12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 11/09/2019
தரவுக் காட்சிப்படுத்துதல்: PYPLOT பயன்படுத்தி - கோட்டு வரைபடம், வட்ட வரைபடம் மற்றும் பட்டை வரைபடம் உருவாக்குதல்
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
பின்வரும் கூற்றை படித்து, வட்ட விளக்கப்படத்திற்காக சரியான தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
கூற்று A: plt.pie() செயற்கூற்றை பயன்படுத்தி Matplotlib ல் வட்ட விளக்கப்படம் வரையலாம்.
கூற்று B: autopct அளவுரு பைத்தான் சரம் வடிவமைப்பை பயன்படுத்தி மதிப்பை சதவீதத்தில் காட்டும்.
கூற்று A சரி
கூற்று B சரி
இரு கூற்றும் சரி
இரு கூற்றும் தவறு
2.
பின்வரும் குறிப்புகளைப் படித்து சரியான விளக்கப்படத்தை கண்டறியவும்.
Hint 1: இந்த விளக்கப்படம் கால இடைவெளியில் தரவுகளின் போக்கை காட்சிப்படுத்தும்.
Hint 2 : இவ்வகை விளக்கப்படத்தில் காலவரிசைப்படி கோடுகள் இணைக்கப் பட்டிருக்கும்.
Line chart
Bar chart
Pie chart
Scatter plot
3.
பின்வரும் குறியீட்டை படிக்கவும்:
import matplotlib.pyplot as plt
plt.plot(3, 2)
plt.show( )
மேலே காணும் குறியீட்டின் வெளியீட்டை தேர்ந்தெடு.
4.
பின்வரும் குறியீட்டை படிக்கவும், இந்த குறியீட்டின் நோக்கத்தை கண்டறிந்து பின்வரும் சரியான தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
C:\Users\Your Name\AppData\Local\Programs\Python\Python36-32\Scripts > pip list
நிறுவப்பட்டுள்ள தொகுப்புகளை பட்டியலிடும்.
பட்டியல் கட்டளை
PIPயை நிறுவும்
நிறுவப்பட்டிருக்கும் தொகுப்புகள்
5.
2D வரைபடத்தை உருவாக்க பயன்படும் பைத்தான் தொகுப்பு எது?
matplotlib.pyplot
matplotlib.pip
matplotlib.numpy
matplotlib.plt
6.
plt.plot([1,2,3,4]), plt.plot([1,2,3,4], [1,4,9,16]) ஆகிய இரு செயற்கூறுகளிடையேயான வேறுபாட்டை எழுதுக.
7.
8.
Matplotlib உள்ள காட்சிப்படுத்துதல் வகைகளை பட்டியலிடுக.
9.
பின்வரும் வட்ட வரைபடத்தை வெளியீடாக பெற குறிமுறையை எழுதவும்.

10.
பின்வருவனவற்றை குறியீட்டை எழுதவும்.
a. உனது கணினியில் PIP நிறுவுவதற்கு.
b. உனது கணினியில் நிறுவியுள்ள PIP யின் மதிப்பை அறிய.
c. Matplotlib யின் தொகுதியினை பட்டியலிட.
11.
தரவு காட்சிப்படுத்தலின் மூன்று பயன்பாட்டை எழுதவும்.
12.
பின்வரும் செயற்கூறுகளின் பயன்பாட்டை எழுதுக.
(அ) plt.xlabel
(ஆ) plt.ylabel
(இ) plt.title
(ஈ) plt.legend( )
(உ) plt.show( )
13.
Matplotlib யை பயன்படுத்தும் pyplot வகைகளை விரிவாக விவரி.
1.
(c)
இரு கூற்றும் சரி
2.
(a)
Line chart
3.
(c)
4.
(a)
நிறுவப்பட்டுள்ள தொகுப்புகளை பட்டியலிடும்.
5.
(a)
matplotlib.pyplot
6.
| plt.plot([1,2,3,4]) | plt.plot([1,2,3,4], [1,4,9,16]) |
| [1,2,3,4] மதிப்புகளை குறிக்கிறது | ([1,2,3,4], [1,4,9,16]) இது x மற்றும் y மதிப்புகளை குறிக்கிறது |
| மறைமுகமாக இது x ன் மதிப்புகளை குறிக்கிறது. [0, 1, 2, 3] (0, 1), (1, 2), (2, 3), (3, 4) | நேரடியாக செயல்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. (1, 1), (2, 4), (3, 9), (4, 16) |
7.
8.
Matplotlib ல் பல்வேறு வகையான காட்சிப்படுத்தல் உள்ளன.
அவை:
(i) கோட்டு வரைவு (Line plot)
(ii) ஸ்கேட்டர் வரைவு (Scatter plot)
(iii) ஹிஸ்டோகிராம் (Histogram)
(iv) பெட்டி வரைவு (Box plot)
(v) பட்டை விளக்கப்படம் (Bar chart)
(vi) வட்ட விளக்கப்படம் (Pie chart)
9.
import matplotlib. pyplot as plt
val = [29.2, 54.2, 8.3, 8.3]
labels= ["sleeping", "playing", "working", eating"]
plt.pie (val, labels = labels),
plt.axes ().set_aspect ("equal")
plt.show()
10.
a. உனது கணினியில் PIP நிறுவுவதற்கு :
உனது கணினியில் pip ஏற்கனவே நிறுவப்பட்டிருப்பதை சோதிக்க, கட்டளை தூண்டுக்குறியை பைத்தான் ஸ்கிரிப்ட் கோப்புகளுக்கு செலுத்த வேண்டும்
கட்டளை:
Python -m pip install -U pip
b. PIP மதிப்பை அறிய:
உனது கணினியில் pip யின் மதிப்பை அறிந்துகொள்ள பின்வரும் கட்டளையை உள்ளிடவும்
:\Users\Your Name\App Data\Local\Programs\Python\Python 36-32\Scripts > pip --version
c. தொகுப்புகளின் பட்டியல்:
உனது கணினியில் நிறுவப்பட்டுள்ள தொகுப்புகளை பார்வையிட, list கட்டளையை பயன்படுத்தலாம்
C:\Users\Your Name\App Data\Local\Programs\Python\Python 36-32\Scripts > pip list
11.
(i) தரவு காட்சிப்படுத்தல் பயனர்கள் தரவுகளை எளிதாக கூர்ந்து ஆய்வு செய்யவும், உட்பொருளை வெளிப்படுத்த உதவுகிறது
(ii) இது சிக்கலான தரவுகளை புரிந்துகொண்டு அவற்றை பயன்படுத்திக் கொள்ள வழி செய்கிறது.
(iii) தரவு காட்சிப்படுத்தல் பல்வேறு வரைபடங்களைக் கொண்டு தரவு மாறிகளுக்கு இடையே உள்ள உறவு நிலையை வெளிப்படுத்துகிறது.
12.
(அ) plt.xlabel
X - அச்சின் தலைப்பை குறிப்பிடுகிறது.
(ஆ) plt.ylabel
Y - அச்சின் தலைப்பை குறிப்பிடுகிறது.
(இ) plt.title
வரைப்படத்தின் தலைப்பை குறிப்பிடுகிறது.
(ஈ) plt.legend( )
plt.legend() கட்டளையைக் கொண்டு கொடாநிலை புனைவுகள் செயலாக்கலாம்.
(உ) plt.show( )
வரைபடத்தை காண்பிக்க உதவுகிறது.
13.
Matplotlib பெட்டி வரைபடம், ஹிஸ்டோகிராம், ஸ்கேட்டர் வரைவு, பட்டை விளக்கப்படம் போன்ற பல்வேறு வகையான வரைவிகளை உருவாக்க பயன்படுகிறது.
கோட்டு வரைவு:
கோட்டு வரைவு அல்லது கோட்டு விளக்கப்படம் என்பது தகவல்களை, "குறிப்பான்கள்" (Marker) என்று அழைக்கப்படும் தரவு புள்ளிகளின் தொடரை நேர்கோட்டின் இணைப்பதன் மூலம் காட்டுகிறது. ஒரு கோட்டு வரைவு பொதுவாக கால இடைவெளி (Interval of time) நேரத் தொடர் (Time series) போன்ற போக்கு பகுப்பாய்வுக்கான (Trend analysis) தரவுகளை காட்சிப்படுத்த பயன்படுகிறது. எனவே, இதன் கோடுகள் கால வரிசையில் அமையும்.
எடுத்துக்காட்டு: வரி வரைபடம்:
import matplotlib.pyplot as plt
years [2014, 2015, 2016, 2017, 2018]
total_populations = [8939007, 8954518, 8960387, 8956741, 8943721]
plt.plot (years, total_populations)
plt.title("Year vs Population in India")
plt.xlabel ("Year")
plt.ylabel ("Total Population")
plt.show()
இந்த நிரலில்,
plt.title() \(\rightarrow\) வரைப்படத்தின் தலைப்பை குறிப்பிடுகிறது.
plt.xlabel() \(\rightarrow\) X-அச்சின் தலைப்பை குறிப்பிடுகிறது.
plt.ylabel() \(\rightarrow\) Y-அச்சின் தலைப்பை குறிப்பிடுகிறது.

பட்டை விளக்கப்படம்:
பட்டை வரைவி (அல்லது) பட்டை விளக்கப்படம் என்பது மிகவும் பொதுவான வரைவிடம் வகையாகும். இது எண் வகை தரவுகளுக்கும், மதிப்புகளுக்கும் இடையே உள்ள உறவை வெளிப்படுத்துகிறது. பட்டை விளக்கப்படம் வகைப்படுத்தப்பட்ட தரவுகளை செவ்வக பட்டையாக காட்டும்.
இப்பட்டைகள் செங்குத்தாகவோ அல்லது கிடை மட்டமாகவோ தொகுக்கப்படலாம். இம்முறை கொடுக்கப்பட்ட எண் மதிப்புகளை பல்வேறு வகையுடன் ஒப்பிட்டு பார்க்க உதவும்.
Matplotlib-ல் பட்டை விளக்கப்படத்தை உருவாக்க, plt.bar() என்ற செயற்கூறினை பயன்படுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டு:
import matplotlib.pyplot as plt
# Our data
labels = ["TAMIL", "ENGLISH", "MATHS", "PHYSICS", "CHEMISTRY", "CS"]
usage [79.8, 67.3, 77.8, 68.4, 70.2, 88.5]
#Generating the y positions. Later, we'll use them to replace them with labels.
y_positions range (len(labels))
#Creating our bar plot
plt.bar (y_positions, usage)
plt.xticks (y_positions, labels)
plt.ylabel ("RANGE")
plt.title("MARKS")
plt.show()
வெளியீடு:

வட்ட விளக்கப்படம் :
வட்ட விளக்கப்படம் ஒரு பொதுவான விளக்கப்பட வகையாகும். வட்ட வடிவில் தோன்றும் இந்த விளக்கப்படம் எண் விகிதத்தை விளக்கும் விதத்தில் துண்டுகளாக பிரிக்கப்பட்டிருக்கும். வட்ட விளக்கப்படத்தில் உள்ள துண்டுகள் முழு படத்துடன் உள்ள உறவை வெளிக்காட்டும்.
Matplotlib கொண்டு வட்ட விளக்கப்படத்தை உருவாக்க plt.pie() செயற்கூறினை பயன்படுத்த வேண்டும். autopct அளவுரு, Python சரம் வடிவமைப்பை பயன்படுத்தி மதிப்பை சதவீதத்தில் காட்டும்.
எடுத்துக்காட்டு :
import matplotlib.pyplot as plt
sizes = [89, 80, 90, 100, 75]
labels = ["Tamil", "English", "Maths", "Science", "Social"]
plt.pie (sizes, labels = labels, autopct = "%.2f")
plt.show()
வெளியீடு:

12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards