12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/10/2019
பன்னாட்டுப் பொருளியல்
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
இந்தியாவில் வெளிநாட்டு மூலதனம் தடைசெய்யப்பட்ட துறைகள் யாவை?
2.
வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் தீமைகள் யாவை?
3.
வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் நோக்கங்களைக் குறிப்பிடுக.
4.
மொத்த நிகர பண்டப் பரிமாற்று வாணிக வீதத்தைச் சுருக்கமாக எழுதுக
5.
பன்னாட்டு வாணிகத் தொன்மைக் கோட்பாட்டிற்கும் புதிய கோட்பாட்டிற்குமிடையிலான வேறுபாடுகளை எழுது.
6.
அயல்நாட்டு செலுத்து சமமின்மைக்கான காரணங்கள்:
7.
ஆடம்ஸ்மித்தின் 'முழுச் செலவுக் கோட்பாடு' -விவரி
8.
வெளிநாட்டு நேரடி முதலீட்டினால் ஏற்படும் நன்மைகளைக் குறிப்பிடுக.
9.
அயல் நாட்டுச் செலுத்துநிலையின் கூறுகளை அட்டவணை வடிவில் விளக்குக.
10.
உள்நாட்டு வாணிகத்துக்கும் பன்னாட்டு வாணிகத்துக்குமிடையிலான வேறுபாடுகளை விவாதிக்கவும்.
1.
1. போர்க் கருவிகள் மற்றும் ஆயுத உற்பத்தி
2. அணு ஆற்றல்
3. தொடர் வண்டி போக்குவரத்து
4. நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி
5. இரும்புத்தாது, தங்கம், வைரம் போன்ற தாது சுரங்கத்துறை
2.
1. அதிக லாப வாய்ப்புள்ள துறைகளில் முதலீடு அதிகம்
2. நாட்டுக்கு பொருத்தமற்ற தொழில்நுட்பத்தை புகுத்துகிறது
3. முதலீடு திரும்பப் பெறும்போது அயல்நாட்டு செலுத்து சமமின்மை உண்டாகும்.
4. அரசியல் தலையீடு
5. அறமற்ற வணிகம்
6. சிறு மற்றும் குறு தொழில்கள் நசிவு
7. முற்றுரிமை சூழல்
8. வாணிக வீதம் பாதகமாதல்
3.
1. விற்பனையை விரிவுபடுத்துதல்
2. இயற்கை வளங்களை கையகப்படுத்துதல்
3. வாணிக பரவலாக்கம்
4. போட்டி இடர்களைக் குறைத்தல்
4.
நிகர பண்டமாற்று வாணிப வீதம்:
1. நிகர பண்டமாற்று வீதத்தை எப்.டபிள்யூ, தாஸிக் 1927 இல் வடிவமைத்தார்.
2. ஏற்றுமதி விலைகளுக்கும், இறக்குமதி விலைகளுக்கும் இடையிலான விகிதமே நிகரப் பண்டமாற்று வாணிக வீதம் என்கிறார். ஜேக்கப் வைனர் இதை பண்ட வாணிப வீதம் என்றழைக்கிறார்.
Tn = (Px/Pm)x100
Tn = நிகர பண்டமாற்று வாணிக வீதம்
Px = ஏற்றுமதி விலைக் குறியீட்டெண்
Pm = இறக்குமதி விலைக் குறியீட்டெண்
மொத்த பண்டமாற்று வாணிப வீதம்:
1. இந்த வீதத்தையும் தாஸிக் என்பவரே 1927ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார். நிகரப் பண்டமாற்று வீதத்தை மேம்படுத்தி இதை வடிவமைத்தார்.
2. மொத்த ஏற்றுமதி பண்டங்களின் குறியீட்டெண்ணிற்கும், மொத்த இறக்குமதிப் பண்டங்களின் குறியீட்டெண்ணிற்குமிடையிலான விகிதத்தை 100 ஆல் பெருக்கக் கிடைக்கும் தொகையாக மொத்தப் பண்டமாற்று வாணிக வீதத்தைப் புரிந்து கொள்ளலாம்.
Tg = (Qm/Qx) x 100
Tg = மொத்த பண்டமாற்று வாணிக வீதம்
QM = இறக்குமதி அளவு குறியீட்டெண்
Qx = ஏற்றுமதி அளவு குறியீட்டெண்
5.
| தொன்மைப் பன்னாட்டு வாணிபக் கோட்பாடு | புதிய பன்னாட்டு வாணிபக் கோட்பாடு | |
| 1 | பன்னாட்டு வணிகத்தை விளக்குவதற்கு உழைப்பைச் சார்ந்த மதிப்புக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது | பன்னாட்டு வாணிகத்தை விளக்குவதற்கு பொது மதிப்புக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. |
| 2 | இது ஒரு காரணி (உழைப்பு) மாதிரியாகும். | இது இரு காரணி (உழைப்பு, மூலதனம்) மாதிரியாகும். |
| 3 | ஒப்புமைச் செலவு வேறுபாட்டிற்கு உழைப்பாளர்களின் உற்பத்தித்திறன் வேறுபாடுகள் காரணம் என்கிறது. | ஒப்புமைச் செலவு வேறுபாட்டிற்கு உற்பத்தி காரணிகளின் கிடைப்பளவு வேறுபாடே காரணம் என நம்புகிறது. |
6.
1. சுழற்சியின் ஏற்ற இறக்கம்:
மந்த காலங்களில் பன்னாட்டு வாணிகம் வீழ்ச்சி அடைகிறது. செழிப்பான காலங்களில் வாணிகம் வளர்கிறது.
2. கட்டமைப்பு மாற்றங்கள்:
வளரும் நாடுகளில் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள். அபரிமிதமான முதலீடு கட்டமைப்பை மாற்றி அமைத்து அயல்நாட்டு செலுத்து சமநிலையை உருவாக்குகிறது.
3. மேம்பாட்டுச் செலவு:
நாடுகள் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் ஏற்றுமதி வாய்ப்பு குறைவு. நாட்டம் அதிகம்.
4. மிகை நுகர்வுப் போக்கு:
ஆடம்பரப் பொருட்களின் மீது பேராசை அயல்நாட்டுச் செலுத்து நிலையில் பாதகமான விளைவுகளை உண்டாக்குகிறது.
5. வெளிக்காட்டும் விளைவு:
மற்றவர் வாங்கும் பொருட்களை தாமும் வாங்க வேண்டும் என்பது வெளிக்காட்டும் விளைவு.
6. வெளிநாட்டில் கடன் வாங்குதல்:
வாங்கும் ஆண்டில் அயல்நாட்டு செலுத்து நிலையில் உபரியும் வட்டியும் பற்றாக்குறை சமமின்மையை ஏற்படுத்தும்.
7.
முன்னுரை:
1. ஆடம்ஸ்மித் 1776 ஆம் ஆண்டில் தனி அடக்கச் செலவுக் கோட்பாட்டினை விளக்கினார்.
2. வாணிப தடைகளற்ற சூழலில் குறைவான அடக்கச் செலவில் பொருளுற்பத்தி செய்யும் தனி தேர்ச்சியை அடைவதினால் அனைத்து நாடுகளுக்கும் பன்னாட்டு வாணிபத்தின் பலன் கிடைக்குமென ஆடம்ஸ்மித் நம்பினார்.
ஆடம்ஸ்மித்தின் கோட்பாடு:
ஆடம்ஸ்மித்தின் கருத்துப்படி குறைந்த தனி அடக்க செலவில் பொருளுற்பத்தி செய்யும் தேர்ச்சியை நாடுகள் பெற்றிருப்பதை பன்னாட்டு வாணிகம் நடைபெறுவதற்கான அடிப்படையாகும்.
எடுகோள்கள்:
1. இரண்டு நாடுகள் இரண்டு பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
2. உழைப்பு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
3. உழைப்பாளர்கள் ஒரே இயல்புடையவர்கள்
4. ஒரு பொருளின் விலை உழைப்பின் அளவால் மதிப்பிடப்படுகிறது.
5. போக்குவரத்து செலவு இல்லை.
எடுத்துக்காட்டு விளக்கப்படம்:
| நாடு | இந்தியா | சீனா |
| தொழிலாளரின் தலா உற்பத்தி | ||
| கோதுமை | 20 | 8 |
| துணி | 6 | 14 |
இந்தியா கோதுமையை சீனாவைவிட குறைந்த அடக்க செலவில் உற்பத்தி செய்யும். சீனா துணியை இந்தியாவை விட குறைந்த அடக்க செலவில் உற்பத்தி செய்யும் எனவே இரு நாடுகளும் தங்களுக்குள்ள பன்னாட்டு வாணிகத்தின் மூலம் நன்மை அடையலாம்.
8.
வெளிநாட்டு முதலீடு பெரும்பாலும் நேரடி முதலீடாகவே நாடுகளுக்குள் நுழைகிறது. வெளிநாட்டு நேரடி முதலீட்டின் நன்மைகளை பட்டியலிடுவோம்..
1. வெளிநாட்டு நேரடி மூலதனம் அது சென்றடையும் நாட்டின் மூலதன அளவை உயர்த்தி வேலைவாய்ப்பு வருமான அளவையும் அதிகரிக்கும்.
2. நேரடி வெளிநாட்டு மூலதனம் சென்றடையும் நாட்டிற்கு புதிய தொழில்நுட்பத்தையும் கொண்டு வருகிறது.
3. வெளிநாட்டு நேரடி முதலீடு நுழையும் நாட்டின் அரசுக்கு நிறுவன இலாப வரி செலுத்துவதன் மூலம் வருவாயை கொண்டு வருகிறது.
4. இலாபத்தின் ஒரு பகுதியை மறுமுதலீடு செய்வதன் மூலம் தொழில்வளம் பெருகும்.
5. புதிய தொழில் மேலாண்மை முறைகளை அறிமுகப்படுத்தும்.
6. ஏற்றுமதியை அதிகப்படுத்தி இறக்குமதிக்கான அவசியத்தை குறைத்து அயல்நாட்டுச் செலுத்துநிலை சமமின்மையை நீக்கும்.
7. போட்டியை உருவாக்கி உள்நாட்டு முற்றுரிமையைத் தகர்க்கும்.
8. வெளிநாட்டு நேரடி மூலதனம் முதலீட்டையும் அயல்நாட்டுச் செலாவணியையும் கொண்டு வருவதன் மூலம் சேமிப்பு முதலீடு இடைவெளியையும் நிரப்ப உதவுகிறது.
9. உள்நாட்டு துணைத் தொழில் நிறுவனங்கள் வளரவும், வெளிநாட்டு நிறுவனங்களோடு இணைந்து உள்நாட்டு சிறுதொழில்கள் வளரவும் உதவும்.
10. உள்நாட்டு தொழில் முனைவோர்களை வெளிநாட்டு மூலதனம் மற்ற நாடுகளில் முதலீடு செய்ய தூண்டுகிறது.
9.
அயல்நாட்டு செலுத்துநிலையின் கூறுகள் :
1. வரவு, பற்று இனங்கள் நேரடியாக அயல் நாட்டுச் செலுத்து சமநிலை அறிக்கையில் பதியப்படுகின்றன.
2. அவை கிடைமட்டமாக கீழ்க்காணும் மூன்று இனங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.
1. நடப்புக் கணக்கு, 2. மூலதனக் கணக்கு. 3. மைய வங்கித் தீர்வுக் கணக்கு அல்லது மைய வங்கி நிதிச் சொத்துக் கையிருப்புக் கணக்கு.
3. நடப்புக் கணக்கு: பன்னாட்டுப் பண்டப் பரிமாற்றங்கள், பன்னாட்டுப் பணி பரிமாற்றங்கள்.(சுற்றுலா, போக்குவரத்து உரிமைத்தொகை), பன்னாட்டு ஒருதரப்புச் செலுத்துகைகள் (பரிசுத் தொகை, அயல் நாட்டு உதவி) பரிமாற்றங்கள் இந்தக் கணக்கின் கீழ் பதியப்படுகின்றன.
4. மூலதனக் கணக்கு: வெளிநாட்டுக் கடன், அயல் நாட்டு முதலீடு, பன்னாட்டுப் பண, நிதி அங்காடி விற்றல் வாங்கல் பரிமாற்றங்கள் இந்தக் கணக்கின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன.
மையவங்கி நிதி சொத்து கையிருப்புக் கணக்கு:
1. மைய வங்கியின் கையிருப்பில் உள்ள செலாவணி சொத்துக்களில் நடைபெறும் பரிவர்த்தனை இந்த கணக்கில் பதிவு செய்யப்படுகிறது.
2. உபரி எழுந்தால் கையிருப்புக் கணக்கில் சேர்க்கப்படும்.
3. பற்றாக்குறை எழுந்தால் கையிருப்பிலிருந்து எடுத்து செலவிடப்படும். எனவேதான் இதற்கு மைய வங்கி கையிருப்பு தீர்வு கணக்கு என்ற பெயரும் வழங்கப்பட்டது.
பன்னாட்டுப் பண நிதியத்தில் நிகர கடன் பெறும் தகுதி நிலை ஆகியவை பதிவு செய்யப்படுகிறது.
அயல்நாட்டு செலுத்துச் சமநிலைக் கணக்கு
10.
| உள்நாட்டு வாணிகம் | பன்னாட்டு வாணிகம் | |
| 1 | ஒரு நாட்டிற்குள் மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே நடைபெறும் வாணிகம் | பல நாட்டின் மக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான வாணிகம் |
| 2 | உழைப்பு, மூலதனமும் ஒரு நாட்டின் பகுதிகளுக்கிடையே தடையில்லாமல் இடம் பெயர்தல் | உழைப்பும் மூலதனமும் நாடுகளுக்கிடையே இடம் பெயர்தல் தடைகளுக்குட்பட்டது. |
| 3 | பண்டங்கள், பணிகள் இடம் பெயர்தலில் தடை ஏதுமில்லை. | பண்டங்கள், பணிகள் இடம் பெயர்தலை சுங்க வரி, பங்களவு முதலான தடைகள் கடினமாக்குகின்றன. |
| 4 | விற்றல் வாங்கலில் ஒரே ஒரு பணம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. | பலநாட்டுப் பணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. |
| 5 | புவி அமைப்பும் கால நிலைச் சூழலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும் | புவி அமைப்பும் கால நிலையும் வேறுபடும் இயல்பு கொண்டவை. |
| 6 | வாணிகமும், நிதி நடைமுறைகளும் ஒரே மாதிரியானவை. | வாணிகமும், நிதி நடைமுறைகளும் வேறுபடும் போக்குக் கொண்டவை. |
| 7 | அரசமைப்பு முறை, மக்களின் பழக்க வழக்கங்கள், அரசின் கொள்கைகளில் வேறுபாடில்லை | அரசமைப்புமுறை, மக்களின் பழக்க வழக்கங்கள், அரசின் கொள்கைகளில் வேறுபாடுகளிருக்கும். |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards