12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
HTML படிவக் கட்டுப்பாடுகள் பற்றி விரிவாக விளக்குக.
2.
MySQL இல் உள்ள செயற்கூறுகளை எடுத்துக்காட்டுடன் விவரி.
3.
foreach மடக்கை எடுத்துக்காட்டுடன் விவரி.
4.
PHP இல் செல்லுபடியாக்கல் என்றால் என்ன?
5.
அடிப்படை HTML படிவக் கட்டுப்பாடுகள் என்னென்ன உள்ளன?
6.
PHP மற்றும் HTML படிவக் கட்டுப்பாடுகளின் முக்கிய நோக்கம் என்ன?
7.
கீழ்க்கண்ட குறிமுறையின் வெளியீடு என்ன?
8.
9.
PHP இல் மடக்குகளின் நோக்கம் என்ன?
10.
MySQLi வினவல்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.
11.
எத்தனை வகையான MySQLi செயற்கூறுகள் PHP இல் உள்ளன.
12.
PHP ஐப் பயன்படுத்தி செய்யக்கூடிய பல்வேறு கோப்பு கையாளுதல் பணிகள் யாவை?
13.
PHP இல் சேவையகத்துக்கு தரவை அனுப்பும் POST முறைக்கும் GET முறைக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குக.
14.
HTML படிவங்களில் தேர்வுப்பெட்டி மற்றும் ரேடியோ பொத்தான் இடையே உள்ள வேறுபாட்டை விளக்குக.
15.
PHPஇல் உள்ள while மடக்கு மற்றும் do … while மடக்குகளை வேறுபடுத்துக.
16.
1 முதல் 10 வரை உள்ள எண்களை ஏறுவரிசையில் அச்சிட for மடக்கைப் பயன்படுத்தி PHP ஸ்கிரிப்ட் ஒன்றை எழுதுக.
17.
PHP இல் for மடக்கில் உள்ள initialization, condition and increment என்ற மூன்று பகுதிகளை விளக்குக.
18.
MySQLi -ஐ இணைப்பதற்கான கட்டளையை எடுத்துக்காட்டுடன் எழுதுக
19.
MySQLi வினவல்களின் கட்டளை அமைப்பை எழுதவும்.
1.
HTML படிவத்தை கட்டுப்படுத்துவதில் பயன்படுத்தப்படும் உறுப்புகள் பின்வருமாறு :
(i) உரை உள்ளீடுகள் (Text inputs)
(ii) பொத்தான்கள் (Buttons)
(iii) (Checkbox)
(iv) ரேடியோ பொத்தான் (Radio Buttons)
(v) கோப்பு தேர்ந்தெடுத்தல் (File Select)
(vi) படிவ ஒட்டு (Form Tag)
1. உரையினை உள்ளிட உரைபெட்டி (text box) மற்றும் உரை பரப்பு (text area) போன்ற உறுப்புகள் உள்ளன.
2. Submit பொத்தான், Reset பொத்தான் மற்றும் cancel பொத்தான் போன்ற பொத்தான்கள் உள்ளன.
3. HTML படிவத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மதிப்பினை தேர்ந்தெடுக்க தேர்வுப் பெட்டி (check box) முக்கிய அம்சமாகும்.
4. ரேடியோ பொத்தானும் தேர்வுபெட்டி போன்றதுதான். ஆனால் ரேடியோ பொத்தான் கொண்டு ஒரு நேரத்தில் ஒரு மதிப்பினைத்தான் தேர்வு செய்ய முடியும்.
5. பயனர் கணிப்பொறியிலிருந்து சேவையகக் கணிப்பொறிக்கு ஒரு கோப்பினைத் தேர்ந்தெடுத்து அனுப்புவதில் கோப்பு தேர்ந்தெடுத்தல் (File select) உறுப்பு சிறந்ததாகும்.
6. படிவ ஒட்டானது (Form Tag), ஒரு வழிமுறையை (Post அல்லது GET) குறிப்பிடவும் HTML ஆவணத்திலுள்ள அனைத்து படிவ உறுப்புக்களை கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றது.
2.
PHP நிரல் மொழியில் MySQL தரவுத்தள இணைப்பு மற்றும் தரவுத்தள வினவலைச் செயல்படுத்துவதற்காக பல செயற்கூறுகள் உள்ளன. MySQLi என்பது PHP மொழியின் நீட்டிப்பு ஆகும். இது MySQL தரவுத்தளத்தை அணுகப் பயன்படுகிறது.
இதன் தற்போதைய பதிப்பு 5.0.0 MySQLi நீட்டிப்பு MySQL தரவுத்தள இணைப்பு மற்றும் மேலாண்மையுடன் தொடர்புடைய கீழ்க்கண்ட முக்கிய செயற்கூறுகளை உள்ளடக்கியிருக்கிறது.
(i) mysqli_connect() Function
(ii) mysqli_close() Function
(iii) mysqli_query() Function
தரவுத்தள இணைப்புகள்:
MySQL தரவுத்தளத்தை அணுகுவதற்கு முன் mysqli_connect() செயற்கூற்றைப் பயன்படுத்தி PHP நிரல் மொழி வழியாக தரவுத்தள சேவையகக் கணினியை இணைக்க வேண்டும்.
கட்டளை அமைப்பு :
mysqli_connect ("Server Name", "User Name", "PassWord", "DB Name");
இந்த செயற்கூறு தரவுத்தள சேவையகத்துடன் இணைப்பை ஏற்படுத்துவதற்கு நான்கு அளவுருக்களைக் கொண்டுள்ளது.
தரவுத்தள இணைப்பை மேலாண்மை செய்தல்:
கீழ்க்காணும் நிரல் தரவுத்தள இணைப்பை மேலாண்மை செய்ய உதவும் முறைகளையும் அதன் சிறப்புகளையும் விவரிக்கிறது.
$servername = "localhost";
$username = "username";
$password = "password";
$DB_name = "School_DB";
$conn = mysqli_connect($servername,
$username, $password,$DB_name);
if (!$conn) {
die("Connection failed:".
mysqli_connect_error()); }
echo "Connected successfully";
?>
வினவல்களைச் செயல்படுத்துதல் :
(i) MySQL மற்றும் PHP-ஐ இணைத்தலின் மிக முக்கிய நோக்கம் MySQL தரவுத்தள சேவையகத்திலிருந்து தரவுகளை மீட்டெடுத்தல் மற்றும் கையாளுதல் ஆகும் .
(ii) SQL PHP, MySQL நீட்டிப்புடன் உடன் சேர்ந்து MySQL மற்றும் PHP இணைப்பின் நோக்கத்தை அடைவதற்கு உதவுகின்றன. mysqli_query() என்பது PHP மொழியிலுள்ள SQL வினவல் கூற்றுகளை இயக்குவதற்கு உதவுகின்றது.
கட்டளை அமைப்பு:
mysqli_query("Connection Object", "SQL query.
எடுத்துக்காட்டு :
$con=mysqli_connect("localhost", "my_user", "my_password", "Student_DB "); $sql="SELECT student_name,student_age FROM student"; mysqli_query($con,$sql);
இணைப்பை மூடுதல்:
(i) mysqli_close() செயற்கூறு PHP ஸ்கிரிப்டிங் மற்றும் MySQL தரவுத்தள சேவையகத்திற்கு இடையேயான நடப்பிலுள்ள திறந்துள்ள தரவுத்தள இணைப்பை மூடுவதற்குப் பயன்படுகிறது.
கட்டளை அமைப்பு:
mysqli_close("Connection Object");
எடுத்துக்காட்டு :
$con=mysqli_connect ("localhost", "$user", "$password", "SCHOOL_DB"); mysqli_close($con);
?>
3.
foreach மடக்கு அணியில் உள்ள உறுப்புகளுடன் மீண்டும் மீண்டும் செயல்பட பயன்படுகிறது.
கட்டளை அமைப்பு:
foreach ($array as $value)
{
//code to be executed;
}
foreach மடக்கின் ஒவ்வொரு சுழற்சியின் போதும் நடப்பு அணி உறுப்பின் மதிப்பானது $value மாறியில் இருத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு :
அணியின் உறுப்புகளை அச்சிடுவதற்கான foreach மடக்கு
$array = array(1, 2, 3, 4, 5);
foreach ($array as $value) }
echo $value."
";
கீழ்க்கண்ட கட்டளை அமைப்பு பயன்படுத்தி தொடர்புருத்த அணியில் உள்ள திறவுகோல்கள் மற்றும் மதிப்புகளை foreach மடக்கின் சுழற்சியில் பயன்படுத்தலாம்.
கட்டளை அமைப்பு:
foreach ($array as $key => $value)
{
//code to be executed;
}
foreach மடக்கின் ஒவ்வொரு சுழற்சியின் போதும் நடப்பு அணி உறுப்பின் திறவுகோலானது $key மாறியிலும், மதிப்பானது $value மாறியிலும் இருத்தப்படுகிறது.
வெளியீடு:
1
2
3
4
5
4.
செல்லுபடியாக்கல் (Validation) என்பது பயனரால், பயனர் கணிப்பொறியிலிருந்து உள்ளீடு செய்யப்பட்ட தரவுகளை சரிபார்க்கும் ஒரு செயலாகும்.
5.
HTML படிவத்தை கட்டுப்படுத்துவதில் பயன்படுத்தப்படும் உறுப்புகள் பின்வருமாறு:
1. உரை உள்ளீடுகள் (Text inputs)
2. பொத்தான்கள் ( Buttons)
3. தேர்வுப்பெட்டி ( Checkbox)
4. ரேடியோ பொத்தான் ( Radio Buttons)
5. கோப்பு தேர்ந்தெடுத்தல் ( File Select)
6. படிவ ஒட்டு ( Form Tag)
6.
PHP மற்றும் HTML படிவ உறுப்புகளின் முக்கிய நோக்கம் பயனரிடமிருந்து தரவுகளை சேகரிப்பதாகும்.
7.
$i = 1;
while ($i <= 5)
{
echo $i. "<br>";
$ i ++:
விடை வெளியீடு
1
2
3
4
5
8.
9.
(i) மடக்கு (loop) என்பது ஒரு கட்டுப்பாட்டுக் கட்டமைப்பாகும்.
(ii) இது ஒரு குறிமுறைத் தொகுதியை குறிப்பிட்ட தடவைகள் அல்லது நிபந்தனை நிறைவேறும் வரை மீண்டும் மீண்டும் செயல்படுத்துகிறது.
10.
(i) mysqli_query($con, "SELECT FROM Persons");
(ii) mysqli_query($con, "INSERT INTO persons (FirstName, LastName, Age) VALUES ('Glenn', 'Quagmire', 33)");
11.
(i) தரவுத்தள இணைப்புகள்
(ii) தரவுத்தள இணைப்பை மேலாண்மை செய்தல் | 2
(iii) வினவல்களைச் செயல்படுத்துதல்
(iv) இணைப்பை மூடுதல்
12.
கோப்புகள் பல்வேறு பணிகளுக்கான கீழ்க்கண்ட நிகழ்வுகளில் செயல்படுத்தப்படுகின்றன.
(i) PHP கோப்பினை திறத்தல்
(ii) PHP கோப்பினை படித்தல்
(iii) PHP கோப்பினை மூடுதல்
(iv) PHP கோப்பினை எடுதல்
(v) PHP கோப்பினை சேர்த்தல்
(vi) PHP கோப்பினை பதிவேற்றம் செய்தல்
13.
Post வழிமுறை: Post வழிமுறை மூலம் சேவையகத்திற்கு அனுப்பப்படும் உள்ளீடு செய்யப்பட்ட தரவானது, பயனர் கணிப்பொறியின் HTTP request-னுடைய கோரிக்கை உடற்பகுதியில் (request body) சேமிக்கப்படுகின்றது.
GET வழிமுறை : URL முகவரி வழியாக GET வழிமுறை கொண்டு உள்ளீட்டு தரவினை சேவையகத்திற்கு அனுப்பப்படுவதை வினவல் சரம் (query string) என்கிறோம். உள்ளீடு செய்யப்பட்ட அனைத்து தரவினையும் பயனர் Submit பொத்தானை கிளிக் செய்த பிறகும் காண முடியும்.
14.
| தேர்வுப் பெட்டி | ரேடியோ பொத்தான் |
| HTML படிவத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மதிப்பினை தேர்ந்தெடுக்க தேர்வுப் பெட்டி முக்கிய அம்சமாகும். | ரேடியோ பொத்தான் கொண்டு ஒரு நேரத்தில் ஒரு மதிப்பினைத்தான் தேர்வு செய்ய முடியும். |
15.
PHPஇல் while மடக்கு மற்றும் do... while மடக்கு இரண்டுமே ஒரு நிபந்தனை 'சரி' என இருக்கும் வரை குறிமுறைத் தொகுதியை பலமுறை இயக்கப் பயன்படுகிறது. இருந்தபோதிலும் இவ்விரு மடக்குகளுக்கிடையே சில வேறுபாடுகள் உள்ளன.
இந்த இரண்டு மடக்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு:
இயக்கப்படும் வரிசை :
while மடக்கில், நிபந்தனை முதலில் பரிசோதிக்கப்பட்டு பின்னர் குறிமுறைத் தொகுதி இயக்கப்படுகிறது. நிபந்தனை 'சரி' எனில் குறிமுறைத் தொகுதி இயக்கப்படுகிறது. நிபந்தனை 'தவறு' எனில் மடக்கு முடிவுக்கு வருகிறது.
do...while மடக்கில் குறிமுறைத் தொகுதி முதலில் இயக்கப்பட்டு, பின்னர் நிபந்தனை பரிசோதிக்கப்படுகிறது. நிபந்தனை 'சரி' எனில் குறிமுறைத் தொகுதி மீண்டும் இயக்கப்படுகிறது. நிபந்தனை 'தவறு' எனில் மடக்கு முடிவுக்கு வருகிறது.
சுழற்சியின் குறைந்தபட்ச எண்ணிக்கை :
while மடக்கின் தொடக்கத்தில் நிபந்தனை 'தவறு' என இருந்தால், மடக்கின் குறிமுறைத் தொகுதி ஒருமுறை கூட செயல்படுத்தப்படாது.
do...while மடக்கில், நிபந்தனை தவறாக இருந்தாலும், குறிமுறைத் தொகுதி ஒரு முறை செயல்படுத்தப்பட்டுவிடும்.
16.
for ($i = 1 ; $i<=10;$i++)
{
echo $i."< br> ";
}
வெளியீடு:
1
2
3
4
5
6
7
8
9
10
17.
(i) மடக்கின் தொடக்கத்தில் ஒருமுறை மட்டுமே தொடக்க மதிப்பு (initialization) செயல்படுத்தப்படுகிறது. இது மாறிகளுக்குத் தொடக்க மதிப்பிருத்தப் பயன்படுகிறது.
(ii) மடக்கின் ஒவ்வொரு சுழற்சியின் முன்பும் நிபந்தனை (condition) சரிபார்க்கப்படுகிறது. நிபந்தனை 'சரி' எனில் குறிமுறைத் தொகுதி இயக்கப்படுகிறது. நிபந்தனை 'தவறு' எனில் மடக்கு முடிவுக்கு வருகிறது.
(iii) மடக்கின் ஒவ்வொரு சுழற்சிக்குப் பிறகும் 'மிகுப்பு' அல்லது 'குறைப்பு' பகுதி செயல்படுத்தப்படுகிறது. இது மாறியின் மதிப்பை புதுப்பிக்கப் பயன்படுகிறது.
18.
கட்டளை :
mysqli_connect("Server Name", "User Name", "Password", "DB Name");
எடுத்துக்காட்டு : $conn=mysqli_connect($dbhost, $dbuser, $dbpass);
19.
mysqli_query ( ) என்பது PHP மொழியிலுள்ள வினவல் கூற்றுகளை இயக்குவதற்கு உதவுகின்றது.
கட்டளை அமைப்பு:
mysqli_query ("Connection Object","SQL query")
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards