12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/10/2019
அறிமுகம் – மீஉரை முன்செயலி (PHP)
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் எது புதிய வரியை உருவாக்க பயன்படுவது எது?
\r;
\n;
/n;
/r;
2.
எந்த கூற்று திரையில் $x என்ற வெளியீட்டை காட்டும்?
echo “\ $x’’
echo “ \ $$x”
echo “/$x”
echo “$x”
3.
பின்வரும் எந்த PHP கூற்று num என்ற மாறியில் 41யை சேமிக்கும்
i) num = 41
ii) $ num = 41
iii) echo $ num = 41
iv) echo 41
(i) மற்றும் (ii) இரண்டும்
(ii) மட்டும்
(i) மட்டும்
அனைத்தும்
4.
PHP ஸ்கிரிப்ட்டை இயக்க உங்கள் கணினியில் பின்வருவனவற்றை எவற்றை நிருவ வேண்டும்?
Adobe
windows
Apache
IIS
5.
ஒரு PHP ஸ்கிரிப்ட் ______ல் ஆரம்பித்து ______ ல் முடியும்.
< php >
< ?php? >
< ?? >
< ?php? >
6.
PHP – ன் விரிவாக்கம் என்ன?
தனிப்பட்ட முகப்பு பக்கம் (Personal Home Page)
மீஉரை முன்செயலி நெறியுருத்தம் (Hyper text Preprocessor)
முன் உரை மீஉரை முன்செயலி நெறியுருத்தம் (Pretext Hyper text preprocessor)
முன் உரை முகப்பு பக்கம் (Pre – Processor Home Page)
7.
PHP-ன் சிறப்பம்சங்களைப் பட்டியலிடு.
8.
PHP ஸ்கிரிப்ட் எவ்வாறு இயக்கப்படுகிறது?
9.
வலை சேவையகம் வரையறு.
10.
PHP – ல் மாறிகளை எவ்வாறு அறிவிக்க வேண்டும்?
11.
URL என்றால் என்ன?
12.
கிளைன்ட் மற்றும் சேவையகம் வேறுபடுத்துக
13.
ஸ்கிரிப்டிங் மொழிகளின் வகைகள் யாவை?
14.
PHP ன் பொதுவான பயன்பாடு என்ன?
15.
மாறி என்றால் என்ன? மாறி அறிவிப்பின் அடிப்படை விதிகள் யாவை?
16.
PHP குறிப்பு வரைக.
17.
PHP இயக்கிகளை பற்றி சிறு குறிப்பு எழுதுக
18.
நீங்கள் எத்தனை வழிகளில் PHP குறிமுறையை HTML பக்கத்தில் புகுத்த முடியும்?
19.
வலை சேவையகத்தின் பயன்களை எழுதுக
20.
சேவையக பக்க ஸ்கிரிப்டிங் மொழிகளின் (Server scripting languages) சிறப்பியல்புகளை எழுதுக.
21.
PHP இல் உள்ள செயற்குறிகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
22.
வலை சேவையக பக்கம் மற்றும் கிளைன்ட் பக்கம் ஸ்கிரிப்டிங் மொழிகளை விவரிக்கவும்
1.
(b)
\n;
2.
(a)
echo “\ $x’’
3.
(b)
(ii) மட்டும்
4.
(c)
Apache
5.
(d)
< ?php? >
6.
(b)
மீஉரை முன்செயலி நெறியுருத்தம் (Hyper text Preprocessor)
7.
PHP யானது
1. திறந்த மூலம் ஆகும்.
2. எழுத்து வகை உணர்வு கொண்டவை.
3. செயல்திறன் மிக்க நிரலாக்க மொழி ஆகும்.
4. இயங்குதளம் சார்பற்ற நிரல் மொழி ஆகும்.
5. நிகழ்நேர அணுகல் கண்காணிப்பு நிரல் மொழி.
8.
1. PHP ஸ்கிரிப்டிங் மொழி, வலை சேவையகங்கள் அல்லது CGI களில் (Common Gateway Interface) நிறுவப்பட்டுள்ள மொழிபெயர்ப்பின் மூலம் இயக்கப்படுகின்றது.
2. பெரும்பான்மையான வலை சேவையகங்களான Apache Tomcat மற்றும் Microsoft IIS (Internet Information Server) ஆகியவை PHP மொழிபெயர்ப்பின் தொகுதியினை ஆதரிக்கின்றன.
9.
வலை சேவை : சேவையகம் கணிப்பொறியில் இயங்கும் மென்பொருளாகும். இது பயனர்களுக்கு வலை பக்கங்களை உருவாக்கும் கோப்புகளை வழங்கப் பயன்படுத்தும் ஒரு மென்பொருள் ஆகும்.
10.
1. PHP யில் '$' என்ற குறியுடன் தொடங்கும்.
2. மதிப்பிருத்தல் செயல் '=' செயற்குறியைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படும்.
3. இறுதியாக, ஒவ்வொரு கூற்றும் அரைப்புள்ளியுடன் (;) முடிவடையும்.
எ.கா : $a =5;
11.
URL (Uniform Resource Locator) என்பது இணையத்தில் குறிப்பிட்ட வலைப்பக்கத்தின் (அ) கோப்பின் தனித்த முகவரி ஆகும்.
12.
| கிளைன்ட் | சேவையகம் |
|---|---|
| 1. வலையமைப்பில் சேவையகத்தோடு இணைக்கப்பட்ட தனிக் கணிப்பொறி | உயர்செயல்திறன் கொண்ட கணிப்பொறி ஆகும். |
| 2. கோரிக்கையை அனுப்பி சேவையகத்தில் இருந்து பதிலை பெறுகின்றது. | கோரிக்கையைப் பெற்று பதிலை கிளைன்ட் கணிப்பொறிக்கு அனுப்புகின்றது. |
| 3. சேவையை பெறுபவர் என அழைக்கப்படுகிறது. | சேவை வழங்குபவர் என அழைக்கப்படுகிறது. |
13.
ஸ்கிரிப்டிங் மொழிகளின் இரு வகைகள் யாவை :
1. பயனாளர் சார்ந்த ஸ்கிரிப்டிங் மொழிகள்.
2. சேவையகம் சார்ந்த ஸ்கிரிப்டிங் மொழிகள்.
14.
(i) PHP என்பது சேவையகம் சார்ந்த வலை மற்றும் பொதுப் பயன்பாட்டு ஸ்கிரிப்டிங் மொழிகளில் முக்கியமான ஒன்றாகும்.
(ii) மிக எளிமையான மற்றும் இலகுவான திறந்த மூல சேவையகம் சார்ந்த ஸ்கிரிப்டிங் மொழியாகும்.
(iii) எளிதாக HTML மற்றும் பிற பயனாளர் சார் ஸ்கிரிப்டிங் மொழிகளான CSS மற்றும் ஜாவா ஸ்கிரிப்டுடன் உட்பொதிக்க முடியும்.
(iv) நிகழ்நேர வலை உருவாக்க திட்டங்களில் இயங்கு மற்றும் ஊடாடு வலைப்பக்கங்களை உருவாகின்றது.
15.
மாறிகள்: நிரலில் பின்னர் கையாளுவதற்காக மதிப்புகளை சேமிக்கும் இடம்.
மாறி அறிவிப்பின் அடிப்படை விதிகள் :
1. மாறியின் பெயர் எப்பொழுதும் '$'என்ற குறியுடன் தொடங்க வேண்டும்.
2. மாறியின் பெயர் ஒருபோதும் எண்ணில் தொடங்க கூடாது.
3. மாறியின் பெயர்கள் எழுத்து வடிவுணர்வு உடையதாகும்.
எ.கா"
$a=5;$b=10;
$a_1="Computer Application"
$c=$a+$c;
16.
1. இணையத்தில் PHP பரவலாக பயன்படுத்தப்படும் ஒன்றாகும்.
2. 1994ல் ரஸ்மஸ் லோடார்ப் என்பவர் இதை உருவாக்கினார்.
3. அங்கீகரிக்கப்பட்ட தொழில் நுட்பங்களை பயன்படுத்துகின்றது.
4. முதன் முதலில் PHP என்பது "Personal Home page'' என்பதைக் குறித்தது.
5. மிக சமீபத்தில் அது 'Hyper Text preprocessor' என மாற்றப்பட்டது.
6. அனைத்து இயங்கு வலைப்பக்கத்தின் அடிப்படை பகுதியாகும்.
17.
(i) செயற்குறி என்பது நிரலாக்க மொழிகளில் கணித மற்றும் தருக்க செயற்பாடுகளைச் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு குறியீடு ஆகும்.
(ii) PHP -யில் உள்ள பல்வேறு செயற்குறிகள் :
1. கணித செயற்குறிகள்
2. மதிப்பிலிருந்து செயற்குறிகள்
3. ஒப்பீட்டு செயற்குறிகள்
4. மிகுப்பு/குறைப்பு செயற்குறிகள்
5. தருக்க செயற்குறிகள்
6. உரை செயற்குறிகள்
18.
PHP குறிமுறையை HTML பக்கத்தில் இரண்டு வழிகளில் புகுத்த முடியும்.
1. முதல் வழி :HTML-ஐ PHP-க்கு வெளியே வைப்பதன் மூலம் புகுத்துதல்.
2. இரண்டாவது வழி : PRINT மற்றும் ECHOவைப் பயன்படுத்துவதன் மூலம் புகுத்துதல்.
19.
1. சேவையகம் சார்ந்த ஸ்கிரிப்டிங் மொழிகளின் தொகுத்தல் மற்றும் இயக்குவதற்கானப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்கின்றது.
2. சேவையகப் கணிப்பொறியில் இயங்கும் வலை சேவையக மென்பொருள் சேவையகம் சார்ந்த ஸ்கிரிப்டிங் தொகுத்தலை இடைநிலை பைட் குறிமுறைகளாக மாற்றுவதை நிர்வகிக்கின்றது. இந்த குறிமுறையானது இயக்க நேர இயந்திரம் மூலம் மொழி பெயர்க்கப்படுகின்றது.
3. இது வலைப்பக்கங்களை உருவாக்கும் கோப்புகளை வழங்கப் பயன்படுகிறது
20.
(i) குறிமுறைகள் முழுவதுமாக தொலைதூர கணிப்பொறியில் நிறுவப்பட்டுள்ள வலைசேவையகத்தில் இயக்கப்படுகின்றது.
(ii) நிகழ்நேர வலை உருவாக்கத்திட்டங்களில் இயங்கு மற்றும் ஊடாடு வலைப் பக்கங்களை உருவாக்குகின்றது.
(iii) பயனர் குறிமுறையைப் பெறுகிறார் மற்றும் வலைதள உள்ளடக்கத்தை இணைய உலவி மூலம் கணிப்பொறியில் பார்க்கிறார்.
(iv) மிகவும் பாதுகாப்பானது.
21.
செயற்குறி என்பது ஒரு மதிப்பு அல்லது பல மதிப்புகள் மீது, கொடுக்கப்பட்ட செயலை செய்யும் ஒரு குறியீடு ஆகும்.
PHP-இல் உள்ள செயற்குறிகளின் வகைகள்:
(i) கணக்கீட்டு செயற்குறிகள்
(ii) மதிப்பிருந்து செயற்குறிகள்
(iii) ஒப்பீட்டு செயற்குறிகள்
(iv) தருக்க செயற்குறிகள்
(v) மிகுப்பு / குறைப்பு செயற்குறிகள்
(vi) சர செயற்குறிகள்
(i) கணக்கீட்டு செயற்குறிகள் (Arithmetic Operators):
கணக்கீட்டு செயற்குறிகள் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் போன்ற கணித செயல்பாடுகளைச் செய்யப் பயன்படுகின்றன.
| குறியீடு | செயற்குறி பெயர் | எடுத்துக்காட்டு | வெளியீடு |
| + | கூட்டல் | 5+2 | 7 |
| - | கழித்தல் | 5-2 | 3 |
| * | பெருக்கல் | 5*2 | 10 |
| / | வகுத்தல் | 5/2 | 2.5 |
| % | வகுமீதி | 5%2 | 1 |
(ii) மதிப்பிருத்து செயற்குறிகள் (Assignment Operators):
ஒரு மாறிக்கு மதிப்பிருத்த செயற்குறிகள் (=) பயன்படுகிறது. மதிப்பிருத்து செயற்குறிக்கு வலது பக்கத்தில் உள்ள மதிப்பானது, இடது பக்கம் உள்ள மாறியில் இருத்தப்படுகிறது.
| குறியீடு | செயற்குறி பெயர் | எடுத்துக்காட்டு | வெளியீடு |
| = | மதிப்பிருத்து செயற்குறி | $a = 5; | 5 |
(iii) ஒப்பீட்டு செயற்குறிகள் (Comparison Operators):
ஒப்பீட்டு செயற்குறிகள் இரண்டு மதிப்புகளை ஒப்பிட்டு, True அல்லது False என்ற விடையைக் கொடுக்கிறது.
| குறியீடு | செயற்குறி பெயர் | எடுத்துக்காட்டு | வெளியீடு | |
| > | விடப்பெரியது | 5>2 | True | |
| < | விடச்சிறியது | 5<2 | False | |
| >= | விடப்பெரியது அல்லது சமமானது | 5>=2 | True | |
| <= | விடச்சிறியது அல்லது சமமானது | 5<=2 | False | |
| == | சமமானது | 5==5 | True | |
| === | ஒத்தது | 5===5 | 5===5.0 | True |
| != | சமமில்லை | 5! = 5 | False | |
| 5!=6 | True | |||
| !== | ஒத்தது இல்லை | 5!==5 | False | |
|
5!==5.0 |
True | |||
(iv) தருக்க செயற்குறிகள் :
தருக்க செயற்குறிகள் மாறிகள் மற்றும் மதிப்புகளில் தருக்க செயல்பாடுகளைச் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன.
| குறியீடு | செயற்குறி பெயர் | எடுத்துக்காட்டு | வெளியீடு |
| && | Legal AND | (5>3) && (5>7) | False |
| || | Legal OR | (5>3) || (5>7) | True |
| xor | XOR | (5>3) xor (5>7) | True |
| ! | Logical NOT | ! (5>3) | False |
(v) மிகுப்பு / குறைப்பு செயற்குறிகள்:
PHPஇல் ஒரு மாறியின் மதிப்பை ஒன்று மிகுப்பதற்கு, மிகுப்பு செயற்குறி (++) பயன்படுகிறது. ஒரு மாறியின் மதிப்பை ஒன்று குறைப்பதற்கு, குறைப்பு செயற்குறி (--) பயன்படுகிறது. மிகுப்பு மற்றும் குறைப்பு செயற்குறிகளை முன்னொட்டு மற்றும் பின்னொட்டாகப் பயன்படுத்தலாம்.
| குறியீடு | செயற்குறி பெயர் | எடுத்துக்காட்டு |
| ++ | ++ $a (முன் - மிகுப்பு) | $x = ++$a |
| $a ++ (பின் -மிகுப்பு) | $x = $a++ | |
| -- | --$a (முன் - குறைப்பு) | $x=--$a |
| $a--(பின்னொட்டு - குறைப்பு) | $x=$a-- |
(vi) சர செயற்குறிகள் :
சர செயற்குறிகளானது இணைப்பு செயற்குறி ( . ) மற்றும் மதிப்பிருத்து இணைப்பு செயற்குறி (.=) என இரண்டு செயற்குறிகளைப் பெற்றுள்ளது.
| குறியீடு | செயற்குறி பெயர் | எடுத்துக்காட்டு | வெளியீடு |
| .(Dot) | இணைப்பு செயற்குறி | $a = 'Hello'; $b='World'; $c = $a. $b; |
HelloWorld |
| .(Dot equal to) | மதிப்பிருந்து இணைப்பு செயற்குறி | $a = 'Hello'; $b='World'; $a. = $a; |
HelloWorld |
22.
1. கிளைன்ட் பக்க ஸ்கிரிப்டிங் :
(i) இணைய மற்றும் உலகளாவிய வலை ஆகிய கருத்துகளுக்கு வலையமைப்பு தொடர்பில் பயன்படுத்தக்கூடிய புதிய நிரலாக்க மொழிகளின் தொகுப்பை வலை ஸ்கிரிப்டிங் மொழிகள் என்றழைக்கிறோம்.
(ii) வலை உலாவியானது பொதுவாக ஸ்கிரிப்ட்டை இயக்கப் பயன்படுகிறது.
(iii) இறுதிப் பயனரின் கணிப்பொறியில் செயலாக்கம் நடைபெறுகிறது.
(iv) மூலக்குறிமுறையானது வலைச் சேவையகத்திலிருந்து இணையம் வாயிலாக நேரடியாக உலவியில் இயங்குகிறது.
(v) ஸ்கிரிப்டிங் மொழியானது கிளைன்ட் கணிப்பொறியில் இயங்கு நிலையில் இருத்தல் அவசியம்.
(vi) குறிமுறைகளைப் பயனரால் பார்க்க முடியும்.
2. சேவையக பக்க ஸ்கிரிப்டிங் மொழி :
(i) சேவையக கணிப்பொறியில் இயங்கும் வலைச் சேவையக மென்பொருள், சேவையகம் சார்ந்த ஸ்கிரிப்டிங் தொகுத்தலை இடைநிலை பைட் குறி முறைகளாக மாற்றுவதை நிர்வகிக்கின்றது.
(ii) இந்தக் குறிமுறையானது இயக்க நேர இயந்திரம் மூலம் மொழி பெயர்க்கப்படுகின்றது.
(iii) நிகழ் நேர வலை உருவாக்கத் திட்டங்களில் இயங்கு மற்றும் ஊடாடு வலைப் பக்கங்களை உருவாகின்றது.
(iv) வலைச் சேவையகத்தில் ஸ்கிரிப்ட் இயக்கப்படுகிறது.
(v) பயனரால் குறிமுறையைப் பார்க்க முடியாது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards