12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 12/08/2019
பைத்தான் செயற்கூறுகள்
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
testpython() செயற்கூறை வரையறுக்க பின்வரும் எந்த சிறப்புச் சொல் பயன்படுகிறது?
define
pass
def
while
2.
கொடுக்கப்பட்ட கூற்றை வெற்றிகரமாக இயக்குவதற்கு, பின்வருவனவற்றுள் சரியான ஒன்றைத் தேர்ந்தெடு
if ____ : print(x, " is a leap year")
x%2 = 0
x%4 = = 0
x/4 = 0
x%4 = 0
3.
செயற்கூறுக்கு எந்த செயலுருபு சரியான இட வரிசையில் செயலுருப்புகளை அனுப்பும்?
தேவைப்படும்
சிறப்புச்சொல்
தானமைவு
மாறிநீளம்
4.
எந்த செயற்கூறை பெயரில்லா செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது?
லாம்டா
தற்சுழற்சி
செயற்கூறு
வரையறை
5.
ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டு, பெயரிடப்பட்ட குறிமுறையின் தொகுதி ______.
மடக்கு
கிளைப்பிரிப்பு
செயற்கூறு
தொகுதி
6.
தன்னைத்தானே அழைக்கும் செயற்கூறுக்கு வரம்பை எவ்வாறு அமைக்க வேண்டும்? எடுத்துக்காட்டு தருக.
7.
தன்னைத்தானே அழைக்கும் செயற்கூறில் அடிப்படை நிபந்தனை என்றால் என்ன?
8.
முழுதளாவிய வரையெல்லை-வரையறு.
9.
மாறியின் வரையெல்லை என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக.
10.
செயற்கூறின் முக்கிய நன்மைகள் யாவை?
11.
கொடுக்கப்பட்ட வருடம் லீப் வருடமா இல்லையா என்பதனைச் சோதிக்கும் பைத்தான் நிரலை எழுதுக.
12.
13.
செயற்கூறினுள் முழுதளாவி மாறியை மாற்றம் செய்தால் என்ன நிகழும்?
14.
பைத்தானிலுள்ள global சிறப்புச் சொல்லுக்கான அடிப்படை விதிமுறைகளை எழுதுக.
15.
உள்ளமை மாறிகளுக்கான விதிமுறைகளை எழுதுக.
16.
17.
இரண்டு எண்களின் LCM கண்டுபிடிப்பதற்கான பைத்தான் நிரலை எழுதுக.
18.
மாறியின் வரையெல்லைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
19.
செயற்கூறின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விவரி.
1.
(c)
def
2.
(b)
x%4 = = 0
3.
(a)
தேவைப்படும்
4.
(a)
லாம்டா
5.
(c)
செயற்கூறு
6.
தன்னைத்தானே அழைக்கும் செயற்கூறுக்கு வரம்பை sys.setrecursionlimit (limit-value) பயன்படுத்தி அமைக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு:
import sys
sys.setrecursionlimit(3000)
def fact(n):
if n == 0:
return 1
else:
return n * fact(n-1)
print(fact (2000))
7.
(i) தற்சுழற்சி செயற்கூறு தன்னைத்தானே அழைக்கும். ஒரு நிபந்தனையில் நிறுத்தப்படாவிட்டால், ஒரு செயல்முறை காலவரையின்றி செயல்படும்.
(ii) இந்த செயற்பாடு முடிவிலா சுழற்சி எனப்படும். தற்சுழற்சி செயற்கூறில் கொடுக்கப்படும் நிபந்தனை அடிப்படை நிபந்தனை எனப்படும்.
(iii) ஒவ்வொரு தற்சுழற்சி செயற்கூற்றிற்கும் அடிப்படை நிபந்தனை கொடுக்கப்பட வேண்டும் இல்லையென்றால் மடக்கு முடிவில்லாமல் இயங்கும்.
8.
அனைத்து செயற்கூறுகளுக்கும் மேலாக அறிவிக்கப்படும் மாறி முழுதளாவிய மாறி எனப்படும். முழுதளாவிய வரையெல்லை உடைய மாறியை நிரலின் எந்த பகுதியிலும் அணுகமுடியும் முழுதளாவிய வரையெல்லை கொண்ட மாறியை ஒரு செயற்கூறினுள் அணுகுவதற்கு 'global' சிறப்புச் சொல்லானது பயன்படுகிறது.
9.
(i) மாறியின் வரையெல்லை என்பது நிரலின் அணுகக்கூடிய பகுதியைக் குறிப்பதாகும். அதாவது, எந்த பகுதியில் மாறியைப் பயன்படுத்துகிறோமோ அதைக் குறிக்கிறது.
(ii) வரையெல்லை நடப்பு மாறித் தொகுதிகள் மற்றும் அதன் மதிப்புகளைக் கொண்டிருக்கும். மாறியின் வரையெல்லை, உள்ளமை வரையெல்லை (Local) மற்றும் முழுதளாவிய வரையெல்லை (Global) என இரண்டு வகைப்படும்.
10.
செயற்கூறின் முதன்மை நன்மைகள்:
1) குறிமுறையை மீண்டும் எழுதுவதை தவிர்த்து குறிமுறையின் மறு பயனாக்கத்திற்கு உதவுகிறது.
2) நமது பயன்பாட்டிற்குச் சிறந்த கூறுநிலையை வழங்குகிறது.
11.
y= int (input ("Enter year"))
if y % 4 == 0:
print ("The given year is a leap year")
else :
print ("The given year is not a leap year")
வெளியீடு:
Enter the year 2012
Leap year
12.
13.
செயற்கூறினுள் முழுதளாவி மாறியை மாற்றம் செய்தால் UnboundLocalError என்ற பிழையை காண்பிக்கும்.
14.
பைத்தானின் ‘Global சிறப்புச் சொல்லின் அடிப்படை விதிகள்:
(i) செயற்கூறுக்கு வெளியே மாறியை அறிவிக்கும் போது அது தானமைவாக முழுதளாவிய வரையெல்லை ஆகும். 'global' என்ற சிறப்புச் சொல்லை பயன்படுத்த வேண்டியதில்லை.
(ii) செயற்கூறினுள் முழுதளாவிய மாறியின் மதிப்பை மாற்றியமைக்க `global' என்ற சிறப்புச்சொல் பயன்படுத்த வேண்டும்.
(iii) செயற்கூறுவிற்கு வெளியே 'global'' என்ற சிறப்புச் சொல் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.
15.
உள்ளமை மாறியின் விதிமுறைகள் :
(i) உள்ளமை மாறியின் வரையெல்லை அது வரையறுக்கப்பட்டுள்ள தொகுதிக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
(ii) செயற்கூறினுள் மாறி உருவாக்கப்படும் போது அது உள்ளமைவாக அமையும்.
(iii) செயற்கூறு இயக்கப்படும் போது மட்டுமே உள்ளமை மாறிகள் உயிர்பெறும்.
(iv) முறையான அளபுருக்கள் அதன் செயற்கூறுக்கு உள்ளமையானது ஆகும்.
16.
17.
def lcm(x, y):
if x>y:
greater = x
else:
greater = y
while (True):
if ((greater % x == 0) and (greater % y == 0)):
lcm = greater
break
greater += 1
return lcm
a = int (input ("Enter first number :"))
b = int (input ("Enter second number :"))
print ("The LCM of", a, "and", b, "is", lcm(a,b)).
வெளியீடு :
Enter the first number: 15
Enter the second number: 20
LCM is : 60
18.
மாறியின் வரையெல்லை என்பது நிரலின் அணுகக்கூடிய பகுதியைக் குறிப்பதாகும். அதாவது, எந்த பகுதியில் மாறியைப் பயன்படுத்துகிறோமோ அதைக் குறிக்கிறது. வரையெல்லை நடப்பு மாறித் தொகுதிகள் மற்றும் அதன் மதிப்புகளைக் கொண்டிருக்கும். மாறியின் வரையெல்லைகளை உள்ளமை வரையெல்லை மற்றும் முழுதளாவிய வரையெல்லை என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
உள்ளமை வரையெல்லை (Local Scope)
ஒரு செயற்கூறுவின் உடற்பகுதியின் உள்ளே அறிவிக்கப்படும் மாறி உள்ளமை மாறி எனப்படும்.
உள்ளமை மாறியின் விதிமுறைகள்
(i) உள்ளமை மாறியின் வரையெல்லை அது வரையறுக்கப்பட்டுள்ள தொகுதிக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
(ii) செயற்கூறினுள் மாறி உருவாக்கப்படும் போது அது உள்ளமைவாக அமையும்.
(iii) செயற்கூறு இயக்கப்படும் போது மட்டுமே உள்ளமை மாறிகள் உயிர் பெறும்.
(iv) முறையான அளபுருக்கள் அதன் செயற்கூறுக்கு உள்ளமையானது ஆகும்.
எடுத்துக்காட்டு: உள்ளமை மாறியை உருவாக்குதல்
def loc():
y=0 # local scope
print(y)
loc()
வெளியீடு :
0
முழுதளாவிய வரையெல்லை (Global Scope)
அனைத்து செயற்கூறுகளுக்கும் மேலாக அறிவிக்கப்படும் மாறி முழுதளாவிய மாறி எனப்படும். முழுதளாவிய வரையெல்லை உடைய மாறியை நிரலின் எந்த பகுதியிலும் அணுகமுடியும் முழுதளாவிய வரையெல்லை கொண்ட மாறியை ஒரு செயற்கூறினுள் அணுகுவதற்கு 'global' சிறப்புச் சொல்லானது பயன்படுகிறது.
பைத்தானின் 'Global' சிறப்புச் சொல்லின் அடிப்படை விதிகள்:
(i) செயற்கூறுக்கு வெளியே மாறியை அறிவிக்கும் போது அது தானமைவாக முழுதளாவிய வரையெல்லை ஆகும். 'global' என்ற சிறப்புச் சொல்லை பயன்படுத்த வேண்டியதில்லை.
(ii) செயற்கூறினுள் முழுதளாவிய மாறியின் மதிப்பை மாற்றியமைக்க 'global' என்ற சிறப்புச்சொல் பயன்படுத்த வேண்டும்.
(iii) செயற்கூறுவிற்கு வெளியே 'global' என்ற சிறப்புச் சொல் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.
'Global' சிறப்புச் சொல்லின் பயன்பாடு:
எடுத்துக்காட்டு : செயற்கூறுவின் உள்ளிருந்து முழுதளாவிய மாறியை அணுகுதல்
c = 1 # global variable
def add():
print(c)
add()
வெளியீடு:
1
19.
| செயற்கூறுகள் | விளக்கம் |
| பயனர் வரையறுக்கும் செயற்கூறுகள் | பயனர்கள் தாங்களாகவே வரையறுக்கும் செயற்கூறுகள் |
| உள்ளிணைந்த செயற்கூறுகள் | பைத்தானில் உள்ளடக்கப்பட்ட செயற்கூறுகள் |
| லாம்டா செயற்கூறுகள் | பெயரில்லாத செயற்கூறுகள் |
| தற்சுழற்சி செயற்கூறுகள் | தற்சுழற்சியாக தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் செயற்கூறுகள் |
பயனர் வரையறுக்கும் செயற்கூறின் தொடரியல்
def <function_name ([parameter 1, parameter2 ... ]) >:
<Block of Statements>
return <expression / None>
செயற்கூற்றை வரையறுக்கும் எடுத்துக்காட்டு
def hello( ):
print ("hello - Python ")
return
பைத்தானில், பெயரில்லாமல் வரையறுக்கப்படும் செயற்கூறுவுக்கு பெயரில்லாத செயற்கூறு என்று பெயர். மற்ற சாதாரண செயற்கூறுகள் def என்ற சிறப்பு சொல்லுடன் வரையறுக்கப்படுகிறது. பைத்தானில் பெயரில்லாத செயற்கூறுகள் லாம்டா சிறப்புச் சொல்லுடன் வரையறுக்கப்படுகிறது. எனவே, பெயரில்லா செயற்கூறுகளை லாம்டா செயற்கூறுகள் என்றும் அழைக்கலாம்.
லாம்டா அல்லது பெயரில்லா செயற்கூறின் பயன்கள் :
லாம்டா செயற்கூறு பெரும்பாலும் சிறிய மற்றும் ஒரு முறை பெயரில்லாத செயற்கூறை உருவாக்க பயன்படுகிறது.
filter(), map() மற்றும் reduce () போன்ற செயற்கூறுகளுடன் சேர்த்து லாம்டா செயற்கூறுகளை பயன்படுத்தலாம்.
பெயரில்லா செயற்கூறின் பொது வடிவம்
lambda [argument(s)] :expression
எடுத்துக்காட்டு :
sum = lambda arg 1, arg2: arg 1 + arg2
print ('The Sum is :', sum(30,40))
print ('The Sum is :', sum(-30,40))
வெளியீடு
The Sum is : 70
The Sum is : 10
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards