12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 20/01/2020
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
பல பரிமாண அணி பற்றி விரிவாக எழுதுக.
2.
MYSQL ல் அட்டவணையிலிருந்து ஏற்கனவே இருக்கும் தரவுகளை எவ்வாறு நீக்குவாய்?
3.
IANA என்றால் என்ன?
4.
இணையத்தின் குறைபாடுகளைப் பட்டியலிடுக.
5.
HTML னுடைய INPUT பண்புக் கூறுக்கான செல்லுபடியாக்கல் விதிமுறைகளைப் பட்டியலிடு.
6.
பேஜ்மேக்கரில் வட்டமுனை செவ்வகத்தை அல்லது வட்டமுனை சதுரத்தை எவ்வாறு வரைவாய்?
7.
இந்திய நிதி அமைப்புக் குறியீடு (IFSC) என்றால் என்ன?
8.
குரல் வழி வணிகம் மற்றும் chatbots குறிப்பு வரைக.
9.
MPEG பற்றி குறிப்பு வரைக.
10.
வரையறு: மறுதலிக்கப்படாதிருத்தல் (Non-repudiation).
11.
மதிப்பு கூட்டப்பட்ட வலையமைப்பு (VAN) என்றால் என்ன?
12.
mysqli_affected_rows() மற்றும் mysqli_fetch_assoc() செயற்கூறு இவற்றிற்கிடையே உள்ள வேறுபாட்டை எழுதுக
13.
foreach மற்றும் While மடக்கினை வேறுபடுத்துக.
14.
Switch மற்றும் if else கூற்றினை வேறுபடுத்துக
15.
பயனர் வரையறுத்த செயற்கூறுகள் மற்றும் அமைப்பு வரையறுத்த செயற்கூறுகளை வேறுபடுத்துக
16.
புகழ்பெற்ற திறந்த மூல மென்பொருள்களை பட்டியலிடு
17.
வலை சேவையக பக்கம் மற்றும் கிளைன்ட் பக்கம் ஸ்கிரிப்டிங் மொழிகளை வேறுபடுத்துக
18.
தரவுதள மேலாண்மை அமைப்பில் உள்ள கார்டினாலிட்டி பற்றி விவரி.
19.
பிரிக்கப்பட்ட உரைத்தொகுதியை எவ்வாறு சேர்ப்பாய் ?
20.
அசைவூட்டலின் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை விவரிக்கவும்
1.
1. பல பரிமாண அணி என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அணிகளைக் கொண்ட ஒரு அணி ஆகும்.
2. PHP ல் பல்வேறு வகையான (அ) அளவுள்ள பல பரிமாண அணிகளை உருவாக்க முடியும்.
3. அதாவது இரண்டு மூன்று நான்கு ஐந்து (அ) அதற்கும் அதிகமான அளவுள்ள பரிமாண அணிகளை உருவாக்கலாம்.
4. ஆனால் பயனர் மூன்றுக்கும் அதிகமான பரிமாணங்களை (அ) நிலைகளைப் கையாளுவது கடினம். எ.கா :
<?php
//A two-dimensional array
$student=array
(
array("Iniyan",100,96),
array("Kavin",60,59),
);
echo$student [0][0],":Tamil Mark:"$student
[0][1],",English mark :"$student[0][2],"< br >";
echo $student[1][0],":Tamil Mark :$student
[1][0],",English mark::$student[1][2],"< br >";
2.
1. தரவுகளை அட்டவணையிலிருந்து நீக்க "DELETE" கட்டளை பயன்படுகிறது.
2. அனைத்து பதிவுகளையோ (அ) குறிப்பிட்ட நெடுவரிசைகளையோ அட்டவணையிலிருந்து நீக்கலாம்.
3. ஏதேனும் குறிப்பிட்ட நெடுவரிசையை, நீக்க வேண்டுமெனில் அந்த நிபந்தனையை WHERE கட்டளையைப் பயன்படுத்தி நீக்கலாம்.
4. நிபந்தனை தரவில்லை எனில் அனைத்து தரவுகளும் நீக்கப்படும்.
Syntax1:
DELETE from tablename WHERE
Columnname ="value",
எ.கா :
mysql > DELETE from Biodata WHERE age =15;
3.
(i) IANA (Internet Assigned Numbers Authority) என்பது ICANN இன் இணைப்பு அமைப்பு ஆகும்.
(ii) DNS ரூட் IP முகவரி மற்றும் பிற இணைய நெறிமுறைகளை கையாளுதல் போன்றவற்றை மேலாண்மை செய்கிறது.
(iii) IANA அமைப்பு DNS ன் முக்கிய அம்சங்களான மூல மண்டலம் (root zone) மற்றும் .int.arpa போன்ற களங்களை நிர்வகிக்கிறது.
முகவரி: https://www.iana.org/
4.
1. இணையத்தில் தேவையற்ற தகவல்களை தேடுவதன் மூலம் விலைமதிப்பற்ற நேரத்தை வீணாக்குகிறோம்.
2. எவர் ஒருவரும் தங்கள் வலைப்பக்கத்தில் வலைப்பதிவுகள் எதையும் வெளியிட முடியும் என்பதால் தேவையற்ற தகவல்கள் நிறைய உள்ளன.
3. இணையத்தில் உள்ள ஹேக்கர்கள் மற்றும் வைரஸ்கள் மூலம் மற்றவர்களின் மதிப்புமிக்க தகவல்களை எளிதில் திருடிவிட முடியும். மின் வங்கி சேவையிலும் நிறைய பாதுகாப்பு சிக்கல்கள் உள்ளன.
5.
| Name (Text Input) |
எழுத்துக்கள் மற்றும் வெற்றிடங்களை ஏற்கும். |
| Email (Text Input) | @ மற்றும் சரங்களை ஏற்கும். |
| Website (Text Input) | சரியான URL ஐ ஏற்கும். |
| Radio | குறைந்தபட்சம் ஒரு மதிப்பினைத் தேர்ந்தெடுக்க |
| Check box | குறைந்தபட்சம் ஒரு மதிப்பினைத் தேர்ந்தெடுக்க |
| Drop Down menu | குறைந்தபட்சம் ஒரு மதிப்பினைத் தேர்ந்தெடுக்க |
6.
வட்டமுனை செவ்வகம் வரைய :
1. கருவிப் பெட்டியிலுள்ள ரெக்டாங்கல் டூலில் இருமுறைக் கிளிக் செய்யவும். Rounded Corners உரையாடல் பெட்டி தோன்றும். அதிலிருந்து தேவையான முனை வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
2. பிறகு OK பொத்தானைக் கிளிக் செய்யவும், இப்பொழுது சுட்டுக்குறியானது crosshair ஆக மாறும்.
3. திரையில் தேவையான இடத்தில் கிளிக் செய்து இழுத்து வட்டமுனை செவ்வகத்தை வரையலாம்.
4. சுட்டியை அழுத்துவதை விட்ட உடன் ஒரு செவ்வகம் வரையப்பட்டிருக்கும்.
5. SHIFT விசையை அழுத்திக் கொண்டு வரைந்தால் வட்டமுனை சதுரம் கிடைக்கும்.
7.
(i) இந்திய நிதி அமைப்பு குறியீடு (Indian Financial System Code - IFSC) என்பது இந்தியாவில் ஒவ்வொரு வங்கியின் கிளையையும் தனித்தனியாக அடையாளம் கட்ட இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 11 இலக்க எண் - எழுத்து குறியீடு.
(ii) இது உள்நாட்டு மின் செலுத்துதல்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
(iii) SWIFT குறியீடு சர்வதேச வங்கிப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது
8.
(i) voice shopping மூலம் google home/alexa போன்ற குரல்வழி சாதனங்கள் மின் - வணிக இணையதளங்களுக்கு ஆர்டர் செய்ய முடியும்.
(ii) மறுமுனையில் chatbots நுகர்வோருடன் தொடர்பு கொண்டு உத்தரவுகளை எடுத்துக்கொள்ளும்.
(iii) பொருள்களை வாங்க செயற்கை நுண்ணறிவு, எந்திர கற்றல் மற்றும் பெருந்தரவு தொழில்நுட்பங்கள் chatbots உடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கும்.
9.
1. MPEG என்பது இலக்க ஒளிக்காட்சி மற்றும் ஒலி குறுக்கத்தை ISO குழுவினரால் உருவாக்கப்படும் ஒரு தர நிலை ஆகும்.
இந்த குழுவினர் உருவாக்கியவை :
1. MPEG-1 : ஒளிக்காட்சி CD மற்றும் MP3 ஆகியவற்றிற்கான தரநிலை.
2. MPEG-2 : இலக்க தொலைக்காட்சி செட்டாப் பெட்டி மற்றும் DVD களை ஆதரிக்கும் தரநிலை.
3. MPEG-3: பல்லூடகம் மற்றும் கைப்பேசி வலைக்கான தரநிலையாகும்.
4. MPEG-7 : ஒலி மற்றும் ஒளி பொருளடக்கத்தைத் தேடுவதற்கான தரநிலையாகும்.
5. 2000ல் MPEG-21 : பல்லூடாகக் கட்டமைப்பு பற்றிய ஆய்வைத் தொடங்கியது.
10.
1. மறுதலிக்கப்படாதிருத்தல் (Non-repudiation) உடன்படிக்கை மீறாதிருத்தல்.
2. ஆவணத்தில் எண்முறை கையொப்பமிட்டவர் அதை நிராகரிக்க முடியாததை உறுதிசெய்கிறது.
3. எண்முறை கையொப்பமிட்ட ஆவணங்கள் அதன் பெறுநருக்கு ஆதாரத்தை வலுப்படுத்துகிறது.
4. எனவே, பின் ஒரு நேரத்தில் எளிதில் மறுக்க முடியாது என்பதால் எண்முறை கையொப்பத்தை, பெறுநர் வலுவாக வலியுறுத்த முடியும்.
11.
1. ஒரு நிறுவனம் அதன் சொந்த வலையமைப்பை அடிப்படையாகக் கொண்டு மற்ற நிறுவனங்களுக்கு EDI சேவைகளை வழங்குவதை குறிக்கிறது.
2. இது வணிகர்களுக்கிடையே ஒரு இடைத்தரகர் போல் செயல்படுகிறது.
3. மதிப்பு கூட்டப்பட்ட வலையமைப்புகளின் கோட்பாடுகள் அணுகல் உரிமைகளை பயனர்களுக்கு ஒதுக்கீடு மற்றும் உயர் தரவு பாதுகாப்பு வழங்குதல் ஆகும்.
12.
| mysqli_affected_rows () | mysqli_fetch_assoc () | |
| 1 | முந்தைய MySQL செயல்பாட்டின் பாதிக்கப்பட்ட வரிசைகளின் எண்ணிக்கையைத் திருப்பித் தரும். | வினவல் வெளியீட்டின் வரிசையைத் தொடர்புறுத்த அணியாகப் பெறப் பயன்படுகிறது. |
| 2 | ஒரு முழு எண் மதிப்பைத் திருப்பித் தரும். | சரங்களைக் கொண்ட தொடர்புறுத்த அணியைத் திருப்பித் தரும். |
13.
| foreach மடக்கு | while மடக்கு | |
| 1 | அணிகளில் பன்முறைச் செயல்படுத்த எளிதான வழியை வழங்குகிறது. | நிபந்தனை சரி எனில் செயல்பாட்டுத் தொகுதி செயல்படுத்தப்படும். |
| 2 | மடக்கின் சுழற்சியானது அணியில் உள்ள ஒவ்வொரு திறவு இணை மதிப்பைப் பொறுத்தது. | மடக்கின் சுழற்சி குறிப்பிட்ட நிபந்தனையைப் பொறுத்தது. |
| 3 | PHP-ல் உள்ள மிகவும் பிரத்தியேகமான மடக்காகும் | PHP உட்பட C,C++, Java போன்ற நிரலாக்க மொழிகளிலும் உள்ளது. |
14.
| switch கூற்று | if else கூற்று |
| 1. பல்வேறு தொகுதிகளில் ஒன்றை செயல்படுத்தத் தேர்வு செய்கிறது. | இரு மாற்று வழிகளில் ஒரு தொகுதியைச் செயல்படுத்தத் தேர்வு செய்கிறது. |
| 2. சமம் என்ற ஒப்பீட்டை மட்டுமே சோதிக்கிறது. | சமம் என்ற ஒப்பீடுடன் மற்றும் தருக்கக் கோவைகளைச் சோதிக்கிறது. |
| 3. ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளை ஒரே நேரத்தில் சோதிக்க முடியும். | ஒரு கோவையை மட்டுமே சரி பார்க்கிறது. |
| 4. எந்த ஒரு case தொகுதியுடன் கோவையின் மதிப்பு பொருந்தவில்லை என்றால் 'default' என்ற சிறப்புச் சொல்லின் கீழ்வரும் கூற்றுகள் செயல்படுத்தப்படும். | நிபந்தனை தவறு எனில், else என்ற சிறப்புச் சொல்லின் கீழ்வரும் கூற்றுகள் செயல்படுத்தப்படும். |
15.
| பயனர் வரையறுக்க செயற்கூறுகள் | அமைப்பு வரையறுத்த செயற்கூறுகள் |
|---|---|
| ஏற்கனவே உள்ள நிரலின் தொகுதிற்குள் பயனர் சொந்தமாக ஒரு குறிப்பிட்ட செயல்பாடுகளை எழுதும் குறிமுறைத் தொகுதி | ஏற்கனவே நிரல் பெயர்ப்பியால் முன் வரையறுக்கப்பட்டுள்ளன. இவை நிறுவும் மென்பொருள் தொகுப்பில் உள்ளன. |
16.
i) NS2
ii) Ubuntu
iii) PDF Creator
iv) 7zip GnuCash
v) Blender
vi) VLC
vii) Magento
viii) Android
ix) OPEN NMS
x) MySQL
xi) OpenOffice
xii) GIMP
xiii) Audacity
xiv) Mozilla Firefox
xv) PHP
17.
| வலை சேவையக பக்க ஸ்கிரிப்டிங் | கிளைன்ட் பக்கம் ஸ்கிரிப்டிங் |
|---|---|
| 1. ஸ்கிரிப்ட் குறிமுறை முழுவதும் வலை சேவையைக் கணிப்பொறியில் இயங்குகிறது | ஸ்கிரிப்ட் குறிமுறை முழுவதும் வலை உலாவியில் இயங்குகிறது. |
| 2. கிளைன்ட் பக்கம் மூலக்கூறி முறையை பார்க்க முடியாதபடி மறைத்து வைத்து பயன்படுத்தப்படும். | வலை உலாவியில் முன்னின்று செயல்படுத்தப்படும். பயனர் மூலக்கூறி முறையைப் பார்க்க முடியும். |
| 3. சேவையகக் கணிப்பொறி உடனான ஊடுதல் தேவை. | சேவையகக் கணிப்பொறியுடனான ஊடாடுதல் தேவையில்லை. |
| 4. பாதுகாப்பானது | பாதுகாப்பற்றது. |
18.
எண் அளவை (Cardinality):
(i) இது உறவுநிலையில் சேர்க்கப்பட வேண்டிய உருப்பொருள்களின் எண்ணிக்கையாக வரையறுக்கப்படுகிறது.
(ii) அதாவது, உறவு நிலை வழியாக மற்றொரு தொகுப்பில் உள்ள உருப்பொருள்களின் எண்ணிக்கையுடன் இணைக்கப்பட்ட ஒரு தொகுப்பில் உள்ள உருப்பொருள்களின் எண்ணிக்கை, ஒன்றுடன் ஒன்று, ஒன்றுடன் பல, பலவற்றுடன் பல என்பன எண் அளவையின் மூன்று வகைப்பாடுகள் ஆகும்.

iii) மேலே உள்ள படம் எண் அளவை எடுத்துக்காட்டில், person மற்றும் Vehicle என்ற இரண்டு உருப்பொருள்கள் உள்ளன.
(iv) இயங்கிக் கொண்டிருக்கும் வாகனம் (Vehicle), இயங்குகின்ற ஓட்டுநர் (person) என எடுத்துக்கொண்டால் வாகனம் மற்றும் ஓட்டுநருக்கு இடையே ஒன்றுடன் ஒன்று உறவுநிலை உருவாக்கப்படும்.

(v) எண் அளவை உறவுநிலை 1 to n மேலே உள்ள எடுத்துக்காட்டில், வாடிக்கையாளர் (Customer) தன் தேவைகளை (Orders) முன்வைப்பது. ஒன்றுடன் பல உறவுநிலையாகும்.
(vi) இங்கு வாடிக்கையாளர், பல தேவைகளை முன்வைக்கலாம் மற்றும் தேவைகள் ஒரே ஒரு வாடிக்கையாளரை மட்டுமே சார்ந்து இருக்கும்.

(vii) எண் அளவை உறவுநிலை n to n மாணவர்கள் (Students), பாடப்பிரிவுகளில் (Courses) பதிவு செய்வது பலவற்றுடன் பல உறவுநிலைக்கான எடுத்துக்காட்டாகும்.
(viii) ஒரு மாணவன், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளில் பதிவு செய்ய முடியும். மற்றும் ஒரு பாடப்பிரிவு. பல மாணவர்களால் பதிவு செய்யப்படமுடியும். எனவே இது பலவற்றுடன் பல வகையாகும்.
19.
பிரிக்கப்பட்ட இரண்டு உரைத்தொகுதிகளை மீண்டும் ஒன்றாக இணைப்பதற்கு :
1. செருகும் புள்ளியை இரண்டாவது உரைத் தொகுதியின் கீழ்ப்பக்க கைப்பிடியில் கிளிக் செய்து அதன் மேல்பகுதி வரை இழுக்கவும்.
2. பிறகு செருகும் புள்ளியை முதல் உரைத் தொகுதியின் கீழ்ப்பக்க கைப்பிடியில் கிளிக் செய்து கீழ்நோக்கி தேவையான அளவிற்கு இழுக்கவும், இப்பொழுது பிரிக்கப்பட்ட இரண்டு உரைத் தொகுதிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டுவிடும்.
20.
அசைவூட்டலில், திரை பொருள் என்பது ஒரு வெக்டர் படமாகும்.
(i) எண் மாற்றத்தைப் பயன்படுத்தி ஒருங்கிணைப்புகளை வரையறுக்க படத்துடன் அதன் பாதையின் இயக்கம் கணக்கிடப்படும்.
(ii) குறைந்தபட்ச சட்டக விகிதம் விநாடிக்கு 16 சட்டங்கள் என இருந்தால் மென்மையான தோற்றத்தைக் கொடுக்கும்.
(iii) இயற்கை தோற்றத்திற்கு குறைந்தபட்சம் விநாடிக்கு 25 சட்டகங்களாக இருத்தல் வேண்டும்.
தொழில்நுட்பம் :
(i) அசைவூட்டல் இரு அல்லது முப்பரிமாணங்களைக் கொண்டது.
(ii) திரையில் X, மற்றும் Y அச்சுகளுக்கு இடையேயான பரப்பில் இரு பரிமாண அசைவூட்டல் நிழற்படத்தை உயிரோட்டமாகக் கொண்டு வருகிறது.
(iii) முப்பரிமாண அசைவூட்டத்தில் X, Y மற்றும் Z ஆகிய மூன்று அச்சுகளுக்கிடையே உயிரோட்டம் நடைபெறுகிறது.
(iv) அசைவூட்டல் கருவிகள் மிகவும் சக்தி வாய்ந்தவை ஆகும். இரண்டு வகையான அசைவூட்டல்களாவன:
1. பாதை அசைவூட்டல்
2. சட்டக அசைவூட்டல்
1. பாதை அசைவூட்டல் :
மாறாத பின்னணியைக் கொண்ட திரையில் ஒரு பொருளை நகர்த்துவதை உள்ளடக்கியது.
2. சட்டக அசைவூட்டல் :
பல பொருட்கள் ஒரே சமயத்தில் நகர்வதற்கு அனுமதிக்கிறது மற்றும் பின்னணி அல்லது பொருள்களும் மாறுகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards