12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள்
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
தொகு அளிப்பின் கூறுகள் யாவை?
2.
"விளைவுத் தேவை" என்றால் என்ன?
3.
'சே' விதியின் எடுகோள்களைப் பட்டியலிடுக.
4.
5.
உடன்பாடில்லா (Frictional) வேலையின்மை பற்றி சிறு குறிப்பு வரைக.
6.
ரொக்க இருப்பு வீதத்தை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?
7.
மூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறன் என்றால் என்ன?
8.
தொகு தேவை என்றால் என்ன?
9.
வேலையின்மை எத்தனை வகைப்படும் அவை யாவை?
10.
தொன்மையியத்தையும் கீன்சியத்தையும் ஒப்பிடுக.(ஏதேனும் ஐந்து)
11.
12.
ADF, ASF க்கு இடையிலான சமநிலையை வரைபடம் மூலம் விவரி.
13.
சேயின் அங்காடி விதியினைத் திறனாய்வு செய்க.
14.
வேலையின்மைகளின் வகைகளை விவரி.
15.
அளிப்பு அதற்கான தேவையை தானே உருவாக்கும் என்ற கருத்தை வெளியிட்டவர்
J.M. கீன்ஸ்
J.S. மில்
J.B. சே
A.C. பிகு
16.
ஆடம் ஸ்மித் "நாடுகளின் செல்வம் பற்றிய இயல்பு & காரணங்கள்" அடங்கிய புத்தகத்தை வெளியிட்ட ஆண்டு _________.
1767
1776
1676
1176
17.
உழைப்பாளர்களின் தேவை அளிப்பில் சமநிலையற்ற தன்மை உள்ள வேலையின்மை _________.
உடன்பாடில்லா வேலையின்மை
கற்றோர் வேலையின்மை
பருவகால வேலையின்மை
தொழில்நுட்ப வேலையின்மை
18.
தொகுத் அளிப்பின் கூறுகள் எத்தனை பகுதிகளைக் கொண்டது?
3
4
1
2
19.
புதிய தொழில்நுட்பம், மூலதன செறிவு காரணமாக தோன்றும் வேலையின்மை
அமைப்புசார் வேலையின்மை
தொழில்நுட்ப வேலையின்மை
பருவகால வேலையின்மை
மறைமுக வேலையின்மை
1.
தொகு அளிப்பின் நான்கு கூறுகளாவன :
1. மொத்த (விரும்பப்படுகிற) நுகர்வுச் செலவு (C)
2. மொத்த (விரும்பப்படுகிற) தனியார் சேமிப்பு (S)
3. நிகர வரிவசூல் (T)
4. தனிமனிதர் (விரும்பப்படுகிற) வெளிநாட்டவர்க்கு (உறவினர் மற்றும் நண்பர்கள்) கொடுக்கின்ற மாற்று செலுத்தல்கள், உதவித்தொகை ஆகியவை. இது Rf (வெளிநாட்டிற்கு வழங்கிய நிவாரண தொகை) என குறிக்கப்படுகிறது.
2.
விளைவுத் தேவை என்பது உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் மீது உண்மையிலேயே செலவு செய்கிற பணத்தின் அளவு ஆகும்.
3.
1. ஒரு தனி வாங்குபவரோ, விற்பவரோ அல்லது உள்ளீடு பொருளோ விலையை மாற்ற முடியாது.
2. முழு வேலை நிலை நிலவும்.
3. உழைப்பு, பண்டங்கள் ஆகியவற்றின் அங்காடியில் நிறைவுப் போட்டி நிலவும்.
4.
5.
1. உழைப்பாளர்களின் தேவை மற்றும் அளிப்பில் சமநிலையற்ற தன்மை நிலவுவதால் தற்காலிக அல்லது பிறழ்ச்சி வேலையின்மை ஏற்படுகிறது.
2. உழைப்பாளர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயராமை, திறமைப் பற்றாக்குறை, இயந்திரங்களில் பழுது ஏற்படுதல், மூலப்பொருட்கள் பற்றாக்குறை முதலான காரணங்களால் உடன்பாடில்லா (பிறழ்ச்சி) வேலையின்மை ஏற்படுகிறது.
6.
1. பேர நோக்கம்
2. முன்னெச்சரிக்கை நோக்கம்
3. ஊக நோக்கம்
7.
புதிய மூலதன பொருளின் செலவைக் காட்டிலும் அதிகமாக எதிர்பார்க்கக்கூடிய விளைவு விகிதம் மூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறன் எனப்படும்.
8.
ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் மேல் குடும்பங்களும், நிறுவனங்களும், அரசு மற்றும் வெளிநாட்டவரும் செய்கின்ற மொத்த செலவு தொகையே தொகு தேவை எனப்படும்.
9.
வேலையின்மை 7 வகைப்படும். அவை:
1. வாணிபச் சூழல் வேலையின்மை
2. பருவகால வேலையின்மை
3. தற்காலிக அல்லது பிறழ்ச்சி அல்லது உடன்பாடில்லா வேலையின்மை
4. கற்றோர் வேலையின்மை
5. தொழில்நுட்ப வேலையின்மை
6. அமைப்புசார் வேலையின்மை
7. மறைமுக வேலையின்மை
10.
| வ. எண் | கீன்ஸியம் | தொன்மையியம் |
| 1. | குறுகிய காலச் சமநிலை | நீண்ட காலச் சமநிலை |
| 2. | சேமிப்பு கெடுதல் | சேமிப்பு நல்லது |
| 3. | பணத்தின் பணி என்பது பரிமாற்றத்திற்கும், சேமிப்பிற்கும் உதவும் | பரிவர்த்தனைக்கு மட்டுமே பணம் உதவும் |
| 4. |
நாட்டின் சிக்கல்களைத் தீர்க்க பேரியல் அணுகுமுறை தேவை. |
நுண்ணியல் அடிப்படையில் பெரிய சிக்கல்களுக்கு தீர்வு காணுதல். |
| 5. | அரசின் தலையீடு உண்டு | தலையிடாக் கொள்கை வலியுறுத்தப்படுகிறது |
| 6. | வட்டி வீதம் மாறிக் கொண்டே உள்ளது. | வட்டி வீதம் மாறாதது. |
11.
12.
கீன்ஸின் வேலைவாய்ப்புக்கோட்பாட்டில் ADF & ASF சமநிலையை விளக்க, குடும்பங்கள் மற்றும் வியாபாரம் ஆகிய இரு துறைகள் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
1. நுகர்வு செலவு தொடர்பான முடிவுகளை குடும்பங்களும், முதலீடு தொடர்பான முடிவுகளை வியாபார நிறுவனங்களும் எடுக்கின்றன.
2. மேலும் நுகர்வுச் சார்பு நேர்கோடாகவும், முதலீடு தன்னிச்சையானது எனவும் கீன்சின் கோட்பாடு ஊகிக்கிறது.
கீன்சின் கோட்பாட்டில் வருமான சமநிலையை நிர்ணயிக்க இரு அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
i. தொகு தேவை, தொகு அளிப்பு அணுகுமுறை.
ii. சேமிப்பு, முதலீடு அணுகுமுறை. மொத்த தேவை, மொத்த அளிப்பு அணுகுமுறை இவ்வரைபடத்தில் விளக்கப்பட்டுள்ளது.
3. தொகு தேவையும், தொகு அளிப்பு 'E' எனும் புள்ளியில் சமநிலை அடைகின்றன.
4. இப்புள்ளியில் வேலைவாய்ப்பு No ஆக இருக்கும். ON1 அளவு வேலைவாய்ப்பில், தொகு அளிப்பு N1 R1 ஆக இருக்கும் ஆனால் M1N2 அளவு உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களால் முடியும்.
5. எதிர்பார்க்கும் இலாபத்தை அடைய வேண்டிய உற்பத்தியின் அளவு M1R1 ஆகும்.
6. இந்த இலாப நிலையில் முதலாளி அதிக உழைப்பாளர்களை வேலைக்கு அமர்த்துவார்.
7. சமநிலை 'E' என்ற புள்ளியை அடைந்த பிறகு உழைப்பாளர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்துவார். ஏனெனில் No நிலைக்குப் பிறகு வேலைவாய்ப்பு அதிகரித்தால் தொகு தேவை, தொகு அளிப்பை விடக் குறைவாக இருக்கும்.
9. ஆகவே வேலைச் சமநிலையை விளக்குவதில் விளைவுத்தேவைக் கருத்து முக்கியப் பங்கு வகுக்கிறது.
13.
J.B.சேயின் சந்தை விதியின் திறனாய்வுகளாவன:
1. கீன்சின் கருத்துப்படி, அளிப்பு அதற்கான தேவையை உருவாக்காது.
2. உற்பத்தி அதிகரிக்கும் அளவிற்கு தேவை அதிகரிக்காவிட்டால் இந்த விதி செயல்படாது.
3. பொருளாதாரத்தில் தானாக சரி செய்து கொள்ளும் அமைப்பு வேலையின்மையைக் குறைக்காது.
4. தனிமனிதர்கள் எதிர்பாராத சூழ்நிலைகளுக்காகவும்,' வணிகர்கள் எதிர்கால நடவடிக்கைகளுக்காகவும் பணத்தை இருப்பாக வைத்திருப்பார்கள் ஆகவே பணம் நடுநிலையாக இருக்காது.
5. சேயின் அங்காடி விதியானது, அளிப்பு தன் தேவையைத் தானே உருவாக்கும் என்ற அடிப்படையில் செயல்படுவதால், அதிக உற்பத்திக்கு வாய்ப்பு இல்லை என்று கூறுகிறது.
6. முதலாளித்துவ நாடுகளில் குறைவான வேலை உள்ளதால் முழு வேலை வாய்ப்புக்கு வாய்ப்பில்லை என்று கீன்சு கூறுகிறார்.
7. அளவுக்கு அதிகமான உற்பத்தியும், அதிக வேலையின்மையும் பல முதலாளித்துவ நாடுகளில் காணப்படுவதால் அரசுத் தலையீடு அவசியம் என கீன்சு கருதுகிறார்.
14.
வேலையின்மை என்பது நல்ல உடல் நலம் உள்ள தனிமனிதர்கள், நிலவுகின்ற கூலி விகிதத்தில் வேலை செய்யத்தயாராக இருப்பவர்கள் அனைவருக்கும். தகுந்த வேலையில்லாத சூழ்நிலை வேலையின்மை ஆகும்.
வணிகச் சுழல் வேலையின்மை:
கீழ்நோக்கிய பகுதியில் ஒரு பொருளாதாரம் இருக்கும் போது நிகழ்கின்ற வேலையின்மைக்கு சுழல் வேலையின்மை என்று பெயர்.
பருவகால வேலையின்மை:
ஓர் ஆண்டில் சில காலங்களில் மட்டும் நிலவும், வேலையின்மைக்கு பருவகால வேலையின்மை என்று பெயர். வேளாண்மை, வேளாண்மை சார்ந்த தொழில்கள் கரும்பு, பருத்தி முதலானவை குறிப்பிட்ட பருவத்தில் மட்டும் நடைபெறும்.
தற்காலிக அல்லது உடன்பாடில்லா (பிறழ்ச்சி) வேலையின்மை :
உழைப்பாளர்களின் தேவை மற்றும் அளிப்பில் சமநிலையற்ற தன்மை நிலவுவதால் தற்காலிக அல்லது பிறழ்ச்சி வேலையின்மை ஏற்படுகிறது.
கற்றோர் வேலையின்மை :
சில நேரங்களில் படித்துக் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு வேலை கிடைப்பது இல்லை. அல்லது பகுதி நேர வேலை செய்கின்றனர். இத்தகைய வேலையின்மைக்கு கற்றோர் வேலையின்மை என்று பெயர்.
தொழில் நுட்ப வேலையின்மை :
புதிய தொழில்நுட்பம், மூலதன செறிவு உடையதாக இருப்பதால், குறைந்த எண்ணிக்கையில் உழைப்பாளர்கள் தேவைப்படுகின்றனர்.
அமைப்புசார் வேலையின்மை :
1. சமூக அமைப்பில் ஏற்படும் பெரிய மாற்றங்களால் அமைப்புசார் வேலையின்மை உருவாகிறது.
2. ஒரு பொருளுக்கான தேவை குறைதல் (eg. Type Machine, Tape recorder, Radio, Camera etc) அல்லது பிற பொருள்களின் தேவை அதிகரித்தல், இடு பொருட்கள் இன்மை, முதலீடு பற்றாக்குறை ஆகியவையும் இவ்வகை வேலையின்மைக்குக் காரணமாகிறது.
மறைமுக வேலையின்மை :
தேவைக்கு அதிகமானவர்கள் ஒரு வேலையில் இருந்தால் அது மறைமுக வேலையின்மையாகும்.
15.
(c)
J.B. சே
16.
(b)
1776
17.
(a)
உடன்பாடில்லா வேலையின்மை
18.
(b)
4
19.
(b)
தொழில்நுட்ப வேலையின்மை
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards