12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 14/09/2019
கணினி பயன்பாடுகள்
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
நீங்கள் கோப்பினை ஒவ்வொரு எழுத்தாகப் படிக்க __________ எந்த செயற்கூறினை பயன்படுத்தலாம்?
fopen ()
fread ()
fgetc ()
file ()
2.
PHP இன் எந்த பதிப்பு MySQLi செயற்கூறை ஆதரிக்கிறது?
Version 2.0
Version 3.0
Version 4.0
Version 5.0
3.
PHP மற்றும் MySQLi – யை பயன்படுத்தி கீழ்கண்ட எந்த கூற்றை பயன்படுத்தி நாம் ஒரு தரவுத்தளத்தை உருவாக்க முடியும்?
mysqli_create_db(“Database Name”)
mysqli_create_db(“Data”)
create_db(“Database Name”)
create_db(“Data”)
4.
Wi-Fi என்பது குறுகிய பெயர் _______.
நம்பிக்கையான கம்பியில்லா சேவை
கம்பி இணைப்பு
கம்பி ஃபைபர் ஆப்டிக்
வயர்லெஸ் இழை பார்வை
5.
பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
< ?php
for (\($\)x = -1; \($\)x < 10;--\($\)x)
{
print $x;
}
? >
123456713910412
123456713910
1234567139104
முடிவில்லா மடக்கு
6.
பின்வரும் PHP குறிமுறையை செயல்படுத்தும் போது உலவியில் எவ்வாறு தோன்றும்
< ?php
for (\($\)counter = 10; \($\)counter < 10;
\($\)counter = \($\)counter + 5){
Echo “Hello”;
? >
Hello Hello Hello Hello Hello
Hello Hello Hello
Hello
மேற்கண்ட எதுவும் இல்லை
7.
பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
< ?php
if (-100)print “hi”; else
print “how are u”;
? >
how are u
hi
பிழை
வெளியீடு ஏதும் இல்லை
8.
பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
< ?php
\($\)x = 0;
if (\($\)x++)print “hi”;else
print “how are u”;
? >
hi
வெளியீடு ஏதும் இல்லை
பிழை
how are u
9.
அணியில் வெற்று அல்லாத உறுப்புகளை கண்டறிய நாம் பயன்படுத்துவது
is_array ( ) function
sizeof ( ) function
array_count ( ) function
count ( ) function
10.
PHP-ல் செயற்கூறை வரையறுக்க பின்வருவனவற்றுள் எது சரியான வழி?
செயற்கூறு {செயற்கூறின் உடற்பகுதி}
தரவு வகை செயற்கூறு பெயர் (செயலுருபுகள்) {செயற்கூறின் உடற்பகுதி}
செயற்கூறு பெயர் (செயலுருபுகள்) {செயற்கூறின் உடற்பகுதி}
செயற்கூறு செயற்கூறு பெயர் (செயலுருபுகள்) {செயற்கூறின் உடற்பகுதி}
11.
ஒரு PHP ஸ்கிரிப்ட் ______ல் ஆரம்பித்து ______ ல் முடியும்.
< php >
< ?php? >
< ?? >
< ?php? >
12.
______ கட்டளை தரவுதளத்தை நீக்க பயன்படுகிறது.
Delete database database_name
Delete database_name
Drop database database_name
Drop database_name
13.
உரையை பதிப்பிக்க பயன்படும் கருவி எது?
Text tool
Type tool
Crop tool
Hand tool
14.
Page Maker சன்னல் திரையில் கருப்புநிற எல்லைக் கோட்டிற்கு வெளியில் இருக்கும் பகுதி _________ என அழைக்கப்படும்.
page
pasteboard
blackboard
dashboard
15.
பின்வருவனவற்றில் பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடிக்கவும்.
TIFF
BMP
RTF
JPEG
16.
GET வழிமுறை மற்றும் POST வழிமுறை பற்றி எழுது.
17.
RFID செயல்படுத்தப்பட்ட கணினியின் கூறுகளை பட்டியலிடுக?
18.
வலை முகவரி மற்றும் URL ஐ வேறுபடுத்து
19.
அளபுருக்களை கொண்ட செயற்கூறுகளின் பயன்களை எழுதுக.
20.
நீங்கள் எத்தனை வழிகளில் PHP குறிமுறையை HTML பக்கத்தில் புகுத்த முடியும்?
21.
பிரிக்கப்பட்ட உரைத்தொகுதியை எவ்வாறு சேர்ப்பாய் ?
22.
ஒளிக்காட்சி கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.
23.
PHP ல் படிவத்தை கையாள்வதை வரையறு.
24.
do while மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக
25.
PHP-ன் செயற்கூறு வரையறுக்கவும்
26.
கோப்பு செயலாக்க முறையின் (File Processing System) சில குறைபாடுகளை பட்டியலிடுக.
27.
வரையறு – பல்லூடக உருவாக்கம்.
28.
நிபந்தனை கூற்றினால் அன்றாட வாழ்வில் உள்ள பயன்களை விவரி.
29.
PHP இல் MySQL ஐ இணைப்பதற்கான முறையின் வகைகளை விரிவாக விளக்கவும்.
30.
கணினி வலையமைப்பு மற்றும் இணையம் வரையறுக்க.
31.
PHP இல் உள்ள செயற்குறிகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
32.
அசைவூட்டல் திரைப்பட துறையில் உள்ள வாய்ப்புகள் பற்றி கண்டறியவும்.
1.
(c)
fgetc ()
2.
(d)
Version 5.0
3.
(a)
mysqli_create_db(“Database Name”)
4.
(a)
நம்பிக்கையான கம்பியில்லா சேவை
5.
(d)
முடிவில்லா மடக்கு
6.
(d)
மேற்கண்ட எதுவும் இல்லை
7.
(a)
how are u
8.
(d)
how are u
9.
(b)
sizeof ( ) function
10.
(d)
செயற்கூறு செயற்கூறு பெயர் (செயலுருபுகள்) {செயற்கூறின் உடற்பகுதி}
11.
(d)
< ?php? >
12.
(c)
Drop database database_name
13.
(a)
Text tool
14.
(b)
pasteboard
15.
(c)
RTF
16.
1. POST வழிமுறை: Post வழிமுறை மூலம் சேவையகத்திற்கு அனுப்பப்படும் உள்ளீடு செய்யப்பட்ட தரவானது, பயனர் கணிப்பொறியின் HTTP request -னுடைய கோரிக்கை உடற்பகுதியில் (request body) சேமிக்கப்படுகின்றது.
2. GET வழிமுறை: URL முகவரி வழியாக GET வழிமுறை மூலம் உள்ளீடு தரவானது, சேவையகத்திற்கு அனுப்பப்படுவதை வினவல் சரம் (query string) என்கிறோம். உள்ளீடு செய்யப்பட்ட அனைத்துத் தரவினையும் பயனர் Submit பொத்தானை கிளிக் செய்த பிறகும் காண முடியும்.
17.
1. ஒரு RFID குறிச்சொல்: இது ஒரு சிறிய ஆண்டெனாவுடன் இணைக்கப்பட்ட மற்றும் மூலக்கூறு மீது வைக்கப்பட்டுள்ள சிலிக்கன் மைக்ரோசிப்-ஐ கொண்டுள்ளது.
2. ஒரு படிப்பான் : தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் சிக்னல்களை பரிமாறவும் பெறுவதற்குமான ஆண்டெனாவுடன் கூடிய வருடியைக் கொண்டுள்ளது.
3. ஒரு கட்டுப்பாட்டாளர்: இது நுண்செயலியுடன் கூடிய புரவலன் கணினியாகும். இது படிப்பானின் உள்ளீட்டைப் பெற்று தரவுகளைச் செயலாக்குகிறது.
18.
| வலை முகவரி | URL |
| வலைத்தளத்தை அடையாளம் காட்டக்கூடிய தனித்த முகவரி. எ.கா: www.tnschools.gov.in |
வலைதளத்தின் பொருளை அணுகுவதற்குத் தேவையான இணைய நெறிமுறைகளை உள்ளடக்கிய வலைத்தளத்தின் முகவரி. எ.கா: http://www.tn.gov.in |
19.
மதிப்புக்களை அளபுருக்களின் மூலம் ஒரு அளபுருவிலிருந்து அளபுருவுக்கு அனுப்ப முடியும்.
அளபுருக்களை செயலுருபுகள் என்றும் அழைக்கலாம். இது மாறிகளை போன்று இருக்கும். செயலுருபுகள் செயற்கூறின் பெயருக்கு பின்னால் அடைப்பு குறிகளுக்குள் குறிப்பிட வேண்டும். செயலுருபுகளை அனுப்புவதற்கு எந்த விதமான வரம்பும் இல்லை. அவற்றை காற்புள்ளிகளால் பிரிக்க வேண்டும்.
Return கூற்றினை பயன்படுத்தி ஒரு செயற்கூறு ஒரு மதிப்பினை திருப்பி அனுப்புகிறது.
function sum($x, $y) {
$z = $x + $y;
return $z;
}
echo “5 + 10 = “ . sum(5, 10) . “
”;
echo “7 + 13 = “ . sum(7, 13) . “
”;
echo “2 + 4 = “ . sum(2, 4);
?>
20.
PHP குறிமுறையை HTML பக்கத்தில் இரண்டு வழிகளில் புகுத்த முடியும்.
1. முதல் வழி :HTML-ஐ PHP-க்கு வெளியே வைப்பதன் மூலம் புகுத்துதல்.
2. இரண்டாவது வழி : PRINT மற்றும் ECHOவைப் பயன்படுத்துவதன் மூலம் புகுத்துதல்.
21.
பிரிக்கப்பட்ட இரண்டு உரைத்தொகுதிகளை மீண்டும் ஒன்றாக இணைப்பதற்கு :
1. செருகும் புள்ளியை இரண்டாவது உரைத் தொகுதியின் கீழ்ப்பக்க கைப்பிடியில் கிளிக் செய்து அதன் மேல்பகுதி வரை இழுக்கவும்.
2. பிறகு செருகும் புள்ளியை முதல் உரைத் தொகுதியின் கீழ்ப்பக்க கைப்பிடியில் கிளிக் செய்து கீழ்நோக்கி தேவையான அளவிற்கு இழுக்கவும், இப்பொழுது பிரிக்கப்பட்ட இரண்டு உரைத் தொகுதிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டுவிடும்.
22.
1. AVI (Audio Video Interleave)
2. MPEG (Moving Pictures Experts Group)
23.
கோப்புகளைக் கையாளுதல் என்பது வலைப்பயன்பாடுகளை மேம்படுத்துவதில் உள்ள முக்கியமான செயலாகும். ஒரு கோப்பினை பல்வேறு பணிகளுக்காக திறக்க (அ) செயல்படுத்த வேண்டியிருக்கும்.
24.
do {
code to be executed;
} while (condition is true);
25.
ஒரு நிரலில் உள்ள ஒரு தொகுதியின் ஒரு பகுதி குறிப்பிட்ட செயல்பாட்டு பணிகளை செய்கிறது. (சேர்த்தல், செயற்படுத்துதல், நீக்குதல் கணக்கீடுதல் போன்றவை ).இந்த பகுதி (Segment) செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது. ஒரு செயற்கூறு என்பது ஒரு வகை துணை நிரல் அல்லது ஒரு நிரலில் உள்ள செயல்முறை ஆகும்.
26.
1. தரவு நகல்கள் : ஒரே தரவானது, செயலாக்கத்திற்கான பல வளங்களால் பயன்படுத்தப்பட்டது. இது ஒரே தரவின் பல நகல்களை உருவாக்கி இடங்களை வீணாக்கியது.
2. அதிக பராமரிப்பு : அணுகல் கட்டுப்பாட்டு மற்றும் நிலைத்தன்மையைச் சரிபார்க்க அதிக பராமரிப்புத் தொகை தேவைப்பட்டது.
3. பாதுகாப்பு : தரவுக்கு குறைந்த பாதுகாப்பே வழங்கபட்டது.எனவே, கோப்பு அமைப்பின் மேற்கூறிய வரம்புகளை சமாளிக்க தரவுதள அமைப்புகள் பிரபலமானது.
27.
பல்லூடக உருவாக்கம் :
திட்டப் பணியானது சுமுகமாகத் தொடரவும் மற்றும் தகவல், இலக்குப் பார்வையாளர்களைச் சென்றடைவதை உறுதி செய்யக்கூடியத் திறமையான திட்டமிடல்.
28.
1. விற்பனையில் தள்ளுபடி விலையைக் கணக்கிடவும்.
2. இரு எண்களில் பெரிய எண்ணைக் கணக்கிடவும்.
3. பணியாளரின் ஊக்கத் தொகை கணக்கிடவும்.
4. மாணவர்களின் தரநிலையைக் கண்டறியவும்,
5. வருமானவரியைக் கணக்கிடவும்.
6. உள்ளீடு எழுத்தா (அ) எண்ணா என்பதைக் கண்டறியவும் பயன்படுகிறது.
29.
தரவுத்தள இணைப்புகள்:
MySQL தரவுத்தளத்தை அணுகுவதற்கு முன் mysqli_connect() செயற்கூற்றைப் பயன்படுத்தி PHP நிரல் மொழி வழியாக தரவுத்தள சேவையகக் கணினியை இணைக்க வேண்டும்.
கட்டளை அமைப்பு:
mysqli_connect ("Server Name", "User Name", "Pass Word", "DB Name");
இந்த செயற்கூறு தரவுத்தள சேவையகத்துடன் இணைப்பை ஏற்படுத்துவதற்கு நான்கு அளவுருக்களைக் கொண்டுள்ளது.
தரவுத்தள இணைப்பை மேலாண்மை செய்தல்:
கீழ்க்காணும் நிரல் தரவுத்தள இணைப்பை மேலாண்மை செய்ய உதவும் முறைகளையும் அதன் சிறப்புகளையும் விவரிக்கிறது.
$servername = "localhost";
$username = "username";
$password = "password";
$DB_name = "School_DB";
$conn = mysqli_connect($servername, $username, $password,$DB_name);
if (!$conn) {
die("Connection failed: ". mysqli_connect_error());
}
echo "Connected successfully";
?>
மேற்காணும் நிரல் நுணுக்கில், தரவுத்தள சேவையகத்துடன் இணைப்பை ஏற்படுத்த நான்கு மாறிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
$ servername - தரவுத்தள சேவையகத்தின் முகவரி IP
$ username - தரவுத்தள சேவையகத்தின் பயனர் பெயர்
$ password - தரவுத்தள சேவையகத்தின் கடவுச்சொல்
$DB-Name - தரவுத்தளத்தின் பெயர்
mysqli_connect() செயற்கூறு இந்த மாறிகளைப் பயன்படுத்தி PHP நிரலிலிருந்து தரவுத்தள சேவையகத்தை இணைக்கிறது. இணைப்பு ஏற்படாவிடில் MySQL பிழைக் குறியீட்டுடன் வெளியீடு தோன்றும். இல்லாவிடில் இணைப்பு ஏற்பட்டிருக்கும்.
30.
கணினி வலையமைப்பு:
கணினி வலையமைப்பு என்பது வளங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கத்திற்காக இணைக்கப்பட்ட கணினிகளின் தொகுப்பு. இது இலக்க வகை தொலைத்தொடர்பு வலையமைப்பின் ஒரு நுட்பமாகும்.
இணையம் :
இணையம் என்பது வலையமைப்புகளின் வலையமைப்பு - உலகளாவிய வலையமைப்பு ஆகும்.
இது உலகளாவிய தனிப்பட்ட வலைப்பின்னல்களின் இணைப்பு. இது கல்வி, தொழில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் தனித்தனியாக இயக்கப்படுகிறது.
31.
செயற்குறி என்பது ஒரு மதிப்பு அல்லது பல மதிப்புகள் மீது, கொடுக்கப்பட்ட செயலை செய்யும் ஒரு குறியீடு ஆகும்.
PHP-இல் உள்ள செயற்குறிகளின் வகைகள்:
(i) கணக்கீட்டு செயற்குறிகள்
(ii) மதிப்பிருந்து செயற்குறிகள்
(iii) ஒப்பீட்டு செயற்குறிகள்
(iv) தருக்க செயற்குறிகள்
(v) மிகுப்பு / குறைப்பு செயற்குறிகள்
(vi) சர செயற்குறிகள்
(i) கணக்கீட்டு செயற்குறிகள் (Arithmetic Operators):
கணக்கீட்டு செயற்குறிகள் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் போன்ற கணித செயல்பாடுகளைச் செய்யப் பயன்படுகின்றன.
| குறியீடு | செயற்குறி பெயர் | எடுத்துக்காட்டு | வெளியீடு |
| + | கூட்டல் | 5+2 | 7 |
| - | கழித்தல் | 5-2 | 3 |
| * | பெருக்கல் | 5*2 | 10 |
| / | வகுத்தல் | 5/2 | 2.5 |
| % | வகுமீதி | 5%2 | 1 |
(ii) மதிப்பிருத்து செயற்குறிகள் (Assignment Operators):
ஒரு மாறிக்கு மதிப்பிருத்த செயற்குறிகள் (=) பயன்படுகிறது. மதிப்பிருத்து செயற்குறிக்கு வலது பக்கத்தில் உள்ள மதிப்பானது, இடது பக்கம் உள்ள மாறியில் இருத்தப்படுகிறது.
| குறியீடு | செயற்குறி பெயர் | எடுத்துக்காட்டு | வெளியீடு |
| = | மதிப்பிருத்து செயற்குறி | $a = 5; | 5 |
(iii) ஒப்பீட்டு செயற்குறிகள் (Comparison Operators):
ஒப்பீட்டு செயற்குறிகள் இரண்டு மதிப்புகளை ஒப்பிட்டு, True அல்லது False என்ற விடையைக் கொடுக்கிறது.
| குறியீடு | செயற்குறி பெயர் | எடுத்துக்காட்டு | வெளியீடு | |
| > | விடப்பெரியது | 5>2 | True | |
| < | விடச்சிறியது | 5<2 | False | |
| >= | விடப்பெரியது அல்லது சமமானது | 5>=2 | True | |
| <= | விடச்சிறியது அல்லது சமமானது | 5<=2 | False | |
| == | சமமானது | 5==5 | True | |
| === | ஒத்தது | 5===5 | 5===5.0 | True |
| != | சமமில்லை | 5! = 5 | False | |
| 5!=6 | True | |||
| !== | ஒத்தது இல்லை | 5!==5 | False | |
|
5!==5.0 |
True | |||
(iv) தருக்க செயற்குறிகள் :
தருக்க செயற்குறிகள் மாறிகள் மற்றும் மதிப்புகளில் தருக்க செயல்பாடுகளைச் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன.
| குறியீடு | செயற்குறி பெயர் | எடுத்துக்காட்டு | வெளியீடு |
| && | Legal AND | (5>3) && (5>7) | False |
| || | Legal OR | (5>3) || (5>7) | True |
| xor | XOR | (5>3) xor (5>7) | True |
| ! | Logical NOT | ! (5>3) | False |
(v) மிகுப்பு / குறைப்பு செயற்குறிகள்:
PHPஇல் ஒரு மாறியின் மதிப்பை ஒன்று மிகுப்பதற்கு, மிகுப்பு செயற்குறி (++) பயன்படுகிறது. ஒரு மாறியின் மதிப்பை ஒன்று குறைப்பதற்கு, குறைப்பு செயற்குறி (--) பயன்படுகிறது. மிகுப்பு மற்றும் குறைப்பு செயற்குறிகளை முன்னொட்டு மற்றும் பின்னொட்டாகப் பயன்படுத்தலாம்.
| குறியீடு | செயற்குறி பெயர் | எடுத்துக்காட்டு |
| ++ | ++ $a (முன் - மிகுப்பு) | $x = ++$a |
| $a ++ (பின் -மிகுப்பு) | $x = $a++ | |
| -- | --$a (முன் - குறைப்பு) | $x=--$a |
| $a--(பின்னொட்டு - குறைப்பு) | $x=$a-- |
(vi) சர செயற்குறிகள் :
சர செயற்குறிகளானது இணைப்பு செயற்குறி ( . ) மற்றும் மதிப்பிருத்து இணைப்பு செயற்குறி (.=) என இரண்டு செயற்குறிகளைப் பெற்றுள்ளது.
| குறியீடு | செயற்குறி பெயர் | எடுத்துக்காட்டு | வெளியீடு |
| .(Dot) | இணைப்பு செயற்குறி | $a = 'Hello'; $b='World'; $c = $a. $b; |
HelloWorld |
| .(Dot equal to) | மதிப்பிருந்து இணைப்பு செயற்குறி | $a = 'Hello'; $b='World'; $a. = $a; |
HelloWorld |
32.
நம் காலத்தின் மிகப்பெரிய சினிமா படங்களின் பின்னால் சில டிஜிட்டல் அனிமேட்டர்ஸ் உள்ளனர். இன்றைய பாப் கலாச்சார சூழலில் டிஜிட்டல் அனிமேஷன் நடுநாயகமாகத் திகழ்கிறது என்பதற்கு ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்' ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். பல்வேறு தொழில் துறைகளில் டிஜிட்டல் அனிமேஷன் வேலைகள் சாத்தியமாகும்.
திரைப்படத் துறையில் உள்ள அனிமேஷன் வாய்ப்புகள் :
அசைவூட்டல் தொழில், ஆர்வம் மற்றும் ஆக்கப்பூர்வமான விருப்பங்களுக்கு ஏற்ப பல்வேறு வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.
1. முப்பரிமாண மாதிரிகளை உருவாக்குபவர்கள் :
(3D Modellers) : பார்வையாளர்கள் பொருளை நன்றாகப் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் குறிப்பிட்ட பொருளை அனைத்துக் கோணங்களிலிருந்து கணினி மாதிரிகளாக உருவாக்குபவர்கள்.
2. கதாபாத்திர அனிமேட்டர்ஸ் (Character Animators) : ஒரு கதையை சொல்லக் கூடிய கதாபாத்திரங்கள் மற்றும் பொருத்தமான உடல் இயக்கங்களை உருவாக்குபவர்கள்.
3. இயக்க வரைகலை கலைஞர்கள் (Motion Graphics Artists) : பல்வேறு நிலைகளில் ஆக்கபூர்வமான செயல்முறைக்கு பொறுப்பானவர்கள். இயக்கத்தை சித்தரிக்க இரு பரிமாண, முப்பரிமாண அசைவூட்டப் படங்களை உருவாக்குபவர்கள்.
4. நுண் அமைப்பு கலைஞர்கள் (Texture Artists) : அசைவூட்டம் செய்யப்பட்ட கதாபாத்திரங்கள், கதாபாத்திரத்தை (அ) கலை வேலைப்பாட்டைச் சுற்றியுள்ள உடைமைப் பொருட்களுக்கான அமைப்பு, வண்ணம் மற்றும் முப்பரிமாண பயன்படுத்துபவர்கள்.
5. ஒளி கலைஞர்கள் (Lighting Artists) : காட்சியை உண்மை தன்மையுடனும் முறைகளின்றி உருவாக்க, சரியான ஒளி மற்றும் நிழல் விளைவுகளை ஒளி துறையுடன் பணிபுரிபவர்கள்.
6. தந்திரக் கலைஞர்கள் (Rigging Artists) :
1. துல்லியமான மற்றும் விரிவான பார்வை தேவை உள்ளவர்கள்.
2. உருவாக்குதல் சவால்களைத் தீர்ப்பதற்கும் கதாபாத்திரங்களின் இயக்கங்களை சாத்தியமாக்குவதற்கான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு மாதிரிகளை உருவாக்குபவர்கள் மற்றும் அசைவூட்டக் கலைஞர்களோடு ஒத்திசைவுடன் வேலை செய்பவர்கள்.
இயக்கப்பட்ட தொடர் சித்திரக் கலைஞர்கள் (Story board Artists) :
கையாலோ கணினி மூலமாகவோ தொடர்/சினிமாக் காட்சிகளை ஒவ்வொரு சட்டங்களாக வரைந்து காட்சிப்படுத்துபவர்கள்.
தொகுத்தல் கலைஞர்கள் (compositing Artists) :
பல்லூடகப் பயன்பாட்டில் பின்-உருவாக்குதல் செயல்பாட்டிற்கான முக்கியமானக் கலைஞர்களில் இவர்களும் ஒருவர் ஆவர். திட்டப் பணிக்கு இறுதிச் செயல்பாடுகளை இவர்கள் தருகிறார்கள்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards