12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test

1.
ஜெர்மானியப் படைகள் முதல் பின்னடைவைச் சந்தித்தது _______ என்னுமிடத்தில் ஆகும்.
போட்ஸ்டாம்
எல் அலாமின்
ஸ்டாலின்கிராட்
மிட்வே
2.
ஜெர்மன் தேசத்திற்கு தொடர் சொற்பொழிவுகளை வழங்கியவர் ________ ஆவார் .
ஜோஹன் வான் ஹெர்டர்
பிரைட்ரிக் ஷெலிகெல்
J.G. ஃபிக்ட்
ஆட்டோ வான் பிஸ்மார்க்
3.
கூற்று: மக்கள் உரிமை சாசன இயக்கம் ஒரு கலவரமோ, புரட்சியோ அல்ல.
காரணம்: அது தொழிலாளர் வர்க்கத்தின் கட்டுப்படுத்தப்பட்ட இயக்கமாகும்.
கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்றும், காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
கூற்று சரி. காரணம் தவறு.
கூற்று தவறு. காரணம் சரி.
4.
கூற்று: கற்பனைவாத சோஷலிஸ்டுகள் உற்பத்திக் கருவிகளை பொதுவில் கொண்ட மாதிரி சமூகங்களைப் பரிந்துரைத்தனர் .
காரணம்: அவர்கள் வறுமையும், வேலையில்லா திண்டாட்டமும் ஒழிந்த சோஷலிச சமூகத்தை வளர்த்தெடுக்கும் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தனர் .
கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
கூற்று சரி. காரணம் தவறு.
கூற்று தவறு. காரணம் சரி
5.
சீனாவிடமிருந்து மஞ்சூரியாவை ஜப்பான் எந்த ஆண்டு படையெடுத்து கைப்பற்றியது?
1931
1932
1933
1934
6.
கீழ்க்காண்பனவற்றுள் இரண்டாம் உலகப்போர் உருவாக எது காரணமாக இருக்கவில்லை?
ஜெர்மனியோடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் நீதியற்ற தன்மை
பன்னாட்டு சங்கத்தின் தோல்வி
1930களில் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தம்
காலனிய நாடுகளில் ஏற்பட்ட தேசிய விடுதலை இயக்கங்கள்
7.
______ தொடக்கத்தில் செயின்ட் டோமிங்கோ என அறியப்பட்டது.
மெக்சிகோ
பனாமா
ஹைட்டி
ஹவானா
8.
9.
கீழ்க்காண்பனவற்றுள் வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தின் பகுதியாக கருதப்படாதது எது ?
ஜெர்மனி அல்சேஸ் மற்றும் லொரைன் பகுதிகளை பிரான்சிடம் ஒப்படைக்க வேண்டும்.
சார் பள்ளத்தாக்கு பிரான்சிற்கு வழங்கப்பட வேண்டும்
ரைன்லாந்தை தோழமை நாடுகள் ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும்
டான்சிக் போலந்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட வேண்டும்
10.
1879ஆம் ஆண்டில் _______ கட்டண சட்டத்தை இயற்றியது.
ஜெர்மனி
பிரான்ஸ்
பிரிட்டன்
அமெரிக்க ஐக்கிய நாடு
11.
கூற்று : கொள்ளை நோய்க்கான காரணங்களை விளக்க முடியாததால் கொள்ளை நோய் தேவாலயத்தின் நிலையை பலவீனப்படுத்தியது
காரணம் : போப்பாண்டவரின் அதிகாரம் பெரும் சவால்களை எதிர் கொண்டது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
கூற்று சரி காரணம் தவறு
கூற்று தவறு காரணம் சரி.
12.
கீழ்க்கண்ட போப்பாண்டவர்களில் இத்தாலிய மறுமலர்ச்சிக்கு ஆதரவாகச் செயல்படாதவர் யார்?
ஐந்தாம் நிக்கோலஸ்
இரண்டாம் ஜூலியஸ்
இரண்டாம் பயஸ்
மூன்றாம் பால்
13.
கீழ்க்கண்டவற்றில் எது சுதந்திரமான வர்த்தக நகரம் இல்லை?
நூரெம்பெர்க்
ஆன்ட்வெர்ப்
ஜெனோவா
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்
14.
டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் எப்போது அமைக்கப்பட்டது?
1905
1921
1945
1957
15.
இந்திய அரசாங்கம் __________ வகையான மேம்பாட்டிற்காக உறுதி பூண்டுள்ளது.
முதலாளித்துவ
சமதர்ம
தெய்வீக
தொழிற்சாலை
16.
1929 டிசம்பர் 31 இல் எங்கு முதலில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது?
டெல்லி
மும்பை
லாகூர்
லக்னோ
17.
தக்லா என்ற மலைப்பகுதியில் சீனப்படைகள் எப்போது தாக்குதல் நடத்தின?
1962, செப்டம்பர் 8
1962, செப்டம்பர் 18
1965, செப்டம்பர் 8
1962, செப்டம்பர் 28
18.
டெல்லியில் நடைபெற்ற ஆசிய உறவுக்கான மாநாட்டை ஏற்பாடு செய்த தலைவர் யார்?
காந்தி
பட்டேல்
நேரு
பசல் அலி
19.
ஆசியத் தலைவர்கள் மாநாடு எந்த நகரில் நடைபெற்றது?
டெல்லி
கொழும்பு
லண்டன்
பெல்கிரேட்
20.
சிம்லா மாநாட்டைக் கூட்டியவர் பெயரை எழுதுக
வேவல் பிரபு
லிட்டன் பிரபு
கர்சன் பிரபு
கானிங் பிரபு
21.
"செய்" அல்லது "செத்துமடி" என்னும் முழக்கம் இட்டவர் யார்?
காந்தி
நேரு
ஜின்னா
இவற்றில் யாரும் இல்லை
22.
முத்துத் துறைமுகம் எந்த நாட்டால் தாக்கப்பட்டது?
சீனா
பங்காள தேசம்
இந்தியா
ஜப்பான்
23.
வேல்ஸ் இளவரசர் எந்த ஆண்டு இந்தியாவிற்கு வருகை புரிந்தார்?
1921
1922
1925
1927
24.
லக்னோ ஒப்பந்தம் நடைபெற்ற ஆண்டை எழுதுக.
1920
1916
1927
1919
25.
இந்து முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்படுத்திய இயக்கம் எது?
சுத்தி இயக்கம்
வாகாபி இயக்கம்
சுதேசி இயக்கம்
அலிகர் இயக்கம்
26.
சிட்டகாங் ஆயுதப் படைத்தளத்தைத் துணிகரமாகத் தாக்கிய பெண்மணி யார்?
அன்னி பெசன்ட்
ஜான்சி ராணி
கல்பனா தத்
லட்சுமி
27.
தூக்கிலிடுவதற்குப் பதிலாகச் சுட்டுக் கொல்லுங்கள் என்று கோரியவர்கள் யாவர்?
பகத்சிங் மற்றும் நண்பர்கள்
வாஞ்சிநாதன்
சுபாஷ்
யாருமில்லை
28.
தென்னிந்தியாவில் பல தொழிற்சங்கங்களை இவர் தோற்றுவித்தார்
காமராஜர்
பெரியார்
திரு.வி.க
அண்ணா
29.
காங்கிரஸ் எந்த மாநாட்டில் இரண்டு அணியாக பிரிந்து சென்றது?
லாகூர் மாநாடு
மீரட் மாநாடு
சூரத் மாநாடு
டெல்லி மாநாடு
30.
"சுயராஜ்ஜியம் எனது பிறப்பு உரிமை அதை அடைந்தே தீருவேன்" என்று கூறிய தலைவர் யார்?
காந்தி
நேரு
சுபாஷ்
திலகர்
31.
விடிவெள்ளிக் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு எப்போது?
1902
1905
1906
1904
32.
நவீன இந்தியாவின் சிற்பி என்று அழைக்கப்பட்டவர் யார்?
நேரு
அம்பேத்கர்
காந்தி
ஜின்னா
33.
இந்தியாவில் ஆங்கிலம் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது?
1935
1980
1835
1947
34.
தொழிற் புரட்சி முதலில் எந்த நாட்டில் நடைபெற்றது?
அமெரிக்கா
இங்கிலாந்து
இரஷ்யா
ஜெர்மனி
35.
1872 ஆண்டு "குலாம்கிரி" என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டவர் யார் ?
அம்பேத்கர்
காந்தி
கோகலே
ஜோதிராவ் பூலே
36.
சாம்பரான் சத்யாகிரக சோதனை நடைபெற்ற ஆண்டு எது ?
1918
1915
1919
1917
37.
கதர் கட்சியைத் தொடங்கியவர் யார்?
லாலா ஹர்தயாள்
திலகர்
லாலா லஜபதி ராய்
சுபாஷ் சந்திரபோஸ்
38.
தன்னாட்சி இயக்கத்தை பம்பாயில் தொடங்கியவர் யார்?
அன்னிபெசன்ட்
காந்தி
திலகர்
நேரு
39.
நியூ இந்தியா என்ற பத்திரிக்கை எவ்வாறு வெளிவந்தது?
வார பத்திரிக்கை
மாத பத்திரிக்கை
ஆண்டுக்கு ஒரு முறை
தினசரி
40.
அரசமைப்பு நிர்ணயச் சபையில் குறிக்கோள் தீர்மானங்களைக் கொண்டு வந்தவர் _______.
இராஜேந்திர பிரசாத்
ஜவஹர்லால் நேரு
வல்லபாய் படேல்
மௌலானா அபுல் கலாம் ஆசாத்
41.
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்.
(i) இந்திய சுதந்திரம் குறித்த அட்லியின் அறிவிப்பு.
(ii) நேருவின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம்
(iii) மௌண்ட்பேட்டன் திட்டம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து விடையினை தேர்ந்தெடுக்கவும்.
ii,i,iii
i,ii,iii
iii,ii,i
ii,iii,i
42.
கூற்று: பி.ஆர். அம்பேத்கர் மஹத் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்.
காரணம்: அவர் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களை ஒருங்கிணைக்க முயன்றார்.
கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்று சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரி, காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி
43.
தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய காந்தியடிகள் தனது வெற்றிகரமான முதலாவது சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கிய இடம் _______.
கேதா
தண்டி
சம்பரான்
பர்தோலி
44.
மகாத்மா காந்தியடிகளின் “செய் அல்லது செத்துமடி” என எந்த நிகழ்வின் போது அழைப்பு விடுத்தார்?
சட்டமறுப்பு இயக்கம்
ஒத்துழையாமை இயக்கம்
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
இவை அனைத்தும்
45.
46.
வேவல் பிரபுவிற்குப் பின்னர் பதவியேற்றவர் _______.
லின்லித்கோ
பெதிக் லாரன்ஸ்
மௌண்ட்பேட்டன்
செம்ஸ்ஃபோர்டு
47.
முகலாயர் காலத்தில் அலுவலக மற்றும் நீதிமன்ற மொழியாக விளங்கியது எது?
உருது
இந்தி
மராத்தி
பாரசீகம்
48.
1916 ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம் _______.
முஸ்லீம் லீக் எழுச்சி
காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தற்காலிக இணைப்பு
முஸ்லீம் லீக்கின் தனித்தொகுதி கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது.
காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கின் கூட்டமர்வில் ஜின்னாவின் எதிர்மறை போக்கு.
49.
பின்வருவனவற்றுள் அன்னிபெசண்ட் பற்றிய சரியான கூற்று எது?
1. கர்னல் எச்.எஸ். ஆல்காட்டிற்குப் பிறகு பிரம்மஞான சபையின் உலகளாவிய தலைவராக அன்னிபெசண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2. 1914இல் அவர் காமன்வீல் என்ற வாராந்திரியை தொடங்கினார்.
3. 1915ஆம் ஆண்டு "How India Wrought for Freedom"" என்ற தலைப்பிலான புத்தகத்தைப் பதிப்பித்தார்.
1 மற்றும் 2
2 மற்றும் 3
1 மற்றும் 3
1, 2 மற்றும் 3
50.
கல்கத்தாவில் முதலாவது சணல் ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு________.
1855
1866
1877
1888
51.
முதலாவது பருத்தித் தொழிற்சாலை பம்பாயில் தொடங்கப்பட்ட ஆண்டு_______.
1852
1854
1861
1865
52.
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்க.
| (அ) இந்தியப் பத்திரிகைச் சட்டம், 1910 | 1. சுய ஆட்சி |
| (ஆ) விடிவெள்ளிக் கழகம் | 2. சார்ந்திருக்கும் நிலைக்கு எதிரான புரட்சி |
| (இ) சுயராஜ்யம் | 3. தேசிய அளவிலான செயல்பாடுகளை நசுக்கியது. |
| (ஈ) சுதேசி | 4. கல்விக்கான தேசியக் கழகம் |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 4 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 3 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 4 | 3 |
53.
பின்வரும் கூற்றுக்களைக் காண்க.
(i) 1905 இல் மேற்கொள்ளப்பட்ட வங்கப்பிரிவினை ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
(ii) 1905 இல் நடைபெற்ற கல்கத்தா மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜி பிரிட்டிஷ் பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க அழைப்பு விடுத்தார்.
(iii) 1905 ஆகஸ்ட் 7 இல் கல்கத்தா நகர அரங்கில் (Town Hall) நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் குறித்த முறையான அறிவிப்பு வழங்கப்பட்டது.
மேற்கண்ட கூற்றுக்களில் எது/எவை சரியானவை?
(i) மட்டும்
(i) மற்றும் (iii) மட்டும்
(i) மற்றும் (ii) மட்டும்
மேற்கண்ட அனைத்தும்
54.
ஒரிசா பஞ்சம் குறித்த பின்வரும் கூற்றுக்களில் சரியானவை எவை/எது?
கூற்று 1: 1866ஆம் ஆண்டில் ஒன்றரை மில்லியன் மக்கள் ஒரிசாவில் பட்டினியால் இறந்தனர்.
கூற்று 2: பஞ்ச காலத்தில் 200 மில்லியன் பவுண்ட் அரிசியை பிரிட்டனுக்கு ஆங்கில அரசு ஏற்றுமதி செய்தது.
கூற்று 3: ஒரிசா பஞ்சமானது தாதாபாய் நெளரோஜியை இந்திய வறுமை குறித்து வாழ்நாள் ஆய்வை மேற்கொள்ளத் தூண்டியது.
1, 2
1, 3
இவற்றுள் எதுவுமில்லை
இவை அனைத்தும்
55.
“இந்தியாவின் முதுபெரும் மனிதர்” என அழைக்கப்படுபவர்_______.
பாலகங்காதர திலகர்
M.K. காந்தி
தாதாபாய் நெளரோஜி
சுபாஷ் சந்திர போஸ்
56.
காந்தியடிகள் பிரிவினையை ஏன் ஏற்றுக் கொண்டார்?
57.
ஸ்டேன்ஸ் நூற்பு மற்றும் நெசவு ஆலை கோவை பற்றி எழுதுக.
58.
அரசு ஒடுக்குமுறை என்றால் என்ன?
59.
நேரடி நடவடிக்கை நாளின் வன்முறைக் காட்சி பற்றி எழுதுக.
60.
மெளண்ட் பேட்டன் திட்டம் சிறப்பை எழுதுக.
61.
இந்து மகா சபை பற்றி எழுதுக.
62.
ஐக்கிய மாகாணத்தில் வகுப்புவாதம் குறிப்பு தருக?
63.
லாகூர் காங்கிரஸ் மாநாடு பூரண சுயராஜ்ஜியம் விவரி?
64.
தண்டியாத்திரை பற்றி எழுதுக.
65.
சென்னை வாசிகள் சங்கம் என்றால் என்ன?
66.
பஞ்சங்களும், இந்தியர்கள் பஞ்சத்தினால் உயிரிழந்ததை வில்லியம் டிக்பி குறிப்பிடுவது யாது?
67.
சுதேசி பற்றி காந்திஜியின் கருத்து யாது?
68.
சுதேசி இயக்கத்தினால் வளர்ச்சி பெற்ற பிரதேச மொழிப் பத்திரிக்கைகள் யாவை?
69.
நான்கிங் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை ஆய்க.
70.
இத்தாலியை மெட்டர்னிக் "வெறும் பூகோள வெளிப்பாடே" என ஏன் கூறினார்?
71.
மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைப் பிரகடனத்தின் சாராம்சத்தை அடிக்கோடிட்டுக் காட்டவும்.
72.
சரடோகா போரின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுக.
73.
"மூவர் தலையீடு"எனப்படுவது யாது?
74.
பால்கன் சிக்கலின் விளைவுகள் உள்ளடக்கிய சிறப்புக்கூறுகளை எழுதுக.
75.
பிரிட்டனுக்கும் பிரான்சுக்குமிடையே 1904 இல் கையெழுத்திட்ட நாடுகளுக்கு இடையே நட்புறவின் (entente-cordiale) முக்கியத்துவம் யாது?
76.
ஜெர்மனி பிரான்சை தனிமைப்படுத்த முனைந்தது ஏன்?
77.
இடைக்காலத்தின் பிற்பகுதியில் நிலப்பிரபுத்துவ நடைமுறை ஏன் தோல்வி கண்டது?
78.
இந்தியா விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பது தொடர்பாக வைக்கப்பட்ட இரண்டு முக்கிய கருத்துக்களை சுட்டிக் காட்டுக.
79.
80.
காந்தியடிகளுக்கு கெய்சர் - இ - ஹிந்த் பட்டம் எவ்வாறு கிடைத்தது?
81.
கிலாபத் இயக்கம் பற்றி எழுதுக?
82.
83.
கிரிப்ஸ் முன்மொழிவைக் காங்கிரஸ் ஏன் நிராகரித்தது?
84.
லாகூர் தீர்மானத்தின் முக்கியத்துவம் என்ன?
85.
தேசியவாதிகளால் ரெளலட் சட்டம் ஏன் எதிர்க்கப்பட்டது?
86.
காந்தியடிகளின் சம்பரான் சத்தியாகிரகத்தின் போது உடன் சென்ற உள்ளூர் தலைவர்கள் யாவர்?
87.
ஆகாகான் தலைமையிலான முஸ்லிம் லீக் முன்வைத்த கோரிக்கைகள் என்ன?
88.
இந்து-முஸ்லிம்களிடையே பிரிவினை ஏற்படக் காரணமான ஆரிய சமாஜத்தின் இரண்டு இயக்கங்கள் யாவை?
89.
1915ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்புக்கான சட்டம் பற்றி விவரி?
90.
கிலாஃபத் இயக்கம் துவங்குவதற்கான பின்னணி என்னவாக இருந்தது?
91.
இரண்டாவது லாகூர் சதி என்றறியப்படும் நிகழ்வு யாது?
92.
புகழ்பெற்ற கோரக்பூர் நீதிபதியான H.E. ஹோம்ஸ் பற்றி நீவிர் அறிவது யாது?
93.
94.
மிதவாத தேசியவாதிகளின் ‘இறைஞ்சுதல் கொள்கை’ (The Mendicant Policy) என்றால் என்ன?
95.
இந்திய தேசிய காங்கிரசுக்கு முன்னர் தொடங்கப்பட்ட அமைப்புகளின் பட்டியலைத் தயார் செய்க.
96.
புதிய நிலவுடைமை உரிமைகளால் ஏற்பட்ட பாதிப்புகளை எழுதுக.
97.
மேற்கத்திய கல்வியும் அதன் தாக்கமும் மற்றும் மெக்காலே கல்வி முறையைப் பற்றி விளக்குக.
98.
டெல்லி ஒப்பந்தத்தைப் பற்றி விவரி?
99.
சுபாஷ் மற்றும் இந்திய தேசிய இராணுவமும் பற்றி கூறுக?
100.
பகத்சிங் பற்றி எழுதுக?
101.
கிலாபத் இயக்கத்தைப் பற்றி எழுதுக?
102.
வகுப்புவாரி தொகுதி ஒதுக்கீடு பற்றி குறிப்பு வரைக?
103.
சமிதிகள் என்றால் என்ன? அவர்களின் பணிகள் யாவை?
104.
ஹக் கிளர்ச்சியின் முக்கியத்துவம் யாது?
105.
106.
அமெரிக்க புரட்சியின் முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்க.
107.
ஐரோப்பாவில் எதிர்சீர்திருத்த இயக்கத்துக்கு இயேசு சபையின் பங்களிப்பு பற்றி விவாதிக்கவும்.
108.
மத்திய அரசு 1980களில் கொண்டுவந்த ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தை விளக்குக.
109.
இந்திய காமன்வெல்த் லீக் இயக்கம் பற்றி விவரி?
110.
இந்திய அரசமைப்பின் தனித்தன்மைகள் யாவை?
111.
சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் அவர்களின் முன்மொழிவுகளை விவாதிக்கவும்.
112.
பூனா ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் யாது?
113.
1927ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டின் முன்மொழிவுகள் யாவை?
114.
தன்னாட்சி இயக்கத்தின் இரட்டைக் குறிக்கோளைப் பற்றி விவாதிக்கவும்.
115.
தென்னிந்தியாவில் தொழிற்சங்கங்களின் வளர்ச்சிக்காகச் சிங்காரவேலர் ஆற்றிய பங்களிப்புக் குறித்து எழுதுக.
116.
1908இல் நடைபெற்ற கோரல் நூற்பாலை வேலை நிறுத்தம் பற்றி நீவீர் அறிவது யாது?
117.
மெக்காலேயின் ‘இந்தியக் கல்வி குறித்த குறிப்புகளை’ ஆய்க.
118.
இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகள் நடைபெற்ற பின்வரும் இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
1. பம்பாய்
2. கல்கத்தா
3. சென்னை
4. அகமதாபாத்
5. லக்னோ
6. கான்பூர்
7. சூரத்
8. லாகூர்
9. பூனா
10. அலகாபாத்
119.
பிரிவினையால் மக்களிடம் ஏற்பட்ட இடப் பெயர்ச்சியை விவரி?
120.
இராயல் இந்தியக் கடற்படையின் புரட்சி பற்றி எழுதுக.
121.
ஆங்கிலேயருக்கு முந்தைய இந்தியாவில் கல்வியின் நிலை யாது?
122.
காங்கிரஸ் அமைத்த முதல் அமைச்சரவைகள் பற்றி விவரி?
123.
சுப்பிரமணிய பாரதி, கவிஞர் மற்றும் தேசியவாதி விவாதி?
124.
இரண்டாம் உலகப்போரின் விதைகளை வெர்செய்ல்ஸ் ஒப்பந்தமே தூவியது என்பதனை தகுந்த காரணத்தோடு விளக்குக.
125.
126.
பாஸ்டில் சிறை தகர்ப்பு முதல் ரோபஸ்பியர் கொல்லப்பட்டது வரையிலுமான பிரெஞ்சுப் புரட்சியின் போக்கினை வரைக.
127.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை தேசிய அரசுகளாக உருவெடுத்தமை பற்றி ஒருங்கிணைந்த முறையில் ஆராயவும்.
128.
ஊரக மறுசீரமைப்பு தொடர்பாக இந்திய அரசு பின்பற்றிய நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்துக.
129.
காந்தியடிகள் சமூக சேவைக்காக பெற்ற விருதுகளைப் பற்றி எழுதுக?
130.
டாக்டர். அம்பேத்கரின் கல்விப்பணி குறித்து, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்காக அவரின் செயலூக்கத்தை முதன்மைப்படுத்தி விளக்குக.
1.
(b)
எல் அலாமின்
2.
(c)
J.G. ஃபிக்ட்
3.
(a)
கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
4.
(a)
கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
5.
(a)
1931
6.
(d)
காலனிய நாடுகளில் ஏற்பட்ட தேசிய விடுதலை இயக்கங்கள்
7.
(c)
ஹைட்டி
8.
(b)
9.
(d)
டான்சிக் போலந்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட வேண்டும்
10.
(a)
ஜெர்மனி
11.
(a)
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
12.
(d)
மூன்றாம் பால்
13.
(d)
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்
14.
(c)
1945
15.
(b)
சமதர்ம
16.
(c)
லாகூர்
17.
(a)
1962, செப்டம்பர் 8
18.
(c)
நேரு
19.
(b)
கொழும்பு
20.
(a)
வேவல் பிரபு
21.
(d)
இவற்றில் யாரும் இல்லை
22.
(b)
பங்காள தேசம்
23.
(a)
1921
24.
(b)
1916
25.
(b)
வாகாபி இயக்கம்
26.
(c)
கல்பனா தத்
27.
(a)
பகத்சிங் மற்றும் நண்பர்கள்
28.
(c)
திரு.வி.க
29.
(c)
சூரத் மாநாடு
30.
(d)
திலகர்
31.
(a)
1902
32.
(a)
நேரு
33.
(c)
1835
34.
(b)
இங்கிலாந்து
35.
(d)
ஜோதிராவ் பூலே
36.
(d)
1917
37.
(a)
லாலா ஹர்தயாள்
38.
(c)
திலகர்
39.
(d)
தினசரி
40.
(a)
இராஜேந்திர பிரசாத்
41.
(b)
i,ii,iii
42.
(c)
கூற்று சரி, காரணம் தவறு
43.
(c)
சம்பரான்
44.
(a)
சட்டமறுப்பு இயக்கம்
45.
(b)
46.
(c)
மௌண்ட்பேட்டன்
47.
(a)
உருது
48.
(b)
காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தற்காலிக இணைப்பு
49.
(c)
1 மற்றும் 3
50.
(a)
1855
51.
(b)
1854
52.
(c)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
53.
(d)
மேற்கண்ட அனைத்தும்
54.
(d)
இவை அனைத்தும்
55.
(c)
தாதாபாய் நெளரோஜி
56.
1. பஞ்சாபிலும், வங்காளத்திலும் ஏற்பட்ட வன்முறைகளும் அதில் மக்களின் பங்கேற்பும் தன்னையும், காங்கிரசையும் பிரிவினையைத் தடுப்பதற்கான ஆற்றலற்றவர்களாக ஆகிவிட்டதாகத் தெரிவித்தார்.
2. மேலும் துரதிர்ஷ்டவசமாக காலனியக் கூட்டாளிகள் உருவாக்கிய வகுப்புவாதமும் பிரிவினையும் புதிதாகப் பிறந்த குழந்தையான இந்திய தேசத்தைப் பெரிதும் பாதித்தது என காந்தியடிகள் கூறினார்
57.
(i) சென்னை மாகாணத்தில் தொழில்துறை வளர்ச்சி கணிசமானதாக இருந்தது.
(ii) குறைந்த வட்டி விகிதத்தில் கடன் போன்றவை கோயம்புத்தூரில் ஜவுளித்துறையில் விரிவாக்கத்திற்கு வழிவகுத்தன.
(iii) 1929 - 37 களில் அதிக அளவு மாற்றத்தை ஏற்படுத்தியது.
(iv) அதிக மக்கள் வேலை வாய்ப்பை பெற்றார்கள்.
58.
(i) வேலை நிறுத்தங்களின் அலையாலும் கம்யூனிஸ்ட் செயல்பாடுகள் பரவுவதாலும் கவலை அடைந்த ஆங்கிலேய அரசு, 1928 ஆம் ஆண்டின் தொழிற்தகராறுகள் சட்டம் மற்றும்
(ii) 1928 பொது மக்கள் பாதுகாப்பு மசோதா ஆகிய இரு கொடுஞ்சட்டங்களை இயற்றியது.
59.
1. முஸ்லிம் லீக் ஆகஸ்ட் 1946 அன்று நேரடி நடவடிக்கை செயலில் இறங்க இஸ்லாமியர்களுக்கு அறைகூவல் விடுத்தது.
2. கல்கத்தாவிலும் டெல்லி உட்பட பிற பகுதிகளிலும் இரத்த ஆறு ஓடியது.
3. காந்தியடிகள் 1946-இல் அவர் "இஸ்லாமியர்களும் இந்தியர்களே! அதனால் அவர்களைப் பாதுகாப்பது நமது கடமை" என்று கூறினார்.
60.
1. மெளண்ட் பேட்டன் இந்தியப் பிரிவினையை ஏற்படுத்த ஒரு தெளிவான திட்டத்தைக் கொண்டிருந்தார்.
2. அதன்படி பஞ்சாப் மேற்கு-கிழக்காகப் பிரிப்பதும் மேற்பகுதி பாகிஸ்தானுக்கு வழங்கப்படும்.
3. அது போன்றே வங்காளத்தைப் பிரித்து அதன் மேற்குப் பகுதியை வைத்துக் கொள்ளவும் கிழக்கு பகுதியை பாகிஸ்தானின் அங்கமாக மாற்றவும் அம்சங்கள் இருந்தன.
61.
1. வகுப்புவாதம் பஞ்சாபில் ஒரு வலுவான இயக்கமாக முழுமையாக நிலை கொண்டது.
2. 1924 இல் பஞ்சாப் மாகாணம் இந்து, முஸ்லிம் மாகாணங்களாகப் பிரிக்கப்பட வேண்டுமென லாலா லஜபதி ராய் வெளிப்படையாகக் கூறினார்.
3. அரசியல் காலத்தில் இந்து மத மறுமலர்ச்சிக்கு ஆதரவான சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்து மகா சபை "அகண்ட இந்துஸ்தான்" என்னும் முழக்கத்தை முன்வைத்தது.
62.
1. காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் 1922 இல் நிறுத்தப்பட்டது.
2. 1924 இல் கலிஃபா பதவி ஒழிக்கப்பட்டதும், முஸ்லிம்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
3. ஒத்துழையாமை இயக்கத்தின் பின் விளைவாகக் காங்கிரசுக்கும் முஸ்லிம் லீக்குக்குமான ஒப்பந்தம் சிதைந்தது.
63.
1. இந்திய விடுதலை மற்றும் காங்கிரஸ் வரலாற்றில் காங்கிரஸ் கட்சியின் லாகூர் மாநாடு சிறப்பு வாய்ந்ததாகும்.
2. 1929 டிசம்பர் 31 - இல் லாகூரில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் நாளை விடுதலை நாளாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
3. சட்டமறுப்பு இயக்கம் காந்தியடிகளின் தலைமையில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
64.
1. சட்டமறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக காந்தியடிகள் தண்டியாத்திரையை அறிவித்தார்.
2. உப்பு மீது அநியாய வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டம் இதுவாகும்.
3. 1930 ஏப்ரல் 6 - இல் தண்டி சென்று அடைந்தார். இது சபர்மதி ஆசிரமத்தில் இருந்து குஜராத் தண்டி வரை 375 கிலோமீட்டர், 78 தொண்டர்களுடன் நடைபெற்றது.
65.
1. 1852 பிப்ரவரி 26இல் சென்னை வாசிகள் சங்கம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.
2. சென்னையின் மிக முக்கிய வணிகரான காஜுலா லட்சுமிநரசு என்பவரே இவ்வமைப்பு உருவாவதற்கு உந்து சக்தியாய் திகழ்ந்துள்ளார்.
3. இவ்வமைப்பு 1852 டிசம்பரில் சமர்ப்பித்த மனுவில் ரயத்துவாரி, ஜமீன்தாரி முறைகள் வேளாண் வர்க்கத்தினரைக் கடும் துன்பங்களுக்கு உள்ளாக்கியதைச் சுட்டிக்காட்டியது.
66.
1. 1770 - 1900 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பஞ்சத்தின் காரணமாக இருபத்தைந்து மில்லியன் மக்கள் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2. போர்களில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை ஐந்து மில்லியனாக இருக்க 1891 முதல் 1900 வரையிலான பத்தாண்டுகளில் பஞ்சத்தினால் மட்டுமே இந்தியாவில் பத்தொன்பது மில்லியன் மக்கள் உயிரிழந்ததாக மெட்ராஸ் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் வில்லியம் டிக்பி குறிப்பிட்டுள்ளார்.
67.
சுதேசி என்பது நமக்குள்ளிருக்கும் ஆன்மபலம் அது வெகு தொலைவிலிருந்து கிடைப்பனவற்றை ஒதுக்கி வைத்து நமக்கு வெகு அருகேயுள்ள சுற்றுப்புறத்திலிருந்து கிடைக்கும். இங்குள்ளவர்களால் தயார் செய்யும் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
68.
1. தமிழ்நாட்டில் சுதேசமித்திரன், மகாராஷ்டிராவில் கேசரி, வங்காளத்தில் யுகாந்தர் ஆகிய பத்திரிகைகள் வளர்ச்சி பெற்றன.
2. இந்தியாவின் பல பகுதிகளில் பிரதேச மொழிப் பத்திரிகைகள் பெற்ற வளர்ச்சி சுதேசி இயக்கத்தின் சாதனையாகும்.
69.
1.முதலாம் அபினிப் போரின் இறுதியில் 1842 இல் நான்கிங் உடன்படிக்கை கையெழுத்தானது.
2.சீனாவின் கதவுகள் பிரிட்டனுக்காக திறந்து விடப்பட்டது.
3.சீனா ஹாங்காங்கை விட்டுக் கொடுத்ததோடு இழப்பீடாக ஒரு தொகையையும் வழங்கியது.
70.
1.வியன்னா காங்கிரசால் இத்தாலி எட்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது.
2.இத்தாலியின் வட பகுதி ஆஸ்திரியர்களின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
3.19 ஆம் நூற்றாண்டில் இத்தாலி 12 மாநிலங்கள் மற்றும் பல குறுநிலங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது.
4.எனவே இத்தாலி வெறும் பூகோள வெளிப்பாடே என்று மெட்டர்னிக் குறிப்பிட்டார்.
71.
1.1789 ஆகஸ்ட் 26ல் மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைப் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2.அரசரைச் சட்டத்தின் ஆட்சிக்குத் துணையாய் இருக்க செய்த இப்பிரகடனம் தனிமனித உரிமைகளையும் கூட்டு உரிமைகளையும் வரையறை செய்தது.
3.ஒரு முகவுரையையும் 17 பிரிவுகளையும் கொண்டுள்ளது.
4.அனைத்து மக்களும் தங்கள் வருவாய் ஆதாரங்களுக்கு ஏற்றவாறு வரி செலுத்த வேண்டுமென கூறுகிறது.
72.
1.1777 இல் சரடோகா போர் முனையின் ஆங்கிலேயப் படைத்தளபதி ஜெனரல் புர்கோய்ன் சரணடைய நிர்ப்பந்திக்கப்பட்டார்.
2.1787ல் யார்க்டவுன் என்ற இடத்தில் இங்கிலாந்து படைகள் அமெரிக்க படைகளிடம் சரணடைந்தன.
3.இவ்வெற்றிகளால் வட பகுதி குடியேற்றங்கள் சுதந்திரம் பெற்றன.
73.
1.ஜப்பானின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சிய ஐரோப்பிய சக்திகள் ஜப்பானை லியோடாங்
2.1895-ல் இந்த மூவர் தலையீட்டால் (பிரான்ஸ்,இங்கிலாந்து,ரஷ்யா)சினமடைந்து ஜப்பான் மிகப்பெரிய போர்த்தளவாடத் திட்டத்தை வகுத்தது.
74.
1.பல்கேரியர்கள் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதாக உணர்ந்து அதற்காக செர்பியர்களை பழிவாங்க துடித்தனர்.
2.செர்பியர்கள் மிதமிஞ்சிய வெற்றிக் களிப்பில் திளைத்தார்கள்.
3.ஆஸ்திரியர்களுக்கு எதிரான போராட்டங்கள் செர்பியாவிலும் போஸ்னியாவிலும் தீவிரவாதத் தன்மை கொண்டதாய் மாறியது.
75.
1.ஆங்கிலோ-ஜப்பானியக் கூட்டால் பிரான்ஸ் பிரிட்டனிடம் நட்பைக் கோரியது.
2.இது 1904 இல் நாடுகளுக்குள் ஒத்துப் போகிற நட்புறவை விளைவித்தது.
3.மொராக்கோவில் பிரான்சை தன்னிச்சையாக செயல்பட பிரிட்டன் ஒத்துக் கொண்டது.
4.எகிப்தில் பிரிட்டனின் ஆக்கிரமிப்பை பிரான்ஸ் அங்கீகரித்தது.
76.
1.1871 ல் பிராங்கோ-பிரஷ்ய போரில் அல்சாஸ்,லொரைன் பகுதியை இழந்தது.
2.அதற்காக பிரான்ஸ் பழி வாங்கக்கூடும் என பிஸ்மார்க் எதிர்பார்த்தார்.
3.அதனால் பிரான்ஸை தனிமைப்படுத்த தீர்மானம் கொண்டார்.
77.
1.இடைக்காலத்தில் ஐரோப்பாவைத் தாக்கிய, கொள்ளை நோய் நிலப்பிரபுத்துவ ஆட்சியை வலுவிழக்க செய்தது.
2.பல்லாயிரக்கணக்கான வரி வருமானத்தை இழந்தனர்.
3.சிலுவைப் போர்களின் போது பெரும் எண்ணிக்கையில் பிரபுக்கள் உயிரிழந்தனர்.
4.புதிய மன்னராட்சி ஏற்பட நிலப்பிரபுத்துவ முறை வீழ்ச்சி காரணமாயிற்று.
78.
1.பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்படுவதை இரு முக்கிய அம்சங்கள் தீர்மானித்தன.
2.ஒன்று கருத்தியல் மற்றொன்று நடைமுறை சார்ந்தது.
3.கருத்தியல் நிலையில் அரசாங்கம் சமதர்ம வளர்ச்சிக்கு உறுதியளித்தது.
4.நடைமுறையில் கனரகத் தொழில்களை ஏற்கும் பொறுப்பை அரசே ஏற்க வேண்டியிருந்தது.
79.
80.
தென்னாப்பிரிக்காவில் ஆற்றிய மனிதாபிமானப் பணிகளுக்காகக் காந்தியடிகளுக்கு கெய்சர் - இ - ஹிந்த் என்ற தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
81.
1. மௌலானா முகமது அலி மௌலானா ஷௌகத் அலி என்ற முஸ்லீம் சகோதரர்கள் கிலாபத் இயக்கத்தை தொடங்கினார்கள்.
2. இவர்களின் தலைமையில் கீழ் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் ஒன்றுபட்டனர்.
3. 1920 மார்ச் மாதம் பாரீசில் முகமது அலி கிலாபத் இயக்கத்தின் கோரிக்கைகளைத் தூதாண்மை அதிகாரியிடம் சமர்ப்பித்தார்.
82.
83.
(i) டொமினியன் அந்தஸ்து வழங்குவதென்பது ஏமாற்றமளிக்கக் கூடிய குறுகிய நடவடிக்கையாகும்.
(ii) பிற மாகாணங்களைப் போல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மாற்றாக உறுப்பினர்களால் நியமிக்கப்படும் முறையை காங்கிரஸ் நிராகரித்தது.
(iii) ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டு அவ்வாறே நிகழ்ந்தது.
84.
(i) இஸ்லாமியர்களுக்கான தனிநாடு கோரிக்கையாகும்.
(ii) இதன் துவக்கம் 1930களில் கிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் தனிப்பகுதி அல்லது சில பகுதிகள் என்ற நிலையிலிருந்தது.
(iii) 1940 இல் லாகூரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் தனி நாடு கோரிக்கை (பாகிஸ்தான்) ஒரு முக்கியக் கட்டத்தை எட்டியது.
85.
1. மத்திய சட்டப்பேரவையில் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த மசோதாவை எதிர்த்த நிலையில் 1919 இல் மார்ச் மாதம் ரௌலட் சட்டத்தை அரசு நிறைவேற்றியது.
2. எந்தவித நீதிமன்ற விசாரணையுமின்றி எவரையும் சிறையில் அடைக்க இச்சட்டம் அதிகாரமளிக்காது.
3. 1919 இல் ரௌலட் சட்டத்திற்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும், எதிர்க்கவும் செய்தனர்.
86.
1. இராஜேந்திர பிரசாத், மஜாருள் ஹக், ஆச்சார்ய கிருபாளினி மஹாதேவ தேசாய் போன்ற உள்ளூர் தலைவர்கள் கலந்துகொண்டார்கள்.
2. ஐரோப்பிய வர்த்தகர்கள் படிப்படியாக "சம்பரானை" விட்டே வெளியேற்றிவிட்டனர்.
87.
(i) ஆகாகான் தலைமையின் கீழ் சிம்லாவில் ஒன்று திரண்டு அப்போதைய அரசப் பிரதிநிதியான மிண்டோ பிரபுவிடம் முஸ்லிம் லீக் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
(ii) அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் சதவீதத்தை உயர்த்துதல், உயர் நீதிமன்றங்களில் முஸ்லிம் நீதிபதிகளின் நியமனம் மற்றும் அரசுப் பிரதிநிதியின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
88.
(i) ஆரிய சமாஜியத்தின் சுத்தி இயக்கம் மூலம் பிற சமயங்களுக்கு மதம் மாறியவர்களை மீண்டும் இந்துக்களாக மாற்றும் நோக்கில் தொடங்கப்பட்டது.
(ii) மேலும் ஆரிய சமாஜியத்தின் சங்கதன் நடவடிக்கைகளில் காங்கிரஸ்காரர்களின் பங்கேற்பு இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களை மேலும் பிளவுப்படுத்தியது.
89.
1. முதல் உலகப்போரின்போது தேசியவாத மற்றும் புரட்சிகர நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவசர கிரிமினல் சட்டமாக இயற்றப்பட்ட இந்தச் சட்டமே, இந்தியப் பாதுகாப்புச் சட்டம் எனப்படும்.
2. சந்தேகத்துக்கு இடமானவர்கள் மீது வழக்குத்தொடர இந்தச் சட்டம் அனுமதித்தது.
3. இந்த உத்தரவுகளை மீறும் பட்சத்தில் மரண தண்டனை விதிப்பது, நாடுகடத்துவது, பத்தாண்டு சிறைத் தண்டனை ஆகியவற்றை விதிக்க தீர்ப்பாயத்திற்கு இச்சட்டம் அதிகாரமளித்தது.
90.
1. கலீபாவின் அதிகாரத்தைத் துண்டாடுவது இஸ்லாம் மீதான பெரும் தாக்குதலாகக் கருதப்பட்டது.
2. உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கலீபா மீது பற்றும் அனுதாபமும் கொண்டவர்கள் அதனால் கிலாஃபத் இயக்கம் தொடங்கப்பட்டது.
3. மெளலானா முகமது அலி மெளலானா செளஹத் அலி என்ற முஸ்லிம் சகோதரர்கள் கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினர்.
4. 1920 இல் பாரீசில் முகமது அலி கிலாபத் இயக்கத்தின் கோரிக்கைகளைத் தூதாண்மை அதிகாரிகளிடையே சமர்ப்பித்தார்.
91.
(i) ராஜகுரு, சுகதேவ் ஜதீந்திரநாத் தாஸ் ஆகியோருடன் பகத்சிங்கும் மேலும் 21 பேரும் கைது செய்யப்பட்டனர்.
(ii) சாண்டர்ஸ் கொலை தொடர்பான விசாரணைக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டனர். இந்த வழக்கு இரண்டாவது லாகூர் சதி வழக்கு என்று அறியப்படுகிறது.
92.
மாட்சிமை பொருந்திய அமர்வு நீதிபதி ஹோம்ஸ் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இவர் கோரக்பூர் அமர்வு நீதிபதியாகப் பணியாற்றியபோது சௌரி சௌரா வழக்கில் தொடர்பு கொண்டவர்களாகக் குற்றம் சாட்டப்பட்ட 172 விவசாயிகளுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துப் பிரசித்தி பெற்றவர்.
93.
94.
1. மிதவாதிகளின் கவனமான அணுகுமுறை ஆங்கிலேயரிடம் மன்றாடுதல் ஆகும்.
2. மனு சமர்ப்பித்தல் போன்றவை அவர்களின் "இறைஞ்சுதல் கொள்கை" ஆகும். இக்கொள்கையைக் கடுமையாக தீவிரவாத காங்கிரஸ் விமர்சனம் செய்தது.
95.
| அமைப்பு | வருடம் / இடம் | தோற்றுவித்தவர் |
| 1. நிலக்கிழார்கள் அமைப்பு ஜமீன்தார் அமைப்பு. |
1838 / கல்கத்தா | துவாரகாநாத் தாகூர். |
| 2. பிரிட்டிஷ் இந்திய சமூகம் | 1839 / லண்டன் | வில்லியம் ஆடம்ஸ் |
| 3. மெட்ராஸ் பூர்விக அமைப்பு | 1852 / சென்னை | லஷ்மண சரசு செட்டி |
| 4. பம்பாய் கழகம் | 1852 / பம்பாய் | தாதாபாய் நௌரோஜி, தீன்ஷா வாச்சா |
| 5. இந்திய லீக் | 1875 / கல்கத்தா | சி. சிர்குமார் கோஷ் |
| 6. மெட்ராஸ் மகாஜன சபா | 1884 / மெட்ராஸ் | வீரராகவாச்சார்யா, ஜி. சுப்பிரமணிய ஐயர், பி. அனந்த்தாச்சார்லு |
96.
1. கிழக்கு இந்திய கம்பெனி அறிமுகம் செய்த புதிய நில நிர்வாகக் கொள்கையினால் இரண்டு முக்கியப் பாதிப்புகள் ஏற்பட்டன.
2. நிலத்தை விற்பனைப் பொருளாக்குவது இந்தியாவில் வேளாண்மையை வணிகமயமாக்குவது ஆகிய இரண்டையும் அவர்கள் நிறுவனமாகவே ஆக்கினார்கள்.
3. ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இந்தியாவில் நிலத்தில் தனிச் சொத்துரிமை என்பது இல்லை.
97.
1. காலனிய காலத்திற்கு முந்தைய இந்தியாவில் கல்வியானது சாதி, மத அடிப்படையில் துண்டுபட்டிருந்து, இந்துக்களிடையே பிராமணர்கள் உயர்நிலை சார்ந்த சமய, தத்துவ அறிவினைப் பெறும் தனியுரிமையைப் பெற்றிருந்தனர்.
2. கல்வியை தங்களின் முழு உரிமையாக்கிக் கொண்ட அவர்கள் பிரதானமாக அர்ச்சகர்களாகவும் ஆசிரியர்களாகவும் சமூகத்தில் அங்கம் வகித்தனர்.
3. இந்தியா போன்ற ஒரு பெரிய காலனி நாட்டை ஆள்வதற்கு ஆங்கிலேயர்களுக்குத் தங்களிடம் பணி செய்ய பெரும் எண்ணிக்கையிலான கல்வி கற்றவர்கள் தேவைப்பட்டனர்.
4. தேவைப்படும் அளவிற்கான பெருவாரியான படித்த நபர்களை இங்கிலாந்திலிருந்து அழைத்து வருவது சாத்தியமற்றது. இந்நோக்கத்தில் 1835இல் இந்தியக் கவுன்சில் ஆங்கிலக் கல்விச் சட்டம் இயற்றப்பட்டது.
98.
1. 1950 ஏப்ரல் 8 - இல் நேரு மற்றும் லியாகத் அலிகான் இடையே டெல்லி ஒப்பந்தம் ஏற்பட்டது.
2. இதில் இரு தரப்பாலும் உள்ள சிறுபான்மையினரின் நம்பிக்கையை மீட்டெடுப்பது பற்றி குறிப்பிடப்பட்டது.
3. ஆனால் அதற்கேற்றாற்போல் நிலைமை சுமூகமாக இல்லை.
4. ஒப்பந்தம் கையெழுத்தானபோதே மேற்கு பஞ்சாபிலிருந்து சென்றவர்களை கிழக்கு பஞ்சாபிலும், தில்லியிலும், தங்க வைத்து மறுவாழ்வு அளிப்பதற்கும் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வந்தது.
99.
1. போஸ் இராணுவம் சாராத சாதாரண மக்களையும் இந்திய இராணுவத்தில் இணைத்தார்.
2. இராணுவத்தில் பெண்களுக்கு ஒரு படைப் பிரிவை ஏற்படுத்தினார்.
3. டாக்டர் லட்சுமி, ராணி ஜான்சி என்ற படைப்பிரிவிற்கு தலைமையேற்றார்.
4. சுபாஷ் 1944 ஜூலை 6-அன்று தனது ஆசாத் ஹிந்த் ரேடியோவின் மூலம் ரங்கூனிலிருந்து காந்தியை நோக்கி ஒரு உரையை ஆற்றினார்.
100.
(i) கிஷன்சிங் மற்றும் வித்தியாவதி கவுர் தாயார் மகனாகப் பகத்சிங் தற்போதைய பாகிஸ்தானின் ஒரு பகுதியான பஞ்சாப் மாநிலத்திலுள்ள லயல்பூர் மாவட்டம் ஜார்ஜ் வாலா இடத்தில் பிறந்தார்.
(ii) நவ்ஜவான் பாரத் சபா - ஹிந்துஸ்தான் ரிப்பளிகன் அசோசியேஷன் ஆகிய அமைப்புகளில் தன்னை பகத்சிங் இணைத்துக் கொண்டார்.
(iii) வெகுஜன இயக்கங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு கொள்கையாக அஹிம்சை இருக்கும்.
(iv) பகத்சிங்கின் "நான் ஏன் நாத்திகனாக இருக்கிறேன்"? என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
101.
1. முதல் உலகப் போருக்கு பின் பிரிட்டிஷ் உடன் துருக்கிக்கு எதிராக ஏற்படுத்திய ஒப்பந்தத்தை (செவெரஸ் உடன்படிக்கை 1920) முஸ்லீம்கள் எதிர்த்தனர்.
2. மெளலானா அபுல் கலாம் ஆசாத், எம்.ஏ, அன்சாரி, சைபூதீன் கிச்லு, அலி சகோதரர்கள் இந்த இயக்கத்தை தலைமையேற்று நடத்தினார்கள். கிலாபத் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 1919 அக்டோபர் 19 ஆம் நாள் கிலாபத் தினம் அனுசரிக்கப்பட்டது.
102.
1. லண்டனில் நடந்த இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகக் காந்தியடிகள் மற்றும் அம்பேத்கர் செல்வதற்கு முன் அவர்கள் இடையே தனித்தொகுதிகள் பற்றிய கருத்தில் நடந்த பேச்சுக்கள் தோல்வி அடைந்தன.
2. 1932 ஆகஸ்டில் வகுப்புவாரித் தொகுதி ஒதுக்கீடுகள் குறித்து பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. இவ்வாறாக இட ஒதுக்கீட்டுடன் கூறிய தனித் தொகுதிகள் பற்றி அம்பேத்கரின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.
103.
1. பெருவாரியான மக்களை ஒன்று திரட்ட மேற்கொள்ளப்பட்ட மற்றொரு வெற்றிகரமான முறை சமிதிகள் ஆகும்.
2. தொண்டர் படைகள் எனும் அமைப்புகள் உருவாக்கப்பட்டமையாகும்.
3. பஞ்சங்களின் போதும், நோய்களின் தாக்கத்தின் போது சேவையாற்றுதல் விழாக்களின் காலத்தில் சுதேசி செய்தியைப் பரப்புரை செய்தல், உள்ளூரளவில் பள்ளிகளையும் நடுவர் நீதிமன்றங்களையும் உருவாக்குதல் ஆகியவை சமிதிகளின் பணிகளாகும்.
104.
1.பிலிப்பைன்சின் பொதுவுடைமைவாத விவசாயிகளே ஹக் ஆவர்.
2.அரசின் படைகளால் ஹக்குகளின் பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளானது.
3.ஆரம்பத்தில் தற்காப்பு அடிப்படையில் மட்டுமே கைக்கொண்டார்கள்.
4.1950 களின் மத்தியில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் உதவியோடு பிலிப்பைன்ஸ் அரசு ஹக்குகளை ஒடுக்கியது.
105.
106.
1.அமெரிக்க புரட்சி உலக வரலாற்றில் பல அணுகுமுறைகளை (avenues) ஏற்படுத்தியது .
2.மக்களாட்சி,குடியரசு போன்ற கோட்பாடுகள் மேலும் விரிவாகப் பரவலாயின.
3.அரசியல்,சமூக மாற்றங்கள் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் அடிப்படையாக கொண்டிருந்தன.
4.குடியேறியவர்கள் அனைவருக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் சுதந்திரத்தையும் வாய்ப்புகளையும் வழங்கும் நாடானது.
5.கல்வியின் முக்கியத்துவம் சிறப்பிடத்தைப் பெற்றது.
6.கூட்டாட்சிக் கோட்பாடு பரவலானது.
7.அமெரிக்க புரட்சி காலனியாதிக்கத்திற்கு ஒரு பின்னடைவாகும். தங்கள் காலனிய எஜமானர்களுக்கு எதிராக குடியேற்ற நாடுகளின் விடுதலைக்கான கோரிக்கை உலகின் பல்வேறு பகுதிகளில் பரவியது.
8.ஒவ்வொரு தனி மனிதருக்கும் பேச்சு சுதந்திரம், மத சுதந்திரம் மற்றும் சமவாய்ப்பு ஆகியன வழங்கப்பட்ட சுதந்திர சமுதாயம் உருவாவதற்கு இப்புரட்சி வழிகோலியது.
107.
1.ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இக்னேஷியஸ் லயோலா 1534 ஆகஸ்ட் 15 இல் இயேசு சபையை உருவாக்கினார்.
2.பிரம்மச்சரியம், வறுமை, கீழ்ப்படிதல், ஜெருசலேமுக்கு புனிதப்பயணம் மேற்கொள்வது ஆகிய உறுதிமொழிகளைக் கடைபிடிக்க அவரும் அவரது ஆறு பல்கலைக்கழக மாணவர்களும் உறுதியேற்றனர்.
108.
1.1980ல் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் ஓர் ஒருமுகப்படுத்தப்பட்ட திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
2.கிராமப்புற குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு அவர்களுக்கு சில சொத்துக்களை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
3.இதன் மூலம் அவர்கள் வறுமையிலிருந்து வெளியே வர இயலும்.
109.
1. பிரிட்டிஷ் அரசின் கீழ் இந்தியா தன்னாட்சி பெறுவது அல்லது கனடா, ஆஸ்திரேலியா ஆகியவற்றின் வழியில் தன்னாட்சிப் பகுதித் (டொமினியன்) தகுதியைப் பெறுவது ஆகியவற்றுக்காகப் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கோருவதற்காக இந்திய காமன்வெல்த் லீக் என்று தன்னாட்சி இயக்கம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
2. பின்னர் 1929 - இல் இந்திய லீக் என்று வி.கே. க்ரிஷ்ணமேனன் மாற்றம் செய்தார்.
110.
(i) இந்திய அரசமைப்பு உலகிலேயே நீண்ட எழுதப்பட்ட அரசமைப்பு ஆகும்.
(ii) இந்தியா இறையாண்மையுள்ள, சமதர்ம, சமயசார்பற்ற, மக்களாட்சிக் குடியரசு என்று அரசமைப்பு முகவுரை கூறுகிறது.
(iii) அடிப்படை உரிமைகள், குறிக்கோள், தீர்மானத்தின் ஐந்தாம் பிரிவிலிருந்து உருவாக்கப்பட்டன.
(iv) இந்திய அரசமைப்பு இந்திய நாட்டிற்குச் சுதந்திரமான தேர்தல் ஆணையத்தை உருவாக்குகிறது.
(v) வயதுவந்தோர் அனைவருக்குமான வாக்குரிமையும் உறுதி செய்தது.
(vi) நீதித்துறையின் சுதந்திரத் தன்மையுடன் உறுதி செய்தது.
111.
(i) இரண்டாம் உலகப்போருக்குப் பின் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்த சூழலில் அமைச்சரவைத் தூதுக்குழு உருவாக்கப்பட்டது.
(ii) இந்திய நாட்டிற்கென்று நியமிக்கப்பட்டிருந்த அரசு செயலரான சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸையும், A.V. அலெக்ஸாண்டரையும் உறுப்பினர்களாகக் கொண்ட அந்த தூதுக்குழு மார்ச் 1946 இல் இந்தியா வந்தடைந்தது. முழு அதிகார மாற்றத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான அரசை உருவாக்க முனைந்தது.
(iii) இத்தூதுக்குழு மாகாணங்களிலும், சுதேச அரசாட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களினும் தேர்தல் நடத்தி அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு சுதந்திர இந்தியாவிற்கான அரசியல் சாசனத்தை உருவாக்கலாம் என்று முன்மொழிந்தது.
112.
1. தீண்டத்தகாதோருக்குத் தனித் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதைத் தனது வாழ்நாள் முழுவதும் காந்தி அறிவித்தார்.
2. காந்தியின் உயிரைக் காப்பாற்றும் அழுத்தம் அம்பேத்கருக்கு ஏற்பட்டது, ஆலோசனை கூட்டம் பிரார்த்தனை நடந்தது.
3. அம்பேத்கர் மற்றும் காந்தி இடையே ஏற்பட்ட புதிய ஒப்பந்தம் 1932-இல் பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது.
113.
(i) 1927 மார்ச் 20 இல் டெல்லியில் முஸ்லிம்களின் மாநாடு நடைபெற்றது.
(ii) மாநாட்டில் நான்கு முக்கிய கோரிக்கைகள் முன்மொழியப்பட்டன அவை,
(iii) பம்பாயிலிருந்து சிந்துப் பகுதியைத் தனியாகப் பிரிப்பது.
(iv) பாகிஸ்தானையும் அதன் எல்லைகளையும் சீர்திருத்துவது.
(v) பஞ்சாப்பிலும், வங்காளத்திலும் மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவம் மற்றும் மத்தியச் சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு ஆகும். இதனை ஒப்புக்கொள்ளும்படி மோதிலால் நேருவும், எஸ். சீனிவாசனும் காங்கிரஸ் கமிட்டியை வற்புறுத்தினர்.
114.
1. திலகர் தலைமையிலும் மற்றொன்று அன்னி பெசன்ட் அம்மையார் தலைமையிலும் தன்னாட்சி இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
2. இரு இயக்கங்களின் வரையறைகளும் தெளிவாக வகுக்கப்பட்டிருந்தன.
3. தன்னாட்சி இயக்கத்தின் இரட்டைக் குறிக்கோள்கள் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் தன்னாட்சியை ஏற்படுத்துவது மற்றும்,
4. தாய்நாடு பற்றிய பெருமையுணர்வை இந்திய மக்களிடையே ஏற்படுத்துவது ஆகிய அந்த இரண்டு குறிக்கோள்கள் ஆகும்.
115.
(i) M. சிங்காரவேலர் (18 பிப்ரவரி 1860 - 11 பிப்ரவரி 1946 ) மதராசில் பிறந்தார்.
(ii) திரு.வி.க. உடன் இணைந்து தென்னிந்தியாவில் பல தொழிற்சங்கங்களை இவர் தோற்றுவித்தார்.
(iii) 1923 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாள் முதன்முறையாக நாட்டில் மே தினத்தைக் கொண்டாடினார்.
(iv) 1928 இல் இரயில்வே வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்தினார்; இதற்காக தண்டனை பெற்றார்.
116.
1. 1908 இல் கோரல் மில் தொழிற்சாலை ஊழியர்கள் படுமோசமான வேலை, வாழ்க்கைச் சூழல்கள் கொண்டிருந்தனர்.
2. இது வ.உ.சி, சிவா ஆகியோரின் கவனத்தைக் கவர்ந்தது. தொடர்ந்து வந்த சில நாட்களில் தலைவர்கள் இருவரும் தொழிலாளர்களிடம் உரையாற்றினார்கள்.
3. இதனால் 1908 இல் மார்ச்சில் கோரல் பருத்தி நூற்பாலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
4. முடிவில் ஆலை முதலாளிகள் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தனர்
5. தொழிலாளர்களின் வெற்றி வங்காளத்தில் தீவிர தேசியவாதிகள் இடையில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. சுயராஜ்ஜியத்தை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட முதல் அடியாகும்.
117.
1. T.B. மெக்காலே 1834 - 1838 வரை கவர்னர் ஜெனரலின் குழுவின் முதல் சட்ட உறுப்பினராக அங்கம் வகித்தவர்.
2. 1823-இல் பொதுக் கல்விக்கான பொதுக்குழு உருவாக்கப்பட்டது.
3. 1835- இல் தனது புகழ்பெற்ற இந்திய கல்வி குறித்த குறிப்புகள் எனும் குறிப்புகளை வெளியிட்டார்.
4. இக்குறிப்புகளில் ஆங்கிலக்கல்வி முறையில் மேற்கத்தியக்கல்வி கற்பதற்கு ஆதரவாக வாதிட்டார்.
5. இந்தியாவில் ஆங்கிலம் வளர்வதற்கு முக்கிய காரணமாகியது, மேலும் கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் இந்தியாவில் தொடங்கியது.
6. 1857 இல் பம்பாய், சென்னை, கல்கத்தா ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன.
118.
119.
1. இரண்டு தேசங்கள் (இந்தியா, பாகிஸ்தான்) உருவான பின்னும் பிரிந்த பகுதிகள் இரு பக்கமும் வாழ்ந்த சிறுபான்மையின மக்களை பயமும் பாதுகாப்பின்மையும் ஆட்கொண்டிருந்தன.
2. பிரிவினை வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுதில்லிக்கு வெகுதொலைவில் காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.
3. பிரிவினை ஏற்படுத்திய அச்சம் இரு பக்கத்திலும் இருந்த சிறுபான்மையினரை மறுபக்கத்திற்கு குடிபெயரலாமா என்று பயத்தோடு எண்ண வைத்தது.
4. வன்முறை பரவியபோது காவல்துறை வேடிக்கை பார்த்தது.
5. இது இரு தேச சிறுபான்மையினரிடமும் இடம் பெயரும் எண்ணத்தை ஏற்படுத்தியது.
6. ஆகஸ்ட் 1947 முதல் நவம்பர் 1947 வரையிலான 4 மாத காலத்தில் 4.5 மில்லியன் மக்கள் மேற்கு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குக் குறிப்பாக கிழக்கு பஞ்சாப் நகரங்கள் மற்றும் புதுதில்லிக்கு இடம் பெயர்ந்தார்.
7. அதே நேரத்தில் 5.5 மில்லியன் முஸ்லிம்கள் இந்தியாவில் தங்கள் வீட்டை விட்டு (கிழக்கு பஞ்சாப் ஐக்கிய மாகாணம் மற்றும் தில்லி ஆகியவற்றிலிருந்து) இடம் பெயர்ந்து பாகிஸ்தானுக்குச் சென்றார்.
8. நிலைமை சீரான பின் மீண்டும் தங்களது இடங்களுக்கே திரும்பிவிடலாம் என்று நினைத்த மக்களுக்கு பின்னால் திரும்ப முடியவில்லை.
9. வங்காளத்தில் இரண்டு எல்லைகளிலும் கூட இந்த சட்டப்பெயர்வு நடைபெற்றது.
10. இரு நாடுகளிலும் குடிபெயர்ந்த குடும்பங்கள் விட்டுச் சென்ற சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டன.
120.
1. B.C. தத்தின் கைது நடவடிக்கை 18,பிப்ரவரி 1946-அன்று வெடித்துக் கிளம்பிய கிளர்ச்சிக்கு உந்துவிசையாக அமைந்தது.
2. மறுநாள் கோட்டைக் கொத்தளத்தில் பணியிலிருந்த மாலுமிகளும் அதிக எண்ணிக்கையில் கிளர்ச்சியில் இணைந்ததோடு பம்பாய் நகரை வாகனங்களில் வலம் வந்தவாறே காங்கிரஸ் கொடியை ஏந்தி அசைக்கவும் பிரிட்டிஷ் விரோதக் கூச்சல்களை எழுப்பி ஆரவாரிக்கவும் செய்தனர்.
3. HMIS ஹிந்துஸ்தான் கப்பலின் மாலுமிகளுக்கும் கராச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிறகு மின்னல் வேகத்தில் போராட்டத்தைத் துவக்கினர்.
4. 78 கப்பல்களிலும் 20 கரையோர பணியிடங்களிலும் இருந்த 20,000, மாலுமிகள் 18 பிப்ரவரி 1946-க்கும் பின் போராட்டத்தில் இறங்கியிருந்தனர்.
5. இராயல் இந்தியக் கடற்படை மாலுமிகள் போராட்டம், இந்தியக் கடற்படை மாலுமிகள் போராட்டம் இந்திய தேசிய இயக்க வரலாற்றில் ஒரு உன்னதமானப் பக்கம் ஆகும்.
6. ஒரு நீண்ட விடுதலைப் போராட்டம், இந்தியக் கடற்படை மாலுமிகள் போராட்டம் இந்திய தேசிய இயக்க வரலாற்றில் ஒரு உன்னதமானப் பக்கம் ஆகும்.
7. மாலுமிகள் போராட்டத்திற்கும் ஆதரவாக பம்பாய், பூனா, கல்கத்தா, ஜெசூர், அம்பாலா நகரங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இராயல் இந்திய விமானப்படை ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
8. ஜபல்பூரில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவச் சிப்பாய்களும் போராடலாயினர்.
121.
1. காலனிய காலத்திற்கு முந்தைய இந்தியாவில் கல்வியானது சாதி, மத அடிப்படையில் துண்டுபட்டிருந்தது.
2. இந்துக்களிடையே பிராமணர்கள் உயர்நிலை சார்ந்த சமய, தத்துவ அறிவினைப் பெறும் தனியுரிமையைப் பெற்றிருந்தனர்.
3. கல்வியைத் தங்களின் முற்றுரிமையாக்கிக் கொண்ட பிராமணர்கள் பிரதானமாக அர்ச்சகர்களாகவும் ஆசிரியர்களாகவும் சமூகத்தில் அங்கம் வகித்தனர்.
4. வித்யாலயங்கள், சதுஸ்பதிகள் என்றழைக்கப்பட்ட உயர்தரக் கல்விக் கூடங்களில் கல்வி பயின்றனர்.
5. புனிதமான மொழி எனக் கருதப்பட்ட சம்ஸ்கிருத மொழி வழியில் அவர்கள் கல்வி பயின்றனர்.
6. கட்டடக்கலை, உலோகவியல் சார்ந்த அறிவுத் திறனானது பரம்பரையாக ஒரு சந்ததியிடமிருந்து மற்றொன்றுக்கு கைமாற்றம் செய்யப்பட்டது.
7. பெண்களும், ஒடுக்கப்பட்டோரும் ஏனைய ஏழை மக்களும், கல்வியறிவு பெறுவதிலிருந்து தடை செய்யப்பட்டார்கள்.
8. கல்வி கற்பதில் மனப்பாட முறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.
122.
1. இந்திய தேசிய காங்கிரசை பல்வேறு மதங்களுக்கு அப்பாற்பட்ட ஓர் அரசியல் அடையாளத்தை தோற்றுவிக்க காந்தியடிகள் விரும்பினார்.
2. பல்வேறு சாயல்களைக் கொண்ட அரசு ஆதரவு பெற்ற வகுப்புவாத சக்திகள் இருந்தபோதிலும் இந்தியாவில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் பெரும் செல்வாக்குப் பெற்ற சக்தியாகத் திகழ்ந்தது .
3. 1937-இல் தேர்தல் நடைபெற்ற பதினோரு மாகாணங்களில் ஏழு மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றி வாகை சூடியது.
4. மேலும் மூன்று மாகாணங்களில் மிகப்பெரும் கட்சியாகத் திகழ்ந்தது.
5. முஸ்லிம் லீக்கின் செயல்பாடு மோசமாகவே அமைந்தது. மொத்த முஸ்லிம் வாக்குகளில் 4.8 விழுக்காடு வாக்குகளைப் பெறுவதில் மட்டுமே முஸ்லிம் லீக் பெற்றது காங்கிரஸ் மதசார்பற்ற மாபெரும் மக்கள் கட்சியாக எழுச்சிப் பெற்றது.
123.
1. ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியான செய்திப் பத்திரிகைகளின் வளர்ச்சி தமிழகத்தில் சுதேசி இயக்கத்திற்குத் துணை நின்றது.
2. செய்திப் பத்திரிகையை பயன்படுத்தி தேசியவாதச் செய்திகளை விரிந்துபட்ட பார்வையாளர்களிடையே பரப்புரை செய்த தலைவர்களுள் முதன்மையானவர் G. சுப்பிரமணிய பாரதி ஆவார்.
3. அவர் வேறு சில நபர்களுடன் இணைந்து தி இந்து (The Hindu) மற்றும் சுதேசமித்திரன் (தமிழில் வெளியிட்ட முதல் தினசரி) எனும் பத்திரிகைகளை நிறுவினார்.
4. இந்திய தேசியவாதம் ஒரு புதிய வழிகாட்டுதலை எதிர்பார்த்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் சுப்பிரமணிய பாரதி (1904) சுதேசமித்திரன் பத்திரிகையை துணையாசிரியராகப் பணியமர்த்தப்பட்டார்.
5. பாரதி சக்கரவர்த்தினி எனும் மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். அது பெண்களின் மேம்பாட்டிற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பத்திரிகையாகும்.
6. அயர்லாந்து நாட்டுப் பெண்மணியும் விவேகானந்தரின் சீடருமான சகோதரி நிவேதிதாவை பாரதி 1905-இல் சந்தித்தார். அப்பெண்மணி பாரதியின் தேசியவாதச் சிந்தனைகளுக்கு ஊக்கமளித்தார்.
7. பாரதியார்க்கு தீவிர தேசியவாதிகளின் வழிமுறைகள் அதிகம் ஏற்புடையனவாய் இருந்தன.
8. காங்கிரசின் சூரத் மாநாட்டிற்குப் பிறகு (1907) திலகர் மீது பாரதி கொண்டிருந்த ஆர்வமும் மற்றும் மேலும் பெருகியது.
9. திலகரின் "புதிய கட்சியின் சித்தாந்தங்கள்" எனும் நூலை பாரதி தமிழில் மொழியாக்கம் செய்தார்.
10. பாரதி ஆசிரியராகப் பணியாற்றிய இந்தியா என்ற வார இதழ் தீவிர தேசியவாதிகளின் குரலாக மாறியது.
11. 1907-இல் பிபின் சந்திரபாலை சென்னைக்கு அழைத்துக் கூட்டங்கள் நடத்தி, அதுபற்றி "இந்தியா இதழில் கட்டுரை எழுதினார்.
12. 1907-ல் "பால பாரதம்" என்ற ஆங்கில இதழை வெளியிட்டார்.
13. பாரதியின் சுதேசி கீதங்கள், ஜென்மபூமி, பாஞ்சாலி சபதம், மாதா மணிவாசகம், கண்ணன் பாட்டு, ஆகிய பாடல் தொகுதிகளின் மூலம் நாட்டு மக்களிடையே விழிப்புணர்வையும் சுதந்திர உணர்வையும் ஏற்படுத்தினார்.
124.
1.முதல் உலகப்போரின் முடிவில் ஜெர்மனியின் மீது பல கடுமையான விதிமுறைகள் சுமத்தப்பட்டன.
2.அதன் கட்டுப்பாட்டில் இருந்த காலனிய நாடுகள் பிரித்தெடுக்கப்பட்டால் அதன் படையளவு மோசமாக சுருங்கியது.
3.அல்சேஸ் மற்றும் லொரைன் பகுதிகளை பிரான்சிடம் விட்டுக் கொடுக்கவும்,சார் பள்ளத்தாக்கில் இந்நாடு தாற்காலிகமாகப் படைகளை நிறுத்திக் கொள்ளவும் ஜெர்மனி ஒப்புதல் வழங்க நிர்பந்திக்கப்பட்டது.
4.தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியான சைலேசியாவை போலந்திடம் ஒப்படைக்கவும் ஜெர்மனி கட்டாயப்படுத்தப்பட்டது.
5.மேலும் செலுத்தவே இயலாத ஒரு தொகையை (6,600 மில்லியன் பவுண்டுகள்)போர் இழப்பீடாகவும் ஜெர்மனியிடம் கோரப்பட்டது.
6.இத்தகைய கூறுகள் தங்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டதாக ஜெர்மனிக்குள் எண்ண அலை ஏற்படவும் அதன் பின்தொடர்ச்சியாக நாஜி கட்சியின் அரசியல் வெற்றிக்கும் வழிவகுத்தது.
7.இத்தாலியும் இத்தாலிய மக்கள் தொகையை அதிகமாகக் கொண்ட பகுதியாக கருதப்பட்ட டால்மேஷியாவை அதனிடமிருந்து பிரித்தெடுத்து புதிதாக உருவான யுகோஸ்லோவியாவிடம் ஒப்படைத்தால் பாதிக்கப்பட்டிருந்தது.
8.சிறு குடியரசாக மாற்றப்பட்ட ஆஸ்திரியா,ஜெர்மனியோடு இணைந்தால் பிரான்சு நாட்டிற்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் அது ஜெர்மனியிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டது.
125.
126.
பாஸ்டில் சிறை தகர்ப்பு :
1.அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் அல்லல்பட்ட பெண்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.அரசர் பாரிஸ் நகர வீதிகளுக்கு செல்லும்படி படைகளுக்குக் கட்டளையிட்டார்.இதனால் கோபம் கொண்ட மக்கள் 1789 ஜூலை 14-ல் பாஸ்டில் சிறையை தகர்த்து கைதிகளை விடுவித்தனர்.
தேசிய மன்றம்:
1.பாஸ்டில் சிறை தகர்ப்பால் ஊக்கம் பெற்ற தேசிய சட்டமன்றம் 1791ல் அரசியலமைப்பை உருவாக்கியது. புதிய அரசியலமைப்பு மூன்று வெவ்வேறு அங்கங்களை பரிந்துரைத்தது.
குழுக்களின் தோற்றம்:
1.தேசிய சட்டமன்றம் உருவாக்கப்பட்ட பின்னரும் கூட சாதாரண மக்களின் துயரங்கள் தொடர்கதையாக இருந்தன. மனநிறைவு பெறாத மக்கள் தங்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விவாதம் செய்ய அரசியல் குழுக்களை உருவாக்கத் தொடங்கினர்.
2.முக்கியமான குழு ஜேக்கோபியன் குழு ஆகும்.இதன் தலைவர் மாக்ஸ்மிலியன் ரோபஸ்பியர் ஆவார்.கார்டிலியர் கிளப்பில் செல்வாக்கு பெற்றவர் டாண்டன் ஆவார்.
3.ஜேக்கோபியன் குழுவிற்குள் இருந்த கிராண்டியர்கள் அரசரின் ஆதரவாளராக இருந்தனர்.
ஜேக்கோபியன்களின் ஆட்சி:
1.1793க்கும் 1794க்கும் இடைப்பட்ட காலம் தீவிர சீர்திருத்தங்களுக்கான காலமாகும்.1794 பிப்ரவரி 4ல் ஜேக்கோபியர்கள் அதிகம் இருந்த சட்டமன்றம் பிரான்சின் அனைத்துப் பகுதிகளிலும் அடிமைமுறையை ஒழித்து ஆணை பிறப்பித்தது.அரசாங்கமும்,சமூகத்தின் அடித்தளமும் அளவுக்கு மேலாக தீவிரமயமாக்கப்பட்டதால் கோபம் கொண்ட உறுப்பினர்கள் ரோபஸ்பியரை 1794ல் தூக்கிலிட்டனர்.
127.
ஸ்பெயின் தேசிய அரசு:
1.அராபிய அரசர்களின் வழித்தோன்றல்களாகிய முஸ்லிம் மன்னர்களாகிய மூர்களின் கட்டுப்பாட்டில் ஸ்பெயினின் பெரும்பாலான பகுதிகள் இருந்தன.
2.அராகன்,காஸ்டைல் என இரண்டு முக்கிய அரசுகள் அங்கிருந்தன.
3.ஸ்பெயின் நாட்டின் வரலாற்றின் ஒரு திருப்புமுனையாக அராகன் அரசர் பெர்டினான்ட் காஸ்டைல் இளவரசி இசபெல்லாவை திருமணம் செய்தார்.
4.1479 இல் அரசரும் அரசியும் தங்கள் கைகளில் அதிகாரத்தை எடுத்தனர்.
5.மன்னர் சபையில் இருந்து பிரபுக்களை நீக்கியதன் மூலம் அவர்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்.ஸ்பெயின் ஒரு தனி நாடாக உருவெடுத்தது.
இங்கிலாந்து அரசு:
1.அரச சிம்மாசனத்தை அடைய யார்க் குடும்பம் மற்றும் லாங்காஸ்டர் குடும்பம் என இரண்டு அரச குடும்பங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
2.இதன் விளைவாக ரோஜாப்பூக்கள் போர் நடந்தது.அவர்கள் முறையே வெள்ளை மற்றும் சிவப்பு ரோஜாக்கள் உடைய அடையாளக்குறிகளை அணிந்தனர்.அதனால் இப்பெயர் பெற்றது.
3.இந்த உள்நாட்டுப்போரில் ஹென்றி டியூடர் வெற்றி வாகை சூடி,இங்கிலாந்தில் புதிய அரசாட்சி அமைய வழிவகுத்தார்.
4.ஏழாம் ஹென்றி என்று பட்டம் சூட்டிக்கொண்ட அவர் யார்க் குடும்பத்தைச் சேர்ந்த எலிசபெத் உடன் திருமண ஒப்பந்தத்தில் ஈடுபட்டார்.இதனால் இங்கிலாந்து ஒரு தேசிய அரசராக உருவெடுத்தது.
5.பிரான்சின் கிழக்கே உள்ள பர்கண்டி என்பது ஒரு சக்திவாய்ந்த நாடாகும்.பெயரளவிற்கே பிரான்ஸ் அரசரின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த கிளர்ச்சிமிகுந்த பகுதியான பர்கண்டியை ஆங்கிலேயர்கள் பிரான்சுக்கு எதிராக ஆக்கிரமித்தனர்.
6.பிரெஞ்சு அரசர் ஏழாம் சார்லசுக்குக்காக ஜோன் ஆஃப் ஆர்க் என்ற பெயருடைய ஒரு இளம்பெண் வீரதீரமாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் போரை வென்றார்.ஆர்லியன்ஸின் பணிப்பெண் (Maid of Orleans) என்ற பட்டம் ஜோன் ஆஃப் ஆர்க் மங்கைக்கு வழங்கப்பட்டது.
7.ஜோன் ஆஃப் ஆர்க்கின் மறைவுக்குப் பிறகு நூறாண்டுகள் போரைத் தொடர்ந்த பிரெஞ்சு அரசு அதில் வெற்றி பெற்றது.
8.கிளர்ச்சி மிகுந்த இந்தப்பகுதி இறுதியாக 1483 ஆம் ஆண்டு பிரான்சின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
9.பிரான்ஸ் ஒரு வலுவான மத்திய மன்னராட்சி நடைபெறும் அரசாக பதினோராம் லூயி உருவெடுத்தது.
128.
1.1960 களில் தொழில் துறையிலும் வேளாண்மையிலும் வளர்ச்சி ஏற்பட்ட பின்னரும் வறுமை குறையவில்லை.
2.கிராமப்பகுதிகள்,நகர்ப்பகுதிகள் ஆகிய இரண்டிலும் வறுமை நிலவுகிறது.
3.கிராமப்புற வறுமையைப் போக்குவதற்காக அரசாங்கத்தால் முழுவீச்சில் ஊரக வளர்ச்சித் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
4.சமூக வளர்ச்சித் திட்டங்கள்,பஞ்சாயத்துராஜ் போன்ற உள்ளாட்சி நிறுவனங்களைப் புதுப்பிப்பது,சிறு குறு விவசாயிகளைப் போன்ற குறிப்பிட்ட குழுக்களை இலக்காகப் கொண்ட திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
5.1980இல் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் ஒருமுகப்படுத்தப்பட்ட திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
6.கிராமப்புற குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு அவர்களுக்கு சில சொத்துக்களை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
7.இதன் மூலம் அவர்கள் வறுமையிலிருந்து வெளியே வர இயலும்.
8.நாட்டிலிருந்த 5011 ஊராட்சி ஒன்றியங்களிலும் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
9.உதவியைப் பெறும் குடும்பத்தின் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு மானியங்களும் மாறுபட்டன.
10.இத்திட்டத்தால் அடையப்பட்ட குறிப்பிடத்தக்க வெற்றியைக் கருத்தில் கொண்டு கிராமப்புற ஏழைகளின் சுய வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டமாக 1999 இல் இது மறுசீரமைக்கப்பட்டது.
11.தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டமானது (பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
12.ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த வயதுவந்த உறுப்பினர்களுக்கு தனித்திறனற்ற உடல் உழைப்பு,வேலையைத் செய்ய விருப்பம் உடையவர்களுக்கு,ஒவ்வொரு ஆண்டும் 100நாட்களுக்கு ஊதியத்துடன் கூடிய வேலையைக் கொடுப்பதன் மூலமே இதை வெற்றிகரமாகச் செய்தது.
13.இம்முயற்சியின் கீழ்க்கொள்ளப்படும் பணிகள் கிராமப்புறங்களில் சாலைகள்,கால்வாய்கள்,சிறிய நீர்ப்பாசன வேலைகள்,மரபு சார்ந்த நீர் நிலைகளை மீட்டெடுத்தல் போன்ற நீண்ட காலம் பயன்தரும் செல்வங்களை உருவாக்கும்.
129.
1. தென்னாப்பிரிக்காவில் ஆற்றிய மனிதாபிமானப் பணிகளுக்காகக் காந்தியடிகளுக்கு கைசர்-இ-ஹிந்த் என்ற தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
2. 1899-1900 களில் போயர் போரின்போது தூக்குபடுக்கை கொண்டு செல்வோர் படையில் இந்திய ஆர்வலர்களின் துணைக் கண்காணிப்பாளராக சேவை புரிந்தமைக்காக போயர் போர் வெள்ளி பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.
3. 1906 - இல் ஆம்புலன்ஸ் படையில் இந்திய ஆர்வலர்களின் ஒரு அதிகாரியாகச் செயல்பட்ட அவரது சேவைகளைப் பாராட்டி ஜூலு போர் வெள்ளிப் பதக்கம் காந்தியடிகளுக்கு வழங்கப்பட்டது.
4. கிலாபத் இயக்கத்தின் தொடர்பில் ஒத்துழையாமை இயக்கத்தைக் காந்தியடிகள் தொடங்கியபோது அனைத்துப் பதக்கங்களையும் காந்தியடிகள் திரும்ப ஒப்படைத்தார்.
5. ஆங்கில அரசு மீதான மதிப்பையோ அல்லது அன்பையோ என்னால் விருப்பு வைக்க இயலவில்லை என்று காந்தியடிகள் கூறினார்.
130.
1. 1920 களில் ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டங்களின் மையப்புள்ளியாக அம்பேத்கர் விளங்கினார்.
2. மஹர் சாதியின் ராணுவவீரரின் மகனாகப் பிறந்தார் டாக்டர். அம்பேத்கர்.
3. எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்த அம்பேத்கர் கல்வி உதவித்தொகை பெற்று 1912 -ல் பட்டதாரி ஆனார்.
4. பரோடா அரசின் கல்வி உதவித்தொகை பெற்ற அவர் அமெரிக்கா சென்று பட்டமேற்படிப்பு பட்டத்தையும்.
5. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
6. சட்டம் மற்றும் பொருளாதார படிப்புகளுக்காக லண்டன் சென்றார்.
7. 1916- இல் மானுடவியல் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு, இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் கட்டுரையை சமர்ப்பித்தார்.
8. தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதிகள் மற்றும் இடங்களின் ஒதுக்கீடு வேண்டும் என்று வாதிட்டார்.
9. அம்பேத்கர் புதிய பத்திரிகைகள் மற்றும் அமைப்புகளைக் தோற்றுவித்தார்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards