12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 20/01/2020
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
பகா எண்களைக் கொண்ட ஒரு Set, இரட்டைப்படை எண்களை கொண்ட மற்றொரு Set உருவாக்குவதற்கான நிரல் [ஒட்டு, வெட்டு, வேறுபாடு, சமச்சீரான வேறுபாடு போன்ற செயற்பாடுகளுக்கான விடையை நிரூபிக்கவும்].
2.
List சுருக்கத்தைப் பயன்படுத்தி இரட்டைப்படை எண்களின் 2-ன் அடுக்குகளை உருவாக்கும் நிரலை எழுதுக.(1 to 10)
3.
வரி விளக்கப்படம் என்றால் என்ன?
4.
மதிப்பீட்டு சார்புகள் யாவை?
5.
பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
str1 = "mammals"
1) str1.find ('ma ')
2) str1.find ('ma', 2)
3) str1.find ('ma', 2,4)
4) str1.find ('ma', 2,5)
6.
DBMS பயனர்களின் வகைகளை எழுதுக.
7.
அட்டவணையில் உள்ள பதிவுகளை எவ்வாறு வடிகட்டுவாய்? எ.கா தருக
8.
SQL - ன் கட்டளைகளின் பிரிவுகளை எழுதுக
9.
ஒரே பெயரைக் கொண்ட குளோபல் மற்றும் உள்ளமை மாறிகளின் பயன்பாட்டை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
10.
Public மற்றும் Private தரவு உறுப்புகள் பற்றி எழுதுக.
11.
1 முதல் 100 வரையிலான எண்களின் கூட்டுத் தொகையை கணக்கிடும் நிரலை எழுதுக.
12.
ஒரு செயல்பாட்டின் இயங்கு நேரம் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
13.
கோப்பினில் மாற்றம் செய்தல் என்றால் என்ன?
14.
Matplotlib உள்ள காட்சிப்படுத்துதல் வகைகளை பட்டியலிடுக.
15.
next( ) செயற்கூறின் பயன்பாடு என்ன?
16.
பைத்தான் மூலம் CSV கோப்பை படிப்பதற்கான இரு வழிகளை குறிப்பிடுக.
17.
அட்டவணை கட்டுப்பாட்டிற்கும், நெடுவரிசை கட்டுப்பாட்டிற்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
18.
ஒரு Tuples n எண்ணிக்கை உறுப்புகளுடன் உருவாக்குவதற்கான தொடரியலை எழுதுக.
19.
பைத்தானில் சரங்களை மாற்றம் செய்ய முடியுமா?
20.
முழுதளாவிய வரையெல்லை-வரையறு.
21.
போலிக் குறிமுறை வரையறை.
22.
மேப்பிங் என்றால் என்ன?
23.
இடைமுகத்தையும், செயல்படுத்தலையும் வேறுபடுத்துக.
24.
X: = (78) இதன் மூலம் அறிவது என்ன?
25.
நிரலாக்க மொழியைப் பொறுத்து செயற்கூறுவை வரையறுக்கவும்.
1.
even=set([x*2 for x in range(1,11)])
primes=set( )
2.
S = [i**2 for i in range (2,11,2)]
print (S)
3.
வரி வரைப்படம் அல்லது வரி விளக்கப்படம் என்பது தகவல்களை, "குறிப்பான்கள்" (Marker) என்று அழைக்கப்படும் தரவு புள்ளிகளின் தொடரை நேர் கோட்டின் இணைப்பதன் மூலம் காட்டுகிறது. வரி வரைபடம் தரவுகளின் மாற்றத்தை குறிப்பிட்ட காலத்தில் நிகழக்கூடியதை காட்டும். எனவே, கால வரிசைப்படி இக்கோடுகள் அமைக்கப்படும்.
4.
இந்த சார்புகள் நெடுவரிசையில் உள்ள மதிப்புகளைக் கொண்டு செயல்பாடுகளைச் செய்து ஒரே ஒரு மதிப்பை விடையாகக் கொடுக்கும்
(i) COUNT ( )
(ii) AVG ( )
(iii) SUM ( )
(iv) MAX ( )
(v) MIN ( )
5.
1) 0
2) 3
3) -1
4) 3
6.
(i) தரவுத்தள நிர்வாகித்தல்
(ii) பயன்பாடு நிரல்கள் / மென்பொருள் உருவாக்குபவர்கள்
(iii) இறுதிநிலைப் பயனர்
(iv) தரவுத்தள வடிவமைப்பாளர்கள்
7.
WHERE clause பதிவுகளை வடிகட்டுதலுக்கு பயன்படுகிறது. இது கொடுக்கப்பட்ட நிபந்தனையை நிறைவு செய்யும் பதிவுகளை மட்டும் பிரித்தெடுக்க உதவுகிறது. உதாரணத்திற்கு மாணவர் அட்டவணையில் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மாணவர்களின் பட்டியலை, அக்கறை வரிசைப்படுத்தி ஏறுவரிசையில் வெளியிடும் கட்டளை பின்வருமாறு:
SELECT * FROM Student WHERE Age > = 18
ORDER BY Name;
8.
DML - தரவு கையாளுதல் மொழி
DDL - தரவு வரையறை மொழி
DCL - தரவு கட்டுப்பாட்டு மொழி
TCL - பரிவர்த்தனை கட்டுப்பாட்டு மொழி
DQL - தரவு வினவல் மொழி
9.
ஒரே பெயரைக் கொண்ட குளோபல் மற்றும் உள்ளமை மாறிகள்
x=5
def loc( ):
x = 10
print ("local x:", x)
loc ( )
print ("global x:", x)
வெளியீடு
local x: 10
global x: 5
10.
இனக்குழுவின் உள்ளே வரையறுக்கப்படும் மாறி கொடாநிலையாக public மாறி ஆகும். இந்த மாறிகளை புள்ளி செயற்குறி ( . ) பயன்படுத்தி நிரலில் எங்கு வேண்டுமானாலும் அணுகலாம். இரட்டை அடிக்கீறலை முன்னொட்டாக கொண்ட மாறிகள் private ஆகும். இந்த மாறிகளை இனக்குழுவின் உள்ளே மட்டும் தான் அணுக முடியும்.
11.
n = 100
sum=0
for counter in range(1,n+ 1):
sum = sum + counter
print("Sum of 1 until %d: %d" % (n,sum))
12.
பல்வேறு செயல்பாடுகளுடைய இயக்க நேரத்தோடு நெறிமுறை பகுத்தாய்வு தொடர்புடையது. ஒவ்வொரு செயற்பாட்டிற்காக செயல்படுத்தப்படும் கணினி கட்டளைகளின் எண்ணிக்கை மூலம் செயல்பாட்டின் இயங்கு நேரம் வரையறுக்கப்படுகிறது
13.
ஏற்கனவே உள்ள கோப்பினில் சில மாற்றங்களை செய்தல் அல்லது மேலும் புதிய தரவுகளை சேர்த்தல் ஆகியவை மாற்றம் செய்தல் எனப்படும்.
14.
Matplotlib ல் பல்வேறு வகையான காட்சிப்படுத்தல் உள்ளன.
அவை:
(i) கோட்டு வரைவு (Line plot)
(ii) ஸ்கேட்டர் வரைவு (Scatter plot)
(iii) ஹிஸ்டோகிராம் (Histogram)
(iv) பெட்டி வரைவு (Box plot)
(v) பட்டை விளக்கப்படம் (Bar chart)
(vi) வட்ட விளக்கப்படம் (Pie chart)
15.
next() செயற்கூறு சுழற்சியில் உள்ள அடுத்த உறுப்பினை திருப்பி அனுப்பும். மேலும் CSV கோப்பில் ஒரு வரிசையைத் தவிர்க்கவும் பயன்படும்.
16.
CSV கோப்பினை படிக்க இரண்டு வழிமுறைகள் உள்ளன.
(i) CSV தொகுதி படித்தல் செயற்கூறை பயன்படுத்துதல்.
(ii) DictReader இனக்குழுவை பயன்படுத்துதல்.
17.
| நெடுவரிசை கட்டுப்பாடு | அட்டவணை கட்டுப்பாடு |
| தனிப்பட்ட நெடுவரிசைக்கு மட்டுமே நெடுவரிசை கட்டுப்பாட்டை பயன்படுத்த முடியும். | அட்டவணை கட்டுப்பாடு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நெடுவரிசைகளுக்கு பயன்படுத்த முடியும். |
18.
# n எண்ணிக்கை உறுப்புகளுடன் Tuples
Tuples_Name = (E1, E2, E2 : En)
# அடைப்புக்குறி இல்லாத Tuple உறுப்புகள்
Tuples_Name = E1, E2, E3 .. En
19.
பைத்தானில் சரங்களை மாற்றியமைக்க முடியாது. அதாவது சரத்தை ஒருமுறை வரையறுத்த பின்பு அதை திருத்துதல் அல்லது நீக்குதல் போன்ற செயல்பாடுகள் அனுமதிக்கப்பட மாட்டாது. எனினும், முந்தைய சரம் முழுவதும் புதிய சரத்தால் மாற்றப்படலாம்.
20.
அனைத்து செயற்கூறுகளுக்கும் மேலாக அறிவிக்கப்படும் மாறி முழுதளாவிய மாறி எனப்படும். முழுதளாவிய வரையெல்லை உடைய மாறியை நிரலின் எந்த பகுதியிலும் அணுகமுடியும் முழுதளாவிய வரையெல்லை கொண்ட மாறியை ஒரு செயற்கூறினுள் அணுகுவதற்கு 'global' சிறப்புச் சொல்லானது பயன்படுகிறது.
21.
போலிக் குறிமுறை என்பது குறிப்பிட்ட செயலை முடிப்பதற்கான வரையறுக்கப்பட்ட கட்டளையின் தொகுதியாகும்
22.
மாறியின் பெயரை ஒரு பொருளுடன் பிணைக்கும் செயல்முறையே மேப்பிங் (Mapping) எனப்படும். : = (சமக்குறி) என்ற குறியீடு செயல்குறி நிரலாக்க மொழியில் மாறி மற்றும் பொருளை பிணைக்கிறது.
23.
| இடைமுகம் | செயல்படுத்துதல் |
| ஒரு பொருள் செய்யக்கூடிய நடவடிக்கையை வரையறுக்கிறது, ஆனால் அவற்றை உண்மையில் செய்யக் கூடியது இல்லை. | இடைமுகத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கட்டளைகளை நிறைவேற்றுகிறது. |
24.
(i) x:=78 ஒரு செயற்கூறு வரையறை ஆகும். வரையறைகள், மதிப்புகளைப் பெயருடன் பிணைக்கின்றன.
(ii) இங்கு 78 என்ற மதிப்பு 'X' என்ற பெயருடன் பிணைக்கப்படுகின்றது. வரையறைகள் கோவைகள் அல்ல. அதே நேரத்தில் கோவைகளை வரையறை எனக் கருதக் கூடாது. வரையறைகள் தனித்தன்மையான தொடரியல் தொகுதிகளைக் கொண்டதாகும்.
(iii) வரையறைகள் உள்ளமைவாக உள்ள கோவைகளைக் கொண்டதாகவோ அல்லது நேர்மாறாகவும் இருக்கலாம்.
25.
செயற்கூறு என்பது ஒரு பெரிய நிரலில் வரையறுக்கப்படும் ஒரு குறிமுறை அலகு ஆகும். செயற்கூறுகள், நிலையான வெளியீட்டை வழங்குவதற்கான மாறிகள், கோவைகள் போன்ற பலவகையான உள்ளீடுகளின் மீது செயல்படும் குறிமுறை தொகுதிகளை கொண்டிருக்கும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards