12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Science பைத்தானில் C++ நிரல்களை தருவித்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Science பைத்தான் மற்றும் CSV கோப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Science வினவல் அமைப்பு மொழி (SQL) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Science தரவுதள கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Science சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Science பைத்தான் செயற்கூறுகள் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/10/2019
அடோப் இன்டிசைன் CC 2019
12ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
கருவி பலகத்திலுள்ள வரைபட சட்டங்கள் எத்தனை? அவை யாவை?
2.
பெரிதாக்குதலுடன் (Zooming) தொடர்புடைய சார்புகளுக்கான அனைத்து விசைப்பலகை குறுக்குவழிகளை பற்றி எழுதுக
3.
InDesign -ல் உள்ள View கட்டளைகள் யாவை?
4.
கருவி பலகத்தில் (Tools panel) உள்ள ஏதேனும் 3 கருவிகளை பற்றி எழுதுக
5.
கருவி பலகத்தை ( Tools panel ) பற்றி விரிவாக விளக்கவும்
6.
வரைகலை சட்டத்தில் எவ்வாறு படத்தை சேர்ப்பாய் படிநிலைகளை எழுதுக.
7.
ஆவணத்தில் உரையினை வைக்க படிநிலைகளை எழுதுக
8.
பாதையில் ஒரு வகையினை உருவாக்க படிநிலைகளை எழுதுக
9.
சிறு குறிப்பு எழுதுக
(i) பயன்பாட்டு பட்டை (Application bar)
(ii) ஆவண தொகுதி (Document Tab)
(iii) கருவி பலகம் (Tools panel)
10.
InDesign-ல் புதிய ஆவணத்தை உருவாக்குவதற்கான படிநிலைகளை எழுதுக
1.
வரைகலை சட்டங்களை வரைவதற்கு கருவிகள் பலகம் மூன்று கருவிகளை கொண்டுள்ளது .
1.Ellipse சட்டகம் - நீள்வட்ட மற்றும் வட்ட சட்டங்களை உருவாக்கலாம்.
2.Rectangle சட்டகம் - செவ்வக மற்றும் சதுர சட்டங்களை உருவாக்கலாம் .
3.Polygon சட்டகம் - சமபக்க பலகோண சட்டங்களை உருவாக்கலாம் .
2.
● Ctrl + = அழுத்தவும் - பெரிதாக்குதல்
● Ctrl + - அழுத்தவும் - சிறிதாக்குதல்
● Ctrl + 1 பக்கத்தை அதன் சரியான அளவில் காணுதல்
● Ctrl + 2 பக்கத்தை 200% அளவில் காணுதல்
● Ctrl + 0 ஆவண சன்னலில் முழு பக்கத்தையும் பொருத்துதல்
● Alt + Ctrl + ஆவண சன்னலில் முழு பரவலையும் பொருத்துதல்
● Ctrl + Spacebar (or)
● Ctrl + Alt + Spacebar தற்காலிகமாக Zoom கருவியை அணுகுதல் (பெரிதாக்க அல்லது சிறிதாக்க)
3.
1. பெரிதாக்குதல் (Zoom in)
2. சிறிதாக்குதல் (Zoom Out)
3. Actual Size
4. Fill page in window
5. Fit spread in window
6. Entire pasteboard
4.
1. தேர்ந்தெடுப்புக் கருவி :
இது பொருட்களை அல்லது பொருட்களின் தொகுதியை தேர்ந்தெடுக்க பயன்படுகிறது. V என்ற பொத்தானை அழுத்தி இந்தக் கருவியை தேர்ந்தெடுக்கலாம்.
2. நேரடி தேர்வு கருவி( Direct selection tool ) :
இது ஒரு குழுவில் இருந்து ஒரே ஒரு பொருளை தேர்ந்தெடுக்க உதவுகிறது . (A வை அழுத்தவும்) உதவுகிறது.
(Group கட்டளை மூலம் பல்வேறு தனித்தனி பொருள்கள் குழுவாக சேர்ந்துள்ளன). அல்லது ஒரு பொருளின் பாதையில் ஒன்று அல்லது பல புள்ளிகளைத் தேர்ந்தெடுக்கிறது
3. இடைவெளி கருவி (Gap tool ) :
இந்த இடைவெளிக்கருவி (Gap tool) பொருள்களுக்கு இடையே உள்ள இடைவெளியை சரிசெய்யப் பயன்படுகிறது. இந்தக் கருவியைத் தேர்ந்தெடுக்க U என்ற பொத்தானை அழுத்தவும்.
5.
InDesign-ல் இருக்கும் அனைத்து கருவிகளும் இந்த கருவிகள் பலகத்தில் இருக்கின்றன. பொருளை உருவாக்கும் கருவிகள் (Rectangle கருவி) பொருளை உருமாற்றும் (Transforming) கருவிகள் (Rotate கருவி), பக்க காட்சியை மாற்றுதல் மற்றும் பணித்தளத்திற்கு செல்லுதல் கருவிகள் (Zoom கருவி மற்றும் Hand கருவி) ஆகிய கருவிகள் உள்ளன. சில கருவிகளின் கீழ் வலது மூலையில் ஒரு சிறிய முக்கோணம் இருக்கும். மேலும் கூடுதலான கருவிகள் அந்த கருவியின் கீழ் உள்ளன. என்பதை இந்த முக்கோணம் குறிக்கும். கிளிக் செய்து அழுத்தி பிடிப்பதன் மூலம் மறைந்திருக்கும் கருவிகளைக் காணலாம்.
கருவிப்பலகமானது.
1. தேர்ந்தெடுப்புக் கருவிகள்
2. அடிப்படை வடிவங்களை வரைவதற்கான கருவிகள்
3. வரைதல் மற்றும் புதுப்பித்தல் கருவிகள்
4. பரிமாற்றம் கருவிகள்
5. உரை பதிப்பித்தல் கருவிகள்
6. நகர்தல் கருவிகள்
7. பொருள் வடிவமைப்பு கருவிகள் , போன்றவற்றை கொண்டுள்ளது தானமைவாகக் கருவிப்பலகம் , கட்டுப்பாடுப் பலகத்திற்கு கீழே உள்ளது .ஆவண சன்னலின் இடது புறம் உள்ள கருவி பலகத்தில் அனைத்து கருவிகளும் காணப்படும் .
6.
வரைகலை சட்டகம் பிற மென்பொருள் நிரலில் உள்ள படங்களைத் தருவிக்கப் பயன்படுகிறது.
1. வரைகலைச் சட்டகத்தை உருவாக்கவும்
2. File > Place என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Place உரையாடல் பெட்டி தோன்றும்.
3. சட்டகத்தில் செருக விரும்பும் படத்தைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.
4. Open மீது கிளிக் செய்யவும்.
7.
1. பட்டிப்பட்டையில் இருந்து File → Place ஐ தேர்வு செய்யவும்.
2. Place உரையாடல் பெட்டி தோன்றும்.
3. இருத்தப்பட வேண்டிய உரைக் கோப்பை தேர்வு செய்து Place உரையாடல் பெட்டியின் வலது பக்கத்தில் உள்ள Open பொத்தானைக் கிளிக் செய்யவும்.
4. செருகும் புள்ளி செறிவூட்டப்பட்ட உரை செருகும் புள்ளியாக மாறுகிறது. ஆவணத்தில் உரை செருகுவதற்குத் தயாராக உள்ளது என்பதைத் தெரிவிக்கிறது.
5. உரையை இருத்துவதற்கு கிளிக் செய்யவும் (அ) புதிய உரைச் சட்டகத்தை உருவாக்குவதற்கு கிளிக் செய்து இழுக்கவும்.
6. உரையை உரைச்சட்டகத்தில் இருத்த முடியவில்லை எனில், ஒரு சிவப்பு + குறியானது. உரைசட்டகத்தின் கீழ் வலது எல்லையில் Overflow குறியீடாகத் தோன்றும்.
7. இந்த Overflow குறியீட்டை கிளிக் செய்தால் மீதமுள்ள உரை செருகும் புள்ளியில், கூடுதல் உரைச் சட்டகத்தில் உரையைச் சேர்ப்பதற்காக ஏற்றப்படுகிறது. உரையானது கிளிக் செய்யும் பொழுது இருத்தப்படும்.
8.
1. கருவிப் பலகத்தில் பாதைக் கருவியில் உள்ள தட்டச்சை தேர்வு செய்யவும்.
2. தட்டச்சை சேர்க்க பாதையின் விளிம்பில் கிளிக் செய்யவும். (திறந்து அல்லது மூடி) உரைச் சட்டகத்தில் ஒரு ஒளிரும் செருகும் புள்ளி தோன்றும். பொருளில் எல்லை நீக்கப்படும்.
3. ஏதேனும் ஒரு உரையைத் தட்டச்சு செய்யவும். உரை தானாகவே மடிந்து உரைச் சட்டகத்திற்கு ஏற்றவாறு அமையும்.
4. பொருளின் விளிம்பில் தட்டச்சு தோன்றும். எல்லைகளை நீக்கிவிட்டு அதன் வடிவத்தில் உறுதியாக அமைகிறது.
5. Overflow குறியீடு தோன்றினால் உரைச் சட்டகத்தின் தேர்வை நீக்கி, தேர்வுக் கருவியை கருவிப் பலகத்தில் இருந்து தேர்வு செய்து உரைச் சட்டகத்தில் ஒரு மூலையில் இழுக்கவும்.
6. தேர்வுக்கருவியை தேர்வு செய்யவும் (அ) தட்டச்சு கருவியை மீண்டும் தேர்வு செய்யவும்.
9.
i) பயன்பாடு பட்டை :
1. இது பணித்தளத்திற்கு மேல் உள்ளது .இதில் பல படிகள் உள்ளன .
2. பட்டியை திறக்க , பயன்பாட்டு பட்டையில் உள்ள பட்டியின் பெயரை கிளிக் செய்யவும் .
3. ஒவ்வொரு பட்டியும் பட்டி வகையோடு தொடர்புடைய கட்டளையை பட்டியலிடும்.
ii) ஆவண தத்தல் :
1. கிடைமட்ட ரூலர்க்கு மேல்பகுதியில் உள்ளது .
2. ஆவணத்தின் பெயர் , உருப்பெருக்கத்தின் நிலை மற்றும் மூடு பொத்தான் ஆகியவற்றைக் கொண்டுள்ளது
3. ஒன்றிற்கு மேற்பட்ட ஆவணங்கள் திறந்திருந்தால் , ஒவ்வொரு ஆவணத்திற்கும் ஒரு தத்தல் தோன்றும் மற்றும் ஆவண தத்தல்கள் கிடைமட்ட வரிசையில் தோன்றும்
4.ஆவண தத்தலை கிளிக் செய்து , அந்த ஆவணத்தைச் சன்னல் திரையில் காணலாம்
iii) கருவிகள் பலகம் :
1.InDesign - ல் இருக்கும் அனைத்து கருவிகளும் கருவிகள் பலகத்தில் இருக்கின்றன .
2.பொருளை உருவாக்கும் கருவிகள் , பொருளை உருமாற்றும் கருவிகள் , பக்கக் காட்சியை மாற்றுதல் மற்றும் பணித்தளத்திற்கு செல்லுதல் கருவிகள் ஆகிய கருவிகள் உள்ளன .
10.
1.Start - > All programs - > Adobe InDesign CC 2019 என்பதை தேர்வு செய்யவும் . ( அ ) InDesign திரைமுகப்பில் உள்ள குறுக்கு வழியைத் தேர்வு செய்யவும் .
2."Welcome to InDesign " என்ற சன்னல் திரை திறக்கப்படும் .இப்பொழுது Create New பொத்தானைக் கிளிக் செய்யவும் .
3.இப்பொழுது New Document window புதிய ஆவண சன்னல் திறக்கப்படும் .
4.புதிய ஆவணத்தில் அடிப்படை தேர்வுகளை பொருத்துவதற்கு New Document உரையாடல் பெட்டியில்
Category தத்தலில் உள்ள Print , Web (அ) Mobile - ஐ தேர்வு செய்யவும் .
5.Width and Height , orientation , Pages , Start , Columns போன்ற தேர்வுகளை ஏற்கனவே தேர்வுசெய்யப்பட்ட தொகுதியில் குறிப்பிடவும்.
6.முன்பே இருத்தப்பட்ட அமைப்புகளோடு ஆவணத்தை திறக்க Create பொத்தானைக் கிளிக் செய்யவும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Science கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Science பைத்தான் அறிமுகம் - மாறிகள் மற்றும் செயற்குறிகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Science நெறிமுறையின் யுக்திகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Science வரையெல்லை Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards