12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
1929 டிசம்பர் 31 இல் எங்கு முதலில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது?
டெல்லி
மும்பை
லாகூர்
லக்னோ
2.
சௌரி சௌரா புரட்சி நடைபெற்ற ஆண்டு யாது?
1922
1921
1923
1927
3.
இந்திய கவுன்சில் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
1920
1925
1918
1919
4.
தலித் பகுஜன் இயக்கத்தை தொடங்கிய தலைவர் யார் ?
அம்பேத்கர்
பாரதிதாசன்
பெரியார்
காந்தி
5.
சாம்பரான் சத்யாகிரக சோதனை நடைபெற்ற ஆண்டு எது ?
1918
1915
1919
1917
6.
சௌரி சௌரா சம்பவ விளைவு யாது?
7.
இடதுசாரி இயக்கம் பற்றி எழுதுக?
8.
லாகூர் காங்கிரஸ் மாநாடு பூரண சுயராஜ்ஜியம் விவரி?
9.
வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம் பற்றி எழுதுக?
10.
தண்டியாத்திரை பற்றி எழுதுக.
11.
ஜாலியன் லாலாபாக் படுகொலைக்கு காரணம் யாது?
12.
சௌரி சௌரா சம்பவம் என்றால் என்ன?
13.
சுயராஜ்ஜிய கட்சி மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி எழுதுக?
14.
வகுப்புவாரி தொகுதி ஒதுக்கீடு பற்றி குறிப்பு வரைக?
15.
சைமன் குழு - நேரு அறிக்கை பற்றி எழுதுக?
16.
மாண்டேகு - செம்ஸ் ஃபோர்டு சீர்திருத்தங்கள் யாவை?
17.
வட்டமேசை மாநாடுகள் பற்றி எழுதுக?
18.
சைமன்குழு - நேரு அறிக்கை லாகூர் காங்கிரஸ் பற்றி விவரி?
19.
காந்தியடிகளின் சத்தியாகிரக சோதனைகள் பற்றி விவரி?
1.
(c)
லாகூர்
2.
(b)
1921
3.
(d)
1919
4.
(a)
அம்பேத்கர்
5.
(d)
1917
6.
இந்த நிகழ்வில் 22 போலீசார் உயிரிழந்ததால், காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.
7.
1. இடதுசாரிகள் தொழிலாளர் மற்றும் விவசாய இயக்கங்களைத் தொடங்கினார்கள்.
2. இடதுசாரி சித்தாந்தத்தை பரப்புவதில் நேரு மற்றும் சுபாஷ் ஆகியோர் தங்கள் பங்களிப்பை தந்தார்கள்.
8.
1. இந்திய விடுதலை மற்றும் காங்கிரஸ் வரலாற்றில் காங்கிரஸ் கட்சியின் லாகூர் மாநாடு சிறப்பு வாய்ந்ததாகும்.
2. 1929 டிசம்பர் 31 - இல் லாகூரில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் நாளை விடுதலை நாளாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
3. சட்டமறுப்பு இயக்கம் காந்தியடிகளின் தலைமையில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
9.
1. தமிழ்நாட்டில் ராஜாஜி தலைமையில் உப்பு சத்தியாகிரக யாத்திரை வேதாரண்யம் நோக்கி நடந்தது.
2. திருச்சி தொடங்கி 150 மைல்களை தொலைவில் தஞ்சாவூர் மாவட்டம் கரையோர கிராமமான வேதாரண்யம் வரை நடைபெற்றது.
3. 1930 ஏப்ரல் 13 இல் ஆரம்பித்து இந்த நடைப்பயணம் ஏப்ரல் 28 - இல் முடிவடைந்தது.
10.
1. சட்டமறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக காந்தியடிகள் தண்டியாத்திரையை அறிவித்தார்.
2. உப்பு மீது அநியாய வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டம் இதுவாகும்.
3. 1930 ஏப்ரல் 6 - இல் தண்டி சென்று அடைந்தார். இது சபர்மதி ஆசிரமத்தில் இருந்து குஜராத் தண்டி வரை 375 கிலோமீட்டர், 78 தொண்டர்களுடன் நடைபெற்றது.
11.
1. நாடு முழுவதும் நடந்த மக்கள் போராட்டங்கள் மற்றும் மக்களிடம் காணப்பட்ட மகத்தான தன்னெழுச்சி காரணமாக காலனி அரசு ஆத்திரமடைந்து.
2. 1919 ஏப்ரல் 13-இல் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் பகுதியில் நிராயுதபாணிகளான மக்கள் திரள் மீது மிகக் கொடுமையான அரசியல் குற்றங்கள் இழைக்கப்பட்டன.
3. மக்களை பார்த்து எந்திரத் துப்பாக்கிகளில் குண்டுகள் தீரும் வரை சுடுமாறு ஜெனரல் டையர் உத்தரவிட்டார்.
12.
உத்திரப் பிரதேசத்தில் கோரக்பூர் மாவட்டத்தில் சௌரி சௌரா என்ற கிராமத்தில் மதுக் கடைகள் மற்றும் உள்ளூர் சந்தையில் அதிக விலைக்குப் பொருட்கள் விற்கப்படுவதைக் கண்டித்து 1922 பிப்ரவரி 5 ஆம் நாள் 3 ஆயிரம் நபர்களுடன் காங்கிரஸ் பேரணி நடத்தியது. இதுவே சௌரி சௌரா சம்பவம் எனப்படும்.
13.
1. ஒத்துழையாமை இயக்கத்தைத் திருப்பிப் பெற்ற பிறகு அடுத்து என்ன என்ற கேள்வி எழுந்தது. சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு ஆகியோர் புதிய வழியில் செயல்பாட்டை அறிவித்தனர்.
2. சுயராஜ்ஜியம் வேண்டுவோர் மற்றும் மாற்றம் வேண்டுவோர் (Pro - changers) என்று இந்தக் குழு அழைக்கப்பட்டது.
3. தமிழ்நாட்டில் சத்தியமூர்த்தி இந்தக் குழுவில் இணைந்தார். தீவிர அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என்றும் அதில் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது அடக்கம் என்றும் அவர்கள் விரும்பினார்கள்.
14.
1. லண்டனில் நடந்த இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகக் காந்தியடிகள் மற்றும் அம்பேத்கர் செல்வதற்கு முன் அவர்கள் இடையே தனித்தொகுதிகள் பற்றிய கருத்தில் நடந்த பேச்சுக்கள் தோல்வி அடைந்தன.
2. 1932 ஆகஸ்டில் வகுப்புவாரித் தொகுதி ஒதுக்கீடுகள் குறித்து பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. இவ்வாறாக இட ஒதுக்கீட்டுடன் கூறிய தனித் தொகுதிகள் பற்றி அம்பேத்கரின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.
15.
1. 1929 - 30 ஆம் ஆண்டில் அரசியல்சாசன சீர்திருத்தங்களின் முதல் தவணையை பிரிட்டிஷார் பரிசீலித்து அறிவிக்க வேண்டியிருந்தது.
2. சட்ட உருவாக்கக் குழுவான சைமன் குழு நிறுவப்பட்டது. அதன் தலைவரான சைமனின் பெயரில் இந்தக் குழு அமைந்தது.
3. வெள்ளையர்கள் மட்டுமே இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர்.
4. 1927 - இல் மதராஸில் நடந்த காங்கிரஸ் வருடாந்திர மாநாட்டில் இந்தக் குழுவை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது. இதன் முடிவாக மோதிலால் நேரு அறிக்கை வெளியானது.
16.
1. இந்தியாவுக்கான பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் எட்வின் மாண்டேகுவின் அரசுப்பிரதிநிதி வைசிராய் செம்ஸ்ஃபோர்டு இந்தியாவுக்கான அரசியல் மாற்றங்களை அறிவித்தார்.
2. இரட்டை ஆட்சியில் கீழ் மாகாண அரசுகளுக்கு நிர்வாகத்தில் அதிகப் பங்கு வழங்கப்பட்டது.
3. இந்தத் சட்டத்தின் கீழ் சட்டம் ஒழுங்கு, நிதி, ஆகிய முக்கியமான துறைகள் ஆங்கிலேயருக்கு ஒதுக்கீடு செய்யப்படும். அவர்கள் அனைவரும் ஆளுநர்களின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர்.
4. மேலும் சிறப்பு மறுப்பானை அதிகாரங்களின் கீழ் அந்தந்த மாகாணங்களின் ஆளுநர்கள் அமைச்சர்களை அதிகாரம் செய்ய இயலும்.
5. மத்திய சட்டப் பேரவையில் இருந்த 144 மொத்த உறுப்பினர்களின் 41 உறுப்பினர்களின் நியமனம் செய்யப்பட வேண்டும்.
6. மத்திய சட்டப் பேரவை குறித்து விவாதிக்கும் சட்ட அம்சம், இரண்டு அவைகளுடன் இரட்டை அடுக்கு சட்டப்பேரவை மற்றும் மேலவையை உருவாக்கியது.
7. மாநிலங்களவை என்று மேலவை என அழைக்கப்பட்டு மொத்தம் இருந்த 60 உறுப்பினர்களில் 26 நபர்கள் நியமன உறுப்பினர்களாக இருந்தனர்.
17.
1. இலண்டனில் ஒரு வட்டமேசை மாநாட்டைக் கூட்டவிருப்பதாக அரசு அறிவித்தது.
2. சுதந்திரம் பெற்றே ஆக வேண்டும் என்ற கருத்தில் இந்த வட்டமேசை மாநாட்டை புறக்கணிக்கப் போவதாகக் காங்கிரஸ் அறிவித்தது.
3. காங்கிரசுடன் பேச்சுக்கள் தொடங்கின 1931 - மார்ச் 5 இல் காந்தி இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது.
4. சட்டமறுப்பு இயக்கத்தின் முடிவைக் குறிப்பாக அது அமைத்தது.
5. 1931 காந்தி சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவர்.
6. 1931 - ல் நடந்த வட்டமேசை மாநாட்டில் மட்டும் காந்தியடிகள் கலந்து கொண்டார்.
7. காந்தியும் இர்வின் பிரபுவும் ஒப்பந்தத்தின் அம்சங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
8. சிறையில் அடைக்கப்பட்ட 10,000 மேற்பட்ட இந்தியர்களை விடுதலை செய்ய இர்வின் ஒப்புக்கொண்டார்.
9. 1930 - 31 மற்றும் 32 இல் நடைபெற்ற வட்ட மேஜை மாநாடுகளிலும் கலந்து கொண்ட ஒரே இந்திய தலைவர் டாக்டர். B.R. அம்பேத்கர் ஆவார்.
18.
1. 1929 - 30 ஆம் ஆண்டில் அரசியல் சாசன சீர்திருத்தங்களின் முதல் தவணையை பிரிட்டிஷார் பரிசீலித்து அறிவிக்க வேண்டியிருந்தது.
2. இதன் ஆயத்தத்தில் சட்ட உருவாக்கக் குழுவான சைமன் குழு நிறுவப்பட்டது.
3. இதில் வெள்ளையர்கள் மட்டுமே உறுப்பினராக இருந்தார்கள்.
4. இதை இந்தியர்கள் அவமானமாகக் கருதினர்.
5. 1928 டிசம்பரில் கல்கத்தாவில் கூடிய அனைத்துக் கட்சிகளும் வகுப்புவாதம் பிரதிநிதித்துவம் என்ற விஷயத்தை ஏற்கத் தவறின.
6. 1929 - இல் நடக்கவிருக்கும் அடுத்த மாநாட்டில் நேரு தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
7. இந்திய விடுதலை மற்றும் காங்கிரஸ் வரலாற்றில் காங்கிரஸ் கட்சியின் லாகூர் மாநாடு சிறப்பு வாய்ந்ததாகும்.
19.
1. மோகன்தாஸ் காந்தி 1869 - ல் கடற்கரையோர நகரான போர்பந்தரில் பிறந்தார்.
2. 1915 - ஆம் ஆண்டு அவர் இந்தியா திரும்பியபோது கோகலேவின் அறிவுரையை ஏற்று அரசியல் தீவிரம் காட்டினார்.
3. சம்பாரனின் இயக்கம் 1917 - இல் இருந்த விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று இந்திய மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியை காந்தி மேற்கொண்டார்.
4. ஐரோப்பிய வர்த்தகர்கள் படிப்படியாக சம்பாரணை விட்டே வெளியேறிவிட்டனர்.
5. ஆலைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் மற்றும் அகமதாபாதில் காந்தியடிகளின் உண்ணாவிரதம் நடைபெற்றது.
6. கோரிக்கையை ஏற்கவேண்டிய நிலைக்கு ஆலை முதலாளிகளை நிர்ப்பந்தித்தது.
7. 1918 - ல் நில வருவாய் வசூலை ரத்து செய்யுமாறு காலனி ஆட்சி நிர்வாகத்திடம் அவர்கள் கோரினர்.
8. இறுதியாக தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவடைந்தது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards