12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 17/01/2020
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
பல்வேறு வகையான தரவுகளை ஒப்பிட பயன்படுவது எது?
பட்டை வரைபடம்
ஹிஸ்டோகிராம் வரைபடம்
வட்ட வரைபடம்
வரி விளக்கப்படம்
2.
பைத்தானில் நமக்கு விருப்பமான இடத்தில் ஒரு உருப்பை சேர்க்க எந்த செயற்கூறு பயன்படுத்த வேண்டும்?
append ( )
Extend ( )
insert ( )
format ( )
3.
பின்வரும் எதனை கொண்டு list அமைப்பு கோவைகள் பிரிக்கப்படவேண்டும்?
( ), ,
< > , ;
[ ], ,
[ ] , :
4.
எந்த கட்டளையானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பதிவுகளின் துணைக் கூறுகளை மீட்டெடுக்கப் பயன்படுகிறது
QUERY
SUBSET
SET
SELECT
5.
பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
x=lambda y,z =y+z
print (10,15)
10
15
25
1025
6.
Big O - வின் தலைகீழ் என்பது _________
Big Ω
Big α
Big β
Big Σ
7.
ஒரு கணிப்பொறி நிரலை பல துணை நிரல்களாக பிரிக்கும் செயல்முறை எனப்படுவது
தொகுதி நிரலாக்கம்
பொருள்நோக்கு நிரலாக்கம்
இடைமுக நிரலாக்கம்
வரையெல்லை நிரலாக்கம்
8.
dialct அளபுருவமான skipnitialspace என்பதன் கொடா நிலையான மதிப்பு
True
false
on
off
9.
எந்த செயற்கூறு தேர்ந்தெடுக்கப்பட்ட புலத்தின் பெரிய மதிப்பைத் திருப்பி அனுப்பும்?
MAX( )
LARGE( )
HIGH( )
MAXIMUM( )
10.
பைத்தான் மற்றும் C++ நிரல்களை இடைமுகப்படுத்துவதற்கான கட்டமைப்பு ______.
Ctypes
SWIG
Cython
Boost
11.
ஒரு tuple என்பது ______.
table
row
attribute
field
12.
If List =[10,20,30,40,50] எனில் List[2] = 35 ன் விடை ______.
[35,10,20,30,40,50]
[10,20,30,40,50,35]
[10,20,35,40,50]
[10,35,30,40,50]
13.
பின்வரும் குறியுருக்கான வெளியீடு யாது?
str1 = "Chennai Schools"
str1[7] = "-"
Chennai-Schools
Chenna-School
Type error
Chennai
14.
பின்வரும் எது வில்லைகள் கிடையாது?
நிரல்பெயர்ப்பி
குறிப்பெயர்கள்
சிறப்புச் சொற்கள்
செயற்குறிகள்
15.
செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
துணை நிரல்கள்
செயற்கூறு
அளப்புருக்கள்
செயலுருபு
16.
DBMS-ன் கூறுகள் பற்றி விரிவாக விளக்குக.
17.
பரிவர்த்தனை கட்டுப்பாட்டு மொழி கட்டளைகள் பற்றி விவரி.
18.
கீழேகாணும் நிரலின் வெளியீட்டை எழுதவும்.
x=20
x+=20
print ("The x +=20 is =",x)
x-=5
print ("The x-=5 is =",x)
x*=5
print ("The x*=5 is =",x)
x/=2
print ("The x/=2 is =",x)
x%=3
print ("The x%=3 is =",x)
x**=2
print ("The x**=2 is =",x)
x//=3
print ("The x//=3 is =",x)
#program End
19.
பைத்தான் எவ்வாறு C++ நிரல்களின் பிழைகளைத் கையாள்கிறது என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
20.
Matplotlib யை பயன்படுத்தும் pyplot வகைகளை விரிவாக விவரி.
21.
பின்வரும் குறிப்புகளைக் கொண்டு ITEM என்ற அட்டவணையை உருவாக்க பைத்தான் ஸ்கிரிப்ட்டை எழுதவும்.
அட்டவணைக்கு ஒரு பதிவை சேர்க்கவும்.
தரவுத்தளத்தின் பெயர் : ABC
அட்டவணையின் பெயர் : Item
நெடுவரிசையின் பெயர் மற்றும் விவரங்கள் :
| Icode | : | integer and act as primary key |
| Item Name | : | Character with length 25 |
| Rate | : | Integer |
| Record to be added | : | 1008, Monitor,15000 |
22.
பல்வேறு கோப்பு முறைமைகளின் பொருள்களை பட்டியலிடுக.
23.
பைத்தானில் பயன்படும் சர செயற்குறிகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.
24.
அனைத்து மூன்று இலக்க ஒற்றைப்படை எண்களை வெளியிடுவதற்கான நிரலை எழுதுக.
25.
தரவு அருவமாக்கம் எவ்வாறு செயல்படுத்துவாய்? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
26.
வரி விளக்கப்படம் என்றால் என்ன?
27.
அளபுருக்கள் மற்றும் செயலுருபுக்களின் வேறுபாட்டை எழுதுக.
28.
பைத்தானில் ஆக்கி மற்றும் அழிப்பியை வரையறுக்க.
29.
break கூற்றின் செயல்பாட்டை பாய்வு படத்தின் மூலம் விளக்கவும்.
30.
CSV கோப்பினை திறக்கும் open கட்டளை எவ்வாறு கொடுக்கப்படல் வேண்டும்?
31.
தரவுத்தளத்தை இணைக்க பயன்படும் முறைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.
32.
கூறுநிலைகளின் பயன் யாது?
33.
பைத்தானில் உள்ள பல்வேறு செயற்குறிகள் யாவை?
34.
மேப்பிங் என்றால் என்ன?
35.
இரண்டு நேர்முழு எண்களின் மீப்பெரு வகு எண்ணை கண்டுபிடிக்கும் pure செயற்கூற்றின் நெறிமுறையை எழுது.
36.
பைத்தானில் கூறுநிலைகளை எவ்வாறு தருவித்துக் கொள்வது?
37.
மாறிகளின் வரையெல்லை பற்றி குறிப்பு வரைக
38.
reader( ) செயற்கூறின் தொடரியலை எழுதுக.
39.
கீழ்காணும் கூற்றில் கூறுநிலை, செயற்குறி, வரையறையின் பெயர் ஆகியவற்றை அடையாளம் காண்க.
welcome.display( )
40.
DBMS-ன் பல்வேறு வகையான பயனர்களைப் பற்றி குறிப்பு வரைக.
41.
del மற்றும் clear( ) செயற்கூறுகளுக்கு இடையேயான வேறுபாடுகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
42.
செயற்கூறினை வரையறுக்கும் போது குறிப்பிடப்பட வேண்டிய குறிப்புகள் யாவை?
43.
Asymptotic குறியீடு - குறிப்பு வரைக.
1.
(a)
பட்டை வரைபடம்
2.
(c)
insert ( )
3.
(c)
[ ], ,
4.
(d)
SELECT
5.
(c)
25
6.
(a)
Big Ω
7.
(a)
தொகுதி நிரலாக்கம்
8.
(b)
false
9.
(a)
MAX( )
10.
(d)
Boost
11.
(b)
row
12.
(c)
[10,20,35,40,50]
13.
(c)
Type error
14.
(a)
நிரல்பெயர்ப்பி
15.
(c)
அளப்புருக்கள்
16.
தரவுத்தள மேலாண்மை அமைப்பு (DBMS) பின்வரும் ஐந்து கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
(i) வன்பொருள்
(ii) மென்பொருள்
(iii) தரவு
(iv) வழிமுறைகள்/செயல்முறைகள்
(v) தரவுத்தள அணுகல் மொழிகள்
(i) வன்பொருள்: கணினி, வன்வட்டு, தரவுக்கான உள்ளீடு/வெளியீடு சாதனங்கள் மற்றும் தரவைச் சேமிக்கப் பயன்படும் வேறு பாகங்கள்
(ii) மென்பொருள்: அனைத்தையும் கட்டுப்படுத்தும் மிக முக்கியமான நிரலின் கூறு ஆகும். DBMS மென்பொருளானது தரவுத்தள அணுகல் மொழிகளைப் புரிந்து கொள்ள மற்றும் இயக்கத்திற்கான தரவுத்தள கட்டளைகளை நிரல் பெயர்க்க தகுதி வாய்ந்தது.
(iii) தரவு: இது DBMS ஐ வடிவமைப்பதற்கான வளம் ஆகும். DBMS தரவுகளை சேமிக்கவும், பயன்படுத்தவும் உருவாக்கப்படுகிறது.
(iv) வழிமுறைகள்/செயல்முறைகள்: இது தரவுத்தள மேலாண்மை அமைப்பை பயன்படுத்துவதற்கான பொதுவான கட்டளைகள் ஆகும். அதாவது, DBMSஐ நிறுவுதல், தரவுத்தளங்களின் பிரதி எடுத்தலை (Backups) நிர்வகித்தல் அறிக்கை தயாரித்தல் போன்றவை ஆகும்.
(v) தரவுத்தள அணுகல் மொழிகள்: இவை தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்ட தரவுகளை அணுகுதல், சேர்த்தால், புதுப்பித்தல் மற்றும் நீக்குதல் போன்ற கட்டளைகளை எழுதுவதற்கு பயன்படும் மொழிகள் ஆகும்.
17.
COMMIT கட்டளை:
COMMIT கட்டளை, தரவுத்தளத்திலுள்ள எந்த ஒரு நடவடிக்கையும் நிரந்தரமாக சேமிக்கப் பயன்படுகிறது. INSERT, UPDATE, DELETE போன்ற DML கட்டளைகளைப் பயன்படுத்தி செய்யப்பட்ட மாற்றங்கள் நிரந்தரமல்ல. SQL தூண்டுக்குறியில் COMMIT கட்டளையை கொடுத்து விட்டால் செய்யப்பட்ட மாற்றங்கள் திரும்பப் பெற இயலாது. COMMIT கட்டளை இவ்வாறு பயன்படுத்தப்படுகிறது.
COMMIT;
ROLLBACK கட்டளை:
ROLLBACK கட்டளை கடைசி COMMIT கட்டளைக்கு பிறகு கொடுத்த அனைத்து கட்டளைகளையும் திரும்பப் பெற. இந்த கட்டளையுடன் SAVEPOINT கட்டளையும் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட savepoint இடத்திற்கு கொண்டு செல்ல முடியும்.
ROLL BACK TO savepoint name;
SAVEPOINT கட்டளை:
SAVEPOINT கட்டளை ஒரு நடவடிக்கையை தற்காலிகமாக சேமித்து வைப்பதால், நாம் தேவைப்படும் சமயங்களில் திரும்பவும் அந்த நிலைக்கு செல்லலாம். நம்முடைய அட்டவணையின் மாறுபட்ட நிலைகளை வெவ்வேறு பெயர்களை பயன்படுத்தி எந்த சமயத்திலும் சேமித்துக் கொள்ளலாம். மேலும், ROLLBACK கட்டளையைப் பயன்படுத்தி மீண்டும் அந்த நிலையை சென்றடையலாம்
SAVEPOINT savepoint_name;
18.
வெளியீடு :
The x +=20 is = 30
The x -=5 is = 25
The x *=5 is = 125
The x /=2 is = 62.5
The x %=3 is = 2.5
The x **=2 is = 6.25
The x //=3 is = 2.0
19.
பைத்தான் வெற்றிகரமான C++ நிரலை இயக்குவது மட்டுமல்லாது, தொகுத்தலின் போது C++ கூற்றில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அவற்றை வெளியிடவும் உதவுகிறது. உதாரணத்திற்கு, கீழ்க்காணும் C++ நிரலின் ஒரு பிழை உள்ளது. பைத்தான் மூலம் தொகுக்கும் போது என்ன நேரும் என்பதைத் பார்க்கலாம்.
எடுத்துக்காட்டு :
// C++ program to print the message Hello
// Now select File-s-New in Notepad and type the C++ program
#include< iostream >
using namespace std ;
int main( )
{
std::cout<<"hello"
}
// Save this file as hello.cpp
#Now select File\(\rightarrow \)New in Notepad and type the Python program as main.py
# Program that compiles and executes a .cpp file
# Python main.py -i hello
import sys, os, getopt
def main(argv):
cpp_file ="
exe_ file ="
opts,args = getopt.getopt( argv,"i:" ,['ifile='])
for o, a in opts :
if in ("-i", "--ifile"):
cpp_file = a + '.cpp'
exe_file = a + '.exe'
runecpp_file, exe_file)
def runecpp_file, exe_file):
print=Compiling " + cpp _file)
os.system('g++ ' + cpp_file +' -o' +exe_ file)
print("Running " + exe_file)
print("_______ ")
print
os.system( exe_file)
print
if____ name =='____ main_____ ':
main(sys.argv[l:])
நிரலின் வெளியீடு
C:\Program Files\OpenOffice 4\
program > Python c:\pyprg\main.py -i c:\pyprg\hello
[('-i', 'c:\\pyprg\\hello')] .
Compiling c:\pyprg\heHo.cpp
c:\pyprg\hello.cpp: In function 'int main( )':
before 'return'
std::cout < <"hello"
/\
;
return 0;
------------
Running c:\pyprg\ch14\cpp __file.exe
_______
'c:\pyprg\hello.exe' is not recognized as an internal or external command, operable program or batch file.
C:\Program Files\OpenOffice 4\program>
20.
Matplotlib பெட்டி வரைபடம், ஹிஸ்டோகிராம், ஸ்கேட்டர் வரைவு, பட்டை விளக்கப்படம் போன்ற பல்வேறு வகையான வரைவிகளை உருவாக்க பயன்படுகிறது.
கோட்டு வரைவு:
கோட்டு வரைவு அல்லது கோட்டு விளக்கப்படம் என்பது தகவல்களை, "குறிப்பான்கள்" (Marker) என்று அழைக்கப்படும் தரவு புள்ளிகளின் தொடரை நேர்கோட்டின் இணைப்பதன் மூலம் காட்டுகிறது. ஒரு கோட்டு வரைவு பொதுவாக கால இடைவெளி (Interval of time) நேரத் தொடர் (Time series) போன்ற போக்கு பகுப்பாய்வுக்கான (Trend analysis) தரவுகளை காட்சிப்படுத்த பயன்படுகிறது. எனவே, இதன் கோடுகள் கால வரிசையில் அமையும்.
எடுத்துக்காட்டு: வரி வரைபடம்:
import matplotlib.pyplot as plt
years [2014, 2015, 2016, 2017, 2018]
total_populations = [8939007, 8954518, 8960387, 8956741, 8943721]
plt.plot (years, total_populations)
plt.title("Year vs Population in India")
plt.xlabel ("Year")
plt.ylabel ("Total Population")
plt.show()
இந்த நிரலில்,
plt.title() \(\rightarrow\) வரைப்படத்தின் தலைப்பை குறிப்பிடுகிறது.
plt.xlabel() \(\rightarrow\) X-அச்சின் தலைப்பை குறிப்பிடுகிறது.
plt.ylabel() \(\rightarrow\) Y-அச்சின் தலைப்பை குறிப்பிடுகிறது.

பட்டை விளக்கப்படம்:
பட்டை வரைவி (அல்லது) பட்டை விளக்கப்படம் என்பது மிகவும் பொதுவான வரைவிடம் வகையாகும். இது எண் வகை தரவுகளுக்கும், மதிப்புகளுக்கும் இடையே உள்ள உறவை வெளிப்படுத்துகிறது. பட்டை விளக்கப்படம் வகைப்படுத்தப்பட்ட தரவுகளை செவ்வக பட்டையாக காட்டும்.
இப்பட்டைகள் செங்குத்தாகவோ அல்லது கிடை மட்டமாகவோ தொகுக்கப்படலாம். இம்முறை கொடுக்கப்பட்ட எண் மதிப்புகளை பல்வேறு வகையுடன் ஒப்பிட்டு பார்க்க உதவும்.
Matplotlib-ல் பட்டை விளக்கப்படத்தை உருவாக்க, plt.bar() என்ற செயற்கூறினை பயன்படுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டு:
import matplotlib.pyplot as plt
# Our data
labels = ["TAMIL", "ENGLISH", "MATHS", "PHYSICS", "CHEMISTRY", "CS"]
usage [79.8, 67.3, 77.8, 68.4, 70.2, 88.5]
#Generating the y positions. Later, we'll use them to replace them with labels.
y_positions range (len(labels))
#Creating our bar plot
plt.bar (y_positions, usage)
plt.xticks (y_positions, labels)
plt.ylabel ("RANGE")
plt.title("MARKS")
plt.show()
வெளியீடு:

வட்ட விளக்கப்படம் :
வட்ட விளக்கப்படம் ஒரு பொதுவான விளக்கப்பட வகையாகும். வட்ட வடிவில் தோன்றும் இந்த விளக்கப்படம் எண் விகிதத்தை விளக்கும் விதத்தில் துண்டுகளாக பிரிக்கப்பட்டிருக்கும். வட்ட விளக்கப்படத்தில் உள்ள துண்டுகள் முழு படத்துடன் உள்ள உறவை வெளிக்காட்டும்.
Matplotlib கொண்டு வட்ட விளக்கப்படத்தை உருவாக்க plt.pie() செயற்கூறினை பயன்படுத்த வேண்டும். autopct அளவுரு, Python சரம் வடிவமைப்பை பயன்படுத்தி மதிப்பை சதவீதத்தில் காட்டும்.
எடுத்துக்காட்டு :
import matplotlib.pyplot as plt
sizes = [89, 80, 90, 100, 75]
labels = ["Tamil", "English", "Maths", "Science", "Social"]
plt.pie (sizes, labels = labels, autopct = "%.2f")
plt.show()
வெளியீடு:

21.
import sqlite3
connection = sqlite3 . connect ("ABC.db")
cursor = connection. cursor ( )
sql_command = " " "
CREATE TABLE Item (Icode INTEGER, Item_Name VARCHAR (25), Rate Integer); " " "
cursor. execute (sql_command)
sql_command = " " "INSERT INTO Item (Icode, Item_name, Rate)
VALUES (1008, "Monitor", 15000);" " "
cursor. execute (sql_command)
connection.commit ()
connection.close ()
Print ("TABLE CREATED").
வெளியீடு:
(1008, 'Monitor', 15,000)
22.
பைத்தானில் கோப்பு முறைமைகள்:
| முறை | விளக்கம் |
| 'r' | படிப்பதற்கு மட்டுமே ஒரு கோப்பினை திறக்கவும் (தானமைவு நிலை) |
| 'w' | கோப்பில் தரவுகளை எழுதுவதற்கு திறக்கவும். குறிப்பிடப்பட்ட கோப்பு இல்லையெனில் புதிய கோப்பினை உருவாக்கும். கோப்பில் தரவுகள் இருப்பின் அவை அழிக்கப்படும். |
| 'x' | தனித்துவமான படைப்பிற்காக கோப்பினை திறக்கவும். கோப்பு முன்பே உருவாக்கப்பட்டிருந்தால் இந்த செயல் முறையானது தோல்வியடையும். |
| 'a' | கோப்பின் தரவுகளை அழிக்காமல் அதன் இறுதியில் புதிய தரவுகளை சேர்ப்பதற்கு திறக்கவும். குறிப்பிட்ட கோப்பு இல்லையெனில் புதிய கோப்பினை உருவாக்கும். |
| 't' | உரை முறைமையில் கோப்பு திறக்கவும் (தானமைவு நிலை) |
| 'b' | இருமநிலை முறைமையில் கோப்பினை திறக்கவும். |
| '+' | புதுப்பித்தலிற்காக கோப்பினை திறக்கவும்.(படித்தல் மற்றும் எழுதுதல்) |
23.
பைத்தான் பின்வரும் செயற்குறிகளை வழங்குகிறது. இச்செயற்குறிகள் சரங்களை கையாள உதவுகிறது.
(i) இணைப்பு (Concatenation +)
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சரங்களை இணைக்கும் செயல்பாடு சேர்த்தல் அல்லது இணைத்தல் எனப்படும். கூட்டல் செயற்குறி சரங்களை இணைக்கப் பயன்படுகிறது.
எடுத்துக்காட்டு:
> > > "welcome" + "Python"
'welcomePython'
(ii) சேர்த்தல் (Append+=):
ஏற்கனவே உள்ள சரத்தின் இறுதியில் மேலும் புதிய சரம் அல்லது சரங்களை சேர்க்கும் செயல் சேர்த்தல் எனப்படும்.
+= செயற்குறி ஏற்கனவே உள்ள சரத்தின் இறுதியில் புதிய சரத்தினை சேர்க்க பயன்படுகிறது.
எடுத்துக்காட்டு:
> > > str1="Welcome to "
> > > str1 +="Learn Python"
> > > print (str1)
Welcome to Learn Python
பலமுறை (Repeating (*)) :
பெருக்கல் செயற்குறி கொடுக்கப்பட்ட சரத்தினை பல தடவைகள் வெளிப்படுத்த பயன்படுகிறது.
> > > str1="Welcome"
> > > print (str1*4)
Welcome Welcome Welcome Welcome
24.
for a in range (100, 1000):
if a %2==1:
print a
வெளியீடு:
101, 103, 105, 107 ... ... 997, 999
25.
தரவு அருவமாக்கினை செயல்படுத்த, ஆக்கிகள் (Constructor) மற்றும் செலக்டர் (Selectors) என்ற இரண்டு செயற்கூறுகள் உருவாக்கப்பட வேண்டும்.
ஆக்கிகள் மற்றும் செலக்டர்கள் (constructors and selectors):
(i) ஆக்கி செயற்கூறுகள் அருவமாக்கம் தரவு வகையை கட்டமைக்க பயன்படுகிறது. செலக்டர் செயற்கூறுகள் தகவல்களை தரவு வகையிலிருந்து பெறுவதற்கு பயன்படுகிறது.
(ii) எடுத்துக்காட்டாக, city என்று ஒரு அருவமாக்க தரவு வகை உள்ளது என வைத்துக்கொள். City என்ற பொருள் நகரத்தின் பெயர், அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை பற்றிய தகவல்களை சேமித்திருக்கும் city என்ற பொருளை உருவாக்க பின்வரும் செயற்கூற்றினை பயன்படுத்தலாம்.
city := makecity (name, lat, lon)
(iii) city பொருளின் தகவல்களை பெறுவதற்கு பின்வரும் செயற்கூறுகளை பயன்படுத்தலாம்.
1. getname(city)
2. getlat(city)
3. getlon(city)
(iv) பின்வரும் போலி குறிமுறை இரு நகரங்களுக்கு இடையேயான தொலைதூரத்தை கணக்கிடும்.
distance(city1, city2):
lt1, lg1 := getlat(city1), getlon(city1)
lt2, 1g2:= getlat (city2), getlon (city2)
return ((lt1 - lt2)**2 + (lg1 - lg2)**2))1/2
(v) மேலே காணும் குறிமுறையில், distance(), getlat() மற்றும் getlon() ஆகியவை செயற்கூறுகள் ஆகும். It என்பது அட்ச ரேகை மற்றும் lg என்பது தீர்க்கரேகையும் குறிக்கிறது. longitude. := என்பதை "assigned as" அல்லது "becomes" என்று வாசிக்க வேண்டும்.
It 1, lg1 := getlat(city1), getlon(city1)
(vi) இதனை It1 என்பது getlat(city1)ன் மதிப்பாகிறது மற்றும் lg1 என்பது getlon(city1) ன் மதிப்பாகிறது. என்று வாசிக்க வேண்டும்.
(vii) இந்த செயற்கூறுகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. இதை வேறு ஒருவர் நமக்காக வரையறுத்துள்ளார் என்று கருதிக் கொள்ள வேண்டும். பயனர் செயற்கூறுகள் எப்படி செயல்படுத்தப்படுகின்றது என்று தெரிந்து வைத்திருக்க வேண்டியதில்லை எனினும் வேறு ஒருவரால் இச்செயற்கூறுகள் வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும்.
(viii) மேலே காணும் குறிமுறையில், ஆக்கி மற்றும் செலக்டர்களை அடையாளம் காண்போம். ஆக்கி செயற்கூறுகள் அருவமாக்க தரவு வகையை கட்டமைக்கப் பயன்படுகிறது என்பதை நாம் அறிவோம். மேலே காணும் போலிக் குறிமுறையில், cityயின் பொருளை உருவாக்கும் செயற்கூறு, ஆக்கி ஆகும்.
city := makecity(name, lat, lon) இங்கு makecity(name, lat, lon) என்ற ஆக்கி city எனும் பொருளை உருவாக்குகிறது.

(ix) செலக்டர் செயற்கூறுகள் தகவல்களை தரவு வகையிலிருந்து பெறுவதற்கு பயன்படுகிறது. மேலே காணும் குறிமுறையில்,
getname(city)
getlat(city)
getlon(city) என்பவை city எனும் பொருளிலிருந்து தகவல்களை பெற்றுத் தரும் செலக்டர் செயற்கூறுகளாகும்.
26.
வரி வரைப்படம் அல்லது வரி விளக்கப்படம் என்பது தகவல்களை, "குறிப்பான்கள்" (Marker) என்று அழைக்கப்படும் தரவு புள்ளிகளின் தொடரை நேர் கோட்டின் இணைப்பதன் மூலம் காட்டுகிறது. வரி வரைபடம் தரவுகளின் மாற்றத்தை குறிப்பிட்ட காலத்தில் நிகழக்கூடியதை காட்டும். எனவே, கால வரிசைப்படி இக்கோடுகள் அமைக்கப்படும்.
27.
அளபுருக்கள் என்பது செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் வரையறைக்கு அனுப்பப்படும் மதிப்புகள் ஆகும்.
28.
(i) Constructor ( - - Init - - ( ) )
(ii) Destructor ( - - del - - ( ) )
29.
30.
கோப்பினை திறக்கும் open கட்டளையில் கோப்பின் பெயர் அல்லது கோப்பின் முழுமையான பாதையானது இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் அல்லது ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் கொடுக்கப்படல் வேண்டும்.
31.
Connect ( ) வழிமுறையைப் பயன்படுத்தி இணைப்பை உருவாக்கி தரவுத்தளத்தின் பெயரை இணைக்கவும்.
எடுத்துக்காட்டு:
#connecting to the database
connection = sqlite3.connect("Academy.db")
#cursor
cursor = connection.cursor ( )
32.
கூறுநிலை நிரலாக்கம் என்பது குறிமுறையை சிறுசிறு பகுதிகளாக பிரிப்பதற்கான மென்பொருள் வடிவமைப்பு நுட்பமாகும். இந்த பகுதிகள் கூறுநிலைகள் என்றழைக்கப்படுகின்றன.
பயன் :
(i) கூறுநிலை, குறிமுறையின் மறுபயனாக்கத்தை வழங்குகிறது.
(ii) வெவ்வேறு நிரல்களில், நாம் மிகுதியாக பயன்படுத்தும் செயற்கூறு வரையறைகளை நகலெடுப்பதற்கு பதிலாக, அவற்றை ஒரு கூறுநிலையில் வரையறுத்து, தருவித்துக் கொள்ளலாம்.
33.
பைத்தானில் உள்ள பல்வேறு செயற்குறிகள்:
(i) கணித செயற்குறிகள்
(ii) உறவுநிலை அல்லது ஒப்பீடு செயற்குறிகள்
(iii) தருக்க செயற்குறிகள்
(iv) மதிப்பிருத்தல் செயற்குறிகள்
(v) நிபந்தனை செயற்குறிகள்
34.
மாறியின் பெயரை ஒரு பொருளுடன் பிணைக்கும் செயல்முறையே மேப்பிங் (Mapping) எனப்படும். : = (சமக்குறி) என்ற குறியீடு செயல்குறி நிரலாக்க மொழியில் மாறி மற்றும் பொருளை பிணைக்கிறது.
35.
let rec gcd a b :=
if b < > 0 then ged b (a mod b) else return
a;;
வெளியீடு:
ged 13 27;;
- : int = 1
ged 20536 7826;;
- : int = 2
36.
(i) ஒரு கூறுநிலைக்குள் மற்றொரு கூறுநிலையின் வரையறைகளைத் தருவித்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்வதற்கு நாம் 'import''என்ற சிறப்பு சொல்லைப் பயன்படுத்த முடியும்.
(ii) நாம் முன்னதாக வரையறுத்து factorial என்ற கூறுநிலையைத் தருவித்துக் கொள்ள பைத்தான் தூண்டுகுறியில் கீழ்கண்டவாறு தட்டச்சு செய்யவும்.
>>> import factorial
(iii) கூறுநிலைக்குள், வரையறுக்கப்பட்ட செயற்கூறுகளை, கூறுநிலையின் பெயரைப் பயன்படுத்தி அணுக முடியும்.
(iv) செயற்கூறுகளை அணுக புள்ளிச் செயற்குறி பயன்படுத்தப்படுகிறது கூறுநிலையிலிருந்து செயற்கூறுகளை அணுகுவதற்கான தொடரியல்
.< module name > . < function name >
37.
(i) உள்ளமை வரையெல்லை நடப்பு செயற்கூறில் வரையறுக்கப்பட்ட மாறிகளைக் குறிக்கும்
(ii) நிரலின் அனைத்து செயற்கூறுகளுக்கும் வெளியே அறிவிக்கப்பட்ட மாறிகள் முழுதளாவிய மாறிகள் எனப்படும்
(iii) ஒரு செயற்கூறின் உள்ளே மற்றொரு செயற்கூறு அடைக்கப்பட்டிருந்தால் அது பின்னலான செயற்கூறு எனப்படும்
(iv) மற்றொரு செயற்கூறு வரையறையை, தன்னுள் கொண்ட ஒரு வெளி செயற்கூறினுள் ஒரு மாறி அறிவிக்கப்பட்டால் உள்செயற்கூறானது, வெளி செயற்கூறினுள் உள்ள மாறிகளை அணுக முடியும். இதுவே, இணைக்கப்பட்ட வரையெல்லை (Enclosed Scope) எனப்படும்
38.
csv.reader
( ) செயற்கூறின் தொடரியல்
csv.reader(fileobject, delimiter, fmtparams)
இங்கு,
(i) file object : கோப்பின் பாதையையும் முறைமையையும் திருப்பி அனுப்பும்.
(ii) delimiter : இது விருப்பத்தேர்வு அளபுருவாகும், இது செந்தர வரம்புக் குறிகளை கொண்டிருக்கும். (',) போன்றவை மற்றவைகள் தவிர்க்கப்படும்.
(iii) csv.reader ( ) : கொடாநிலை மதிப்புகளை மேற்பதிப்பு செய்ய/நீக்க பயன்படும் விருப்பத் தேர்வு அளபுருவாகும்.
39.

40.
DBMS பயனர்களின் வகைகள்:
(i) தரவுத்தள நிர்வாகிகள் (DBA- Data Base Administrator) : தரவுத்தள நிர்வாகி அல்லது DBA என்பவர் முழு தரவுத்தள மேலாண்மை அமைப்பையும் நிர்வகிப்பவர் ஆவார். இவர் DBMS பாதுகாப்பு, உரிமங்களை நிர்வகித்தல், பயனர் கணக்குகள் மற்றும் அணுகல்களை நிர்வகித்தல் போன்றவற்றை கவனித்துக் கொள்கிறார்.
(ii) பயன்பாட்டு நிரலர்கள் அல்லது மென்பொருள் உருவாக்குபவர்கள்: இந்த பயனர்கள் DBMS ன் பகுதிகளை உருவாக்குதல் மற்றும் வடிவமைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.
(iii) இறுதி நிலைப்பயனர் : அனைத்து நவீன பயன்பாடுகளிலும், வலை அல்லது கைபேசி, பயனர் தரவுகளைச் சேமிக்கிறது. பயனர் தரவுகள் (User data) சேகரிக்கப்பட்டு சேவையகத்தில் இயங்குகின்ற DBMS அமைப்பில் சேமிக்கப்படும் வகையில் பயன்பாடுகள் நிரலாக்கப்பட்டுள்ளன. இந்த பயனர்கள் தரவை சேமித்தல், திரும்ப பெறுதல், புதுப்பித்தல் மற்றும் நீக்குதல் போன்ற பல்வேறு செயல்களை கையாள்கிறார்கள்.
(iv) தரவுத்தள வடிவமைப்பாளர்கள்: இவர்கள் தரவுத்தளத்தில் சேமிக்கப்படுகின்ற தரவுகளை கண்டறிந்து சரியான கட்டமைப்பை தேர்வு செய்து தரவை குறிப்பிடுவதற்கும் சேமிப்பதற்குமான பொறுப்பாளர்கள் ஆவர்.
41.
பைத்தான் Dictionary, del சிறப்புச் சொல் ஒரு குறிப்பிட்ட உறுப்பை நீக்குவதற்கு பயன்படுகிறது. clear ( ) செயற்கூறு Dictionary-ன் அனைத்து உறுப்புகளையும் நீக்குவதற்கு பயன்படுகிறது.
எடுத்துக்காட்டு :
Dict = ={'Roll No' : 12001, 'SName': 'Meena', 'Mark1': 98,'Mark2' : 86}
print("Dictionary elements before deletion: \n", Dict)
del Dict['Mark1'] # குறிப்பிட்ட உறுப்பை நீக்குதல்
print("Dictionary elements after deletion of a element: \n", Dict)
Dict.clear() # அனைத்து உறுப்புகளையும் நீக்குதல்
print("Dictionary after deletion of all elements: \n", Dict)
del Dict
print (Dict) # முழு Dictionary ஐ நீக்குதல்
42.
செயற்கூறினை வரையறுக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவை:
(i) செயற்கூறு தொகுதி def என்ற சிறப்புச் சொல்லுடன் தொடங்கி செயற்கூறின் பெயர் மற்றும் () அடைப்புக்குறியுடன் முடிய வேண்டும்.
(ii) ஏதேனும் உள்ளீட்டு அளபுருக்கள் இருப்பின் அவற்றை செயற்கூற்றை வரையறுக்கும் போதே () என்ற அடைப்புக்குறிக்குள் கொடுக்க வேண்டும்.
(iii) குறிமுறை தொகுதியானது எப்பொழுதும் முக்காற்புள்ளிக்கு பிறகு உள்தள்ளி வர வேண்டும்.
(iv) "return (கோவை]" கூற்று செயற்கூறை முடித்து வைக்கும். விருப்பப்பட்டால் கோவையின் மதிப்பை, அழைக்கும் கூற்றுக்கு திருப்பி அனுப்பும். செயலுருபுகள் இல்லாத return, return None-க்கு நிகரானது.
43.
Asymptotic குறியீடுகள் நேரம் மற்றும் இடச்சிக்கல்களைப் பற்றிய அர்த்தமுள்ள கூற்றுகளைப் பயன்படுத்தும் ஒரு மொழியாகும். பின்வரும் மூன்று Asymptotic குறியீடுகள் நெறிமுறையில் நேரச் சிக்கலைக் குறிக்க மிகவும் பயன்படுகிறது.
(i) Big O : நெறிமுறையின் மிக மோசமான நிலையை விவரிக்க Big O பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
(ii) Big \(\Omega\): Big Omega, Big O-வின் தலைகீழ் ஆகும். Big O-asymptotic (மோசமான நிலையில்) செயற்கூறின் உச்ச வரம்பையும், Big Omega அதன் கீழ்வரையை குறிக்கும் (சிறந்த நிலையில்).
(iii) Big : \(Θ\) = நெறிமுறையானது கீழ் எல்லை = மேல் எல்லை என்னும் சிக்கலைக் கொண்டிருந்தால், உதாரணத்திற்கு O (n log n) மற்றும் \(\Omega\)(n log n), ஆகிய சிக்கல்களைக் கொண்டுள்ளது என வைத்துக் கொள்வோம். உண்மையில் அதனுடைய சிக்கல் \(Θ\) (n log n), என்பது ஆகும். இதனுடைய அர்த்தம் என்னவென்றால் நெறிமுறையின் இயங்கு நேரம் மிகச் சிறந்த நிலை மற்றும் மிக மோசமான நிலை ஆகிய இரண்டு நிலையிலுமே எப்பொழுதும் n log n ஆக இருக்கும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards