12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 14/11/2019
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
1927ல் நிகர பண்டமாற்று வீதத்தை வடிவமைத்தவர்.
ஜீ.எஸ். டோரன்ஸ்
எப்.டபில்யூ. டாசிக்
மார்ஷல்
ஜே.எஸ். மில்
2.
பன்முக முதலீட்டு ஒப்புறுதி முகமை (MIGA)-ல் இந்தியா எந்த ஆண்டு உறுப்பினரானது?
ஜனவரி 1994
ஜனவரி 1995
ஜனவரி 1958
ஜனவரி 1959
3.
இந்திய தொழிற்கடன் மற்றும் முதலீட்டுக் கழகம் (ICICI வங்கி) எப்பொழுது தொடங்கப்பட்டது.
ஜனவரி 5, 1955
ஜனவரி 5, 1973
பிப்ரவரி 5, 1976
1951
4.
பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு முறை
3
5
2
4
5.
வணிக வங்கிகள் தாராளமாக கடனை அளிக்கும் பொழுது ஏற்படும் விலைவாசி உயர்வினை ________ எனப்படும்.
காகித பணவீக்கம்
தூண்டல் பணவீக்கம்
கடன் பணவீக்கம்
வரி பணவீக்கம்
6.
2018-19ல் மத்திய அரசின் மானியத்திற்கான செலவு _____ கோடியாகும்.
9581
21500
2,29,715.67
5,75,994
7.
முடுக்கி கோட்பாட்டு கருத்தை செம்மைப்படுத்தி, மேம்படுத்தி வெளியிட்டவர்
J.M. கிளார்க்
ஹாட்ரி
J.R. ஹிக்ஸ்
J.M. கீன்ஸ்
8.
மொத்த நாட்டு உற்பத்தி என்பது .............
GDP
GNP
GNI
ஏதுமில்லை
9.
\(Y={ \beta }_{ 0 }+{ \beta }_{ 1 }\) x என்ற ஒட்டுறவுச் சமன்பாட்டில் x என்பது ______
சாரா மாறி
சார்பு மாறி
தொடர்ச்சி மாறி
மேற்சொன்ன எதுவுமல்ல
10.
பொருளாதார வளர்ச்சி ______ ஐ அளவிடுகிறது.
உற்பத்தித் திறன் வளர்ச்சி
பெயரளவு வருமான அதிகரிப்பு
உற்பத்தி அதிகரிப்பு
இவை எதுவுமில்லை
11.
சுற்றுச்சூழல் பண்டங்கள் என்பவை_____________?
சந்தைப் பொருட்கள்
அங்காடியிடா பண்டங்கள்
இரண்டும்
மேற்சொன்ன எதுவுமல்ல
12.
கீழே உள்ள வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு, சரியான ஒன்றை அடையாளம் காண்க
(i) மாநில பட்டியலிலோ, இணைப்பு பட்டியலிலோ குறிப்பிடப்படாத வரியை விதிப்பதற்கு மைய அரசுக்கு தனி உரிமையில்லை
(ii) அரசியலமைப்பு சில வரிகளை மைய அரசுப் பட்டியலில் இருந்து மாநில அரசுப் பட்டியலுக்கு மாற்ற வசதி செய்கிறது.
i மட்டும்
ii மட்டும்
இரண்டும்
ஏதுமில்லை
13.
14.
சாதகமான வாணிகச் சூழலில் ஏற்றுமதி இறக்குமதியைவிட ______ ஆக இருக்கும்.
அதிகமாக
குறைவாக
கிட்டத்தட்ட சமமாக
சமமாக
15.
வங்கியல்லா நிதிநிறுவனங்கள் ________ வைத்திருப்பதில்லை.
வங்கி உரிமம்
அரசு ஏற்பு
பணச்சந்தை ஏற்பு
நிதி அமைச்சக அனுமதி
16.
M1, M2 ஆகிய இரண்டிற்கும் உள்ள வேறுபாடு
அஞ்சலக அனைத்து வைப்புகள்
அஞ்சலக சேமிப்பு வங்கியின் சேமிப்பு வைப்புகள்
வங்கியின் கால வைப்புகள்
காகிதப்பணம்
17.
_________ சமநிலையை கீன்சுடைய கோட்பாடு வலியுறுத்தியது.
மிகக்குறுகிய காலச்
குறுகிய காலச்
மிக நீண்ட காலச்
நீண்ட காலச்
18.
_______துறையில் செலவு முறையில் நாட்டு வருமானம் மதிப்பிடப்படுகிறது.
கட்டடத்துறை
விவசாயத்துறை
பணித்துறை
வங்கித் துறை
19.
பேரியல் பொருளாதாரம் ஆய்வது
தனி நபர்கள்
நிறுவனங்களை
நாடு
ஒட்டுமொத்தங்களை
20.
பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை
சொத்தும் நலமும்
உற்பத்தியும் நுகர்வும்
தேவையும் அளிப்பும்
நுண்ணியலும் பேரியலும்
21.
மாவட்ட வாரிய வருவாய் ஆதாரங்கள் யாவை?
22.
பன்னாட்டுப் பொருளியல் என்றால் என்ன?
23.
புள்ளியியலின் வகைகள் யாவை?
24.
மொத்த நாட்டு உற்பத்தி என்றால் என்ன?
25.
தலா (per capita) கரிமில வாயு அதிகமாக வெளியேறும் நாடுகள் யாவை?
26.
"வரி", "கட்டணம்" வேறுபடுத்து.
27.
வணிக வங்கிகள் என்பதை வரையறு.
28.
பண்டப்பணம் என்றால் என்ன?
29.
நாட்டு வருமானம் இலக்கணம் கூறுக.
30.
"பொருளாதாரம்" என்பதன் பொருள் யாது?
31.
இயற்கைப் பண்ணையின் பொதுவான கொள்கைகள் யாவை?
32.
மாநில அளவிலான நிதி நிறுவனங்களை பற்றி எழுதுக?
33.
வருவாயின் வட்ட ஓட்டத்தின் விளக்குக.
34.
பன்னாட்டு பண நிதியத்தின் பணிகளை விவரி.
35.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் யாவை?
36.
மைய அரசின் வருவாய் மூலங்களை விவரி.
37.
உடன்தொடர்பிற்கும், ஒட்டுறவிற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விளக்குக
38.
39.
மறைமுக வரிகளின் நன்மைகள் யாவை?
40.
அயல்நாட்டுச் செலுத்துநிலை சமமின்மையின் வகைகளை விவரி.
41.
42.
முடுக்கி இயங்கும் விதத்தினை விவரி.
43.
வேலையின்மைகளின் வகைகளை விவரி.
44.
பொருளாதார ஆய்வில், சமூகக் கணக்கிடுதலின் அவசியத்தை விவாதி.
45.
நில மாசுவின் வகைகளைக் கூறுக.
46.
செலவு முறை கணக்கீட்டின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?
47.
ICICI வங்கியின் பணிகளைக் கூறுக?
48.
உலக வர்த்தக அமைப்பின் சாதனைகள் யாவை?
49.
கலப்பு பொருளாதாரத்தின் சிறப்பு பண்புகள் யாவை?
50.
பெருக்கியின் பயன்கள் யாவை?
51.
பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் பொருளாதாரம் சாராத காரணிகளாக தாமஸ் பிக்கெட்டி கூறுவனவற்றை விளக்குக
(அல்லது)
குறிப்பு வரைக:
1) சூதாட்ட முதலாளித்துவம்
2) பரம்பரை சொத்துரிமை முதலாளித்துவம்
52.
இறக்குமதி கட்டுப்பாடு என்றால் என்ன?
53.
பணவீக்கத்தின் வகைகள் பற்றி எழுதுக.
54.
தொன்மை வேலைவாய்ப்பு கோட்பாட்டின் படி கூலிக் குறைப்பு எவ்வாறு வேலையின்மை பிரச்சனைக்குத் தீர்வாக அமைந்தது என்பதை வரைபடம் மூலம் விளக்குக
1.
(b)
எப்.டபில்யூ. டாசிக்
2.
(a)
ஜனவரி 1994
3.
(a)
ஜனவரி 5, 1955
4.
(a)
3
5.
(c)
கடன் பணவீக்கம்
6.
(c)
2,29,715.67
7.
(a)
J.M. கிளார்க்
8.
(b)
GNP
9.
(a)
சாரா மாறி
10.
(c)
உற்பத்தி அதிகரிப்பு
11.
(b)
அங்காடியிடா பண்டங்கள்
12.
(b)
ii மட்டும்
13.
(c)
14.
(a)
அதிகமாக
15.
(a)
வங்கி உரிமம்
16.
(b)
அஞ்சலக சேமிப்பு வங்கியின் சேமிப்பு வைப்புகள்
17.
(b)
குறுகிய காலச்
18.
(a)
கட்டடத்துறை
19.
(d)
ஒட்டுமொத்தங்களை
20.
(d)
நுண்ணியலும் பேரியலும்
21.
1. மாநில அரசிடம் இருந்து பெறும் மானிய உதவி
2. நிலத் தீர்வைகள்
3. சுங்க கட்டணம்
4. சொத்திலிருந்து பெறும் வருமானம்
5. மாநில அரசிடம் பெறும் கடன்
6. வளர்ச்சி பணிக்கு மத்திய அரசு தரும் மானியம்
7. பொருட்காட்சி மற்றும் கண்காட்சி மூலம் வரும் வரி
8. மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் சொத்து வரி மற்றும் பிற வரிகள்
22.
பன்னாட்டுப் பொருளியல் என்பது பண்டங்கள் மற்றும் பணிகள் நாடுகளுக்கிடையே பரிமாற்றம் செய்வது பற்றிய பொருளியலின் ஒரு பாடப்பிரிவாகும்.
23.
1. விவரிப்பு புள்ளியியல்
2. உய்த்துணர்வு புள்ளியியல்
24.
ஒரு நாட்டின் புவி எல்லைக்குள் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள், பணிகளின் அங்காடி மதிப்புடன் அந்த நாட்டு மக்கள் வெளிநாடுகளில் ஈட்டிய வருமானத்திற்கும், வெளிநாட்டினர் சம்பாதித்து அவர்கள் நாட்டுக்கு அனுப்பிய வருமானத்திற்கும் இடையிலான வேறுபாடுத் தொகையை கூட்டினால் கிடைக்கும் மொத்த மதிப்பே மொத்த நாட்டு உற்பத்தி (GDP) எனலாம்.
25.
1. சவுதி அரேபியா
2. ஆஸ்திரேலியா
3. அமெரிக்கா
4. கனடா
5. தென் கொரியா
26.
| வரி | கட்டணம் |
|---|---|
| எந்த ஒரு நன்மையும் எதிர்பாராமல் அரசிற்கு கட்டாயம் செலுத்த வேண்டிய தொகை | அரசிற்கான மற்றொரு வருவாய் ஆதாரம் |
| அதிகார அமைப்பால் விதிக்கப்பட்ட கட்டாய பங்களிப்பு | பொது நிர்வாகத்தில் செய்யப்படும் சேவைக்காக விதிக்கப்படுகிறது. |
| எ.கா. வருமான வரி, விற்பனை வரி | எ.கா. பாஸ்போர்ட் கட்டணம், ஓட்டுநர் உரிம கட்டணம். |
27.
1. வணிக வங்கிகள் மக்களிடமிருந்து வைப்புகளைப் பெற்று, பேரளவில் உற்பத்தி செய்வோர், பெரிய நிறுவனங்களுக்கும், நடுத்தர நிறுவனங்களுக்கும் கடனை அளிக்கும் ஒரு நிதி அமைப்பு ஆகும்.
2. நீர்மைத் தன்மையைத் தக்கவைக்கும் பொருட்டு வணிக வங்கிகள் பெரும்பாலும் நீண்டகாலக் கடன்களை அளிப்பதில்லை.
28.
1. பண்டப்பணம் என்பது அதன் தயாரிக்கப்பட்ட பண்டத்திலிருந்து பெறப்படுகிறது.
2. பண்டத்தின் உபயோகத்தை பொருத்து அதன் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது.
29.
"ஒரு நாட்டில் உள்ள உழைப்பும் முதலும் சேர்ந்து அங்குள்ள இயற்கை வளங்களைப் பயன்படுத்தி பண்டங்கள், பணிகளை உற்பத்தி செய்கின்றன. இதுவே அந்நாட்டின் நிகர ஆண்டு வருமானம், நாட்டு வருமானம் அல்லது நாட்டு ஈவுத் தொகை ஆகும்." என்று ஆல்ஃபிரட் மார்ஷல் கூறுகிறார்.
30.
பொருளாதாரம் என்கிற கருத்தினை ஏ.ஜே. பிரவுண் என்பவர் "மக்கள் தங்கள் பிழைப்பை அமைத்துக் கொள்ளும் முறையை குறிப்பது என்று வரையறுத்துள்ளார்
(அல்லது)
"நுகர்வோரின் விருப்பங்களை நிறைவு செய்வதற்கான பொருள்களையும், பணிகளையும் தயாரிக்கும் உற்பத்தியாளர், பணியாளர்களுக்கிடையே உள்ள கூட்டுறவே. பொருளாதார அமைப்பு" என ஜே.ஆர். ஹிக்ஸ் (J.R. Hicks) கூறுகிறார்.
31.
1. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மண் அரிப்பை கட்டுப்படுத்தல், மண்வளக்குறைவைத் தடுத்தல், உயிரியல் உற்பத்தியை உத்தமப்படுத்தல் மற்றும் சிறந்த உடல் நலனை ஊக்குவித்தல்.
2. மண்ணுக்குள் உயிரியல் நடவடிக்கைகளை மேம்படுத்தி மண்ணின் வளத்தன்மையை நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கச் செய்தல்.
3. அமைப்புக்குள் உயிரியல் மாற்றங்களை நிலைத்திருக்கச் செய்தல்.
4. நிறுவனத்தின் பொருட்களையும் வளத்தையும் அதிக அளவு மறுசுழற்சிக்கு உட்படுத்துதல்.
5. கால்நடைகளை நன்கு பராமரித்து அவற்றின் நிலத்தை மேன்மையடையச் செய்தல்.
6. எல்லா உற்பத்தி நிலைகளிலும் நேர்மையையும், முக்கிய பண்புகளையும் கடைப்பிடித்து இயற்கை பொருட்களைத் தயாரிக்க வேண்டும்.
32.
A. மாநில நிதிக்கழகம்:
1. 1951-ம் ஆண்டு இந்திய அரசால் இயற்றப்பட்டது. மாநில தொழில் நிதிக்கழகம் அந்தந்த மாநிலங்களில் சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டினை ஏற்படுத்துவது இக்கழகங்களின் நோக்கமாகும்.
2. மாநில தொழில் நிதிக்கழகங்கள் மறு நிதியாக இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியிடமிருந்து கடன் பெறுகிறது.
B. மாநில தொழில் மேம்பாட்டு கழகங்கள்:
1. மாநில மேம்பாட்டு கழகம் மாநில அரசுகளினால் அமைக்கப்படுவதால் அந்தந்த மாநில அரசுகளுக்கே உரிமையானதாகும். இக்கழகம் தொழில் நிறுவனங்களுக்கான கடன்களை அளிப்பதோடு மாநிலத்தில் தொழில் மயமாதலை தூண்டுவதாகும்,
தனியார் பங்கேற்பை அனுமதிக்கும் கூட்டுத் திட்டங்களையும் இக்கழகம் ஊக்குவிக்கப்படுகிறது.
பல்வகை அடிப்படை வசதிகளை கொண்ட தொழிற்பேட்டைகளை அமைப்பது, மாநில அரசுகளின் மானியங்களை நிர்வகிப்பதும் இக்கழகத்தின் பணிகளாகும்.
33.
ஒரு பொருளாதார அமைப்பின் வருவாயின் வட்ட ஓட்டம் மாதிரியானது அந்த பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கிடையே உள்ள தொடர்பினை விளக்குவதாகும். இது பொருளாதார முகவர்களாகிய நிறுவனம், குடியிருப்பு, அரசாங்கம் மற்றும் நாடுகளுக்கிடையே வருவாய், பொருட்கள் மற்றும் பணிகள் மற்றும் உற்பத்தி காரணிகளின் ஓட்டத்தை காண்பிப்பதாகும். வருவாயின் வட்ட ஓட்டம் ஆய்வானது தேசிய கணக்குகள் மற்றும் பேரியல் பொருளாதாரத்தின் அடிப்படையாகும்.
I. இரு துறை பொருளாதாரத்தின் வருவாயின் வட்ட ஓட்டம்:
1. இல்லத்துறை: அதற்கு சொந்தமான உற்பத்தி காரணிகளை உற்பத்திக்கு அளிப்பதன் மூலம் வருவாயைப் பெறுகின்றது
2. நிறுவனத்துறை: நிறுவனத் துறையானது பொருள் மற்றும் பணிகளை இல்லத்துறைக்கு விற்பனை செய்வதன் மூலம் வருவாயைப் பெறுகின்றது
இருதுறை பொருளாதாரத்தில் உற்பத்தி மற்றும் விற்பனை சமமாகவும், வருவாய் மற்றும் பொருட்கள் வட்ட ஓட்டமாகவும் காணப்படும். ஆகவே
y = C + I
y என்பது வருவாய், C என்பது நுகர்வு, I என்பது முதலீடு
II. மூன்று துறை பொருளாதாரத்தின் வருவாயின் வட்ட ஓட்டம்:
(i) இல்லம் மற்றும் நிறுவனத் துறைக்கு மேலாக அரசுத்துறை சேரும் போது மூன்று துறை மாதிரி அமைகிறது. அரசானது இல்லத்துறை மற்றும் நிறுவனங்களில் வரி விதிக்கின்றனர். நிறுவனங்களிலிருந்து பொருள் மற்றும் பணிகளை வாங்குகின்றன.
(ii) மூன்று துறை மாதிரியின் தேசிய வருமானம் என்பது நுகர்வு செலவு முதலீட்டு செலவு மற்றும் அரசின் செலவு ஆகியவற்றைக் கூட்டுவதால் அடையலாம்
y = C + I + G
III. நான்கு துறை பொருளாதாரத்தின் வருவாயின் வட்ட ஓட்டம்:
நான்கு துறை பொருளாதாரத்தில் இல்லம், நிறுவனம், அரசு இவற்றோடு வெளியுறவுத் துறையும் இணைக்கப்படுகிறது. நிஜ வாழ்க்கையில் நான்கு துறை பொருளாதாரம் காணப்படுகிறது
வெளியுறவுத் துறையில் அதிகமாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சேர்ந்ததாகும்
y = C + I + G + (X - M)
34.
1. நாணய மாற்று வீதத்தில் நிலைத்தன்மையை கொண்டு வருதல்
(i) ஐ.எம்.எஃப்-ன் முதல் மற்றும் முக்கிய பணி நாணய மாற்று வீதத்தை நிலைப்படுத்துதல்.
(ii) நாணய மதிப்பு குறைப்பை வலியுறுத்துதல்
(iii) உறுப்பு நாடுகள் பன்முக மாற்று வீதங்களுக்கு செல்வதைத் தடுத்தல்.
2. அயல் நாட்டு செலுத்து சமமின்மையை சரிசெய்தல்
உறுப்பு நாடுகளுக்கு அந்நிய செலாவணியை விற்பனை செய்தல் மற்றும் அவற்றை கடனாக வழங்கி, அயல்நாட்டு செலுத்து சமமின்மையை சரிசெய்தல்.
3. இணை மதிப்பை உறுதி செய்தல்
உறுப்பு நாடுகள் அதன் நாணய மதிப்பினை தங்கள் அல்லது அமெரிக்க டாலர்கள் என்ற அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும்.
4. நாடுகளின் பணத்தேவையை அளிப்புக்கு சமமாகும் வகையில் பராமரித்தல் :
(i) உயர்வான தேவையுள்ள எந்த நாட்டுப் பணத்தையும் பற்றாக்குறையுள்ள பணம் என நிதியம் அறிவிக்கலாம்.
(ii) அந்த நாட்டிலிருந்து அவர்களின் பணத்தை கடன் வாங்கியோ தங்கத்தைக் கொடுத்து கொள்முதல் செய்தோ அளிப்பை நிதியம் உயர்த்தும்.
5. வாணிபத் தடைகளைக் குறைத்தல் :
இந்நிதியம் உறுப்பு நாடுகளால் விதிக்கப்படுகின்ற சுங்கவரி மற்றும் பிற வாணிபத் தடைகளைத் குறைப்பதன் மூலம் வாணிபத் தடைகளை குறைத்தல்.
6. கடன் வசதிகளை வழங்குதல் :
அடிப்படை கடன் வசதி, விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதி, ஈடுசெய் நிதி வசதி, கட்டமைப்பு சரிசெய்தல் ஆகிய கடன் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.
35.
கீன்ஸ் மற்றும் மில்டன் ப்ரீட்மேன் கருத்துப்படி, பணவீக்கத்தினை கட்டுப்படுத்தும் வழிகளை மூன்றாக பிரிக்கலாம்.
அவை:
1. பணவியல் முறைகள்
2. நிதியியல் முறைகள் (JM கீன்ஸ்) மற்றும்
3. இதர முறைகள்
I. பணவியல் முறைகள்
பணவியல் முறைகள் நாட்டின் மைய வங்கியினால் அமல்படுத்தப்படும் முறைகள்.
அவைகள்:
1) வங்கி விகிதத்தை உயர்த்துதல்
2) வெளிச்சந்தையில் அரசு பத்திரங்களை விற்றல்
3) ரொக்க இருப்பு விகிதத்தை உயர்த்துதல் மற்றும் சட்டப்பூர்வ நீர்மை விகிதத்தை உயர்த்துதல்.
4) நுகர்வோர் கடனை கட்டுப்படுத்துதல்
5) கடன் விளிம்பு நிலையினை உயர்த்துதல்
6) மீள் வாங்கல் விகிதம் மற்றும் திருப்ப மீள் வாங்கல் விகிதம் ஆகியவற்றினை உயர்த்துதல் ஆகும்.
II. நிதியியல் நடவடிக்கைகள்:
பணவீக்கத்தின் போது அரசு செலவினங்களைக் குறைப்பது, பொதுமக்களிடமிருந்து கடன்களை பெறுவது மற்றும் வரி விதிப்புகளை விரிவாக்குவது போன்ற நிதியியல் நடவடிக்கைகள், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன.
III. இதர நடவடிக்கைகள்:
இதர நடவடிக்கைகள்:
இதர நடவடிக்கைகள் குறுகிய கால நடவடிக்கைகள் மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன.
a) குறுகிய கால நடவடிக்கைகள்:
குறுகிய கால நடவடிக்கையாக பொது விநியோக முறையின் கீழ் நியாயவிலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பங்கீடு செய்து விலை உயரா வண்ணம் தடுக்கப்படுகிறது.
b) நீண்ட கால நடவடிக்கைகள்:
நீண்ட கால நடவடிக்கையாக பொருளாதார வளர்ச்சியை அடையும் நோக்கில் சேமிப்பு முதலீடுகளை மேம்படுத்துதல். மேலும் பொது விலை மட்டத்துடனும், வாழ்க்கைச் செலவுடனும் நேரடி தொடர்பு கொண்டுள்ள கூலிப் பொருட்களின் உற்பத்தியை அதிகப்படுத்துதல் பணவீக்கத்தை தடுக்கும் வழிமுறைகளாகும்.
36.
1. தொழில் நிறுவனம் மீதான வரி.
2. பணம், நாணயம் மற்றும் அந்நியச் செலாவணி
3. சுங்கவரி ஏற்றுமதி வரி உட்பட
4. கலால் வரி மற்றும் புகையிலை மீதான வரி
5. வேளாண் நிலம் தவிர்த்த பண்ணை வரி
6. நீதிமன்ற விதிக்காக மத்திய பட்டியலில் உள்ள இதர கட்டணங்கள்
7. அயல்நாட்டு கடன்கள்
8. இந்திய அரசால் அல்லது மாநிலங்களால் அமைக்கப்பட்ட லாட்டரி சீட்டுகள்
9. தபால் துறையின் சேமிப்பு வங்கி
10. தொலைத்தொடர்பு துறையின் வருவாய்கள்
11. மத்திய அரசிற்கு சொந்தமான சொத்துக்கள்
12. மத்திய அரசின் பொது கடன்
13. இரயில்வே
14. இந்திய ரிசர்வ் வங்கி
15. வருமானவரி (வேளாண் வரி தவிர்த்தல்)
16. செய்தித்தாள் மீதான வரி
17. சொத்துக்களின் மூலதன மதிப்பில் விதிக்கப்படும் வரி
18. மாற்று சீட்டு, காசோலை மீதான வில்லை கட்டணம்
37.
| வ. எண். | உடன்தொடர்பு | ஒட்டுறவு |
| 1 | இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாறிகளின் மதிப்பு ஒரே திசையில் மாற்றமடைகின்றதோ அல்லது எதிர்த் திசையில் மாற்றமடைகின்றதோ என்பதை ஆராயும் | ஒரு மாறியின் மதிப்பில் மற்றும் மற்ற மாறியின் மதிப்பில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதே ஒட்டுறவு பயன்படுத்தப்படுகின்றது |
| 2 | X, Y என்ற இரு மாறிகளும் தனித்த மாறிகள் | ஒரு மாறி தனித்த மாறியாகவும், மற்றொன்று சார்பு மாறியாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது |
| 3 | இரு மாறிகளுக்குமிடையே உள்ள தொடர்பை மட்டும் ஆராய்கின்றது. காரண விளைவுகளை ஆய்வு செய்வதில்லை | இரு மாறிகளுக்கிடையே காரண விளைவை ஆராய்ந்து அவைகளுக்கு இடையே சார்புத் தொடர்பை ஏற்படுத்துகின்றது |
| 4 | தொடர்பில்லா இரு மாறிகளுக்கு இடையில் போலி உடன்தொடர்பு ஏற்படும் | ஒட்டுறவு ஆய்வில் போலி ஒட்டுறவு இல்லை |
| 5 | இது அதிகம் மேற்கணக்கீட்டிற்கு பயன்படுவதில்லை | இது அதிகம் மேற்கணக்கீட்டிற்கு பயன்படுத்தப்படுகின்றத |
38.
39.
மறைமுக வரிகளின் நன்மைகள்:
பரந்து காணப்படுதல் :
எல்லா நுகர்வோர்களும் அவர்கள் ஏழை அல்லது பணக்காரர்களாக இருந்தாலும் மறைமுக வரிகளைச் செலுத்த வேண்டும்.
இதனால்தான் நேர்முக வரிகளை விட மறைமுக வரிகள் அதிகமானவர்களை உள்ளடக்கியுள்ளது.
சமத்துவம்:
பணக்காரர்களால் பயன்படுத்தப்படக்கூடிய ஆடம்பரப் பண்டங்கள் மீது அதிக வரி சுமத்தப்படுவதால் மறைமுக வரி சமத்துவ விதியின் அடிப்படையில் அமைகிறது.
சிக்கனத் தன்மை:
உற்பத்தியாளர்களும், சில்லறை விற்பனையாளர்களும் வரியை வசூலித்து அரசுக்கு செலுத்துவதால் வசூலிப்பதற்கான செலவு குறைவாகிறது.
உடலுக்கு தீங்கான பண்டங்களின் நுகர்வைக் குறைக்கிறது:
அரசானது உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பண்டங்கள் மீது மறைமுக வரியை விதிக்கிறது.
எ.கா. புகையிலை, மது போன்றவை மீதான் வரி ஆகும்.
வசதியானது:
மறைமுக வரியானது பண்டங்கள், பணிகள் மீது விதிக்கப்படுகிறது.
நுகர்வோர் இதனை வாங்கும்போது விலையுடன் சேர்த்து செலுத்திவிடுவதால், வரி செலுத்துவதை உணர்வதில்லை.
40.
அயல் நாட்டுச் செலுத்துநிலை சமனற்ற நிலையின் மூன்று வகைகள்.
1. சுழற்சிச் சமனற்ற நிலை
2. நீண்ட காலச் சமனற்ற நிலை
3. கட்டமைப்புச் சமனற்ற நிலை
சுழற்சிச் சமனற்ற நிலை:
1. வாணிகச் சுழற்சியின் விளைவாக எழும் அயல் நாட்டு செலுத்து சமனற்ற நிலையைச் சுழற்சி சமனற்ற நிலை என்கிறோம்.
2. கீழ்க்காணும் இரண்டு காரணங்களால் இது நிகழ்கிறது. முதலாவது, நாடுகள் வாணிகச் சுழற்சியின் வெவ்வேறு கட்டங்களிலிருப்பது.
3. இரண்டாவது, நாடுகளுக்கிடையே தேவை நெகிழ்வு அளவு மாறுபடுவது.
நீண்டகாலச் சமனற்ற நிலை:
1. நாடுகள் பொருளாதார வளர்ச்சிப் படி நிலைகளில் முன்னேறும்பொழுது நீண்டகாலத் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்வதால் உண்டாகும்.
2. வளர்ச்சியின் துவக்க நிலையில் ஒரு நாட்டின் உள்நாட்டு முதலீடு உள்நாட்டு சேமிப்பைவிடக் கூடுதலாக இருக்கும்.
3. இறக்குமதி ஏற்றுமதியைவிட அதிகமாக இருக்கும்.
4. இந்தியாவில் 1951 ஆம் ஆண்டிலிருந்தே இந்தச் சூழ்நிலை நிலவுகிறது.
கட்டமைப்புச் சமனற்ற நிலை:
1. நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றங்களினால் நிகழும் அயல்நாட்டு செலுத்துச் சமனற்ற நிலையே கட்டமைப்பு சமனற்ற நிலையாகும்.
2. மாற்று வழங்கல் ஆதாரங்களை கண்டுபிடித்தல், செயற்கையான பதிலீட்டுப் பண்டங்களை கண்டுபிடித்தல், போக்குவரத்து வழிகளும் செலவும் மாற்றமடைதல் ஆகியவற்றை பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றம் என்கிறோம்.
41.
42.
முடுக்கிக் கோட்பாடு செயல்படும் விதம் : ஒரு எளிமையான எடுத்துக்காட்டின் மூலம் முடுக்கியின் செயல்பாட்டை அறியலாம்.
1. 1000 நுகர்வு பண்டங்களைத் தயாரிப்பதற்கு 100 இயந்திரங்கள் தேவைப்படுவதாக எடுத்துக்கொள்வோம். 10 ஆண்டுகள் அந்த இயந்திரங்களின் வாழ்நாள் எனக் கொள்வோம். அதாவது ஒவ்வொரு ஆண்டும் 10 இயந்திரங்களை மாற்றியமைக்கப்படுகிறது. காரணம் நிலையான 1000 நுகர்வுப் பண்டங்களைத் தயாரிப்பதற்காக இதனை மாற்றியமைக்கும் தேவை ஏற்படுகிறது.
2. 10 விழுக்காடு அளவிற்கு (அதாவது 1000 லிருந்து 1100 ஆக) நுகர்வுப் பொருட்களின் தேவை அதிகரிக்கிறது என வைத்துக் கொள்வோம். இதன் விளைவாக மேலும் 10 இயந்திரங்களின் தேவை அதிகரிக்கும். எனவே மொத்த இயந்திர தேவை 20 ஆகும். (10 மாற்றியமைப்பதற்காக மற்றும் 10 அதிகரித்த தேவையை சந்திப்பதற்காக) இங்கே 10 விழுக்காடு நுகர்வுப் பண்டங்கள் தேவையானது 100 விழுக்காடு இயந்திரத் தேவையை அதிகரிக்கின்றது என்பது குறிக்கின்றது. (10 லிருந்து 20 வரை).
3. ஆதலால் இறுதியாக நுகர்வுப் பண்டங்களின் தேவையில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றம் அதிகப்படியான முதலீட்டு மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.
வரைபட விளக்கம்:
1. SS என்பது சேமிப்பு கோடு. II என்பது முதலீட்டு கோடு. E1 என்ற புள்ளியில் பொருளாதாரம் Oy1 வருமானத்துடன் சமநிலையில் இருக்கிறது.
2. சேமிப்பும் முதலீடும் OI2 ல் சமநிலையாக உள்ளது.
3. முதலீடு OI2 லிருந்து OI4 ஆக அதிகரிக்கும் போது வருமானம் Oy1 லிருந்து Oy3 ஆக அதிகரிக்கிறது.
4. அதிகரிக்கிற வருமானம் Y1Y2 ஆனது பெருக்கியின் விளைவாலும் மற்றும் அதிகரிக்கிற வருமானம் y2y3 ஆனது முடுக்கியின் விளைவாலும் ஏற்படுகின்றது.
43.
வேலையின்மை என்பது நல்ல உடல் நலம் உள்ள தனிமனிதர்கள், நிலவுகின்ற கூலி விகிதத்தில் வேலை செய்யத்தயாராக இருப்பவர்கள் அனைவருக்கும். தகுந்த வேலையில்லாத சூழ்நிலை வேலையின்மை ஆகும்.
வணிகச் சுழல் வேலையின்மை:
கீழ்நோக்கிய பகுதியில் ஒரு பொருளாதாரம் இருக்கும் போது நிகழ்கின்ற வேலையின்மைக்கு சுழல் வேலையின்மை என்று பெயர்.
பருவகால வேலையின்மை:
ஓர் ஆண்டில் சில காலங்களில் மட்டும் நிலவும், வேலையின்மைக்கு பருவகால வேலையின்மை என்று பெயர். வேளாண்மை, வேளாண்மை சார்ந்த தொழில்கள் கரும்பு, பருத்தி முதலானவை குறிப்பிட்ட பருவத்தில் மட்டும் நடைபெறும்.
தற்காலிக அல்லது உடன்பாடில்லா (பிறழ்ச்சி) வேலையின்மை :
உழைப்பாளர்களின் தேவை மற்றும் அளிப்பில் சமநிலையற்ற தன்மை நிலவுவதால் தற்காலிக அல்லது பிறழ்ச்சி வேலையின்மை ஏற்படுகிறது.
கற்றோர் வேலையின்மை :
சில நேரங்களில் படித்துக் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு வேலை கிடைப்பது இல்லை. அல்லது பகுதி நேர வேலை செய்கின்றனர். இத்தகைய வேலையின்மைக்கு கற்றோர் வேலையின்மை என்று பெயர்.
தொழில் நுட்ப வேலையின்மை :
புதிய தொழில்நுட்பம், மூலதன செறிவு உடையதாக இருப்பதால், குறைந்த எண்ணிக்கையில் உழைப்பாளர்கள் தேவைப்படுகின்றனர்.
அமைப்புசார் வேலையின்மை :
1. சமூக அமைப்பில் ஏற்படும் பெரிய மாற்றங்களால் அமைப்புசார் வேலையின்மை உருவாகிறது.
2. ஒரு பொருளுக்கான தேவை குறைதல் (eg. Type Machine, Tape recorder, Radio, Camera etc) அல்லது பிற பொருள்களின் தேவை அதிகரித்தல், இடு பொருட்கள் இன்மை, முதலீடு பற்றாக்குறை ஆகியவையும் இவ்வகை வேலையின்மைக்குக் காரணமாகிறது.
மறைமுக வேலையின்மை :
தேவைக்கு அதிகமானவர்கள் ஒரு வேலையில் இருந்தால் அது மறைமுக வேலையின்மையாகும்.
44.
சமூக கணக்கிடுதல் மற்றும் துறைகள் :
இம்முறையில் ஒரு நாட்டின் பொருளாதாரம் பல்வேறு துறைகளாகப் பிரிக்கப்படுகிறது. தனிமனிதர்கள்உள்ளடக்கிய ஒரு குழு அல்லது பல நிறுவனங்கள் சேர்ந்த ஒரு குழு முதலானவற்றுக்கு இடையே நடைபெறும் பொருளாதாரப் பரிமாற்றங்களை ஒரு துறை என்கிறோம். ஒரு நாட்டின் பொருளாதாரம் கீழ்க்காணும் துறைகளாகப் பிரிக்கப்படுகிறது. நிறுவனங்கள், குடும்பங்கள், அரசு, வெளிநாட்டு வணிகம், மூலதனத் துறை.
நிறுவனங்கள் :
நிறுவனங்கள் உற்பத்திக் காரணிகளைப் பணியில் அமர்த்தி பண்டங்கள், பணிகளை செய்கின்றன. உற்பத்தி
குடும்பங்கள் :
குடும்பங்கள் தங்கள் உழைப்பினை அளித்து கூலியைப் பெற்று, அதன் மூலம் பண்டங்கள், பணிகளை வாங்குகின்றன. அதாவது ஊதியத்தினைப் பெற்று பண்டங்களை வாங்குகின்றது. நிறுவனங்கள் குடும்பங்களின் பணியைப் பெற்று கூலியைத் தருகின்றன.
அரசு :
அரசுத் துறையில் பல நிலைகள் உள்ளன. கிராமம், வட்டம், மாவட்டம், மாநிலம், மத்திய அரசு என பல நிலைகள் உள்ளன. எடி மற்றும் பீகாக் கூற்றுப்படி, அரசு என்பது "ஒன்று சேர்க்கப்பட்ட மனிதர்கள்" எனக் குறிப்பிடுகின்றனர். வரி, தண்டனை, கட்டணம் மற்றும் கடன் ஆகியவை மூலமாக அரசு நிதியைத் திரட்டி பண்டங்களையும் பணிகளையும் வாங்குகிறது.
வெளிநாட்டு வணிகம் :
ஏற்றுமதி, இறக்குமதிகள் மூலம் கிடைக்கும் வருமானம், வெளிநாட்டுக் கடன்கள், வெளிநாட்டு மூலதன வருமானம், செலுத்துதல்கள் ஆகியவை வெளிநாட்டுத் துறையாகக் கருதப்படுகின்றன.
மூலதனத்துறை :
மூலதனத்துறை சேமிப்பையும் முதலீட்டையும் உள்ளடக்கியது. காப்பீட்டு நிறுவனம், வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் பரிமாற்றங்கள் இதில் அடங்கும். GDPயில் துறைகளின் பங்கை மதிப்பிடுவதற்கு ஒரு நாட்டின் பொருளாதாரமானது முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் துறை எனப் பிரிக்கப்படுகிறது.
45.
1) திடக்கழிவு:
தாள்கள், நெகிழிப் பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள், உணவுப் பொருட்கள், நகராட்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள், பழுதடைந்த மின்னணுப் பொருட்கள் இதில் அடங்கும்.
2) பூச்சிக்கொல்லி மற்றும் இரசாயன உரங்கள்:
விவசாய உற்பத்தி பெருக்கத்திற்காக பயன்படுத்தப்படும் வேதியியல் பொருட்கள் ஏற்படுத்தும் மாசு.
3) காடுகளை அழித்தல்:
மரங்கள் வெட்டப்படுவதால் மண் அரிப்பு ஏற்படுகிறது. காடுகள் அழிக்கப்படுவதால் நிலம் மாசடைகிறது.
46.
1. ஏற்கனவே வாங்கிய பொருளை மீண்டும் வாங்குதல்:
ஏற்கனவே வாங்கப்பட்ட கார், இருசக்கர வாகனம், கைபேசி, இயந்திரம் போன்ற பொருள்களை இரண்டாம் முறை வாங்கும்போது ஏற்படும் செலவுகளை தேசிய வருவாய் கணக்கிடலில் சேர்க்கக்கூடாது.
2. பங்கு மற்றும் பத்திரங்கள் வாங்குதல்:
பழைய பங்கு பத்திரங்களை இரண்டாம் நிலை அங்காடிகளில் வாங்கும்போது ஏற்படும் செலவுகள் சேர்க்கக்கூடாது.
3. மாற்று செலுத்து நிலை:
அரசாங்கம் செய்யும் மாற்றுச் செலுத்துதல்களான முதியோர் ஓய்வூதியம் சேர்க்கக்கூடாது.
4. இடைநிலை பொருட்களுக்கு செய்யும் செலவு:
விவசாயிகள் விதை மற்றும் உரம் வாங்க செய்யும் செலவு, தொழிற்சாலைகளுக்கு கச்சாப் பொருட்கள் போன்றவை சேர்க்கப்படக்கூடாது.
47.
a. ICICI வங்கி 1955-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது.
b. உலக வங்கியிலிருந்து பெறப்படும் இந்திய தொழிற்கடன்களை முறைப்படுத்தி அளிப்பதும் மூலதனச் சந்தையை கட்டமைப்பதும் இக்கழகத்தின் நோக்கமாகும்.
பணிகள்:
1. தொழில் நிறுவனங்களுக்கு உதவுதல்.
2. அந்நியச் செலாவணி கடன்கள் வழங்குதல்
3. வர்த்தக வங்கிப் பணிகள்
4. கடன் பெற சான்று வழங்கல்
5. வீட்டு வசதி கடன்கள் வழங்குதல்
6. குத்தகை நடவடிக்கை மேற்கொள்ளுதல்
48.
1. அயல்நாட்டு செலுத்து சமமின்மையின் தீய விளைவுகளை நீக்குவதற்கு பன்னாட்டு வாணிகத் தடைகளை பயன்படுத்துவதை குறைத்துள்ளது.
2. பணிகள் வழங்கு துறையில் வெளிநாட்டு மூலதனம் செய்வதற்கும் அனுமதி பெற்றது.
3. வாணிக கொள்கை மீளாய்வு நடைமுறைகளை தொடர்ந்து கண்காணித்தல்.
49.
1. சொத்து, உற்பத்தி சாதனங்களின் உரிமை, தனியார் மற்றும் பொதுத்துறைக்கு சொந்தமாக இருப்பதால் தனியார் துறையும், பொதுத்துறையும் வளங்களை பயன்படுத்த உரிமை பெற்றிருக்கும்.
2. தனியார் துறை, பொதுத்துறை இணைந்து செயல்படுவதால் தனியார் துறை இலாபத்திற்கும், பொதுத்துறை சமூக நலனுக்கும் உற்பத்தி செய்யும்
3. பொருளாதார திட்டமிடல் தேசிய திட்டமாக இருப்பதால் தனியார் துறையும், பொதுத்துறையும் மதித்து பின்பற்றும்
4. பொருளாதார அடிப்படை பிரச்சனைகளை விலை இயக்க முறை, ஆற்றும் அரசின் தலையீட்டின் மூலம் தீர்க்கப்படும்.
5. வளங்களின் உரிமை தனியாருக்கு சுதந்திரமாக இருந்தாலும், அனைத்து பொருளாதார நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் அரசிடமே காணப்படும்
50.
1. வருமானம் மற்றும் வேலைவாய்ப்புக் கோட்பாட்டில் முதலீட்டின் முக்கியத்துவத்தை பெருக்கி சுட்டிக் காட்டுகிறது.
2. வாணிப சுழற்சியின் பல்வேறு நிலைகளுக்கான காரணங்களை விளக்குகின்றது.
3. சேமிப்பு மற்றும் முதலீடு இவற்றிற்கிடையே சமநிலை ஏற்பட உதவுகிறது.
4. அரசாங்க கொள்கைகளை வழிவகுக்க உதவிபுரிகிறது.
5. வேலையில்லா நிலையை போக்கவும், முழு வேலை வாய்ப்பு நிலையை அடையவும் உதவுகின்றது.
51.
1) சூதாட்ட முதலாளித்துவம்
மக்கள் தங்கள் வருமானம் மற்றும் நேரத்தின் பெரும்பகுதியை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில், மது அருந்துவதில், சூதாடுவதில் செலவழித்தால் உற்பத்தி நடவடிக்கை பாதிக்கப்பட்டு பொருளாதார முன்னேற்றம் தடைபடும் என தாமஸ் பிக்கெட்டி எடுத்துரைக்கிறார்
2) பரம்பரை சொத்துரிமை முதலாளித்துவம்:
நிலம் உள்ளிட்ட சொத்து பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு பரம்பரையாக வந்து சேர்ந்தால் குழந்தைகள் கடின உழைப்பை விரும்பமாட்டர்கள். இது உற்பத்தித்திறனை குறைத்துவிடும் என தாமஸ் பிக்கெட்டி கூறுகிறார்
52.
இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் கீழ்காணும் வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி இறக்குமதியைக் கட்டுப்படுத்தலாம்.
1. இறக்குமதி மீது வரிவிதித்தல் முன்பே விதிக்கப் பட்டிருந்தால் விகிதத்தை அதிகப்படுத்தலாம்.
2. பங்களவு நிர்ணயித்து இறக்குமதியைக் குறைக்கலாம். பங்களவு என்பது இறக்குமதி அளவை நிர்ணயித்தலாகும்.
3. கட்டுப்பாடு அல்லது தவிர்ப்பு என்ற முறையில் அத்தியாவசியமற்ற பண்டங்களைக் குறைப்பது. ஆனால் இது கடத்தலை ஊக்குவிக்கும்.
53.
i) தவழும் பணவீக்கம் : தவழும் பணவீக்கம் மிகக் குறைவான, எளிமையான விகிதத்தில் பணவீக்க விகிதம் இருப்பதாகும். நீண்ட காலத்தில் விலைவாசி உயர்வதை மக்கள் எளிதாக உணர முடியாத அளவில் இருக்கும் பணவீக்கமே தவழும் பணவீக்கம் எனப்படுகிறது. இது மிதமான பணவீக்கம் (Mild Inflation) எனப்படுகிறது.
ii) நடக்கும் பணவீக்கம் : பணவீக்கம் மிதமான வேகத்தில் ஒற்றை இலக்கத்தில், அதாவது 3 முதல் 9 விழுக்காடு அளவில் இருந்தால் அது நடக்கும் பணவீக்கம் அல்லது நகரும் பணவீக்கம் (Trolling Inflation) என்றழைக்கப்படுகிறது.
iii) ஓடும் பணவீக்கம் : ஆண்டு பணவீக்க விகிதம் 10 முதல் 20 விழுக்காட்டிற்குள் இருந்தால் அது ஓடும் பணவீக்கம் எனப்படுகிறது. வேகமான விலைவாசி அதிகரிப்பை ஓட்டத்துடன் உவமைப்படுத்திச் சொல்வதால் அது ஓடும் பணவீக்கம் எனப்படுகிறது.
iv) தாவும் பணவீக்கம் : தாவும் பணவீக்கம் அல்லது உயர் பணவீக்கம் என்பது சமாளிக்க முடியாத அளவிற்கு இரண்டு அல்லது மூன்று இலக்க விழுக்காட்டில் உள்ள பணவீக்கம் ஆகும்.
54.
1. கேம்பிரிட்ஜின் புகழ்பெற்ற பொருளியலறிஞரான ஆ.சி.பிகு பொருட்களின் விலை மட்டம் குறைவதன் தொடர்பாக கூலி குறைகின்றபொழுது, தொழிலாளர்களின் கையிருப்பு பணத்தின் மதிப்பு கூடுவதால் மொத்த விளைவுள்ள தேவை கூடுமென்று கருதுகிறார்.
2. கூலி குறைவதால் விலை வீழ்ச்சியால் மக்கள் கையிலிருக்கும் உண்மை பண மதிப்பு கூடுவதால் நுகர்வும் கூடுகிறது. இதனால் முழு நிறை வேலைவாய்ப்பு நிலையை அடையும். இதனை பிகுவின் விளைவு என்கிறோம்.
பிகு தனது கருத்தை,
N = \(\frac { QY }{ W } \) என்கிறார்
N = தொழிலாளர் எண்ணிக்கை
Y = நாட்டு வருமானம்
Q = நாட்டு வருவாயில் கூலியாக செலுத்தும் பணவீதம்
W = கூலி விகிதம்
3. மற்றவை மாறாமலிருக்க கூலி குறைவதால் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை கூடுமென்பதை இந்த சமன்பாடு காட்டுகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards