12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2019
இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
மௌண்ட் பேட்டன் திட்டம் எந்த நாளில் கொண்டு வரப்பட்டது?
ஜூலை - 7
ஜூலை - 5
ஜூலை - 3
ஜூன் - 3
2.
சிம்லா மாநாட்டைக் கூட்டியவர் பெயரை எழுதுக
வேவல் பிரபு
லிட்டன் பிரபு
கர்சன் பிரபு
கானிங் பிரபு
3.
"செய்" அல்லது "செத்துமடி" என்னும் முழக்கம் இட்டவர் யார்?
காந்தி
நேரு
ஜின்னா
இவற்றில் யாரும் இல்லை
4.
முத்துத் துறைமுகம் எந்த நாட்டால் தாக்கப்பட்டது?
சீனா
பங்காள தேசம்
இந்தியா
ஜப்பான்
5.
ஃபார்வர்டு பிளாக் கட்சியைக் உருவாக்கியவர் யார்?
சுபாஷ் சந்திர போஸ்
காந்தி
ஜின்னா
நேரு
6.
இந்திய தேசிய இராணுவப்படை வீரர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடியவர் யார்?
ஜவஹர்லால் நேரு
மோதிலால் நேரு
இராஜாஜி
சுபாஷ் சந்திர போஸ்
7.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை நடத்தியவர் யார்?
உஷா மேத்தா
பிரீத்தி வதேதார்
ஆசப் அலி
கேப்டன் லட்சுமி
8.
9.
கிரிப்ஸ் தூதுக்குழு யாருடைய ஆட்சியின் போது இந்தியாவிற்கு வருகை தந்தது?
வேவல் பிரபு
லின்லித்கோ பிரபு
மௌண்ட்பேட்டன் பிரபு
இவர்களில் யாருமில்லை
10.
தனிநபர் சத்தியாகிரகம் எப்போது தொடங்கியது?
மார்ச் 23, 1940
ஆகஸ்ட் 8, 1940
அக்டோபர் 17, 1940
ஆகஸ்ட் 9, 1942
11.
12.
கிரிப்ஸ் முன்மொழிவைக் காங்கிரஸ் ஏன் நிராகரித்தது?
13.
ஆகஸ்ட் கொடையின் சிறப்பைக் கூறுக?
14.
லாகூர் தீர்மானத்தின் முக்கியத்துவம் என்ன?
15.
எத்தகைய சூழ்நிலையில் காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றி சிந்தித்தார்?
16.
இந்திய தேசிய காங்கிரசிலிருந்து சுபாஷ் சந்திரபோஸ் நீக்கப்பட்டதற்கானக் காரணங்களை விளக்குக
17.
சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் அவர்களின் முன்மொழிவுகளை விவாதிக்கவும்.
18.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்காத அமைப்புகளின் பெயரை எழுதுக.
19.
இராஜாஜி திட்டம் பற்றி ஒரு பத்தி எழுதுக.
20.
1.
(d)
ஜூன் - 3
2.
(a)
வேவல் பிரபு
3.
(d)
இவற்றில் யாரும் இல்லை
4.
(b)
பங்காள தேசம்
5.
(a)
சுபாஷ் சந்திர போஸ்
6.
(a)
ஜவஹர்லால் நேரு
7.
(a)
உஷா மேத்தா
8.
(b)
9.
(d)
இவர்களில் யாருமில்லை
10.
(c)
அக்டோபர் 17, 1940
11.
12.
(i) டொமினியன் அந்தஸ்து வழங்குவதென்பது ஏமாற்றமளிக்கக் கூடிய குறுகிய நடவடிக்கையாகும்.
(ii) பிற மாகாணங்களைப் போல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மாற்றாக உறுப்பினர்களால் நியமிக்கப்படும் முறையை காங்கிரஸ் நிராகரித்தது.
(iii) ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டு அவ்வாறே நிகழ்ந்தது.
13.
(i) தனிநபர் சத்தியாகிரகம் என்பது அரசுப் பிரதிநிதி லின்லித்கோ பிரபுவின் ஆகஸ்ட் கொடைக்கு காங்கிரஸ் கொடுத்த பதிலடியாகும்.
(ii) லின்லித்கோ பிரபு 8 ஆகஸ்ட் 1940 அன்று அளிக்க முன்வந்ததாவது 'வரையறுக்கப்படாத தேதியில் டொமினியன் அந்தஸ்து, செயற்குழு விரிவாக்கம் செய்தல் ஆகும்.
(iii) மேலும் ஒரு அரசியல் சாசனத்தை இயற்ற உள்ள உரிமையை ஏற்று அதற்கு எதிர்காலத்தில் வாய்ப்பளிக்க மேலும் உறுதியளித்தல் ஆகியவையாகும்.
14.
(i) இஸ்லாமியர்களுக்கான தனிநாடு கோரிக்கையாகும்.
(ii) இதன் துவக்கம் 1930களில் கிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் தனிப்பகுதி அல்லது சில பகுதிகள் என்ற நிலையிலிருந்தது.
(iii) 1940 இல் லாகூரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் தனி நாடு கோரிக்கை (பாகிஸ்தான்) ஒரு முக்கியக் கட்டத்தை எட்டியது.
15.
(i) துவக்கத்திலிருந்தே இந்திய தேசிய இயக்கத்தையும், குறிப்பாக காந்தியடிகளையும் சர்ச்சில் வெறுப்புணர்வோடே அணுகி வந்தார். போரில் இந்தியர்களின் ஒத்துழைப்பு தேவை என்ற போதும் அவர்தம் போக்கில் மாற்றம் ஏற்படவில்லை.
(ii) இதற்கிடையே இந்திய தேசிய காங்கிரசும் நிற்கதியற்ற நிலையில் விடப்பட்டிருந்தது. ஒருபுறம் விடுதலைக்கான எந்த உறுதியும் கொடுக்காமல் காலனிய அரசு இழுக்கடித்தது என்றாலும் மறுபுறம் சுபாஷ் சந்திர போஸ் அச்சு நாடுகளோடு கைகோர்த்து சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நெருக்கடி கொடுத்தார்.
(iii) மேலும் பொருள்களின் விலை பல மடங்கு அதிகரித்ததோடு உணவு தானியங்களுக்குக் கடும் தட்டுப்பாடும் ஏற்பட்டது.
(iv) ஜெர்மனியில் இருந்து மார்ச் 1942 ல் ஆசாத் ஹிந்து வானொலி மூலம் போஸ் இந்திய மக்களைத் தொடர்பு கொண்டு உரை நிகழ்த்தினார். இப்பின்புலத்தில் காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் துவக்கினார்.
16.
(i) ஆகஸ்ட் கொடை மிகத் தாமதமாக அறிவிக்கப்பட்டதால் அது குறித்து பேச்சுவார்த்தை நடந்துகூட காங்கிரஸ்க்கு நேரமில்லை. இக்காலகட்டத்தில் காங்கிரசும் தனது ஆதரவாளர் பின்புலத்தை வெகுவாக இழந்திருந்தது.
(ii) சுபாஷ் சந்திரபோஸ் அச்சு நாடுகளோடு கைகோர்த்து சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இந்திய தேசிய காங்கிரசுக்கு நெருக்கடியை கொடுத்தார்.
(iii) எனவே காங்கிரசிற்குள் சுபாஷ் சந்திர போஸ் ஓரங்கட்டப்பட்டதால் அவ்வமைப்பின் முக்கிய மேல்மட்டத் தலைவர்கள் அவரோடு ஒத்துழைக்க மறுத்தனர். அதனால் கல்கத்தாவில் கூடிய அனைத்து இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் போஸ் பதவித் துறப்பு செய்யவே, இராஜேந்திரப் பிரசாத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
(iv) போஸ் காங்கிரசிற்குள் செயலாற்ற விரும்பி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியை உருவாக்கினாலும், ஆகஸ்ட் 1939 இல் அவர் வங்காள காங்கிரசின் கமிட்டித் தலைவர் உட்பட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.
17.
(i) இரண்டாம் உலகப்போருக்குப் பின் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்த சூழலில் அமைச்சரவைத் தூதுக்குழு உருவாக்கப்பட்டது.
(ii) இந்திய நாட்டிற்கென்று நியமிக்கப்பட்டிருந்த அரசு செயலரான சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸையும், A.V. அலெக்ஸாண்டரையும் உறுப்பினர்களாகக் கொண்ட அந்த தூதுக்குழு மார்ச் 1946 இல் இந்தியா வந்தடைந்தது. முழு அதிகார மாற்றத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான அரசை உருவாக்க முனைந்தது.
(iii) இத்தூதுக்குழு மாகாணங்களிலும், சுதேச அரசாட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களினும் தேர்தல் நடத்தி அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு சுதந்திர இந்தியாவிற்கான அரசியல் சாசனத்தை உருவாக்கலாம் என்று முன்மொழிந்தது.
18.
(i) காந்தியடிகள் மே 1942 வாக்கில் இந்திய தேசிய காங்கிரஸ் அடுத்தகட்ட செயல்பாட்டிற்குத் தயார்படுத்தலானார். இம்முறை, பெரும் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க காந்தியடிகள் முனைந்த நேரத்தில் இராஜாஜியும் நேருவும் தயக்கம் காட்டினர்.
(ii) காங்கிரஸ் அமைப்பும் பொதுவெளிக்கு வராமல் தங்கள் பணியை செவ்வனே செய்தது.
(iii) இக்கூட்டத்தில் நாடு தழுவிய சட்ட மறுப்புப் போராட்டம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. இத்தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த ராஜாஜியும், புலாபாய் தேசாயும் காங்கிரஸ் செயற்குழுவில் இருந்து பதவித் துறப்பு செய்தனர்.
19.
இராஜாஜி 14 ஏப்ரல் 1944 இல் ஒரு முன்மொழிவுத் தீர்மானத்தை வழங்கினார், அதன் அம்சங்களாவன:
(i) போருக்குப் பின்பு ஒரு ஆணையத்தின் மூலம் இஸ்லாமியர்க்கு முழுப் பெரும்பான்மையில் வாழும் தொடர் மாவட்டங்களைப் பிரித்தெடுத்து அங்கே வயதுத்தகுதி அடைந்தோரைக் கொண்டு வாக்கெடுப்பு நடத்தி பாகிஸ்தான் உருவாக்கம் பற்றி முடிவை எடுத்தல் வேண்டும்
(ii) ஒரு வேலை ஓட்டெடுப்பின் முடிவில் பிரிவினை உறுதிசெய்யப்பட்டால், அதிமுக்கியப் பணிகளான பாதுகாப்பு, தொலைத்தொடர்பு போன்றவற்றை பொதுவில் செயல்படுத்த ஒப்பந்தம் ஏற்படுத்துதல் வேண்டும்.
(iii) எல்லையில் அமையப்பெற்ற மாவட்டங்களுக்கு இரு இறையாண்மை கொண்ட நாடுகளில் ஏதோ ஒன்றில் சேர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
(iv) இத்திட்டங்கள் யாவும் முழுமையான அதிகார மாற்றம் ஏற்பட்டபின் செயல்முறைக்கு கொண்டுவரப்படுதல் வேண்டும்.
(v) சிறையிலிருந்து காந்தியடிகள் ஜூலை,1944 இல் விடுவிக்கப்பட்ட பின் இராஜாஜி திட்டத்தை அடிப்படையாக கொண்டு ஜின்னாவோடு பேச்சுவார்த்தை நடத்த முயன்றார் ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
20.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards