12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
வேளாண் கடன் வழங்கும் துறையின் பணிகளைக் குறிப்பிடுக.
2.
வெளி அங்காடி நடவடிக்கை என்பதன் பொருள் கூறுக.
3.
4.
தேக்கவீக்கம் என்றால் என்ன?
5.
பொன் திட்டம் என்றால் என்ன?
6.
பண்டப்பணம் என்றால் என்ன?
7.
பணத்தின் இலக்கணம் வரைக.
8.
பணமதிப்பு நீக்கத்தின் நோக்கங்களைக் குறிப்பிடுக.
9.
பண அங்காடியையும், மூலதன அங்காடியையும் வேறுபடுத்துக.
10.
நபார்டின் பணிகள் யாவை?
11.
வங்கியல்லா நிதியமைப்புகளைப் பற்றி சிறு குறிப்புத் தருக.
12.
13.
பண அளிப்பினைத் தீர்மானிக்கும் காரணிகள் யாவை?
14.
உலோகப் பணம் பற்றி ஒரு குறிப்பு வரைக.
15.
இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விவரிக்க.
16.
வணிக வங்கிகளின் பணிகளை விளக்குக
17.
ஒரு பொருளாதாரத்தில் பணவீக்கத்திற்கான காரணங்கள், விளைவுகள் யாவை?
18.
பணத்தின் பணிகளை விளக்குக.
19.
1.
1. நிபுணத்துவம் பெற்ற அலுவலரை நியமித்து வேளாண் கடன் தொடர்பான அனைத்து வினாக்களையும் ஆய்வு செய்வது.
2. மைய அரசு, மாநில அரசு, மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் இதர வங்கி நடவடிக்கைகளில் நிபுணத்துவம் வாய்ந்த ஆலோசனைகளை வழங்குவது.
3. ஊரகத் துறைக்குத் தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மூலமாக வேளாண்மைக் கடன் வழங்குவது மேலும் அவைகளை ஒருங்கிணைப்பது ஆகியவையாகும்.
2.
1. ஒரு குறுகிய அளவில் பார்க்கும் பொழுது, மைய வங்கியானது பொதுச் சந்தையில் அரசின் கடன் பத்திரங்களை வெளியிடுவதும் திரும்பப்பெறுவதும் வெளிச்சந்தை நடவடிக்கைகள் எனப்படுகின்றது.
2. மைய வங்கி அரசின் கடன் பத்திரங்களை மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களின் தகுதி படைத்த பத்திரங்களையும் விற்பனை செய்வதும், திரும்பப் பெறுவதும் ஆகும்.
3.
4.
தேக்கவீக்கம் என்பது பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலையும் வேலை வாய்ப்பின்மையும், அதிக அளவிலான பண வீக்கமும் ஒன்றிணைந்த சூழ்நிலை ஆகும்.
5.
1. ஒரு பணத்தின் அலகு ஒரு குறிப்பிட்ட எடையிலான பொன் அளவினால் வரையறுக்கப்பட்டிருந்தது.
2. ஒரு பண அலகின் வாங்கு திறன் அப்பொன் பணத்தின் எடை சமமாக நிர்வகிக்கப்பட்டு வந்தது.
6.
1. பண்டப்பணம் என்பது அதன் தயாரிக்கப்பட்ட பண்டத்திலிருந்து பெறப்படுகிறது.
2. பண்டத்தின் உபயோகத்தை பொருத்து அதன் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது.
7.
"பணம் எதைச் செய்கிறதோ, அதுதான் பணம்" என்று வாக்கர் கூறுகிறார்.(அல்லது)
“பரிவர்த்தனைகளில் பொது ஏற்புத்தன்மை கொண்ட ஒரு இடையீட்டுக்கருவியாகவும், மதிப்பளவை மதிப்பினை இருப்பு வைத்தல் ஆகியவற்றினைச் செய்யும் ஒன்றாகவும் இருப்பது பணம் ஆகும்” என்று கிரெளதர் கூறுகிறார்.
8.
பணமதிப்பு நீக்கம் : பணமதிப்பு நீக்கம் என்பது அரசின் சட்டப்படியான பணத்தொகுப்பிலிருந்து குறிப்பிட்ட அலகிலான பணத்தின் மதிப்பைச் செல்லாது என அறிவிக்கும் செயலாகும்.
பணமதிப்பு நீக்கத்தின் நோக்கங்கள் :
1. கருப்புப் பணத்தை ஒழிப்பது.
2. இலஞ்சத்தைத் தடுப்பது.
3. தீவிரவாதத்திற்குப் பணம் செல்வதை தடுப்பது
4. கள்ளப் பணத்தைத் தடுப்பது ஆகியன.
9.
| பணச்சந்தை | மூலதனச்சந்தை | |
| 1 | அதிக நீர்மைத் தன்மையைக் கொண்டதும் குறுகிய காலத்தில், முதிர்ச்சியுறுவதுமான நிதிக்கருவிகளைக் கையாளும் அங்காடியே பண அங்காடி. | நீண்ட கால நிதிக் கருவிகளை வாணிபம் செய்யும் அங்காடி மூலதன அங்காடி |
| 2 | ஒருநாள் முதற்கொண்டு ஒரு ஆண்டிற்குள் முதிர்ச்சியடையும் நிதிக் கருவிகள் இவ்வங்காடியில் கையாளப்படுகின்றன. | உற்பத்தி நோக்கில் நிறுவனங்களும் அரசுக்குத் தேவைப்படும் நிதியைத் திரட்டும் இடமாகவும் மூலதன அங்காடி இருக்கிறது. |
| 3 | இங்கு கையாளப்படும் நிதிக்கருவிகள் அரசு பத்திரங்கள், வணிகப் பத்திரங்கள், அழைப்புப் பணம், வைப்புச் சான்றுகள், வங்கியாளர் ஏற்புகள், மாற்றுச் சீட்டுகள், மறு வாங்கல் ஒப்பந்தங்கள், கருவூல உறுதிச் சீட்டுகள் அயல் நாட்டுச் செலாவணிகள் போன்றவை.. | மூலதன அங்காடியில் பயன்படுத்தப்படும் பாரம்பரியமான நிதிக்கருவிகள், கடன் பத்திரங்களும், சமபங்குகளும் ஆகும் . |
10.
1. நபார்டு வங்கி ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் அனைத்து வகையான உற்பத்திக்காகவும் முதலீட்டுக்காகவும், வேளாண்மை, சிறுதொழில்கள், குடிசை மற்றும் கிராமத் தொழில்கள், கைவினைத் தொழில்கள், இதர ஊரக தொழில் நடவடிக்கைகளுக்கான மறுகடனை வழங்குகிறது.
2. இது மாநில கூட்டுறவு வங்கிகள், வட்டார ஊரக வங்கிகள், நிலவள வங்கிகள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றால் ஏற்பளிக்கப்படும் இதர நிதிநிறுவனங்கள் ஆகியவற்றிற்கு குறுகிய கால, மத்தியகால மற்றும் நீண்டகால கடன்களை வழங்குகிறது.
3. கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்களின் பங்கு முதலீட்டை வழங்கும் பொருட்டு மாநில அரசுகளுக்கு 20 ஆண்டு நீண்ட கால கடன்களை நபார்டு வங்கி வழங்குகிறது.
4. மைய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது வேளாண்மை, ஊரக வளர்ச்சி ஆகியவற்றிற்கான பங்கு மூலதனம் அல்லது கடன் பத்திரங்களை பெற்றிருக்கும் நிறுவனங்களுக்கு நீண்ட கால கடனை அளிக்கிறது.
5. மைய அரசு, மாநில அரசுகள், திட்டக்குழு, மைய, மாநில அரசுகளின் - சிறுதொழில்கள், குடிசைத் தொழில்கள், கிராமத் தொழில்கள், கைவினைத் தொழில்கள், இதர மிகச்சிறு தொழில்களுக்கு உதவும் நிறுவனங்களை ஒருங்கிணைத்து வருகிறது.
6. நபார்டு வங்கி, வட்டார ஊரக வங்கிகள், துவக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களை தவிர்த்த அனைத்து கூட்டுறவு வங்கிகளையும் ஆய்வு செய்யும் பணியைச் செய்கிறது.
7. வேளாண்மைக்கும் ஊரக வளர்ச்சிக்குமான ஆய்வுகளை மேம்படுத்தும் விதமாக ஆய்வு மற்றும் வளர்ச்சி நிதியினை பராமரிக்கிறது.
11.
1. ஒரு வங்கியல்லா நிதி நிறுவனம் அல்லது வங்கியல்லா நிதி நிறுமம் என்பது ஒரு நிதி நிறுவனம் ஆகும்.
2. அது முழு வங்கிக்கான உரிமம் கொண்டதும் அல்ல, மைய வங்கியால் கண்காணிக்கப்படுவதும் இல்லை.
3. வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் முழுமையான வங்கிப் பணிகளைச் செய்யாமல் மற்ற நிதிப் பரிமாற்றங்களை மேற்கொள்கின்றன.
4. அவை வைப்புகளைப் பெற்றுக்கொண்டு கடன்களை வழங்குகின்றன.
5. மக்களின் சேமிப்பைத் திரட்டி முதலீட்டு நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிக்கின்றன. அவை கடன் பெற்று கடன் வழங்குகின்றன.
6. அவை பண அங்காடியிலும் மூலதன அங்காடியிலும் செயல்படுகின்றன.
7. ஒரு வங்கியல்லா நிதி நிறுவனம் இருவகைப்படும். அவை, பங்குச்சந்தை மற்றும் இதர நிதி நிறுவனங்கள் ஆகும். (எ.கா.) நிதி நிறுவனங்கள், நிதி கழகங்கள், சீட்டு நிறுவனங்கள். கட்டிட சங்கங்கள், முதல்நிலை பங்கு வெளியீட்டு நிறுவனங்கள், முதலீட்டு அமைப்புகள், யூனிட் டிரஸ்ட் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள்.
12.
13.
1. ரொக்க வைப்பு விகிதம் (Cash Deposit Ratio - CDR) : இது பொதுமக்கள் கையில் வைத்திருக்கும் பணம்/ வங்கி வைப்புகளில் உள்ள பணம் என்ற விகிதத்தை குறிக்கும்.
2. ரொக்க இருப்பு வைப்பு விகிதம் (Reserve Deposit Ratio - RDR): வங்கி தனது பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருக்கும் இருப்பு மற்றும் மைய வங்கியில் வைத்திருக்கும் ரொக்க வைப்பு / மொத்த வைப்புகள் என்ற விகிதம்.
3. ரொக்க இருப்பு விகிதம் (Cash Reserve Ratio - CRR) : "வங்கியில் வைப்புகளில் குறைந்தபட்சமாக மைய வங்கியில் வைக்க வேண்டிய அளவு/ வங்கிகளில் செலுத்தப்பட்ட மொத்த வைப்புகள்" என்ற விகிதம்.
4. சட்டபூர்வ நீர்மை விகிதம் (Statutory Liquidity Ratio - SLR) : " வணிக வங்கிகள் வைத்திருக்கும் நீர்மை தன்மையிலான சொத்துக்கள்/ வணிக வங்கிகளில் இருக்கும் மொத்த கேட்பும் மற்றும் கால வைப்புகளும்" என்ற விகிதம்.
14.
உலோகத் திட்டம் (Metallic Standard) :
1. பண்டமாற்று முறை, பண்டப் பணமுறைக்குப் பின் புதிய பண முறைகள் தோன்ற ஆரம்பித்தது. அதில் முதன்மையானது உலோகப் பணத்திட்டம் ஆகும்.
2. உலோகத்திட்டத்தில் தங்கம், வெள்ளி போன்ற ஏதாவது ஒரு உலோகம் பணத்தின் திட்ட மதிப்பினை நிர்ணயிக்கப் பயன்படுத்தப்பட்டது.
3. உலோகத் திட்டத்தின் கீழ் உலோக நாணயங்கள் பணமாக உருவாக்கப்பட்டன.
4. இந்த நாணயங்கள் முழு மதிப்புப் பணமாக அல்லது முழு நிறையுடைய சட்டமுறைப் பணமாக இருந்து வந்தன.
3. அதாவது அந்நாணயங்களில் முக மதிப்பு மற்றும் உள்ளடக்க மதிப்பு ஆகிய இரண்டும் சமமாக இருந்தன.
15.
ஒவ்வொரு நாட்டின் மைய வங்கி அந்த நாட்டின் தலைமை வங்கியாகும். இந்தியாவின் மைய வங்கி இந்திய ரிசர்வ் வங்கி என அழைக்கப்படுகிறது. 1935ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி தனது பணியினைத் துவங்கியது.
ரிசர்வ் வங்கியின் பணிகளாவன :
பண அதிகார அமைப்பு : இது இந்தியாவில் பண அளிப்பினை கட்டுப்படுத்துவதன் மூலம் அயல்நாட்டு செலாவணி பரிமாற்ற விகிதத்தினை நிலைப்படுத்துதல், சாதகமான செலுத்துநிலையைப் பேணுதல், நிதி நிலைத்தன்மையை ஏற்படுத்துதல், பண வீக்கத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் வங்கி அமைப்பை உறுதியாக்குதல் ஆகியவற்றைச் செய்கிறது.
காகிதப் பண வெளியீடு : காகிதப் பணத்தை வெளியிடுவதில் முற்றுரிமைப் பெற்ற நிறுவனம் ரிசர்வ் வங்கியாகும்.
வங்கி உரிமங்கள் வழங்குபவர் : வங்கிகள் முறைப்படுத்துதல் சட்டம், பிரிவு 22இன் படி ஒவ்வொரு வணிக வங்கியும் இந்தியாவில் வங்கித்தொழில் செய்ய மைய வங்கியிடம் உரிமம் பெற வேண்டியது அவசியம் ஆகும். இப்பணியையும் ரிசர்வ் வங்கி செய்கின்றது.
அரசுக்கான வங்கி : இது மத்திய, மாநில அரசுகளுக்கான வங்கி ஆகும். அரசுகளுக்கு குறுகியகாலக் கடன்கள், கடன் தொடர்பான சேவைகள், அரசின் கடன் பத்திரங்களை உருவாக்கி விற்பனை செய்வது மேலும் வங்கி மற்றும் நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்குவது போன்ற பணிகளைச் செய்கிறது.
வங்கிகளின் வங்கி : இது அனைத்து வங்கிகளுக்கும் தலைமை வங்கியாகும். வங்கிகளின் வைப்புகளை ஏற்று, மாற்று சீட்டுகளை மறு தள்ளுபடி செய்வதால் இது வங்கிகளின் வங்கி எனப்படுகிறது.
கடை நிலைக் கடன் ஈவோன் : வணிக வங்கிகளுக்கு தீர்க்க இயலாத நிதிச் சிக்கல்கள் ஏற்படும் பொழுது, நிதிக்கான மற்ற ஆதாரங்கள் இல்லாத சூழ்நிலையில் அச்சிக்கலில் இருந்து மீள்வதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஈட்டுக்கடனை அளித்து உதவுகிறது.
தீர்வாக செயல்படுகிறது : வங்கிகளுக்கிடையே நடக்கும் பரிமாற்றங்களை தனது 14 தீர்வகங்களைக் கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி சமன் செய்கின்றது. பரிமாற்றக் கருவிகளைப் பரிமாறிக் கொள்ள உதவுவதுடன், பரிமாற்றம் தொடர்பான அறிவுறுத்தல்களையும் வழங்குகிறது.
16.
வணிக வங்கிகள் இலாப நோக்கம் உடையவை. அவைகள் வைப்புகளைப் பெற்று முதலீட்டுக்கான கடன்களை அளிக்கின்றன.
வணிக வங்கியின் பணிகள்
முதன்மைப் பணிகள்:
வைப்புகளை ஏற்றுக்கொள்ளுதல்: பொதுமக்களால் செலுத்தப்படும் வைப்புகளை ஏற்றுக்கொள்ளுதல் ஆகும். இது வங்கி வணிகத்திற்கான முக்கிய நிதியாதாரம் ஆகும். பொது வைப்புகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
கேட்பு வைப்புகள் : இவை வங்கிகளில் வைப்புகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர் முன்னறிவிப்பின்றி எப்பொழுது வேண்டுமானாலும் பணத்தைத் தனது கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படும் ஒரு வைப்பாகும்.
கால வைப்புகள் : இவை ஒரு குறிப்பிட்ட காலவரையறை வரை வங்கிகளிடமிருந்து மீளப் பெறப்படாமல் இருக்கும் வைப்புகளாகும். (எ.கா.) நிலை வைப்பு (Fixed Deposit), தொடர் (Recurring Deposit).
கடன் வழங்குதல் :
வணிக வங்கிகள் ரொக்கக் கடன், மாற்றுச் சீட்டு தள்ளுபடி, மிகைப்பற்று ஆகிய முறைகளில் கடன்களை வழங்குகின்றன.
இரண்டாம் நிலைப் பணிகள் :
முகமைப் பணிகள்: வங்கி வாடிக்கையாளர்களுக்கு முகவராக இருந்து செய்யும் பணிகள் முகமைப்பணிகள் எனப்படுகின்றன.
காசோலைகளைப் பணமாக்குதல்: தன் வாடிக்கையாளர்களுக்காக அவர்களுக்கு வரும் காசோலைகள், மாற்றுச்சீட்டுகள் ஆகியவற்றை வங்கிகள் தீர்வகத்தின் மூலம் வசூல் செய்து கொடுக்கின்றன.
வருமானத்தைப் பெறுதல் : வணிக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வரவேண்டிய இலாப ஈவு, ஓய்வூதியம், சம்பளம், வாடகை, வட்டி ஆகியவற்றினை வசூலித்துத் தருகின்றன.
செலவுகளைச் செலுத்துகிறது: தொலைபேசிக் கட்டணம், காப்பீட்டு பிரிமியம், கல்விக் கட்டணம், வாடகை செலுத்துதல் முதலானவற்றை வணிக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்காக செய்கிறது.
பொதுப் பயன்பாட்டுப் பணிகள் :
இது வங்கிகள் தன் வாடிக்கையாளர்களுக்காக சில கூடுதல் பயன்பாடுகளை உருவாக்கும் நோக்கில் செய்யும் பணிகளைப் பொதுப் பயன்பாட்டு பணிகள் என்கிறோம்.
பாதுகாப்புப் பெட்டக வசதி : நகைகள், பங்குகள், கடன் பத்திரங்கள் முதலான மதிப்புமிக்க பண்டங்களை பாதுகாக்க, பெட்டக வசதியை வணிக வங்கிகள் தருகின்றன.
பயணக் காசோலைகளை வழங்குதல்: பயணக் காசோலைகளை வழங்குவதன் மூலம் வெளிநாட்டுப் பயணத்தின் போது பணப்பாதுகாப்பினை வழங்குகிறது.
அயல்நாட்டுச் செலாவணியைக் கையாளுதல்: ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபடும் வணிகர்களுக்கு வணிக வங்கிகள் அயல்நாட்டுச் செலாவணி வசதியைச் செய்து தருகின்றன.
நிதிமாற்றுதல்: ஒரு வங்கியிலிருந்து மற்ற வங்கிக்கு நிதியை மாற்றுவதாகும். வரைவு காசோலைகள், தொலைபேசி மற்றும் மின்னணு பரிமாற்றங்கள் மூலம் நிதி மாற்றப்படுகிறது.
கடன் உறுதியளிப்புக் கடிதம்: வாடிக்கையாளரின் கடன் நம்பகத்தன்மையைச் சான்றளிக்கும் விதமாக வணிக வங்கிகள் கடன் உறுதியளிப்பு கடிதங்களை வழங்குகின்றன.
இதர பணிகள் :
பண அளிப்பு : வணிக வங்கியின் முக்கியமான பணிகளில் ஒன்று பணப்புழக்க வேகத்தை அதிகரிப்பதன் மூலம் பண அளிப்பை அதிகரித்தல் ஆகும்.
கடன் உருவாக்கம் : கடன் உருவாக்கம் என்பது கடன்களையும், முன்பண அளிப்பினையும் அதிகரிக்கும் ஒரு செயல்.
புள்ளி விவரங்களை திரட்டுதல் : இந்திய ரிசர்வ் வங்கியை முதலான வணிக வங்கிகளும் வணிகம், தொழில், வேளாண்மை, நிதி முதலான அடிப்படைத் துறைகளின் புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன.
17.
பணவீக்கத்திற்கான காரணங்கள் :
1. பண அளிப்பு உயர்வு: காகிதப் பண அளிப்பு உயர்வினால் மொத்த தேவை அதிகரித்து பணவீக்கம் ஏற்படுகிறது.
2. செலவிடத் தகுந்த வருமான உயர்வு : மக்களின் செலவிடத் தகுந்த வருமானம் அதிகரிக்கும் பொழுது அவை பண்டங்கள், பணிகளுக்கான தேவையைத் தூண்டுகின்றன.
3. உயர்ந்து வரும் பொதுச் செலவுகள் : வளர்ச்சித் திட்டங்கள், சமுதாய நலத் திட்டங்கள் ஆகியவற்றை அமல்படுத்துதல் அரசின் செயல்பாடுகள் விரிவடைந்து வருவதால் பொதுச் செலவுகளின் அளவு கூடி வருகிறது.
4. நுகர்வோர் செலவு அதிகரித்தல் : தவணைக் கொள்முதல் முறைகளும் கடன் கொள்முதல் முறைகளும் அமல்படுத்தப்படுவதால் நுகர்ச்சிப் பண்டங்கள், பணிகளுக்கான தேவை அதிகரித்து அதன் காரணமாக விலைவாசி அதிகமாகி பணவீக்கம் ஏற்படுகிறது.
5. மலிவுப் பணக் கொள்கை : மைய வங்கியின் மலிவுப் பணக்கொள்கை பொருளாதாரத்தில் கடன் அளவை அதிகப்படுத்தும்.
6. பற்றாக்குறை நிதியாக்கம் : தொடர்ந்து பொதுச் செலவுகள் கூடிவருவதால், அரசின் வரவு செலவு திட்டத்தில் பற்றாக்குறை ஏற்படுகிறது.
7. கணக்கில் காட்டப்படாத சொத்துகள் நடவடிக்கைகள், கறுப்புப் பணம் ஆகியன: இலஞ்சம், வரி ஏய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கறுப்புப் பணமும் கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் உருவாகின்றன.
8. பொதுக்கடனை மீளச் செலுத்துதல்: உள்நாட்டில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட பொதுக்கடனை அரசு திரும்பச் செலுத்தும்பொழுது மொத்தப் பண அளிப்பில் அதிகரிப்பு ஏற்படுகிறது.
9. ஏற்றுமதி உயர்வு: ஏற்றுமதியை ஊக்கப்படுத்தும் பொழுது உள்நாட்டில் பொருள் அளிப்பு குறைந்து, விலைவாசி உயர்வு ஏற்படுகிறது.
பணவீக்கத்தின் விளைவுகள் :
அ. உற்பத்தியின் மீதான விளைவுகள் :
1. மிதமான பணவீக்கம் உற்பத்தியாளர்களுக்கும், வணிகர்களுக்கும் ஒரு ஊக்கக் காரணியாக செயல்படும்.
2. அதேசமயம் உயர் பணவீக்கம் பணத்தின் மதிப்பினைக் குறைப்பதன் மூலம், மக்களின் சேமிப்பைக் குறைக்கும்.
3. பணவீக்கத்தின் காரணமாக பணத்தின் மதிப்பு குறிப்பிடத் தகுந்த அளவு குறைவதால் நாட்டில் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கும் வெளிநாட்டு மூலதனங்கள் திரும்பிச் செல்லும்.
ஆ. பகிர்வின் மீதான விளைவுகள் : நாட்டு வருமானப் பகிர்வில் உள்ள பல்வேறு தரப்பினரையும் பணவீக்கம் பல்வேறு வகையில் பாதிக்கின்றது. அவைகள் கீழே தரப்பட்டுள்ளன.
1. கடன் பெற்றோர் கடன் வழங்கியோர் : பணவீக்கக் காலத்தில் கடன் பெற்றோர் ஆதாயமும், கடன் வழங்கியோர் இழப்பையும் சந்திக்கின்றனர்.
2. தொழில் முனைவோர்கள் : உற்பத்தியாளர், வணிகர் என தொழில் முனைவோர் போன்று எவ்வகையானவராக இருந்தாலும், அவர்களுக்குப் பணவீக்கம் ஒரு வரமாகும்.
3. முதலீட்டாளர்கள் : கடன் பத்திரங்களில் முதலீடு செய்தோர் நிலையான வட்டியைப் பெறுவதால் அவர்கள் பணவீக்கக் காலத்தில் இழப்பினைச் சந்திப்பார்கள்.
18.
அ. முதல்நிலைப் பணிகள் :
i) பணம் ஓர் பரிமாற்றக் கருவியாக: இது பணத்தின் அடிப்படை பணியாகும். பணம் பொது ஏற்புத் தன்மையைக் கொண்டது. மேலும், இது அனைத்துப் பரிவர்த்தனைகளிலும் தவறாது இடம்பெறுகிறது.
ii) பணம் ஓர் மதிப்பின் அளவுகோலாக : பொருட்கள் மற்றும் பணிகளை மதிப்பளவை செய்வது பணத்தின் இரண்டாவது முக்கிய பணியாகும். ஆகவே, பணம் ஒரு பொது அளவுகோலாக பார்க்கப்படுகிறது.
ஆ. இரண்டாம் நிலைப் பணிகள்
i) பணம் ஒரு மதிப்பின் நிலைக்கலனாக: பண்டங்களைச் சேமிப்பாக வைத்திருந்தால் அது நிலைத்திருக்காது. ஆனால் பணம் கண்டுபிடிக்கப்பட்ட பின் பண்டங்களையும் பணிகளையும் சேமித்து வைப்பதில் உள்ள சிக்கல்கள் மறைந்துவிட்டன.
ii) பணம் வருங்காலச் செலுத்துதல்களுக்கான ஓர் அடிப்படை: பண்டமாற்று முறையில் கடன் வாங்குவதிலும் திருப்பிச் செலுத்துவதிலும் சிக்கல் நிறைந்திருந்தது. பணம் வருங்கால செலுத்துதல்களுக்கு இடையீட்டுக் கருவியாகச் செயல்படுகின்றது.
iii) பணம் வாங்கும்திறனை மாற்றிக் கொள்ளும் ஒரு கருவியாக : பொருளாதார வளர்ச்சியினை ஒட்டி பரிமாற்றம் விரிவடைந்து செல்கிறது.
இ. துணைப்பணிகள் :
i) கடனுக்கான அடிப்படை : கடன் முறைக்கு அடிப்படையாக பணம் அமைந்துள்ளது. வணிக வங்கிகள் வாடிக்கையாளர் கணக்குகளில் உள்ள ரொக்க இருப்பின் அளவை பொருத்தே கடன்களை உருவாக்குகின்றன.
ii) பணம் நாட்டு வருமானப் பங்கீட்டிற்கு உதவுகிறது: பண்டமாற்று முறையில் நாட்டு வருமானப் பங்கீடானது மிகச்சிக்கலான ஒன்றாகும். ஆனால், பணம் என்ற கருவி கண்டறியப்பட்ட பின் வாரம், கூலி, வட்டி, இலாபம் என காரணிகளுக்கான வருமானத்தை, அதாவது நாட்டு வருமானத்தை எளிதாகப் பகிர்ந்தளிக்க முடிகிறது.
iii) இறுதிநிலைப் பயன்பாடுகளையும், இறுதி நிலை உற்பத்தித் திறன்களையும் சமன் செய்திட பணம் பயன்படுகிறது: நுகர்வோர் தனது மொத்தப் பயன்பாட்டினை உச்சநிலைப்படுத்தும் நோக்கில் தாம் நுகரும் பல்வேறு பண்டங்களின் இறுதிநிலைப் பயன்பாடுகளை பணத்தின் துணையுடன் சமப்படுத்த வேண்டியதாகிறது.
iv) பணம் மூலதனத்தின் உற்பத்தித்திறனை உயர்த்துகிறது : மூலதனம் பல்வகை வடிவங்களில் காணப்படுகிறது. பணம் நீர்மைத் தன்மை கொண்ட ஒரு மூலதனமாகும்.
ஈ. இதர பணிகள் :
i) திரும்பச் செலுத்தும் திறனை தக்கவைக்க பணம் உதவுகிறது: பணம் பொது ஏற்புத்தன்மை கொண்ட ஒரு சாதனமாகும். நிறுவனங்கள் தங்களின் செலுத்துதல்களை மேற்கொள்ள எப்பொழுதும் குறிப்பிட்ட அளவு ரொக்கப் பணத்தை தயார் நிலையில் வைத்திருக்கும்.
ii) பணம் பொதுமைப்படுத்தப்பட்ட வாங்கு திறனைக் குறிக்கிறது : எந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காக அந்த பணம் எனும் வாங்குதிறன் சேமித்து வைக்கப்பட்டதோ, அதை மட்டுமே வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
iii) பணம் மூலதனத்திற்கு நீர்மைத் தன்மையைத் தருகிறது : பணம் என்பது நீர்மைத் தன்மை கொண்ட ஒரு மூலதனமாகும். இதன் துணையுடன் அனைத்து இடு பொருட்களையும் வாங்குவதன் மூலம் எந்த ஒரு செய்பொருளையும் உற்பத்தி செய்ய இயலும்.
19.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards