12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2019
பன்னாட்டுப் பொருளியல்
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
1927ல் நிகர பண்டமாற்று வீதத்தை வடிவமைத்தவர்.
ஜீ.எஸ். டோரன்ஸ்
எப்.டபில்யூ. டாசிக்
மார்ஷல்
ஜே.எஸ். மில்
2.
"காரணி இருப்பு மாதிரி" உருவாக்கியவர்
ஹெக்சர், ஓலின்
டேவிட் ரிக்கார்டோ
டாசிக்
ஜே.எஸ்.மில்
3.
கோட்பாட்டு அடிப்படையில் வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் நன்மைகளாவன
பொருளாதார வளர்ச்சி
பன்னாட்டு வாணிப வளர்ச்சி
வேலை வாய்ப்பு மற்றும் திறன் அதிகரித்தல்
மேற்கண்ட அனைத்தும்
4.
5.
சாதகமான வாணிகச் சூழலில் ஏற்றுமதி இறக்குமதியைவிட ______ ஆக இருக்கும்.
அதிகமாக
குறைவாக
கிட்டத்தட்ட சமமாக
சமமாக
6.
ஏற்றுமதி நிகரம் என்பது
ஏற்றுமதி x இறக்குமதி
ஏற்றுமதி + இறக்குமதி
ஏற்றுமதி - இறக்குமதி
பணிகள் ஏற்றுமதி
7.
பண மாற்று வீதம் நிர்ணயமாகும் சந்தை
பண சந்தை
அயல்நாட்டுச் செலாவணி
பங்கு சந்தை
மூலதன சந்தை
8.
இரண்டு நாடுகளுக்கிடையிலான வாணிகம் என்பது
வெளிவாணிகம்
உள்வாணிகம்
மண்டலங்களுக்கிடையான வாணிகம்
உள்நாட்டு வாணிகம்
9.
வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் நோக்கங்களைக் குறிப்பிடுக.
10.
இறக்குமதி கட்டுப்பாடு என்றால் என்ன?
11.
மொத்த நிகர பண்டப் பரிமாற்று வாணிக வீதத்தைச் சுருக்கமாக எழுதுக
12.
பன்னாட்டுப் பொருளியலின் உள்ளடக்கத்தைப் பட்டியலிடுக.
13.
அயல் நாட்டுச் செலுத்துநிலையின் கூறுகளை அட்டவணை வடிவில் விளக்குக.
14.
15.
உள்நாட்டு வாணிகத்துக்கும் பன்னாட்டு வாணிகத்துக்குமிடையிலான வேறுபாடுகளை விவாதிக்கவும்.
16.
செலாவணி மாற்று வீதம் என்றால் என்ன?
17.
18.
பன்னாட்டு வாணிகத்தின் நன்மைகளில் ஏதேனும் இரண்டு குறிப்பிடுக.
19.
பன்னாட்டு வாணிகம் வரைவிலக்கணம் தருக.
20.
பன்னாட்டுப் பொருளியல் என்றால் என்ன?
21.
மெய்யான செயலாக்க பண மாற்று வீதம்
22.
நிலையற்ற பணமாற்று வீதம்
23.
நிகர பண்டமாற்று வாணிப வீதம்
24.
பன்னாட்டு வாணிகம்
25.
உள்நாட்டு வாணிகம்
1.
(b)
எப்.டபில்யூ. டாசிக்
2.
(a)
ஹெக்சர், ஓலின்
3.
(d)
மேற்கண்ட அனைத்தும்
4.
(d)
5.
(a)
அதிகமாக
6.
(c)
ஏற்றுமதி - இறக்குமதி
7.
(b)
அயல்நாட்டுச் செலாவணி
8.
(a)
வெளிவாணிகம்
9.
1. விற்பனையை விரிவுபடுத்துதல்
2. இயற்கை வளங்களை கையகப்படுத்துதல்
3. வாணிக பரவலாக்கம்
4. போட்டி இடர்களைக் குறைத்தல்
10.
இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் கீழ்காணும் வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி இறக்குமதியைக் கட்டுப்படுத்தலாம்.
1. இறக்குமதி மீது வரிவிதித்தல் முன்பே விதிக்கப் பட்டிருந்தால் விகிதத்தை அதிகப்படுத்தலாம்.
2. பங்களவு நிர்ணயித்து இறக்குமதியைக் குறைக்கலாம். பங்களவு என்பது இறக்குமதி அளவை நிர்ணயித்தலாகும்.
3. கட்டுப்பாடு அல்லது தவிர்ப்பு என்ற முறையில் அத்தியாவசியமற்ற பண்டங்களைக் குறைப்பது. ஆனால் இது கடத்தலை ஊக்குவிக்கும்.
11.
நிகர பண்டமாற்று வாணிப வீதம்:
1. நிகர பண்டமாற்று வீதத்தை எப்.டபிள்யூ, தாஸிக் 1927 இல் வடிவமைத்தார்.
2. ஏற்றுமதி விலைகளுக்கும், இறக்குமதி விலைகளுக்கும் இடையிலான விகிதமே நிகரப் பண்டமாற்று வாணிக வீதம் என்கிறார். ஜேக்கப் வைனர் இதை பண்ட வாணிப வீதம் என்றழைக்கிறார்.
Tn = (Px/Pm)x100
Tn = நிகர பண்டமாற்று வாணிக வீதம்
Px = ஏற்றுமதி விலைக் குறியீட்டெண்
Pm = இறக்குமதி விலைக் குறியீட்டெண்
மொத்த பண்டமாற்று வாணிப வீதம்:
1. இந்த வீதத்தையும் தாஸிக் என்பவரே 1927ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார். நிகரப் பண்டமாற்று வீதத்தை மேம்படுத்தி இதை வடிவமைத்தார்.
2. மொத்த ஏற்றுமதி பண்டங்களின் குறியீட்டெண்ணிற்கும், மொத்த இறக்குமதிப் பண்டங்களின் குறியீட்டெண்ணிற்குமிடையிலான விகிதத்தை 100 ஆல் பெருக்கக் கிடைக்கும் தொகையாக மொத்தப் பண்டமாற்று வாணிக வீதத்தைப் புரிந்து கொள்ளலாம்.
Tg = (Qm/Qx) x 100
Tg = மொத்த பண்டமாற்று வாணிக வீதம்
QM = இறக்குமதி அளவு குறியீட்டெண்
Qx = ஏற்றுமதி அளவு குறியீட்டெண்
12.
பன்னாட்டுப் பொருளியலின் பொருளடக்கம்:
பன்னாட்டுப் பொருளியலின் பொருளடக்கம் பல பாகங்களை உள்ளடக்கியது. அவை கீழ்க்காணுமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தூய வணிகக் கோட்பாடு : நாடுகள் ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கான காரணங்கள், எந்த வகையான பண்டங்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதை விவரிக்கும் பிரிவை தூய வாணிபக் கோட்பாடாகும்.
கொள்கைச் சச்சரவுகள் : நாடுகளுக்கிடையேயான வாணிக உறவுகளைக் கட்டுப்படுத்துவதா, தடைகளற்ற வணிகத்தை அனுமதிப்பதா போன்றவற்றை இப்பிரிவு விவாதிக்கிறது.
பன்னாட்டு வாணிகக் கூட்டமைப்பும் ஒன்றியங்களும் : இந்தப் பிரிவு பன்னாட்டுக் கூட்டமைப்பு, சுங்கவரி ஒன்றியங்கள், நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பு, அமைப்புகளின் மூலமாக நாடுகளின் பொருளாதாரம் இணைக்கப்பட்டுள்ளதை விவாதிக்கிறது.
பன்னாட்டு நிதியும் வணிக ஒழுங்குபடுத்தும் நிறுவனங்களும்: பன்னாட்டுப் பண நிதியம், மறு கட்டமைப்பு, பொருளாதார மேம்பாட்டுக்கான பன்னாட்டு வங்கி (உலக வங்கி, உலக வாணிக நிறுவனம், வாணிகம், பொருளாதார மேம்பாட்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டு அமைப்பு முதலான பன்னாட்டு அமைப்புகள் நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவுகளை விவரிக்கிறது
13.
அயல்நாட்டு செலுத்துநிலையின் கூறுகள் :
1. வரவு, பற்று இனங்கள் நேரடியாக அயல் நாட்டுச் செலுத்து சமநிலை அறிக்கையில் பதியப்படுகின்றன.
2. அவை கிடைமட்டமாக கீழ்க்காணும் மூன்று இனங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.
1. நடப்புக் கணக்கு, 2. மூலதனக் கணக்கு. 3. மைய வங்கித் தீர்வுக் கணக்கு அல்லது மைய வங்கி நிதிச் சொத்துக் கையிருப்புக் கணக்கு.
3. நடப்புக் கணக்கு: பன்னாட்டுப் பண்டப் பரிமாற்றங்கள், பன்னாட்டுப் பணி பரிமாற்றங்கள்.(சுற்றுலா, போக்குவரத்து உரிமைத்தொகை), பன்னாட்டு ஒருதரப்புச் செலுத்துகைகள் (பரிசுத் தொகை, அயல் நாட்டு உதவி) பரிமாற்றங்கள் இந்தக் கணக்கின் கீழ் பதியப்படுகின்றன.
4. மூலதனக் கணக்கு: வெளிநாட்டுக் கடன், அயல் நாட்டு முதலீடு, பன்னாட்டுப் பண, நிதி அங்காடி விற்றல் வாங்கல் பரிமாற்றங்கள் இந்தக் கணக்கின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன.
மையவங்கி நிதி சொத்து கையிருப்புக் கணக்கு:
1. மைய வங்கியின் கையிருப்பில் உள்ள செலாவணி சொத்துக்களில் நடைபெறும் பரிவர்த்தனை இந்த கணக்கில் பதிவு செய்யப்படுகிறது.
2. உபரி எழுந்தால் கையிருப்புக் கணக்கில் சேர்க்கப்படும்.
3. பற்றாக்குறை எழுந்தால் கையிருப்பிலிருந்து எடுத்து செலவிடப்படும். எனவேதான் இதற்கு மைய வங்கி கையிருப்பு தீர்வு கணக்கு என்ற பெயரும் வழங்கப்பட்டது.
பன்னாட்டுப் பண நிதியத்தில் நிகர கடன் பெறும் தகுதி நிலை ஆகியவை பதிவு செய்யப்படுகிறது.
அயல்நாட்டு செலுத்துச் சமநிலைக் கணக்கு
14.
15.
| உள்நாட்டு வாணிகம் | பன்னாட்டு வாணிகம் | |
| 1 | ஒரு நாட்டிற்குள் மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே நடைபெறும் வாணிகம் | பல நாட்டின் மக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான வாணிகம் |
| 2 | உழைப்பு, மூலதனமும் ஒரு நாட்டின் பகுதிகளுக்கிடையே தடையில்லாமல் இடம் பெயர்தல் | உழைப்பும் மூலதனமும் நாடுகளுக்கிடையே இடம் பெயர்தல் தடைகளுக்குட்பட்டது. |
| 3 | பண்டங்கள், பணிகள் இடம் பெயர்தலில் தடை ஏதுமில்லை. | பண்டங்கள், பணிகள் இடம் பெயர்தலை சுங்க வரி, பங்களவு முதலான தடைகள் கடினமாக்குகின்றன. |
| 4 | விற்றல் வாங்கலில் ஒரே ஒரு பணம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. | பலநாட்டுப் பணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. |
| 5 | புவி அமைப்பும் கால நிலைச் சூழலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும் | புவி அமைப்பும் கால நிலையும் வேறுபடும் இயல்பு கொண்டவை. |
| 6 | வாணிகமும், நிதி நடைமுறைகளும் ஒரே மாதிரியானவை. | வாணிகமும், நிதி நடைமுறைகளும் வேறுபடும் போக்குக் கொண்டவை. |
| 7 | அரசமைப்பு முறை, மக்களின் பழக்க வழக்கங்கள், அரசின் கொள்கைகளில் வேறுபாடில்லை | அரசமைப்புமுறை, மக்களின் பழக்க வழக்கங்கள், அரசின் கொள்கைகளில் வேறுபாடுகளிருக்கும். |
16.
ஒரு அலகு அயல் பணத்தை பெறுவதற்கு எத்தனை அலகு உள்நாட்டுப் பணத்தை கொடுக்கிறோம் என்பதே செலாவணி மாற்று வீதமாகும்.
17.
18.
1. பன்னாட்டு வாணிகம் அனைத்து வணிக நாடுகளிலும் சமநிலை நிலவ உதவுகிறது.
2. பன்னாட்டு வாணிகத்தில் ஈடுபடும் நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.
19.
1. பண்டங்கள், பணிகளை இரு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் பரிமாறிக் கொள்வதைப் பன்னாட்டு வாணிகம் எனலாம்.
2. இது நாடுகளின் எல்லைகளைக் கடந்து நடைபெறும் வாணிகம். இதை வெளிவர்த்தகம், அல்லது அயல் வாணிகம்' அல்லது 'மண்டலங்களுக்கிடையிலான வாணிகம்' எனவும் அழைக்கலாம்.
20.
பன்னாட்டுப் பொருளியல் என்பது பண்டங்கள் மற்றும் பணிகள் நாடுகளுக்கிடையே பரிமாற்றம் செய்வது பற்றிய பொருளியலின் ஒரு பாடப்பிரிவாகும்.
21.
REER
22.
மிதக்கும் பண மாற்று வீதம்
23.
Tn = (PxPm) x 100
24.
மண்டலங்களுக்கிடையிலான வாணிகம்
25.
பகுதிகளுக்கிடையிலான வாணிகம்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards