12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
Lists, Tuples, Sets மற்றும் Dictionary தொகுப்பு தரவினங்கள்
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
sort ( ) செயற்கூறு list-ல் உள்ள உறுப்புகளை தானமைவாக எந்த வரிசையாக்கம் செய்யும்?
ஏறுவரிசை
இறங்கு வரிசை
வரிசையாக்கம் நடைபெறாது
பல வரிசையாக்கம்
2.
எந்த செயற்கூறு சுட்டெண் தெரியாத உறுப்புகளை நீக்க பயன்படுகிறது?
del ( )
remove ( )
delete ( )
delmore ( )
3.
எந்த கூற்று சுட்டெண் தெரிந்த உறுப்புகளை நீக்க பயன்படுகிறது?
del
delete
remove
del ( )
4.
List உறுப்புக்களை எந்த செயற்குறியை பயன்படுத்தி மாற்றலாம்?
கட்டளை
ஒற்றை
இரட்டை
எளிய மதிப்பிலிருத்து
5.
List உறுப்பு அல்லது தொடர்பு உறுப்புகளை எந்த செயற்குறியை பயன்படுத்தி மாற்றலாம்?
+
?:
++
=
6.
பகா எண்களைக் கொண்ட ஒரு Set, இரட்டைப்படை எண்களை கொண்ட மற்றொரு Set உருவாக்குவதற்கான நிரல் [ஒட்டு, வெட்டு, வேறுபாடு, சமச்சீரான வேறுபாடு போன்ற செயற்பாடுகளுக்கான விடையை நிரூபிக்கவும்].
7.
Tuples -ஸ் மதிப்பிருத்தலை பயன்படுத்தி இரண்டு மதிப்புகளை இடமாற்றுவதற்கான நிரலை எழுதுக.
8.
பின்வருவனவற்றின் வெளியீடு யாது?
TUP = (12,78,91,'A','B',3,69)
(i) print (TUP [2:5])
(ii) print (TUP [:5])
(iii) print (TUP [4:])
(iv) print (TUP [:])
(v) print (TUP)
9.
BRICSன் உறுப்பு நாடுகளின் List-ஐ வரையறை செய்து, உள்ளீடு செய்யப்படும் நாடு BRICSன் உறுப்பா (அல்லது) இல்லையா என்பதை பரிசோதிக்கும் நிரலை எழுதுக.
10.
முதல் 20 வரையான எண்களில் 4-ல் வகுபடும் எண்களை பெறும் List ஒன்றை உருவாக்கும் நிரல் ஒன்றை எழுதுக.
11.
Dictionary சுருக்கம் பற்றி எழுதுக.
12.
List அல்லது Tupleஐ பயன்படுத்தி setஐ எவ்வாறு உருவாக்கலாம்? எடுத்துக்காட்டு தருக.
13.
ஒற்றை உறுப்பு கொண்ட Tuples எவ்வாறு உருவாக்குவாய் என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
14.
List உறுப்புகள் எவ்வாறு மாற்றப்படலாம்? எ.கா. தருக.
15.
List-ன் நீளத்தை எவ்வாறு கணக்கிடுவாய்? எடுத்துக்காட்டு தருக.
16.
செயற்கூற்றைப் பயன்படுத்தி, வட்டத்தின் ஆரத்தை செயற்கூறுக்கு அளபுருவாக அனுப்பி, வட்டத்தின் பரப்பு மற்றும் சுற்றளவை திருப்பி அனுப்புவதற்கான நிரலை எழுதுக.
17.
Tuple-ல் ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளை திருப்புதல் என்பதை எடுத்துக்காட்டு மூலம் விளக்குக.
18.
remove ( ), Clear ( ), Pop ( ) செயற்கூறுகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
19.
For மடக்கையை பயன்படுத்தி உறுப்புகளை எவ்வாறு அணுகுவாய் என்பதை எ.கா. மூலம் விளக்குக.
1.
(a)
ஏறுவரிசை
2.
(b)
remove ( )
3.
(c)
remove
4.
(d)
எளிய மதிப்பிலிருத்து
5.
(d)
=
6.
even=set([x*2 for x in range(1,11)])
primes=set( )
7.
a = int(input("Enter value of A : "))
b = int(input("Enter value of B: "))
print("Value of A =",a ,"\n Value of B = ",b)
(a,b) = (b,a)
print("Value of A = ",a,"\n Value of B = ",b)
8.
வெளியீடு :
(91,'A','B')
(12, 78, 91,'A','B')
('B',3,69)
(12, 78, 91, 'A','B',3,69)
(12, 78, 91, 'A', 'B',3,69)
9.
country=["india", "Russia", "Sri Lanka", "China", "Brazil"]
is_member = input("Enter the name of the country:")
if is_member in country:
print(is_member, " is the member of BRICS")
else:
print(is_member, " is not a member of BRICS")
வெளியீடு :
Enter the name of the country: India
India is the member of BRICS
10.
divBy4=[ ]
for i in range(21):
if (i%4==0):
divBy4.append(i)
print(divBy4)
11.
பைத்தானில், சுருக்கம் என்பது Dictionary ஐ உருவாக்குவதற்கான மற்றொரு வழியாகும். இந்த வகை Dictionary ஐ உருவாக்குவதற்கான தொடரியல் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
Dict = { expression for variable in sequence [if condition]}
if நிபந்தனை கட்டாயமல்ல, if நிபந்தனையை குறிப்பிட்டால், நிபந்தனை பூர்த்தி செய்யும் மதிப்புகள் மட்டுமே கோவையைப் பயன்படுத்தி மதிப்பீடு செய்யப்படுகின்றன.
எடுத்துக்காட்டு :
Dict = {x : 2 * x for x in range(1,10)}
மேலே உள்ள குறிமுறையின் வெளியீடு
{1:2,2:4,3:6,4:8,5:10,6:12,7:14,8:16,9:18}
12.
ஒரு List அல்லது Tuple ஐ Set() செயற்கூற்றைப் பயன்படுத்தி Set ஆக மாற்ற முடியும். இது மிகவும் எளிய முறையாகும். List அல்லது Tuple ஐ உருவாக்கிய பின் அதன் மாறியை Set( ) செயற்கூறினுள் அளபுருவாக கொடுக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு :
MyList= [2,4,6,8,10]
MySet=set(MyList)
print(MySet)
வெளியீடு : {2,4,6,8,10}
13.
Tuples-ஐ ஒற்றை உறுப்புடன் உருவாக்கும் போது, உறுப்பின் இறுதியில் காற்புள்ளியை சேர்க்க வேண்டும். காற்புள்ளி இல்லையெனில், பைத்தான் அந்த உறுப்பை ஒரு சாதாரண தரவினம் போல எடுத்துக் கொள்ளும், Tuples ஆக கருதாது. ஒரு உறுப்புடன் Tuples-ஐ உருவாக்குவது "சிங்கிள்டன்" (singleton) Tuples என அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு :
> > > MyTup4 = (10)
> > > type(MyTup4)
<class 'int'>
> > > MyTup5 = (10,)
> > > type(MyTup5)
<class 'Tuples'>
14.
(i) பைத்தானில், List-கள் மாறும் தன்மையுடையவை, அதாவது List உறுப்புகள் மாற்றப்படலாம். List உறுப்பு அல்லது தொடர் உறுப்புகளை எளிய மதிப்பிருத்து செயற்குறியை (=) பயன்படுத்தி மாற்றலாம்.
(ii) எடுத்துக்காட்டு :
MyList = [1,3,5,7,9]
print ("List Odd numbers....")
for x in MyList
print (x)
MyList[0:5] = 2,4,6,8,10
print ("List Even numbers....")
for y in MyList:
print (y)
15.
பைத்தானில் உள்ள len ( ) செயற்கூறு, List-ன் நீளத்தை கண்டறிய பயன்படுகிறது. (அதாவது, List-ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை). பொதுவாக, len( ) செயற்கூறு List-ல் அனைத்து உறுப்புகளையும் அணுகுவதற்கான மடக்கின் உச்ச வரம்பை நிர்ணயிக்க பயன்படுகிறது. ஒரு List-ல் மற்றொரு List-ஐ ஒரு உறுப்பாக கொண்டிருந்தால், len ( ) செயற்கூறு உட்புற List-ஐ ஒரு உறுப்பாகவே எடுத்துக்கொள்ளும்.
எடுத்துக்காட்டு :
> > > MySubject = ["Tamil", "English", "Computer Science", "Maths"]
> > > len(MySubject)
4
16.
pi = 3.14
def Circle(r):
return (pi*r*r,2*pi*r)
radius = float(input("Enter the Radius: "))
(area,circum) = Circle(radius)
print ("Area of the Circle = ", area)
print ("Circumference of the circle = ", circum)
வெளியீடு :
Enter the Radius: 5
Area of the circle = 78.5
Circumference of the circle = 31.400000000000002
17.
ஒரு செயற்கூறு ஒரு நேரத்தில் ஒரு மதிப்பை மட்டுமே திருப்பி அனுப்ப முடியும். ஆனால் பைத்தான், செயற்கூறிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளை திருப்பி அனுப்புகிறது. பைத்தான் பல மதிப்புகளை தொகுத்து, அவைகளை ஒன்றாக திருப்பி அனுப்புகிறது.
எடுத்துக்காட்டு :
def Min_Max(n):
a = max(n)
b = min(n)
return(a,b)
Num = (12,65,84,1,18,85,99)
(Max_Num, Min_Num) = Min_Max(Num)
print("Maximum value = "Max_Num)
print("Minimum value = ",Min_Num)
வெளியீடு :
Maximum value = 99
Minimum value = 1
18.
(i) remove ( ) செயற்கூறு சுட்டெண் தெரியாத ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகளை நீக்குவதற்கு பயன்படுகிறது.
(ii) remove ( ) செயற்கூறு மட்டுமல்லாமல் pop ( ) செயற்கூறும் கொடுக்கப்பட்ட சுட்டெண்களை பயன்படுத்தி, ஒரு உறுப்பை நீக்க பயன்படுகிறது. pop ( ) செயற்கூறு சுட்டெண் கொடுக்கப்படாத போது List-ன் கடைசி உறுப்பை நீக்கி அதை காண்பிக்கிறது.
(iii) clear( ) செயற்கூறு List-ன் அனைத்து உறுப்புகளையும் நீக்க பயன்படுகிறது.இது உறுப்புகளை மட்டுமே நீக்கி,List-ஐ தொடர்ந்து வைத்திருக்கிறது. Del கூற்று முழு லிஸ்ட்-ஐ நீக்குகிறது.
தொடரியல்:
List.remove(element) # ஒரு குறிப்பிட்ட உறுப்பை நீக்க
List.pop(index of an element)
List.clear( )
எடுத்துக்காட்டு :
> > >MyList=[12,89,34, 'Kannan', 'Gowrisankar', 'Lenin']
> > >print(MyList)
[12, 89, 34, 'Kannan', 'Gowrisankar', 'Lenin']
> > >MyList.remove(89)
> > >print(MyList)
[12,34,'Kannan', 'Gowrisankar', 'Lenin']
(iv) மேலே உள்ள எடுத்துக்காட்டில், MyList மூன்று முழு எண்கள் மற்றும் மூன்று சரநிலையுரு உறுப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்பின் உள்ள print கூற்று List-ல் உள்ள அனைத்து உறுப்புகளையும் காண்பிக்கிறது. MyList.remove(89) கூற்று, List-ல் இருந்து 89 என்ற உறுப்பை நீக்குகிறது. பின்வரும் print கூற்று மீதமுள்ள உறுப்புகளை காண்பிக்கிறது.
> > > MyList.pop(1)
34
> > >print(MyList)
[12,'Kannan', 'Gowrisankar', 'Lenin']
(v) மேலே உள்ள குறிமுறையில், pop ( ) செயற்கூறு குறிப்பிட்ட உறுப்பை அதன் சுட்டெண்ணை பயன்படுத்தி நீக்குவதற்கு பயன்படுகிறது. உறுப்பு நீக்கப்பட்டவுடன் pop( ) செயற்கூறு நீக்கப்பட்ட உறுப்பை காண்பிக்கிறது.
pop( ) செயற்கூறு லிஸ்டில் இருந்து ஒரு உறுப்பை மட்டும் நீக்கப் பயன்படுகிறது. Del கூற்று பல உறுப்புகளை நீக்குகிறது.
எடுத்துக்காட்டு :
> > > MyList.clear( )
> > >print(MyList)
[ ]
(vi) மேலே உள்ள குறிமுறையில், clear( ) செயற்கூறு உறுப்புகளை மட்டும் நீக்கி List-ஐ தொடர்ந்து வைத்திருக்க பயன்படுகிறது. உறுப்புகள் நீக்கப்பட்ட List-ஐ அச்சிடுவதற்கு நீங்கள் முயன்றால், எந்தவொரு உறுப்பும் இல்லாத காலியான சதுர அடைப்புக் குறி தோன்றும். அதாவது list காலியாக இருக்கும்.
19.
(i) பைத்தானில் உள்ள for மடக்கு, List-ல் உள்ள அனைத்து உறுப்புகளையும் ஒவ்வொன்றாக அணுகுவதற்கு பயன்படுகிறது. இது, C++ போன்ற பிற நிரலாக்க மொழிகளில் உள்ள for மடக்கை போன்றது.
தொடரியல் :
for index_var in List:
print (index_var)
(ii) இங்கு index_var என்பது List-ல் உள்ள ஒவ்வொரு உறுப்பின் சுட்டு மதிப்பைக் குறிக்கிறது. பைத்தான் ஆங்கில மொழியில் படிப்பது போன்றே, "for" கூற்றை கையாள்கிறது: "For (every) element in (the List of) List and print (the name of the)List items"
எடுத்துக்காட்டு :
Marks = [23,45,67,78,98]
for x in Marks:
print( x )
வெளியீடு :
23
45
67
78
98
(iii) மேலே உள்ள எடுத்துக்காட்டில், Marks List ஐந்து உறுப்புகளைக் கொண்டுள்ளது;ஒவ்வொரு உறுப்பிற்கும் 0 முதல் 4 வரை சுட்டெண் இருத்தப்படுகிறது.
(iv) பைத்தான், ஆங்கில மொழியில் வாசிப்பதை போன்றே for மடக்கு மற்றும் print கூற்றுகளை படிக்கிறது: "For (every) element (represented as x) in (the List of) Marks and print (the values of the)elements".
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards