12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
அடோப் இன்டிசைன் CC 2019
12ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
ஒரு பொருளின் வெளிப்புறக் கோட்டில் இடப்படும் வண்ணம் ………
எல்லை (stroke)
நிரப்பு (fill)
out – color
paint
2.
ஒரு பொருளின் உள்ளே இடப்படும் வண்ணம் ………
நிரப்பு (fill)
எல்லை (stroke)
paint
In – color
3.
ஒரு பக்கத்தில் இடம்பெரும் உரைப்பகுதி அல்லது உறுப்பு ………
வரைகலை (Graphics)
திசையன் (vector)
scalar
ஒவ்வொன்றும் வரையாக இருக்கும்
4.
பக்கத்தின் இரண்டு நெடுவரிசைகளுக்கு () அடைப்பட்ட பகுதி ………….
Gutter
வெற்றிடம்
வெற்றுப்பரப்பு
உடுகள் (interstellar)
5.
In Design -னுள்ள ஒவ்வொரு உரையின் துண்டுப் பகுதியும் ………
உரைச் சட்டம் (text frame)
வடிவம் (shape)
பிடிபலகை (clipboard)
ஏதுமில்லை
6.
பத்தியில் எண் வரிசை மற்றும் புல்லட் குறியீடு உருவாக்க உதவும் படிநிலையை எழுதுக
7.
Tools panel – ஐ திறக்க / மூட உள்ள படிநிலைகளை எழுதுக
8.
Zooming என்பது என்ன?
9.
Page tool –ன் பயன் என்ன?
10.
Tooltip எப்போது தோன்றும்?
11.
கருவி பலகத்திலுள்ள வரைபட சட்டங்கள் எத்தனை? அவை யாவை?
12.
ஒரு பொருளை எப்படி உருவாக்குவாய் என விரிவாக விவரி?
13.
எழுத்துக்களை மேலொட்டு அல்லது கீழோட்டு என எவ்வாறு மாற்றுவாய்?
14.
பெரிதாக்குதலுடன் (Zooming) தொடர்புடைய சார்புகளுக்கான அனைத்து விசைப்பலகை குறுக்குவழிகளை பற்றி எழுதுக
15.
InDesign -ல் உள்ள View கட்டளைகள் யாவை?
16.
வரைகலை சட்டத்தில் எவ்வாறு படத்தை சேர்ப்பாய் படிநிலைகளை எழுதுக.
17.
ஆவணத்தில் உரையினை வைக்க படிநிலைகளை எழுதுக
18.
பாதையில் ஒரு வகையினை உருவாக்க படிநிலைகளை எழுதுக
19.
InDesign-ல் புதிய ஆவணத்தை உருவாக்குவதற்கான படிநிலைகளை எழுதுக
1.
(a)
எல்லை (stroke)
2.
(a)
நிரப்பு (fill)
3.
(a)
வரைகலை (Graphics)
4.
(a)
Gutter
5.
(a)
உரைச் சட்டம் (text frame)
6.
i) புல்லட்டுகள் ( அ ) எண்கள் சேர்க்க விரும்பும் பத்தியை தேர்ந்தெடுக்கவும் .
ii) Type --->Bulleted & Numbered lists யைத் தேர்ந்தெடுக்கவும் .பிறகு Apply bullets (அ )Apply Numbers ஐ கிளிக் செய்யவும்.
Bullets and Numbering உரையாடல் பெட்டியில் இறுதியாக பயன்படுத்திய அமைப்பை உரைக்கு செயல்படுத்தப்படும்.
7.
Window --> Tools ஐ தேர்ந்தெடுத்து கருவி பலகத்தை மூடலாம் .இதை மீண்டும் திறக்க Window -->Tools ஐ மறுபடியும் தேர்ந்தெடுக்கவும் . அல்லது
Tab சாவியை அழுத்தி கருவிப்பலகத்தில் உள்ள அனைத்து திறந்த பலகங்களையும் மூடலாம் .அந்த பலகங்களை மீண்டும் திறக்க Tab சாவியை மீண்டும் அழுத்தவும்.மிதவை கருவிப் பலகத்தை மூடுவதற்கு Close பெட்டியையும் கிளிக் செய்யலாம்
8.
பெரிதாக்கல் (Zooming ) :
InDesign-ல் உள்ள சில பணிகளுக்கு, ஒரு பொருளை அல்லது பொருளின் ஒரு பகுதியை உயர் உருப்பெருக்கம் அல்லது பெரிதாக்குதல் மூலம் பார்வையிடுதல் தேவைப்படுகிறது.
ஒரு ஆவணத்தில் உள்ள ஒரு பொருளை பெரிதாக்கி (Zoom in) உற்று நோக்க பெரிதாக்குதல் அனுமதிக்கிறது. அந்தப் பொருளை (Zoom out) சிறியதாக்கி விலகிச் சென்று பார்க்க சிறிதாக்குதல் பயன்படுகிறது.
ஆவணத்திலுள்ள எந்த பொருளையும் விரைவாக பெரிதாக்கல் ( அ ) பொருளை மிக அருகில் கொண்டு வருதல்.
9.
ஒரு ஆவணத்தின் உள்ளே பல்வேறு பக்க அளவுகளை உருவாக்க Page tool பயன்படுகிறது .
வெவ்வேறு பக்க அளவுகளை உருவாக்க :
1.Shift + P யை அழுத்தி பக்க கருவிகளைத் தேர்ந்தெடுக்க கிளிக் செய்யவும் .
2.இப்பொழுது கட்டுப்பாட்டுப் பலகத்தில் ( Control Page )உள்ள தேர்வைப் பயன்படுத்தி பக்க அமைவை மாற்றவும் .
10.
கருவிப்பலகத்தில் கிளிக் செய்யாமல் ஏதேனும் ஒரு கருவியின் மீது செருகும் புள்ளியை வைக்கும் பொழுது Tooltip தோன்றும்.
11.
வரைகலை சட்டங்களை வரைவதற்கு கருவிகள் பலகம் மூன்று கருவிகளை கொண்டுள்ளது .
1.Ellipse சட்டகம் - நீள்வட்ட மற்றும் வட்ட சட்டங்களை உருவாக்கலாம்.
2.Rectangle சட்டகம் - செவ்வக மற்றும் சதுர சட்டங்களை உருவாக்கலாம் .
3.Polygon சட்டகம் - சமபக்க பலகோண சட்டங்களை உருவாக்கலாம் .
12.
1. சில நேரங்களில், நமது பதிப்பிற்கு தேவைப்படும் ஒரே வகை பொருள் எளிய வடிவங்களாகும்
2. வடிவங்களை உருவாக்கும் Rectangle , Ellipse , Polygon போன்ற கருவியைத் தேர்ந்தெடுக்க , கருவிகள் பலகத்தில் Rectangle கருவி மீது கிளிக் செய்து சுட்டெலி பொத்தானை அழுத்தி பிடித்தவாறே , நாம் பயன்படுத்த விரும்பும் வடிவக் கருவியைத் தேர்ந்தெடுக்கலாம் .
3.வடிவ கருவி தேர்ந்தெடுக்கப்பட்ட பின் ஆவணத்தில் அதை கைமுறையாக இழுப்பதன் மூலம் வடிவத்தை உருவாக்கலாம் ( அ ) ஆவணத்தில் கிளிக் செய்து Shapes உரையாடல் பெட்டியைத் திறந்து அதன் அமைப்பை வரையறுக்கலாம் .
13.
1. கீழொட்டு அல்லது மேலோட்டாக மாற்றப்படவேண்டிய எழுத்தை தேர்ந்தெடுக்கவும் .
2.கட்டுப்பாட்டுத் தட்டில் உள்ள ஏதேனும் ஒரு பொத்தானை கிளிக் செய்யவும்
மேலோட்டு
கீழொட்டு
3. தேர்வு செய்யப்பட்ட எழுத்து தேவைப்படும் படி மாறும்.
14.
● Ctrl + = அழுத்தவும் - பெரிதாக்குதல்
● Ctrl + - அழுத்தவும் - சிறிதாக்குதல்
● Ctrl + 1 பக்கத்தை அதன் சரியான அளவில் காணுதல்
● Ctrl + 2 பக்கத்தை 200% அளவில் காணுதல்
● Ctrl + 0 ஆவண சன்னலில் முழு பக்கத்தையும் பொருத்துதல்
● Alt + Ctrl + ஆவண சன்னலில் முழு பரவலையும் பொருத்துதல்
● Ctrl + Spacebar (or)
● Ctrl + Alt + Spacebar தற்காலிகமாக Zoom கருவியை அணுகுதல் (பெரிதாக்க அல்லது சிறிதாக்க)
15.
1. பெரிதாக்குதல் (Zoom in)
2. சிறிதாக்குதல் (Zoom Out)
3. Actual Size
4. Fill page in window
5. Fit spread in window
6. Entire pasteboard
16.
வரைகலை சட்டகம் பிற மென்பொருள் நிரலில் உள்ள படங்களைத் தருவிக்கப் பயன்படுகிறது.
1. வரைகலைச் சட்டகத்தை உருவாக்கவும்
2. File > Place என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Place உரையாடல் பெட்டி தோன்றும்.
3. சட்டகத்தில் செருக விரும்பும் படத்தைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.
4. Open மீது கிளிக் செய்யவும்.
17.
1. பட்டிப்பட்டையில் இருந்து File → Place ஐ தேர்வு செய்யவும்.
2. Place உரையாடல் பெட்டி தோன்றும்.
3. இருத்தப்பட வேண்டிய உரைக் கோப்பை தேர்வு செய்து Place உரையாடல் பெட்டியின் வலது பக்கத்தில் உள்ள Open பொத்தானைக் கிளிக் செய்யவும்.
4. செருகும் புள்ளி செறிவூட்டப்பட்ட உரை செருகும் புள்ளியாக மாறுகிறது. ஆவணத்தில் உரை செருகுவதற்குத் தயாராக உள்ளது என்பதைத் தெரிவிக்கிறது.
5. உரையை இருத்துவதற்கு கிளிக் செய்யவும் (அ) புதிய உரைச் சட்டகத்தை உருவாக்குவதற்கு கிளிக் செய்து இழுக்கவும்.
6. உரையை உரைச்சட்டகத்தில் இருத்த முடியவில்லை எனில், ஒரு சிவப்பு + குறியானது. உரைசட்டகத்தின் கீழ் வலது எல்லையில் Overflow குறியீடாகத் தோன்றும்.
7. இந்த Overflow குறியீட்டை கிளிக் செய்தால் மீதமுள்ள உரை செருகும் புள்ளியில், கூடுதல் உரைச் சட்டகத்தில் உரையைச் சேர்ப்பதற்காக ஏற்றப்படுகிறது. உரையானது கிளிக் செய்யும் பொழுது இருத்தப்படும்.
18.
1. கருவிப் பலகத்தில் பாதைக் கருவியில் உள்ள தட்டச்சை தேர்வு செய்யவும்.
2. தட்டச்சை சேர்க்க பாதையின் விளிம்பில் கிளிக் செய்யவும். (திறந்து அல்லது மூடி) உரைச் சட்டகத்தில் ஒரு ஒளிரும் செருகும் புள்ளி தோன்றும். பொருளில் எல்லை நீக்கப்படும்.
3. ஏதேனும் ஒரு உரையைத் தட்டச்சு செய்யவும். உரை தானாகவே மடிந்து உரைச் சட்டகத்திற்கு ஏற்றவாறு அமையும்.
4. பொருளின் விளிம்பில் தட்டச்சு தோன்றும். எல்லைகளை நீக்கிவிட்டு அதன் வடிவத்தில் உறுதியாக அமைகிறது.
5. Overflow குறியீடு தோன்றினால் உரைச் சட்டகத்தின் தேர்வை நீக்கி, தேர்வுக் கருவியை கருவிப் பலகத்தில் இருந்து தேர்வு செய்து உரைச் சட்டகத்தில் ஒரு மூலையில் இழுக்கவும்.
6. தேர்வுக்கருவியை தேர்வு செய்யவும் (அ) தட்டச்சு கருவியை மீண்டும் தேர்வு செய்யவும்.
19.
1.Start - > All programs - > Adobe InDesign CC 2019 என்பதை தேர்வு செய்யவும் . ( அ ) InDesign திரைமுகப்பில் உள்ள குறுக்கு வழியைத் தேர்வு செய்யவும் .
2."Welcome to InDesign " என்ற சன்னல் திரை திறக்கப்படும் .இப்பொழுது Create New பொத்தானைக் கிளிக் செய்யவும் .
3.இப்பொழுது New Document window புதிய ஆவண சன்னல் திறக்கப்படும் .
4.புதிய ஆவணத்தில் அடிப்படை தேர்வுகளை பொருத்துவதற்கு New Document உரையாடல் பெட்டியில்
Category தத்தலில் உள்ள Print , Web (அ) Mobile - ஐ தேர்வு செய்யவும் .
5.Width and Height , orientation , Pages , Start , Columns போன்ற தேர்வுகளை ஏற்கனவே தேர்வுசெய்யப்பட்ட தொகுதியில் குறிப்பிடவும்.
6.முன்பே இருத்தப்பட்ட அமைப்புகளோடு ஆவணத்தை திறக்க Create பொத்தானைக் கிளிக் செய்யவும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards