12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 17/10/2019
பைத்தான் செயற்கூறுகள்
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
மாறும் நீள செயலுருப்பு எப்போது பயன்படுத்துவாய்? ஏன்? விளக்குக.
2.
அளபுருக்களின் பெயரை அடையாளம் கண்ட பின்பு செயற்கூறினை அழைக்கும் செயலுருபுகள் யாவை? எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.
3.
தேவைப்படும் செயலுருபுகள் பற்றி குறிப்பு வரைக.
4.
செயற்கூறினை வரையறுக்கும் போது குறிப்பிடப்பட வேண்டிய குறிப்புகள் யாவை?
5.
தற்சுழற்சி செயற்கூறு எவ்வாறு செயல்படுகிறது?
6.
இரண்டு எண்களின் HCF கண்டுபிடிப்பதற்கான பைத்தான் நிரலை எழுதுக.
7.
பைத்தானில் பயன்படுத்தப்படும் செயலுருபுகளை பற்றி விளக்கமாக எழுதுக.
8.
9.
இரண்டு எண்களின் LCM கண்டுபிடிப்பதற்கான பைத்தான் நிரலை எழுதுக.
10.
மாறியின் வரையெல்லைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
1.
1) சில சமயங்களில், ஏற்கனவே குறிப்பிடப்பட்ட செயலுருபுகளை விட அதிகமான செயலுருபுகளை அனுப்ப வேண்டிய தேவை இருக்கும்.
2) மீண்டும் செயற்கூறினை மறு வரையறை செய்வது கடினமான செயல் அதற்கு பதிலாக மாறும் நீள செயலுருபுகளை பயன்படுத்தலாம்.
3) செயற்கூறு வரையறையில் இது குறிப்பிடபடுவதில்லை. மாறாக இந்த செயலுருபுகளை குறிப்பிடுவதற்கு * குறியீடு பயன்படுகிறது.
மாறும் நீள செயலுருபின் பொதுவடிவம்:
def function _name(* args):
function_body
return' statement
எடுத்துக்காட்டு:
def printnos (*nos):
for n in nos:
print (n)
return
# now invoking the printnost) function
print (,Printing two values')
printnos (1,2)
print ('Printing three values')
printnos (10,20,30)
வெளியீடு
Printing two values
1
2
Printing three values
10
20
30
2.
1) அளபுருக்களின் பெயரை அடையாளம் கண்ட பின்பு சிறப்புச் சொல் செயலுருபானது செயற்கூறினை அழைக்கிறது.
2) சிறப்புச் சொல் செயலுருபின் மதிப்பு அளபுரு பெயருடன் பொருந்த வேண்டும். எனவே, முறையற்ற வரிசையிலும் செயலுருபுகளைக் கொடுக்கலாம்.
எடுத்துக்காட்டு:
defprintdata (name):
print ("Example-1 Keyword arguments")
print ('Name :",name)
return
# Now you can call printdatat) function
printdata(name = "Gshan")
வெளியீடு:
Example-1 Keyword arguments
Name :Gshan
3.
1. செயலுருபுகளை சரியான இடவரிசையில் செயற்கூற்றுக்கு அனுப்புவதே தேவைப்படும். செயலுருபுக்கள் எனப்படும்.
2. இங்கு, செயற்கூறு அழைப்புக் கூற்றில் உள்ள செயலுருபுகளின் எண்ணிக்கை, செயற்கூறு வரையறையோடு சரியாக பொருந்த வேண்டும்.
3. தொடரியல் பிழையை தவிர்த்து தேவையான வெளியீட்டை பெறுவதற்கு குறைந்தது ஒரு செயலுருபாவது தேவை.
எடுத்துக்காட்டு:
def printstring( str):
print ("Example - Required arguments ")
print (str)
return
# Now you can call printstring( ) function
printstring("Welcome")
4.
செயற்கூறினை வரையறுக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவை:
(i) செயற்கூறு தொகுதி def என்ற சிறப்புச் சொல்லுடன் தொடங்கி செயற்கூறின் பெயர் மற்றும் () அடைப்புக்குறியுடன் முடிய வேண்டும்.
(ii) ஏதேனும் உள்ளீட்டு அளபுருக்கள் இருப்பின் அவற்றை செயற்கூற்றை வரையறுக்கும் போதே () என்ற அடைப்புக்குறிக்குள் கொடுக்க வேண்டும்.
(iii) குறிமுறை தொகுதியானது எப்பொழுதும் முக்காற்புள்ளிக்கு பிறகு உள்தள்ளி வர வேண்டும்.
(iv) "return (கோவை]" கூற்று செயற்கூறை முடித்து வைக்கும். விருப்பப்பட்டால் கோவையின் மதிப்பை, அழைக்கும் கூற்றுக்கு திருப்பி அனுப்பும். செயலுருபுகள் இல்லாத return, return None-க்கு நிகரானது.
5.
1) தற்சுழற்சி செயற்கூறு வெளிப்புற குறிமுறையிலிருந்து அழைக்கப்படும்.
2) அடிப்படை நிபந்தனை நிறைவேற்றப்பட்டால் நிரலானது ஏற்ற வெளியீடு கொடுத்து வெளியேறும்.
3) இல்லையெனில், செயற்கூறு தேவையான செயற்பாட்டை இயக்கும் மேலும் தற்சுழற்சி முறையில் தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும்.
6.
# python program to find HCF
def HCF (x, y):
if (x >y):
s=y
else:
s=x
for i in range (1, s + 1):
if ((x % i == 0) and (y % i == 0)):
hcf= i
return hcf
x = int (input ("Enter Number 1"))
y= int (input ("Enter Number 2"))
print (HCF (x, y))
7.
தேவைப்படும் செயலுருபுகள்:
1) செயலுருபுகளை சரியான இடவரிசையில் செயற்கூற்றுக்கு அனுப்புவதே தேவைப்படும் செயலுருப்புகள் எனப்படும்.
2) இங்கு, செயற்கூறு அழைப்புக் கூற்றில் உள்ள செயலுருபுகளின் எண்ணிக்கை, செயற்கூறு வரையறையோடு சரியாக பொருந்த வேண்டும்.
3) தொடரியல் பிழையை தவிர்த்து, தேவையான வெளியீட்டை பெறுவதற்கு குறைந்தது ஒரு செயலுருபாவது தேவை.
எடுத்துக்காட்டு:
def printstring( str):
print ("Example - Required arguments ")
print (str)
return
# Now you can call printstring() function
printstring("Welcome")
வெளியீடு:
Example - Required arguments
Welcome
சிறப்புச் சொல் செயலுருபுகள்:
1) அளபுருக்க்களின் பெயரை அடையாளம் கண்டபின்பு சிறப்புச் சொல் செயலுருபானது செயற்கூறினை அழைக்கிறது.
2) சிறப்புச் சொல் செயலுருபின் மதிப்பு அளபுரு பெயருடன் பொருந்த வேண்டும். எனவே, முறையற்ற வரிசையிலும் செயலுருபுகளைக் கொடுக்கலாம்.
எடுத்துக்காட்டு:
def printdata (name):
print ("Example-1 Keyword arguments")
print ("Name :",name)
return
# Now you can call printdata() function
printdata(name = "Gshan")
வெளியீடு:
Example-1 Keyword arguments
Name :Gshan.
தானமைவு செயலுருபுகள்:
1) பைத்தானில், செயற்கூறை அழைக்கும் போது எந்த மதிப்பும் கொடுக்கப்படவில்லை எனில், செயலுருபானது தானாகவே மதிப்பை எடுத்துக் கொள்ளும். இதுவே தானமைவு செயலுருபு ஆகும்.
2) பின்வரும் எடுத்துக்காட்டில் செயலுருபுவை அனுப்பாதபோது தானமைவு Salary -யை அச்சிடுவதைக் காணலாம்.
எடுத்துக்காட்டு:
def printinfo( name, salary = 3500):
print ("Name:", name)
print ("Salary:", salary)
return
printinfo("Mani ")
வெளியீடு:
Name: Mani
Salary: 3500
மாறும் நீள செயலுருபுகள்:
1) சில சமயங்களில், ஏற்கனவே குறிப்பிடப்பட்ட செயலுருபுகளை விட அதிகமான செயலுருபுகளை அனுப்ப வேண்டிய தேவை இருக்கும்.
2) மீண்டும் செயற்கூறினை மறுவரையறை செய்வது கடினமான செயல் அதற்கு பதிலாக மாறும் நீள செயலுருபுகளை பயன்படுத்தலாம்.
3) செயற்கூறு வரையறையில் இது குறிப்பிடப்படுவதில்லை. மாறாக இந்த செயலுருபுகளை குறிப்பிடுவதற்கு * குறியீடு பயன்படுகிறது.
மாறும் நீள செயலுருபின் பொதுவடிவம்:
def function_name(*args):
function_body
return statement
எடுத்துக்காட்டு:
def printnos (*nos):
for n in nos:
print (n)
return
# now invoking the printnos() function
print ('Printing two values')
printnos (1,2)
print ('Printing three values')
printnos (10,20,30)
வெளியீடு:
Printing two values
1
2
Printing three values
10
20
30
8.
9.
def lcm(x, y):
if x>y:
greater = x
else:
greater = y
while (True):
if ((greater % x == 0) and (greater % y == 0)):
lcm = greater
break
greater += 1
return lcm
a = int (input ("Enter first number :"))
b = int (input ("Enter second number :"))
print ("The LCM of", a, "and", b, "is", lcm(a,b)).
வெளியீடு :
Enter the first number: 15
Enter the second number: 20
LCM is : 60
10.
மாறியின் வரையெல்லை என்பது நிரலின் அணுகக்கூடிய பகுதியைக் குறிப்பதாகும். அதாவது, எந்த பகுதியில் மாறியைப் பயன்படுத்துகிறோமோ அதைக் குறிக்கிறது. வரையெல்லை நடப்பு மாறித் தொகுதிகள் மற்றும் அதன் மதிப்புகளைக் கொண்டிருக்கும். மாறியின் வரையெல்லைகளை உள்ளமை வரையெல்லை மற்றும் முழுதளாவிய வரையெல்லை என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
உள்ளமை வரையெல்லை (Local Scope)
ஒரு செயற்கூறுவின் உடற்பகுதியின் உள்ளே அறிவிக்கப்படும் மாறி உள்ளமை மாறி எனப்படும்.
உள்ளமை மாறியின் விதிமுறைகள்
(i) உள்ளமை மாறியின் வரையெல்லை அது வரையறுக்கப்பட்டுள்ள தொகுதிக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
(ii) செயற்கூறினுள் மாறி உருவாக்கப்படும் போது அது உள்ளமைவாக அமையும்.
(iii) செயற்கூறு இயக்கப்படும் போது மட்டுமே உள்ளமை மாறிகள் உயிர் பெறும்.
(iv) முறையான அளபுருக்கள் அதன் செயற்கூறுக்கு உள்ளமையானது ஆகும்.
எடுத்துக்காட்டு: உள்ளமை மாறியை உருவாக்குதல்
def loc():
y=0 # local scope
print(y)
loc()
வெளியீடு :
0
முழுதளாவிய வரையெல்லை (Global Scope)
அனைத்து செயற்கூறுகளுக்கும் மேலாக அறிவிக்கப்படும் மாறி முழுதளாவிய மாறி எனப்படும். முழுதளாவிய வரையெல்லை உடைய மாறியை நிரலின் எந்த பகுதியிலும் அணுகமுடியும் முழுதளாவிய வரையெல்லை கொண்ட மாறியை ஒரு செயற்கூறினுள் அணுகுவதற்கு 'global' சிறப்புச் சொல்லானது பயன்படுகிறது.
பைத்தானின் 'Global' சிறப்புச் சொல்லின் அடிப்படை விதிகள்:
(i) செயற்கூறுக்கு வெளியே மாறியை அறிவிக்கும் போது அது தானமைவாக முழுதளாவிய வரையெல்லை ஆகும். 'global' என்ற சிறப்புச் சொல்லை பயன்படுத்த வேண்டியதில்லை.
(ii) செயற்கூறினுள் முழுதளாவிய மாறியின் மதிப்பை மாற்றியமைக்க 'global' என்ற சிறப்புச்சொல் பயன்படுத்த வேண்டும்.
(iii) செயற்கூறுவிற்கு வெளியே 'global' என்ற சிறப்புச் சொல் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.
'Global' சிறப்புச் சொல்லின் பயன்பாடு:
எடுத்துக்காட்டு : செயற்கூறுவின் உள்ளிருந்து முழுதளாவிய மாறியை அணுகுதல்
c = 1 # global variable
def add():
print(c)
add()
வெளியீடு:
1
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards