12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
வினவல் அமைப்பு மொழி
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
Primary கட்டுப்பாடு பின்வரும் எந்த கட்டுப்பாட்டை போன்றே காணப்படும்?
UNIQUE
CHECK
NOT NULL
DEFAULT
2.
தரவுத்தளத்திலுள்ள பதிவை தனித்தன்மையோடு அடையாளம் கட்ட ஒரு புலத்தினை எந்த கட்டுப்பாட்டுடன் அறிவிக்க வேண்டும்?
UNIQUE
NOT NULL
PRIMARY KEY
CHECK
3.
SQL - ல் எந்த மொழியானது தரவுத்தளத்தில் உள்ள தரவுகளை வழங்குதலுக்கும், மீட்டெடுப்பதற்கான கட்டளைகளைக் கொண்டுள்ளது?
பரிவர்த்தனைக்கான கட்டுப்பாட்டு மொழி
தரவு வினவல் மொழி
தரவு வரையறை மொழி
தரவு கையாளுதல் மொழி
4.
SQL - ல் உள்ள தரவு கையாளுதல் மொழியின் கட்டளைகளில் பின்வருவனவற்றுள் எவை அட்டவணையில் உள்ள அனைத்து பதிவுகளையும் நீக்கும், ஆனால் அவற்றிற்கு ஒதுக்கப்பட்ட நினைவக பகுதியை விடுவிக்காது?
DROP
DELETE
TRUNCATE
DROP மற்றும் DELETE
5.
பின்வருவனவற்றுள் எந்த தரவு வரையறை மொழியானது அட்டவணையில் உள்ள அனைத்து பதிவுகளையும் அழிக்கும், மேலும் அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தையும் விடுவிக்கும்?
DROP
DELETE
ALTER
TRUNCATE
6.
GROUP BY Clause ன் தொடரியலை எழுதுக
7.
அட்டவணையில் உள்ள பதிவுகளை எவ்வாறு வடிகட்டுவாய்? எ.கா தருக
8.
அட்டவணையில் உள்ள விரும்பிய தீர்வை பெறுவதற்கான select கட்டளையின் தொடரியலை எழுதுக
9.
அட்டவணையை கட்டுப்பாட்டுடன் உருவாக்கும் தொடரியலை எழுதுக
10.
அட்டவணையை உருவாக்குவதற்கான தொடரியலை எழுதுக
11.
அட்டவணையில் ஒன்றுக்கு மேற்பட்ட புலத்திற்கு எவ்வாறு Primary Key அமைக்க முடியும் என்பதை எ.கா உடன் விளக்குக
12.
எந்தக் கட்டுப்பாடு ஒரு புலத்திற்காக மதிப்பின் வரம்பை நிர்ணயிக்க உதவுகிறது?
13.
தரவு கட்டுப்பாட்டு மொழி என்றால் என்ன? அதில் உள்ள கட்டளைகள் பற்றி எழுதுக
14.
தரவு வரையறை மொழி பற்றி எழுதுக
15.
SQL என்றால் என்ன?
16.
பரிவர்த்தனை கட்டுப்பாட்டு மொழி கட்டளைகள் பற்றி விவரி.
17.
பின்வருவன பற்றி விரிவாக எழுதுக
(i) TRUNCATE கட்டளை
(ii) DROP TABLE கட்டளை
18.
ALTER கட்டளைப் பற்றி விரிவாக எழுதுக
19.
SQL ன் பல்வேறு செயலாக்க திறன்கள் பற்றி எழுதுக.
1.
(a)
UNIQUE
2.
(c)
PRIMARY KEY
3.
(b)
தரவு வினவல் மொழி
4.
(b)
DELETE
5.
(d)
TRUNCATE
6.
GROUP BY clause ன் தொடரியல்
SELECT < column-names > FROM < table-name GROUP BY < column-name > HAVING [condition];
7.
WHERE clause பதிவுகளை வடிகட்டுதலுக்கு பயன்படுகிறது. இது கொடுக்கப்பட்ட நிபந்தனையை நிறைவு செய்யும் பதிவுகளை மட்டும் பிரித்தெடுக்க உதவுகிறது. உதாரணத்திற்கு மாணவர் அட்டவணையில் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மாணவர்களின் பட்டியலை, அக்கறை வரிசைப்படுத்தி ஏறுவரிசையில் வெளியிடும் கட்டளை பின்வருமாறு:
SELECT * FROM Student WHERE Age > = 18
ORDER BY Name;
8.
SELECT கட்டளையிலுள்ள WHERE clause, விரும்பிய தீர்வை பெறுவதற்கான விதிமுறைகளை குறிப்பிடுவது. WHERE clause யுடனான SELECT கட்டளையின் பொது வடிவம்:
SELECT < column-name >
FROM < table-name >
9.
கட்டுப்பாட்டுடன் உருவாக்கப்பட்ட ஒரு அட்டவணையின் தொடரியல்
CREATE TABLE < table-name >
(< column name > < data type > [< size >] < column constraint > ,
(< column name > < data type > [< size >] < column constraint > .....
< table constraint >( < column name >, [< column name > ....]) .....
);
10.
CREATE TABLE கட்டளையின் தொடரியல்,
CREATE TABLE < table-name >
( < column name > < data type > [< size >]
( < column name >< data type > [< size >]...
);
11.
ஒரு அட்டவணையில் உள்ள புலன்களின் குழுவிற்கு கட்டுப்பாட்டைப் பயன்படுத்தினால், அதனை அட்டவணை கட்டுப்பாடு என்கிறோம். பொதுவாக, அட்டவணை வரையறுப்பின் இறுதியில் குறிப்பிடப்படும். Admno, Firstname, Lastname, Gender, Age, Place என்ற புலன்களை கொண்ட student 1 என்ற ஒரு புதிய அட்டவணையை எடுத்துக்கொள்வோம்
CREATE TABLE Student 1
(
Admno integer NOT NULL,
Firstname char(20),
Lastname char(20),
Gender char(1),
Age integer,
Place char(10),
PRIMARY KEY (Firstname, Lastname) ⟶ Table constraint
);
12.
CHECK கட்டுப்பாடு ஒரு புலத்திற்கான மதிப்பின் வரம்பை நிர்ணயிக்க உதவுகிறது. CHECK கட்டுப்பாட்டை ஒரு நெடுவரிசைக்கு வரையறுத்தால், அப்புலத்தில் வரையறுக்கப்பட்ட மதிப்புகளை மட்டுமே உள்ளிட அனுமதிக்கும்.
மாணவர் அட்டவணையில் CHECK கட்டுப்பாட்டை பயன்படுத்துதலை விளக்கும் எடுத்துக்காட்டு
CREATE TABLE Student
(
Admno integer NOT NULL PRIMARY KEY
Name char(20) NOT NULL,
Gender char(1),
Age integer (CHECK<=19), ⟶ Check
Constraint
Place char(10),
);
மேற்கண்ட எடுத்துக்காட்டில், Age என்ற புலத்தில் CHECK கட்டுப்பாட்டை பயன்படுத்தி, Age என்ற புலத்திற்கு உள்ளிடும் மதிப்பு 19க்கு குறைவாகவோ அல்லது சமமாகவோ இருக்க வேண்டும் என வரையறுக்கப்படுகிறது.
13.
ஒரு தரவு கட்டுப்பாட்டு மொழி என்பது தரவுத்தளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளின் அணுகுதலை கட்டுப்படுத்தும் ஒரு நிரலாக்க மொழியாகும். இது தரவுத்தளத்தை அணுகுவதற்கான சிறப்புரிமையை கட்டுப்படுத்துகிறது (அங்கீகாரம்). இத்தகைய சிறப்புரிமைகள் வரிசைதொடர்களை உருவாக்கல், அட்டவணைகளை பார்வையிடுதல் போன்ற அனைத்து தரவுத்தள செயல்பாடுகளை செயல்படுத்துவதைக் குறிக்கும்.
SQL -ல் உள்ள தரவு கட்டுப்பாட்டு மொழியின் கட்டளைகள்:
GRANT ஒரு குறிப்பிட்ட பணியை செய்ய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களுக்கு அனுமதி வழங்கும்.
REVOKE Grant கட்டளையினால் தரப்பட்ட அணுகல் அனுமதி திரும்பப் பெறப்படும்.
14.
தரவு வரையறை மொழி (DDL) தரவுத்தள அமைப்பு அல்லது திட்ட வடிவமைப்பினை வரையறுக்கும் SQL கூற்றுகளை கொண்டிருக்கும். இது தரவுத்தள திட்ட வடிவமைப்பின் விளக்கங்களுடன் செயல்படுகிறது. மேலும், தரவுத்தளங்களில் உள்ள தரவுத்தள உறுப்புகளில் கட்டமைப்பை உருவாக்குவதற்கும், மாற்றியமைப்பதற்கும் பயன்படுகிறது
DDL தரவுத்தள அமைப்பு சேமிப்பு வடிவமைப்பையும், அணுகல் முறைகளையும் குறிப்பிடப்பயன்படும் வரையறைகளை வழங்குகிறது
15.
(i) வினவல் அமைப்பு மொழி (Structured Query Language) என்பது தரவுத்தளங்களை அணுகுதலுக்கும், கையாளுதலுக்கும் பயன்படுத்தப்படும் ஒரு வினவல் மொழியாகும்
(ii) SQL பயனருக்கு தரவுகளை உருவாக்குதல், திரும்ப எடுத்தல், மாற்றி அமைத்தல் மற்றும் தகவல்களை பரிமாற்றம் செய்தல் போன்ற செயல்பாடுகளை செயற்படுத்த அனுமதிக்கின்றது
(iii) உறவுநிலை தரவுத்தள மேலாண்மை அமைப்பில் (Relational Data Base Management System) உள்ள தரவுகளை நிர்வகிப்பதற்கும், அணுகுவதற்கும் வடிவமைக்கப்பட்ட ஒரு மொழியாகும்
16.
COMMIT கட்டளை:
COMMIT கட்டளை, தரவுத்தளத்திலுள்ள எந்த ஒரு நடவடிக்கையும் நிரந்தரமாக சேமிக்கப் பயன்படுகிறது. INSERT, UPDATE, DELETE போன்ற DML கட்டளைகளைப் பயன்படுத்தி செய்யப்பட்ட மாற்றங்கள் நிரந்தரமல்ல. SQL தூண்டுக்குறியில் COMMIT கட்டளையை கொடுத்து விட்டால் செய்யப்பட்ட மாற்றங்கள் திரும்பப் பெற இயலாது. COMMIT கட்டளை இவ்வாறு பயன்படுத்தப்படுகிறது.
COMMIT;
ROLLBACK கட்டளை:
ROLLBACK கட்டளை கடைசி COMMIT கட்டளைக்கு பிறகு கொடுத்த அனைத்து கட்டளைகளையும் திரும்பப் பெற. இந்த கட்டளையுடன் SAVEPOINT கட்டளையும் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட savepoint இடத்திற்கு கொண்டு செல்ல முடியும்.
ROLL BACK TO savepoint name;
SAVEPOINT கட்டளை:
SAVEPOINT கட்டளை ஒரு நடவடிக்கையை தற்காலிகமாக சேமித்து வைப்பதால், நாம் தேவைப்படும் சமயங்களில் திரும்பவும் அந்த நிலைக்கு செல்லலாம். நம்முடைய அட்டவணையின் மாறுபட்ட நிலைகளை வெவ்வேறு பெயர்களை பயன்படுத்தி எந்த சமயத்திலும் சேமித்துக் கொள்ளலாம். மேலும், ROLLBACK கட்டளையைப் பயன்படுத்தி மீண்டும் அந்த நிலையை சென்றடையலாம்
SAVEPOINT savepoint_name;
17.
(i) TRUNCATE கட்டளை:
TRUNCATE கட்டளை அட்டவணையிலுள்ள அனைத்து வரிசைகளையும் நீக்கப் பயன்படுகிறது. அட்டவணையின் வடிவமைப்பு மாறாமல், ஒதுக்கீடு செய்யப்பட்ட இடம் விடுவிக்கப்படும் TRUNCATE கட்டளையின் தொடரியல்
TRUNCATE TABLE table-name;
உதாரணத்திற்கு, மாணவர் அட்டவணையில் உள்ள அனைத்து பதிவுகளையும், அட்டவணையையும் நீக்குவதற்கான கட்டளை:
TRUNCATE TABLE Student;
மாணவர் அட்டவணை நீக்கப்பட்டு நினைவகப்பகுதி விடுவிக்கப்படுகிறது
(ii) DROP TABLE கட்டளை:
DROP TABLE கட்டளை தரவுத்தளத்திலிருந்து ஒரு அட்டவணையை நீக்கப் பயன்படுகிறது. ஒரு அட்டவணையை DROP செய்தால், அட்டவணையில் உள்ள அனைத்து வரிசைகளும் நீக்கப்பட்டு, அட்டவணையில் வடிவமைப்பு தரவுத்தளத்திலிருந்து நீக்கப்படும். அட்டவணையை DROP செய்த பின்பு, அதனை திரும்பப்பெற இயலாது. ஆதலால், DROP TABLE கட்டளைகளை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருந்தல் வேண்டும். ஒரு அட்டவணையை DROP செய்ய வேண்டுமெனில், அது காலி அட்டவணையாக இருக்க வேண்டும். அட்டவணையில் அனைத்து வரிசைகளையும் DELETE கட்டளை கொண்டு நீக்கப்பட்டிருக்க வேண்டும்
அனைத்து வரிசைகளையும் நீக்க, தேவையான கட்டளை:
DELETE * FROM Student;
அனைத்து வரிசைகளும் நீக்கப்பட்டப் பின்பு, கீழ்காணும் முறையில் DROP TABLE கட்டளையை பயன்படுத்தி அட்டவணையை நீக்கலாம்.
DROP TABLE table-name;
உதாரணத்திற்கு மாணவர் அட்டவணையை நீக்க:
DROP TABLE Student;
18.
ALTER கட்டளை: ALTER கட்டளையைப் பயன்படுத்தி அட்டவணை வடிவமைப்பில் நெடுவரிசையை சேர்த்தல், ஏற்கனவே இருக்கும் புலத்திற்கு மறு பெயரிடல், எந்த ஒரு நெடுவரிசையின் தரவு வகையையோ அல்லது அளவினையோ மாற்றி அமைத்தல் நெடுவரிசையை அட்டவணையிலிருந்து நீக்குதல் போன்ற மாற்றங்களை செய்யலாம். அது கீழ்காணும் முறையில் பயன்படுத்தப்படுகிறது.
ALTER TABLE < table-name > ADD < column-name > < data type > < size >;
மாணவர் அட்டவணையில் 'char' என்ற தரவுவகை சார்ந்த "address" என்ற நெடுவரிசையை சேர்க்க, கட்டளையமைப்பு
ALTER TABLE Student ADD Address char;
அட்டவணையில் ஏற்கனவே இருக்கும் நெடுவரிசையில் மாற்றியமைக்க, ALTER TABLE கட்டளை MODIFY clause உடன் பயன்படுத்தப்படுகிறது
ALTER < table-name > MODIFY < column-name > < data-type > < size >;
ALTER TABLE Student MODIFY Address char (25);
மேற்கண்ட கட்டளை மாணவர் அட்டவணையில் உள்ள address நெடுவரிசை இப்பொழுது 25 எழுத்துக்கள் வரை தேக்கி வைத்துக் கொள்ளும் வகையில் மாற்றி அமைக்கும்.
ALTER கட்டளை கீழ்க்காணும் முறையில் ஏற்கனவே உள்ள நெடுவரிசைக்கு மறு பெயரிட பயன்படுகிறது:
ALTER < table-name > RENAME old-column-name TO new-column-name;
உதாரணத்திற்கு, address என்ற பெயரை கொண்ட நெடுவரிசைக்கு city என்று மறுபெயரிட உதவும் கட்டளை:
ALTER TABLE Student RENAME Address TO City;
ஒரு நெடுவரிசை அல்லது அனைத்து நெடுவரிசைகளையும் நீக்க, ALTER கட்டளையைப் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு, ALTER TABLE - ன் DROP COLUMN ஐ பயன்படுத்தி, குறிப்பிட்ட நெடுவரிசையை நீக்கலாம், கட்டளை:
ALTER < table-name > DROP COLUMN < column-name >;
மாணவர் அட்டவணையில் city என்ற நெடுவரிசையை நீக்க, பயன்படும் கட்டளை:
ALTER TABLE Student DROP COLUMN City;
19.
SQL ன் பல்வேறு செயலாக்க திறன்கள்:
1. தரவு வரையறை மொழி (DDL - Data Definition Language): SQL DDL - அட்டவணைகளை (Relational) உறவுநிலை திட்டங்களை (கட்டமைப்பு) வரையறுத்தல், நீக்குதல், மாற்றியமைத்தல் மற்றும் குறிப்புகளை உருவாக்கத்திற்கு தேவையான கட்டளைகளை வழங்கும் ஒரு வரையறை மொழியாகும்.
2. தரவை கையாளுதல் மொழி (DML Data Manipulation Language): SQL DML தரவுத்தளங்களில் வரிசைகளை (tuples) - ஐ சேர்க்கவும், நீக்கவும், பரிமாற்றவும் கட்டளைகளை உள்ளடக்கியது
3. உட்பொதிக்கப்பட்ட தரவுக் கையாளுதல் மொழி (EDML-Embedded Data Manipulation Language): SQL ன் உட்பொதிந்த வடிவம், உயர்நிலை நிரலாக்க மொழிகளில் பயன்படுத்தப்படுகிறது.
4. ஏனைய வரையறை: SQL அட்டவணையை பார்வையிடுவதற்காக View கட்டளைகளைக் கொண்டுள்ளது.
5. அங்கீகாரம்: SQL உறவுநிலைக்கான அணுகல் உரிமைகளுக்கான கட்டளைகளையும், அட்டவணைகளை பார்வையிடுதலுக்கான கட்டளைகளையும் கொண்டுள்ளது
6. ஒருமைப்பாடு: SQL நிபந்தனையை பயன்படுத்தி ஒருமைப்பாட்டை சரிபார்த்தலுக்கு படிவங்களை வழங்குகிறது
7. பரிவர்த்தனை கட்டுப்பாடு: கோப்பு பரிமாற்றங்களுக்கான கட்டளைகள் மற்றும் பரிவர்த்தனை செயலாக்கத்தின் கட்டுப்பாட்டையும் SQL கொண்டுள்ளது
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards