12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/11/2019
இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும்
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
கவைட் கிளர்ச்சியின் முக்கியத்துவத்தை மதிப்பிடுக.
2.
டச்சு - இந்தோனேஷிய உடன்படிக்கையின் பின் நேர்ந்த முன்னேற்றங்களை விவாதத்திற்கு விவாதிக்க.
3.
பிலிப்பைன்ஸில் 1902இல் நிறுவப்பட்ட அமெரிக்க ஆட்சியின் உடனடி விளைவுகள் யாவை?
4.
போய்டி ஒடோமோ பற்றிய குறிப்பு வரைந்து அதன் தோல்விக்கான காரணங்களை குறிப்பிடுக.
5.
நான்கிங் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை ஆய்க.
6.
அட்லாண்ட்டிக் பட்டயத்தின் சிறப்புக் கூறுகளைப் பட்டியலிடுக.
7.
பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதன் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தி எழுதுக.
8.
டங்கிர்க் வெளியேற்றம் குறித்து நீவீர் அறிவது யாது?
9.
மூனிச் ஒப்பந்தத்தின் கூறுகள் யாவை?
10.
ரோம் - பெர்லின் அச்சின் உருவாக்கத்திற்குப் பின்புலமாக அமையப்பெற்றது எது?
11.
பன்னாட்டு சங்கத்திலிருந்து 1933 ஆம் ஆண்டில் ஜெர்மனி ஏன் வெளியேறியது?
12.
கெல்லாக் - பிரையாண்ட் உடன்படிக்கையின் முக்கியத்துவத்தை எடுத்தியம்புக.
1.
1.கவைட் ஆயுத கிடங்கில் 200 பிலிப்பைன்ஸ் துருப்புகள் கிளர்ச்சியை நடத்தினர்.
2.இதை ஸ்பானிய ஆட்சியாளர்கள் காட்டுமிராண்டித்தனமாக கையாண்டனர்.
3.இது அந்நாட்டில் தேசிய உணர்வை வளர்க்க பெரிதும் உதவியது.
4.பிலிப்பைன்ஸ் நாட்டின் அறிவார்ந்த மக்கள் கைது செய்யப்பட்டனர்.
2.
1.ஜாவா,சுமத்ரா விடுதலையை டச்சுக்காரர்கள் ஏற்றுக் கொண்டனர்.
2.பிற தீவுகளை கூட்டாட்சி முறையில் இணைத்து இந்தோனேஷியா உருவாக்கப்பட்டது.
3.எனினும் டச்சுக்காரர்கள் இருமுறை இந்தோனேஷிய அமைதியை தகர்க்க முயன்றனர் .
3.
1.அமெரிக்க ஆட்சியின் ஆரம்பத்தில் முதன்மையான காலனிய நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
2.ஆங்கில வழி கல்விமுறை,தேர்வுகள் அடிப்படையில் குடிமைப்பணி,மாகாண நீதிமன்றங்களை உள்ளடக்கிய நீதித்துறை உருவாக்கப்பட்டது.
3.தேர்தல் மூலம் நகராட்சி மற்றும் மாகாண அரசுகள் நிறுவப்பட்டது.
4.
1.1908 ஆம் ஆண்டு உள்ளூர் அரசியல் சங்கமான போய்டி ஒடோமோ எனும் அமைப்பு உருவானது.
2.இவ்வமைப்பு கிழக்கிந்திய தீவுகளில் தெளிவான தேசியவாதத்தை வெளிப்படுத்தியது.
3.இச்சங்கம் வஹிதின் சுதுரோஹீசோடா என்பவரின் திட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்டது.
5.
1.முதலாம் அபினிப் போரின் இறுதியில் 1842 இல் நான்கிங் உடன்படிக்கை கையெழுத்தானது.
2.சீனாவின் கதவுகள் பிரிட்டனுக்காக திறந்து விடப்பட்டது.
3.சீனா ஹாங்காங்கை விட்டுக் கொடுத்ததோடு இழப்பீடாக ஒரு தொகையையும் வழங்கியது.
6.
1.மக்களின் ஒப்புதல் இல்லாமல் பிரதேச சீரமைப்புகள் ஏற்படுத்தலாகாது.
2.அரசைத் தேர்ந்தெடுக்க முழுஉரிமை கொண்டவர்கள் குடிமக்களே.
3.அனைத்து நாடுகளுக்கும் வணிகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும்,உலகின் பிற பகுதிகளில் கிடைக்கும் மூலப்பொருட்களைப் பெறுவதிலும் சமத்துவத்தை ஏற்படுத்துதல்.
4.தடையில்லாமல் கடல் கடந்து செல்வதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துதல்.
5.ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நாடுகளை ஆயுதக்குறைப்பிற்கு உட்படுத்துதல்.
7.
1.ஜப்பான் பேர்ல் துறைமுகம் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க ஜப்பான் மீது போர் பிரகடனம் செய்தது.
2.இது முழுமையான இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்தது.
3.பிரிட்டனும்,சீனாவும் அமெரிக்க ஐக்கிய நாட்டோடு கைகோர்த்தன.
8.
1.பிரெஞ்சு துருப்புகள் டங்கிர்க் கடற்கரைக்கு விரட்டப்பட்டனர்.
2.அங்கிருந்து படகுகளிலும் சிறு கப்பல்களிலும் புறப்படும் படியான நிலை ஏற்பட்டது.
3.அவ்வாறு டங்கிர்க்கிலிருந்து வெளியேற்றப்பட்ட வீரர்களே பாசிசவாதிகளுக்கு எதிரான பிரெஞ்சுப் படையின் கருவாக செயல்பட்டார்கள்.
9.
1.மூனிச் மாநாட்டில்,பிரிட்டன்,பிரான்ஸ்,ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் கலந்து கொண்டன.
2.ஹிட்லர் அக்டோபர் 1 இல் நிர்ப்பந்தித்தது போல் சுடெட்டன்லாந்தை ஜெர்மானிய படைகள் ஆக்கிரமித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.
3.செக்கோஸ்லோவாக்கியின் பகுதிகளை போலந்திற்கும்,ஹங்கேரிக்கும் பிரித்துக் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
10.
1.முசோலினியின் எத்தியோப்பியப் படையெடுப்பை பிரிட்டனும் பிரான்சும் கண்டித்தது.
2.ஹிட்லருக்கு இத்தாலியோடு நெருங்கிய நட்பை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
3.இதுவே ரோம் பெர்லின் அச்சின் துவக்கமாக அமைந்தது.
11.
1.1933 ஆம் ஆண்டு ஜெனீவாவில் பன்னாட்டு சங்கம் ஆயுதக் குறைப்பு மாநாடு ஒன்றை நடத்தியது.
2.பிரான்சிற்கு இணையாக ஜெர்மனியும் மறு ஆயுதமாக்கல் கோரிக்கை விடுத்தது.
3.பிரான்ஸ் அதை ஏற்க மறுத்தது.
4.எனவே ஹிட்லர் அம்மாநாட்டிலிருந்தும்,பன்னாட்டுச் சங்கத்திலிருந்து ஜெர்மனியை வெளியேறினார்.
12.
1.கெல்லாக் - பிரையாண்ட் ஒப்பந்தம் 1928ல் கையெழுத்தானது.
2.அமெரிக்க ஐக்கிய நாடுகள் பன்னாட்டுச் சங்கத்தில் இடம் பெறவில்லை என்றாலும் இம்மாநாட்டில் கலந்து கொண்டது.
3.உலகநாடுகள் அனைத்தும் போரை கைவிடுவது என உறுதிமொழி எடுத்துக்கொண்டது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards