12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test

1.
ஐ.நா சபையின் முதல் பொதுச் செயலாளர் டிரிக்வே லீ ________ சேர்ந்தவராவார்.
பர்மா
ஜப்பான்
சிங்கப்பூர்
நார்வே
2.
ஐக்கிய நாடுகள் சபை 1945 அக்டோபர் 24இல் _______ உருவானது.
100 உறுப்பினர்களுடன்
72 உறுப்பினர்களுடன்
51 உறுப்பினர்களுடன்
126 உறுப்பினர்களுடன்
3.
கூற்று: பன்னாட்டு சங்கம் ஒரு தோல்வி என்பதை இரண்டாம் உலகப்போர் நிரூபித்தது.
காரணம்: மற்றொரு போர் ஏற்படா வண்ணம் தடுக்க ஒரு சக்திவாய்ந்த அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் உணர்ந்தனர்
கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
கூற்று சரி. காரணம் தவறு.
கூற்று தவறு. காரணம் சரி.
4.
லெபனானில் அமெரிக்கா தலையிட்டதை _______ எதிர்த்தது
துருக்கி
ஈராக்
இந்தியா
பாகிஸ்தான்
5.
______ பாக்தாத் உடன் ஒப்பந்தத்தின் குறிக்கோளாக இருந்தது.
மத்திய கிழக்கில் இங்கிலாந்தின் தலைமையைப் பாதுகாப்பது
அப்பகுதி சார்ந்த எண்ணெய் வளங்களைச் சுரண்டுவது
கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கைத் தடுப்பது
ஈராக் அரசை வலிமை குன்றச் செய்வது
6.
பெரெஸ்ட்ரோயிகா கோட்பாட்டின் பொருள் சுருக்கத்தைக் கூறுக.
7.
ஷூமன் திட்டம் என்றால் என்ன ?
8.
'கோமின்ஃபார்ம்’ குறித்து நீங்கள் அறிவதென்ன?
9.
ஐ.நா சபையில் நிறைவேற்றப்பட்ட “அமைதிக்காக இணைகிறோம்” எனும் தீர்மானத்தின் சிறப்பினைக் குறிப்பிடவும்
10.
அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகியவற்றின் உளவு நிறுவனங்களைக் குறிப்பிடவும்.
11.
நேட்டோவைப் போல ஏன் சீட்டோ (SEATO) பிரபலமடையவில்லை ?
12.
13.
நேட்டோ உருவாக்கப்பட்டதின் பின்னணியைக் கண்டறியவும்.
14.
ஐ.நா சபையின் சாசனம் முடிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பல்வேறு கட்டங்கள் குறித்து எழுதுக
15.
அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்பட்ட நேட்டோவுக்கான பதில் நடவடிக்கையே சோவியத் ரஷ்யாவின் வார்சா உடன்படிக்கை விளக்குக.
16.
போரிஸ் யெல்ட்சினின் அரசியல் வளர்ச்சியைக் குறிப்பாக சோவியத் யூனியனின் வீழ்ச்சியில் அவர் வகித்த பங்கின் மீது கவனம் குறித்து விவரிக்கவும்.
17.
“பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் தொடர்பு கொண்டுள்ள பிரச்சனைகளில் ஐ.நா சபை மௌனமான பார்வையாளராகவே இருந்தது “பனிப்போர் காலத்து அனுபவங்களின் வாயிலாக இக்கூற்றை விளக்கமாக எடுத்துரைக்கவும்
18.
19.
அணிசேரா இயக்கத்தின் இலக்குகளையும் நோக்கங்களையும் கோடிட்டுக் காட்டவும்.
1.
(d)
நார்வே
2.
(c)
51 உறுப்பினர்களுடன்
3.
(a)
கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
4.
(b)
ஈராக்
5.
(c)
கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கைத் தடுப்பது
6.
1.1985 ல் மிகைல் கோர்பசேவ் சோவியத் ரஷ்யாவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
2.1986ல் கமியூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் அரசியல் பொருளாதார மறுகட்டமைப்பை அவசியம் குறித்து விளக்கினார்.
3.பெரெஸ்ட்ரோயிகாவின் மூலம் அவர் பல நிறுவனங்களின் மீதிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தினார்.
4.விவசாயிகளும் உற்பத்தியாளர்களும் வணிகர்களும் எதை உற்பத்தி செய்வது. எவ்வளவு உற்பத்தி செய்வது எந்த விலையில் விற்பது என முடிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
7.
1.1950 மே 9 ல் ராபர்ட் ஷூமன் ஒரு திட்டத்தை அறிவித்தார்.
2.பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் இடையே நிலக்கரி மற்றும் எஃகு ஆகியவற்றின் கூட்டு உற்பத்தியை நிர்வகிக்க ஆணையம் அமைக்க வேண்டும் என முன்மொழிந்தார்.
3.பொருளாதார ஒருங்கிணைப்புக்கான இத்திட்டம் பரஸ்பர ஆர்வத்தை உருவாக்கியது.
8.
1.மார்ஷல் திட்டத்திற்குப் பதிலளிக்கும் வகையில் சோவியத் ரஷ்யா கோமின்ஃபார்ம் என்ற அமைப்பை 1947 ல் உருவாக்கியது.
2.ஐரோப்பிய நாடுகளின் அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
3.கம்யூனிஸ்ட் அல்லாத நாடுகளுடனான வணிக உறவுகளை தடுத்தது.
9.
1.அமெரிக்காவின் முன்முயற்சியில் ஐ.நா. பொது அவை அவசரமாக கூடி அமைதிக்காக ஒன்றுபடுகிறோம் என்று தீர்மானத்தை நிறைவேற்றியது.
2.பாதுகாப்பு சபையானது ஒரு நெருக்கடியில் உடன்பாட்டை எட்ட முடியாவிட்டால் பொது அவை இராணுவத்தை பயன்படுத்தும்.
3.இது சட்டத்திற்கு புறம்பானது என சோவியத் ரஷ்யா நினைத்தது.
10.
1.அமெரிக்காவின் உளவு நிறுவனம் மத்திய புலனாய்வு முகமை (Central Intelligence Agency -CIA)1947-இல் உருவாக்கப்பட்டது.
2.சோவியத் யூனியன் உளவு நிறுவனம் KGB(Komitet Gosudarstvennoy Bezopasnosti or Committee for National Security)1954 இல் உருவாக்கப்பட்டது.
11.
1.1954 ல் அமெரிக்கா,பிரான்ஸ்,கிரேட் பிரிட்டன்,நியூசிலாந்து ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ்,தாய்லாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உடன்படிக்கை எனும் அமைப்பை நிறுவின .
2.பிலிப்பைன்ஸ்,தாய்லாந்து தவிர ஏனைய தென்கிழக்கு ஆசிய நாடுகள் இவ்வுடன்படிக்கையில் பங்கேற்க மறுத்து விட்டன.
3.சீட்டோ ஒரு ஆலோசனை மன்றமாக மட்டுமே செயல்பட்டது.
4.வியட்நாம் போருக்குப் பிறகு 1977 ல் சீட்டோ கலைக்கப்பட்டது.
12.
13.
1.அமெரிக்காவுடன் நட்புறவு கொண்டிருந்தாலும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்றே உணர்ந்தனர்.
2.எனவே மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஒரு கூட்டுப் பாதுகாப்புத் தீர்வை ஏற்படுத்திக் கொள்வதில் விருப்பம் கொண்டன.
3.1948 ல் பிரஸ்ஸல்ஸ் உடன்படிக்கை கையெழுத்தானது.
4.இவ்வுடன்படிக்கை இராணுவ,அரசியல் பொருளாதார மற்றும் பண்பாட்டுத் துறைகளில் கூட்டுச் செயல்பாட்டுக்கு வழிவகுத்தது.
5.சில காலங்களுக்குப் பின்னர் அமெரிக்கா,இத்தாலி,கனடா,ஐஸ்லாந்து,டென்மார்க் நார்வே, அயர்லாந்து மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகள் பிரஸ்ஸல்ஸ் உடன்படிக்கை நாடுகளுடன் இணைந்து நேட்டோ அமைப்பை உருவாக்கின.
14.
1.வாஷிங்டன் நகரில் உள்ள டம்பர்டன் ஓக்ஸ் எனும் மாளிகையில் சீனா,சோவியத் யூனியன் ,அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடி உலக அமைப்புக்கான செயல் திட்டத்தை உருவாக்கினர்.
2.1943 ல் மாஸ்கோ பிரகடனம் பன்னாட்டு அமைப்பு உருவாவதின் அவசியத்தை அங்கீகரித்தது.
3.1945 யால்டா மாநாட்டிலும் பாதுகாப்பு சபையில் வாக்களிக்கும் முறை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
4.1945 ஏப்ரல் மாதம் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டில் ஐ.நா.சபையின் சாசனம் இறுதி செய்யப்பட்டது.
15.
1.மேற்கு ஜெர்மனி நேட்டோ அமைப்பில் உறுப்பினரானதை ஒரு நேரடி அச்சுறுத்தலாகப் பார்த்த ரஷ்யா எதிர் நடவடிக்கைகளை கொண்டது.
2.1955 மே மாதத்தில் சோவியத் ரஷ்யாவும் அதன் ஏழு ஐரோப்பிய நட்பு நாடுகளும் பரஸ்பர நட்பு.ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி ஒப்பந்தம் எனும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
3.போலந்தின் தலைநகரான வார்சாவில் கையெழுத்தானதால் வார்சா ஒப்பந்தம் எனப் பெயரிடப்பட்டது.
4.இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் சோவியத் யூனியன் ,அல்பேனியா போலந்து,ருமேனியா,ஹங்கேரி,கிழக்கு ஜெர்மனி,செக்கோஸ்லோவாக்கியா மற்றும் பல்கேரியா ஆகும்.
16.
1.போரிஸ் யெல்ட்சின் (1931-2007) இல் பொதுவுடமைக் கட்சியில் சேர்ந்த இவர் 1968 இல் கட்சியின் முழுநேர ஊழியரானார்.
2.எழுபதுகளில் பரவலாக அறியப்பட்டவரான இவர் கட்சியில் முக்கியப் பதவிகளை வகிக்கத் தொடங்கினார்.
3.கோர்பசேவ் பதவிக்கு வந்த பின்னர் அவர் மாஸ்கோ கட்சி அமைப்பிலுள்ள ஊழல்களைக் களைவதற்காக போரிஸ் யெல்ட்சினை (1985) தேர்ந்தெடுத்தார்.
3.1986 இல் யெல்ட்சின் பொலிட்பீரோவின் (சோவியத் யூனியன் உயர்மட்ட கொள்கை முடிவு செய்யும் அமைப்பு) உறுப்பினராக உயர்த்தப்பட்டார்.
4.விரைவில் அவர் மாஸ்கோவின் மேயராக நியமிக்கப்பட்டார்.
5.கட்சி கூட்டங்கள் சீர்திருத்தப் பணிகள் மிக மெதுவாக நடைபெறுவதாக இவர் விமர்சனம் செய்ததால் கோர்பசேவின் எதிர்ப்பைச் சம்பாதித்தார்.
6.நிர்வாகம் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும்.பொருளாதாரம் சீர்திருத்தப்பட வேண்டும் எனும் கருத்துக்களை அவர் முன்வைத்தால் சோவியத் வாக்காளர்களிடையே பிரபலமானார்.
7.1989 மார்ச்சில் சோவியத் யூனியனின் புதிய பாராளுமன்றமான மக்கள் பிரதிநிதிகள் சபையில் ஒரு இடத்தைப் பெறுவதில் வெற்றி பெற்றார்.
8.1990 மே 29 இல் கோர்பசேவின் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
9.சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் 1991 இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவரானார்.
17.
1.1945 முதல் 1991 வரையிலான காலப்பகுதியில் வல்லரசுகளின் வெளியுறவுக் கொள்கைகளைப் பனிப்போரே வரையறை செய்தது.
2.அமெரிக்கா தனது பொருட்களுக்கான திறந்தவெளி சந்தையை மேம்படுத்தவும் பொதுவுடைமைத் தத்துவத்தின் பரவலைக் கட்டுப்படுத்தவும் விரும்பியது.
3.மற்றொருபுறத்தில் சோவியத் ரஷ்யா பொதுவுடைமைத் தத்துவத்தைப் பரப்பவும்,தனது கோட்பாடுகளுடன் இணைந்து செல்லும் எல்லைப்புற நாடுகளுடன் நட்புணர்வைப் பேணவும் விருப்பம் கொண்டது.
4.தங்களது குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கு இவ்விரு சக்திகளும் ஆறு முக்கிய உத்திகளைக் கையாண்டன.
5.அவை பொருளாதார உதவி,இராணுவ ஒப்பந்தங்கள்,பரப்புரை செய்தல் உளவறிதல் நேரடியாக மோதாமல்,மோதலின் விளிம்புரை செல்லுதல் மற்றும் மறைமுகப் போர் ஆகியவையாகும்.
6.ஐக்கிய நாடுகள் சபையின் உதயமும் பனிப்போரின் தொடக்கமும் ஒரே சமயத்தில் நடைபெற்றன.
7.இக்காலகட்டத்தில் போர்களைத் தடுப்பதில் ஐ.நா.சபை முக்கியப் பங்காற்றியது.
8.ஆனால் பாதுகாப்பு சபையின் நிரந்தர ஐ.நா.சபை முக்கியப் பங்காற்றியது.
9.ஐ.நா.சபை ஒரு இராணுவத்தைப் பெற்றுள்ளது.அது ஐ.நா.அமைதி காக்கும் படை என அறியப்படுகிறது.
18.
19.
1.அடிப்படை மனித உரிமைகளை மதித்தல்,ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் கொள்கைகளையும் நோக்கங்களையும் மதித்தல்.
2.அனைத்து நாடுகளின் இறையாண்மையையும் அவற்றின் எல்லைப்புற ஒருமைப்பாட்டையும் மதித்தல்.
3.சிறியவை,பெரியவை என்றில்லாமல் அனைத்து இனங்களும்,அனைத்து நாடுகள் சமம் என அங்கீகரித்தல்.
4.அடுத்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமலும் குறுக்கீடு செய்யாமலும் இருத்தல்.
5.ஐ.நா சபையின் சாசனத்திற்கு இணங்க ஒவ்வொரு நாடும் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையைப் பெற்றுள்ளதை மதித்தல்.
6.வல்லரசு நாடுகளில் ஏதாவது ஒன்றின் குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக கூட்டு பாதுகாப்பு உடன்படிக்கைகளை பயன்படுத்தாதிருத்தல்.
7.எந்த நாடாக இருந்தாலும் அதன் அரசியல் சுதந்திரம், எல்லைப்புற ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு அச்சத்தை ஏற்படுத்தும்,இராணுவ நடவடிக்கைகள்,வலியச்சென்று தாக்குதல் போன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்தல்.ஒரு நாடு மற்ற நாடுகளுக்கு எதிராக நெருக்கடிகளை தருதல் என்பதைப் பயன்படுத்தக்கூடாது.
8.அனைத்துப் பன்னாட்டுப் பிரச்சனைகளுக்கும் அமைதியான வழியில் தீர்வு காணப்பட வேண்டும்.பேச்சு வார்த்தைகள்,சமாதானம்,நடுவர் தீர்ப்பு,சட்டங்களின் வழியிலான தீர்ப்பு அல்லது சம்பந்தப்பட்ட இரு நாடுகளும் விரும்புகிற ஐ.நா சபை சாசனத்திற்கு இணக்கமான,வழிகள் ஆகியவற்றின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும்.
9.பரஸ்பர அக்கறை,ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துதல்.
10.நீதி மற்றும் பன்னாட்டு கட்டுப்பாடுகளுக்கு மதிப்பளித்தல்.
11.பனிப்போரின்போது அணிசேரா இயக்கம் அமெரிக்க,சோவியத் யூனியன் ஆகிய இரு அதிகார முகாம்களுக்கு ஒரு மாற்றாகச் செயல்பட்டது.சோவியத் யூனியனின் சரிவோடு அணிசேரா இயக்கம் தேவையற்றதானது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards