12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
சிம்லா மாநாட்டைக் கூட்டியவர் பெயரை எழுதுக
வேவல் பிரபு
லிட்டன் பிரபு
கர்சன் பிரபு
கானிங் பிரபு
2.
முத்துத் துறைமுகம் எந்த நாட்டால் தாக்கப்பட்டது?
சீனா
பங்காள தேசம்
இந்தியா
ஜப்பான்
3.
கிரிப்ஸ் தூதுக்குழு எப்போது இந்தியா வந்தடைந்தது?
1945
1942
1943
1944
4.
ஆகஸ்ட் நன்கொடை அறிவித்தவர் யார்?
லின்லித்கோ பிரபு
மௌண்ட் பேட்டன் பிரபு
கர்சன் பிரபு
கானிங் பிரபு
5.
ஃபார்வர்டு பிளாக் கட்சியைக் உருவாக்கியவர் யார்?
சுபாஷ் சந்திர போஸ்
காந்தி
ஜின்னா
நேரு
6.
இந்திய தேசிய இராணுவத்தின் மீதான விசாரணை கூறுகள் யாவை?
7.
தனி நாடு கோரிக்கை பற்றிய அம்சங்களை கூறுக.
8.
வேவல் திட்டம் பற்றிய அறிக்கை எழுதுக.
9.
நேரடி நடவடிக்கை நாளின் வன்முறைக் காட்சி பற்றி எழுதுக.
10.
மெளண்ட் பேட்டன் திட்டம் சிறப்பை எழுதுக.
11.
கிரிப்ஸ் தூதுக்குழு பற்றி எழுதுக.
12.
முத்துத்துறைமுகம் தாக்கப்பட்டதைக் எழுதுக.
13.
இரகசிய வானொலி ஒலிபரப்பு பற்றி எழுதுக.
14.
அச்சு நாடுகள் உடன் இந்திய இராணுவத்தின் பங்கு யாது?
15.
சுபாஷ் மற்றும் இந்திய தேசிய இராணுவமும் பற்றி கூறுக?
16.
இராயல் இந்தியக் கடற்படையின் புரட்சி பற்றி எழுதுக.
17.
இடைக்கால அமைச்சர் அவைப்பற்றி எழுதுக.
18.
மெளண்ட் பேட்டன் பிரபுவின் திட்டங்கள் பற்றி விரிவாக எழுதுக.
19.
கிரிப்ஸின் முன்மொழிவு கருத்துக்களைக் தொகுத்து எழுதுக?
1.
(a)
வேவல் பிரபு
2.
(b)
பங்காள தேசம்
3.
(b)
1942
4.
(a)
லின்லித்கோ பிரபு
5.
(a)
சுபாஷ் சந்திர போஸ்
6.
1. டெல்லியின் செங்கோட்டையில் இந்திய இராணுவத்தின் மீது விசாரணை நடத்தப்பட்டது.
2. இந்திய தேசிய காங்கிரஸ் தனது சிறந்த சட்ட நிபுணர்களைக் கொண்டு அவர்கள் சார்பாக வாதாடி வெற்றியும் பெற்றது.
3. இது இந்திய அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியது.
7.
1. முஸ்லிம் லீக் தனிநாடு கோரிக்கையைக் தொடர்ந்து கொண்டு வந்தது.
2. முஸ்லிம் லீக் 1940-ல் நிறைவேற்றிய லாகூர் தீர்மானத்தின்படி நிறைவேற்றியது.
3. முகமது அலி ஜின்னா தன்னை மட்டுமே நிலைநிறுத்திக் கொண்டார்.
8.
1. வேவல் பிரபு ஜூன் 1945-இல் பேச்சுவார்த்தை நடத்த சிம்லா மாநாட்டைக் கூட்டினார்
2. நேரு, பட்டேல் மற்றும் அபுல் கலாம் ஆசாத் போன்றவர்கள் மாநாட்டில் பங்கெடுக்க சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்கள்.
3. வேவல் பிரபு சர்ச்சிலிடம் காங்கிரசையும், முஸ்லிம் லீக்கையும் இணைந்து ஆட்சியமைக்க ஒப்புதல் பெற்றார்.
9.
1. முஸ்லிம் லீக் ஆகஸ்ட் 1946 அன்று நேரடி நடவடிக்கை செயலில் இறங்க இஸ்லாமியர்களுக்கு அறைகூவல் விடுத்தது.
2. கல்கத்தாவிலும் டெல்லி உட்பட பிற பகுதிகளிலும் இரத்த ஆறு ஓடியது.
3. காந்தியடிகள் 1946-இல் அவர் "இஸ்லாமியர்களும் இந்தியர்களே! அதனால் அவர்களைப் பாதுகாப்பது நமது கடமை" என்று கூறினார்.
10.
1. மெளண்ட் பேட்டன் இந்தியப் பிரிவினையை ஏற்படுத்த ஒரு தெளிவான திட்டத்தைக் கொண்டிருந்தார்.
2. அதன்படி பஞ்சாப் மேற்கு-கிழக்காகப் பிரிப்பதும் மேற்பகுதி பாகிஸ்தானுக்கு வழங்கப்படும்.
3. அது போன்றே வங்காளத்தைப் பிரித்து அதன் மேற்குப் பகுதியை வைத்துக் கொள்ளவும் கிழக்கு பகுதியை பாகிஸ்தானின் அங்கமாக மாற்றவும் அம்சங்கள் இருந்தன.
11.
1. இரண்டாம் உலகப்போருக்குப் பின் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்த சூழலில் அமைச்சரவைத் தூதுக்குழு உருவாக்கப்பட்டது.
2. இந்திய நாட்டிற்கென்று நியமிக்கப்பட்டிருந்த அரசு செயலரான சர் ஸ்டாப்ஃபோர்டு கிரிப்ஸையும், A.V. அலெக்ஸாண்டரையும் உறுப்பினர்களாகக் கொண்ட அந்த கிரிப்ஸ் தூதுக்குழு மார்ச் 1946-இல் இந்தியா வந்தடைந்தது.
3. இத்தூதுக்குழு மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் தேர்தல் நடத்தி அதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு இந்தியாவிற்கான அரசியல் சாசனத்தை உருவாக்கலாம் என்று முன்மொழிந்தது.
12.
1. தேசிய இயக்கத்தையும் -காந்தியும் வெறுப்புணர்வோடே அணுகிவந்தனார்.
2. இந்த நிலையில் இந்திய தேசிய காங்கிரசும் நிற்கதியற்ற நிலையில் விடப்பட்டிருந்தது, அந்த நிலை வேறு வகையில் ஏற்பட்டிருந்தது.
3. சுபாஷ் அச்சு நாடுகளோடு கைகோர்த்து சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நெருக்கடி கொடுத்தார்.
4. 1942-ல் ஹிந்தி ரேடியோ மூலம் போஸ் இந்திய மக்களைக் தொடர்பு கொண்டு உரை நிகழ்த்தினார்.
5. காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் துவங்கினார். 1941-ல் ஜப்பான் அமெரிக்க முத்துத்துறைமுகமும் தாக்கப்பட்டது ஆகும்.
13.
1. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் மற்றொரு சிறப்பான அம்சம் புரட்சியாளர்களால் வானொலி பயன்படுத்தப்பட்டமையாகும்.
2. பத்திரிக்கைச் சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில் வானொலி ஒலிபரப்பு முறை பயன்படுத்தப்பட்டது.
3. இரகசிய வானொலி ஒலிபரப்பிற்கு வித்திட்டவர் உஷா மேத்தா என்பவரால் பயன்படுத்தப்பட்டது.
4. வானொலி ஒலிபரப்பு மதராஸ் வரை கேட்கப்பட்டது.
14.
1. இம்பாலை நோக்கிய ஜப்பான் படைகளின் நகர்வில் ஷா நவாஸால் வழிநடத்தப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தின் ஒரு பிரிவும் பங்கெடுத்தது.
2. இம்பாலைக் கைப்பற்றும் முயற்சியில் ஜப்பான் வெற்றிபெற முடியவில்லை.
3. 1945-இல் நடுவில் அது பிரிட்டிஷ் படையிடம் சரணடைந்தது ஷா நவாஸ் கைது செய்யப்பட்டார்.
4. வீரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
15.
1. போஸ் இராணுவம் சாராத சாதாரண மக்களையும் இந்திய இராணுவத்தில் இணைத்தார்.
2. இராணுவத்தில் பெண்களுக்கு ஒரு படைப் பிரிவை ஏற்படுத்தினார்.
3. டாக்டர் லட்சுமி, ராணி ஜான்சி என்ற படைப்பிரிவிற்கு தலைமையேற்றார்.
4. சுபாஷ் 1944 ஜூலை 6-அன்று தனது ஆசாத் ஹிந்த் ரேடியோவின் மூலம் ரங்கூனிலிருந்து காந்தியை நோக்கி ஒரு உரையை ஆற்றினார்.
16.
1. B.C. தத்தின் கைது நடவடிக்கை 18,பிப்ரவரி 1946-அன்று வெடித்துக் கிளம்பிய கிளர்ச்சிக்கு உந்துவிசையாக அமைந்தது.
2. மறுநாள் கோட்டைக் கொத்தளத்தில் பணியிலிருந்த மாலுமிகளும் அதிக எண்ணிக்கையில் கிளர்ச்சியில் இணைந்ததோடு பம்பாய் நகரை வாகனங்களில் வலம் வந்தவாறே காங்கிரஸ் கொடியை ஏந்தி அசைக்கவும் பிரிட்டிஷ் விரோதக் கூச்சல்களை எழுப்பி ஆரவாரிக்கவும் செய்தனர்.
3. HMIS ஹிந்துஸ்தான் கப்பலின் மாலுமிகளுக்கும் கராச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிறகு மின்னல் வேகத்தில் போராட்டத்தைத் துவக்கினர்.
4. 78 கப்பல்களிலும் 20 கரையோர பணியிடங்களிலும் இருந்த 20,000, மாலுமிகள் 18 பிப்ரவரி 1946-க்கும் பின் போராட்டத்தில் இறங்கியிருந்தனர்.
5. இராயல் இந்தியக் கடற்படை மாலுமிகள் போராட்டம், இந்தியக் கடற்படை மாலுமிகள் போராட்டம் இந்திய தேசிய இயக்க வரலாற்றில் ஒரு உன்னதமானப் பக்கம் ஆகும்.
6. ஒரு நீண்ட விடுதலைப் போராட்டம், இந்தியக் கடற்படை மாலுமிகள் போராட்டம் இந்திய தேசிய இயக்க வரலாற்றில் ஒரு உன்னதமானப் பக்கம் ஆகும்.
7. மாலுமிகள் போராட்டத்திற்கும் ஆதரவாக பம்பாய், பூனா, கல்கத்தா, ஜெசூர், அம்பாலா நகரங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இராயல் இந்திய விமானப்படை ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
8. ஜபல்பூரில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவச் சிப்பாய்களும் போராடலாயினர்.
17.
1. காங்கிரஸ் இடைக்கால அரசு உருவாக்கத்தை ஏற்றுக்கொண்டது நேருவும் மற்ற 11, நபர்களும் 1946 செப்டம்பர் 2-இல் பதவி ஏற்றனர்.
2. வேவில் பிரபு மற்றும் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தி நேருவின் ஆலோசனையை பெற்று மீண்டும் முஸ்லிம் லீக்கை இடைக்கால அரசில் பங்கெடுக்க அழைப்பு விடுத்தனர்.
3. இடைக்கால அமைச்சரவை 26 அக்டோபர் 1946-அன்று மறுசீரமைக்கப்பட்டது.
4. காங்கிரஸ் ஜூலை -ஆகஸ்ட் 1946-இல் நடத்த தேர்தலில் 210-ற்கு 199 பொது இடங்களைப் பெற்றும் பெரும் வெற்றியைச் குவித்தது.
5. முதல் சட்டசபையில் 207 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்.
18.
1. 1947 ஜூலை 3-ல் மவுண்ட் பேட்டன் பிரபு இந்திய அரசியல் பிரச்சனைகளை தீர்க்க ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார் அதன் விவரம்.
2. பிரிட்டிஷ் இந்தியா-இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிக்கப்படும்.
3. வங்காளம் மற்றும் பஞ்சாப், விரிவாக்கப்படும் வடகிழக்கு எல்லை மாகாணம் அஸ்ஸாமின் சைல்கெட் மாவட்டம் ஆகியவை வாக்கெடுப்புப்படி பிரிக்கப்படும்.
4. பாகிஸ்தான் அரசியலமைப்பை உருவாக்க தனி அரசியலமைப்பு சபை உருவாக்கப்படும்.
5. சுதேசி அரசுகள் அவர்களின் விருப்பப்படி இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ, அல்லது தனியாகவோ இருக்கலாம்.
6. ஆகஸ்ட் 15, 1947யை இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் அதிகாரத்தை ஒப்படைக்கும் நாளாகத் தீர்மானிக்கப்பட்டது.
19.
1. கிரிப்ஸ் டொமினியன் அந்தஸ்தையும் போருக்குப் பின் அரசியல் சாசன வரைவுக் குழுவை உருவாக்குதலையும் ஆதாரித்தார்.
2. அரசியல் சாசன வரைவுக் குழு மாகாண சபைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டும் சுதேச அரசர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து நியமிக்கப்பட்டவர்களைக் கொண்டும் ஏற்படுத்தப்படும் என்றது.
3. மேலும் பாகிஸ்தான் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது.
4. தனிப்பட்ட ஒப்பந்தம் ஏற்படுத்த உரிமை இருப்பதாக கிரிப்ஸ் முன்மொழிவு அறிவித்தது.
5. ஆனால் 29 ஜூலை 1946 அன்று பேசிய ஜின்னா முஸ்லிம் லீக் அம்மொழியை நிராகரிப்பதாக அறிவித்தார்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards