12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
If List =[10,20,30,40,50] எனில் List[2] = 35 ன் விடை ______.
[35,10,20,30,40,50]
[10,20,30,40,50,35]
[10,20,35,40,50]
[10,35,30,40,50]
2.
பின்வருவனவற்றுள் எது சரங்களை இணைக்க பயன்படும் செயற்குறியாகும்?
+
&
*
=
3.
பின்வரும் குறியுருக்கான வெளியீடு யாது?
str1 = "Chennai Schools"
str1[7] = "-"
Chennai-Schools
Chenna-School
Type error
Chennai
4.
செயற்கூறு தொகுதியை எந்த சிறப்புச்சொல் தொடங்கிவைக்கிறது?
define
for
finally
def
5.
எந்த செயற்கூறை பெயரில்லா செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது?
லாம்டா
தற்சுழற்சி
செயற்கூறு
வரையறை
6.
எந்த கூற்று பொதுவாக இட நிரப்பியாக பயன்படுகிறது?
continue
break
pass
goto
7.
பைத்தான் நிரலில் எது முக்கிய பங்கு வகிக்கிறது?
கூற்றுகள்
கட்டுப்பாடு
அமைப்பு
உள்தள்ளல்
8.
பின்வரும் எந்த சாவி சேர்மானம் ஓர் புதிய பைத்தான் நிரலை உருவாக்க பயன்படுகிறது
Ctrl + C
Ctrl + F
Ctrl + B
Ctrl + N
9.
இவற்றுள் எந்த தூண்டு குறி நிரல் பெயர்ப்பி கட்டளைகளை ஏற்றுக்கொள்ள தயார் நிலையில் இருப்பதை குறிக்கிறது?
> > >
< < <
#
< <
10.
பைத்தானை உருவாக்கியவர் யார்?
ரிட்ஸி
கைடோ வான் ரோஷம்
பில் கேட்ஸ்
சுந்தர் பிச்சை
11.
12.
பைத்தானில் ஆக்கியை எவ்வாறு உருவாக்குவாய்?
13.
சான்றுருவாக்கல் என்றால் என்ன?
14.
List - ன் del மற்றும் remove( ) செயற்கூறின் வேறுபாடுகள் யாவை?
15.
பைத்தானில் List என்றால் என்ன?
16.
பைத்தானில் சரத்தை எவ்வாறு நீக்குவாய்?
17.
சரம் என்றால் என்ன?
18.
மாறியின் வரையெல்லை என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக.
19.
செயற்கூறு என்றால் என்ன?
20.
range( ) செயற்கூறு குறிப்பு வரைக.
21.
if..else கூற்றின் பொது வடிவத்தை எழுதுக?
22.
break கூற்றைப் பற்றி குறிப்பு வரைக.
23.
பைத்தானில் உள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்புகளைப் பட்டியலிடுக.
24.
பைத்தானில் உள்ள பல்வேறு செயற்குறிகள் யாவை?
25.
பைத்தான் நிரலினை சோதிக்க எத்தனை வகை முறைமைகள் உள்ளன?
26.
பைத்தானிலுள்ள பல்வேறு set செயல்பாடுகளை பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
27.
for மடக்குப் பற்றி விரிவான விடையளிக்கவும்.
1.
(c)
[10,20,35,40,50]
2.
(a)
+
3.
(c)
Type error
4.
(d)
def
5.
(a)
லாம்டா
6.
(c)
pass
7.
(d)
உள்தள்ளல்
8.
(d)
Ctrl + N
9.
(a)
> > >
10.
(b)
கைடோ வான் ரோஷம்
11.
12.
ஓர் இனக்குழுவின் சான்றுரு பயன்பாட்டிற்கு வரும்பொழுது ஆக்கி என்னும் சிறப்புச் செயற்கூறு தானாகவே இயக்கப்படுகிறது. பைத்தானில், “init” என்னும் சிறப்பு செயற்கூறு ஆக்கியாக செயல்படுகிறது. இது இரட்டை அடிக்கீறில் (UnderScore) தொடங்கி இரட்டை அடிக்கீறலுடன் முடிய வேண்டும்.
___ init ___ வழிமுறையின் (ஆக்கி) பொதுவடிவம்
def__init__(self, [args .........]):
< statements >
13.
இனக்குழு உருவாக்கப்பட்ட பின் அந்த இனக்குழுவின் பொருள் அல்லது சான்றுரு உருவாக்கப்பட வேண்டும். பொருளை உருவாக்கும் இந்த முறைக்கு "சான்றுருவாக்கல்" (instantiation) என்று பெயர்.
14.
| del கூற்று சுட்டெண் | remove() செயற்கூறு |
| del கூற்று சுட்டெண் தெரிந்த உறுப்புகளை நீக்குவதற்கு பயன்படுகிறது. | remove( ) செயற்கூறு சுட்டெண் தெரியாத உறுப்புகளை List- லிருந்து நீக்குவதற்கு பயன்படுகிறது. del கூற்று முழு List-ஐ நீக்குவதற்கும் பயன்படுகிறது. |
15.
பைத்தானில் உள்ள List சரத்தைப் போன்றே "வரிசைமுறை தரவினம் " ஆகும். இது சதுர அடைப்புக் குறிக்குள் [ ] அடைக்கப்பட்ட மதிப்புகளின் வரிசைப்படுத்தப்பட்ட தொகுப்பாகும். List -ல் உள்ள ஒவ்வொரு மதிப்பும் உறுப்பு (element) என்றழைக்கப்படுகிறது.
16.
சரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட குறியுருவை நீக்கவும் அனுமதிக்காது. ஆனால் del-கட்டளை பயன்படுத்தி ஒரு முழு சர மாறியையும் நீக்க முடியும்.
17.
குறியுருக்களின் அணியைக் கையாளுவதற்கான ஒரு தரவு இனம் சரம் (string) ஆகும். சரங்கள் என்பன, ஒற்றை, இரட்டை, அல்லது மூன்று மேற்கோள் குறிகளுக்குள் கொடுக்கப்படும், எழுத்து, எண்கள் அல்லது சிறப்பு குறியீடுகளின் சேர்க்கையை கொண்டிருக்கும் ஒருங்கமைவு (Unicode) குறியுருக்களின் வரிசை ஆகும்.
18.
(i) மாறியின் வரையெல்லை என்பது நிரலின் அணுகக்கூடிய பகுதியைக் குறிப்பதாகும். அதாவது, எந்த பகுதியில் மாறியைப் பயன்படுத்துகிறோமோ அதைக் குறிக்கிறது.
(ii) வரையெல்லை நடப்பு மாறித் தொகுதிகள் மற்றும் அதன் மதிப்புகளைக் கொண்டிருக்கும். மாறியின் வரையெல்லை, உள்ளமை வரையெல்லை (Local) மற்றும் முழுதளாவிய வரையெல்லை (Global) என இரண்டு வகைப்படும்.
19.
செயற்கூறுகள் என்பது குறிப்பிட்ட செயலை செய்வதற்கான தொடர்புடைய கூற்றுகளின் தொகுதி ஆகும்.
20.
range() . செயற்கூறு ஒரு உள்ளிணைந்த செயற்கூறாகும். இது இரண்டு எண் இடைவெளிக்குட்பட்ட மதிப்புகளை உருவாக்கும்.
range ()ன் தொடரியல்:
range(start,stop, [step])
இதில்,
start - தொடக்க மதிப்பைக் குறிக்கும்
stop - இறுதி மதிப்பைக் குறிக்கும்
step - மிகுப்பு மதிப்பைக் குறிக்கும். இது விருப்பப் பகுதியாகும்.
21.
தொடரியல்:
if < condition >:
statement - block 1
else:
statement - block 2
22.
(i) break கூற்று அதை உள்ளடக்கிய மடக்கை விட்டு வெளியேறச் செய்கிறது. நிரலின் கட்டுப்பாடானது, மடக்கின் உடற்பகுதிக்கு வெளியே இருக்கும் கூற்றுக்கு பாய்கிறது.
(ii) நிபந்தனையின் மதிப்பு தவறு என்று வரும் வரை while அல்லது for மடக்கு செயல்படுத்தப்படும். ஆனால், break கூற்றைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டை மடக்கை விட்டு நிறுத்தி வெளியேறச் செய்யமுடியும்.
(iii) break பின்னலான மடக்கின் உள்ளே இருந்தால், break கூற்று மிக உட்புறமாக (inner most) அமைந்துள்ள மடக்கை விட்டு வெளியேறும்.
23.
(i) வரிசை முறை - Sequential
(ii) மாற்று அல்லது கிளைப் பிரிப்பு - Alternative or Branching.
(iii) சுழற்சி அல்லது மடக்கு - Iterative or Looping
24.
பைத்தானில் உள்ள பல்வேறு செயற்குறிகள்:
(i) கணித செயற்குறிகள்
(ii) உறவுநிலை அல்லது ஒப்பீடு செயற்குறிகள்
(iii) தருக்க செயற்குறிகள்
(iv) மதிப்பிருத்தல் செயற்குறிகள்
(v) நிபந்தனை செயற்குறிகள்
25.
பைத்தான் நிரலினை சோதிக்க ஊடாடும் முறைமை, ஸ்கிரிப்ட் முறைமை என்று இரு வகை முறைமைகள் உள்ளன
26.
கணிதத்தில் கற்ற Set செயற்பாடுகள் ஆகிய ஒட்டு (Union), வெட்டு (intersection) வேறுபாடு (difference) சமச்சீரான வேறுபாடு (Symmetric difference) , போன்றவற்றை பைத்தானிலும் பயன்படுத்தலாம்.
ஒட்டு (Union) : இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட Set -களின் அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கும்.

(i) பைத்தானின் என்ற செயற்குறி இரண்டு Set களின் இணைப்பை உருவாக்கப்பயன்படுகிறது. Union செயற்கூறும் பைத்தானின் இரண்டு Set களை இணைக்கப் பயன்படுகிறது.
(ii) எடுத்துக்காட்டு: ஒட்டு (Union) செயற்குறியைப் பயன்படுத்தி இரண்டு Set களை இணைப்பதற்கான நிரல்
set_A ={2,4,6,8}
set_B ={'A','B','C','D'}
U_Set=Set_A | set_B
print(U_set)
வெளியீடு:
{2,4,6,8,'A', 'D', 'C', 'B'}
வெட்டு (intersection) : இது இரண்டு Setகளின் பொதுவான உறுப்புகளை உள்ளடக்கியது.

(i) பைத்தானில் & செயற்குறி இரண்டு Set களை வெட்டுவதற்கு பயன்படுகிறது. வெட்டு (intersection()) செயற்கூறும் பைத்தானில் இரண்டு Set களை வெட்டுவதற்கு பயன்படுகிறது.
(ii) எடுத்துக்காட்டு : intersection()செயற்குறியைப் பயன்படுத்தி இரண்டு Setகளை வெட்டுவதற்கான நிரல்
set_A={'A', 2, 4, 'D'}
set_B={'A', 'B', 'C', 'D'}
print(set_A.intersection (set_B))
வெளியீடு : {'A', 'D'}
வேறுபாடு (Difference): இது முதல்Set(A)ல் உள்ள அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கியது. இது இரண்டாவது Set-ஐ தவிர்க்கிறது.

(i) பைத்தானில் -(minus) செயற்குறி Set செயற்பாட்டின் வேறுபாட்டைக் கண்டறிய பயன்படுகிறது. difference() செயற்கூறும் வேறுபாட்டு செயற்பாட்டிற்காக பயன்படுகிறது.
(ii) எடுத்துக்காட்டு : (-) Minus பயன்படுத்தி இரண்டு setகளின் வேறுபாட்டுக்கான நிரல்
set_A={'A', 2, 4, 'D'}
set_B={'A', 'B', 'C', 'D'}
print(set_A - set_B)
வெளியீடு : {2, 4}
சமச்சீரான வேறுபாடு (Symmetric difference): இது இரண்டு Set-ல் உள்ள பொதுவான உறுப்புகளை மட்டும் தவிர்த்து மற்ற அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கியது.

(i) Caret(^) செயற்குறி பைத்தானில் சமச்சீரான வேறுபாட்டை கண்டறிய பயன்படுகிறது. Symmetric difference() செயற்கூறும் அதே செயலை செய்ய பயன்படுகிறது.
(ii) எடுத்துக்காட்டு : Caret (^) செயற்குறியைப் பயன்படுத்தி சமச்சீரான வேறுபாட்டை கண்டறியும் நிரல்.
set_A={'A', 2, 4, 'D'}
set_B={'A', 'B', 'C', 'D'}
print(set_A ^ set_B)
வெளியீடு :: {2, 4, 'B', 'C'}
27.
(i) பொதுவாக, for மடக்கு "வரையறுக்கப்பட்ட " மடக்கு என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த மடக்கு சரியாக எத்தனை முறை மீண்டும் மீண்டும் இயங்கும் என்பதை நிரலர் தெரிந்துவைத்திருப்பார்.
தொடரியல் :
for counter_variable in sequence:
statements-block 1
[else: # optional block statements-block 2]
(ii) for....in என்ற கூற்று, பைத்தானில் பயன்படுத்தப்படும் மடக்கு கூற்றாகும். இது தொடர் பொருள்களின் வழியே சுழலும் தன்மையுடையது. அதாவது, ஒரு தொடரின் ஒவ்வொரு மதிப்பின் ஊடாக செல்லும். இங்கே தொடர் என்பது வரிசைபடுத்தப்பட்ட அல்லது வரிசைப்படுத்தப்படாத மதிப்புகள் அல்லது ஒரு | சரமாகவும் இருக்கலாம்.
(iii) கட்டுப்பாட்டு மாறி, ஒவ்வொரு சுழற்சியிலும், தொடரின் கடைசி மதிப்பு வரை, தொடரின் ஒவ்வொரு மதிப்பையும் அணுகும்.
range ()ன் தொடரியல்:
range(start,stop,[step])
எடுத்துக்காட்டு :
| range (1,30,1) | range-ன் மதிப்புகள் 1 முதல் தொடங்கி 29 வரை |
| range (2,30,2) | range() மதிப்புகள் 2 முதல் 28 வரை |
| range (30,3,-3) | range() மதிப்புகள் 30 முதல் 6 வரை |
| range (20) | 20 என்ற மதிப்பை இறுதி மதிப்பாக எடுத்துக்கொண்டு (அல்லது மேல்வரம்பு) 0 முதல் 19 வரையிலான மதிப்புகளைக் கொடுக்கும் (range() எப்பொழுதும் stop மதிப்பு-1 வரை மதிப்பைக் கொடுக்கும் என்பதை நினைவில்கொள்க). |

எடுத்துக்காட்டு : #for மடக்கு பயன்படுத்தி ஒற்றை இலக்க இரட்டைப் படை எண்ணை அச்சிட விளக்கும்
நிரல்
for i in range (2,10,2):
print (i, end = ' ')
வெளியீடு:
2 4 6 8
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards