12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/10/2019
காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
மூன்று வட்டமேசை மாநாடுகளின் முடிவின் தோல்விக்குப் பிறகு ஏன் காங்கிரஸ் தடை செய்யப்பட்டது?
2.
பிரதம அமைச்சர் ராம்சே மெக்டொனால்டின் வகுப்புவாத அறிக்கையைப் பற்றி எழுதுக.
3.
மாற்றத்தை விரும்புபவர்கள் – மாற்றத்தை விரும்பாதவர்கள் - வேறுபடுத்துக.
4.
பிராமணரல்லாதார் இயக்கத் தலைவர்கள் காலனி அரசாங்கத்தைக் கையாள்வதில் தொடக்க கால தேசியவாதிகள் கடைப்பிடித்த அதே யுக்தியினை கையாண்டனர். விவரி.
5.
பூனா ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் யாது?
6.
மாகாணங்களில் இரட்டையாட்சி முறை பற்றி எழுதுக.
7.
ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்து குறிப்பு எழுதுக.
8.
டாக்டர். அம்பேத்கரின் கல்விப்பணி குறித்து, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்காக அவரின் செயலூக்கத்தை முதன்மைப்படுத்தி விளக்குக.
9.
இந்திய விடுதலைப் போரில் மகாத்மா காந்தியடிகளின் பங்கினை மதிப்பிடுக.
10.
ஒத்துழையாமை இயக்கத்திலிருந்து சட்ட மறுப்பு இயக்கம் எவ்வழிகளில் மாறுபட்டிருந்தது?
11.
ஒத்துழையாமை இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் சூழலையும் அதன் விளைவுகளையும் விவரி.
1.
1. சட்ட மறுப்பு இயக்கத்தை மீண்டும் கையில் எடுப்பது என்று காங்கிரஸ் தீர்மானித்தது பொருளாதார வீழ்ச்சி காரணமாகக் குறிப்பாக விவசாயிகள் உட்பட பொதுவாகவே நாட்டு மக்களின் பொருளாதார நிலைமை மோசமடைந்தது.
2. தேசியவாதம் தொடர்பான பிரசுரங்கள் அனைத்தும் சட்டத்துக்குப் புறம்பானவை என அறிவிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
3. இந்த இயக்கம் பொதுவாக மந்த நிலையை அடைந்து 1933 மே மாதம் அதிகாரப்பூர்வமாக
நிறுத்தப்பட்டது.
4. பின்னர் மே 1934-இல் முற்றிலும் முடிவுக்கு வந்தது.
2.
1. இலண்டனில் நடந்த இரண்டாவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக காந்தி மற்றும் அம்பேத்கர் செல்வதற்கு முன் அவர்கள் இடையே தனித்தொகுதிகள் பற்றிய கருத்தில் நடந்த பேச்சு தோல்வி அடைந்தன.
2. வட்ட மேசை மாநாட்டின் போது இருதலைவர்கள் இடையே இதே கருத்து குறித்து விவாதம் நடந்தது.
3. பிரிட்டிஷ் "பிரதமர் ராம்சே மேக் டொனால்டு" இதில் தலையிட்டு முடிவெடுக்க வேண்டும் என்று இந்த கருத்தில் முடிவு எட்டப்படாமல் இருந்தது.
4. 1932-ல் வகுப்பு வாரித் தொகுதி அறிவிக்கப்பட்டது.
3.
1. சட்டப்பேரவையைக் கைப்பற்றி தேசியவாத உணர்வூட்டி அதன் செயல்பாடுகளை முடக்கும் ஆற்றலைத் தேசியவாதிகள் வெளிப்படுத்தினர்.
2. சுயராஜ்யம் வேண்டுவோர் மற்றும் மாற்றம் வேண்டுவோர் (pro - changers) என்று இந்த குழு அழைக்கப்பட்டது.
3. சட்டப்பேரவை நுழைவை உதித்த மற்றொரு குழு காந்தி வழியைப் பின்பற்றி மக்களை ஒன்று திரட்டும் பணிகளில் ஆர்வம் காட்டியது.
4. எந்த மாற்றமும் தேவையில்லை என்று இந்த அணியை மாற்றம் விரும்பாதோர் - No - Changes என்று அழைக்கப்பட்டார்கள்.
4.
1. பல்வேறு அடுக்குகள் கண்ட இந்திய சமூகமும் அதனுள் இருந்த முரண்பாடுகளும் உயர் வகுப்பு ஆளுமையைக் கேள்வி கேட்டும் சாதி அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் தொடங்கப்பட ஏதுவாக அமைந்தன.
2. பிராமணர் அல்லாத தலைவர்களால் நடத்தப்பட்ட இந்த இயக்கம் பிராமணர்கள் மற்றும் இதர உயர் வகுப்பினரின் மேன்மை குறித்துக் கேள்வி எழுப்பின.
3. காலனி ஆதிக்க நிர்வாகிகள் மற்றும் ஏற்படுத்தப்பட்ட கல்வி நிலையங்கள் ஆகியன மறைமுகமாக அவர்களின் தோற்றத்துக்கு வழிவகுத்தன.
4. காலனி ஆதிக்க காலத்தில் இருந்த உயர் வகுப்பு ஆடவர் அனைவரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பூர்வீக மக்களுக்குத் திறந்த மனதுடன் நடந்துகொண்டனர்.
5.
1. தீண்டத்தகாதோருக்குத் தனித் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதைத் தனது வாழ்நாள் முழுவதும் காந்தி அறிவித்தார்.
2. காந்தியின் உயிரைக் காப்பாற்றும் அழுத்தம் அம்பேத்கருக்கு ஏற்பட்டது, ஆலோசனை கூட்டம் பிரார்த்தனை நடந்தது.
3. அம்பேத்கர் மற்றும் காந்தி இடையே ஏற்பட்ட புதிய ஒப்பந்தம் 1932-இல் பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது.
6.
1. 1919-ஆம் ஆண்டு சட்டம் இந்திய கவுன்சில்கள் சட்டம் என்று அழைக்கப்பட்டன.
2. மாகாண சட்டப்பேரவைகளைப் பெரும்பான்மையாகத் தேர்வு செய்தவர்கள் உடன் விரிவுபடுத்த இந்தச் சட்டம் வகை செய்தது.
3. இரட்டை ஆட்சியின் கீழ் மாகாண அரசுகளுக்கு நிர்வாகத்தில் அதிகப் பங்கு வழங்கப்பட்டது.
4. இந்தத் திட்டத்தின் கீழ் சட்டம் ஒழுங்கு, நிதி ஆகிய முக்கியமான துறைகள் ஆங்கிலேயருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் ஆளுநர்களின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர்.
7.
1. நாடு முழுவதும் நடந்த மக்கள் போராட்டங்கள் மற்றும் மக்களிடம் காணப்பட்ட மகத்தான தன்னெழுச்சி காரணமாக காலனி அரசு ஆத்திரமடைந்தது.
2. 1919 ஏப்ரல் 13 இல் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் பகுதியில் நிராயுதபாணிகளான மக்கள் திரள் மீது மிகக் கொடுமையான அரசியல் குற்றம் நடத்தப்பட்டது.
3. துப்பாக்கிகளின் குண்டுகள் தீரும் வரை சுட்டுமாறு ஜெனரல் டையர் உத்தரவிட்டார்.
4. அரசு தகவல்படி 379 பேர் இறப்பு என்று கூறப்பட்டது.
5. இதற்கு எதிராக தாகூர் தனது "நைட்ஹுட்" பட்டத்தை துறந்தார்.
8.
1. 1920 களில் ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டங்களின் மையப்புள்ளியாக அம்பேத்கர் விளங்கினார்.
2. மஹர் சாதியின் ராணுவவீரரின் மகனாகப் பிறந்தார் டாக்டர். அம்பேத்கர்.
3. எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்த அம்பேத்கர் கல்வி உதவித்தொகை பெற்று 1912 -ல் பட்டதாரி ஆனார்.
4. பரோடா அரசின் கல்வி உதவித்தொகை பெற்ற அவர் அமெரிக்கா சென்று பட்டமேற்படிப்பு பட்டத்தையும்.
5. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
6. சட்டம் மற்றும் பொருளாதார படிப்புகளுக்காக லண்டன் சென்றார்.
7. 1916- இல் மானுடவியல் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு, இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் கட்டுரையை சமர்ப்பித்தார்.
8. தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதிகள் மற்றும் இடங்களின் ஒதுக்கீடு வேண்டும் என்று வாதிட்டார்.
9. அம்பேத்கர் புதிய பத்திரிகைகள் மற்றும் அமைப்புகளைக் தோற்றுவித்தார்.
9.
1. 1917- இல் சம்பரானில் இருந்த விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று இந்திய மக்களை ஒன்றிணைக்கும் முதல் முயற்சியை காந்தியடிகள் மேற்கொண்டார்.
2. கேதா போராட்டம் : 1918 நில வருவாய் வசூலை ரத்து செய்யுமாறு காலனி ஆட்சி நிர்வாகத்திடம் அவர்கள் கோரினர்.
3. ரௌலட் சட்டத்திற்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை ஆகஸ்ட் 31. 1920 ல் தொடங்கினர்.
4. சௌரி சௌரா சம்பவம் (1922) காரணமாக ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி திரும்பப் பெற்றார்.
5. 1930 ஆம் ஆண்டு தொடங்கிய சட்டமறுப்பு இயக்கம்.
6. 1930 தண்டி பயணம் தொடங்குதல் உப்பு மீது வரியைக் குறைக்க செய்தல்.
7. 1931 காந்தி இர்வின் உடன்படிக்கை மேற்கொள்ளுதல்.
8. 1942, வெள்ளையனே வெளியேறு இயக்கம். போன்ற பல போராட்டங்கள் மூலம் காந்தி இந்திய விடுதலைக்கு முக்கிய பங்கு ஆற்றியுள்ளார்.
10.
1. 1929 - டிசம்பர் -31 இல் லாகூரின் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி -26 ஆம் நாள் விடுதலை நாள் கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டது.
2. சட்ட மறுப்பு இயக்கம் காந்தி தலைமையில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
3. லண்டனில் ஒரு வட்ட மேசை மாநாட்டைக் கூட்டவிருப்பதாக அரசு அறிவித்தது. ஆனால் சுதந்திரம் பெற்றே ஆக வேண்டும் என்ற கருத்தில் இந்த வட்ட மேசை மாநாட்டை புறக்கணிக்கப் போவதாகக் காங்கிரஸ் அறிவித்தது.
4. காங்கிரஸ் பங்கேற்காவிட்டால் மாநாட்டை அரசு நடத்துவது பயன் இல்லை என்று அனைவரும் அறிந்திருந்தனர்.
5. காங்கிரஸ் பேச்சுக்கள் தொடங்கின 1931 - மார்ச் - 5 இல் காந்தி இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது.
6. இந்தியாவில் சட்ட மறுப்பு இயக்கத்தின் முடிவைக் குறிப்பதாக அது அமைந்தது.
11.
1. கிலாபத் மாநாட்டில் காந்தியடிகள் வற்புறுத்தலின் பேரில் 1920 ஆகஸ்ட் 31 முதல் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டது.
2. அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு நீதிமன்றங்களை புறக்கணிக்கும் திட்டத்தை அலகாபாத்தில் கூடிய அனைத்து கட்சி கூட்டம் முடிவு செய்தது.
3. 1920 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் சிறப்பு அமர்வில் காலனி ஆதிக்க அரசுடன் ஒத்துழையாமையைக் கடைப்பிடித்தது.
4. காந்தியடிகள் யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5. கிலாபத் மற்றும் பஞ்சாப் குறைகள் சரிசெய்யப்பட்டு தன்னாட்சி அரசு நிறுவப்படும் வரை இந்த ஒத்துழையாமையைக் கடைபிடிக்க உறுதி ஏற்கப்பட்டது.
6. 1920 ஆம் ஆண்டு நாக்பூரில் நிகழ்ந்த காங்கிரஸ் அமர்வில் முந்தைய தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
7. காங்கிரஸ் கமிட்டிகளை அங்கீகரித்து அமைப்பதற்கு வகை செய்யும் மற்றொரு முக்கிய தீர்மானம் நாக்பூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
8. இதனால் பெரும் எண்ணிக்கையிலான பணியாளர்கள் இந்த இயக்கத்தில் சேர்ந்தனர்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards