12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/10/2019
தேசிய வருவாய்
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
தேசிய வருவாயின் அடிப்படை கருத்துக்களை விவரி.
2.
உற்பத்தி முறையில் நாட்டு வருவாய் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை விவரி?
3.
பொருளாதார ஆய்வில், சமூகக் கணக்கிடுதலின் அவசியத்தை விவாதி.
4.
5.
நாட்டு வருமானத்தின் முக்கியத்துவத்தை விவரி.
6.
நாட்டு வருமானம் கணக்கீட்டில் வருமான முறையின் கணக்கீடுதலின் நிலைகள் யாவை?
7.
செலவு முறை கணக்கீட்டின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?
8.
பொருளாதார துறை என்றால் என்ன? அதன் பிரிவுகள் யாவை?
9.
புள்ளிவிவர சிக்கல் எப்போது ஏற்படும்?
10.
மொத்த தேசிய உற்பத்தி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
1.
தேசிய வருவாயை அளவிடுவதற்கு தேவையான அடிப்படை கருத்துக்கள்
1. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP):
ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிநிலை பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த சந்தை மதிப்பு உள்நாட்டு உற்பத்தியாகும்.
GDP = C+I+G+(X-M)
2. நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP):
ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் உற்பத்தியில் தேய்மானத்தை கழித்தால் கிடைப்பது நிகர உள்நாட்டு உற்பத்தியாகும்.
நிகர உள்நாட்டு உற்பத்தி = GDP - தேய்மானம்
3. மொத்த தேசிய உற்பத்தி (GNP):
மொத்த தேசிய உற்பத்தி என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட முடிவடைந்த பொருட்கள் மற்றும் பணிகளின் அங்காடி மதிப்பின் மொத்த தேசிய உற்பத்தியாகும்.
GNP = C+I+G+(X-M)+(R-P)
4. நிகர தேசிய உற்பத்தி (NNP):
நிகர தேசிய உற்பத்தி என்பது ஒரு ஆண்டின் பொருளாதாரத்தின் நிகர உற்பத்தியின் மதிப்பாகும். GNPயிலிருந்து தேய்மானத்தின் மதிப்பு முதலீட்டு சொத்தின் மாற்று கழிவு ஆகியவற்றை கழித்த பின் கிடைப்பது நிகர தேசிய உற்பத்தி ஆகும்.
NNP = GNP - தேய்மான கழிவு
5. தனிநபர் வருமானம்:
ஒரு ஆண்டில் ஒரு நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு தனி நபருக்கும் பல வழிகளில் இருந்து கிடைக்கும் மொத்த வருமானம் ஆகும். அவை வட்டியாகவோ, வாடகையாகவோ, கூலியாகவோ இருக்கலாம்.
தனிநபர் வருமானம் = தேசிய வருமானம் + மாற்று செலுத்துதல்கள்
6. தலா வருமானம்:
தலா வருமானம் என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் வசிக்கும் ஒரு நபரின் சராசரி ஆண்டு வருமானம் ஆகும்.
2.
உற்பத்தி முறை என்பது ஒரு நாட்டின் மொத்த உற்பத்தியை கணக்கிடுவது ஆகும். இதனை சரக்கு முறை என்பர். ஒரு குறிப்பிட்ட ஆண்டில் விவசாயம், தொழில் வாணிபம் போன்ற துறைகளிலிருந்து கிடைக்கும் வருமானம் தேசிய வருமானம் ஆகும். இதனை கணக்கீடு செய்யும்போது ஒரு துறையின் வெளியீடு வேறு துறை உற்பத்தியின் உள்ளீடாக அமைய வாய்ப்புள்ளது. இதனை கணக்கில் எடுக்காவிடில் இரண்டு முறை கணக்கில் சேர்ந்து வரும்.
பண்ணை உற்பத்தியின் மதிப்பு கணக்கிடல்:
1. 64 வகை விவசாய பொருள்களின் மொத்த உற்பத்தி மதிப்பிடப்படுகிறது. இது ஒரு ஹெக்டேருக்கு சராசரி உற்பத்தியை கணக்கிட்டு பயிரிடப்பட்ட நிலப்பரப்பால் பெருக்கினால் உற்பத்தியின் அளவு கிடைக்கும்.
2. ஒவ்வொரு பொருளின் மொத்த உற்பத்தியும் சந்தை விலையால் மதிப்பிடப்படுகிறது.
3. எல்லா பயிர்களின் மொத்த உற்பத்தியை எடுத்துக் கொண்டு விவசாயத்துறையின் மொத்த உற்பத்தியின் மதிப்பு கணக்கிடப்படுகிறது.
4. விவசாய உற்பத்தியின் நிகர மதிப்பு கணக்கிடுவதற்கு மொத்த விவசாய உற்பத்தி மதிப்பிலிருந்து விதை, உரம், அங்காடி கட்டணம் சரி செய்தல் தேய்மானம் போன்றவற்றை கழிக்க வேண்டும்.
5. மேலும் மற்ற துறைகளான கால்நடை, காடுகள், மீன் வளர்ப்பு, சுரங்க தொழில், தொழிற்சாலை போன்றவற்றின் மொத்த உற்பத்தி மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றின் மொத்த மதிப்பு கணக்கிடப்படுகிறது.
இவை அனைத்தையும் ஒன்று கூட்டினால் நாட்டின் உற்பத்தி முறையில் தேசிய வருவாயை கணக்கிடலாம்.
3.
சமூக கணக்கிடுதல் மற்றும் துறைகள் :
இம்முறையில் ஒரு நாட்டின் பொருளாதாரம் பல்வேறு துறைகளாகப் பிரிக்கப்படுகிறது. தனிமனிதர்கள்உள்ளடக்கிய ஒரு குழு அல்லது பல நிறுவனங்கள் சேர்ந்த ஒரு குழு முதலானவற்றுக்கு இடையே நடைபெறும் பொருளாதாரப் பரிமாற்றங்களை ஒரு துறை என்கிறோம். ஒரு நாட்டின் பொருளாதாரம் கீழ்க்காணும் துறைகளாகப் பிரிக்கப்படுகிறது. நிறுவனங்கள், குடும்பங்கள், அரசு, வெளிநாட்டு வணிகம், மூலதனத் துறை.
நிறுவனங்கள் :
நிறுவனங்கள் உற்பத்திக் காரணிகளைப் பணியில் அமர்த்தி பண்டங்கள், பணிகளை செய்கின்றன. உற்பத்தி
குடும்பங்கள் :
குடும்பங்கள் தங்கள் உழைப்பினை அளித்து கூலியைப் பெற்று, அதன் மூலம் பண்டங்கள், பணிகளை வாங்குகின்றன. அதாவது ஊதியத்தினைப் பெற்று பண்டங்களை வாங்குகின்றது. நிறுவனங்கள் குடும்பங்களின் பணியைப் பெற்று கூலியைத் தருகின்றன.
அரசு :
அரசுத் துறையில் பல நிலைகள் உள்ளன. கிராமம், வட்டம், மாவட்டம், மாநிலம், மத்திய அரசு என பல நிலைகள் உள்ளன. எடி மற்றும் பீகாக் கூற்றுப்படி, அரசு என்பது "ஒன்று சேர்க்கப்பட்ட மனிதர்கள்" எனக் குறிப்பிடுகின்றனர். வரி, தண்டனை, கட்டணம் மற்றும் கடன் ஆகியவை மூலமாக அரசு நிதியைத் திரட்டி பண்டங்களையும் பணிகளையும் வாங்குகிறது.
வெளிநாட்டு வணிகம் :
ஏற்றுமதி, இறக்குமதிகள் மூலம் கிடைக்கும் வருமானம், வெளிநாட்டுக் கடன்கள், வெளிநாட்டு மூலதன வருமானம், செலுத்துதல்கள் ஆகியவை வெளிநாட்டுத் துறையாகக் கருதப்படுகின்றன.
மூலதனத்துறை :
மூலதனத்துறை சேமிப்பையும் முதலீட்டையும் உள்ளடக்கியது. காப்பீட்டு நிறுவனம், வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் பரிமாற்றங்கள் இதில் அடங்கும். GDPயில் துறைகளின் பங்கை மதிப்பிடுவதற்கு ஒரு நாட்டின் பொருளாதாரமானது முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் துறை எனப் பிரிக்கப்படுகிறது.
4.
5.
நாட்டு வருமானத்தின் முக்கியத்துவம் :
1. நாட்டு வருமானம் கணக்கீட்டின் மூலம், பொருளாதாரத்தில் இருக்கும் பல்வேறு துறைகளின் முக்கியத்துவம் பற்றியும் நாட்டு வருமானத்தில் அத்துறைகளின் பங்களிப்பு பற்றியும் அறிய முடிகின்றது.
2. நாட்டளவிலான பணவியல் கொள்கைகள், பொது நிதிக் கொள்கைகள் ஆகியவற்றை உருவாக்கவும், பொருளாதாரத்தைச் சரியான பாதையில் இட்டுச் செல்லவும் கடைப்பிடிக்க வேண்டிய சரியான வழிமுறைகளைக் கையாளவும் நாட்டு வருமானம் ஆய்வு உதவுகிறது.
3. திட்டமிடுதலுக்கும், திட்டங்களின் விளைவுகளை மதிப்பிடுவதற்கும் நாட்டின் மொத்த வருமானம், உற்பத்தி, சேமிப்பு மற்றும் நுகர்ச்சியின் அளவு ஆகிய புள்ளி விவரங்களை நாட்டு வருமானம் கணக்கீடு அளிக்கின்றது.
4. குறுகிய கால, நீண்ட கால பொருளாதார மாதிரிகளை உருவாக்க நாட்டு வருமானம் கணக்கீடு பயன்படுகிறது.
5. துறைவாரியான பொருளாதார விவரங்களையும், ஒரு நாட்டில் வட்டாரங்களின் வருமானத்தை ஒப்பிடவும், மற்ற நாடுகளின் வருமானத்தோடு ஒப்பிடவும், நாட்டு வருமானம் விவரங்கள் பயன்படுகின்றன.
6. நாட்டு வருமானம் மூலம் தலா வருமானம் கணக்கிடப்படுகிறது.
7. ஒரு நாட்டில் இருக்கும் பல்வேறு உற்பத்தி காரணிகளுக்கான வருமானப் பகிர்வை தெரிந்துகொள்ள நாட்டு வருமானம் பயன்படுகிறது.
8. பேரியல் பொருளாதாரக் காரணிகளான வரி - GDP விகிதம், நடப்புக் கணக்கு பற்றாக்குறை GDP விகிதம், நிதிப்பற்றாக்குறை - GDP விகிதம், கடன் - GDP விகிதம் ஆகியவற்றைக் கண்டறிய உதவுகிறது.
6.
1. மொத்த நிறுவனங்களுக்கு பல்வேறு தொழில் குழுவாக பிரிக்கப்படுகின்றன.
2. உழைப்பாளர் வருமானம் - கூலி சம்பளம் சமூக பாதுகாப்புக்கு முதலாளியின் பங்கு உற்பத்தித் திறன் ஊக்க ஊதியம் போன்றவை.
3. மூலதன வருமானம் - லாபம் ஈட்டி லாப ஈவு மற்றும் ராயல்டி போன்றவை.
4. கலப்பு வருமானம் - விவசாயம் மற்றும் பண்ணை சிறு தொழில் செய்வோர் மற்றும் பிற வேலைகளிலிருந்து கிடைக்கும் வருமானம்.
5. உள்நாட்டு காரணி வருவாய்களுடன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் நிகர வருவாயை கூட்டுவதன் மூலம் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது.
Y = W+r+i+II+(R-P)
W = கூலி
r = வாடகை
i = வட்டி
II = இலாபம்
R = ஏற்றுமதி
P = இறக்குமதி
7.
1. ஏற்கனவே வாங்கிய பொருளை மீண்டும் வாங்குதல்:
ஏற்கனவே வாங்கப்பட்ட கார், இருசக்கர வாகனம், கைபேசி, இயந்திரம் போன்ற பொருள்களை இரண்டாம் முறை வாங்கும்போது ஏற்படும் செலவுகளை தேசிய வருவாய் கணக்கிடலில் சேர்க்கக்கூடாது.
2. பங்கு மற்றும் பத்திரங்கள் வாங்குதல்:
பழைய பங்கு பத்திரங்களை இரண்டாம் நிலை அங்காடிகளில் வாங்கும்போது ஏற்படும் செலவுகள் சேர்க்கக்கூடாது.
3. மாற்று செலுத்து நிலை:
அரசாங்கம் செய்யும் மாற்றுச் செலுத்துதல்களான முதியோர் ஓய்வூதியம் சேர்க்கக்கூடாது.
4. இடைநிலை பொருட்களுக்கு செய்யும் செலவு:
விவசாயிகள் விதை மற்றும் உரம் வாங்க செய்யும் செலவு, தொழிற்சாலைகளுக்கு கச்சாப் பொருட்கள் போன்றவை சேர்க்கப்படக்கூடாது.
8.
தனிநபர் உள்ளடக்கிய ஒரு குழு அல்லது பல நிறுவனங்கள் சேர்ந்த ஒரு குழு போன்றவைகளுக்கு இடையே நடைபெறும் பொருளாதார பரிமாற்றங்களை துறை என்கிறோம். இது பலவகையாக பிரிக்கப்படுகின்றது.
1. நிறுவனங்கள்:
உற்பத்தி காரணிகளை பணியில் அமர்த்தி பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்கின்றன.
2. குடும்பங்கள்:
தங்களின் உழைப்பினை அளித்து கூலியை பெற்று அதன் மூலம் பண்டங்கள் மற்றும் பணிகளை வாங்குகின்றன.
3. அரசு:
வரி, தண்டனை, கட்டணம் மற்றும் கடன் மூலமாக அரசு நிதியை சேர்த்து பண்டங்களையும் பணியையும் வாங்குகிறது.
4. வெளிநாட்டு வாணிபம்:
ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் மூலம் கிடைக்கும் வருமானம்.
5. மூலதன துறை:
சேமிப்பையும் முதலீட்டையும் உள்ளடக்கியது. காப்பீடு, வங்கிகள், நிதி நிறுவனங்கள் இதில் அடங்கும்.
9.
புள்ளிவிவரம் என்பது பொருளாதார வளர்ச்சியை எடுத்துக்காட்டும் கண்ணாடி போன்றது. இதனை சேகரிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. நாட்டின் வளர்ச்சி நிலையை அறிய புள்ளிவிவரம் அவசியமான ஒன்று.
பிரச்சினைகள்:
1. நம்பகத்தன்மையின்மை
2. சேகரிப்பவரின் திறமை குறைவு
3. அர்ப்பணிப்பு இன்மை
போன்றவை புள்ளிவிவரம் சேகரிப்பதில் ஏற்படும் சிக்கல்கள் ஆகும்.
10.
மொத்த தேசிய உற்பத்தி (GNP) என்பது ஒரு நாட்டின் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட முழுமையான பொருட்கள் மற்றும் பணிகளின் மதிப்பு தேசிய உற்பத்தியாகும். இதனுடன் நிகர ஏற்றுமதியின் மதிப்பும் சேர்க்கப்படும்.
GNP = C+I+G+(X-M)+(R-P)
C - நுகர்வு பொருட்கள்
I - உற்பத்தி பொருட்களின் முதலீடு
G - அரசாங்கம் வாங்கும் பண்டம் மற்றும் பணிகள்
(X-M) - ஏற்றுமதி இறக்குமதி வேறுபாடு
(R-P) - காரணி வருவாய் வேறுபாடு
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards