12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
ஐரோப்பாவில் அமைதியின்மை
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
_______ இடையே ஏழு வாரப் போர் நடந்தது.
டென்மார்க் , பிரஷ்யா
பியட்மாண்ட்-சார்டினியா , ஆஸ்திரியா
பிரான்ஸ், பிரஷ்யா
ஆஸ்திரியா , பிரஷ்யா
2.
“இரு உலகங்களின் நாயகன்” என கொண்டாடப்பட்டவர் ________ ஆவார்.
சார்லஸ் ஆல்பிரட்
பிஸ்மார்க்
மூன்றாம் நெப்போலியன்
கரிபால்டி
3.
கூற்று: தேசியவாதத்திற்கு 1848ஆம் ஆண்டு தனித்துவமான வெற்றிகள் கிடைத்த ஆண்டாகும்.
காரணம்: சர்வாதிகாரம் மறைந்தது போன்ற பிம்பம் சிறிது காலத்திற்குத் தோன்றியது.
கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்றும், காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
கூற்று சரி. காரணம் தவறு.
கூற்று தவறு. காரணம் சரி
4.
கோட் டி நேச்சர் என்ற நூலின் ஆசிரியர் _______ ஆவார் .
சார்லஸ் ஃபூரியர்
எட்டியன்-கேப்ரியல் மோராலி
செயின்ட் சீமோன்
பகுனின்
5.
கூற்று: மக்கள் உரிமை சாசன இயக்கம் ஒரு கலவரமோ, புரட்சியோ அல்ல.
காரணம்: அது தொழிலாளர் வர்க்கத்தின் கட்டுப்படுத்தப்பட்ட இயக்கமாகும்.
கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்றும், காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
கூற்று சரி. காரணம் தவறு.
கூற்று தவறு. காரணம் சரி.
6.
அமெரிக்கப் பொருளாதார வரலாற்றில் 1873ஆம் ஆண்டின் முக்கியத்துவம் யாது?
7.
போலியான பொருளாதார பகட்டுக் காலம் பற்றி நீவீர் அறிவதை கூறுக.
8.
ஸோல்வரெயன் (Zollverein) எனப்படுவதன் முக்கியத்துவம் யாது?
9.
ஃபிராங்கோயஸ் பபேஃப் என்பவர் யார்?
10.
கார்பொனாரி இத்தாலிய ஐக்கியத்திற்கு செய்த தொண்டுகளை முன்வைத்து குறிப்பு வரைக.
11.
ஒருங்கிணைந்த ஜெர்மனியின் உண்மையான வடிவமைப்பாளர் பிஸ்மார்க்கே என ஏன் சொல்லப்படுகிறது?
12.
13.
1848ஆம் ஆண்டில் நடந்த பிரெஞ்சுப் புரட்சி ஐரோப்பாவின் பிற பகுதிகளில் அரசியல் தோல்விகளை ஏற்படுத்தியமை குறித்து விவாதித்து எழுதுக.
14.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முக்கியத்துவம் பெற்ற கூட்டு சிந்தனையாளர்களை (Collectivist Thinkers) அடையாளப்படுத்தி அவர்கள் சோஷலிச சிந்தனையை செழுமையாக்க ஆற்றிய பங்கைக் கூறுக.
15.
பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் நீண்டகால பெருமந்த காலத்தில் உருவான தொழிலாளர் வர்க்கப் போராட்டங்கள் பற்றி குறிப்பு வரைக.
16.
இங்கிலாந்தோடும், பிரான்சோடும் முழுமையான தேசங்களாக இத்தாலியும், ஜெர்மனியும் ஏன் உருப்பெற்று வெளிப்படமுடியவில்லை என்பதற்கான காரணங்களைப் பட்டியலிடுக.
17.
பிரான்சில் 1830இல் நடந்த ஜூலை புரட்சி ஐரோப்பாவின் பிற பகுதிகளை எவ்வாறெல்லாம் பாதித்ததென்பதை எடுத்தெழுதுக.
18.
“சோஷலிச கருத்துக்கள் உருப்பெற தொழில்புரட்சியே முகாந்திரம் அமைத்தது” – ஆதாரப் பின்புலத்தோடு உறுதிப்படுத்துக.
19.
பிரான்ஸ் தும்மினால், ஐரோப்பாவிற்கு ஜலதோஷம் – தெளிவுபடுத்துக.
1.
(d)
ஆஸ்திரியா , பிரஷ்யா
2.
(d)
கரிபால்டி
3.
(a)
கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
4.
(b)
எட்டியன்-கேப்ரியல் மோராலி
5.
(a)
கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
6.
1. 1873ல் உலகளாவிய பொருளாதார பெருமந்தம் ஏற்பட்டது.
2. இது ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் பாதித்தது.
3. அமெரிக்க இருப்புப் பாதை நிறுவனம் திவாலானது.
7.
1.போலியான பொருளாதார பகட்டுக் காலமாகச் சொல்லப்படும் காலம் உழைக்கும் வர்க்கம் ஒன்று திரட்டப்பட்ட காலமாகும்.
2.சோஷலிசமும்,தொழிலாளர் இயக்கங்களும் பல நாடுகளில் பரந்து விரிந்து ஏற்றம் பெறலாயின.
8.
1. 1834 ல் பிரஷ்யா ஸோல்வரெயன் என்ற சுங்க ஐக்கியத்தை வெற்றிகரமாக ஏற்படுத்தியது.
2. ஜெர்மனியின் பெரும் பகுதிகள் இதில் இணைந்தன.
3. இப்பகுதிகள் பொதுப் பொருளாதார நிர்வாகத்தின் கீழ் வரும் சூழல் உருவானது.
9.
1. பிரெஞ்சுப் புரட்சி நடந்த காலத்தில் செல்வாக்கு பெற்று விளக்கியவர் ஃபிராங்கோயஸ் பபேஃப் ஆவார்.
2. புரட்சியானது விவசாயிகள்,தொழிலாளர்களின் தேவைகளை வெளிக்கொணரவில்லை என்றார்.
3. தனியுடைமையை ஒழித்து நிலங்களைப் பொதுவுடைமையாக்க வேண்டும் என வாதிட்டார்.
10.
1.சுதந்திர கருத்துகளையும், நாட்டுப் பற்றையும் வலியுறுத்திய கார்பொனாரி போன்ற இரகசிய குழுக்கள் 1820களில் பரவின.
2.தாராளமயமாதல் கருத்துக்களையும்,தேசியவாதத்தையும் இக்குழுக்கள் உயிர்த்தெழச் செய்தன.
11.
1.பிரஷ்யாவின் பிரதம அமைச்சர் பதவி வகித்த ஆட்டோ வான் பிஸ்மார்க் (Otto von Bismarck ) பிரஷ்யாவின் தலைமையில் ஜெர்மனியப் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு அதனை வலுப்படுத்தினார்.
2.ஒருங்கிணைவை அடைவதற்கு அவர் "இரத்தமும் இரும்பும்" என்ற வலுவான கொள்கையைக் கைக்கொண்டார்.
3.ஜெர்மனிய ஒருங்கிணைவை ஆஸ்திரியாவுடன் பிரான்சுடனும் மோதாமல் அடைவது சாத்தியமில்லை என்று அவர் புரிந்துகொண்டிருந்தார்.
4.இராஜதந்திர நகர்வுகளின் வாயிலாக ஆஸ்திரியாவுடன் பிரான்சுடனும் முரண்போக்கைக் கைக்கொள்ளலானார்.
5.ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளைத் துவங்கிய அவர் பிரஷ்யாவிற்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையே போர் ஏற்பட்டால் அந்நாடு தலையிடாது என்பதை உறுதி செய்து கொண்டார்.
6.அதன்பின் ஜெர்மனிய ஒருங்கிணைவை அடைய மூன்று போர்களை நடத்தும்படி ஆயிற்று.
ஸ்லெஸ்விக் -ஹால்ஸ்டின் சிக்கல்:
1.ஸ்லெஸ்விக்கும் ஹால்ஸ்டினும் டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் இருந்த இரு ஜெர்மானிய மாநிலங்களாகும்.
2.இவ்விரு பகுதிகளையும் (Duchies) 1863 இல் டென்மார்க் மன்னர் தனது அரசுடன் இணைத்தார்.
3.பிஸ்மார்க் ஆஸ்திரியாவுடன் சேர்ந்து ஒரு கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டு டென்மார்க்கை எதிர்க்க முன்மொழிந்தார்.
4.அதன்படி 1864இல் ஆஸ்திரியா ,பிரஷ்யாவின் கூட்டுப்படைகள் டென்மார்க்கைப் போரில் தோற்கடித்தன.
ஆஸ்திரிய-பிரஷ்யப் போர் 1866 :
1.தனது ராஜதந்திர செயல்பாடுகளின் வாயிலாக பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவின் நடுநிலையை பிஸ்மார்க் உறுதி செய்துகொண்டார்.
2.பின்னர் ஆஸ்திரியாவை வெனிஷியப் பகுதியை விட்டு அப்புறப்படுத்த விரும்பிய அவர் பியட்மாண்ட் - சார்டினியாவின் ஆதரவைப் பெற்றார்.
3.பெரும் சக்திகள் எதுவும் ஆஸ்திரியாவிற்கு ஆதரவளிக்காது என்பதனை உறுதி செய்து கொண்ட பிஸ்மார்க் பிரஷ்யாவை தாக்க ஆஸ்திரியாவைத் தூண்டும் செயல்களில் ஈடுபட்டார்.
4.இவ்வாறு நடந்த ஆஸ்திரிய-பிரஷ்யப் போர் ஏழு வாரப் போர் என்றும் குறிப்பிடப்படுகிறது.
பிராங்கோ-பிரஷ்யப்போர்,1870-71 :
1.பிஸ்மார்க் தெற்கு ஜெர்மானிய மாகாணங்களை ஒன்றிணைக்கும் பொருட்டு பிரஷ்யாவிற்கும்,பிரான்சிற்குமிடையே பிளவை ஏற்படுத்த தனது கவனத்தைச் செலுத்தினார்.
2.அதற்கான வாய்ப்பு ஸ்பானிய அரசுரிமை வாரிசுப் பிரச்சனை தோன்றியபோது ஏற்பட்டது.
3.ஸ்பெயினில் ஏற்பட்ட ஒரு புரட்சிக்குப்பின் இராணி இஸபெல்லா வெளியேற்றப்பட்டு பிரஷ்ய மன்னரின் உறவினரான இளவரசர் லியோபால்டிற்கு அரியணை வழங்கப்பட்டது.
4.பிரஷ்யர்கள் தங்கள் மன்னர் மதிக்கப்படவில்லை என்று நினைக்கவும் தக்கபடி பிஸ்மார்க் மாற்றியமைத்தார். இதனால் எம்ஸ் தந்தி பிராங்கோ-பிரஷ்யப் போர் தோன்ற வழிவகுத்தது.
5.பிஸ்மார்க் கடுமையான பல சரத்துகளை பிரான்சின் மீது திணித்தார்.அல்சேஸ் - லொரைன் பகுதிகளை விட்டுக்கொடுக்க நேர்ந்த பிரான்ஸ் பெருந்தொகையைப் போர் இழப்பீடாகவும் கொடுக்கும்படி ஆயிற்று.
6.வெர்செய்ல்ஸ் அரண்மனையில் பிரஷ்ய மன்னர் முதலாம் வில்லியம் வடக்கு ஜெர்மானிய கூட்டமைப்பிற்கும்,தெற்கத்திய ஜெர்மானிய மாகாணங்களுக்கும் மன்னராக அறிவிக்கப்பட்டார்.
7.இவ்வாறு இராஜதந்திர உத்திகளையும், போர் நடவடிக்கைகளையும் கொண்டு ஜெர்மானிய ஒருங்கிணைவு சாத்தியப்படுத்தப்பட்டது.
12.
13.
1. 1848 இல் பிரான்சின் பிப்ரவரி புரட்சியைத் தொடர்ந்து இத்தாலியின் மாநிலங்களான பியட்மாண்ட் - சார்டினியா, சிசிலி,போப்பாண்டவரின் பகுதிகள்,மிலான்,லம்பார்டி வெனிஷியா ஆகிய பகுதிகளில் மக்களின் கிளர்ச்சி மீண்டும் வெடித்தது.
2. அதன் விளைவாக சிசிலி,பியட்மாண்ட்-சார்டினியா மற்றும் போப்பாண்டவரின் பகுதிகளில் தாராளக் கூறுகளைக் கொண்ட அரசியல்சாசனம் வழங்கப்பட்டது.
3. புரட்சியால் உந்தப்பட்ட பியட்மாண்ட்- சார்டினியப் பகுதிகளின் மன்னரான சார்லஸ் ஆல்பர்ட் லம்பார்டி மற்றும் வெனிஷியா மீது படையெடுத்தார்.
4. எனினும்,ரஷ்யப் படைகளின் உதவியைப் பெற்ற ஆஸ்திரியா அவரைத் தோற்கடித்தது.ஆஸ்திரியாவின் ஆக்கிரமிப்பில் இருந்து பியட்மாண்ட் - சார்டினியாவைத் காத்த சார்லஸ் ஆல்பர்ட் வீழ்ச்சிக்குரிய பழியைத் தான் ஏற்றுக்கொண்டு பட்டம் துறந்ததோடு தனது மகனான இரண்டாம் விக்டர் இம்மானுவேலை அரசராக்கினார்.
5. பியட்மாண்ட்- சார்டினியா தோல்வியை அடைந்தது போலப் பல குறு இராஜ்ஜியங்களின் எழுந்த கிளர்ச்சிகள் ஒடுக்கப்பட்டாலும்,தாராளவாத கருத்துக்களும்,தேசியவாதமும் தாக்குப்பிடித்து நின்றன.
14.
1. நவீன கால அடிப்படையில் சோஷலிச சிந்தனை இயலாட்சி ஆதரவாளர்கள் (Physiocrats) அல்லது பொருளாதார நிபுணர்களால் உணவு மற்றும் சரக்கு ஆகியவற்றின் உற்பத்தியையும்,விநியோகத்தையும் குறித்த விசாரணை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
2. எட்டியன் கேப்ரியல் மோராலி (Etienne -Gabriel Morelly) 1755 இல் தான் இயற்றிய நூலான கோட் டி நேச்சர் (code de la nature) என்பதில் தனியுடைமையைக் கண்டனத்திற்கும் உட்படுத்தியதோடு சமூகத்தைப் பொதுவுடைமை அமைப்பாக மாற்ற வேண்டி ஒரு முன்மொழிவை வெளிப்படுத்தினார்.
3. செயின்ட் சைமன் பிரிட்டிஷாருக்கு எதிராக அமெரிக்க சுதந்திரப் போரில் பங்கேற்ற ஒரு பிரெஞ்சு உயர்குடிமகனாவார். விஞ்ஞானத்திலும் முன்னேற்றத்திலும் பெரும் நம்பிக்கை கொண்டிருந்த அவர் தன் சமகால பிரெஞ்சு சமூகம் நிலப்பிரபுத்துவத்தின் பிடியில் சிக்கியிருப்பதாக விமர்சித்தார்.
4. சார்லஸ் ஃபூரியர் ஆரம்பகால கற்பனைவாத சோஷலிஸ்டுகளில் ஒருவராவார். அவர் சமூக சூழலே மனித இனத்தின் கவலைகளுக்கு முதல் காரணம் என்று நம்பினார்.
5. மான்செஸ்டர் நகரின் தொழிற்சாலை ஊழியர்களின் கொடுமையான வாழ்க்கைச் சூழலைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அவரது தொழிற்சாலையில் அவர்களின் மேம்பாட்டிற்காகப் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்.
6. பிரெஞ்சு அரசின்மைவாத சிந்தனையாளராகக் (anarchist) கருதப்படும் புரூதன் சோஷலிச சிந்தனை செழுமை பெற முக்கியப் பங்காற்றியுள்ளார்.
7. தேசிய அரசுகளின் இடத்தில் தன்னாட்சி கொண்ட கூட்டு சமூகங்களின் கூட்டமைப்பு தோன்றவேண்டுமென வலியுறுத்தினார்.
8. அரசு அதிகாரத்தின் துணை இல்லாமல் சோஷலிச சமூகத்தை எட்ட முடியாது என்றும் லூயி பிளாங்க் வாதிட்டார்.பிரான்ஸ் நாட்டில் 1848 இல் உருவான தற்காலிக அரசின் உறுப்பினராகப் பங்குவகித்த அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பற்றோருக்கான பணிமனைகளை உருவாக்கி தேவைப்பட்டோருக்கு பணி கிடைக்க வழிவகை செய்தார்.
9. கார்ல் மார்க்சும் (1818 - 1883) பிரெட்ரிக் ஏங்கல்சும் ( 1820 - 1895 ) சோஷலிச சிந்தனைக்கு அரும் பங்களிப்பை வழங்கியுள்ளார்.
10. மார்க்சும் ஏங்கல்சும் 1848 ஆம் ஆண்டின் புரட்சி நடந்த சமகாலத்தில் தங்களின் கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டா என்ற நூலை வெளியிட்டார்கள்.அதிகவும் புகழ்பெற்ற தொழிலாளர்களைத் திரட்டும் கூக்குரலான "உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! நீங்கள் இழப்பதற்கு ஏதுமில்லை,அணிந்திருக்கும் விலங்குகளைத் தவிர" என்பது இடம் பெற்றிருந்தது.
15.
1.1894 இல் அமெரிக்க இரயில்வே தொழிற்சங்கம் பங்குபெற்ற புல்மேன் வேலை நிறுத்தப் போராட்டம் ஆயுதமேந்திய காவலரை ஒடுக்கியது.
2.நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட பிங்கர்டன் தனியார் உளவு நிறுவனத்தாரையும் ஒடுக்கியது.
3.1880 ல் பிரிட்டனில் மகளிர் தீப்பெட்டி தொழிலாளர் போராட்டம் வெற்றி அடைந்தது.
4.1889 ல் கப்பல் செப்பனிடும் பட்டறை தொழிலாளர் போராட்டம் வெடித்தது.
16.
1. மறுமலர்ச்சி கண்ட இத்தாலி அரசியல் மாற்றங்களில் பங்கெடுக்கவில்லை.
2. இத்தாலியின் நகரங்களான மிலான்,ஃபிளாரன்ஸ்,வெனிஸ்,நேப்பில்ஸ் போன்றவை பேரரசுகளுக்கு பலியாகும் சூழல் ஏற்பட்டது.
3. இத்தாலியில் தனிப்பட்ட குடும்பத்தாரின் கொடுங்கோல் ஆட்சி நடத்தப்பட்டு வந்தது.
4. ஜெர்மனியிலும் இதே நிலைதான் இருந்தது.
5. ஜெர்மனி மட்டும் 300 முதல் 400 தனிநாடுகளைக் கொண்டிருந்தது.
6. ஆகவே 19 ஆம் நூற்றாண்டில் தான் இத்தாலியும் ஜெர்மனியும் தேசிய அரசுகளாக ஏற்றம் பெற முடிந்தது.
17.
1.1830 ஜூலை புரட்சியானது நெதர்லாந்தில் வெற்றி பெற்று பெல்ஜியம் பிரிக்கப்பட்டு தனியான சுதந்திர நாடானது.
2.1832ல் துருக்கி ஆட்சியிலிருந்து கிரீஸ் விடுதலை பெற்றது.
3.ரஷ்ய சார் மன்னருக்கு எதிரான போலந்து நாட்டினரின் போராட்டம் தோல்வியை தழுவியது.
18.
1.ஆரம்பத்தில் தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளை பெரிதும் நம்பி வாழ்ந்தனர்.
2.ஒருங்கிணைந்த அமைப்பு முறையும் ஒற்றுமையும் ஏற்படாதவரை நிரந்தரமான முன்னேற்றம் என்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தார்கள்.
3.ஆகவே தொழிற்சங்கங்களை ஏற்படுத்த முனைந்தனர்.
4.தொழிலாளர் நலம் காக்கவும் எனப் பலருக்கும் வழிகாட்டியது.
19.
1.19 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் நடந்த பல முன்னேற்ற நிகழ்வுகள் ஐரோப்பிய கண்டம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
2.ஆஸ்திரியா, ரஷ்யா, பிரஷ்யா பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையே புனிதக் கூட்டணி உருவாகியது.
3.மக்களாட்சி உணர்வும்,தேசியவாத போக்கும் வளர்ந்தது.
4.பிரான்ஸில் ஏற்பட்ட மூன்று முறை புரட்சிகள் 1789, 1830 மற்றும் 1848 பிரான்ஸ் தும்மியதாகவே கருத்தில் கொள்ளப்படுகிறது.
5.மெட்டர்னிக்கின் கூற்று "பிரான்ஸ் தும்மினால் ஐரோப்பாவிற்கு ஜலதோஷம் பிடிக்கும்"என்பது உண்மையானது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards