12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
Namespaces சிறுகுறிப்பு வரைக?
2.
வரையெல்லை என்றால் என்ன?
3.
Tuple என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
4.
தரவு அருவமாக்கம் வகை என்றால் என்ன?
5.
இடைமுகத்தையும், செயல்படுத்தலையும் வேறுபடுத்துக.
6.
துணை நிரல் என்றால் என்ன?
7.
அணுகல் கட்டுப்பாடு எதற்குத் தேவைப்படுகிறது?
8.
9.
List உள்ள உருப்புகளை அணுகும் பல்வேறு வழிமுறைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.
10.
கான்கிரிட் தரவு வகை மற்றும் அருவமாக்கம் தரவு வகை வேறுபடுத்துக.
11.
ஒரு செயற்கூறுக்கு வெளியே ஒரு மாறியை மாற்றினால் என்ன விளைவுகள் ஏற்படும்? ஒரு எடுத்துக்காட்டு தருக.
12.
pure மற்றும் impure செயற்கூற்றை வேறுபடுத்துக.
13.
தொகுதி நிரலாக்கத்தின் பயன்களை எழுதுக?
14.
மாறியின் வரையெல்லைகளின் வகைகளை விளக்குக (அல்லது) LEGB விதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
15.
தரவு அருவமாக்கம் எவ்வாறு செயல்படுத்துவாய்? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
16.
இடைமுகம் மற்றும் செயல்படுத்துதலை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
17.
CDT-ன் விரிவாக்கம் _________ .
Collective Data Type
Class Data Type
Central Data Type
Concrete Data Type
18.
பின்வருவனவற்றுள் எது இனக்குழுவால் உருவாக்கப்பட்ட சான்றுரு ஆகும்?
அளபுரு
செயற்கூறு
துணை நிரல்
பொருள்
19.
லிஸ்ட் மற்றும் டூபுல்ஸ் ஆகியவற்றை உருவாக்கப் பயன்படுவது எது?
கூட்டு
பேர்ஸ்
அருவமாக்கம்
தரவுகள்
20.
பைத்தானில் தானமைவாக இனக்குழுவின் அனைத்து உறுப்புகளும் ______ ஆக உள்ளன
Private
Protected
Public
Function
21.
நடப்பு செயற்கூறில் வரையறுக்கப்பட்ட மாறிகளைக் குறிக்கும் வரையெல்லை எது?
உள்ளமை
முழுதளாவிய
இணைக்கப்பட்ட
உள்ளிணைந்த
1.
namespaces என்பது மாறியின் பெயரை பொருளுடன் மேப்பிங் செய்வதற்கான கொள்கலனாகும்.
2.
வரையெல்லை என்பது மாறிகள், அளபுருக்கள் மற்றும் செயற்கூறுகளின் அணுகியல்பை நிரலின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு குறிப்பதாகும்.
3.
Tuple என்பது அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள தொடர் மதிப்புகளை காற்புள்ளியில் பிரிக்கப்பட்டிருக்கும். Tuple என்பது List போன்றதாகும். இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் Tuple-ல் கொடுக்கப்பட்ட உறுப்புகளை மாற்ற முடியாது, ஆனால் List-ல் இடம்பெற்றுள்ள உறுப்புகளை மாற்றலாம்.
எ.கா. colour = ('red', 'blue', 'Green')
4.
(i) அருவமாக்க தரவு வகை (Abstract Data type (ADT)) என்பது பொருள்களுக்கான வகை (அல்லது இனக்குழு) ஆகும்.
(ii) ADT-யின் வரையறுப்பு என்ன வகையான செயல்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றது, அவை எப்படி செயல்பட வேண்டும் என்று குறிப்பிடப்படுவதில்லை.
(iii) இவை தரவுகள் நினைவகத்தில் எவ்வாறு சேமிக்கப்படுகின்றது என்றோ அல்லது எந்த நெறிமுறைகள் செய்யப்படவேண்டும் என்ற வழிமுறையோ குறிப்பிடப்படுவதில்லை.
(iv) சுயமாக இவை செயல்படுத்தப்படுவதில்லை எனவே, இதை அருவமாக்கம் என்று அழைக்கிறோம்.
5.
| இடைமுகம் | செயல்படுத்துதல் |
| ஒரு பொருள் செய்யக்கூடிய நடவடிக்கையை வரையறுக்கிறது, ஆனால் அவற்றை உண்மையில் செய்யக் கூடியது இல்லை. | இடைமுகத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கட்டளைகளை நிறைவேற்றுகிறது. |
6.
துணை நிரல்கள் கணினி மொழிகளின் அடிப்படைக் கட்டுமான தொகுதியாக விளங்குகின்றன. துணை நிரல்கள் என்பன ஒரு குறிப்பிட்ட செயலை மீண்டும் மீண்டும் செய்யப் பயன்படும் சிறிய நிரல் தொகுதியாகும். நிரலாக்க மொழிகளில் இத்துணை நிரல்கள் செயற்கூறுகள் (Functions) என்று அழைக்கப்படுகின்றன.
7.
அணுகல் கட்டுப்பாடு என்பது கணினி சூழலில் உள்ள வளங்களை யாரெல்லாம் பார்வையிட மற்றும் பயன்படுத்த முடியும் என்பதை வரைமுறைப்படுத்தும் ஒரு பாதுகாப்பு தொழில் நுட்பமாகும். இது பாதுகாப்பின் ஒரு அடிப்படைக் கருத்தாகும். பொருளுக்கான ஆபத்தை குறைக்கிறது. அதாவது அணுகல் கட்டுப்பாடு என்பது தரவை அணுகுவதற்கான குறிப்பிடப்பட்ட கட்டுப்பாடாகும்.
8.

9.
(i) list -ன் உறுப்புகளை இரு வழியில் அணுகலாம். முதல் வழி, அதிகம் பயன்படுத்தப்படும் பன்மடங்கு மதிப்பிருத்தல். இம்முறையில், list-ன் உறுப்புகள் பிரிக்கப்பட்டு, அனைத்து உறுப்புகளும் வேறு பெயர்களுடன் இணைக்கப்படுகிறது.
1st := [10, 20]
x,y := 1st
(ii) மேலே காணும் எடுத்துக்காட்டில், xயின் மதிப்பு 10 என்றும், Yயின் மதிப்பு 20 என மதிப்பிருத்தப்படும்.
(iii) இரண்டாம் முறையில் லிஸ்டின் உறுப்புகள், உறுப்புகள் தேர்வு செயற்குறிகள் மூலம் அணுகப்படுகிறது.
(iv) லிஸ்ட் லிட்டரல்ஸ் போல் அல்லாது கோவையில் ஒரு சதுர அடைப்புக்குறியை தொடர்ந்து வரும் மற்றொரு சதுர அடைப்புக்குறி லிஸ்டின் மதிப்புகளாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால் முந்தைய கோவையின் உறுப்பை மதிப்பாக தேர்வு செய்யும்.
1st [0]
10
1st[1]
20
10.
| கான்கிரிட் தரவு வகை | அருவமாக்க தரவு வகை | |
| (i) | எளிய கருத்தினை நேரடியாக செயல்படுத்த உதவுகிறது. | பொருளின் இயக்கத்தை தொடர் மதிப்பு மற்றும் தொடர் செயல்பாடுகள் மூலம் வரையறுக்க உதவுகிறது. |
| (ii) | தரவு வகையின் உருவமைப்பு அறியப்பட்டது. | தரவு வகையின் உருவமைப்பு அறியப்படாதது. |
| (iii) | அனைத்து செயற்கூறுகளின் வரையறையையும் தெரிந்திருக்க வேண்டும். | அனைத்து செயற்கூறுகளின் வரையறையைத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. |
11.
ஒரு செயற்கூறுக்கு வெளியே ஒரு மாறியை மாற்றினால் சில பக்க விளைவுகளை அடையாளம் காண்பது எளிதானதாகும் மற்றும் சில யோசிக்க தகுந்ததாக இருக்கும்.
எடுத்துக்காட்டு :
y:= 0
let inc(x:int):int : =
y:=y + x
return (y)
இங்கு y என்பது வெளிப்புற மாறியாகும். இது செயற்கூற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெளிப்புற மாறி ஒவ்வொரு முறை அழைக்கப்படும் போதும் தனது மதிப்பை மாற்றிக் கொள்வதில் inc() செயற்கூறின் திருப்பி அனுப்பும் விடையானது வெளிப்புற மாறியின் பக்கவிளைவினால் ஒரே மதிப்பை கொண்டு அழைத்தாலும் ஒவ்வொரு முறையும் மாறும்.
12.
| pure செயற்கூறு | impure செயற்கூறு | |
| 1. | pure செயற்கூறுவின் திருப்பி அனுப்பும் மதிப்பு முற்றிலும் செயலுருபுகளை பொறுத்தே அமையும். | impure செயற்கூறுவின் திருப்பி அனுப்பும் மதிப்பு முற்றிலும் செயலுருபுகளை பொறுத்து அமையாது, |
| 2. | செயற்கூறினை அதே செயலுருபுகளை கொண்டு அழைத்தால் எப்பொழுதும் அதே திருப்பி அனுப்பும் மதிப்பே கிடைக்கும். | Impure செயற்கூறினை அதே செயலுருபுகளை கொண்டு அழைத்தால் வெவ்வேறான திருப்பி அனுப்பும் மதிப்பு கிடைக்கும். |
| 3. | இது எந்த பக்கவிளைவுகளையும் கொண்டிருக்காது. | (எ.கா) random () date () |
| 4. | இந்த செயற்கூறு செயலுருபுகளை மாற்றம் செய்யாது. | இந்த செயற்கூறு செயலுருபுகளை மாற்றம் செய்யலாம். |
13.
தொகுதி நிரலாக்கத்தின் பயன்கள் :
(i) குறைந்த வரிகளைக் கொண்ட குறிமுறையை எழுதினால் போதுமானது.
(ii) மறுபயனாக்கத்திற்கும் பலமுறை குறிமுறை தட்டச்சு செய்வதை தவிர்ப்பதற்கு, ஒற்றை செயல்முறையை உருவாக்க வேண்டும்.
(iii) நிரல்கள் மிக எளிதாக வடிவமைக்கப்படுகின்றன. ஏனெனில், முழு குறிமுறையும் சிறிய பகுதிகளாக பிரிக்கப்பட்டு சிறிய குழுவினரால் கையாளப்படுகிறது.
(iv) தொகுதி நிரலாக்கம் பல நிரலர்களை ஒரே பயன்பாட்டில் வேலை செய்ய அனுமதிக்கிறது.
(v) பல கோப்புகளில் இந்த குறிமுறை சேமிக்கப்படுகிறது.
(vi) குறிமுறை சிறியதாக, எளியதாக, புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது.
(vii) துணை நிரல்களாக அல்லது செயற்கூறுகளாக இருப்பதால் பிழைகளை எளிதாக கண்டுபிடிக்க இயலும்.
(viii) ஒரே குறிமுறை பல பயன்பாடுகளில் பயன்படுத்தப்படலாம்.
(ix) மாறிகளின் வரையெல்லையை எளிதில் கட்டுப்படுத்த முடியும்.
14.
LEGB விதிமுறை
வரையெல்லை என்பது சரியான மதிப்பை பெறுவதற்காக மாறிகள் எந்த வரிசையில் பொருளுடன் Map செய்யப்பட வேண்டும் என்பதை வரையறுக்கிறது. கீழே கொடுக்கப்பட்ட எளிய எடுத்துக்காட்டைக் காண்போம்.
1. x:= 'outer x variable'
2. display():
3. x:= 'inner x variable'
4. print x
5. print x
6. display()
மேலே உள்ள கூற்றுகளை இயக்கும்போது. கூற்று (4) மற்றும் (5) பின்வரும் விடையைக் காண்பிக்கிறது.
வெளியீடு
outer x variable
inner x variable
மேலே உள்ள கூற்றுகள் வெவ்வேறு வெளியீடுகளைத் தருகிறது. ஏனெனில், மாறி x என்பது வெவ்வேறு வரையெல்லைகளில் உள்ளது. ஒன்று display ( ) என்ற செயற்கூறுக்கு உள்ளேயும், மற்றொன்று அதன் மேல் கூற்றிலும் உள்ளது. 'Outer x variable' என்ற மதிப்பு, x என்பது செயற்கூறின் வரையறைக்கு வெளியில் அணுகப்படும்போது வெளியிடப்படுகிறது. ஆனால் display ( ) செயற்கூறு இயக்கப்படும்போது, "inner x Variable" என்ற மதிப்பு அச்சிடப்படுகிறது. இது செயற்கூறு வரையறைக்குள் உள்ள x-ன் மதிப்பாகும். மேலே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டில், ஒரு மாறி எந்த வரையெல்லையில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்க ஒரு விதிமுறை பின்பற்றப்படுவதை கணித்துக் கொள்ள முடிகிறது. LEGB விதி வரையெல்லை தேடப்பட வேண்டிய (Scope resolution) வரிசையை தீர்மானிக்கப் பயன்படுகிறது. வரையெல்லைகள் பின்வருமாறு படிநிலை முறையில் பட்டியலிடப்பட்டுள்ளன. (பெரியதிலிருந்து சிறியது),
| உள்ளமை Local (L) | செயற்கூறு / இனக்குழுவிற்கு உள்ளே வரையறுக்கப்பட்டவை |
| இணைக்கப்பட்ட Enclosed (E) | பின்னலான செயற்கூறுகளுக்குள் வரையறுக்கப்பட்டவை |
| முழுதளாவிய Global (G) | மேல்நிலையில் வரையறுக்கப்பட்டவை |
| உள்ளிணைந்த Built-in (B) | உள்ளிணைந்த செயற்கூறுகளில் (கூறுகள்) உள்ள முன்னரே வரையறுக்கப்பட்ட பெயர்களாகும். |

(அல்லது)
மாறியின் வரையெல்லை வகைகள் :
4 வகையான வரையெல்லைகள் உள்ளன.
உள்ளமை வரையெல்லை (Local Scope)
உள்ளமை வரையெல்லை, நடப்பு செயற்கூறில் வரையறுக்கப்பட்ட மாறிகளைக் குறிக்கும். செயற்கூறு, எப்பொழுதும் மாறியின் பெயரை முதலில் அதன் உள்ளமை வரையெல்லையில் பார்வையிடும் அந்த வரையெல்லையில் இல்லையென்றால் மட்டுமே வெளி வரையெல்லையில் சோதிக்கும். (எ.கா)

மேலே உள்ள குறிமுறையை இயக்கும்போது, மாறி a என்பது 7 என்ற மதிப்பை வெளியிடுகிறது. ஏனெனில், இது உள்ளமை வரையெல்லையில் வரையறுக்கப்பட்டு, அங்கேயே அச்சிடப்படுகிறது.
முழுதளாவிய வரையெல்லை
நிரலின் அனைத்து செயற்கூறுகளுக்கும் வெளியே அறிவிக்கப்பட்ட மாறிகள் முழுதளாவிய மாறிகள் எனப்படும். அதாவது, முழுதளாவிய மாறிகளை நிரலின் அனைத்து செயற்கூறுகளுக்கு உட்புறமும், வெளிப்புறமும் அணுக முடியும். (எ.கா)

மேலே உள்ள குறிமுறையில் disp () என்ற செயற்கூறு அழைக்கப்படும் போது, அதனுள் வரையறுக்கப்பட்டிருக்கும் மாறி a, 7 என்ற மதிப்பை வெளியிடும், பின்னர் இது 10 என்ற மதிப்பை வெளியிடும் ஏனெனில் a என்ற மாறி முழுதளாவிய வரையெல்லையில் வரையறுக்கப்பட்டுள்ளது.
அடைக்கப்பட்ட வரையெல்லை
அனைத்து நிரலாக்க மொழிகளும் பின்னலான செயற்கூறுகளை அமைக்க அனுமதிக்கின்றன. ஒரு செயற்கூறின் (வழிமுறை) உள்ளே மற்றொரு செயற்கூறு அடைக்கப்பட்டிருந்தால் அது பின்னலான செயற்கூறு எனப்படும். மற்றொரு செயற்கூறு வரையறையை, தன்னுள் கொண்ட ஒரு வெளி செயற்கூறினுள் ஒரு மாறி அறிவிக்கப்பட்டால், உள்செயற்கூறானது, வெளி செயற்கூறினுள் உள்ள மாறிகளை அணுக முடியும். இதுவே, அடைக்கப்பட்ட வரையெல்லை எனப்படும்.
நிரல்பெயர்ப்பி அல்லது தொகுப்பான் ஒரு நிரலில் மாறியை தேடும்பொழுது அது முதலில் உள்ளமை வரையெல்லையில் தேடும். பின்னர் அடைக்கப்பட்ட வரையெல்லையில் தேடும்.(எ.கா)

மேலே குறிப்பிட்ட எடுத்துக்காட்டில் Disp1 () என்ற செயற்கூறு Disp () என்ற செயற்கூறினுள் வரையறுக்கப்பட்டுள்ளது. 'a' என்ற மாறி Disp () என்ற செயற்கூறினுள் வரையறுக்கப்பட்டிருந்தாலும் Disp1 () என்ற செயற்கூறும் அதைப் பயன்படுத்த முடியும். ஏனெனில் இந்த செயற்கூறு Disp () என்பதன் உறுப்பாகும்.
உள்ளிணைந்த வரையெல்லை
நிரல்பெயர்ப்பி அல்லது தொகுப்பானை தொடங்கும் பொழுது உள்ளிணைந்த வரையெல்லையானது நிரல் வரையெல்லையில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட அனைத்து பெயர்களையும் கொண்டிருக்கும். நிரலாக்க மொழியின் நூலக செயற்கூறினுள் வரையறுக்கப்பட்ட மாறி அல்லது செயற்கூறு உள்ளிணைந்த வரையெல்லையைக் கொண்டுள்ளது. இவைகள், நூலக கோப்புகள் நிரலில் செயல்பட தொடங்கியவுடன் இறக்கப்படும்.

பொதுவாக செயற்கூறுகள் அல்லது தொகுதி மட்டுமே மென்பொருளுடன் தொகுப்பாக வருகிறது. எனவே, இவைகள் உள்ளிணைந்த வரையெல்லையின் கீழ் வருகின்றன.
15.
தரவு அருவமாக்கினை செயல்படுத்த, ஆக்கிகள் (Constructor) மற்றும் செலக்டர் (Selectors) என்ற இரண்டு செயற்கூறுகள் உருவாக்கப்பட வேண்டும்.
ஆக்கிகள் மற்றும் செலக்டர்கள் (constructors and selectors):
(i) ஆக்கி செயற்கூறுகள் அருவமாக்கம் தரவு வகையை கட்டமைக்க பயன்படுகிறது. செலக்டர் செயற்கூறுகள் தகவல்களை தரவு வகையிலிருந்து பெறுவதற்கு பயன்படுகிறது.
(ii) எடுத்துக்காட்டாக, city என்று ஒரு அருவமாக்க தரவு வகை உள்ளது என வைத்துக்கொள். City என்ற பொருள் நகரத்தின் பெயர், அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை பற்றிய தகவல்களை சேமித்திருக்கும் city என்ற பொருளை உருவாக்க பின்வரும் செயற்கூற்றினை பயன்படுத்தலாம்.
city := makecity (name, lat, lon)
(iii) city பொருளின் தகவல்களை பெறுவதற்கு பின்வரும் செயற்கூறுகளை பயன்படுத்தலாம்.
1. getname(city)
2. getlat(city)
3. getlon(city)
(iv) பின்வரும் போலி குறிமுறை இரு நகரங்களுக்கு இடையேயான தொலைதூரத்தை கணக்கிடும்.
distance(city1, city2):
lt1, lg1 := getlat(city1), getlon(city1)
lt2, 1g2:= getlat (city2), getlon (city2)
return ((lt1 - lt2)**2 + (lg1 - lg2)**2))1/2
(v) மேலே காணும் குறிமுறையில், distance(), getlat() மற்றும் getlon() ஆகியவை செயற்கூறுகள் ஆகும். It என்பது அட்ச ரேகை மற்றும் lg என்பது தீர்க்கரேகையும் குறிக்கிறது. longitude. := என்பதை "assigned as" அல்லது "becomes" என்று வாசிக்க வேண்டும்.
It 1, lg1 := getlat(city1), getlon(city1)
(vi) இதனை It1 என்பது getlat(city1)ன் மதிப்பாகிறது மற்றும் lg1 என்பது getlon(city1) ன் மதிப்பாகிறது. என்று வாசிக்க வேண்டும்.
(vii) இந்த செயற்கூறுகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. இதை வேறு ஒருவர் நமக்காக வரையறுத்துள்ளார் என்று கருதிக் கொள்ள வேண்டும். பயனர் செயற்கூறுகள் எப்படி செயல்படுத்தப்படுகின்றது என்று தெரிந்து வைத்திருக்க வேண்டியதில்லை எனினும் வேறு ஒருவரால் இச்செயற்கூறுகள் வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும்.
(viii) மேலே காணும் குறிமுறையில், ஆக்கி மற்றும் செலக்டர்களை அடையாளம் காண்போம். ஆக்கி செயற்கூறுகள் அருவமாக்க தரவு வகையை கட்டமைக்கப் பயன்படுகிறது என்பதை நாம் அறிவோம். மேலே காணும் போலிக் குறிமுறையில், cityயின் பொருளை உருவாக்கும் செயற்கூறு, ஆக்கி ஆகும்.
city := makecity(name, lat, lon) இங்கு makecity(name, lat, lon) என்ற ஆக்கி city எனும் பொருளை உருவாக்குகிறது.

(ix) செலக்டர் செயற்கூறுகள் தகவல்களை தரவு வகையிலிருந்து பெறுவதற்கு பயன்படுகிறது. மேலே காணும் குறிமுறையில்,
getname(city)
getlat(city)
getlon(city) என்பவை city எனும் பொருளிலிருந்து தகவல்களை பெற்றுத் தரும் செலக்டர் செயற்கூறுகளாகும்.
16.
(i) இடைமுகம் :
ஒரு பொருள் (Object) செய்யக்கூடிய செயல்களின் தொகுப்பு இடைமுகம் ஆகும். எடுத்துக்காட்டாக, மின் விளக்கின் சுவிட்சை அழுத்தும் போது மின் விளக்கு ஒளிர்கிறது. அது எவ்வாறு ஒளிர்கிறது என்பது தெரிந்திருக்க வேண்டியதில்லை. பொருள் நோக்கு நிரலாக்க மொழியில், இடைமுகம் என்பது அனைத்து செயற்கூறுகளின் விவரிப்பு ஆகும். எடுத்துக்காட்டில், மின் விளக்கை போல் செயல்படும் எதுவும் turn_on () மற்றும் turn_off () என்ற செயற்கூறு வரையறையைக் கொண்டிருக்கும். இனக்குழுவின் பண்புக் கூறுகளை செயல்படுத்த இடைமுகம் பயன்படுகிறது.
(ii) இடைமுகம் மற்றும் செயல்படுத்துதல் இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்னவெனில்,
| இடைமுகம் | செயல்படுத்துதல் |
| ஒரு பொருள் செய்யக்கூடிய நடவடிக்கையை வரையறுக்கிறது, ஆனால் அவற்றை உண்மையில் செய்யக்கூடியது இல்லை. | இடைமுகத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கட்டளைகளை நிறைவேற்றுகிறது. |
(iii) பொருள் நோக்கு நிரலாக்க மொழியில் இனக்குழு என்பது இடைமுகம் ஆகும். செயல்படுத்துதல் என்பது பொருள் (object) எவ்வாறு செயல்படுத்தப்பட்டு இயங்குகிறது என்பதை குறிப்பதாகும்.
இடைமுகத்தின் பண்புகள்
(i) ஒரு பொருளை முறையாக உருவாக்கி வழங்குவதற்கும் அதனை செயல்படுத்துவதற்கும் தேவையான இடைமுகத்தை இனக்குழு வார்ப்பு குறிப்பிடுகிறது.
(ii) செயற்கூறுகளைப் பொருளுக்கு அனுப்புவதன் மூலம் பொருளின் பண்புகளையும் பண்புக்கூறுகளையும் கட்டுப்படுத்த முடிகிறது.
காரின் வேகத்தை அதிகரிக்கும் எடுத்துக்காட்டை எடுத்துக் கொள்வோம்.

(iii) காரை ஓட்டும் நபர் அந்த காரின் உட்புற செயல்பாடுகள் பற்றி அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. காரின் வேகத்தை அதிகப்படுத்த, அவர் காரின் துரிதப்படுத்தியை (accelerator) அழுத்தி விரும்பிய பண்பை பெறுவார். இங்கு துரிதப்படுத்தி என்பது கார் ஓட்டுநருக்கும் (அழைக்கும் பொருள்) இயந்திரத்துக்கும் (அழைக்கப்படும் பொருள்) இடையேயான இடைமுகம் ஆகும். இதில், அழைக்கும் செயற்கூறு இவ்வாறு இருக்க வேண்டும் speed(70): என இருக்க வேண்டும். இது ஒரு இடைமுகமாகும்.
(iv) உட்புறமாக, காரின் இயந்திரம் அனைத்து வேலைகளையும் செய்கிறது. எரிபொருள், காற்று, அழுத்தம் மற்றும் மின்சாரம் ஆகியவை இங்கு ஒன்றாக சேர்ந்து, ஆற்றலை உருவாக்கி, வாகனத்தை நகர்த்துகிறது. இந்த அனைத்து நடவடிக்கைகளும் கார் ஓட்டுநரிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளது. அவர் வேகமாக காரை செலுத்துவதில் ஆர்வமாக இருப்பார். இதனால், இடைமுகத்தை செயல்படுத்துதலில் இருந்து பிரித்து வைக்கப்படுகிறது.
(v) ஒரு எளிமையான உதாரணத்தைக் காணலாம். கொடுக்கப்பட்டுள்ள 3 செயலுருபுகளில் குறைந்த மதிப்பைக் காணும் செயற்கூற்றைச் செயல்படுத்துவதைக் கவனி.
let min x y z:=
if x < y then
if x < z then x else z
else
if y < z then y else z
17.
(d)
Concrete Data Type
18.
(d)
பொருள்
19.
(b)
பேர்ஸ்
20.
(c)
Public
21.
(a)
உள்ளமை
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards