12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/10/2019
பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல்
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
நிதி ஆயோக்கின் பணிகள் யாவை?
2.
செயல்பாட்டுத் திட்டமிடலுக்கும் அமைப்புமுறைத் திட்டமிடலுக்குமிடையேயான வேறுபாடுகளை எழுதுக.
3.
இந்தியாவில் பொருளாதாரத் திட்டமிடல் படிநிலை வளர்ச்சியை மதிப்பிடுக.
4.
பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் பொருளாதாரம் சாராத காரணிகள் யாவை?
5.
வறுமையின் நச்சுச் சுழற்சிக்கான காரணங்களை வரைபடத்துடன் தெளிவுப்படுத்துக.
6.
நிதி ஆயோக்கின் பயணிகளை விவரிக்க.(ஏதேனும் 7)
7.
பொருளாதார முன்னேற்றத்தை அளவிடும் முறைகளை விவரி:
8.
திட்டமிடலுக்கு எதிரான வாதங்களை எடுத்துரைக்கவும்.
9.
10.
பொருளாதார முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் பொருளாதாரம் சார்ந்த காரணிகளை விவாதிக்கவும்.
1.
1. கூட்டுறவும் போட்டி அடிப்படையிலான கூட்டாட்சியும்
2. நாட்டின் நிகழ்வுகளின் மாநிலங்களைப் பங்கெடுக்க வைத்தல்
3. பரவலாக்கப்பட்டத் திட்டமிடல்
4. தொலைநோக்கும், காட்சித் திட்டமிடலும்
5. நிபுணர்களின் கூட்டமைப்பை உருவாக்குதல்
6. உகந்ததாக்குதல்
7. சச்சரவுத் தீர்த்தல்
8. வெளியுலகத் தொடர்பை ஒருங்கிணைத்தல்
9. உள்நாட்டு ஆலோசனை வழங்குதல்
10. திறன் உருவாக்குதல்
11. கண்காணித்தலும் மதிப்பிடுதலும்
2.
| செயல்பாட்டுத் திட்டம் | அமைப்பு முறைத்திட்டம் | |
| 1. | ஒரு நாடு பெற்றுள்ள பொருளாதார சமூக அமைப்பு முறையை மாற்றாமல் பொருளாதாரச் சீர்கேடுகளை நீக்குவதற்கு ஏற்படுத்தப்பட்ட திட்டம். | பொருளாதார அமைப்பு முறையில் பொருத்தமான மாற்றங்களைச் செய்து இலக்குகளை அடையும் திட்டமிடலே கட்டமைப்புத் திட்டமிடலாகும். |
| 2. | வழிகாட்டுதல்கள் மட்டுமே செய்யும் திட்டமிடல் பணிகள் திட்டமிடலாகும். | இவ்வகையான திட்டமிடல் பெரும்பாலும் பின்தங்கிய நாடுகளில் இது காணப்படுகிறது. |
3.
இந்தியாவில் திட்டமிடுதலின் பரிணாம வளர்ச்சியை கீழ்கண்ட நிகழ்வுகளிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
உயர்திரு. எம். விஸ்வேஸ்வரய்யா (1934):
புகழ்பெற்ற பொறியியல் வல்லுநரும் அரசியல்வாதியுமான எம். விஸ்வேஸ்வரய்யா 1934ஆம் ஆண்டு இந்தியாவில் திட்டமிடுதலுக்கான அடித்தளத்தை அமைத்தார்.
அவர் தனது ஆலோசனையாகப் பத்தாண்டுத் திட்டமொன்றை அவர் எழுதிய “இந்திய பொருளாதாரத் திட்டமிடல்” எனும் புத்தகத்தில் விளக்கியுள்ளார்.
ஜவஹர்லால் நேரு (1938):
“தேசியத் திட்டக்குழு” ஒன்றை அமைத்தார்.
அன்றைய அரசியல் சூழ்நிலை காரணமாகவும், இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்ததாலும் நேருவின் முயற்சிகள் நின்று விட்டன.
பாம்பே திட்டம் (1940):
மும்பையின் முன்னணித் தொழிலதிபர்கள் பாம்பே திட்டம் எனும் திட்டத்தை 1938ஆம் ஆண்டில் முன்மொழிந்தனர்.
இது பதினைந்து ஆண்டுகளுக்கான தொழில் முதலீட்டுத் திட்டமாகும்.
எஸ்.என். அகர்வால் (1944) :
இவர் "காந்தியத் திட்டம்" எனும் திட்டத்தை 1944 ஆம் ஆண்டில் வழங்கினார்.
இது வேளாண்மை, கிராமியப் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டமாகும்.
எம்.என்.ராய் (1945):
மக்கள் திட்டமான இத்திட்டம் வேளாண்மை உற்பத்தியையும் விநியோகத்தையும் இயந்திர மயமாக்குவதையும் நுகர்வுப் பொருட்களையும் அரசே வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தியது.
ஜெயப்பிரகாஷ் நாராயணன் (1950):
'சர்வோதயத் திட்டம்' ஒன்றை முன்மொழிந்தார்.
இது காந்தியடிகள், வினோபா பாவே ஆகியோரின் கருத்துகளின் உத்வேகத்தால் தயாரிக்கப்பட்ட திட்டமாகும்.
4.
பொருளாதாரம் சாராத காரணிகள்:
1. மனித வளம்
2. தொழில்நுட்ப அறிவு
3. அரசியல் சுதந்திரம்
4. சமூக அமைப்பு
5. ஊழலற்ற நிர்வாகம்
6. முன்னேற்றம் அடைவதற்கான விருப்பம்
7. நீதி போதனை, அறநெறியும் சமூக விழுமியங்களும்
சூதாட்ட முதலாளித்துவம்
8. பரம்பரைச் சொத்துரிமை முதலாளித்துவம்
5.
வறுமையின் நச்சுச் சுழற்சி: நச்சுச் சுழலானது ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்று ஏழைநாடுகளை தொடர்ந்து வறுமை நிலையிலேயே வைத்திருக்கும் விதத்தில் செயல்படுவதைக் குறிப்பாக ராக்னார் நர்க்ஸ் கூறுகிறார்.
வறுமையின் நச்சுச் சுழற்சி தேவைப் பக்கத்திலிருந்தும் அளிப்பின் பக்கத்திலிருந்தும் செயல்படுகிறது.
அளிப்பின் பக்கத்திலிருந்து பார்த்தால், குறைவான உண்மை வருமானம் காரணமாக சேமிப்பு அளவு குறைகிறது. இது முதலீட்டு அளவைக் குறையச் செய்து மூலதனப் பற்றாக்குறையை உருவாக்குகிறது. இதனால் உற்பத்தித் திறன் குறைந்து வருமானமும் குறைகிறது. இவ்வாறு அளிப்புப் பக்கத்தில் வறுமை நச்சுச் சுழற்சி செயல்படுகிறது.
தேவைப் பக்கத்திலிருந்து பார்த்தால், குறைவான உண்மை வருமானம் காரணமாக தேவையும் குறைவாக இருக்கும்.
இது முதலீட்டைக் குறைக்கச் செய்யும், இதனால் மூலதன பற்றாக்குறை ஏற்பட்டு உற்பத்தி குறைந்து வருமானத்தை குறைக்கும்.

6.
1. கூட்டுறவு மற்றும் போட்டி அடிப்படையிலான கூட்டாட்சி:
மாநிலங்கள் நாட்டின் கொள்கை வடிவமைப்பதில் துடிப்புடன் பங்கெடுக்கத் தேவையானவற்றை செய்வது
2. நாட்டின் நிகழ்வுகளில் மாநிலங்களைப் மாநிலங்களைப் பங்கெடுக்க வைத்தல்:
நாட்டின் முன்னேற்றத்திற்கான முன்னுரிமைகள் மற்றும் உத்திகளில் மாநிலங்களையும் இணைத்துக் கொள்ளுதல்
3. பரவலாக்கப்பட்டத் திட்டமிடல்:
திட்டமிடல் நடைமுறையை கீழிருந்து மேல் என்ற முறையில் மற்றம் கொண்டு வருதல்
4. தொலைநோக்கு மற்றும் காட்சித் திட்டமிடல்:
நாட்டின் எதிகாலத்தை கவனத்தில் கொண்டு இடைக்கால மற்றும் நீண்டகால தொலைநோக்கு கட்டமைப்பை வடிவமைத்தல்
5. நிபுணர்களின் கூட்டமைப்பை உருவாக்குதல்:
அரசின் கொள்கைகள் வடிவமைப்பதிலும், திட்டங்களை செயல்படுத்துவதிலும் அரசுக்கு வெளியில் உள்ள நிபுணர்கள் ஒன்றிணைந்து பங்குபெற வைத்தல்.
6. உகந்தத்தாக்குதல்:
அரசின் பல படிநிலைகளில் பணியாற்றுபவர்களை குறிப்பாக பலதுறைகள் ஒன்றிணைந்து செயல்படும் இடங்களில் ஏற்படும் பிரச்சனைகளை களைய தொடர்பு கொள்ளுதல். ஒருங்கிணைத்தல், கைகோர்த்தல் மற்றும் கூட்டிணைத்தல் மூலம் உகந்த பணியை நிதி அயோக் செய்கிறது
7. சச்சரவுத் தீர்த்தல்:
அரசுத் திட்டங்களை வேகமாக செயல்படுத்த மாநில மைய அரசுகளுக்கு இடையில் மாநிலங்களுக்கிடையில் அரசுத் துறைகளுக்கிடையில் மற்றும் பிற துறைகளுக்கிடையில் நிலவும் சச்சரவுகளுக்குத் தீர்வுக்கான ஒரு தளத்தை அமைத்துக் கொடுக்கிறது
8. வெளியுலகத் தொடர்பை ஒருங்கிணைத்தல்:
வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகளையும் பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் நிதி வளங்களையும் நாட்டின் முன்னேற்றத்துக்குப் பயன்படும் வகையில் பொறுத்தரும் பொறுப்பு அலுவலகமாக நிதி ஆயோக் செயல்படும்
9. உள்நாட்டு ஆலோசனை வழங்குதல்:
கொள்கைகள் மற்றும் திட்டங்கள் வகுக்க மாநில மற்றும் மைய அரசுகளுக்கு ஆலோசனைகளை வழங்குகிறது
10. திறன் உருவாக்குதல்:
அரசுத் துறைகளில் திறனை வளர்க்கவும் தொழில் நுட்பத்தை மேம்படுத்தவும், உலக அளவில் தற்போது நடைமுறையில் உள்ள தர அளவுகோள்களை கொண்டும், மேலாண்மை நுட்பங்கள் வழியாகவும் திறன் உருவாக்கும் பணியையும் நிதி ஆயோக் செய்கிறது.
11. கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல்:
அரசு செயல்படுத்தும் திட்டங்களை நிதி ஆயோக் கண்காணித்து அதன் விளைவுகளை மதிபீடும் செய்கிறது
7.
நாட்டின் மொத்த உற்பத்தி (GNP):
ஒரு நாட்டின் புவி எல்லைக்குள் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் பணிகளின் சந்தை மதிப்புடன் அந்த நாட்டு மக்கள் வெளிநாடுகளில் ஈட்டிய வருமானத்திற்கும் இடையிலான வேறுபாட்டுத்த தொகையை கூட்டினால் வெளிநாட்டினர் சம்பாதித்து அவர்கள் நாட்டுக்கு அனுப்பிய வருமானத்திற்கும் கிடைக்கும் மொத்த மதிப்பே மொத்த நட்டு உற்பத்தி எனலாம். இந்த கருத்தினை கொண்டு ஒரு நாட்டின் பொருளாதார நிலையை மதிப்பிடலாம்
தலாவீத மொத்த நாட்டு உற்பத்தி:
இந்த அளவிடும் முறை நீண்டகாலத்தில் தலா உற்பத்தி மதிப்பு அதிகரித்தலைக் குறிப்பிடுகிறது. தலா வருமானம் அதிகரிக்கும் வேகத்தை விட உயர்வாக இருக்க வேண்டும் என இந்த அளவிடும் முறை வலியுறுத்துகிறது
நலன்:
பண்டங்கள் மற்றும் பணிகளை மக்கள் வாங்கி பயன்படுத்துவது அதிகரிப்பதையே பொருளாதார முன்னேற்றமாக கருதப்படுகிறது. மக்கள் நலன் என்ற கண்ணோட்டத்தில் பொருளாதார முன்னேற்றத்தை மக்களின் சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத்தரத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு மேம்படுவதாக சார்ந்து வரையறுக்கலாம்
சமூகக் குறியீடுகள்:
மக்களின் அடிப்படை மற்றும் கூட்டுத் தேவையை நிவர்த்தி செய்வதை சமூக குறியீடுகள் என அழைக்கப்படுகிறது. நேரடியாக வழங்கப்படும் அடிப்படைத் தேவை என்பது மக்களின் சுகாதாரம், கல்வி, உணவு, குடிநீர், துப்புரவு மற்றும் வீட்டு வசதி ஆகியவையாகும் இவற்றைக் கொண்டு சமூக பின்னடைவு தவிர்க்கப்படுகிறது.
8.
திட்டமிடலுக்கு எதிரான வாதங்கள் :
அங்காடி இயங்காமல் தோல்வியடைந்ததால் அரசு திட்டமிடல் மூலம் தலையிடும் அவசியம் உருவானது.
திட்டமிடலுக்கு எதிராக வாதங்களையும் குறைகளையும் புரிந்து கொள்வோம்.
தன் விருப்பம்போல் செயல்பட இயலாமை :
தன் விருப்பம் போல் செயல்பட இயலாததால் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது.
திட்டமிடல் கட்டுப்பாடுகளையும் வழி முறை களையும் விதித்து நாட்டிற்கு முதுகெலும்பாக உள்ளது.
தலையிடாப் பொருளாதாரத்தில் நுகர்வு, பணியைத் தேர்வு செய்தல், உற்பத்தி செய்தல், விலை நிர்ணயம் செய்தல் ஆகியவற்றில் தன் விருப்பம்போல் முடிவெடுக்க அனுமதி உள்ளது.
தன் முனைப்புக் குறைதல் :
மையப்படுத்தப்பட்ட திட்டமிடலில் நடவடிக்கைகளில் ஊக்கப்படுத்துதல், புதுமைகளைப் புகுத்துதல் ஆகியவற்றுக்கு ஊக்கமிருக்காது.
தனியார் உரிமை இல்லாதது, இலாப நோக்கைக் குறைத்து தொழில் முனைவோர் திறம்பட முடிவு எடுப்பதையும், இடர் எதிர்நோக்குதலையும் குறைக்கிறது.
திட்டமிடல் பொருளாதாரத்தில் அனைவருக்கும் அவர்களது முயற்சி, திறமை மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.
உயர் பதவியில் உள்ள அலுவலர்கள் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தும் போக்குத் திட்டமிடலில் தவிர்க்க இயலாத ஒன்றாக உள்ளது.
அதிகமான நிர்வாகச் செலவு:
திட்டமிடலின் நோக்கமெனனவோ தொழில் மயமாக்கல், சமூகநீதி, நாட்டு நிலைமையைச் சமப்படுத்துதல் ஆகியன உயர்வானவை. ஆனால் அதற்கு நாடு செலவிடும் தொகை அடையவுள்ள பலனைவிட அதிகமாக இருக்கும்.
சரியான புள்ளிவிவரம் இல்லாமை, தவறாக கணிப்பது, திட்டமிடுதலை சரிவர செயல்படுத்துவது ஆகியவை வளங்களை வீணடித்து உபரி அல்லது பற்றாக்குறை நிலைக்குக் கொண்டு செல்லும்.
முன்கணிப்பதில் உள்ள சிரமங்கள் :
அரசு தடையில்லாத நாட்டில், விலை இயக்க முறையில், விலை, தேவை மற்றும் அளிப்பு ஆகியவை தானாக இயங்கி ஒன்றையொன்று சரி செய்து கொள்கின்றன.
திட்டமிடல் நாடுகளில் இப்படி ஒரு வசதி இல்லை. நுகர்வும் உற்பத்தி அளவுகளைத் துல்லியமாக முன்கூட்டியே நிர்ணயிப்பது கடினம்.
நிலையான பொருளாதார முன்னேற்றத்தையும், சமூக, சமத்துவத்தையும் திட்டமிடுதல் மூலம் சாதிக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
9.
10.
பொருளாதாரம் சார்ந்த காரணிகள் :
இயற்கை வளங்கள் : ஒரு நாடு பெற்றுள்ள இயற்கை வளங்களின் அளவு அந்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் காரணியாகும். முன்னேற்றத்திற்கு தேவைப்படும் அளவுக்கு ஒரு நாடு இயற்கை வளங்களை பெற்றிருக்க வேண்டும்.
மூலதன உருவாக்கம் : மூலதனம் பொருளாதாரத்தின் அனைத்துச் செயல்பாட்டிற்கும் அடிப்படையானதாகும். ஏற்கனவே உள்ள இருப்புடன் தற்போது கூடும் நிகர அளவு மூலதனமே, மூலதன உருவாக்கம் என்பர்.
சந்தையின் அளவு : சந்தை அளவானது பெரிய அளவில் இருந்தால் கூடுதலான உற்பத்தி, அதிக வேலைவாய்ப்பு, தலா வருமானம் உயர்வு ஆகியவற்றைத் தூண்டி பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுகிறது.
கட்டமைப்பு மாற்றம் : கட்டமைப்பு மாற்றம் என்பது பொருளாதாரத்தில் தொழில் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கும்.
விற்பனைக்குரிய உபரி : வேளாண் துறையில் குடும்பத்திற்கான நுகர்வுத் தேவையை விட கூடுதலாக செய்யப்படும் உற்பத்தியை விற்பனைக்குரிய உபரி என்கிறோம்.
பன்னாட்டு வாணிகம் : பன்னாட்டு வாணிகத்தில் சாதகமான சூழ்நிலை இருந்தால் ஒரு நாடு போதுமான அளவு அயல் நாட்டுச் செலவாணியைக் கையிருப்பில் வைக்க முடியும்.
பொருளாதார அமைப்பு முறை : ஒரு நாடு தடையில்லா பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்தால் கட்டளைப் பொருளாதாரத்தைவிட வேகமான வளர்ச்சி பெறும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards