12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
கோரல்ட்ரா 2018
12ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
______ சாவி சமமான தேர்வு செய்யப்பட்ட பொருளின் பிரதியினை உருவாக்க உதவுகின்றது.
Ctrl + D
Ctrl + C
Ctrl + S
Ctrl + A
2.
______ சாவி ஒரு பொருளை தேர்வு செய்ததை நீக்க உதவுகின்றது.
ESC
Ctrl
Shift
Delete
3.
Corel Drawவில் ஒரு ஆவணத்தை மூட ______ னை அழுத்த வேண்டும்.
Ctrl + F4
Ctrl + F3
Shift + F4
Alt + F4
4.
வட்டத்தை வரைய அந்த கருவி உதவுகின்றது?
Shape கருவி
Ellipse கருவி
Rectangle கருவி
Crop கருவி
5.
எந்த கருவி ஒரு பொருளினை தேர்வு செய்ய உதவுகின்றது?
shape கருவி
zoom கருவி
Pick கருவி
Crop கருவி
6.
குழுவாக்கப்பட்ட பொருளின் குழுவாக்கத்தை நீக்க படிநிலைகளை எழுதுக.
7.
பொருட்களை குழுவாக்க படிநிலைகளை எழுதுக.
8.
Corel Draw வில் கலைத்திறனுள்ள ஊடக கருவி (Artistic Media tool) ஏன் பயன்படுத்தப்படுகின்றது?
9.
Corel Draw வில் ரூலர் (Ruler) ஏன் பயன்படுத்தப்படுகின்றது.
10.
Corel Draw வில் பண்பு பட்டை (Property Bar) என்றால் என்ன?
11.
பொருள்களை வெல்டிங் செய்வதன் மூலம் என்ன பெற முடியும்? பொருள்களை வெல்டிங் செய்வதற்கான படிநிலைகளை எழுதுக.
12.
பொருட்களின் பிரதி மற்றும் பொருட்களின் நகலியினை எவ்வாறு உருவாக்குவாய்? இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை எழுதவும்.
13.
ஒரு பொருளுக்கு நிரப்பு வண்ணத்தையும் மற்றும் எல்லைகோட்டின் வண்ணத்தையும் எவ்வாறு குறிப்பிடுவாய்?
14.
ஒரு கோட்டினை அம்புகுறியாக மாற்றுவதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?
15.
Corel Draw வில் பிழைகளை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? அதனை செய்வதற்கான விசைப்பலகை குறுக்கு வழி என்ன?
16.
பாதையில் உரையினை பொருத்துதல் பற்றி விரிவாக எழுது.
17.
கட்டங்களை (Grid) வரைய படிநிலைகளை எழுதுக.
18.
Corel Draw வில் எவ்வாறு ஒரு நட்சத்திரத்தை உருவாக்குவாய்?
19.
சுருளினை (Spiral) வரைய படிநிலைகளை எழுதுக.
1.
(a)
Ctrl + D
2.
(c)
Shift
3.
(a)
Ctrl + F4
4.
(b)
Ellipse கருவி
5.
(c)
Pick கருவி
6.
1. Pick கருவி கொண்டு குழுவாக்கப்பட்ட பொருளைத் தேர்வு செய்யவும்.
2. பட்டி பட்டையிலிருந்து Object > Group > Ungroup Objects என்பதைத் தேர்வு செய்யவும் (அ) விசைப்பலகையிலுள்ள Ctrl + U வை அழுத்தவும் (அ) Property பட்டையிலுள்ள Ungroup objects என்பதைக் கிளிக் செய்யவும்.
7.
1. Pick கருவி கொண்டு பொருள்களைத் தேர்வு செய்யவும். பல பொருள்களைத் தேர்வு செய்ய Shift சாவியினை அழுத்தியவாறு தேர்வு செய்யவும்.
2. Object > Group > Group objects தேர்வு செய்யவும் (அ) Ctrl + G யைத் அழுத்தவும்.
8.
Corel DRAW-ல் கலைத்திறனுள்ள ஊடகக் கருவி. ஆவணத்தில் கலை தூரிகை, தெளிப்பு மற்றும் calligraphic விளைவுகளைச் சேர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.
9.
ரூலர்கள் ஒரு ஆவணத்தில் பொருட்களின் அளவு மற்றும் நிலையைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
10.
இயக்கத்தில் உள்ள கருவி அல்லது பொருள் தொடர்பான கட்டளைகளுடன் ஒரு நீக்கக்கூடிய பட்டையாகும்.
எ கா : செவ்வக கருவி தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தால், செவ்வகத்தை உருவாக்கும் மற்றும் செவ்வகத்தைத் திருத்தும் கட்டளைகளைக் காட்டும்.
11.
1. வெல்டிங் செய்வதன் மூலம் ஒழுங்கற்ற வடிவங்களை உருவாக்க முடியும்.
2. Property பட்டை கொண்டு கருவி பொருள்களை வெல்டிங் செய்ய
i). Pick கருவி கொண்டு (அ) Shift சாவியினை அழுத்தியவாறு பொருள்களைத் தேர்வு செய்யவும்.
ii). Object > Shaping > Weld என்ற கட்டளையினை பட்டிப் பட்டையிலிருந்து தேர்வு செய்யவும் (அ) Property பட்டையிலுள்ள Weld பொத்தானைக் கிளிக் செய்யவும்.
3. பொருள்கள் வெல்டிங் செய்யப்பட்டு. ஒரே எல்லைகோடு கொண்ட பொருளாக மாறும்.
12.
1. தேர்வு செய்யப்பட்ட பொருளை நகல் எடுக்க, பட்டிப் பட்டையிலிருந்து Edit > Duplicate என்பதைத் தேர்வு செய்யவும் (அ) விசைப் பலகையில் Ctrl+D என்பதை அழுத்தவும்.
2. தேர்வு செய்யப்பட்ட பொருளின் நகலி (Clone) யை உருவாக்க Edit > Clone என்பதைப் பட்டிப் பட்டியிலிருந்து தேர்வு செய்யவும்.
3. நகலி செய்தல் மற்றும் பிரதி எடுத்தலுக்குள்ள வேறுபாடு: அசல் பொருளின் மீது செய்யப்படும் அனைத்து மாற்றங்களும் நகலி மீதும் தானாகவே செயற்படுத்தப்படும்.
13.
1. Pick கருவியைப் பயன்படுத்தி பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
2. வண்ணத்தட்டில் ஏதாவது ஒரு வண்ணத்தைக் கிளிக் செய்யவும்.
3. தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளுக்கு வண்ணங்கள் சேர்ந்திருக்கும்.
4. வண்ணத்தட்டில் உள்ள ஏதாவது ஒரு வண்ணத்தில் வைத்து வலது பொத்தானைக் கிளிக் செய்யவும்.
5. தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளின் ஓர வண்ணம் (அ) எல்லைக்கோட்டின் வண்ணம் மாறியிருக்கும்.
14.
1. Freehand கருவி மூலம் ஒரு கோடு வரையவும்.
2. கோட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
3. பண்புப்பட்டையில் உள்ள End Arrow head Selector கீழிறங்கு பட்டிப் பெட்டியில் கிளிக் செய்யவும்.
4. பின் தேவையான அம்புக்குறி முனையைத் தேர்வு செய்யவும்.
15.
1. Corel DRAW வில் பிழைகளைச் சரிசெய்ய மிக சமீபத்தில் செய்த செயலில் ஆரம்பித்து Undo வரையும் பொழுது செய்த செயல்களை எல்லாம் Undo செய்ய முடியும். (அல்லது)
2. ஒரு வரைபடத்தின் கடைசியாக சேமிக்கப்பட்ட நிலைக்கு பின் செல்லலாம்.
3. Undo செய்வதற்கான விசைப்பலகைக் குறுக்குவழி Ctrl+Z.
16.
1. எந்த வடிவ பாதையிலும் உரைச் சரத்தை பொருத்த CorelDraw அனுமதிக்கின்றது.
2. அது நேர் (அ) வளைந்த கோடு, ஒரு செவ்வகம், ஒரு நீள் வட்டம் அல்லது மற்றொரு எழுத்து அல்லது உரை சரம் என பல வடிவ பாதைகளாக இருக்கலாம்.
3. உரையினை பாதையில் பொருத்துவதற்கு Text பட்டியிலிருந்து Fit text to path கட்டளையைப் பயன்படுத்தவும்.
4. இந்த கட்டளையானது உரை பொருளையும் மற்றும் உரை அல்லாத பொருளையும் ஒரே நேரத்தில் தேர்ந்தெடுக்கும் பொழுது மட்டுமே கிடைக்கும்.
உரையினை பாதையில் பொருத்துதல் :
1. Pick கருவி மற்றும் Shift சாவி கொண்டு உரை பொருளையும் மற்றும் இரண்டாவது பொருளையும் தேர்வு செய்யவும்.
2. Text பட்டியிலிருந்து Fit Text to path என்பதைத் தேர்வு செய்யவும்.
3. இரண்டாவது பொருளின் பாதையின் வழி உரையானது மீண்டும் வரையப்படுகின்றது.
17.
1. பலகோண (Polygon) கருவியின் மீது அழுத்திக் கொண்டே இருந்தால் flyout பட்டி தோன்றி மேலும் பல கருவிகளைக் காட்டும்.
2. flyout பட்டியில் உள்ள Graph Paper கருவியைக் கிளிக் செய்யவும்.
3. பண்புபட்டையில் உள்ள மேல் மற்றும் கீழ்ப் பகுதியில் நெடுவரிசை மற்றும் வரிசைகளின் எண்ணிக்கையை உள்ளிடவும்.
4. வரையும் பகுதியில் எங்கு கட்டகம் தோன்ற வேண்டுமோ அங்கு கிளிக் செய்யவும்.
5. சுட்டியை கிடைமட்டமாக இழுப்பதன் மூலம் வேண்டிய கட்டகம் வரைய முடியும்.
6. மையப் புள்ளியிலிருந்து வெளிப்புறமாக கட்டங்கள் வரைய Shift விசையை அழுத்தியவாறு நகர்ந்த வேண்டும். கட்டங்களை சதுர வடிவில் அமைக்க Ctrl விசையை அழுத்தியவாறு நகர்ந்த வேண்டும்.
18.
1. பலகோண (Polygon) கருவியின் மீது அழுத்திக் கொண்டே இருந்தால் flyout பட்டி தோன்றி மேலும் பல கருவிகளைக் காட்டும்.
2. flyout பட்டியில் உள்ள நட்சத்திரக் கருவியைக் கிளிக் செய்யவும்.
3. வரையும் பகுதியில் எங்கு நட்சத்திரம் வர வேண்டுமோ அங்கு சுட்டியின் இடது பொத்தனை அழுத்திப்பிடித்தவாறு இழுத்து நகர்த்தவும்.
4. நட்சத்திர உருவம் உருவானவுடன் சுட்டியின் பொத்தானை அழுத்துவதை விட்டு விடவும்.
19.
1. பலகோண (Polygon) கருவியின் மீது அழுத்திப் பிடித்தவாறே இருந்தால் flyout பட்டி தோன்றி மேலும் பல கருவிகளைக் காட்டும்.
2. flyout பட்டியில் உள்ள சுருள் (Spiral) கருவியைக் கிளிக் செய்யவும்.
3. நீங்கள் பண்பு பட்டையில் உள்ள சுருள் சுழற்சி, பெட்டியில் எண்ணிக்கையைக் கொடுப்பதன் மூலம் தேவையான வட்டம் உடைய புதிய சுருள் அமைப்பை உருவாக்க முடியும்.
4. பின் பண்பு பட்டையில் கீழ்கண்ட ஏதேனும் ஒரு பொத்தானை கிளிக் செய்யவும்.
i) சமசீர் சுருள் (Symmetrical spiral)
ii). மடக்கை சுருள் (Logarithmic spiral)
5. சுழற்சியை வெளிப் புறமாக நகர்த்தும் போது சுருள் விரிவாக்க அளவுகளை விரும்பினால் spiral expansion slider ஐ நகர்த்தவும்.
6. வரையும் சன்னல் திரையில் நமக்கு வேண்டிய அளவு உள்ள சுருள் வரும் வரை சுட்டியை கிடைமட்டமாக இழுக்கவும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards