12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
Switch கூற்றை எடுத்துக்காட்டுடன் விவரி.
2.
பயனர் வரையறுக்கும் செயற்கூறை எடுத்துக்காட்டுடன் விவரி.
3.
4.
switch கூற்றில் உள்ள break கூற்றின் வேலை என்ன?
5.
PHP இல் உள்ள if கூற்றின் கட்டளை அமைப்பை எழுதுக.
6.
PHP இல் உள்ள நிபந்தனைக் கூற்றுகள் யாவை?
7.
உள்ளிணைந்த செயற்கூறுகள் பற்றி சிறுகுறிப்பு வரைக.
8.
PHP இல் உள்ள செயற்கூறுகளின் வகைகள் யாவை?
9.
செயற்கூறு என்றால் என்ன?
10.
மாறும் வலைப்பக்கம் என்றால் என்ன?
11.
PHP என்றால் என்ன?
12.
PHP இல் உள்ள switch கூற்றின் கட்டளை அமைப்பை எழுதுக.
13.
PHP இல் உள்ள if ... elseif ... else கூற்றின் கட்டளை அமைப்பை எழுதுக.
14.
PHP இல் உள்ள ஒரு செயற்கூறை எவ்வாறு அழைப்பாய்?
15.
PHP இல் ஒரு செயற்கூறை வரையறுப்பதற்கான கட்டளை அமைப்பை எழுதுக.
16.
PHP இல் செயற்கூறுகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் யாவை?
17.
PHP இல் மாறிக்கு பெயரிடுவதற்கான விதிமுறைகளை எழுதுக.
18.
PHP ஒட்டின் வகைகளை விளக்குக.
19.
PHP இல் உள்ள அம்சங்கள் யாவை?
1.
இது ஒரு கிளைபிரிப்புக் கூற்றாகும். ஒரு நிபந்தனையின் அடிப்படையில், தரப்பட்டுள்ள பல்வேறு தேர்வுகளில் ஒன்றுக்குக் கட்டுப்பாட்டை எடுத்துச் செல்லும்.
switch கூற்று பல நிபந்தனைகளைக் குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது. இது வேறுபட்ட நிபந்தனைகளுக்கு, வெவ்வேறு குறிமுறைத் தொகுதியை இயக்குகிறது.
கட்டளை அமைப்பு:
switch (expression)
{
case value1:
//code to be executed if expression = value1; break;
case value2:
//code to be executed if expression = value2: break;
...
default:
// code to be executed if expression is not equal to any of the values;
}
எ.கா :
< ?php
$x = 10;
switch ($x)
{
case 5:
echo "x is equal to 5";
break;
case 10:
echo "x is equal to 10"; break;
case 15:
echo "x is equal to 15"; break;
default:
echo "x is not equal to 5, 10, or 15";
}
: x is equal to 10
2.
பயனர் வரையறுக்கும் செயற்கூறுகள் (User- defined Functions):
பயனர் வரையறுக்கும் செயற்கூறுகளானது 'function' என்னும் சிறப்புச் சொல்லுடன் தொடங்க வேண்டும். அதனைத் தொடர்ந்து செயற்கூறின் பெயர் மற்றும் பிறை அடைப்புக் குறிகள் (Parentheses) இடம் பெற வேண்டும்.
செயற்கூறு அறிவிப்பு : கட்டளை அமைப்பு
function functionName([parameter list])
{
// code to be executed
}
(i) இதில் "function" என்னும் சிறப்புச் சொல் செயற்கூறு வரையறையைக் குறிக்கிறது.
(ii) functionName என்பது செயற்கூறின் பெயர். இது PHP இல் உள்ள எந்தவொரு குறிப்பெயராகவும் இருக்கலாம். ஆனால் சிறப்புச் சொல்லாக இருக்கக் கூடாது.
(iii) parameter list என்பது காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட மாறிகளின் பெயரைக் கொண்டிருக்கும். இது ஒரு விருப்பத் தேர்வாகும். இதில் நமக்குத் தேவையான அளபுருக்களின் எண்ணிக்கையைப் பயன்படுத்தலாம்.
(iv) நெளிவு அடைப்புக் குறிகளுக்குள் செயற்கூறு செயல்படுத்த வேண்டிய குறிமுறைத் தொகுதியைக் கொடுக்க வேண்டும். இவற்றில் PHP கூற்றுகள், மடக்குகள், நிபந்தனைகள் மற்றும் பல இடம் பெறலாம்.
3.
4.
switch கூற்றில் உள்ள break கூற்றானது case ஐ முடித்து வைத்து கட்டுப்பாட்டை switch கூற்றிலிருந்து வெளியேறச் செய்கிறது.
5.
கட்டளை அமைப்பு :
if (condition)
{
// code to be executed if condition is true;
}
6.
PHP இல் பல வகையான நிபந்தனைக் கூற்றுகள் உள்ளன. அவை
1. if கூற்று
2. if ...else கூற்று
3. if..elseif ...else கூற்று
4. switch கூற்று
7.
உள்ளிணைந்த செயற்கூறுகள் என்பது PHP மொழியில் ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ள செயற்கூறுகளாகும். இவை முன் வரையறுக்கப்பட்டுள்ள செயற்கூறுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
8.
(i) உள்ளிணைந்த செயற்கூறுகள்
(ii) பயனர் வரையறுக்கும் செயற்கூறுகள்
9.
செயற்கூறு என்பது PHPஇல் உள்ள ஒரு முக்கியமான அம்சமாகும். இது குறிமுறையை மறு பயனாக்கம் செய்யப் பயன்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்யும் குறிமுறைத் தொகுதியை செயற்கூறு என்று அழைக்கிறோம்.
10.
மாறும் வலைப்பக்கம் என்பது ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அதன் உள்ளடக்கம் மாறிக்கொண்டே இருக்கும். இது இயங்கும் வலைதளங்களை உருவாக்குவதற்கும், தரவுத்தளங்களை கையாளுவதற்கும் பயன்படுகிறது.
11.
PHP என்பது சேவையகம் சார்ந்த ஸ்கிரிப்டிங் மொழியாகும். அதாவது PHP ஸ்கிரிப்ட் ஆனது சேவையகத்தில் இயக்கப்படுகிறது. வலை உலவியில் அல்ல. இது இணையதள மேம்பாட்டிற்குப் பயன்படுத்தப்படுகிறது.
12.
கட்டளை அமைப்பு:
switch (expression)
{
case value1:
//code to be executed if expression = value1; break;
case value2:
//code to be executed if expression = value2: break;
...
default:
// code to be executed if expression is not equal to any of the values;
}
13.
கட்டளை அமைப்பு:
if (condition1)
{
// code to be executed if condition 1 is true;
}
elseif (condition2)
{
// code to be executed if condition 1 is false and condition2 is true;
}
elseif (condition3)
{
// code to be executed if condition1 and condition2 are false and condition3 is true;
}.
else
{
// code to be executed if all conditions are false;
}
14.
செயற்கூறை அழைத்தல் என்பது செயற்கூறை இயக்குவதற்கான மற்றொரு பெயராகும். செயற்கூறின் பெயரை செயலுருபுகளின் பட்டியலுடன் குறிப்பிட்டு அழைக்கப்படுகிறது.
கட்டளை அமைப்பு
function Name(); (or)
functionName(argument list);
15.
கட்டளை அமைப்பு
function functionName([parameter list])
{
// code to be executed
}
16.
PHP இல் செயற்கூறுகளை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் :
(i) குறிமுறை மறுபயனாக்கம் : செயற்கூறானது குறிமுறை மறுபயனாக்கத்திற்கு உதவுகிறது. இது குறிமுறை எழுதும் நேரத்தையும், பராமரிக்கும் நேரத்தையும் குறைக்கிறது.
(ii) சோதித்தல் மற்றும் பிழை திருத்துதல்: ஸ்கிரிப்டில் உள்ள ஒவ்வொரு செயற்கூறையும் தனித்தனியாக சோதிக்க முடிவதால், முழு குறிமுறையையும் எளிதாக சோதிக்கவும், பிழைதிருத்தவும் முடிகிறது.
(iii) தொகுதிகளாகப் பிரித்தல்: குறிமுறைகள் சிறிய தொகுதிகளாகப் பிரிக்கப்படுவதால் அவற்றைப் பராமரிப்பதும், மாற்றியமைப்பதும் எளிமையாக இருக்கிறது.
17.
(i) ஒரு மாறியின் பெயர் டாலர் ($) குறியீட்டுடன் தொடங்க வேண்டும். எடுத்துக்காட்டு: $ name
(ii) மாறியின் பெயர் சரங்கள், எண்கள் மற்றும் அடிக்கோடின் கலவையைக் கொண்டிருக்கலாம். எடுத்துக்காட்டு : $ my_report1
(iii) டாலர் குறியீட்டிற்குப் பின்வரும் முதல் எழுத்தானது, எழுத்து அல்லது அடிக்கோடாக இருக்க வேண்டும் (அது எண்ணாக இருக்கக்கூடாது).
(iv) PHP இல் உள்ள மாறியின் பெயர்கள் எழுத்து வடிவுணர்வு கொண்டவையாகும். இதன் பொருள் $name மற்றும் $Name என்பது முற்றிலும் வேறுபட்ட மாறிகளாகக் கருதிக்கொள்ளும்.
18.
PHP இல் மூன்று வகையான ஒட்டுகள் உள்ளன. அவை
(i) PHP இன் தானமைவு ஒட்டுகள்
(ii) குறுகிய திறந்த ஒட்டுகள்
(iii) HTML ஸ்கிரிப்டில் உட்பொதிந்த ஒட்டுகள்
(i) PHP இன் தானமைவு ஒட்டுகள்: இதில் PHP குறிமுறையானது <?php மற்றும் ?>என்ற ஒட்டுகளுக்கிடையே கொடுக்கப்பட வேண்டும்.
// PHP code
?>
(ii) குறுகிய திறந்த ஒட்டுகள்: இதில் PHP குறிமுறையானது <? மற்றும் ?> என்ற ஒட்டுகளுக்கிடையே கொடுக்கப்பட வேண்டும்.
// PHP code
?>
(iii) HTML ஸ்கிரிப்டில் உட்பொதிந்த ஒட்டுகள்: HTML ஸ்கிரிப்டில் இது போன்று PHP குறியீட்டை உட்பொதிக்கலாம்.
<script language="php">
// PHP code
</script>
19.
PHP ஆனது இணைய மேம்பாட்டிற்கான பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் சில:
(i) சேவையகம் சார்ந்த ஸ்கிரிப்டிங் மொழி:
PHP என்பது சேவையகம் சார்ந்த ஸ்கிரிப்டிங் மொழியாகும். அதாவது PHP ஸ்கிரிப்ட் ஆனது சேவையகத்தில் இயக்கப்பட்டு, வெளியீடு கிளையன்டுக்கு (வலை உலவிக்கு) அனுப்பப்படுகிறது. தரவுத்தளங்களுடன் தொடர்பு கொள்ளும் மாறும் வலைப்பக்கங்களை உருவாக்கப் பயன்படுகிறது.
(ii) திறந்த மூல மென்பொருள்:
PHP என்பது ஒரு திறந்த மூல மென்பொருளாகும். இதன் மூலக் குறிமுறையை யார் வேண்டுமானாலும் பார்க்கவும். மாற்றியமைக்கவும் முடியும்.
(iii) இயக்க அமைப்பு சாராதது:
விண்டோஸ், லினக்ஸ் மற்றும் macOS போன்ற பல்வேறு இயக்க அமைப்புகளில் இது செயல்படுகிறது.
(iv) தரவுத்தளத்துடன் இணைந்து செயல்படுதல்:
இது தரவுத்தளத்தால் இயக்கப்படும் வலைத்தளங்களை உருவாக்குவதை எளிதாக்குகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards