12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
தன்னிச்சையான முதலீடு என்றால் என்ன?
2.
வெளி அங்காடி நடவடிக்கை என்பதன் பொருள் கூறுக.
3.
மைய வங்கி என்பதனை வரையறு.
4.
வணிக வங்கிகள் என்பதை வரையறு.
5.
நெகிழிப் பணம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
6.
பண்டப்பணம் என்றால் என்ன?
7.
பணத்தின் இலக்கணம் வரைக.
8.
சேமிப்பு நாட்டம் (Propensity to save) என்றால் என்ன?
9.
சராசரி நுகர்வு நாட்டம் (APC) - வரையறு
10.
நுகர்வுச் சார்பு என்றால் என்ன?
11.
நபார்டின் பணிகள் யாவை?
12.
கடன் கட்டுப்பாட்டு முறைகளைக் கூறுக.
13.
வணிக வங்கிகளின் கடன் உருவாக்க முறை நுட்பத்தினை எழுதுக.
14.
15.
பண அளிப்பினைத் தீர்மானிக்கும் காரணிகள் யாவை?
16.
உலோகப் பணம் பற்றி ஒரு குறிப்பு வரைக.
17.
பெருக்கி கருத்தின் குறைபாடுகளைக் குறிப்பிடுக.
18.
நுகர்வுச் சார்பைப் பாதிக்கிற ஏதேனும் மூன்று அக, புறக் காரணிகளை விளக்குக.
19.
கீன்சின் நுகர்வு சார்ந்த உளவியல் விதியின் கருத்துகளைக் கூறுக.
20.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் யாவை?
21.
22.
இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விவரிக்க.
23.
வணிக வங்கிகளின் பணிகளை விளக்குக
24.
நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் வணிக வங்கிகளின் பங்கினை விளக்குக.
25.
வணிகச் சுழற்சியின் பல்வேறு கட்டங்களை விவரிக்க.
26.
ஒரு பொருளாதாரத்தில் பணவீக்கத்திற்கான காரணங்கள், விளைவுகள் யாவை?
27.
பணத்தின் பணிகளை விளக்குக.
28.
29.
30.
முடுக்கி இயங்கும் விதத்தினை விவரி.
31.
பெருக்கி இயங்கும் விதத்தினை விவரி.
32.
நுகர்வுச் சார்பின் அக மற்றும் புறக் காரணிகளை விளக்குக.
33.
கீன்சின் நுகர்வுச் சார்பின் உளவியல் விதியினை வரைபடம் மூலம் விளக்குக.
34.
பெருக்கிக் கோட்பாட்டை முதலில் உருவாக்கியவர் யார்?
கான்
லேர்னர்
கீன்ஸ்
ராவ்
35.
பெருக்கியின் வாய்ப்பாடு
\(K=\frac { \Delta Y }{ \Delta I } \)
\(K=\frac { \Delta C }{ \Delta Y } \)
\(K=\frac { \Delta I }{ \Delta Y } \)
\(K=\frac { \Delta S }{ \Delta Y } \)
36.
37.
ஏ.டி.எம் (ATM) என்பதன் விரிவாக்கம் என்ன?
தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம்
சரி செய்வது பணம் வழங்கும்
தானாக பணம் வழங்கும் முறை
எந்த நேரமும் பணம் (Any Time Money )
38.
நிகழ்நிலை வங்கியகம் என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இ-வங்கி
இணைய வங்கி
ஆர்-டி,ஜி.எஸ்
நெப்ட்
39.
பணவியல் கொள்கையை வடிவமைப்பது
கூட்டுறவு வங்கிகள்
வணிக வங்கிகள்
மைய வங்கி
வெளிநாட்டு வங்கி
40.
மாநில நிதிக் கழகம் எந்த சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது.
இந்திய அரசு
தமிழக அரசு
யூனியன் பிரதேசம்
உள்துறை அரசு
41.
ஏற்றுமதி-இறக்குமதி வங்கி தொடங்கப்பட்டது?
ஜூன் 1982
ஏப்ரல் 1982
மே 1982
மார்ச் 1982
42.
_____ பணவீக்கம் பொருளாதாரத்தினை எந்த வகையிலும் பாதிக்காது.
நடக்கும்
ஓடும்
தவழும்
தாவும்
43.
44.
MV = PT என்ற சமன்பாட்டில், V என்பது
வாணிபத்தின் அளவு
பணத்தின் சுழற்சி வேகம்
ரொக்கப் பணத்தின் அளவு
வங்கி மற்றும் கடன் பண அளவு
45.
ஃபிஷரின் பண அளவுக் கோட்பாடு பணத்தின் இந்தப் பணியின் அடிப்படையில் அமைக்கப்பட்டது.
மதிப்பளவு
மதிப்பின் நிலைக்கலன்
பரிமாற்றக் கருவி
வருங்கால செலுத்துதல்களுக்கான அடிப்படை
46.
பற்று அட்டை என்பது______ எடுத்துக்காட்டு ஆகும்.
கட்டளைப் பணம்
காகிதப் பண
நெகிழிப் பண
கடன் பணம்
47.
"பரிமாற்றங்களில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு இடையீட்டுக்கருவியாகவும், அளவீடு மற்றும் மதிப்பினை இருப்பு வைத்தல் ஆகியவற்றினை செய்யும் ஒரு பொருள் பணம்" என்ற இலக்கணத்தை வழங்கியவர்
கிரௌதர்
பிகு
வாக்கர்
பிரான்சிஸ் பேக்கன்
48.
MEC என்ற கருத்துருவை அறிமுகப்படுத்தியவர் யார்?
ஆடம் ஸ்மித்
J.M. கீன்ஸ்
ரிகார்டோ
மால்தஸ்
49.
மிகைப் பெருக்கி (Super Multiplier) என்ற கருத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர்?
J.R. ஹிக்ஸ்
R.G.D. ஆலன்
கான்
கீன்ஸ்
50.
கீன்சின் கருத்துப்படி, முதலீடு MEC ஐயும் ______ சார்ந்தது
தேவையையும்
அளிப்பையும்
வருவாயையும்
வட்டி வீதத்தையும்
51.
ஒரு திறந்துவிடப்பட்ட பொருளாதாரத்தில் (Open Economy) இறக்குமதி, பெருக்கியின் மதிப்பை
குறைக்கிறது
உயர்த்துகிறது
மாற்றாது
மாற்றும்
52.
53.
பெருக்கியின் மதிப்பு =
1/(1-MPC)
1/MPS
1/MPC
அ மற்றும் ஆ
1.
(i) தன்னிச்சையான முதலீடு என்பது மூலதன திரட்சியின் மீது ஆகும் செலவு.
(ii) மாறுகின்ற வருமானம், வட்டி விகிதம், இலாப வீதத்தை சார்ந்து இருக்காது.
(iii) எல்லா நிலைகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.
2.
1. ஒரு குறுகிய அளவில் பார்க்கும் பொழுது, மைய வங்கியானது பொதுச் சந்தையில் அரசின் கடன் பத்திரங்களை வெளியிடுவதும் திரும்பப்பெறுவதும் வெளிச்சந்தை நடவடிக்கைகள் எனப்படுகின்றது.
2. மைய வங்கி அரசின் கடன் பத்திரங்களை மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களின் தகுதி படைத்த பத்திரங்களையும் விற்பனை செய்வதும், திரும்பப் பெறுவதும் ஆகும்.
3.
1. மைய வங்கி, ரிசர்வ் வங்கி அல்லது பணவியல் அதிகார அமைப்பு என்பது அரசின் பணம், பண அளிப்பு, வட்டிவிகிதம் ஆகியவற்றை மேலாண்மை செய்யும் ஒரு நிறுவனம் ஆகும்.
2. மேலும், நாட்டிலுள்ள வணிக வங்கிகளை மேற்பார்வையிடுவதும் இதன் பணியாகும்.
4.
1. வணிக வங்கிகள் மக்களிடமிருந்து வைப்புகளைப் பெற்று, பேரளவில் உற்பத்தி செய்வோர், பெரிய நிறுவனங்களுக்கும், நடுத்தர நிறுவனங்களுக்கும் கடனை அளிக்கும் ஒரு நிதி அமைப்பு ஆகும்.
2. நீர்மைத் தன்மையைத் தக்கவைக்கும் பொருட்டு வணிக வங்கிகள் பெரும்பாலும் நீண்டகாலக் கடன்களை அளிப்பதில்லை.
5.
1. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட பணம் நெகிழிப் பணமாகும். இது நிதிப் பொருட்களின் வரிசையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தோற்றமாகும்.
2. நெகிழ்வுப் பணம்(Plastic Money) நடைமுறையில் உள்ள காகித பணத்திற்கு மாற்றாகும். தினந்தோறும் பயன்படுத்தும் வகையில் நெகிழி அட்டையில் உருவாக்கப்பட்டிருப்பதால் இது நெகிழிப் பணம் என்றழைக்கப்படுகிறது.
(உ.ம்) ரொக்க அட்டை, கடன் அட்டை, பற்று அட்டை போன்றவை ஆகும்.
6.
1. பண்டப்பணம் என்பது அதன் தயாரிக்கப்பட்ட பண்டத்திலிருந்து பெறப்படுகிறது.
2. பண்டத்தின் உபயோகத்தை பொருத்து அதன் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது.
7.
"பணம் எதைச் செய்கிறதோ, அதுதான் பணம்" என்று வாக்கர் கூறுகிறார்.(அல்லது)
“பரிவர்த்தனைகளில் பொது ஏற்புத்தன்மை கொண்ட ஒரு இடையீட்டுக்கருவியாகவும், மதிப்பளவை மதிப்பினை இருப்பு வைத்தல் ஆகியவற்றினைச் செய்யும் ஒன்றாகவும் இருப்பது பணம் ஆகும்” என்று கிரெளதர் கூறுகிறார்.
8.
வருமானத்திற்கும், சேமிப்பிற்கும் இடையேயான வீதமே சேமிப்பு நாட்டம் எனப்படும்.
9.
வருமானத்திற்கும் நுகர்ச்சிக்குமான வீதமே சராசரி நுகர்வு நாட்டமாகும்.
கணித ரீதியாக, APC = \(\frac{C}{Y}\)
இதில் APC = Average Propensity to Consume
C = நுகர்வு
Y = வருமானம்
10.
வருவாய்க்கும் நுகர்வுக்கும் உள்ள தொடர்பையே "நுகர்வுச் சார்பு" அல்லது "நுகர்வு நாட்டம்" என்கிறோம். இது "மொத்த நுகர்வு, மொத்த நாட்டு வருமானம் ஆகிய இரு ஒட்டுமொத்தத்திற்கிடையேயான சார்புத் தொடர்பாகும்."
இதனை = C = f (Y) எனலாம்.
இதில் C = நுகர்வு
Y = வருமானம்
f = சார்பு
11.
1. நபார்டு வங்கி ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் அனைத்து வகையான உற்பத்திக்காகவும் முதலீட்டுக்காகவும், வேளாண்மை, சிறுதொழில்கள், குடிசை மற்றும் கிராமத் தொழில்கள், கைவினைத் தொழில்கள், இதர ஊரக தொழில் நடவடிக்கைகளுக்கான மறுகடனை வழங்குகிறது.
2. இது மாநில கூட்டுறவு வங்கிகள், வட்டார ஊரக வங்கிகள், நிலவள வங்கிகள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றால் ஏற்பளிக்கப்படும் இதர நிதிநிறுவனங்கள் ஆகியவற்றிற்கு குறுகிய கால, மத்தியகால மற்றும் நீண்டகால கடன்களை வழங்குகிறது.
3. கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்களின் பங்கு முதலீட்டை வழங்கும் பொருட்டு மாநில அரசுகளுக்கு 20 ஆண்டு நீண்ட கால கடன்களை நபார்டு வங்கி வழங்குகிறது.
4. மைய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது வேளாண்மை, ஊரக வளர்ச்சி ஆகியவற்றிற்கான பங்கு மூலதனம் அல்லது கடன் பத்திரங்களை பெற்றிருக்கும் நிறுவனங்களுக்கு நீண்ட கால கடனை அளிக்கிறது.
5. மைய அரசு, மாநில அரசுகள், திட்டக்குழு, மைய, மாநில அரசுகளின் - சிறுதொழில்கள், குடிசைத் தொழில்கள், கிராமத் தொழில்கள், கைவினைத் தொழில்கள், இதர மிகச்சிறு தொழில்களுக்கு உதவும் நிறுவனங்களை ஒருங்கிணைத்து வருகிறது.
6. நபார்டு வங்கி, வட்டார ஊரக வங்கிகள், துவக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களை தவிர்த்த அனைத்து கூட்டுறவு வங்கிகளையும் ஆய்வு செய்யும் பணியைச் செய்கிறது.
7. வேளாண்மைக்கும் ஊரக வளர்ச்சிக்குமான ஆய்வுகளை மேம்படுத்தும் விதமாக ஆய்வு மற்றும் வளர்ச்சி நிதியினை பராமரிக்கிறது.
12.
கடன் கட்டுப்பாட்டு முறை என்பது மைய வங்கியின் பணவியல் மேலாண்மையின் முக்கிய நோக்கம் ஆகும்.
13.
1. வங்கிகளின் கடன் உருவாக்கம் என்பது மிக முக்கியமான ஒரு செயல் ஆகும். வங்கிக் கடன் என்பது வாடிக்கையாளர்களின் வைப்புகளிலிருந்து, தேவைப்படுவோருக்கு அவர்களின் விண்ணப்பம் மற்றும் ஒப்பந்தத்தின் பேரில் கடனும் முன்பணமும் கொடுப்பது ஆகும்.
2. வங்கிகள் வழங்கும் கடன்கள் பொருளாதாரத்தில் நிகர பண அளிப்பினை அதிகப்படுத்தும்.
3. வணிக வங்கிகள் கேட்பு வைப்புகளின் அளவை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும். அதிக அளவு கடன்களை அதிகரிக்க முடியும்.
4. வணிக வங்கிகள் தங்களின் கடன் அல்லது முன்பணம் அளிக்கும் முறை மூலமாக அல்லது சொத்துகளை வாங்கும் தன்மைகள் மூலமாகவும் தேவை வைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ குறைக்கவோ முடிகிறது. இச்சக்தி வங்கிகள் வைப்புகளை புதிய வைப்புகளை உருவாக்குவதன் மூலம் ஏற்படுகிறது.
14.
15.
1. ரொக்க வைப்பு விகிதம் (Cash Deposit Ratio - CDR) : இது பொதுமக்கள் கையில் வைத்திருக்கும் பணம்/ வங்கி வைப்புகளில் உள்ள பணம் என்ற விகிதத்தை குறிக்கும்.
2. ரொக்க இருப்பு வைப்பு விகிதம் (Reserve Deposit Ratio - RDR): வங்கி தனது பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருக்கும் இருப்பு மற்றும் மைய வங்கியில் வைத்திருக்கும் ரொக்க வைப்பு / மொத்த வைப்புகள் என்ற விகிதம்.
3. ரொக்க இருப்பு விகிதம் (Cash Reserve Ratio - CRR) : "வங்கியில் வைப்புகளில் குறைந்தபட்சமாக மைய வங்கியில் வைக்க வேண்டிய அளவு/ வங்கிகளில் செலுத்தப்பட்ட மொத்த வைப்புகள்" என்ற விகிதம்.
4. சட்டபூர்வ நீர்மை விகிதம் (Statutory Liquidity Ratio - SLR) : " வணிக வங்கிகள் வைத்திருக்கும் நீர்மை தன்மையிலான சொத்துக்கள்/ வணிக வங்கிகளில் இருக்கும் மொத்த கேட்பும் மற்றும் கால வைப்புகளும்" என்ற விகிதம்.
16.
உலோகத் திட்டம் (Metallic Standard) :
1. பண்டமாற்று முறை, பண்டப் பணமுறைக்குப் பின் புதிய பண முறைகள் தோன்ற ஆரம்பித்தது. அதில் முதன்மையானது உலோகப் பணத்திட்டம் ஆகும்.
2. உலோகத்திட்டத்தில் தங்கம், வெள்ளி போன்ற ஏதாவது ஒரு உலோகம் பணத்தின் திட்ட மதிப்பினை நிர்ணயிக்கப் பயன்படுத்தப்பட்டது.
3. உலோகத் திட்டத்தின் கீழ் உலோக நாணயங்கள் பணமாக உருவாக்கப்பட்டன.
4. இந்த நாணயங்கள் முழு மதிப்புப் பணமாக அல்லது முழு நிறையுடைய சட்டமுறைப் பணமாக இருந்து வந்தன.
3. அதாவது அந்நாணயங்களில் முக மதிப்பு மற்றும் உள்ளடக்க மதிப்பு ஆகிய இரண்டும் சமமாக இருந்தன.
17.
பழைய கடன்களைத் திரும்பச் செலுத்துதல்:
பழைய கடன்களைத் திரும்பச் செலுத்துவதற்காக அதிகரித்த வருமானம் பயன்படுமானால், MPC குறைந்து, அதன் காரணமாகப் பெருக்கியின் மதிப்பு தடைபடும்.
செல்வத்தை வாங்குதல் :
அதிகரித்த வருமானம் நடைமுறையில் உள்ள செல்வங்களாக நிலம், கட்டிடம் மற்றும் பங்குகள் முதலானவற்றை வாங்குவதற்காகப் பயன்படுத்தினால் பணம் மக்களிடையே சுழன்று கொண்டிருக்கும்.
நுகர்வுக்கு வராது. இதன் விளைவாக பெருக்கியின் மதிப்பு பாதிக்கும்.
பண்டங்களையும் பணிகளையும் இறக்குமதி செய்தல் :
1. இறக்குமதி செய்யப்படுகின்ற பண்டங்களுக்காகவும், பணிகளுக்காகவும் வருமானத்தைச் செலவு செய்தால் நாட்டை விட்டு பணம் வெளியேறும்.
2. இது நாட்டின் குறிப்பிட்ட அளவு வருவாய் ஓட்டத்தில் திரும்பி வரும் வாய்ப்பு மிகக்குறைவு.
3. ஆதலால் இறக்குமதியானது பெருக்கியின் மதிப்பைக் குறைக்கும்.
நுகர்வுப் பண்டங்கள் கிடைக்காமை :
1. பெருக்கிக் கோட்பாடானது தேவை ஏற்பட்டவுடன் நுகர்வதற்கு பண்டங்கள் அளிக்கப்படுவதாக ஊகம் கொண்டுள்ளது.
2. சில நேரங்களில் பண்டங்கள் அளிப்பில் கால இடைவெளி ஏற்படும். இந்த இடைவெளியில் தேவைக்கேற்ப அளிப்பு இருக்காது.
3. அதனால் பணவீக்கம் ஏற்படும். இது நுகர்வுச் செலவையும், பெருக்கியின் மதிப்பையும் குறைத்துவிடும்.
முழு வேலைவாய்ப்பு நிலை :
1. முழு வேலை வாய்ப்பு நிலையில், பெரும்பாலும் எல்லா வளங்களும் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.
2. ஆதலால் அதிகரிக்கின்ற வருமானம் பணவீக்கத்திற்கு வழி வகுத்து, உண்மை வருமானம் ஏற்படாமல் செய்துவிடும்.
18.
நுகர்வுச் சார்பை தூண்டுகின்ற காரணிகளை ஜே.எம்.கீன்சு இரண்டாகப் பிரிக்கின்றார். அதாவது அகவயக் காரணிகள், புறவயக் காரணிகள்.
அகவயக் காரணிகள் :
1. முன்னெச்சரிக்கை நோக்கம்: எதிர்பாராமல் ஏற்படும் நிகழ்விற்காக கையில் ரொக்கமாக வைப்பது. (எ.கா) விபத்து, உடல் நலனின்மை.
2. எதிர்பார்க்கும் நோக்கம் : எதிர்கால தேவைக்கான விருப்பம். (எ.கா) வயதான காலம்.
3. வணிக நோக்கம் : வணிகத்தை முன்னேற்றுவதற்கான நோக்கம்.
புறவயக் காரணிகள் :
1. வருமானப் பகிர்வு : செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால், நுகர்வு குறைவாக இருக்கும். காரணம் செல்வந்தர்கள் குறைவான நுகர்வு விருப்பமும், அதிகப்படியான சேமிப்பு விருப்பமும் கொண்டு இருப்பர்.
2. விலை அளவு: நுகர்வுச் சார்பை தீர்மானிக்கின்ற 35 மிக முக்கியமான காரணியாக இருப்பது விலை அளவே ஆகும்.
வட்டி விகிதம் : அதிக வட்டி விகிதம் மக்களை அதிக அளவில் பணத்தைச் சேமிக்க ஊக்கமளிக்கும் மற்றும் நுகர்வைக் குறைக்கும்.
19.
விதியின் கருத்துக்கள்:
இவ்விதி மூன்று கருத்துகளைக் கொண்டது.
1. வருமானம் உயரும்போது, நுகர்வுச் செலவு அதிகரிக்கும். ஆனால் சிறிய அளவாக இருக்கும். காரணம் வருமானம்
2. அதிகரிக்கும்போது, பகுதி பகுதியாக நம் விருப்பமும் நிறைவேறும்
3. அதிகரித்த வருமானம் நுகர்வுச் செலவிற்கும், சேமிப்பிற்கும் இடையே சில விகிதத்தில் பிரிக்கப்படுகின்றது.
4. அதிகரிக்கின்ற வருமானம் எப்பொழுதும் நுகர்வையும், சேமிப்பையும் அதிகரிக்கச் செய்யும்.
20.
முன்னுரை:
கீன்ஸ் மற்றும் மில்டன் ப்ரீட்மேன் பணவீக்கத்தினை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை மூன்றாக பிரித்தனர்.
அ. பணவியல் முறைகள்: நாட்டின் மைய வங்கி அமல்படுத்தும் முறைகள்:
(i) வங்கி விகிதத்தை உயர்த்துதல்
(ii) வெளிச்சந்தையில் அரசு பத்திரங்களை விற்றல்
(iii) ரொக்க இருப்பு விகிதம், சட்டபூர்வ நீர்மை விகிதத்தை உயர்த்துதல்
(iv )நுகர்வோர் கடனை கட்டுப்படுத்துதல்
கடன் நிலையினை உயர்த்துதல்
மீள் வாங்கல் விகிதம் மற்றும் திருப்ப மீள் வாங்கல் விகிதத்தை உயர்த்துதல்
ஆ. நிதியியல் நடவடிக்கைகள்:
அரசு செலவினங்களை குறைப்பது. பொதுமக்களிடமிருந்து கடன்களை பெறுவது மற்றும் வரிவிதிப்புகளை விரிவாக்குவது.
இ. இதர நடவடிக்கைகள்: குறுகிய கால நடவடிக்கைகள் பொது விநியோக முறையின்கீழ் நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பங்கீடு செய்வது. அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்தல்.
நீண்ட கால நடவடிக்கைகள்:
(i) பொருளாதார வளர்ச்சியை துரிதப் படுத்துவது.
(ii) கூலிப் பொருட்களின் உற்பத்தியின் வளர்ச்சியை துரிதப்படுத்துவது.
(iii) நடப்பிலுள்ள சில நுகர்ச்சிகளை கட்டுப்படுத்துதல்,
21.
22.
ஒவ்வொரு நாட்டின் மைய வங்கி அந்த நாட்டின் தலைமை வங்கியாகும். இந்தியாவின் மைய வங்கி இந்திய ரிசர்வ் வங்கி என அழைக்கப்படுகிறது. 1935ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி தனது பணியினைத் துவங்கியது.
ரிசர்வ் வங்கியின் பணிகளாவன :
பண அதிகார அமைப்பு : இது இந்தியாவில் பண அளிப்பினை கட்டுப்படுத்துவதன் மூலம் அயல்நாட்டு செலாவணி பரிமாற்ற விகிதத்தினை நிலைப்படுத்துதல், சாதகமான செலுத்துநிலையைப் பேணுதல், நிதி நிலைத்தன்மையை ஏற்படுத்துதல், பண வீக்கத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் வங்கி அமைப்பை உறுதியாக்குதல் ஆகியவற்றைச் செய்கிறது.
காகிதப் பண வெளியீடு : காகிதப் பணத்தை வெளியிடுவதில் முற்றுரிமைப் பெற்ற நிறுவனம் ரிசர்வ் வங்கியாகும்.
வங்கி உரிமங்கள் வழங்குபவர் : வங்கிகள் முறைப்படுத்துதல் சட்டம், பிரிவு 22இன் படி ஒவ்வொரு வணிக வங்கியும் இந்தியாவில் வங்கித்தொழில் செய்ய மைய வங்கியிடம் உரிமம் பெற வேண்டியது அவசியம் ஆகும். இப்பணியையும் ரிசர்வ் வங்கி செய்கின்றது.
அரசுக்கான வங்கி : இது மத்திய, மாநில அரசுகளுக்கான வங்கி ஆகும். அரசுகளுக்கு குறுகியகாலக் கடன்கள், கடன் தொடர்பான சேவைகள், அரசின் கடன் பத்திரங்களை உருவாக்கி விற்பனை செய்வது மேலும் வங்கி மற்றும் நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்குவது போன்ற பணிகளைச் செய்கிறது.
வங்கிகளின் வங்கி : இது அனைத்து வங்கிகளுக்கும் தலைமை வங்கியாகும். வங்கிகளின் வைப்புகளை ஏற்று, மாற்று சீட்டுகளை மறு தள்ளுபடி செய்வதால் இது வங்கிகளின் வங்கி எனப்படுகிறது.
கடை நிலைக் கடன் ஈவோன் : வணிக வங்கிகளுக்கு தீர்க்க இயலாத நிதிச் சிக்கல்கள் ஏற்படும் பொழுது, நிதிக்கான மற்ற ஆதாரங்கள் இல்லாத சூழ்நிலையில் அச்சிக்கலில் இருந்து மீள்வதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஈட்டுக்கடனை அளித்து உதவுகிறது.
தீர்வாக செயல்படுகிறது : வங்கிகளுக்கிடையே நடக்கும் பரிமாற்றங்களை தனது 14 தீர்வகங்களைக் கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி சமன் செய்கின்றது. பரிமாற்றக் கருவிகளைப் பரிமாறிக் கொள்ள உதவுவதுடன், பரிமாற்றம் தொடர்பான அறிவுறுத்தல்களையும் வழங்குகிறது.
23.
வணிக வங்கிகள் இலாப நோக்கம் உடையவை. அவைகள் வைப்புகளைப் பெற்று முதலீட்டுக்கான கடன்களை அளிக்கின்றன.
வணிக வங்கியின் பணிகள்
முதன்மைப் பணிகள்:
வைப்புகளை ஏற்றுக்கொள்ளுதல்: பொதுமக்களால் செலுத்தப்படும் வைப்புகளை ஏற்றுக்கொள்ளுதல் ஆகும். இது வங்கி வணிகத்திற்கான முக்கிய நிதியாதாரம் ஆகும். பொது வைப்புகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
கேட்பு வைப்புகள் : இவை வங்கிகளில் வைப்புகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர் முன்னறிவிப்பின்றி எப்பொழுது வேண்டுமானாலும் பணத்தைத் தனது கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படும் ஒரு வைப்பாகும்.
கால வைப்புகள் : இவை ஒரு குறிப்பிட்ட காலவரையறை வரை வங்கிகளிடமிருந்து மீளப் பெறப்படாமல் இருக்கும் வைப்புகளாகும். (எ.கா.) நிலை வைப்பு (Fixed Deposit), தொடர் (Recurring Deposit).
கடன் வழங்குதல் :
வணிக வங்கிகள் ரொக்கக் கடன், மாற்றுச் சீட்டு தள்ளுபடி, மிகைப்பற்று ஆகிய முறைகளில் கடன்களை வழங்குகின்றன.
இரண்டாம் நிலைப் பணிகள் :
முகமைப் பணிகள்: வங்கி வாடிக்கையாளர்களுக்கு முகவராக இருந்து செய்யும் பணிகள் முகமைப்பணிகள் எனப்படுகின்றன.
காசோலைகளைப் பணமாக்குதல்: தன் வாடிக்கையாளர்களுக்காக அவர்களுக்கு வரும் காசோலைகள், மாற்றுச்சீட்டுகள் ஆகியவற்றை வங்கிகள் தீர்வகத்தின் மூலம் வசூல் செய்து கொடுக்கின்றன.
வருமானத்தைப் பெறுதல் : வணிக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வரவேண்டிய இலாப ஈவு, ஓய்வூதியம், சம்பளம், வாடகை, வட்டி ஆகியவற்றினை வசூலித்துத் தருகின்றன.
செலவுகளைச் செலுத்துகிறது: தொலைபேசிக் கட்டணம், காப்பீட்டு பிரிமியம், கல்விக் கட்டணம், வாடகை செலுத்துதல் முதலானவற்றை வணிக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்காக செய்கிறது.
பொதுப் பயன்பாட்டுப் பணிகள் :
இது வங்கிகள் தன் வாடிக்கையாளர்களுக்காக சில கூடுதல் பயன்பாடுகளை உருவாக்கும் நோக்கில் செய்யும் பணிகளைப் பொதுப் பயன்பாட்டு பணிகள் என்கிறோம்.
பாதுகாப்புப் பெட்டக வசதி : நகைகள், பங்குகள், கடன் பத்திரங்கள் முதலான மதிப்புமிக்க பண்டங்களை பாதுகாக்க, பெட்டக வசதியை வணிக வங்கிகள் தருகின்றன.
பயணக் காசோலைகளை வழங்குதல்: பயணக் காசோலைகளை வழங்குவதன் மூலம் வெளிநாட்டுப் பயணத்தின் போது பணப்பாதுகாப்பினை வழங்குகிறது.
அயல்நாட்டுச் செலாவணியைக் கையாளுதல்: ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபடும் வணிகர்களுக்கு வணிக வங்கிகள் அயல்நாட்டுச் செலாவணி வசதியைச் செய்து தருகின்றன.
நிதிமாற்றுதல்: ஒரு வங்கியிலிருந்து மற்ற வங்கிக்கு நிதியை மாற்றுவதாகும். வரைவு காசோலைகள், தொலைபேசி மற்றும் மின்னணு பரிமாற்றங்கள் மூலம் நிதி மாற்றப்படுகிறது.
கடன் உறுதியளிப்புக் கடிதம்: வாடிக்கையாளரின் கடன் நம்பகத்தன்மையைச் சான்றளிக்கும் விதமாக வணிக வங்கிகள் கடன் உறுதியளிப்பு கடிதங்களை வழங்குகின்றன.
இதர பணிகள் :
பண அளிப்பு : வணிக வங்கியின் முக்கியமான பணிகளில் ஒன்று பணப்புழக்க வேகத்தை அதிகரிப்பதன் மூலம் பண அளிப்பை அதிகரித்தல் ஆகும்.
கடன் உருவாக்கம் : கடன் உருவாக்கம் என்பது கடன்களையும், முன்பண அளிப்பினையும் அதிகரிக்கும் ஒரு செயல்.
புள்ளி விவரங்களை திரட்டுதல் : இந்திய ரிசர்வ் வங்கியை முதலான வணிக வங்கிகளும் வணிகம், தொழில், வேளாண்மை, நிதி முதலான அடிப்படைத் துறைகளின் புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன.
24.
மூலதனத் திரட்சி :
1. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாததான மூலதன திரட்சியில் வங்கிகள் முக்கியமான பங்கு வகிக்கின்றன
2. வணிக வங்கியானது தனது வங்கிப் பிரிவுகளின் கீழ் பரவலாகச் செயல்பட்டு பொதுமக்களின் சேமிப்பை வைப்புகளாகத் திரட்டி அவற்றை உற்பத்தி நோக்கத்திற்காக கடன்களாக வழங்குகின்றன.
கடன் உருவாக்கம் :
1. வங்கிகளின் கடன் உருவாக்கம் மூலம் முன்னேற்றத் திட்டங்களுக்கு அதிக நிதியைப் பெற்றுத் தருகிறது.
2. இதன்மூலம் உற்பத்தி, வேலை வாய்ப்பு, வருமானம், விற்பனை ஆகியவை ஏற்றம் பெற்று விரைவான பொருளாதார வளர்ச்சியை கொண்டு வருகின்றன.
அதிக உற்பத்தித்திறனை கொண்ட முதலீட்டை நோக்கி பணத்தை முறைப் படுத்துதல் :
1. வங்கிகள் உற்பத்தி நோக்கில் பணத்தை முதலீடு செய்கின்றன.
2. ஒரு துறையில் செய்யப்பட்ட முதலீட்டின் உற்பத்தித் திறன் குறைவாக இருந்தால் அத்துறைக்கு வழங்கப்படும் முதலீட்டுக் கடனைக் குறைத்துக்கொண்டு, அதிக உற்பத்தித்திறன் கொண்ட துறைகளுக்குக் கூடுதலாக முதலீட்டுக்கான கடனை மடைமாற்றம் செய்கிறது.
சரியான தொழிற்சாலைகளை ஊக்குவித்தல்:
1. வங்கிகள் சரியான தொழிலையும், சரியான நபர்களையும் தெரிந்தெடுத்துக் கடன் வழங்குவதால் தொழிற்பெருக்கம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் உதவுகின்றன.
2. எந்த பொருளுக்கு அதிக தேவை உள்ளதோ அந்தப் பண்டத்தை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு கடன்களையும், முன் பணங்களையும் வழங்குகிறது.
கடனைப் பணமாக்குதல் :
வணிகத்தில் எழும் குறிப்பிட்ட காலக் கடன்களை இடையிலேயே ரொக்கமாக்கித் தருவதன் மூலம் உற்பத்தியிலும், வணிக நடவடிக்கைகளிலும் சுணக்கம் ஏற்படாமல் வணிக வங்கிகள் பாதுகாக்கிறது.
வேலைவாய்ப்பினை உருவாக்குதல் :
1. வங்கிகள் தேசியமயமாக்கலுக்குப் பின் வங்கித்துறை பெருமளவுக்கு வளர்ந்துள்ளது.
2. நிறைய எண்ணிக்கையில் கிளைகள் திறக்கப்பட்டு கடன் பெருக்கம் செய்வதால் வேலைவாய்ப்புகள் உருவாகின்றன.
25.
இலக்கணம் :"உயர்கின்ற விலைகளையும், குறைந்த வேலையற்றோர் விழுக்காட்டையும் கொண்ட நல்ல வணிகக் காலங்களையும்; குறைகின்ற விலைகளையும், மிகுகின்ற வேலையில்லாத் திண்டாட்ட விழுக்காட்டையும் கொண்ட கெட்ட வணிகக் காலங்களையும் உள்ளடக்கியது வணிகச் சூழல் ஆகும்." -J.M. கீன்ஸ்
பூரிப்பு கட்டம் (Boom):
1. நீண்டகால இயல்பான வளர்ச்சி நிலைக்கு மேல் பொருளாதார நடவடிக்கைகள் உயர்ந்து முழு வேலைவாய்ப்பு நிலையைத் தாண்டுவது வணிகச் சூழலின் வளர்ச்சிக் கட்டம் எனப்படுகிறது.
2. பூரிப்பு நிலையில் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளும் உச்சநிலையில் இருக்கும்.
பின்னிறக்கம் (Recession) :
1. வளர்ச்சியின் உச்சத்தில் பூரிப்பை எய்திய பொருளியல் நடவடிக்கைகள் அடுத்ததாக கீழ்நோக்கித் திரும்புகின்றன. பூரிப்பில் வெடிப்பு நிலை ஏற்பட்டு நடவடிக்கைகள் பின்னோக்கி திரும்புவதைப் பின்னிறக்கம் என்கிறோம்.
2. நம்பிக்கைகள் இருந்த இடத்தில் அவநம்பிக்கைகள் தோன்ற ஆரம்பிக்கும். இதன் காரணமாக முதலீட்டை பெருமளவுக்குக் குறைக்க ஆரம்பிப்பார்கள்.
3. பங்குச் சந்தையில் விலை வீழ்ச்சியின் காரணமாக பெரும் அச்சம் உருவாகும்.
மந்தம் (Depression):
1. மந்த காலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு கீழ் மிகத் தீவிரமாக குறைந்து வரும். நிறுவனங்கள் நட்டமடைவதும், மூடப்படுவதும் பொது இயல்புகளாக இருப்பதுடன் வேலைவாய்ப்பின்மையையும் ஏற்படுத்தும்.
2. வணிகச் சுழற்சியின் மிகமோசமான கட்டம் மந்தம் ஆகும்.
மீட்சி (Recovery or Revival) :
1. மந்த நிலைக்குப் பின் மீட்சி இடம் பெறுகிறது. இது மந்தத்திலிருந்து பொருளாதார நடவடிக்கைகள் மேல்நோக்கி திரும்பும் நிகழ்வாகும்.
2. பொருளாதார நடவடிக்கைகளை மேல்நோக்கி திரும்ப ஊக்கமளிக்கின்றன.
3. இதனால், தனியார் முதலீடுகள் மெதுவாக அதிகரித்து, பொருளாதார நடவடிக்கைகளான வேலைவாய்ப்பு, உற்பத்தி, வருமானம், கூலி, இலாபம் ஆகியன மீட்சி பெறுகின்றன.
26.
பணவீக்கத்திற்கான காரணங்கள் :
1. பண அளிப்பு உயர்வு: காகிதப் பண அளிப்பு உயர்வினால் மொத்த தேவை அதிகரித்து பணவீக்கம் ஏற்படுகிறது.
2. செலவிடத் தகுந்த வருமான உயர்வு : மக்களின் செலவிடத் தகுந்த வருமானம் அதிகரிக்கும் பொழுது அவை பண்டங்கள், பணிகளுக்கான தேவையைத் தூண்டுகின்றன.
3. உயர்ந்து வரும் பொதுச் செலவுகள் : வளர்ச்சித் திட்டங்கள், சமுதாய நலத் திட்டங்கள் ஆகியவற்றை அமல்படுத்துதல் அரசின் செயல்பாடுகள் விரிவடைந்து வருவதால் பொதுச் செலவுகளின் அளவு கூடி வருகிறது.
4. நுகர்வோர் செலவு அதிகரித்தல் : தவணைக் கொள்முதல் முறைகளும் கடன் கொள்முதல் முறைகளும் அமல்படுத்தப்படுவதால் நுகர்ச்சிப் பண்டங்கள், பணிகளுக்கான தேவை அதிகரித்து அதன் காரணமாக விலைவாசி அதிகமாகி பணவீக்கம் ஏற்படுகிறது.
5. மலிவுப் பணக் கொள்கை : மைய வங்கியின் மலிவுப் பணக்கொள்கை பொருளாதாரத்தில் கடன் அளவை அதிகப்படுத்தும்.
6. பற்றாக்குறை நிதியாக்கம் : தொடர்ந்து பொதுச் செலவுகள் கூடிவருவதால், அரசின் வரவு செலவு திட்டத்தில் பற்றாக்குறை ஏற்படுகிறது.
7. கணக்கில் காட்டப்படாத சொத்துகள் நடவடிக்கைகள், கறுப்புப் பணம் ஆகியன: இலஞ்சம், வரி ஏய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கறுப்புப் பணமும் கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் உருவாகின்றன.
8. பொதுக்கடனை மீளச் செலுத்துதல்: உள்நாட்டில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட பொதுக்கடனை அரசு திரும்பச் செலுத்தும்பொழுது மொத்தப் பண அளிப்பில் அதிகரிப்பு ஏற்படுகிறது.
9. ஏற்றுமதி உயர்வு: ஏற்றுமதியை ஊக்கப்படுத்தும் பொழுது உள்நாட்டில் பொருள் அளிப்பு குறைந்து, விலைவாசி உயர்வு ஏற்படுகிறது.
பணவீக்கத்தின் விளைவுகள் :
அ. உற்பத்தியின் மீதான விளைவுகள் :
1. மிதமான பணவீக்கம் உற்பத்தியாளர்களுக்கும், வணிகர்களுக்கும் ஒரு ஊக்கக் காரணியாக செயல்படும்.
2. அதேசமயம் உயர் பணவீக்கம் பணத்தின் மதிப்பினைக் குறைப்பதன் மூலம், மக்களின் சேமிப்பைக் குறைக்கும்.
3. பணவீக்கத்தின் காரணமாக பணத்தின் மதிப்பு குறிப்பிடத் தகுந்த அளவு குறைவதால் நாட்டில் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கும் வெளிநாட்டு மூலதனங்கள் திரும்பிச் செல்லும்.
ஆ. பகிர்வின் மீதான விளைவுகள் : நாட்டு வருமானப் பகிர்வில் உள்ள பல்வேறு தரப்பினரையும் பணவீக்கம் பல்வேறு வகையில் பாதிக்கின்றது. அவைகள் கீழே தரப்பட்டுள்ளன.
1. கடன் பெற்றோர் கடன் வழங்கியோர் : பணவீக்கக் காலத்தில் கடன் பெற்றோர் ஆதாயமும், கடன் வழங்கியோர் இழப்பையும் சந்திக்கின்றனர்.
2. தொழில் முனைவோர்கள் : உற்பத்தியாளர், வணிகர் என தொழில் முனைவோர் போன்று எவ்வகையானவராக இருந்தாலும், அவர்களுக்குப் பணவீக்கம் ஒரு வரமாகும்.
3. முதலீட்டாளர்கள் : கடன் பத்திரங்களில் முதலீடு செய்தோர் நிலையான வட்டியைப் பெறுவதால் அவர்கள் பணவீக்கக் காலத்தில் இழப்பினைச் சந்திப்பார்கள்.
27.
அ. முதல்நிலைப் பணிகள் :
i) பணம் ஓர் பரிமாற்றக் கருவியாக: இது பணத்தின் அடிப்படை பணியாகும். பணம் பொது ஏற்புத் தன்மையைக் கொண்டது. மேலும், இது அனைத்துப் பரிவர்த்தனைகளிலும் தவறாது இடம்பெறுகிறது.
ii) பணம் ஓர் மதிப்பின் அளவுகோலாக : பொருட்கள் மற்றும் பணிகளை மதிப்பளவை செய்வது பணத்தின் இரண்டாவது முக்கிய பணியாகும். ஆகவே, பணம் ஒரு பொது அளவுகோலாக பார்க்கப்படுகிறது.
ஆ. இரண்டாம் நிலைப் பணிகள்
i) பணம் ஒரு மதிப்பின் நிலைக்கலனாக: பண்டங்களைச் சேமிப்பாக வைத்திருந்தால் அது நிலைத்திருக்காது. ஆனால் பணம் கண்டுபிடிக்கப்பட்ட பின் பண்டங்களையும் பணிகளையும் சேமித்து வைப்பதில் உள்ள சிக்கல்கள் மறைந்துவிட்டன.
ii) பணம் வருங்காலச் செலுத்துதல்களுக்கான ஓர் அடிப்படை: பண்டமாற்று முறையில் கடன் வாங்குவதிலும் திருப்பிச் செலுத்துவதிலும் சிக்கல் நிறைந்திருந்தது. பணம் வருங்கால செலுத்துதல்களுக்கு இடையீட்டுக் கருவியாகச் செயல்படுகின்றது.
iii) பணம் வாங்கும்திறனை மாற்றிக் கொள்ளும் ஒரு கருவியாக : பொருளாதார வளர்ச்சியினை ஒட்டி பரிமாற்றம் விரிவடைந்து செல்கிறது.
இ. துணைப்பணிகள் :
i) கடனுக்கான அடிப்படை : கடன் முறைக்கு அடிப்படையாக பணம் அமைந்துள்ளது. வணிக வங்கிகள் வாடிக்கையாளர் கணக்குகளில் உள்ள ரொக்க இருப்பின் அளவை பொருத்தே கடன்களை உருவாக்குகின்றன.
ii) பணம் நாட்டு வருமானப் பங்கீட்டிற்கு உதவுகிறது: பண்டமாற்று முறையில் நாட்டு வருமானப் பங்கீடானது மிகச்சிக்கலான ஒன்றாகும். ஆனால், பணம் என்ற கருவி கண்டறியப்பட்ட பின் வாரம், கூலி, வட்டி, இலாபம் என காரணிகளுக்கான வருமானத்தை, அதாவது நாட்டு வருமானத்தை எளிதாகப் பகிர்ந்தளிக்க முடிகிறது.
iii) இறுதிநிலைப் பயன்பாடுகளையும், இறுதி நிலை உற்பத்தித் திறன்களையும் சமன் செய்திட பணம் பயன்படுகிறது: நுகர்வோர் தனது மொத்தப் பயன்பாட்டினை உச்சநிலைப்படுத்தும் நோக்கில் தாம் நுகரும் பல்வேறு பண்டங்களின் இறுதிநிலைப் பயன்பாடுகளை பணத்தின் துணையுடன் சமப்படுத்த வேண்டியதாகிறது.
iv) பணம் மூலதனத்தின் உற்பத்தித்திறனை உயர்த்துகிறது : மூலதனம் பல்வகை வடிவங்களில் காணப்படுகிறது. பணம் நீர்மைத் தன்மை கொண்ட ஒரு மூலதனமாகும்.
ஈ. இதர பணிகள் :
i) திரும்பச் செலுத்தும் திறனை தக்கவைக்க பணம் உதவுகிறது: பணம் பொது ஏற்புத்தன்மை கொண்ட ஒரு சாதனமாகும். நிறுவனங்கள் தங்களின் செலுத்துதல்களை மேற்கொள்ள எப்பொழுதும் குறிப்பிட்ட அளவு ரொக்கப் பணத்தை தயார் நிலையில் வைத்திருக்கும்.
ii) பணம் பொதுமைப்படுத்தப்பட்ட வாங்கு திறனைக் குறிக்கிறது : எந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காக அந்த பணம் எனும் வாங்குதிறன் சேமித்து வைக்கப்பட்டதோ, அதை மட்டுமே வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
iii) பணம் மூலதனத்திற்கு நீர்மைத் தன்மையைத் தருகிறது : பணம் என்பது நீர்மைத் தன்மை கொண்ட ஒரு மூலதனமாகும். இதன் துணையுடன் அனைத்து இடு பொருட்களையும் வாங்குவதன் மூலம் எந்த ஒரு செய்பொருளையும் உற்பத்தி செய்ய இயலும்.
28.
29.
30.
முடுக்கிக் கோட்பாடு செயல்படும் விதம் : ஒரு எளிமையான எடுத்துக்காட்டின் மூலம் முடுக்கியின் செயல்பாட்டை அறியலாம்.
1. 1000 நுகர்வு பண்டங்களைத் தயாரிப்பதற்கு 100 இயந்திரங்கள் தேவைப்படுவதாக எடுத்துக்கொள்வோம். 10 ஆண்டுகள் அந்த இயந்திரங்களின் வாழ்நாள் எனக் கொள்வோம். அதாவது ஒவ்வொரு ஆண்டும் 10 இயந்திரங்களை மாற்றியமைக்கப்படுகிறது. காரணம் நிலையான 1000 நுகர்வுப் பண்டங்களைத் தயாரிப்பதற்காக இதனை மாற்றியமைக்கும் தேவை ஏற்படுகிறது.
2. 10 விழுக்காடு அளவிற்கு (அதாவது 1000 லிருந்து 1100 ஆக) நுகர்வுப் பொருட்களின் தேவை அதிகரிக்கிறது என வைத்துக் கொள்வோம். இதன் விளைவாக மேலும் 10 இயந்திரங்களின் தேவை அதிகரிக்கும். எனவே மொத்த இயந்திர தேவை 20 ஆகும். (10 மாற்றியமைப்பதற்காக மற்றும் 10 அதிகரித்த தேவையை சந்திப்பதற்காக) இங்கே 10 விழுக்காடு நுகர்வுப் பண்டங்கள் தேவையானது 100 விழுக்காடு இயந்திரத் தேவையை அதிகரிக்கின்றது என்பது குறிக்கின்றது. (10 லிருந்து 20 வரை).
3. ஆதலால் இறுதியாக நுகர்வுப் பண்டங்களின் தேவையில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றம் அதிகப்படியான முதலீட்டு மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.
வரைபட விளக்கம்:
1. SS என்பது சேமிப்பு கோடு. II என்பது முதலீட்டு கோடு. E1 என்ற புள்ளியில் பொருளாதாரம் Oy1 வருமானத்துடன் சமநிலையில் இருக்கிறது.
2. சேமிப்பும் முதலீடும் OI2 ல் சமநிலையாக உள்ளது.
3. முதலீடு OI2 லிருந்து OI4 ஆக அதிகரிக்கும் போது வருமானம் Oy1 லிருந்து Oy3 ஆக அதிகரிக்கிறது.
4. அதிகரிக்கிற வருமானம் Y1Y2 ஆனது பெருக்கியின் விளைவாலும் மற்றும் அதிகரிக்கிற வருமானம் y2y3 ஆனது முடுக்கியின் விளைவாலும் ஏற்படுகின்றது.
31.
1. அரசு ₹100 கோடி பொதுப்பணிக்காக கூலியும், இதர பண்டங்கள் வாங்குவதற்காகச் செலவிடுகிறது எனக் கொள்வோம். இந்த ₹100 கோடியனாது உழைப்பாளர்களுக்கும் பொருட்களை அளித்தவர்களுக்கும் வருமானமாக அமையும்.
2. அவர்களின் இறுதிநிலை நுகர்வு நாட்டம் 0.8 (80%) எனக் கொண்டால் ₹80 கோடியை நுகர்வுச் செலவுக்கும், மீதம் ₹20 கோடியைச் சேமிக்கவும் செய்வர்.
இதில் மேற்காண் வருமானம் பெற்றவர்களின் இறுதிநிலை நுகர்வு நாட்டம் 0.8 எனில் ₹80 கோடியில் ₹64 கோடி நுகர்வுச் செலவுக்கும் மீதம் ₹16 கோடியை சேமிக்கவும் செய்வர். இந்த வழியில்
3. நுகர்வுச் செலவானது ஒரு சங்கிலித் தொடர் போன்று சென்று கொண்டே செல்லும்.
எனவே இறுதி முடிவுகள்
ΔΥ = 100 + 100 × 4/5 + 100x [4/5]2 + 100 x [4/5]3
அல்லது,
ΔΥ = 100 + 100 × 0.8+100x (0.8)2 + 100 x (0.8) = 100+80+64 +51.2...
= 500
அதாவது 100 × 1/1-4/5
100 x 1/1/5
100 × 5 = ₹500
உதாரணமாக C
100+ 0.8Y, I = 100,
என்றால் Y 1Y-0.8Y 0.2Y Y 100+0.8Y + 100 200 = 200/0.2 = 1000 → B
I இன் மதிப்பு 110, ஆக அதிகரிக்கப்பட்டால் 0.2Y = 210 Y = 210/0.2 = 1050 → D
1, ₹10 அதிகரித்தால், Y ₹50 அதிகரிக்கும்.
இது பெருக்கியின் விளைவு.
புள்ளி Aயில், Y = C = 500
C = 100+0.8 (500) = 500; S = 0
புள்ளி Bயில், Y = 1000
C = 100 + 0.8 (1000) = 900; S = 100 = I
புள்ளி Dயில், Y = 1050
C = 100 + 0.8 (1050) = 940; S = 110 = I
I மதிப்பு 10 அதிகரிக்கும் போது Y மதிப்பு 50 அதிகரிக்கும். இதுவே பெருக்கி விளைவாகும்.
K = \(\frac{1}{0.2}=5\)
32.
நுகர்வுச் சார்பைத் தூண்டுகின்ற காரணிகளை ஜே.எம்.கீன்சு இரண்டாகப் பிரிக்கின்றார். அவை அகவயக் காரணிகள் மற்றும் புறவயக் காரணிகள் ஆகும்.
அகவயக் காரணிகள் :
முன்னெச்சரிக்கை நோக்கம்: எதிர்பாராமல்
ஏற்படும் நிகழ்விற்காக, கையில் ரொக்கமாக வைப்பது. (எ.கா) விபத்து, உடல் நலனின்மை.
எதிர்பார்க்கும் நோக்கம் :
எதிர்கால தேவைக்கான விருப்பம்
(எ.கா.) வயதான காலம்.
கணிக்கும் நோக்கம் :
விருப்பம் மற்றும் பாராட்டை அனுபவிப்பதற்கான விருப்பம்.
முன்னேறும் நோக்கம் :
வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற விரும்புதல் சார்ந்த விருப்பம்.
பணவியல் சுதந்திர நோக்கம்
வணிக நோக்கம்:
வணிகத்தை முன்னேற்றுவதற்கான நோக்கம்.
பெருமித நோக்கம் :
சொத்தை தனது சந்ததியினருக்கு விட்டுச்செல்லும் விருப்பம்.
பேராசை நோக்கம் : :
முற்றிலும் கஞ்சத்தனமான உள்ளுணர்வு
புறவயக் காரணிகள் :
புறவயக் காரணிகள் உண்மையானவை, அளவிடக்கூடியவை. நீண்ட காலங்களில் இந்தக் காரணிகள் எளிதாக மாற்றமடையும்.
வருமானப் பகிர்வு :
சமநிலை வருமானப் பகிர்வுடைய சமூகத்தில் அதிகமான நுகர்வு விருப்பம் இருக்கும்.
விலை அளவு:
விலை வீழ்ச்சியடையும் போது, உண்மை வருமானம் அதிகரிக்கும், மக்கள் அதிகமாக நுகர்வார்கள் மற்றும் சமூகத்தில் நுகர்வு விருப்பம் அதிகரிக்கும்.
கூலி அளவு :
கூலி அதிகரிக்கும்போது நுகர்வுச் செலவும் அதிகரிக்கும்.
வட்டி வீதம்: அதிக வட்டி விகிதம் மக்களை அதிக அளவில் பணத்தைச் சேமிக்க ஊக்கமளிக்கும், நுகர்வைக் குறைக்கும்.
நுகர்வோர் கடன் :
எளிய தவணைகளாக நுகர்வுக் கடன் அளிக்கும் போது அவர்கள் நுகர்வோர் பண்டங்களான குளிர்பதனப் பெட்டி, ஊர்திகள், கணினி முதலானவற்றினை வாங்குவார்கள். இது நுகர்வை அதிகப்படுத்தும்.
மக்கள் தொகை காரணிகள் :
மற்றவை மாறாமல் இருக்கும் போது குடும்ப அளவு அதிகமாக இருந்தால், நுகர்வு அதிகமாக இருக்கும்.
33.
.
1. "உளவியல் விதியின் அடிப்படையாக மனிதன் தன் முன்னறிவு, அனுபவம், விரிவான உண்மை ஆகியவற்றின் அடிப்படையில் பெரும் நம்பிக்கையுடன் வருவாய் உயரும்போது நுகர்வை அதிகமாக்குவார்கள்; ஆனால் வருவாய் கூடிய அளவுக்கு நுகர்வு அதிகரிக்காது".
2. இந்த விதி மனிதர்கள் வருமானம் உயர்ந்த முழு அளவிற்கும் செலவு செய்யமாட்டார்கள் என எடுத்துரைக்கிறது.
ஊகங்கள்
1. மற்றவை மாறாது.
2. சுமூகமான சூழல் நிலவுகிறது.
3. முதலாளித்துவப் பொருளாதாரத்தில் தலையிடாக் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது.
விதியின் கருத்துகள்
இவ்விதி மூன்று கருத்துகளைக் கொண்டது.
1. வருமானம் உயரும்போது, நுகர்வுச் செலவும் அதிகரிக்கும்.
2. அதிகரித்த வருமானம் நுகர்வுச் செலவிற்கும், சேமிப்பிற்கும் இடையே சில விகிதத்தில் பிரிக்கப்படுகிறது.
3. அதிகரிக்கின்ற வருமானம் எப்பொழுதும் நுகர்வையும், சேமிப்பையும் அதிகரிக்கச் செய்யும். இவ்விதியின் மூன்று கருத்துகளும் அட்டவணை உதவியுடன் விளக்கப்படுகிறது.
கருத்துரை (1) : வருமானம் ₹60 கோடிகளாக அதிகரிக்கின்றது மற்றும் நுகர்வு ₹50 கோடிகளாக அதிகரிக்கிறது.
கருத்துரை (2) : அதிகரித்த ₹60 கோடி வருமானம்
இரண்டாக, நுகர்விற்கும், சேமிப்பிற்கும் இடையே முறையே பிரிக்கின்றது (அதாவது ₹50 கோடி நுகர்வும், ₹10 கோடி சேமிப்புமாக)
கருத்துரை (3) : வருமானம் அதிகரிக்கும் பொழுது நுகர்வு மற்றும் சேமிப்பு அதிகரிக்கின்றது. நுகர்வோ சேமிப்போ குறையவில்லை.
அட்டவணை: விதியின் மூன்று கருத்துரைகள்
| வருமானம் y | நுகர்வு C | சேமிப்பு S = Y - C |
| 120 | 120 | 0 |
| 180 | 170 | 10 |
| 240 | 220 | 20 |
இங்கே வருமானம் படுகிடை (x)- அச்சிலும், நுகர்வுச் சேமிப்பு செங்குத்து (y)- அச்சிலும் அளவிடப்படுகிறது. C - என்பது நுகர்வுச் சார்பு வளைகோடு 45 - டிகிரி கோடு வருமானமும், நுகர்வும் சம அளவாக இருப்பதைக் காட்டுகிறது.
34.
(a)
கான்
35.
(a)
\(K=\frac { \Delta Y }{ \Delta I } \)
36.
(a)
37.
(a)
தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம்
38.
(b)
இணைய வங்கி
39.
(c)
மைய வங்கி
40.
(a)
இந்திய அரசு
41.
(d)
மார்ச் 1982
42.
(c)
தவழும்
43.
(b)
44.
(b)
பணத்தின் சுழற்சி வேகம்
45.
(c)
பரிமாற்றக் கருவி
46.
(c)
நெகிழிப் பண
47.
(a)
கிரௌதர்
48.
(b)
J.M. கீன்ஸ்
49.
(a)
J.R. ஹிக்ஸ்
50.
(d)
வட்டி வீதத்தையும்
51.
(a)
குறைக்கிறது
52.
(a)
53.
(d)
அ மற்றும் ஆ
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards