12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
PHP இல் உள்ள இரண்டு வகையான செல்லுபடியாக்கல் என்ன?
2.
HTML படிவக் கட்டுப்பாடுகள் மூலம் தரவு எவ்வாறு சேவையகத்திற்கு அனுப்பப்படுகிறது?
3.
while மடக்கில் உள்ள condition பகுதி எவ்வாறு மதிப்பிடப்படுகிறது?
4.
PHP உள்ள for மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக.
5.
இணைப்பு சரம் (Connection String) என்றால் என்ன?
6.
இணைத்தல் (Connection) மற்றும் மூடுதல் (Close) செயற்கூறுகளை வேறுபடுத்துக.
7.
MySQLi செயற்கூறு என்பது என்ன?
8.
PHP இல் உள்ள MySQLi செயற்கூறுகளை கூறுக.
9.
PHP ஐப் பயன்படுத்தி செய்யக்கூடிய பல்வேறு கோப்பு கையாளுதல் பணிகள் யாவை?
10.
PHP இல் சேவையகத்துக்கு தரவை அனுப்பும் POST முறைக்கும் GET முறைக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குக.
11.
HTML படிவங்களில் தேர்வுப்பெட்டி மற்றும் ரேடியோ பொத்தான் இடையே உள்ள வேறுபாட்டை விளக்குக.
12.
PHPஇல் உள்ள while மடக்கு மற்றும் do … while மடக்குகளை வேறுபடுத்துக.
13.
1 முதல் 10 வரை உள்ள எண்களை ஏறுவரிசையில் அச்சிட for மடக்கைப் பயன்படுத்தி PHP ஸ்கிரிப்ட் ஒன்றை எழுதுக.
14.
MySQLi -ஐ இணைப்பதற்கான கட்டளையை எடுத்துக்காட்டுடன் எழுதுக
15.
MySQLi இல் உள்ள செயற்கூறுகளின் பயன்களை எழுதவும்.
16.
MySQLi வினவல்களின் கட்டளை அமைப்பை எழுதவும்.
17.
10 முதல் 20 வரை உள்ள எண்களை ஏறுவரிசையில் அச்சிட while மடக்கு மற்றும் do... while மடக்குகளைப் பயன்படுத்தி PHP ஸ்கிரிப்டுகளை எழுதுக.
18.
PHP இல் கோப்பு கையாளுதல் செயல்பாடுகளை விரிவாக விளக்குக.
19.
PHP இல் MySQL ஐ இணைப்பதற்கான முறையின் வகைகளை விரிவாக விளக்கவும்.
1.
PHP இல் இரண்டு வகையான செல்லுபடியாக்கல் உள்ளது. அவை,
(i) பயனர் கணிப்பொறி சார்ந்த செல்லுபடியாக்கல்
(ii) சேவையகக் கணிப்பொறி சார்ந்த செல்லுபடியாக்கல்
2.
(i) வலை உருவாக்கத்தின் போது பயனர் வலைத்தளத்தையோ அல்லது வலைப்பக்கத்தையோ தொலைவில் உள்ள பயனர் கணிப்பொறியிலிருந்து அணுகுவார் அல்லது தரவுகளை சேவையகத்திற்கு அனுப்புவர்.
(ii) இந்த தரவுகள் உரைபெட்டி (Textbox), கீழ்வரிபெட்டி (dropdown box), ரேடியோ பொத்தான் (radio button) HTML படிவ உறுப்புகள் மூலம் சேகரிக்கப்பட்டு சேவையகக் கணிப்பொறிக்கு PHP போன்ற சேவையக கணிப்பொறி நிரலாக்க மொழி கொண்டு அனுப்பப்படுகின்றன.
3.
மடக்கின் ஒவ்வொரு சுழற்சியின் தொடக்கத்திலும் நிபந்தனை (condition) சரிபார்க்கப்படுகிறது. நிபந்தனை சரி எனில் குறிமுறைத் தொகுதி (code block) இயக்கப்படுகிறது. நிபந்தனை தவறு எனில் மடக்கு முடிவுக்கு வருகிறது.
4.
கட்டளை அமைப்பு:
for (initialization; condition; increment/decrement)
{
// code block;
}
5.
(i) இணைப்பு சரம் என்பது, ஒரு தரவு மூலத்தையும், அதன் வழிமுறையையும் பற்றிய தகவல்களைக் குறிப்பிட்டு அவ்விரண்டையும் இணைக்கும்.
(ii) இணைப்பு துவங்குதலின் குறியீடாக அனுப்பப்படுகின்றன.
6.
| இணைத்தல் | மூடுதல் | |
| 1 | mysqli_connect() மூலம் செயற்கூறின் PHP நிரல் மொழி வழியாக தரவுத்தள சேவையக கணினியை இணைக்க முடியும். | mysqli_close () செயற்கூறு PHP ஸ்கிரிப்டிங் மற்றும் MySQL தரவுத்தள சேவையகத்திற்கு இடையேயான நடப்பிலுள்ள திறந்துள்ள தரவுத்தள இணைப்பை மூடுவதற்குப் பயன்படுகிறது. |
| 2 | இதில் நான்கு அளவுருக்கள் பயன்படுத்தப்படுகிறது. | இதில் இரண்டு அளவுருக்கள் பயன்படுத்தப்படுகிறது. |
7.
MySQLi என்பது PHP மொழியின் நீட்டிப்பு ஆகும். இது MySQL தரவுத்தளத்தை அணுகப் பயன்படுகிறது.
8.
1. mysqli_connect ( ) Function
2. mysqli_close ( ) Function
3. mysqli_query ( ) Function
9.
கோப்புகள் பல்வேறு பணிகளுக்கான கீழ்க்கண்ட நிகழ்வுகளில் செயல்படுத்தப்படுகின்றன.
(i) PHP கோப்பினை திறத்தல்
(ii) PHP கோப்பினை படித்தல்
(iii) PHP கோப்பினை மூடுதல்
(iv) PHP கோப்பினை எடுதல்
(v) PHP கோப்பினை சேர்த்தல்
(vi) PHP கோப்பினை பதிவேற்றம் செய்தல்
10.
Post வழிமுறை: Post வழிமுறை மூலம் சேவையகத்திற்கு அனுப்பப்படும் உள்ளீடு செய்யப்பட்ட தரவானது, பயனர் கணிப்பொறியின் HTTP request-னுடைய கோரிக்கை உடற்பகுதியில் (request body) சேமிக்கப்படுகின்றது.
GET வழிமுறை : URL முகவரி வழியாக GET வழிமுறை கொண்டு உள்ளீட்டு தரவினை சேவையகத்திற்கு அனுப்பப்படுவதை வினவல் சரம் (query string) என்கிறோம். உள்ளீடு செய்யப்பட்ட அனைத்து தரவினையும் பயனர் Submit பொத்தானை கிளிக் செய்த பிறகும் காண முடியும்.
11.
| தேர்வுப் பெட்டி | ரேடியோ பொத்தான் |
| HTML படிவத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மதிப்பினை தேர்ந்தெடுக்க தேர்வுப் பெட்டி முக்கிய அம்சமாகும். | ரேடியோ பொத்தான் கொண்டு ஒரு நேரத்தில் ஒரு மதிப்பினைத்தான் தேர்வு செய்ய முடியும். |
12.
PHPஇல் while மடக்கு மற்றும் do... while மடக்கு இரண்டுமே ஒரு நிபந்தனை 'சரி' என இருக்கும் வரை குறிமுறைத் தொகுதியை பலமுறை இயக்கப் பயன்படுகிறது. இருந்தபோதிலும் இவ்விரு மடக்குகளுக்கிடையே சில வேறுபாடுகள் உள்ளன.
இந்த இரண்டு மடக்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு:
இயக்கப்படும் வரிசை :
while மடக்கில், நிபந்தனை முதலில் பரிசோதிக்கப்பட்டு பின்னர் குறிமுறைத் தொகுதி இயக்கப்படுகிறது. நிபந்தனை 'சரி' எனில் குறிமுறைத் தொகுதி இயக்கப்படுகிறது. நிபந்தனை 'தவறு' எனில் மடக்கு முடிவுக்கு வருகிறது.
do...while மடக்கில் குறிமுறைத் தொகுதி முதலில் இயக்கப்பட்டு, பின்னர் நிபந்தனை பரிசோதிக்கப்படுகிறது. நிபந்தனை 'சரி' எனில் குறிமுறைத் தொகுதி மீண்டும் இயக்கப்படுகிறது. நிபந்தனை 'தவறு' எனில் மடக்கு முடிவுக்கு வருகிறது.
சுழற்சியின் குறைந்தபட்ச எண்ணிக்கை :
while மடக்கின் தொடக்கத்தில் நிபந்தனை 'தவறு' என இருந்தால், மடக்கின் குறிமுறைத் தொகுதி ஒருமுறை கூட செயல்படுத்தப்படாது.
do...while மடக்கில், நிபந்தனை தவறாக இருந்தாலும், குறிமுறைத் தொகுதி ஒரு முறை செயல்படுத்தப்பட்டுவிடும்.
13.
for ($i = 1 ; $i<=10;$i++)
{
echo $i."< br> ";
}
வெளியீடு:
1
2
3
4
5
6
7
8
9
10
14.
கட்டளை :
mysqli_connect("Server Name", "User Name", "Password", "DB Name");
எடுத்துக்காட்டு : $conn=mysqli_connect($dbhost, $dbuser, $dbpass);
15.
(i) MySQLi என்பது PHP மொழியின் நீட்டிப்பு ஆகும்.
(ii) இது MySQLi தரவுத்தளத்தை அணுகப் பயன்படுகிறது.
(iii) MySQLi தரவுத்தளத்தை தொடர்பு கொள்ளவே MySQLi செயற்கூறுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
(iv) இந்த செயற்கூறுகள் MySQLi தரவுத்தள சேவையகத்தை அணுக அனுமதிக்கிறது.
16.
mysqli_query ( ) என்பது PHP மொழியிலுள்ள வினவல் கூற்றுகளை இயக்குவதற்கு உதவுகின்றது.
கட்டளை அமைப்பு:
mysqli_query ("Connection Object","SQL query")
17.
while மடக்கு:
To print the numbers from 10 to 20
$i =10:
while ($ i <= 20 )
{
echo $i,"br>";
"
$i++
}
வெளியீடு :
10
11
12
13
14
15
16
17
18
19
20
do ... while மடக்கு
To print the numbers from 10 to 20
$i = 10;
do {
echo $i."
";
$i++;
} while ($i <=20);
வெளியீடு :
10
11
12
13
14
15
16
17
18
19
20
18.
கோப்புகளைக் கையாளுதல் வலை பயன்பாடுகளை மேம்படுத்துவதில் உள்ள முக்கியமான செயலாகும். கோப்புகள் பல்வேறு பணிகளுக்கான கீழ்க்கண்ட நிகழ்வுகளில் செயல்படுத்தப்படுகின்றன.
1. PHP கோப்பினை திறத்தல்
2. PHP கோப்பினை படித்தல்
3. PHP கோப்பினை மூடுதல்
4. PHP கோப்பினை எழுதுதல்
5. PHP கோப்பினை சேர்த்தல்
6. PHP கோப்பினை பதிவேற்றம் செய்தல்
1. PHP கோப்பினை திறத்தல்:
fopen() என்பது PHP-உள்ள ஒரு அமைப்பு செயற்கூறாகும். இந்த செயற்கூறானது சேவையகத்திலுள்ள ஒரு கோப்பினைத் திறக்க உதவுகிறது. இது இரண்டு அளவுருக்களைக் கொண்டுள்ளது கோப்பின் பெயரைக் குறிப்பிட ஒன்று. மற்றொன்று எந்த முறைமையில் (mode) கோப்பினைத் திறக்க வேண்டும் (read/ write) என்பதைக் குறிக்கின்றது.
கட்டளை அமைப்பு:
$file _ Object = fopen(" File Name , "Read/ WriteMode") or die("Error Message! ");
எ.கா:
< ?PHP
$myfile fopen("Student.txt", "r") or die("Unable to open file! ");
? >
2. PHP கோப்பினை படித்தல்:
fread ( ) செயற்கூறு திறந்துள்ள கோப்பிலிருந்து படிக்க உதவுகின்றது. File object என்பது fopen செயற்கூறிலிருந்து பெறப்படுகின்றது.
கட்டளை அமைப்பு:
fread($file _ Object,filesize("FileName"));
எ.கா:
< ?php
fread($myfile,filesize(" Student. txt"));
? >
3. PHP கோப்பினை மூடுதல்:
fclose ( ) செயற்கூறானது திறக்கப்பட்ட ஒரு கோப்பினை மூடுவதற்கு உதவுகின்றது File object என்பது fopen செயற்கூறிலிருந்து பெறப்படுகின்றது.
கட்டளை அமைப்பு: fclose($file _Object);
எ.கா:
< ?php
$myfile = fopen("student.txt", "r");
// some code to be executed ....
fclose($myfile );
? >
4. PHP கோப்பினை எழுதுதல்:
fwrite ( ) செயற்கூறானது கோப்பில் எழுத உதவுகிறது.
கட்டளை அமைப்பு:
fwrite($myfile, $txt);
19.
தரவுத்தள இணைப்புகள்:
MySQL தரவுத்தளத்தை அணுகுவதற்கு முன் mysqli_connect() செயற்கூற்றைப் பயன்படுத்தி PHP நிரல் மொழி வழியாக தரவுத்தள சேவையகக் கணினியை இணைக்க வேண்டும்.
கட்டளை அமைப்பு:
mysqli_connect ("Server Name", "User Name", "Pass Word", "DB Name");
இந்த செயற்கூறு தரவுத்தள சேவையகத்துடன் இணைப்பை ஏற்படுத்துவதற்கு நான்கு அளவுருக்களைக் கொண்டுள்ளது.
தரவுத்தள இணைப்பை மேலாண்மை செய்தல்:
கீழ்க்காணும் நிரல் தரவுத்தள இணைப்பை மேலாண்மை செய்ய உதவும் முறைகளையும் அதன் சிறப்புகளையும் விவரிக்கிறது.
$servername = "localhost";
$username = "username";
$password = "password";
$DB_name = "School_DB";
$conn = mysqli_connect($servername, $username, $password,$DB_name);
if (!$conn) {
die("Connection failed: ". mysqli_connect_error());
}
echo "Connected successfully";
?>
மேற்காணும் நிரல் நுணுக்கில், தரவுத்தள சேவையகத்துடன் இணைப்பை ஏற்படுத்த நான்கு மாறிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
$ servername - தரவுத்தள சேவையகத்தின் முகவரி IP
$ username - தரவுத்தள சேவையகத்தின் பயனர் பெயர்
$ password - தரவுத்தள சேவையகத்தின் கடவுச்சொல்
$DB-Name - தரவுத்தளத்தின் பெயர்
mysqli_connect() செயற்கூறு இந்த மாறிகளைப் பயன்படுத்தி PHP நிரலிலிருந்து தரவுத்தள சேவையகத்தை இணைக்கிறது. இணைப்பு ஏற்படாவிடில் MySQL பிழைக் குறியீட்டுடன் வெளியீடு தோன்றும். இல்லாவிடில் இணைப்பு ஏற்பட்டிருக்கும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards