இங்கு வளம் என்பது அச்சுப்பொறிகள் ஸ்கேனர், PDA, தொலைநகல் இயந்திரம் மற்றும் மோடம்கள் போன்றவை ஆகும்.
8.
1. மொபைல் தொழில்நுட்பம்
2. சமூக வலைத்தளங்கள்.
எ.கா: முகநூல் (Facebook)
9.
1. வலையமைப்பில் இணைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கணினியும் முனையம் என அழைக்கப்படுகிறது.
2. தரவுகளை அனுப்புவது மூல முனையம் என்றும் தரவுகளை பெறுவது இலக்கு முனையம் என்றும் அழைக்கப்படுகிறது.
3. வலையமைப்பில் உள்ள முனையங்கள் அதன் IP முகவரிகளின் மூலம் அடையாளம் காணப்படுகிறது.
10.
| குறிப்பு | கம்பி வலையமைப்பு | கம்பியில்லா வலையமைப்பு |
| பரிமாற்ற ஊடகம் | தாமிரக்கம்பிகள், கண்ணாடி இழை கம்பிகள் ஈதர்நெட் | மின்காந்த அலைகள், ரேடியோ அலைகள், அகச் சிவப்புக் கதிர்கள். |
| செயல்பாட்டின் வேகம் | அதிகம் | குறைவு |
| விலை | குறைவு | அதிகம் |
| நிறுவுதல் | கடினம் மற்றும் அதிக நேரம் தேவை | சுலபம் மற்றும் குறைந்த நேரம் தேவை. |
| நம்பகத் தன்மை | அதிகம் | குறைவு |
11.
1. கைபேசி கோபுரங்கள் நெருக்கமாக இருப்பதால், ஒற்றை பரிமாற்றி அல்லது செயற்கைக் கோள்களை ஒப்பிடும் போது கைபேசி சாதனங்கள் குறைந்த மின்சக்தியை பயன்படுத்துகின்றன.
2. செல் கோபுரங்கள் வேறுபட்ட பல இணைப்புகளை இணைக்கின்றன. இது பெரிய டிரான்ஸ்மிட்டரை காட்டிலும் திறன் அதிகமானது.
3. கைபேசிகள் அதிக அளவுக்கு தரவுசார் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படுவதால், கைபேசி வலையமைப்புகள் எப்போது முழுமையாக பயன்பாட்டிலேயே உள்ளது.
12.
1. தொடர்பாடல் (communication),
2. வளப்பகிர்வு
3. தரவு (அ) மென்பொருள் பகிர்வு
4. பணம் சேமிப்பு
13.
1. இணையம் என்பது வலையமைப்புகளின் வலையமைப்பு - உலகளாவிய வலையமைப்பு ஆகும்.
2. இது உலகளாவிய தனிப்பட்ட வலைப்பின்னல்களின் இணைப்பு.
3. இது கல்வி, தொழில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் தனித்தனியாக இயக்கப்படுகிறது.
14.
கணினி வலையமைப்பு என்பது வளங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கத்திற்காக இணைக்கப்பட்ட கணினிகளின் தொகுப்பு. இது இலக்கவியல் தொலைத்தொடர்பு வலையமைப்பின் ஒரு நுட்பமாகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards