12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
பைத்தான் செயற்கூறுகள்
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
இரண்டு எண்களின் HCF கண்டுபிடிப்பதற்கான பைத்தான் நிரலை எழுதுக.
2.
பைத்தானில் பயன்படுத்தப்படும் செயலுருபுகளை பற்றி விளக்கமாக எழுதுக.
3.
இரண்டு எண்களின் LCM கண்டுபிடிப்பதற்கான பைத்தான் நிரலை எழுதுக.
4.
பின்வரும் உள்ளிணைந்த செயற்கூறுகளை விளக்குக.
(a) id( )
(b) chr( )
(c) round( )
(d) type( )
(e) pow( )
5.
pow (5,2) என்ற செயற்கூறுக்கு நிகரான கூற்று எது?
5*2
5**2
2**5
2*5
6.
print (bin (5)) என்ற கூற்றின் வெளியீடு
5
101
0b101
1010b
7.
print (ord ('A')) என்ற கூற்றின் வெளியீடு
65
A
a
97
8.
பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
c=1
def add ( ):
c=c+3
print (c)
add ( )
1t
4
3
பிழை
9.
செயலுருபுகள் எத்தனை வகைப்படும்?
3
4
5
2
10.
format ( ) செயற்கூறினை பற்றி குறிப்பு வரைக.
11.
உள்ளமை வரையெல்லை என்றால் என்ன?
12.
பெயரில்லா செயற்கூறின் பொது வடிவத்தை எழுதுக.
13.
லாம்டா செயற்கூறின் பயன்கள் யாவை?
14.
கீழ்க்காணும் நிரலின் வெளியீட்டை எழுதுக.
def display (a, b) :
return a ** b
print (display (2, 5) )
15.
குறிப்பு வரைக.
1) min ( )
2) max ( )
3) sum ( )
16.
return கூற்று -குறிப்பு வரைக.
17.
அளபுருக்களின் பெயரை அடையாளம் கண்ட பின்பு செயற்கூறினை அழைக்கும் செயலுருபுகள் யாவை? எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.
18.
தேவைப்படும் செயலுருபுகள் பற்றி குறிப்பு வரைக.
19.
செயற்கூறில் வரையறுத்த குறிப்பிட்ட செயலினை செய்ய என்ன செய்ய வேண்டும்? விளக்குக.
1.
# python program to find HCF
def HCF (x, y):
if (x >y):
s=y
else:
s=x
for i in range (1, s + 1):
if ((x % i == 0) and (y % i == 0)):
hcf= i
return hcf
x = int (input ("Enter Number 1"))
y= int (input ("Enter Number 2"))
print (HCF (x, y))
2.
தேவைப்படும் செயலுருபுகள்:
1) செயலுருபுகளை சரியான இடவரிசையில் செயற்கூற்றுக்கு அனுப்புவதே தேவைப்படும் செயலுருப்புகள் எனப்படும்.
2) இங்கு, செயற்கூறு அழைப்புக் கூற்றில் உள்ள செயலுருபுகளின் எண்ணிக்கை, செயற்கூறு வரையறையோடு சரியாக பொருந்த வேண்டும்.
3) தொடரியல் பிழையை தவிர்த்து, தேவையான வெளியீட்டை பெறுவதற்கு குறைந்தது ஒரு செயலுருபாவது தேவை.
எடுத்துக்காட்டு:
def printstring( str):
print ("Example - Required arguments ")
print (str)
return
# Now you can call printstring() function
printstring("Welcome")
வெளியீடு:
Example - Required arguments
Welcome
சிறப்புச் சொல் செயலுருபுகள்:
1) அளபுருக்க்களின் பெயரை அடையாளம் கண்டபின்பு சிறப்புச் சொல் செயலுருபானது செயற்கூறினை அழைக்கிறது.
2) சிறப்புச் சொல் செயலுருபின் மதிப்பு அளபுரு பெயருடன் பொருந்த வேண்டும். எனவே, முறையற்ற வரிசையிலும் செயலுருபுகளைக் கொடுக்கலாம்.
எடுத்துக்காட்டு:
def printdata (name):
print ("Example-1 Keyword arguments")
print ("Name :",name)
return
# Now you can call printdata() function
printdata(name = "Gshan")
வெளியீடு:
Example-1 Keyword arguments
Name :Gshan.
தானமைவு செயலுருபுகள்:
1) பைத்தானில், செயற்கூறை அழைக்கும் போது எந்த மதிப்பும் கொடுக்கப்படவில்லை எனில், செயலுருபானது தானாகவே மதிப்பை எடுத்துக் கொள்ளும். இதுவே தானமைவு செயலுருபு ஆகும்.
2) பின்வரும் எடுத்துக்காட்டில் செயலுருபுவை அனுப்பாதபோது தானமைவு Salary -யை அச்சிடுவதைக் காணலாம்.
எடுத்துக்காட்டு:
def printinfo( name, salary = 3500):
print ("Name:", name)
print ("Salary:", salary)
return
printinfo("Mani ")
வெளியீடு:
Name: Mani
Salary: 3500
மாறும் நீள செயலுருபுகள்:
1) சில சமயங்களில், ஏற்கனவே குறிப்பிடப்பட்ட செயலுருபுகளை விட அதிகமான செயலுருபுகளை அனுப்ப வேண்டிய தேவை இருக்கும்.
2) மீண்டும் செயற்கூறினை மறுவரையறை செய்வது கடினமான செயல் அதற்கு பதிலாக மாறும் நீள செயலுருபுகளை பயன்படுத்தலாம்.
3) செயற்கூறு வரையறையில் இது குறிப்பிடப்படுவதில்லை. மாறாக இந்த செயலுருபுகளை குறிப்பிடுவதற்கு * குறியீடு பயன்படுகிறது.
மாறும் நீள செயலுருபின் பொதுவடிவம்:
def function_name(*args):
function_body
return statement
எடுத்துக்காட்டு:
def printnos (*nos):
for n in nos:
print (n)
return
# now invoking the printnos() function
print ('Printing two values')
printnos (1,2)
print ('Printing three values')
printnos (10,20,30)
வெளியீடு:
Printing two values
1
2
Printing three values
10
20
30
3.
def lcm(x, y):
if x>y:
greater = x
else:
greater = y
while (True):
if ((greater % x == 0) and (greater % y == 0)):
lcm = greater
break
greater += 1
return lcm
a = int (input ("Enter first number :"))
b = int (input ("Enter second number :"))
print ("The LCM of", a, "and", b, "is", lcm(a,b)).
வெளியீடு :
Enter the first number: 15
Enter the second number: 20
LCM is : 60
4.
| செயற்கூறு | விளக்கம் | பொது வடிவம் | எடுத்துக்காட்டு | |
| a) | id( ) | கொடுக்கப்பட்ட பொருளின் நினைவக முகவரியைத் திருப்பி அனுப்பும். குறிப்பு:x,y நினைவக முகவரி ஒவ்வொரு கணிப்பொறிக்கும் வேறுபடும். |
id( object) | x=15 y='a' print ('address of x is :',id (x)) print ('address of y is :',id (y)) வெளியீடு address of x is : 1357486752 address of y is: 13480736 |
| b) | chr ( ) | கொடுக்கப்பட்ட ASCII மதிப்பிற்கு யுனிக்கோடு எழுத்தை திருப்பி அனுப்பும், இது ord( ) செயற்கூறின் தலைகீழாகும். | chr (i) | c=65 d=43 print (chr (c)) print(chr(d)) வெளியீடு A + |
| c) | round ( ) | கொடுக்கப்பட்ட எண்ணின் முழு எண்ணாக மாற்றி திருப்பி அனுப்பும். 1. முதல் செயலுருபு கொடுக்கப்பட்ட எண்ணைக் குறிக்கும் 2. இரண்டாவது செயலுருபு முழு எண்ணிற்கு பிறகு தசம புள்ளிகளின் எண்ணிக்கையைக் குறிக்கும். |
round (number [,ndigits]) | x= 17.9 y= 22.2 z= -18.3 print ('x value is rounded to', round (x)) print ('y value is rounded to', round (y)) print ('z value is rounded to', round (z)) வெளியீடு : 1 x value is rounded to 18 y value is rounded to 22 z value is rounded to -18 n1=17.89 print (round (n1,0)) print (round (n1,1)) print (round (n1,2)) வெளியீடு:2 18.0 17.9 17.89 |
| d) | type ( ) | கொடுக்கப்பட்ட பொருளின் தரவின் வகையைத் திருப்பி அனுப்பும். குறிப்பு: ஒரு அளபுரு பொருளுடன் இது பயன்படுத்தப்படுகிறது. |
type (object) | x= 15.2 y='a' s= True print (type (x)) print (type (y)) print (type (s)) வெளியீடு |
| e) | pow ( ) | கொடுக்கப்பட்ட எண்ணின் a - ன் அடுக்கு b - ன் மதிப்பை அதாவது (a**b) திருப்பி அனுப்பும். | pow (a,b) | a=5 b=2 c=3.0 print (pow (a,b)) print (pow (a,c)) print (pow (a+b,3)) வெளியீடு: 25 125.0 343 |
5.
(b)
5**2
6.
(c)
0b101
7.
(a)
65
8.
(d)
பிழை
9.
(b)
4
10.
| செயற்கூறு | விளக்கம் | பொது வடிவம் | எடுத்துக்காட்டு |
| format( ) | கொடுக்கப்பட்ட எண்ணை வேறு எண்முறைக்கு மாற்றி திருப்பி அனுப்புகிறது. 1. இருமநிலை வடிவம். வெளியீட்டை இருமநிலை வடிவில் கொடுக்கும் 2. 2. எண்முறை வடிவம் வெளியீட்டை எண்முறை வடிவில் கொடுக்கும் 8. 3. நிலையான புள்ளி வடிவம். வெளியீட்டை நிலையான புள்ளி எண் வடிவில் கொடுக்கும் தானமைவு தசம துல்லியம் 6 ஆகும். |
format (value [,format_spec]) | x= 14 y=25 print ('x value in binary :',format(x,'b')) print ('y value in octal :',format(y,'o')) print('y value in Fixed-point no ',format(y, 'f') வெளியீடு x value in binary : 1110 y value in octal : 31 y value in Fixed-point no : 25.000000 |
11.
ஒரு செயற்கூறின் உடற்பகுதியின் உள்ளே அல்லது உள்ளமை வரையெல்லையில் மாறியை அறிவிப்பது உள்ளமை மாறி எனப்படும்.
12.
lambda [argument(s)] : expression
13.
லாம்டா அல்லது பெயரில்லா செயற்கூறின் பயன்கள்:
1) லாம்டா செயற்கூறு பெரும்பாலும் சிறிய மற்றும் ஒரு முறை பெயரில்லாத செயற்கூறை உருவாக்க பயன்படுகிறது.
2) filter ( ), map ( ) மற்றும் reduce ( ) போன்ற செயற்கூறுகளுடன் சேர்த்து லாம்டா செயற்கூறுகளை பயன்படுத்தலாம்.
14.
வெளியீடு:
32
15.
| செயற்கூறு | விளக்கம் | பொது வடிவம் | எடுத்துக்காட்டு | |
| 1 | min ( ) | கொடுக்கப்பட்ட பட்டியலில் இருந்து மிகச்சிறிய மதிப்பைத் திருப்பி அனுப்பும் |
min (list) | MyList=[21,76,98,23] print ('Minimum of MyList :', min(MyList)) வெளியீடு Minimum of MyList : 21 |
| 2 | max ( ) | கொடுக்கப்பட்ட பட்டியலில் இருந்து மிகப்பெரிய மதிப்பைத் திருப்பி அனுப்பும் |
max (list) | MyList = [21,76,98,23] print ('Maximum of My List :', max(MyList)) வெளியீடு Maximum of MyList : 98 |
| 3 | sum ( ) | கொடுக்கப்பட்ட பட்டியலில் உள்ள மதிப்புகளின் கூட்டுத் தொகையை திருப்பி அனுப்பும் |
sum (list) | MyList = [21,76,98,23] print ('Sum of MyList :', sum(MyList)) வெளியீடு Sum of My List : 218 |
16.
1. return கூற்று செயற்கூறினை முடித்து வைத்து அழைப்புக் கூற்றுக்கு மதிப்பை திருப்பி அனுப்பும். பொதுவான செயற்கூறின் நோக்கம் உள்ளீடைப் பெற்று ஏதேனும் ஒரு மதிப்பை திருப்பி அனுப்புவதாகும்.
2. ஒரு செயற்கூறு மதிப்பை அழைப்புக்கூற்றுக்கு திருப்பி அனுப்ப தயாராக இருக்கும் போது return கூற்று பயன்படுத்தப்படுகிறது. எனவே, இயக்க நேரத்தில் பல return கூற்றுகள் இருந்தாலும் ஒரே ஒரு return கூற்று மட்டுமே இயக்கப்படும்.
3. செயற்கூறில் ஒன்றுக்கு மேற்பட்ட return கூற்றுகள் இருந்தாலும் ஒரே ஒரு return மட்டுமே இயக்க நேரத்தில் இயக்கப்படும்.
17.
1) அளபுருக்களின் பெயரை அடையாளம் கண்ட பின்பு சிறப்புச் சொல் செயலுருபானது செயற்கூறினை அழைக்கிறது.
2) சிறப்புச் சொல் செயலுருபின் மதிப்பு அளபுரு பெயருடன் பொருந்த வேண்டும். எனவே, முறையற்ற வரிசையிலும் செயலுருபுகளைக் கொடுக்கலாம்.
எடுத்துக்காட்டு:
defprintdata (name):
print ("Example-1 Keyword arguments")
print ('Name :",name)
return
# Now you can call printdatat) function
printdata(name = "Gshan")
வெளியீடு:
Example-1 Keyword arguments
Name :Gshan
18.
1. செயலுருபுகளை சரியான இடவரிசையில் செயற்கூற்றுக்கு அனுப்புவதே தேவைப்படும். செயலுருபுக்கள் எனப்படும்.
2. இங்கு, செயற்கூறு அழைப்புக் கூற்றில் உள்ள செயலுருபுகளின் எண்ணிக்கை, செயற்கூறு வரையறையோடு சரியாக பொருந்த வேண்டும்.
3. தொடரியல் பிழையை தவிர்த்து தேவையான வெளியீட்டை பெறுவதற்கு குறைந்தது ஒரு செயலுருபாவது தேவை.
எடுத்துக்காட்டு:
def printstring( str):
print ("Example - Required arguments ")
print (str)
return
# Now you can call printstring( ) function
printstring("Welcome")
19.
1) செயற்கூறில் வரையறுத்த குறிப்பிட்ட செயலினை செய்ய விரும்பினால் அதற்கு பொருத்தமான செயற்கூறின் பெயரை கொண்டு அழைக்க வேண்டும்.
2) நிரலில், ஒரே செயலை பல தடவை மீண்டும் மீண்டும் செய்ய நேரிட்டால் அதற்கான குறிமுறையை மீண்டும் எழுதத் தேவையில்லை.
3) அதற்கான செயற்கூறுவை அழைத்தால் மட்டும் போதும், அந்த அழைப்பு பைத்தானின் செயற்கூற்றின் உள்ளேயுள்ள குறிமுறையை இயக்க செய்யும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards