12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 12/08/2019
பன்னாட்டுப் பொருளியல்
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
கோட்பாட்டு அடிப்படையில் வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் நன்மைகளாவன
பொருளாதார வளர்ச்சி
பன்னாட்டு வாணிப வளர்ச்சி
வேலை வாய்ப்பு மற்றும் திறன் அதிகரித்தல்
மேற்கண்ட அனைத்தும்
2.
இந்தியாவில் வெளிநாட்டு நேரடி மூலதனம் அனுமதிக்கப்படாத துறை?
வங்கி
அணு ஆற்றல்
மருந்து உற்பத்தி
காப்பீடு
3.
சுழற்சி அயல்நாட்டுச் செலுத்துச் சமநிலை சமமற்ற நிலைக்கான காரணம்
வாணிபச் சுழற்சியின் மாறுபட்ட கால கட்டம்
வருமானமும் விலை தேவை நெகிழ்ச்சியும் நாடுகளுக்கிடையே வேறுபடுதல்
நீண்டகாலப் பொருளாதார மாற்றங்கள்
அ மற்றும் ஆ
4.
சுற்றுலாவும் வெளிநாட்டுப் பயணமும் தொடர்புடைய பரிமாற்றங்கள் அயல்நாட்டு செலுத்துச் சமநிலையின் எந்தக் கணக்கின் கீழ் பதிவாகின்றன
பண்டங்கள் வாணிபக் கணக்கு
பணிகள் வாணிபக் கணக்கு
பரிமாற்றக் கணக்கு
மூலதனக் கணக்கு
5.
வாணிகச் சமநிலை அறிக்கையில்
பண்டப் பரிமாற்றம் மட்டும் பதிவாகிறது
பண்டங்கள் பணிகள் பரிமாற்றங்கள் பதிவாகிறது
மூலதனம் மற்றும் நிதி பரிமாற்றங்கள் பதிவாகின்றன
மேற்கண்ட அனைத்தும் பதிவாகிறது.
6.
வாணிக வீதம் _____ பற்றி குறிப்பிடுகின்றது
பொருள் ஏற்றுமதி இறக்குமதி விகிதம்
இறக்குமதி வழி விகிதம்
ஏற்றுமதி விலை, இறக்குமதி விலை விகிதம்
(அ) வும் (இ)யும்
7.
கீழ்கண்டவைகளில் பன்னாட்டு வாணிகத்தின் நன்மை எது?
நமது இயற்கை வளங்களை பாதுகாக்கலாம்.
புதிய தொழில் நுட்பம் கிடைக்கும்
மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.
அந்நிய செலவாணி ஈட்ட முடியும்.
8.
இரண்டு நாடுகளுக்கிடையிலான வாணிகம் என்பது
வெளிவாணிகம்
உள்வாணிகம்
மண்டலங்களுக்கிடையான வாணிகம்
உள்நாட்டு வாணிகம்
9.
மாறுகின்ற பணமாற்று வீதத்தின் பொருள் தருக?
10.
இறக்குமதி கட்டுப்பாடு என்றால் என்ன?
11.
மொத்த நிகர பண்டப் பரிமாற்று வாணிக வீதத்தைச் சுருக்கமாக எழுதுக
12.
பன்னாட்டுப் பொருளியலின் உள்ளடக்கத்தைப் பட்டியலிடுக.
13.
வெளிநாட்டு நேரடி முதலீட்டினால் ஏற்படும் நன்மைகளைக் குறிப்பிடுக.
14.
பண மாற்று வீதம் எவ்வாறு இரண்டு முறைகளில் நிர்ணயமாகிறது என்பதை எடுத்துக்காட்டு விளக்குக.
15.
அயல் நாட்டுச் செலுத்துநிலையின் கூறுகளை அட்டவணை வடிவில் விளக்குக.
16.
உள்நாட்டு வாணிகத்துக்கும் பன்னாட்டு வாணிகத்துக்குமிடையிலான வேறுபாடுகளை விவாதிக்கவும்.
17.
வணிகச் செலுத்துநிலை பற்றி நீவிர் அறிவது யாது?
18.
19.
பன்னாட்டு வாணிகத்தின் அடிப்படைகளை விளக்குவதில் ஆடம் ஸ்மித்துக்கும் டேவிட் ரிக்கார்டோவுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
20.
பன்னாட்டு வாணிகத்தின் நன்மைகளில் ஏதேனும் இரண்டு குறிப்பிடுக.
21.
பன்னாட்டுப் பொருளியல் என்றால் என்ன?
1.
(d)
மேற்கண்ட அனைத்தும்
2.
(b)
அணு ஆற்றல்
3.
(d)
அ மற்றும் ஆ
4.
(b)
பணிகள் வாணிபக் கணக்கு
5.
(a)
பண்டப் பரிமாற்றம் மட்டும் பதிவாகிறது
6.
(c)
ஏற்றுமதி விலை, இறக்குமதி விலை விகிதம்
7.
(c)
மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.
8.
(a)
வெளிவாணிகம்
9.
1. அயல்நாட்டுச் செலாவணி சந்தை விசைகளான மாறுகின்ற அயல்நாட்டுச் செலாவணிக்கான தேவையும் அளிப்பும் பரிமாற்று வீதத்தை நிர்ணயிக்கும் முறையே மாறுகின்ற பரிமாற்று வீதமாகும்.
2. இது மிதக்கும் பரிமாற்று வீதம் என்றும் அழைக்கலாம்.
10.
இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் கீழ்காணும் வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி இறக்குமதியைக் கட்டுப்படுத்தலாம்.
1. இறக்குமதி மீது வரிவிதித்தல் முன்பே விதிக்கப் பட்டிருந்தால் விகிதத்தை அதிகப்படுத்தலாம்.
2. பங்களவு நிர்ணயித்து இறக்குமதியைக் குறைக்கலாம். பங்களவு என்பது இறக்குமதி அளவை நிர்ணயித்தலாகும்.
3. கட்டுப்பாடு அல்லது தவிர்ப்பு என்ற முறையில் அத்தியாவசியமற்ற பண்டங்களைக் குறைப்பது. ஆனால் இது கடத்தலை ஊக்குவிக்கும்.
11.
நிகர பண்டமாற்று வாணிப வீதம்:
1. நிகர பண்டமாற்று வீதத்தை எப்.டபிள்யூ, தாஸிக் 1927 இல் வடிவமைத்தார்.
2. ஏற்றுமதி விலைகளுக்கும், இறக்குமதி விலைகளுக்கும் இடையிலான விகிதமே நிகரப் பண்டமாற்று வாணிக வீதம் என்கிறார். ஜேக்கப் வைனர் இதை பண்ட வாணிப வீதம் என்றழைக்கிறார்.
Tn = (Px/Pm)x100
Tn = நிகர பண்டமாற்று வாணிக வீதம்
Px = ஏற்றுமதி விலைக் குறியீட்டெண்
Pm = இறக்குமதி விலைக் குறியீட்டெண்
மொத்த பண்டமாற்று வாணிப வீதம்:
1. இந்த வீதத்தையும் தாஸிக் என்பவரே 1927ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார். நிகரப் பண்டமாற்று வீதத்தை மேம்படுத்தி இதை வடிவமைத்தார்.
2. மொத்த ஏற்றுமதி பண்டங்களின் குறியீட்டெண்ணிற்கும், மொத்த இறக்குமதிப் பண்டங்களின் குறியீட்டெண்ணிற்குமிடையிலான விகிதத்தை 100 ஆல் பெருக்கக் கிடைக்கும் தொகையாக மொத்தப் பண்டமாற்று வாணிக வீதத்தைப் புரிந்து கொள்ளலாம்.
Tg = (Qm/Qx) x 100
Tg = மொத்த பண்டமாற்று வாணிக வீதம்
QM = இறக்குமதி அளவு குறியீட்டெண்
Qx = ஏற்றுமதி அளவு குறியீட்டெண்
12.
பன்னாட்டுப் பொருளியலின் பொருளடக்கம்:
பன்னாட்டுப் பொருளியலின் பொருளடக்கம் பல பாகங்களை உள்ளடக்கியது. அவை கீழ்க்காணுமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தூய வணிகக் கோட்பாடு : நாடுகள் ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கான காரணங்கள், எந்த வகையான பண்டங்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதை விவரிக்கும் பிரிவை தூய வாணிபக் கோட்பாடாகும்.
கொள்கைச் சச்சரவுகள் : நாடுகளுக்கிடையேயான வாணிக உறவுகளைக் கட்டுப்படுத்துவதா, தடைகளற்ற வணிகத்தை அனுமதிப்பதா போன்றவற்றை இப்பிரிவு விவாதிக்கிறது.
பன்னாட்டு வாணிகக் கூட்டமைப்பும் ஒன்றியங்களும் : இந்தப் பிரிவு பன்னாட்டுக் கூட்டமைப்பு, சுங்கவரி ஒன்றியங்கள், நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பு, அமைப்புகளின் மூலமாக நாடுகளின் பொருளாதாரம் இணைக்கப்பட்டுள்ளதை விவாதிக்கிறது.
பன்னாட்டு நிதியும் வணிக ஒழுங்குபடுத்தும் நிறுவனங்களும்: பன்னாட்டுப் பண நிதியம், மறு கட்டமைப்பு, பொருளாதார மேம்பாட்டுக்கான பன்னாட்டு வங்கி (உலக வங்கி, உலக வாணிக நிறுவனம், வாணிகம், பொருளாதார மேம்பாட்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டு அமைப்பு முதலான பன்னாட்டு அமைப்புகள் நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவுகளை விவரிக்கிறது
13.
வெளிநாட்டு முதலீடு பெரும்பாலும் நேரடி முதலீடாகவே நாடுகளுக்குள் நுழைகிறது. வெளிநாட்டு நேரடி முதலீட்டின் நன்மைகளை பட்டியலிடுவோம்..
1. வெளிநாட்டு நேரடி மூலதனம் அது சென்றடையும் நாட்டின் மூலதன அளவை உயர்த்தி வேலைவாய்ப்பு வருமான அளவையும் அதிகரிக்கும்.
2. நேரடி வெளிநாட்டு மூலதனம் சென்றடையும் நாட்டிற்கு புதிய தொழில்நுட்பத்தையும் கொண்டு வருகிறது.
3. வெளிநாட்டு நேரடி முதலீடு நுழையும் நாட்டின் அரசுக்கு நிறுவன இலாப வரி செலுத்துவதன் மூலம் வருவாயை கொண்டு வருகிறது.
4. இலாபத்தின் ஒரு பகுதியை மறுமுதலீடு செய்வதன் மூலம் தொழில்வளம் பெருகும்.
5. புதிய தொழில் மேலாண்மை முறைகளை அறிமுகப்படுத்தும்.
6. ஏற்றுமதியை அதிகப்படுத்தி இறக்குமதிக்கான அவசியத்தை குறைத்து அயல்நாட்டுச் செலுத்துநிலை சமமின்மையை நீக்கும்.
7. போட்டியை உருவாக்கி உள்நாட்டு முற்றுரிமையைத் தகர்க்கும்.
8. வெளிநாட்டு நேரடி மூலதனம் முதலீட்டையும் அயல்நாட்டுச் செலாவணியையும் கொண்டு வருவதன் மூலம் சேமிப்பு முதலீடு இடைவெளியையும் நிரப்ப உதவுகிறது.
9. உள்நாட்டு துணைத் தொழில் நிறுவனங்கள் வளரவும், வெளிநாட்டு நிறுவனங்களோடு இணைந்து உள்நாட்டு சிறுதொழில்கள் வளரவும் உதவும்.
10. உள்நாட்டு தொழில் முனைவோர்களை வெளிநாட்டு மூலதனம் மற்ற நாடுகளில் முதலீடு செய்ய தூண்டுகிறது.
14.
பணமாற்று வீதம்:
ஒரு அலகு அயல் பணத்தை பெறுவதற்கு எத்தனை அலகு உள்நாட்டுப் பணத்தை கொடுக்கிறோம் என்பதே பணமாற்று வீதமாகும்.
பணச்சமநிலைப் பரிமாற்று வீதம் வரைவிலக்கணம்:
"அயல்நாட்டுச் செலுத்து சமநிலையை ஒரு குறிப்பிட்ட காலத்தில் சம நிலையில் வைப்பதே பரிமாற்றச் சமநிலை வீதம் எனப்படும்."
சமநிலை பரிமாற்று வீதம் நிர்ணயமாதல்:
1. அயல்நாட்டுச் செலாவணி அங்காடியில் சமநிலைப் பரிமாற்று வீதம் பொது விலை நிர்ணய கோட்பாட்டின் படி நிர்ணயமாகிறது.
2. அங்காடி விசைகளான தேவையளவும் அளிப்பளவும் ஒருங்கே செயல்பட்டு சமநிலை விலையை நிர்ணயிக்கும் என்பதே பொது விலை நிர்ணயக் கோட்பாடாகும்.
3. இக்கோட்பாட்டின்படி பார்த்தால் அயல்நாட்டுச் செலாவணிக்கான தேவையளவும் அளிப்பளவும் சமமாகுமளவில் சமநிலை பரிமாற்று வீதம் நிர்ணயமாகும்.
4. வரைபடத்தில் அயல்நாட்டுச் செலாவணி தேவை, அளிப்பு வளைகோடுகள் சந்திக்கும் வெட்டுப்புள்ளியில் சமநிலை பரிமாற்று வீதம் நிர்ணயமாகும்.
5. மேலே உள்ள வரைபடத்தில் செங்குத்து அச்சு பண மாற்று வீதத்தையும், படுகிடை அச்சு அயல்நாட்டுச் செலாவணிக்கான தேவை. அளிப்பு அளவுகள் குறிக்கப்பட்டுள்ளன.
6. E- என்ற புள்ளியில் அயல்நாட்டுச் செலாவணி தேவை வளைகோடு அளிப்பு வளைகோட்டை வெட்டுகிறது. தேவையும் (DD) அளிப்பும் (SS) சந்திக்கும் வெட்டுப்புள்ளியில் (E) பரிமாற்று வீதம் சமநிலையை அடைகிறது.
7. தேவையும் அளிப்பும் OQ என்ற அளவில் இருக்கும்பொழுது நிர்ணயமாகும் OP2 எனும் பரிமாற்றுவீதமே சமநிலை பணமாற்று வீதமாகும்.
15.
அயல்நாட்டு செலுத்துநிலையின் கூறுகள் :
1. வரவு, பற்று இனங்கள் நேரடியாக அயல் நாட்டுச் செலுத்து சமநிலை அறிக்கையில் பதியப்படுகின்றன.
2. அவை கிடைமட்டமாக கீழ்க்காணும் மூன்று இனங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.
1. நடப்புக் கணக்கு, 2. மூலதனக் கணக்கு. 3. மைய வங்கித் தீர்வுக் கணக்கு அல்லது மைய வங்கி நிதிச் சொத்துக் கையிருப்புக் கணக்கு.
3. நடப்புக் கணக்கு: பன்னாட்டுப் பண்டப் பரிமாற்றங்கள், பன்னாட்டுப் பணி பரிமாற்றங்கள்.(சுற்றுலா, போக்குவரத்து உரிமைத்தொகை), பன்னாட்டு ஒருதரப்புச் செலுத்துகைகள் (பரிசுத் தொகை, அயல் நாட்டு உதவி) பரிமாற்றங்கள் இந்தக் கணக்கின் கீழ் பதியப்படுகின்றன.
4. மூலதனக் கணக்கு: வெளிநாட்டுக் கடன், அயல் நாட்டு முதலீடு, பன்னாட்டுப் பண, நிதி அங்காடி விற்றல் வாங்கல் பரிமாற்றங்கள் இந்தக் கணக்கின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன.
மையவங்கி நிதி சொத்து கையிருப்புக் கணக்கு:
1. மைய வங்கியின் கையிருப்பில் உள்ள செலாவணி சொத்துக்களில் நடைபெறும் பரிவர்த்தனை இந்த கணக்கில் பதிவு செய்யப்படுகிறது.
2. உபரி எழுந்தால் கையிருப்புக் கணக்கில் சேர்க்கப்படும்.
3. பற்றாக்குறை எழுந்தால் கையிருப்பிலிருந்து எடுத்து செலவிடப்படும். எனவேதான் இதற்கு மைய வங்கி கையிருப்பு தீர்வு கணக்கு என்ற பெயரும் வழங்கப்பட்டது.
பன்னாட்டுப் பண நிதியத்தில் நிகர கடன் பெறும் தகுதி நிலை ஆகியவை பதிவு செய்யப்படுகிறது.
அயல்நாட்டு செலுத்துச் சமநிலைக் கணக்கு
16.
| உள்நாட்டு வாணிகம் | பன்னாட்டு வாணிகம் | |
| 1 | ஒரு நாட்டிற்குள் மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே நடைபெறும் வாணிகம் | பல நாட்டின் மக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான வாணிகம் |
| 2 | உழைப்பு, மூலதனமும் ஒரு நாட்டின் பகுதிகளுக்கிடையே தடையில்லாமல் இடம் பெயர்தல் | உழைப்பும் மூலதனமும் நாடுகளுக்கிடையே இடம் பெயர்தல் தடைகளுக்குட்பட்டது. |
| 3 | பண்டங்கள், பணிகள் இடம் பெயர்தலில் தடை ஏதுமில்லை. | பண்டங்கள், பணிகள் இடம் பெயர்தலை சுங்க வரி, பங்களவு முதலான தடைகள் கடினமாக்குகின்றன. |
| 4 | விற்றல் வாங்கலில் ஒரே ஒரு பணம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. | பலநாட்டுப் பணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. |
| 5 | புவி அமைப்பும் கால நிலைச் சூழலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும் | புவி அமைப்பும் கால நிலையும் வேறுபடும் இயல்பு கொண்டவை. |
| 6 | வாணிகமும், நிதி நடைமுறைகளும் ஒரே மாதிரியானவை. | வாணிகமும், நிதி நடைமுறைகளும் வேறுபடும் போக்குக் கொண்டவை. |
| 7 | அரசமைப்பு முறை, மக்களின் பழக்க வழக்கங்கள், அரசின் கொள்கைகளில் வேறுபாடில்லை | அரசமைப்புமுறை, மக்களின் பழக்க வழக்கங்கள், அரசின் கொள்கைகளில் வேறுபாடுகளிருக்கும். |
17.
1. நாடுகளுக்கிடையே பண்டங்கள் மட்டுமல்லாமல் பணிகள், மூலதனம், பணம் போன்றவையும் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. இவற்றையும் உள்ளடக்கிய சமநிலையை ஒரு நாடு அடைய வேண்டும்.
2. இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய தொகுப்பு அறிக்கையே அயல்நாட்டுச் செலுத்துச் சமநிலையாகும்.
18.
19.
| ஆடம் ஸ்மித் | ரிக்கார்டோ | |
|---|---|---|
| 1 | குறைந்த தனி அடக்கச் செலவில் பொருள் உற்பத்தி செய்யும் தேர்ச்சியை நாடுகள் பெற்றிருப்பதே பன்னாட்டு வாணிகம் நடைபெறுவதற்கான அடிப்படையாகும். | பண்டங்களை உற்பத்தி செய்யச் செலவழிக்கப்படும் செலவு வேறுபாட்டை பன்னாட்டு வாணிகத்திற்கான அடிப்படை என்கிறார். |
| 2 | உழைப்பு மட்டுமே உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஒரே உற்பத்திக் காரணி. | உற்பத்தி வளங்கள் முழுவதும் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகின்றன |
20.
1. பன்னாட்டு வாணிகம் அனைத்து வணிக நாடுகளிலும் சமநிலை நிலவ உதவுகிறது.
2. பன்னாட்டு வாணிகத்தில் ஈடுபடும் நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.
21.
பன்னாட்டுப் பொருளியல் என்பது பண்டங்கள் மற்றும் பணிகள் நாடுகளுக்கிடையே பரிமாற்றம் செய்வது பற்றிய பொருளியலின் ஒரு பாடப்பிரிவாகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards