12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Tamil செல்வத்துள் எல்லாம் தலை - வாழ்வியல் இலக்கியம் - திருக்குறள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil எல்லா உயிரும் தொழும் - இலக்கணம் -தொன்மம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil எல்லா உயிரும் தொழும் - செய்யுள்-புறநானுறு Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil நாடு சமூகம் திருவாகம் மனிதம் - உரைநடை உலகம் -இலக்கியத்தில் மேலாண்மை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் -இலக்கணம் -படைப்பாக்க உத்திகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - துணைப்பாடம் -நடிகர் திலகம் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும்
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
இந்தோனேஷிய விடுதலைக்கு சுகார்னோ ஆற்றியப் பங்கை மதிப்பிடுக.
2.
சீன தேசிய அரசியலில் கோமின்டாங் கட்சியின் பங்கை விவாதத்திற்கு உட்படுத்துக.
3.
சீனாவில் நிகழ்ந்த பாக்ஸர் கிளர்ச்சி பற்றிய குறிப்புகளைத் தருக.
4.
இரண்டாம் உலகப்போரின் முக்கிய விளைவுகளை முன்னிலைப்படுத்துக.
5.
ஹக் கிளர்ச்சியின் முக்கியத்துவம் யாது?
6.
இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் விடுதலைப் போராட்டங்களில் பொதுவான மற்றும் வேறுபட்ட கூறுகளை ஒப்பிட்டாய்ந்து எழுதுக.
7.
சீனாவில் பொதுவுடைமை அரசு உருவாக மாசே-துங்கின் பங்களிப்பை விவரித்து எழுதுக.
8.
இரண்டாம் உலகப்போர் ஏற்பட ஜெர்மனியும், ஹிட்லரும் எந்த அளவிற்கு காரணமாவார்கள் என்பதனை ஆய்ந்து கூறுக.
9.
இரண்டாம் உலகப்போரின் விதைகளை வெர்செய்ல்ஸ் ஒப்பந்தமே தூவியது என்பதனை தகுந்த காரணத்தோடு விளக்குக.
10.
கீழ்க்காண்பனவற்றுள் இரண்டாம் உலகப்போரின் விளைவுகளில் சேராத ஒன்று எது?
இரண்டாம் உலகப்போர் ஐரோப்பாவிலிருந்த பல முடியரசுகளுக்கு மரண அடி கொடுத்தது.
பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஒரு பொதுநல அடிப்படை கொண்ட நாட்டை உருவாக்கியது.
பாசிசவாதத்திற்கு எதிரான போராட்டம் ஏகாதிபத்தியத்திற்கு வெற்றியை வழங்கியது .
அமெரிக்க ஐக்கிய நாடும், சோவியத் நாடும் இரு வல்லரசுகளாக உருவெடுத்தன.
11.
ஜெர்மானியப் படைகள் முதல் பின்னடைவைச் சந்தித்தது _______ என்னுமிடத்தில் ஆகும்.
போட்ஸ்டாம்
எல் அலாமின்
ஸ்டாலின்கிராட்
மிட்வே
12.
ஜப்பானிய கடற்படையை அமெரிக்க ஐக்கிய நாட்டின் கடற்படை தோற்கடித்தமை ______ போரிலாகும்.
பிரிட்டன்
குவாடல்கனல்
எல் அலாமின்
மிட்வே
13.
பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்குவதற்குத் திட்டம் வகுத்தவர் _______ஆவார்.
யாமமோடோ
ஸ்கூஸ்னிக்
இரண்டாம் கெய்சர் வில்லியம்
ஹிரோஹிடோ
14.
ஜெர்மனி 1939இல் ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ______ நாட்டோடு ஏற்படுத்திக் கொண்டது.
ஆஸ்திரியா
இத்தாலி
ரஷ்யா
பிரிட்டன்
15.
கவைட் கிளர்ச்சியின் முக்கியத்துவத்தை மதிப்பிடுக.
16.
டச்சு - இந்தோனேஷிய உடன்படிக்கையின் பின் நேர்ந்த முன்னேற்றங்களை விவாதத்திற்கு விவாதிக்க.
17.
பிலிப்பைன்ஸில் 1902இல் நிறுவப்பட்ட அமெரிக்க ஆட்சியின் உடனடி விளைவுகள் யாவை?
18.
போய்டி ஒடோமோ பற்றிய குறிப்பு வரைந்து அதன் தோல்விக்கான காரணங்களை குறிப்பிடுக.
19.
நான்கிங் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை ஆய்க.
1.
1.சுகார்னோ என்ற இளம் பொறியாளர் இந்தோனிஷிய தேசிய கட்சியை நிறுவினார்.
2.இக்கட்சி மதச்சார்பற்ற வர்க்கத்தினரால் ஆதரிக்கப்பட்டது.
3.1931 இல் சுகர்னோ கைது செய்யப்பட்டு அவரது கட்சி கலைக்கப்பட்டது.
4.ஜப்பான் ஆதரவுடன் டச்சுக்காரர்களை வெளியேற்றி இந்தோனிஷியா சுதந்திரம் பெறச் செய்தார்.
2.
1.சன் யாட் சென்னால் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியே கோமின்டாங் ஆகும்.
2.சன் யாட் சென் ஒரு குடியரசை அமைக்க விரும்பினார்.
3.சன் யாட் சென் மறைவுக்குப் பின் இக்கட்சியில் பொதுவுடைமை மறைந்தது.
4.கோமின்டாங் பெரும் நிலக்கிழார்கள் மற்றும் முதலாளிகளின் ஆர்வங்களை பிரதிநிதித்துவப்படுத்தியது.
3.
1.பாக்ஸர் என்பது ஈஹிகுவான் என்ற சீன இரகசிய சங்கத்தை குறிக்க அயல்நாட்டினர் பயன்படுத்திய சொல்லாகும்.
2.ஷாண்டுங் மாகாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட விவசாயிகளே பாக்ஸர் ஆவர்.
3.மஞ்சு வம்சத்தை முடிவுக்கு கொண்டு வருவதோடு முறைகேடாக சலுகைகளை பெற்று வந்த மேற்கத்தியர்களை சீனாவை விட்டு வெளியேற்றுவதே பாக்ஸர்களின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
4.கிறித்துவ சமயத்தை தழுவிய சீனர்களை பார்த்த இடத்திலேயே கொன்று குவித்தார்கள்.
4.
1.பெரும் நகரங்கள்,துறைமுகங்களும் தரைமட்டமாக்கப்பட்டன.
2.பெரும் சக்தி எனும் நிலையில் இருந்த ஜெர்மனி வீழ்ந்தது.
3.உலக பொருளாதாரம் சரிந்து நொறுங்கியது.
4.உலகின் இரு ஆதிக்க சக்திகளாக அமெரிக்க ஐக்கிய நாடுகளும் சோவியத் ரஷ்யாவும் உருவாயின.
5.ஐரோப்பாவில் பல நாடுகளில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது.
6.உலக அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய பாசிச சிந்தனையை வீழ்த்த உலக நாடுகள் யாவும் ஒன்று கூடின.
5.
1.பிலிப்பைன்சின் பொதுவுடைமைவாத விவசாயிகளே ஹக் ஆவர்.
2.அரசின் படைகளால் ஹக்குகளின் பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளானது.
3.ஆரம்பத்தில் தற்காப்பு அடிப்படையில் மட்டுமே கைக்கொண்டார்கள்.
4.1950 களின் மத்தியில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் உதவியோடு பிலிப்பைன்ஸ் அரசு ஹக்குகளை ஒடுக்கியது.
6.
பொதுவான கருத்துக்கள்:
1.இவை இரண்டும் ஐரோப்பிய ஏகாதிபத்திய காலனி நாடுகள் ஆகும்.
2.இரண்டாம் உலகப் போருக்குப் பின் விடுதலை அடைந்தன.
3.இரு நாடுகளிலும் தேசியவாத பொதுவுடைமை கட்சிகள் தோன்றின.
4.இரண்டு நாடுகளிலும் ஆங்கில மொழியும் ஐரோப்பிய கலாச்சாரமும் திணிக்கப்பட்டது.
வேறுபட்ட கருத்துக்கள்:
1.இந்தோனேஷிய டச்சு காலனி ஆகும்.பிலிப்பைன்ஸ் ஸ்பானிய காலனியாகும்.
2.இவை இரண்டும் ஐரோப்பிய ஏகாதிபத்திய காலனி நாடுகள் ஆகும்.
3.இரண்டாம் உலகப்போரின் போது இந்தோனேஷியா பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலும் பிலிப்பைன்ஸ் அமெரிக்கா கட்டுப்பாட்டிலும் இருந்தது.
4.இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஐ.நா.சபையின் அழுத்தம் காரணமாக இந்தோனேஷியா 1948ல் விடுதலை அடைந்தது.அமெரிக்கா அளித்த வாக்குறுதியின்படி தேர்தல்கள் நடத்தப்பட்டு பிலிப்பைன்ஸ் விடுதலை அடைந்தது.
7.
1.தென்-கிழக்கு சீனாவில் அமைந்த ஹீனான் பகுதியில் மாவோ பிறந்தார்.
2.மாவோ புரட்சி நடந்த ஆண்டில் (1911) சாங்ஷாவில் இருந்த இளையோர் கல்லூரியில் சேர்ந்தார்.
3.பீகிங் பல்கலைக்கழகத்தில் உதவி நூலகராகப் பொறுப்புவகித்தார்.
4.அதற்கு அடுத்த ஆண்டு முழுமையான அரசியல் செயல்பாட்டாளராக மாறிய மாவோ ஹீனானின் அமைப்பாளராக பொறுப்பேற்றதோடு தீவிர பொதுவுடைமைவாதியாகவும் உருப்பெற்றார்.
5.கோமின்டாங்கின் தலைவராக சியாங் கே-ஷேக் இருந்தபோது பொதுவுடைமை கட்சி-மாசே-துங் மற்றும் சூ-யென் லாயின் கட்டுப்பாட்டில் இருந்தது.
6. கோமின்டாங்கின் பிடி நகர்ப்புறங்களில் இறுக்கமாக இருப்பதை உணர்ந்த மாவோ,விவசாயிக்குடிகளை ஒன்று திரட்டுவதில் தனது கவனத்தைச் செலுத்தினார்.
7.கியாங்ஸிக்கும் ஹீனானுக்குமிடைப்பட்ட காடுகளால் சூழப்பெற்ற மலைப்பகுதிகளில் அவர் தஞ்சமடைந்தார்.
8.இப்பகுதியில் மாவோவும்,அவரது தோழர்களும் அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு இருந்தனர்.
9.அடியோடு அழித்தொழிக்கும் நோக்கோடு ஐந்து படையெடுப்புகளை கோமின்டாங் நடத்தி இருந்தாலும் அவர்களால் அம்மலைப் பகுதியில் ஊடுருவ முடியவில்லை என்பதோடு மாவோவின் படைபலம் நாளுக்கு நாள் விரிவடைந்தது.
10.பொதுவுடைமைவாதிகளுக்கு இப்புதுத்தளத்தில் சியாங் கே-ஷேக்கின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு கிடைத்ததோடு ஜப்பானியர்களிடமிருந்து தொடர்ச்சியாக எழுந்து கொண்டிருந்த அச்சுறுத்தல்களில் இருந்தும்,போரையே தொழிலாக கொண்டிருந்த கிள்ளார்களிடமிருந்தும் பாதுகாத்துக் கொள்ள வாய்ப்பாக இருந்தது.
11.பொதுவுடைமைவாதிகளின் நிலைகளைச் சுற்றி வளைத்து சியாங் கே-ஷேக் அரண் எழுப்பியிருந்தால் மாவோ பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஹீனானை விட்டு அகல முடிவு செய்தார்.
12.இதையெடுத்து 1934 இல் பொதுவுடைமை இராணுவம் மேற்கொண்டதே நீண்ட பயணம் என்றழைக்கப்பட்டது.
13.ஷேன்ஸி மற்றும் கன்ஸூவில் அமைந்த கிராமங்களில் மாவோ தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் குழுக்களை அமைத்து பொதுவுடைமைவாதிகள் சீனாவில் ஆட்சியை கைப்பற்றுவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தினார்.
8.
ஸார் பகுதியை ஜெர்மனியோடு இணைக்கப்படல்:
1.வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின்படி ஜனவரி 1935இல் ஸார் பகுதியில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
2.வாக்களித்தவர்களில் தொன்னூறு சதவீத நபர்கள் ஜெர்மனியோடு இணைவதேயே விரும்பினார்கள்.
3.அதனால் மார்ச் 1935 இல் ஸார் பகுதி ஜெர்மனியோடு இணைக்கப்பட்டது.
4.இது ஹிட்லருக்கு பெரும் மனவலிமையை ஊட்டியது.
ரைன்லாந்து இணைக்கப்படல்:
1வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் ஜெர்மனி தனது இராணுவத்தை ரைன்லாந்தில் இருந்து விலகிக்கொள்ள ஒப்புக்கொண்டதையும் மீறி 1936 இல் ஹிட்லர் மீண்டும் அப்பகுதியில் இராணுவத்தை குவிக்கலானார்.
ஆஸ்திரியா-ஜெர்மனியுடன் இணைப்பு:
1.ஹிட்லர் ஆஸ்திரியாவில் பிறந்ததால் அது ஜெர்மனியின் ஒருபகுதியாக இருப்பதையே அவர் விரும்பினார்.
2.ஹிட்லர் ஆஸ்திரிய பிரதம அமைச்சரான ஸ்கூனிக்கை பிப்ரவரி 1938 ல் பவேரிய ஆல்ப்ஸ் மலையில் இருந்த நகரான பெர்க்டஸ்காடனுக்கு கலந்துரையாடும் நிமித்தமாக அழைத்தார்.
2.இந்நிகழ்வில் ஆஸ்திரிய பிரதம அமைச்சர் நாஜி கட்சியை அவர் நாட்டில் அங்கீகாரமளிக்கவும் அந்நாட்டுப் பொருளாதாரத்தை ஜெர்மனியோடு இணைக்கவும் தவறினால் படையெடுப்பை எதிர்கொள்ள நேரிடும் என்ற ஒற்றை தெரிவு வழங்கப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டார்.
சூடட்டன்லாந்து ஆக்கிரமிப்பு:
1.ஐரோப்பாவின் முக்கிய சக்திகளிடமிருந்து எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளாத ஹிட்லர் தனது பார்வையை செகோஸ்லோவாக்கியா மீது திரும்பினார்.
2.ஹிட்லர் ஆஸ்திரிய பிரதம அமைச்சரான ஸ்கூனிக்கை பிப்ரவரி 1938 இல் பவேரிய ஆல்ப்ஸ் மலையில் இருந்த நகரான பெர்க்டஸ்காடனுக்கு கலந்துரையாடும். நிமித்தமாக அழைத்தார்.
3.இந்நிகழ்வில் ஆஸ்திரிய பிரதம அமைச்சர் நாஜி கட்சியை அவர் நாட்டில் அங்கீகாரமளிக்கவும் அந்நாட்டுப் பொருளாதாரத்தை ஜெர்மனியோடு இணைக்கவும் தவறினால் படையெடுப்பை எதிர்கொள்ள நேரிடும் என்ற ஒற்றை தெரிவு வழங்கப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டார்.
சூடட்டன்லாந்து ஆக்கிரமிப்பு:
1.ஐரோப்பாவின் முக்கிய சக்திகளிடமிருந்து எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளாத ஹிட்லர் தனது பார்வையை செகோஸ்லோவாக்கியா மீது திரும்பினார்.
2.சூட்டன்லாந்தில் வாழும் ஜெர்மானியர்கள் மிக மோசமாக ஒடுக்கப்படுகிறார்கள் என்பது போன்றதொருப் பிரச்சாரத்தை தெளிந்த முறைமையுடன் நாஜி கட்சிப் பரப்பியது.
3.பிரான்சையும்,செக்கோஸ்லோவாக்கியாவையும் கலந்து பேசிய பிரிட்டிஷ் பிரதம அமைச்சர் நெவில் சாம்பர்லின் பாதிக்கு மேல் ஜெர்மனிய தொகையை உள்ளடக்கிய மூனிச் ஒப்பந்தம்.
4.மூனிச் மாநாட்டில் பிரிட்டன்,பிரான்ஸ்,ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் பிரதம அமைச்சர்கள் கூடிப்பேசி ஹிட்லர் அக்டோபர் 1 இல் நிர்ப்பந்தித்தது போல சூட்டன்லாந்தை ஜெர்மானியப் படைகள் ஆக்கிரமித்துக் கொள்ளலாம் என்றும் செக்கோஸ்லோவாக்கியாவின் பகுதிகளை போலாந்திற்கும் ஹங்கேரிக்கும் பிரித்துக் கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
போலந்து மீது படையெடுப்பும்,போரின் துவக்கமும்:
ஐரோப்பா முழுவதையும் ஆக்கிரமிக்கும் நோக்கம் கொண்டிருந்த ஹிட்லர் முதலில் 1939 செப்டம்பர் 1 இல் "போலந்து நாடு தனது நட்பு நாடுகளான பிரிட்டன் மற்றும் பிரான்சுடன் இணைந்து தன் நாட்டை சுற்றி வளைத்து தரைமட்டமாக்கத் திட்டம் தீட்டுவதாகவும் போலந்தில் வாழும் ஜெர்மானிய இனத்தை அந்நாடு ஒடுக்குவதாகவும் குற்றம் சுமத்தி அந்நாட்டின் மீது படையெடுத்தார்.
9.
1.முதல் உலகப்போரின் முடிவில் ஜெர்மனியின் மீது பல கடுமையான விதிமுறைகள் சுமத்தப்பட்டன.
2.அதன் கட்டுப்பாட்டில் இருந்த காலனிய நாடுகள் பிரித்தெடுக்கப்பட்டால் அதன் படையளவு மோசமாக சுருங்கியது.
3.அல்சேஸ் மற்றும் லொரைன் பகுதிகளை பிரான்சிடம் விட்டுக் கொடுக்கவும்,சார் பள்ளத்தாக்கில் இந்நாடு தாற்காலிகமாகப் படைகளை நிறுத்திக் கொள்ளவும் ஜெர்மனி ஒப்புதல் வழங்க நிர்பந்திக்கப்பட்டது.
4.தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியான சைலேசியாவை போலந்திடம் ஒப்படைக்கவும் ஜெர்மனி கட்டாயப்படுத்தப்பட்டது.
5.மேலும் செலுத்தவே இயலாத ஒரு தொகையை (6,600 மில்லியன் பவுண்டுகள்)போர் இழப்பீடாகவும் ஜெர்மனியிடம் கோரப்பட்டது.
6.இத்தகைய கூறுகள் தங்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டதாக ஜெர்மனிக்குள் எண்ண அலை ஏற்படவும் அதன் பின்தொடர்ச்சியாக நாஜி கட்சியின் அரசியல் வெற்றிக்கும் வழிவகுத்தது.
7.இத்தாலியும் இத்தாலிய மக்கள் தொகையை அதிகமாகக் கொண்ட பகுதியாக கருதப்பட்ட டால்மேஷியாவை அதனிடமிருந்து பிரித்தெடுத்து புதிதாக உருவான யுகோஸ்லோவியாவிடம் ஒப்படைத்தால் பாதிக்கப்பட்டிருந்தது.
8.சிறு குடியரசாக மாற்றப்பட்ட ஆஸ்திரியா,ஜெர்மனியோடு இணைந்தால் பிரான்சு நாட்டிற்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் அது ஜெர்மனியிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டது.
10.
(c)
பாசிசவாதத்திற்கு எதிரான போராட்டம் ஏகாதிபத்தியத்திற்கு வெற்றியை வழங்கியது .
11.
(b)
எல் அலாமின்
12.
(d)
மிட்வே
13.
(a)
யாமமோடோ
14.
(c)
ரஷ்யா
15.
1.கவைட் ஆயுத கிடங்கில் 200 பிலிப்பைன்ஸ் துருப்புகள் கிளர்ச்சியை நடத்தினர்.
2.இதை ஸ்பானிய ஆட்சியாளர்கள் காட்டுமிராண்டித்தனமாக கையாண்டனர்.
3.இது அந்நாட்டில் தேசிய உணர்வை வளர்க்க பெரிதும் உதவியது.
4.பிலிப்பைன்ஸ் நாட்டின் அறிவார்ந்த மக்கள் கைது செய்யப்பட்டனர்.
16.
1.ஜாவா,சுமத்ரா விடுதலையை டச்சுக்காரர்கள் ஏற்றுக் கொண்டனர்.
2.பிற தீவுகளை கூட்டாட்சி முறையில் இணைத்து இந்தோனேஷியா உருவாக்கப்பட்டது.
3.எனினும் டச்சுக்காரர்கள் இருமுறை இந்தோனேஷிய அமைதியை தகர்க்க முயன்றனர் .
17.
1.அமெரிக்க ஆட்சியின் ஆரம்பத்தில் முதன்மையான காலனிய நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
2.ஆங்கில வழி கல்விமுறை,தேர்வுகள் அடிப்படையில் குடிமைப்பணி,மாகாண நீதிமன்றங்களை உள்ளடக்கிய நீதித்துறை உருவாக்கப்பட்டது.
3.தேர்தல் மூலம் நகராட்சி மற்றும் மாகாண அரசுகள் நிறுவப்பட்டது.
18.
1.1908 ஆம் ஆண்டு உள்ளூர் அரசியல் சங்கமான போய்டி ஒடோமோ எனும் அமைப்பு உருவானது.
2.இவ்வமைப்பு கிழக்கிந்திய தீவுகளில் தெளிவான தேசியவாதத்தை வெளிப்படுத்தியது.
3.இச்சங்கம் வஹிதின் சுதுரோஹீசோடா என்பவரின் திட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்டது.
19.
1.முதலாம் அபினிப் போரின் இறுதியில் 1842 இல் நான்கிங் உடன்படிக்கை கையெழுத்தானது.
2.சீனாவின் கதவுகள் பிரிட்டனுக்காக திறந்து விடப்பட்டது.
3.சீனா ஹாங்காங்கை விட்டுக் கொடுத்ததோடு இழப்பீடாக ஒரு தொகையையும் வழங்கியது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - செய்யுள்-தேவாரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - செய்யுள்-பெருமாள் திருமொழி Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - செய்யுள்-தெய்வமணிமாலை * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil நாகரிகம், தொழில், வணிகம், ஆளுமை - உரைநடை உலகம் -திரைமொழி Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards