12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 29/10/2019
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
பைத்தான் கட்டகம் அல்லது கூறுநிலைகளை நிறுவுவதற்கான கட்டக மேலாளர் (Package manager) பயன்பாட்டை தேர்ந்தெடு.
Matplotlib
PIP
plt.show( )
பைத்தான் தொகுப்பு
2.
SQL- ல் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் கூற்று ஏது?
cursor
select
execute
commit
3.
4.
Dictionary தரவுகளை குறிக்க இவற்றுள் எது ஒரு பொருளை உருவாக்குகின்றது?
listreader( )
reader( )
tuplereader( )
DictReader( )
5.
உருவப்படம் அல்லது இயங்குநிலை கோப்பு போன்று உரை அல்லாத கோப்புகளை கையாள பின்வரும் எந்த முறைமையானது பயன்படுகிறது?
உரை
இருநிலை
xls
csv
6.
அட்டவணை அமைப்புடன் சேர்த்து முழு அட்டவணையை நீக்க பயன்படும் கட்டளை
DROP
DELETE
DELETES ALL
ALTER TABLE
7.
SELECT கூற்றுக்கு பயன்படும் சின்னம் எது?
σ
π
X
Ω
8.
இனக்குழுவின் உள்ளே வரையறுக்கப்படும் செயற்கூறு எது:
செயற்கூறு
கூறு
வழிமுறை
பிரிவு
9.
பைத்தான், Dictionary - ல் திறவுகோல்கள் எதனால் குறிப்பிடப்படுகின்றன.
=
;
+
\(:\)
10.
பின்வரும் வடிவமைப்பு குறியீடுகளுள் அடுக்கு குறியீட்டில் அச்சிட உதவும் மேல் எழுத்து எது?
%f
%E
%g
%n
11.
ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டு, பெயரிடப்பட்ட குறிமுறையின் தொகுதி ______.
மடக்கு
கிளைப்பிரிப்பு
செயற்கூறு
தொகுதி
12.
எந்த செயற்குறியை ஒப்பீடு செயற்குறி என்று அழைக்கப்படுகிறது?
கணக்கீடு
தொடர்புடைய
தருக்க
மதிப்பிருத்தல்
13.
எது வரையறுக்கப்பட்ட இனக்குழு மற்றும் அதன் துணை இனக்குழுக்களால் அணுகப்படும் உறுப்புகள் ஆகும்.
public உறுப்புகள்
protected உறுப்புகள்
secured உறுப்புகள்
private உறுப்புகள்
14.
பின்வரும் எந்த செயற்கூறு தரவு வகையில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கும்?
Constructors
Selectors
recursive
Nested
15.
தரவு வகை குறிப்பு எழுதும்போது, எது கட்டாயமாகிறது?
{ }
( )
[ ]
< >
16.
CSV கோப்பு என்றால் என்ன?
17.
தரவு நிலைத் தன்மை என்றால் என்ன?
18.
சரம் என்றால் என்ன?
19.
முழுதளாவிய வரையெல்லை-வரையறு.
20.
தரவு அருவமாக்கம் வகை என்றால் என்ன?
21.
துணை நிரல் என்றால் என்ன?
22.
SQLite என்றால் என்ன? இதன் நன்மைகள் யாவை?
23.
DBA-வின் பணி என்ன?
24.
format( ) செயற்கூறின் பயன் யாது? எடுத்துக்காட்டு தருக.
25.
தற்சுழற்சி செயற்கூறு எவ்வாறு செயல்படுகிறது?
26.
Asymptotic குறியீடு - குறிப்பு வரைக.
27.
pure மற்றும் impure செயற்கூற்றை வேறுபடுத்துக.
28.
எக்ஸெல் மற்றும் CSV கோப்பின் வேறுபாடு என்ன?
29.
DBMS மற்றும் RDBMS வேறுபடுத்துக.
30.
for மடக்குப் பற்றி விரிவான விடையளிக்கவும்.
31.
தரவு அருவமாக்கம் எவ்வாறு செயல்படுத்துவாய்? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
32.
1.
(b)
PIP
2.
(b)
select
3.
(a)
4.
(d)
DictReader( )
5.
(b)
இருநிலை
6.
(a)
DROP
7.
(a)
σ
8.
(c)
வழிமுறை
9.
(d)
\(:\)
10.
(b)
%E
11.
(c)
செயற்கூறு
12.
(b)
தொடர்புடைய
13.
(b)
protected உறுப்புகள்
14.
(b)
Selectors
15.
(b)
( )
16.
CSV (Comma Separated Values) கோப்பில் ஒவ்வொரு வரியும் காற்புள்ளி அல்லது வேறு பிரிப்பான்களை பயன்படுத்தி பிரிக்கப்பட்ட பல்வேறு புலங்களைக் கொண்டு பயனரால் புரிந்துகொள்ளக்கூடிய உரைக்கோப்பாகும்.
17.
தரவு நிலைத்தன்மை என்பது தரவுத்தளத்தில் அனைத்து இடங்களிலும் ஒத்த மதிப்புடைய தரவுகளாகும்.
18.
குறியுருக்களின் அணியைக் கையாளுவதற்கான ஒரு தரவு இனம் சரம் (string) ஆகும். சரங்கள் என்பன, ஒற்றை, இரட்டை, அல்லது மூன்று மேற்கோள் குறிகளுக்குள் கொடுக்கப்படும், எழுத்து, எண்கள் அல்லது சிறப்பு குறியீடுகளின் சேர்க்கையை கொண்டிருக்கும் ஒருங்கமைவு (Unicode) குறியுருக்களின் வரிசை ஆகும்.
19.
அனைத்து செயற்கூறுகளுக்கும் மேலாக அறிவிக்கப்படும் மாறி முழுதளாவிய மாறி எனப்படும். முழுதளாவிய வரையெல்லை உடைய மாறியை நிரலின் எந்த பகுதியிலும் அணுகமுடியும் முழுதளாவிய வரையெல்லை கொண்ட மாறியை ஒரு செயற்கூறினுள் அணுகுவதற்கு 'global' சிறப்புச் சொல்லானது பயன்படுகிறது.
20.
(i) அருவமாக்க தரவு வகை (Abstract Data type (ADT)) என்பது பொருள்களுக்கான வகை (அல்லது இனக்குழு) ஆகும்.
(ii) ADT-யின் வரையறுப்பு என்ன வகையான செயல்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றது, அவை எப்படி செயல்பட வேண்டும் என்று குறிப்பிடப்படுவதில்லை.
(iii) இவை தரவுகள் நினைவகத்தில் எவ்வாறு சேமிக்கப்படுகின்றது என்றோ அல்லது எந்த நெறிமுறைகள் செய்யப்படவேண்டும் என்ற வழிமுறையோ குறிப்பிடப்படுவதில்லை.
(iv) சுயமாக இவை செயல்படுத்தப்படுவதில்லை எனவே, இதை அருவமாக்கம் என்று அழைக்கிறோம்.
21.
துணை நிரல்கள் கணினி மொழிகளின் அடிப்படைக் கட்டுமான தொகுதியாக விளங்குகின்றன. துணை நிரல்கள் என்பன ஒரு குறிப்பிட்ட செயலை மீண்டும் மீண்டும் செய்யப் பயன்படும் சிறிய நிரல் தொகுதியாகும். நிரலாக்க மொழிகளில் இத்துணை நிரல்கள் செயற்கூறுகள் (Functions) என்று அழைக்கப்படுகின்றன.
22.
SQLite என்பது எளிய உறவுநிலை தரவுத்தள அமைப்பாகும். இது தரவுகளை வழக்கமான தரவுக்கோப்புகளாக கணினியின் உட்புற நினைவகத்தில் சேமித்து வைக்கும். பயன்பாடுகளில் தனியாக MySQL மற்றும் Oracle போன்ற சேவையக தரவுத்தளங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இது பயன்பாடுகளுடன் ஒன்றிணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நன்மைகள் :
(i) வேகமாகவும், மிகுந்த சோதிக்கப்பட்டதாகவும் மற்றும் நெகிழ்வானதாகவும் உள்ளதால் SQLite -ல் வேலை செய்வது எளிதாகும்.
(ii) SQLite -ற்காக பைத்தான் உள்ளிணைந்த நூலகத்தைக் கொண்டுள்ளது.
23.
தரவுத்தள நிர்வாகி அல்லது DBA என்பவர் முழு தரவுத்தள மேலாண்மை அமைப்பையும் நிர்வகிப்பவர் ஆவார். இவர் DBMS பாதுகாப்பு, உரிமங்களை நிர்வகித்தல், பயனர் கணக்குகள் மற்றும் அணுகல்களை நிர்வகித்தல் போன்றவற்றை கவனித்துக் கொள்கிறார்.
24.
format( ) செயற்கூறு சரங்களை வடிவமைக்கப் பயன்படும் முக்கிய செயற்கூறாகும். நெளிவு அடைப்புக்குறி { } இட நிரப்பியாக அல்லது புலத்தின் பிரதியீடாக பயன்படுகிறது. இது format( ) செயற்கூறில் பயன்படுத்தப்படும்.
எடுத்துக்காட்டு:
num1 =int (input("Number 1: "))
num2=int (input("Number 2: "))
print (" The sum of {} and {} is {} ".
format (num1,num2,(num1+num2)))
வெளியீடு:
Number 1: 34
Number 2: 54
The sum of 34 and 54 is 88
25.
1) தற்சுழற்சி செயற்கூறு வெளிப்புற குறிமுறையிலிருந்து அழைக்கப்படும்.
2) அடிப்படை நிபந்தனை நிறைவேற்றப்பட்டால் நிரலானது ஏற்ற வெளியீடு கொடுத்து வெளியேறும்.
3) இல்லையெனில், செயற்கூறு தேவையான செயற்பாட்டை இயக்கும் மேலும் தற்சுழற்சி முறையில் தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும்.
26.
Asymptotic குறியீடுகள் நேரம் மற்றும் இடச்சிக்கல்களைப் பற்றிய அர்த்தமுள்ள கூற்றுகளைப் பயன்படுத்தும் ஒரு மொழியாகும். பின்வரும் மூன்று Asymptotic குறியீடுகள் நெறிமுறையில் நேரச் சிக்கலைக் குறிக்க மிகவும் பயன்படுகிறது.
(i) Big O : நெறிமுறையின் மிக மோசமான நிலையை விவரிக்க Big O பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
(ii) Big \(\Omega\): Big Omega, Big O-வின் தலைகீழ் ஆகும். Big O-asymptotic (மோசமான நிலையில்) செயற்கூறின் உச்ச வரம்பையும், Big Omega அதன் கீழ்வரையை குறிக்கும் (சிறந்த நிலையில்).
(iii) Big : \(Θ\) = நெறிமுறையானது கீழ் எல்லை = மேல் எல்லை என்னும் சிக்கலைக் கொண்டிருந்தால், உதாரணத்திற்கு O (n log n) மற்றும் \(\Omega\)(n log n), ஆகிய சிக்கல்களைக் கொண்டுள்ளது என வைத்துக் கொள்வோம். உண்மையில் அதனுடைய சிக்கல் \(Θ\) (n log n), என்பது ஆகும். இதனுடைய அர்த்தம் என்னவென்றால் நெறிமுறையின் இயங்கு நேரம் மிகச் சிறந்த நிலை மற்றும் மிக மோசமான நிலை ஆகிய இரண்டு நிலையிலுமே எப்பொழுதும் n log n ஆக இருக்கும்.
27.
| pure செயற்கூறு | impure செயற்கூறு | |
| 1. | pure செயற்கூறுவின் திருப்பி அனுப்பும் மதிப்பு முற்றிலும் செயலுருபுகளை பொறுத்தே அமையும். | impure செயற்கூறுவின் திருப்பி அனுப்பும் மதிப்பு முற்றிலும் செயலுருபுகளை பொறுத்து அமையாது, |
| 2. | செயற்கூறினை அதே செயலுருபுகளை கொண்டு அழைத்தால் எப்பொழுதும் அதே திருப்பி அனுப்பும் மதிப்பே கிடைக்கும். | Impure செயற்கூறினை அதே செயலுருபுகளை கொண்டு அழைத்தால் வெவ்வேறான திருப்பி அனுப்பும் மதிப்பு கிடைக்கும். |
| 3. | இது எந்த பக்கவிளைவுகளையும் கொண்டிருக்காது. | (எ.கா) random () date () |
| 4. | இந்த செயற்கூறு செயலுருபுகளை மாற்றம் செய்யாது. | இந்த செயற்கூறு செயலுருபுகளை மாற்றம் செய்யலாம். |
28.
Comma-Separated Values (CSV) மற்றும் eXcel.Sheets(XLS) கோப்புகளுக்கிடையேயான வேறுபாடுகள்.
| எக்ஸெல் | CSV |
|---|---|
| கோப்பின் அனைத்து அட்டவணைத்தாளில் உள்ள பொருளடக்கம் மற்றும் வடிவூட்டல்களை உள்ளடக்கிய தகவல்களை இரு நிலை வடிவில் கொண்ட கோப்பாகும். | CSV வடிவத்தில் காற்புள்ளிகளால் பிரிக்கப்பட்ட தொடர்ச்சியான மதிப்புகளைக் கொண்ட எளிய உரை வடிவ கோப்பாகும். |
| XLS கோப்புகள் அவற்றை படிப்பதற்காக அவற்றை உருவாக்கப்பட்ட பயன்பாடுகளை கொண்டு மட்டுமே படிக்க முடியும். அது போன்றே எழுதுதலும் ஆகும். | CSV கோப்புகளை Windows இயக்க அமைப்பில் உள்ள Notepad, MS Excel, openoffice போன்ற உரைப் பதிப்பான்களைக் கொண்டு திறக்கலாம். |
| Excel அட்டவணைச்செயலி அதற்கென உருவாக்கப்பட்டுள்ள தனியுரிம வடிவமைப்பு வகையில் கோப்பினை சேமிக்கும். (அதாவது xls அல்லது xlsx. |
அட்டவணை வடிவ தகவல்களை .csv என்ற நீட்டிப்புடன் பிரிக்கப்பட்ட உரைக் கோப்புகளாக சேமிக்கும் வடிவம் CSV ஆகும். |
| Excel ஆனது தரவைப் பெறும் (இறக்கம் செய்யும்) (import) போது அதிக நினைவக இடத்தை எடுத்துக் கொள்ளும். | CSV கோப்புகளை இறக்கம் செய்யும் போது வேகமாக செயல்படும். குறைவான நினைவக இடத்தை எடுத்துக்கொள்ளும். |
29.
| ஒப்பீட்டு அடிப்படை | DBMS | RDBMS |
| விரிவாக்கம் | Database Management System தரவுதள மேலாண்மை அமைப்பு | Relational Database Management System உறவுநிலை தரவுதள மேலாண்மை அமைப்பு. |
| தரவு சேமிப்பு | வழிசெலுத்தல் மாதிரி அதாவது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பதிவுகளின் தரவு | உறவுநிலை மாதிரி (அட்டவணையில்) அட்டவணையில் வரிசை மற்றும் நெடுவரிசை உள்ள தரவுகள் |
| மிகைமைத் தரவு | இடம் பெற்றுள்ளது | இடம் பெறவில்லை |
| இயல்பாக்கம் | செய்ய இயலாது | இயல்பாக்கத்தை பயன்படுத்துகிறது. |
| தரவு அணுகல் | அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறது. | DBMS உடன் ஒப்பிடும் போது வேகமானது. |
| திறவு கோல்கள் மற்றும் குறியீடுகள் | பயன்படுத்தப்பட வில்லை | உறவுநிலையை உருவாக்குவதற்குப் பயன்படுகிறது. |
| பரிவர்த்தனை மேலாண்மை | திறமையற்றது, பிழைகளைக் கொண்டது பாதுகாப்பற்றது. | திறமையானது மற்றும் பாதுகாப்பானது. |
| பரவல் தகவல் தளம் | ஒத்துழைக்காது | ஒத்துழைக்கும் |
| எடுத்துக்காட்டு | Dbase, FoxPro | SQL server, Oracle, mysql, MariaDB, SQLite, MS - Access |
30.
(i) பொதுவாக, for மடக்கு "வரையறுக்கப்பட்ட " மடக்கு என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த மடக்கு சரியாக எத்தனை முறை மீண்டும் மீண்டும் இயங்கும் என்பதை நிரலர் தெரிந்துவைத்திருப்பார்.
தொடரியல் :
for counter_variable in sequence:
statements-block 1
[else: # optional block statements-block 2]
(ii) for....in என்ற கூற்று, பைத்தானில் பயன்படுத்தப்படும் மடக்கு கூற்றாகும். இது தொடர் பொருள்களின் வழியே சுழலும் தன்மையுடையது. அதாவது, ஒரு தொடரின் ஒவ்வொரு மதிப்பின் ஊடாக செல்லும். இங்கே தொடர் என்பது வரிசைபடுத்தப்பட்ட அல்லது வரிசைப்படுத்தப்படாத மதிப்புகள் அல்லது ஒரு | சரமாகவும் இருக்கலாம்.
(iii) கட்டுப்பாட்டு மாறி, ஒவ்வொரு சுழற்சியிலும், தொடரின் கடைசி மதிப்பு வரை, தொடரின் ஒவ்வொரு மதிப்பையும் அணுகும்.
range ()ன் தொடரியல்:
range(start,stop,[step])
எடுத்துக்காட்டு :
| range (1,30,1) | range-ன் மதிப்புகள் 1 முதல் தொடங்கி 29 வரை |
| range (2,30,2) | range() மதிப்புகள் 2 முதல் 28 வரை |
| range (30,3,-3) | range() மதிப்புகள் 30 முதல் 6 வரை |
| range (20) | 20 என்ற மதிப்பை இறுதி மதிப்பாக எடுத்துக்கொண்டு (அல்லது மேல்வரம்பு) 0 முதல் 19 வரையிலான மதிப்புகளைக் கொடுக்கும் (range() எப்பொழுதும் stop மதிப்பு-1 வரை மதிப்பைக் கொடுக்கும் என்பதை நினைவில்கொள்க). |

எடுத்துக்காட்டு : #for மடக்கு பயன்படுத்தி ஒற்றை இலக்க இரட்டைப் படை எண்ணை அச்சிட விளக்கும்
நிரல்
for i in range (2,10,2):
print (i, end = ' ')
வெளியீடு:
2 4 6 8
31.
தரவு அருவமாக்கினை செயல்படுத்த, ஆக்கிகள் (Constructor) மற்றும் செலக்டர் (Selectors) என்ற இரண்டு செயற்கூறுகள் உருவாக்கப்பட வேண்டும்.
ஆக்கிகள் மற்றும் செலக்டர்கள் (constructors and selectors):
(i) ஆக்கி செயற்கூறுகள் அருவமாக்கம் தரவு வகையை கட்டமைக்க பயன்படுகிறது. செலக்டர் செயற்கூறுகள் தகவல்களை தரவு வகையிலிருந்து பெறுவதற்கு பயன்படுகிறது.
(ii) எடுத்துக்காட்டாக, city என்று ஒரு அருவமாக்க தரவு வகை உள்ளது என வைத்துக்கொள். City என்ற பொருள் நகரத்தின் பெயர், அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை பற்றிய தகவல்களை சேமித்திருக்கும் city என்ற பொருளை உருவாக்க பின்வரும் செயற்கூற்றினை பயன்படுத்தலாம்.
city := makecity (name, lat, lon)
(iii) city பொருளின் தகவல்களை பெறுவதற்கு பின்வரும் செயற்கூறுகளை பயன்படுத்தலாம்.
1. getname(city)
2. getlat(city)
3. getlon(city)
(iv) பின்வரும் போலி குறிமுறை இரு நகரங்களுக்கு இடையேயான தொலைதூரத்தை கணக்கிடும்.
distance(city1, city2):
lt1, lg1 := getlat(city1), getlon(city1)
lt2, 1g2:= getlat (city2), getlon (city2)
return ((lt1 - lt2)**2 + (lg1 - lg2)**2))1/2
(v) மேலே காணும் குறிமுறையில், distance(), getlat() மற்றும் getlon() ஆகியவை செயற்கூறுகள் ஆகும். It என்பது அட்ச ரேகை மற்றும் lg என்பது தீர்க்கரேகையும் குறிக்கிறது. longitude. := என்பதை "assigned as" அல்லது "becomes" என்று வாசிக்க வேண்டும்.
It 1, lg1 := getlat(city1), getlon(city1)
(vi) இதனை It1 என்பது getlat(city1)ன் மதிப்பாகிறது மற்றும் lg1 என்பது getlon(city1) ன் மதிப்பாகிறது. என்று வாசிக்க வேண்டும்.
(vii) இந்த செயற்கூறுகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. இதை வேறு ஒருவர் நமக்காக வரையறுத்துள்ளார் என்று கருதிக் கொள்ள வேண்டும். பயனர் செயற்கூறுகள் எப்படி செயல்படுத்தப்படுகின்றது என்று தெரிந்து வைத்திருக்க வேண்டியதில்லை எனினும் வேறு ஒருவரால் இச்செயற்கூறுகள் வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும்.
(viii) மேலே காணும் குறிமுறையில், ஆக்கி மற்றும் செலக்டர்களை அடையாளம் காண்போம். ஆக்கி செயற்கூறுகள் அருவமாக்க தரவு வகையை கட்டமைக்கப் பயன்படுகிறது என்பதை நாம் அறிவோம். மேலே காணும் போலிக் குறிமுறையில், cityயின் பொருளை உருவாக்கும் செயற்கூறு, ஆக்கி ஆகும்.
city := makecity(name, lat, lon) இங்கு makecity(name, lat, lon) என்ற ஆக்கி city எனும் பொருளை உருவாக்குகிறது.

(ix) செலக்டர் செயற்கூறுகள் தகவல்களை தரவு வகையிலிருந்து பெறுவதற்கு பயன்படுகிறது. மேலே காணும் குறிமுறையில்,
getname(city)
getlat(city)
getlon(city) என்பவை city எனும் பொருளிலிருந்து தகவல்களை பெற்றுத் தரும் செலக்டர் செயற்கூறுகளாகும்.
32.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards