12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 20/01/2020
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
ஒரு வலிமை குறைந்த மின்பகுளியின் 0.10M செறிவுடைய கரைசல் 25oC ல் 1.20% வரை பிரிகையடைகிறது என கண்டறியப்பட்டுள்ளது. அமிலத்தின் பிரிகை மாறிலி மதிப்பை காண்க .
2.
இருமோல் எத்தில் மெக்னீசியம் புரோமைடுடன் மெத்தில் பென்சோயேட்டை வினைப்படுத்தி பின் அமில நீராற்பகுக்க உருவாகும் முதன்மை விளைபொருள் யாது?
3.
வலிநிவாரணியாகவும், காய்ச்சல் மருந்தாகவும் பயன்படும் ஒரு சேர்மத்தின் பெயரைக் குறிப்பிடுக.
4.
இயற்புறப்பரப்பு கவர்தலை காட்டிலும் வேதிப்புறப்பரப்பு கவர்தலின் பரப்பு கவர்தல் வெப்பம் அதிகம். ஏன்?
5.
பின்வரும் குறைபாட்டு நோய்களை உருவாக்கும் வைட்டமின்களின் பெயர்களை எழுதுக.
i) ரிக்கட்ஸ்
ii) ஸ்கர்வி
6.
HClO4 மூலக்கூறின் அமிலத்தன்மைக்கான காரணம் கூறு. ப்ரான்ஸ்டட் – லெளரி கொள்கையின் அடிப்படையில், அதன் இணை காரத்தை கண்டறிக.
7.
படிக அணிக்கோவைத் தளம் என்றால் என்ன?
8.
Mn2+ அயனியில் எத்தனை தனித்த எலக்ட்ரான்கள் உள்ளன? அவை எவ்வாறு அதன் காந்தத் தன்மையை பாதிக்கின்றன?
9.
குளோரினின் பயன்களை எழுது
10.
அதிகளவு குளோரினுடன் அம்மோனியாவின் வினை யாது?
11.
போரிக் அமிலத்தின் மீது சோடியம் ஹைடிராக்சைட்டின் வினை யாது?
12.
N3+3H2 ⟶ 2NH3 என்ற வினையின் வினைவேக சமன்பாட்டை எழுதுக.
13.
அமில வேதிக் கழுவுதல் என்றால் என்ன?
14.
பின்வரும் வினைகளில், ஒவ்வொரு வினைபடு பொருள்களைப் பொருத்து வினை வேகங்களைக் குறிப்பிடுக. வினையின் ஒட்டுமொத்த வினைவகையைக் கண்டறிக.
அ) \(\\ 5{ Br }^{ - }(aq)+Br{ O }_{ 3 }^{ - }(aq)+{ 6H }^{ + }(aq)\longrightarrow 3{ Br }_{ 2 }(l)+3{ H }_{ 2 }O(l)\)
சோதனை மூலம் கண்டறியப்பட்ட வேகவிதி
வினைவேகம் = K[Br-][BrO3-][H+]2
ஆ) CH3CHO(g)\(\overset { \Delta }{ \longrightarrow } \)CH4(g)+CO(g) சோதனை மூலம் கண்டறியப்பட்ட வேகவிதி
வினைவேகம் = K[CH3CHO]\(\frac {3}{2}\)
15.
[CuCI4]2- சாத்தியமானது ஆனால் [Cul4]2- சாத்தியமற்றது ஏன்?
16.
ஆக்டினாய்டுகள் என்றால் என்ன? மூன்று உதாரணங்கள் தருக.
17.
ஏன் ஃபுளுரின் எப்போதும் -1 ஆக்சிஜனேற்ற நிலையினைப் பெற்றுள்ளது? விளக்குக.
18.
மந்த இணை விளைவு என்றால் என்ன?
19.
கரி மற்றும் CO ஆகிய இரண்டினுள் ZnO வை ஒடுக்க, சிறந்த ஒடுக்கும் காரணி எது? ஏன்?
20.
தூய உலோகங்களை அவைகளின் தாதுக்களிலிருந்து பிரித்தெடுக்கும் பல்வேறு படிநிலைகள் யாவை?
21.
அறுங்கோண நெருங்கிப் பொதிந்த அமைப்பினை கனச்சதுர நெருங்கிப் பொதிந்த அமைப்பிலிருந்து வேறுபடுத்துக.
22.
23.
பின்வரும் வினைவரிசையில் உள்ள A,B மற்றும் C ஆகிய சேர்மங்களை கண்டறிக
i) \(C_6H_5NO_2\overset{Fe/HCl}\longrightarrow A\overset{HNO_2}{\underset{273K}\longrightarrow} B\overset{C_6H_5OH}\longrightarrow C\)
ii) \(C_6H_5N_2Cl\overset{CuCN}\longrightarrow A\overset{H_2O/H^+}\longrightarrow B\overset{NH_3}\longrightarrow C\)
iii) 
iv) \(CH_3NH_2\overset{CH_3Br}\longrightarrow A\overset{CH_3COCl}\longrightarrow B\overset{B_2H_6}\longrightarrow C\)
v) 
vi) 
vii) \(CH_3CH_2NC\overset{HgO}\longrightarrow A\overset{H_2O}\longrightarrow B\overset{i) NaNO_2/HCl}{\underset{ii) H_2O}\longrightarrow}\)
24.
C2H3N எனும் மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட சேர்மம் (A) ஆனது அமில நீராற்பகுப்பில் (B)ஐ தருகிறது, (B) ஆனது தயோனைல் குளோரைடுடன் வினைப்பட்டு சேர்மம் (C) ஐ தருகிறது. பென்சீன், நீரற்ற AlCl3 முன்னிலையில் (C) உடன் வினைப்பட்டு சேர்மம் (D) ஐ தருகிறது. மேலும் (D) Zn/Hg மற்றும் அடர் HCl ஆல் ஒடுக்கமடைந்து சேர்மம் (E) ஐ தருகிறது. (A), (B), (C), (D) மற்றும் (E) ஆகியவற்றை கண்டறிக. சமன்பாடுகளை எழுதுக.
25.
பின்வரும் அணைவுச் சேர்மங்களை அவைகளின் மோலார் கடத்துத் திறனின் ஏறு வரிசையில் எழுதுக.
(i) Mg[Cr(NH3)(Cl)5]
(ii) [Cr(NH3)5Cl]3[CoF6]2
(iii) [Cr(NH3)3Cl3]
1.
கொடுக்கப்பட்டது \(\alpha\) = 1.20% = \(\frac{1.20}{100}=1.2\times10^{-2}\)
\(K_{a}=\alpha^{2}c\)
\(=(1.2\times10^{-2})^{2}(0.1)=1.44\times10^{-4}\times10^{-1}\)
= \(1.44\times10^{-5}\)
2.

3.
ஆஸ்பிரின்
4.
வேதிப்புறப்பரப்பு கவர்தலில், வாயுமூலக்கூறுகள் புறப்பரப்புடன் வேதிப்பிணைப்பு உருவாதலால் மூலக்கூறுகள் புறப்பரப்பில் ஈர்ப்பு விசைகளால் பிணைக்கப்பட்டுள்ளன. வலிமையான பிணைப்பு உருவாதலால், சுமார் 400 kJ/mol பரப்புக் கவர்தல் வெப்பமாக வெளியிடப்படுகிறது. இயற்பரப்பு கவர்தலில் உள்ள வாண்டர்வால்ஸ் விசைகளைக் காட்டிலும் வேதிப்புறப்பரப்புக்கவர்தலில் உள்ள வேதிபிணைப்புகள் மிகவும் வலிமை வாய்ந்தவையாகும்.
5.
| நோய் | குறைபாடு வைட்டமின் |
| ரிக்கட்ஸ் | வைட்டமின் -D (கோலேகால்சிஃபெரால் D3 எர்கோகால்சிஃபெரால்-D2) |
| ஸ்கர்வி | வைட்டமின்-C (அஸ்கார்பிக் அமிலம்) |
6.
\(\mathrm{HClO}_4 \rightleftharpoons \mathrm{H}^{+}+\mathrm{ClO}_4^{-}\)
ப்ரான்ஸ்டட் அமிலம் புரோட்டான் இணைகாரம் HCIO4 ஆனது ஒரு புரோட்டானை வழங்கவல்லது. எனவே HCIO4 ஓர் அமிலம். அதன் இணைகாரம் CIO4-ஆகும்.
7.
முப்பரிமாண வடிவமைப்பில் அணுக்கள், மூலக்கூறுகள் அல்லது அயனிகள் ஒன்றினைப் பொறுத்து மற்றொன்று படிகம் முழுவதும் வரையறுக்கப்பட்ட சீராக காணப்படும் ஒழுங்கமைப்பு படிக அணிக்கோவைத் தளம் எனப்படும்.
8.
(i) Mn2+ ன் எலக்ட்ரான் அமைப்பு 3d5; தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை n = 5;
(ii) எனவே Mn2+ அயனி பாராகாந்தத் தன்மையுடையது
(iii) புற காந்தப் புலத்தினால் ஈர்க்கப்படுகின்றன
9.
குளோரினின் பயன்கள்:
(i) குடிநீரைத் தூய்மையாக
(ii) பருத்தி துணிகள், காகிதம் மற்றும் ரேயான் ஆகியவற்றை வெளுக்க
(iii) தங்கம் மற்றும் பிளாட்டினம் ஆகியவற்றை பிரித்தெடுக்க
10.
அதிகளவு குளோரினுடன் அம்மோனியா வினைபுரிந்து வெடிக்கும் தன்மையுடைய நைட்ரஜன் ட்ரைக் குளோரைடைத் தருகிறது.
2NH3 + 6Cl2 ⟶ 2NCl3 + 6HCl
11.
போரிக் அமிலம், சோடியம் ஹைடிராக்சைடுடன் வினைபுரிந்து சோடியம் மெட்டா போரேட் மற்றும் சோடியம் டெட்ரா போரேட்டைத் தருகிறது
12.
வினை வேகம் \(\\ =-\frac { d[{ N }_{ 2 }] }{ dt } =-\frac { 1 }{ 3 } \frac { d\left[ { H }_{ 2 } \right] }{ dt } =+\frac { 1 }{ 2 } \frac { d[{ NH }_{ 3 }] }{ dt } \)
13.
1. ZnS, PbS போன்ற சல்பைடு தாதுக்கள் சூடான நீர்ம கந்தக அமிலத்துடன் வினைப்படுத்தப்படுகிறது.
2. இச்செயல்முறையில் கரையாத சல்பைடு தாதுவானது கரையும் சல்பேட்டாகவும், உலோக சல்பராகவும் மாற்றமடைகிறது.
2ZnS(s) + 2H2SO4(aq) + O2(g) ➝ 2ZnSO4(aq) + 2S(s) + 2H2O
14.
Br- ஐப் பொருத்து முதல் வகை மேலும் BrO3- ஐப் பொருத்து இரண்டாம் வகை எனவே, வினையின் ஒட்டுமொத்த வினைவகை 1 + 1 + 2 = 4
ஆ) அசிட்டால்ஹைடைப் பொருத்த வரையில் வினைவகை \(\frac{3}{2}\). ஒட்டு மொத்த வினை வகையின் மதிப்பும் \(\frac{3}{2}\)ஆகும்.
15.
(i) குளோரின் அணுவின் உருவளவு சிறியது. எனவே [CuCI4]2- சாத்தியமானது. ஆனால் அயோடின் அணுவின் உருவளவு பெரியது. எனவே [CuI4]2- சாத்தியமற்றது.
(ii) I- அயனி cu2+ அயனியை ஒடுக்குவதால் குப்ரிக் அயோடைடு, குப்ரஸ் அயோடைடாக மாறுகிறது. எனவே [Cul4]2- சாத்தியமற்றது. ஆனால் Cl- ஆல் இவ்வாறு ஒடுக்கம் நடைபெறவில்லை. எனவே [CuCl4]2- சாத்தியமானது.
16.
ஆக்டினியத்தினைத் தொடர்ந்து வரும் 14 தனிமங்கள். அதாவது தோரியம் (Th) முதல் லாரன்சீயம் (GoLr) வரையிலான தனிமங்கள் ஆக்டினாய்டுகள் என அழைக்கப்படுகின்றன.
உதாரணம்: ஆக்டினியம், யூரேனியம், லாரன்சியம்.
17.
1. ஃபுளுரின் அதிக எலக்ட்ரான் கவர்திறன் கொண்ட தனிமமாகும். எனவே இது நேர் ஆக்ஸிஜனேற்ற நிலையை பெற்றிருப்பதில்லை.
2. ஃபுளுரினில் ஒரு தனித்த இணையுறாத எலக்ட்ரான் உள்ளதால் இது 1 ஆக்ஸிஜனேற்ற நிலையைப் பெற்றுள்ளது.
18.
இடைநிலைத் தனிமங்களைத் தொடர்ந்து வரும் கனமான தனிமங்களில் உள்ள வெளிக்கூட்டு ns2 எலக்ட்ரான்கள் மந்தத்தன்மை கொண்டவைகளாக உள்ளன மேலும் பிணைப்பில் பங்கெடுக்க இயல்பாக முனைவதில்லை. இந்த விளைவு மந்த இணை விளைவு என அறியப்படுகிறது. 14,15,16 ஆம் தொகுதிகளிலும் இந்த விளைவு காணப்படுகிறது.
19.
1. கரி மற்றும் CO ஆகிய இரண்டினுள் ZnO வை ஒடுக்க சிறந்த ஒடுக்கும் காரணி கரி (கார்பன்) ஆகும்.
2. ஒடுக்க வெப்பநிலையில் ஜிங்க், கார்பனுடன் சேர்ந்து உலோக கார்பைடினை உருவாக்காது. எனவே கார்பன் ஒடுக்கும் காரணியாக பயன்படுகிறது.
ZnO(S) + C ➝ Zn(S) + CO(g) ↑
3. எலிங்கம் வரைபடத்தில், ஜிங்க் ஆக்சைடு உருவாதலுக்கான வரைகோடு கார்பனுக்கு மேல் இடம் பெற்றுள்ளது. எனவே CO ஆனது ZnO ஐ விட அதிக நிலைப்புத் தன்மை உடையது. எனவே ZnO வை ஒடுக்கமடையச் செய்வதற்கு கார்பனை ஒடுக்கும் காரணியாக பயன்படுத்த இயலும். ஒடுக்க வினையின்போது ZnO விலிருந்து ஆக்ஸிஜன் ஒடுக்கும் காரணி கார்பனுடன் இணைந்து CO வை உருவாக்குகிறது.
20.
தூய உலோகங்களை அவைகளின் தாதுக்களிலிருந்து பிரித்தெடுக்கும் பல்வேறு படிநிலைகள்:
i. தாதுக்களை அடர்ப்பித்தல்
ii. பண்படா உலோகத்தைப் பிரித்தெடுத்தல்
iii. பண்படா உலோகத்தைத் தூய்மையாக்கல்
21.
| வ.எண் | hcp அமைப்பு | ccp அமைப்பு |
| 1 | aba அமைப்பானது, அறுங்கோண நெருங்கிப் பொதிந்த அமைப்பு (hcp) என அழைக்கப்படுகின்றது. | abc...... என்ற அமைப்பில் அடுத்தடுத்த அடுக்குகளால் உருவாக்கப்படும் கனச்சதுர நெருங்கிப்பொதிந்த அமைப்பு (ccp) என அழைக்கப்படுகிறது. |
| 2 | இரண்டாவது அடுக்கில் காணப்படும் இடைவெளிகளின் மீது முதல் அடுக்கான 'a' வை ஒத்திருக்கும். | இரண்டாவது அடுக்கின் மேல், எண்முகித்துளைகளில் பொருந்துமாறு மூன்றாவது அடுக்கின் கோளங்களை அடுக்கலாம். |
| 3 | மூன்றாவது அடுக்கில் உள்ள கோளங்கள் இரண்டாவது அடுக்கில் காணப்படும் நான்முகித் துளைகளை மறைக்கும் வகையில் அமைந்துள்ளன | மூன்றாவது அடுக்கானது முதல் இரண்டு அடுக்குகளான (a) மற்றும் (b) ஆகியவற்றிலிருந்து மாறுபட்டிருக்கும். |
22.

23.
24.
25.
i) \(
\mathrm{Mg}\left[\mathrm{Cr}\left(\mathrm{NH}_3\right) \mathrm{Cl}_5\right] \rightleftharpoons \mathrm{Mg}^{2+}+\left[\mathrm{Cr}\left(\mathrm{NH}_3\right)_5 \mathrm{Cl}_5\right]^{2-} \) (2 அயனிகள்)
ii) \(\left[\mathrm{Cr}\left(\mathrm{NH}_3\right)_5 \mathrm{Cl}\right]_3\left[\mathrm{CoF}_6\right]_2 \rightleftharpoons\left[\mathrm{Cr}\left(\mathrm{NH}_3\right)_5 \mathrm{Cl}\right]_3^{6+}+\left[\mathrm{CoF}_6\right]_2^{6-}\) (2 அயனிகள்)
iii) [Cr(NH3)3 Cl3] - அயனியுறுவதில்லை.
iii > ii > i
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards