12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
தரவுத்தள கருத்துருக்கள்
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
DBMS-ன் கூறுகள் பற்றி விரிவாக விளக்குக.
2.
DBMS மற்றும் RDBMS வேறுபடுத்துக.
3.
உறவுநிலையின் வகைகளை விவரி.
4.
5.
வலையமைப்பு தரவுத்தள மாதிரியில் எந்த வகையான உறவுநிலையை குறிப்பிடுகிறது?
ஒன்று - ஒன்று
ஒன்று - பல
பல - ஒன்று
பல - பல
6.
பின்வருவனவற்றுள் எது தரவு மாதிரி கிடையாது?
படிநிலை தரவுத்தள மாதிரி
ER தரவுத்தள மாதிரி
பொருள்நோக்கு தரவுத்தள மாதிரி
நிலைத்தன்மை மாதிரி
7.
பின்வருவனவற்றுள் எது சிக்கலான நிகழ் உலக தரவு சேகரிக்கும் சூழலை எளிமையாக்குகிறது?
தரவுகளின் நிலைத்தன்மை
மிகைமை குறைத்தல்
வினவல் மொழி
தரவு மாதிரி
8.
தரவுகளை வரிசை மற்றும் நெடுவரிசைகளைக் கொண்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது
தரவுத்தளம்
DBMS
கோப்பு மற்றும் அட்டவணை
வழிமுறைகள் / செயல்முறைகள்
9.
எவை தரவுகளை எளிமையாக சேமிக்க, செயல்படுத்த மற்றும் பகுப்பாய்வு செய்ய பயனர்களை அனுமதிக்கிறது?
MySQL
தரவுத்தள மாதிரி
Relational algebra
DBMS
10.
EF Codd விதி குறிப்பு வரைக.
11.
DBMS மென்பொருளுக்கான எ.கா தருக.
12.
DBMS-ன் கூறுகளை எழுதுக.
13.
தரவுத்தளங்களை உருவாக்க, வரையறுக்க மற்றும் கையாளுவதற்கு அனுமதிக்கின்ற மென்பொருள் பற்றி எழுதுக.
14.
தரவுத்தளம் என்றால் என்ன?
15.
உறவுநிலை இயற்கணிதம் என்றால் என்ன?
16.
உறவுநிலை மாதிரி பற்றி குறிப்பு வரைக.
17.
தரவுதள கட்டமைப்பு பற்றி எழுதுக.
18.
தரவுதள மேலாண்மை அமைப்பின் பண்புகளை பட்டியலிடுக.
19.
தரவுதளம் பற்றி குறிப்பு வரைக.
1.
தரவுத்தள மேலாண்மை அமைப்பு (DBMS) பின்வரும் ஐந்து கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
(i) வன்பொருள்
(ii) மென்பொருள்
(iii) தரவு
(iv) வழிமுறைகள்/செயல்முறைகள்
(v) தரவுத்தள அணுகல் மொழிகள்
(i) வன்பொருள்: கணினி, வன்வட்டு, தரவுக்கான உள்ளீடு/வெளியீடு சாதனங்கள் மற்றும் தரவைச் சேமிக்கப் பயன்படும் வேறு பாகங்கள்
(ii) மென்பொருள்: அனைத்தையும் கட்டுப்படுத்தும் மிக முக்கியமான நிரலின் கூறு ஆகும். DBMS மென்பொருளானது தரவுத்தள அணுகல் மொழிகளைப் புரிந்து கொள்ள மற்றும் இயக்கத்திற்கான தரவுத்தள கட்டளைகளை நிரல் பெயர்க்க தகுதி வாய்ந்தது.
(iii) தரவு: இது DBMS ஐ வடிவமைப்பதற்கான வளம் ஆகும். DBMS தரவுகளை சேமிக்கவும், பயன்படுத்தவும் உருவாக்கப்படுகிறது.
(iv) வழிமுறைகள்/செயல்முறைகள்: இது தரவுத்தள மேலாண்மை அமைப்பை பயன்படுத்துவதற்கான பொதுவான கட்டளைகள் ஆகும். அதாவது, DBMSஐ நிறுவுதல், தரவுத்தளங்களின் பிரதி எடுத்தலை (Backups) நிர்வகித்தல் அறிக்கை தயாரித்தல் போன்றவை ஆகும்.
(v) தரவுத்தள அணுகல் மொழிகள்: இவை தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்ட தரவுகளை அணுகுதல், சேர்த்தால், புதுப்பித்தல் மற்றும் நீக்குதல் போன்ற கட்டளைகளை எழுதுவதற்கு பயன்படும் மொழிகள் ஆகும்.
2.
| ஒப்பீட்டு அடிப்படை | DBMS | RDBMS |
| விரிவாக்கம் | Database Management System தரவுதள மேலாண்மை அமைப்பு | Relational Database Management System உறவுநிலை தரவுதள மேலாண்மை அமைப்பு. |
| தரவு சேமிப்பு | வழிசெலுத்தல் மாதிரி அதாவது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பதிவுகளின் தரவு | உறவுநிலை மாதிரி (அட்டவணையில்) அட்டவணையில் வரிசை மற்றும் நெடுவரிசை உள்ள தரவுகள் |
| மிகைமைத் தரவு | இடம் பெற்றுள்ளது | இடம் பெறவில்லை |
| இயல்பாக்கம் | செய்ய இயலாது | இயல்பாக்கத்தை பயன்படுத்துகிறது. |
| தரவு அணுகல் | அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறது. | DBMS உடன் ஒப்பிடும் போது வேகமானது. |
| திறவு கோல்கள் மற்றும் குறியீடுகள் | பயன்படுத்தப்பட வில்லை | உறவுநிலையை உருவாக்குவதற்குப் பயன்படுகிறது. |
| பரிவர்த்தனை மேலாண்மை | திறமையற்றது, பிழைகளைக் கொண்டது பாதுகாப்பற்றது. | திறமையானது மற்றும் பாதுகாப்பானது. |
| பரவல் தகவல் தளம் | ஒத்துழைக்காது | ஒத்துழைக்கும் |
| எடுத்துக்காட்டு | Dbase, FoxPro | SQL server, Oracle, mysql, MariaDB, SQLite, MS - Access |
3.
தரவுத்தளத்தில் பயன்படும் உறவுநிலைகளின் வகைகள்.
1. ஒன்றுடன் ஒன்று உறவுநிலை (One-to-One Relationship)
2. ஒன்றுடன் பல உறவுநிலை (One-to-Many Relationship)
3. பலவற்றுடன் ஒன்று உறவுநிலை (Many-to- One Relationship)
4. பலவற்றுடன் பல உறவுநிலை (Many-to- Many Relationship)
1. ஒன்றுடன் ஒன்று உறவுநிலை:
(i) இந்த உறவுநிலையில் ஒரு பொருள் வேறு ஒரு பொருளுடன் மட்டுமே தொடர்பு கொண்டிருக்கும். ஒரு அட்டவணையின் ஒரு பதிவு மற்றொரு அட்டவணையின் ஒரு பதிவுடன் மட்டுமே இணைக்கப்பட்டிருக்கும்.
(ii) எடுத்துக்காட்டு: ஒரு மாணவனுக்கு ஒரு தேர்வெண் மட்டுமே இருக்க முடியும்.

2. ஒன்றுடன் பல உறவுநிலை :
(1) இந்த உறவுநிலையில் ஒரு பொருள் வேறு பல பொருள்களுடன் தொடர்பு கொண்டிருக்கும். அட்டவணை A-வின் ஒரு பதிவு அட்டவணை B யின் பல பதிவுகளுடன் தொடர்பு கொண்டிருக்கலாம்.
(ii) ஆனால் அட்டவணை B யின் ஒரு பதிவு அட்டவணை A-வின் ஒரு பதிவுடன் மட்டுமே தொடர்பு கொண்டிருக்க முடியும்.
(iii) எடுத்துக்காட்டு: ஊழியர்களைக் கொண்டுள்ளது.

3. பலவற்றுடன் ஒன்று உறவுநிலை:
(i) இந்த உறவுநிலையில் பல பொருள்கள் வேறு ஒரேயொரு பொருள்களுடன் மட்டுமே தொடர்பு கொண்டிருக்கும்.
(ii) எடுத்துக்காட்டு: ஒரு துறையில் வேலை செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கையில், ஊழியர்கள் அட்டவணையின் பல பதிவுகள் துறை அட்டவணையின் ஒரு பதிவுடன் மட்டுமே தொடர்பு படுத்தப்பட்டிருக்கும்.

4. பலவற்றுடன் பல உறவுநிலை :
(i) இந்த உறவுநிலையில் ஒரு அட்டவணையில் உள்ள பல பதிவுகள் மற்றொரு அட்டவணையில் உள்ள பல பதிவுகளுடன் தொடர்பு கொண்டிருக்கும்.
(ii) எடுத்துக்காட்டு 1: நுகர்வோர் மற்றும் விலை பொருள்: நுகர்வோர் பல விலைப்பொருள்களை வாங்குகிறார் மற்றும் விலைப்பொருள்கள் பல நுகர்வோரால் வாங்கப்படலாம்.
(iii) எடுத்துக்காட்டு 2: மாணவர்கள் மற்றும் பாடப்பிரிவுகள்: ஒரு மாணவன் பல பிரிவுகளில் பதியலாம் மற்றும் ஒரு பாடப்பிரிவு பல மாணவர்களைக் கொண்டிருக்கலாம்.
(iv) எடுத்துக்காட்டு 3: புத்தகங்கள் மற்றும் மாணவன்: நூலகத்தில் உள்ள பல புத்தகங்கள் பல மாணவர்களுக்கு வழங்கப்படும்.

4.





5.
(d)
பல - பல
6.
(d)
நிலைத்தன்மை மாதிரி
7.
(d)
தரவு மாதிரி
8.
(c)
கோப்பு மற்றும் அட்டவணை
9.
(d)
DBMS
10.
தரவுத்தள இயல்பாக்கம் முதலில் டாக்டர் எட்கர் எப் காட் (Dr.Edgar F Codd) என்பவரால் RDBMS-ன் உட்பகுதியாக முன்மொழியப்பட்டது, இது தரவு மிகைமையைக் குறைக்கிறது மற்றும் தரவு நிலைப்பாட்டை அதிகரிக்கிறது. இந்த விதிகளே E F Codd விதிகள் எனப்படும்.
11.
SQL server, Oracle, Mysql, MariaDB, SQLite
12.
தரவுத்தள மேலாண்மை அமைப்பு (DBMS) பின்வரும் ஐந்து கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
(i) வன்பொருள்
(ii) மென்பொருள்
(iii) தரவு
(iv) வழிமுறைகள் / செயல்முறைகள்
(v) தரவுத்தள அணுகல் மொழிகள்
13.
DBMS என்பது தரவுத்தளங்களை உருவாக்க, வரையறுக்க மற்றும் கையாளுவதற்கு அனுமதிக்கின்ற ஒரு மென்பொருளாகும். இது தரவுகளை எளிமையாக சேமிக்க, செயல்படுத்த மற்றும் பகுப்பாய்வு செய்ய பயனர்களை அனுமதிக்கிறது. DBMS, உருவாக்குதல் போன்ற பல தரவுத்தளத்தை வேலைகளை செய்வதற்கான இடைமுகம் (அ) கருவியை வழங்குகிறது. DBMS தரவுத்தளங்களுக்கு பாதுகாப்பையும் வழங்குகிறது. DBMS இது, பல பயனர்கள் உள்ள நிலையில் தரவு நிலைத்தன்மையும் பராமரிக்கிறது.
14.
தரவுத்தளம் என்பது தரவுகளை எளிமையாக அணுக, நிர்வகிக்க, புதுப்பிக்கக் கூடிய, தொடர்புடைய தரவுகளின் களஞ்சியமாகும். தரவுத்தளம், தரவுகளை சேமிக்கும் நோக்கத்தோடு மென்பொருள் அல்லது வன்பொருளை தழுவியுள்ளது.
15.
(i) உறவுநிலை இயற்கணிதம் முதலில் எட்கர் எப் காட் என்பவரால் IBMல் உருவாக்கப்பட்டது. இது உறவுநிலை தரவுத்தளங்களில் சேமிக்கப்பட்ட தரவை மாதிரியாக்கம் செய்யவும் அதில் வினவல்களை வரையறுக்கவும் பயன்படுகிறது.
(ii) உறவுநிலை இயற்கணிதம், செயல்முறை வினவல்மொழி என அழைக்கப்படுகிறது. இது SQLயைப் பயன்படுத்தி தரவுத்தள அட்டவணைகளில் வினவல்களைக் கொடுக்கவும் பயன்படுகிறது.
(iii) உறவுநிலை இயற்கணிதச் செயல்பாடுகள் விடையைப் பெறுவதற்காக ஒரு உறவுநிலையில் (அட்டவணை) தற்சுழற்சி முறையில் செய்யப்படுகின்றன. இந்த செயற்பாடுகளின் விடை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உள்ளீடு உறவுகளால் ஏற்படுத்தப்பட்ட ஒரு புதிய உறவாகும்.
16.
(i) உறவுநிலை தரவுதள மாதிரி முதன்முதலில் E.F.Codd என்பவரால் 1970-ல் உருவாக்கப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் தரவுதள பயன்பாடுகளில் இத்தரவுதள மாதிரி பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
(ii) உறவுநிலை தரவுதள மாதிரியில் தரவுகளின் அடிப்படை கட்டமைப்பு அட்டவணைகள் (உறவுகள்) ஆகும்.
(iii) ஒரு குறிப்பிட்ட வகையை சார்ந்த அனைத்து தகவல்களும் அவ்வட்டவணையின் வரிசைகளில் சேமிக்கப்படுகின்றன.
(iv) எனவே, அட்டவணைகளை உறவுநிலை தரவுதள மாதிரியில் உறவுகள்(Relation) என்கிறோம். ஒரு உறவுநிலை தரவுகோல் குறிப்பிட்ட வரிசையிலான தரவுகளை தனித்தன்மையுடன் குறிக்கும் ஒரு பண்புக்கூறு ஆகும்.
17.
(i) ஒரு அட்டவணையில் உள்ள தொடர்புடைய தரவுகளின் முழு தொகுப்பே அட்டவணை எனப்படும். இது தரவுகளை வரிசை மற்றும் நெடுவரிசைகளைக் கொண்ட கோப்பு (அ) அட்டவணை என்றும் அழைக்கப்படுகிறது.
(ii) அட்டவணையில் ஒவ்வொரு வரிசையும் பதிவு என அழைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு தரவுத்தள பதிவிடுதலுக்குமான தரவின் தொகுதி ஆகும்.
(iii) ஓவ்வொரு நெடுவரிசையும் புலம் என அழைக்கப்படுகிறது. இது ஓவ்வொரு தரவின் வகையையும் குறிப்பிட்ட குழுக்களாக பிரிக்கிறது.
(iv) எ.கா. stu.No., stu.Name, stu.age, stu.class , stu.sec.
(v) ஒரு அட்டவணை உறவுகள், வரிசை எனவும் நெடுவரிசை எனவும் அழைக்கப்படுகிறது.
(vi) ஒரு வரிசை பதிவு (tuple) எனப்படும்.
18.
(i) அட்டவணையில் சேமிக்கப்பட்ட தரவுகள்
(ii) மிகைமை (தேவைக்கு அதிகமானவற்றை குறைத்தல்)
(iii) தரவுகளின் நிலைத்தனமை
(iv) பல பயனர்கள் மற்றும் ஒத்த அணுகுதலை ஆதரித்தல்
(v) வினவல் மொழி
(vi) பாதுகாப்பு
(vii) DBMS பரிவர்தனைகளை ஆதரித்தல்.
19.
(i) தரவுதளம் என்பது ஒரு கணினி அமைப்பிலிருந்து மின்னணு முறையில் பெறப்பட்டு சேமிக்கப்படுகின்ற தரவுகளின் ஒழுங்குபடுத்தப்பட்ட தொகுப்பு ஆகும்.
(ii) தரவுதளம் என்பது DBMS, தரவுதள அமைப்பு அல்லது தரவுத்தளத்தின் தொடர்புடைய பயன்பாடு போன்றவற்றை குறிப்பிடவும் பயன்படுகிறது.
(iii) இவைகளுக்கிடையே உள்ள நெருங்கிய உறவுநிலையின் காரணமான, தரவுதளம் என்ற சொல் தரவுதளம் மற்றும் தரவுதளத்தைக் கையாளுவதற்குப் பயன்படும். DBMS ஆகிய இரண்டையும் குறிப்பிட்ட பயன்படுகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards