12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Tamil செல்வத்துள் எல்லாம் தலை - வாழ்வியல் இலக்கியம் - திருக்குறள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil எல்லா உயிரும் தொழும் - இலக்கணம் -தொன்மம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil எல்லா உயிரும் தொழும் - செய்யுள்-புறநானுறு Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil நாடு சமூகம் திருவாகம் மனிதம் - உரைநடை உலகம் -இலக்கியத்தில் மேலாண்மை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் -இலக்கணம் -படைப்பாக்க உத்திகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - துணைப்பாடம் -நடிகர் திலகம் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
சுற்றுச்சூழல் பொருளியல்
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
விதைப்பந்து என்பதன் பொருள் கூறுக.
2.
உலக வெப்பமயமாதல் என்பதனை வரையறு
3.
ஒலிமாசுவினை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கூறுக.
4.
சுற்றுச்சூழல் பண்டங்கள் என்றால் என்ன? உதாரணம் கூறு.
5.
சுற்றுச்சூழல் என்பதன் பொருள் கூறுக.
6.
நீடித்த நிலையான மேம்பாடு என்றால் என்ன?
7.
நில மாசுவிற்கான தீர்வுகளை பட்டியலிடுக.
8.
நில மாசுவின் விளைவுகளைக் கூறுக.
9.
நில மாசுவின் வகைகளைக் கூறுக.
10.
பொருள்சார் சமநிலை அணுகுமுறையின் பொருள் குறிப்பிடுக.
11.
அமிலமழை பொழிவதற்கு முக்கிய காரணம்
நீர் மாசு
காற்று மாசு
ஒலி மாசு
நில மாசு
12.
மனித உடல் நலத்திற்கும் சுற்றுப்புறச் சூழலுக்கும் ஒவ்வாத அளவுக்கு அதிகமான சத்தத்தை எழுப்புவது.
காற்று மாசு
நீர் மாசு
ஒலி மாசு
மண் மாசு
13.
எதிர்மறை உற்பத்தி புறவிளைவுகள் இதனால் ஏற்படுகின்றன.
தொழிற்சாலைகள்
விவசாயம்
போக்குவரத்து
கணினி
14.
சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, வளிமண்டலத்தில் நீருடன் கலந்து பூமிக்கு திரும்புவதை
நீர்மாசு
அமில மழை
இரசாயன கழிவுகள்
திரவமாசு
15.
காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் சட்டம் ________ ஆண்டு
1967
1976
1981
1951
16.
இயற்கைப் பண்ணையின் பொதுவான கொள்கைகள் யாவை?
17.
இயற்கை பண்ணை முறை - வரையறு.
18.
திடக்கழிவுகள் - வரையறு.
19.
E-கழிவுகளின் ஆதாரங்களை கூறுக.
1.
ஒரு விதை மண்ணால் மூடி வைக்கப்படுகிறது.
அந்த மண் உரம் கலந்த களிமண்ணாகும்.
பின்பு அது உலர்த்தப்பட்டு எங்கு வேண்டுமோ அங்கு அதனை விதைக்கலாம்.
இவ்வாறு செய்யும் போது, அந்த விதை முன்பே நடப்பட்டுவிட்டது என்றே பொருள்.
2.
நிலத்தின் மேற்பரப்பில் (நிலமும் நீரும்) தற்பொழுது ஏற்பட்டுள்ள தட்ப வெப்ப நிலை அதிகரிப்பு புவி வெப்பமயமாதல் என்கிறோம்.
3.
ஒலித்தடைகளை ஏற்படுத்துதல்
போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாடு
ஒலி பெருக்கிகளைக் கட்டுப்படுத்துதல்
பெரிய ஊர்தி செல்லும் நேரத்தைக் கட்டுப்படுத்துதல்
4.
சுற்றுச்சூழல் பண்டங்கள் என்பவை அங்காடியிடா பொருட்களான தூய்மை காற்று, பசுமையான போக்குவரத்து உள்கட்டமைப்பு, பொது பூங்காக்கள், ஆறுகள், மலைகள், பசுமை, வழிகள், கடற்கரை முதலானவையாகும்.
5.
சுற்றியிருப்பவைகள் என்ற பொருள்படும் "Environ " எனும் பிரெஞ்ச் சொல்லிலிருந்து தோன்றியது சுற்றுச்சூழல்.
சுற்றுச்சூழல் என்பது, நம்மை சுற்றியுள்ள அனைத்து நிலைமைகள், சூழ்நிலைகள், உயிர்கள், அல்லது உயிர் தொகுப்பு ஆகியவைகளை குறிப்பிடுவது ஆகும்.
6.
வருங்காலத் தலைமுறையினர் தங்கள் தேவைகளை நிறைவேற்ற எந்த ஒரு தடையும் இல்லாத நிலையில் தற்பொழுது உள்ள மக்களின் தேவையை நிறைவேற்றுதலே நீடித்த நிலையான மேம்பாடு எனப்படும்.
7.
1. மக்களுக்கு குறைத்தல், மறுசுழற்சி, மறுபயன்பாடு பற்றிய உரிய அறிவைப் புகட்டுதல்.
2. இயற்கையாக அழியக்கூடிய பொருட்களைப் பயன்படுத்துதல்.
3. இரசாயன உரங்களை குறைவாகப் பயன்படுத்துதல்
4. பலவகை பயிர்களை பயிரிட்டு மண்வளம் காத்தல்
5. பயிர் சுழற்சி முறை மண்ணின் வளத்தை கூட்டும்
6. தேவையற்ற குப்பைகளை எரித்தோ அல்லது புதைத்தோ அப்புறப்படுத்துதல்.
7. மிகக்குறைவான நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துதல்.
8.
1. மண் மாசுபடுகிறது.
2. உடல் ஆரோக்கிய கேடு.
3. காற்று மாசுபாடு.
4. விலங்குகள் மீதான பாதிப்பு.
9.
1) திடக்கழிவு:
தாள்கள், நெகிழிப் பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள், உணவுப் பொருட்கள், நகராட்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள், பழுதடைந்த மின்னணுப் பொருட்கள் இதில் அடங்கும்.
2) பூச்சிக்கொல்லி மற்றும் இரசாயன உரங்கள்:
விவசாய உற்பத்தி பெருக்கத்திற்காக பயன்படுத்தப்படும் வேதியியல் பொருட்கள் ஏற்படுத்தும் மாசு.
3) காடுகளை அழித்தல்:
மரங்கள் வெட்டப்படுவதால் மண் அரிப்பு ஏற்படுகிறது. காடுகள் அழிக்கப்படுவதால் நிலம் மாசடைகிறது.
10.
பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான தொடர்பினை விளக்க ஆலன் நீஸ் மற்றும் R.V. அய்யர்ஸ் "பொருள்சார் சமநிலை அணுகுமுறை” வகுத்துள்ளனர்.
"உற்பத்தி முறைக்குள் உள்நுழையும் எந்தவொன்றும் பிறகு வெளியேறித்தான் ஆக வேண்டும். என்பதை வலியுறுத்துகிறது.
இயற்பியலின் பொருள் மற்றும் ஆற்றல் பாதுகாப்பிற்கான வெப்ப இயக்கவியல் முதல் விதி.
இவ்விதியை ஆதாரமாகக் கொண்டு சுற்றுச்சூழலுக்கும் பொருளாதாரத்திற்குமான தொடர்பினை விளக்குவதுதான் மேற்சொன்ன பொருள்சார் சமநிலை அணுகுமுறையாகும்.
M = G - (RC - RP) + (RrP + Rrc) = RdP + Rdc
| இயற்கை உலகிலிருந்து பெறப்படும் மூலப் பொருட்களும் சக்தியும் (M) | = | பொருளாதார நடவடிக்கைகள் உற்பத்தியில் பணிகளும் (G) - நுகர்ச்சிலும் உற்பத்தியிலும் ஏற்படும் கழிவுகள் (Rc + Rp) + மறுசுழற்சி செய்யப்பட்ட உற்பத்தியும் நுகர்ச்சிக் கழிவுகளும் (Rpr + Rcr) | = | இயற்கை உலகில் இறுதியாக விடப்படும் உற்பத்தியும் நுகர்ச்சிக் கழிவுகளும் = (Rpd + Rcd) |
11.
(b)
காற்று மாசு
12.
(c)
ஒலி மாசு
13.
(a)
தொழிற்சாலைகள்
14.
(b)
அமில மழை
15.
(c)
1981
16.
1. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மண் அரிப்பை கட்டுப்படுத்தல், மண்வளக்குறைவைத் தடுத்தல், உயிரியல் உற்பத்தியை உத்தமப்படுத்தல் மற்றும் சிறந்த உடல் நலனை ஊக்குவித்தல்.
2. மண்ணுக்குள் உயிரியல் நடவடிக்கைகளை மேம்படுத்தி மண்ணின் வளத்தன்மையை நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கச் செய்தல்.
3. அமைப்புக்குள் உயிரியல் மாற்றங்களை நிலைத்திருக்கச் செய்தல்.
4. நிறுவனத்தின் பொருட்களையும் வளத்தையும் அதிக அளவு மறுசுழற்சிக்கு உட்படுத்துதல்.
5. கால்நடைகளை நன்கு பராமரித்து அவற்றின் நிலத்தை மேன்மையடையச் செய்தல்.
6. எல்லா உற்பத்தி நிலைகளிலும் நேர்மையையும், முக்கிய பண்புகளையும் கடைப்பிடித்து இயற்கை பொருட்களைத் தயாரிக்க வேண்டும்.
17.
இயற்கை பண்ணை முறை என்பது கால்நடை சாணம், இயற்கைக் கழிவுகள் ஆகியவற்றை உரமாகவும் பயிரிட்டு பயிர் சுழற்சி முறையையும் பயன்படுத்தி செய்யப்படும் வேளாண்மையாகும்.
விவசாய சூழல் அமைப்பிலுள்ள நிலத்தின் தன்மை, பயிர்கள், கால்நடைகள் மற்றும் மக்களைக் கருத்தில் கொண்டு உத்தம அளவு உற்பத்தி செய்யும் உள்ளடக்கிய அமைப்பு முறையே "இயற்கை பண்ணைகளாகும்".
18.
1. மனித நடவடிக்கைகளில் பயனில்லாத தேவையற்ற பொருட்களைக் கழிப்பதே "திடக்கழிவுகள்"ஆகும்.
2. அவை திடப் பொருட்களாகவோ அல்லது பகுதி திடப் பொருட்களாகவோ அல்லது திரவமாகவோ இருக்கும்.
எ.கா: i) வீட்டுக்கழிவுகள்,
ii) மருத்துவமனைக்கழிவுகள்
iii) கட்டுமானத்துறை கழிவுகள்
iv) விவசாயக் கழிவுகள்
v) தொழிற்சாலைக்கழிவுகள்.
19.
| வீடு | மருத்துவமனை | அரசாங்கம் | உணவு கூடம் தொழிற்சாலை தனியார் துறை |
|
கணினி |
கணினி |
கணினி |
கணினி கொதிகலன்கள் அரைப்பான் சிக்னல் ஜெனரேட்டர்கள் இங்குபேட்டர்கள் |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - செய்யுள்-தேவாரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - செய்யுள்-பெருமாள் திருமொழி Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - செய்யுள்-தெய்வமணிமாலை * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil நாகரிகம், தொழில், வணிகம், ஆளுமை - உரைநடை உலகம் -திரைமொழி Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards