12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
மெளண்ட்பேட்டன் பிரபு பற்றி எழுதுக.
2.
நேரடி நடவடிக்கை நாள் என்றால் என்ன?
3.
இந்து மகா சபை பற்றி எழுதுக.
4.
ஐக்கிய மாகாணத்தில் வகுப்புவாதம் குறிப்பு தருக?
5.
ஆகாகான் தலைமையிலான முஸ்லிம் லீக் முன்வைத்த கோரிக்கைகள் என்ன?
6.
மிண்டோ - மார்லி சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு எது?
1919
1922
1909
1910
7.
வேல்ஸ் இளவரசர் எந்த ஆண்டு இந்தியாவிற்கு வருகை புரிந்தார்?
1921
1922
1925
1927
8.
லக்னோ ஒப்பந்தம் நடைபெற்ற ஆண்டை எழுதுக.
1920
1916
1927
1919
9.
இந்து முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்படுத்திய இயக்கம் எது?
சுத்தி இயக்கம்
வாகாபி இயக்கம்
சுதேசி இயக்கம்
அலிகர் இயக்கம்
10.
அலுவலக மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் விளங்கிய மொழி எது?
ஆங்கிலம்
தமிழ்
பாரசீகம்
சீனா மொழி
11.
தனித்தொகுதியும் வகுப்புவாதம் பரவலும் பற்றி எழுதுக.
12.
கிலாபத் இயக்கத்தைப் பற்றி எழுதுக?
13.
சரோஜினி நாயுடுவை பற்றி சுருக்கமாக எழுதுக.
14.
முகமது அலி ஜின்னா பற்றியும் அவரின் சிறப்பு பற்றி எழுதுக.
15.
முகமது இக்பால் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
16.
பாகிஸ்தான் யூனியன் உருவானதில் முகமது அலி ஜின்னாவின் பங்கு யாது?
17.
அகில இந்திய இந்து மகாசபையின் எழுச்சியை விளக்குக.
18.
இந்திய முஸ்லிம் லீக்கின் நோக்கங்கள் யாவை?
19.
காங்கிரஸ் அமைத்த முதல் அமைச்சரவைகள் பற்றி விவரி?
1.
1. இந்தியாவில் வேவல் பிரபுவைத் தொடர்ந்து மெளண்ட்பேட்டன் பிரபு அரசாங்க பிரதிநிதியாக பொறுப்பேற்றார்.
2. அதிகாரத்தை மாற்றித்தரவும் நாட்டின் பிரிவினையை நடைமுறைப்படுத்தவும் மெளண்ட்பேட்டன் பிரபு இந்தியா வந்தார்.
3. 1947 ஜூன் 3 இல் மெளண்ட்பேட்டன் பிரபு இந்திய அரசியல் பிரச்சனைகளை தீர்க்க மெளண்ட்பேட்டன் திட்டத்தை கொண்டு வந்தார்.
2.
1. காங்கிரசும் ஜின்னாவும் அமைச்சரவை தூதுக்குழுத் திட்டத்தை ஏற்றுக் கொண்டனர்.
2. ஆனால் பல வாரங்கள் நடைபெற்ற இரகசிய பேச்சுவார்த்தைகளுக்குப் பின் ஜூலை 29, 1946 இல் முஸ்லிம் லீக் அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தை நிராகரிப்பதாக அறிவித்தது.
3. மேலும் இந்தியாவிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 16 அன்று "நேரடி நடவடிக்கை நாளில்" ஈடுபடவும் அழைப்பு கல்கத்தாவில் நான்கு நாட்கள் கலவரங்களும் கொலைகளும் நடந்தேறின.
3.
1. வகுப்புவாதம் பஞ்சாபில் ஒரு வலுவான இயக்கமாக முழுமையாக நிலை கொண்டது.
2. 1924 இல் பஞ்சாப் மாகாணம் இந்து, முஸ்லிம் மாகாணங்களாகப் பிரிக்கப்பட வேண்டுமென லாலா லஜபதி ராய் வெளிப்படையாகக் கூறினார்.
3. அரசியல் காலத்தில் இந்து மத மறுமலர்ச்சிக்கு ஆதரவான சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்து மகா சபை "அகண்ட இந்துஸ்தான்" என்னும் முழக்கத்தை முன்வைத்தது.
4.
1. காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் 1922 இல் நிறுத்தப்பட்டது.
2. 1924 இல் கலிஃபா பதவி ஒழிக்கப்பட்டதும், முஸ்லிம்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
3. ஒத்துழையாமை இயக்கத்தின் பின் விளைவாகக் காங்கிரசுக்கும் முஸ்லிம் லீக்குக்குமான ஒப்பந்தம் சிதைந்தது.
5.
(i) ஆகாகான் தலைமையின் கீழ் சிம்லாவில் ஒன்று திரண்டு அப்போதைய அரசப் பிரதிநிதியான மிண்டோ பிரபுவிடம் முஸ்லிம் லீக் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
(ii) அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் சதவீதத்தை உயர்த்துதல், உயர் நீதிமன்றங்களில் முஸ்லிம் நீதிபதிகளின் நியமனம் மற்றும் அரசுப் பிரதிநிதியின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
6.
(c)
1909
7.
(a)
1921
8.
(b)
1916
9.
(b)
வாகாபி இயக்கம்
10.
(c)
பாரசீகம்
11.
1. பிரிட்டிஷ் இந்திய அரசு வகுப்புவாதத்தை வளர்ப்பதற்கும் பரப்புவதற்கும் தனித்தொகுதி என்னும் முதன்மையான ஒரு நுட்பத்தை நடைமுறைப்படுத்தியது.
2. மக்கள் தனித் தொகுதிகளாக பிரிக்கப்பட்டதால் அவர்கள் வகுப்புவாத அடிப்படையில் வாக்களித்தனர்.
3. தனித் தொகுதி மூலம் ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை என்ற கோட்பாடு அரசமைப்பு சட்டத்தில் முறையாக நுழைந்து இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களை முழுமையாக அந்நியப்படுத்தியது.
12.
1. முதல் உலகப் போருக்கு பின் பிரிட்டிஷ் உடன் துருக்கிக்கு எதிராக ஏற்படுத்திய ஒப்பந்தத்தை (செவெரஸ் உடன்படிக்கை 1920) முஸ்லீம்கள் எதிர்த்தனர்.
2. மெளலானா அபுல் கலாம் ஆசாத், எம்.ஏ, அன்சாரி, சைபூதீன் கிச்லு, அலி சகோதரர்கள் இந்த இயக்கத்தை தலைமையேற்று நடத்தினார்கள். கிலாபத் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 1919 அக்டோபர் 19 ஆம் நாள் கிலாபத் தினம் அனுசரிக்கப்பட்டது.
13.
1. முஸ்லிம் பெரும்பான்மையை பாதுகாக்கும் ஒரு உத்தியாக விகிதாச்சாரம் பிரதிநிதித்துவம் குறித்து ஆய்வு மேற்கொள்ள மற்றொரு குழு என இரு குழுக்கள் அமைக்கப்பெற்றன.
2. 1928 ல் கல்கத்தாவில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்து மகா சபையின் உறுப்பினர்கள் திருத்தங்கள் அனைத்தையும் ஒப்புக் கொள்ளமறுத்து ஜின்னா நாட்டை விட்டு வெளியேறினார்.
3. இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் தூதுவர் என ஜின்னாவை சரோஜினி நாயுடு புகழ்ந்தார்.
14.
1. முதலில் ஜின்னாவோ நவாப் ஜாஃபருல்லா கானோ முஸ்லிம்களுக்கு தனி நாடு உருவாக்குவது சாத்தியமாகும் என்று கருதவில்லை.
2. இருந்தபோதிலும் 1940 மார்ச் 23 இல் முஸ்லிம் லீக் பின்வருமாறு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. தீர்மானத்தின் வாசகங்கள் பின்வருமாறு.
3. இது அகில இந்திய முஸ்லிம் லீக்கின் இந்த அமர்வின் ஒருங்கிணைந்த கருத்தாகும்.
4. 1933 இல் செளத்ரி ரஹமத் அலி பாகிஸ்தான் எனும் பெயர் உருவாக்கினார். இதை முகமது அலி ஜின்னா பரவலாக்கினார்.
5. ஜின்னா 1947 இல் மார்ச் 27-யை பாகிஸ்தான் தினமாக கொண்டாடினார்.
6. பாகிஸ்தானின் முதல் பிரதம அமைச்சராக முகமது அலி ஜின்னா பதவி ஏற்றார்.
7. "இந்து முஸ்லிம் ஒற்றுமையின் தூதுவர்" என சரோஜினி நாயுடுவால் புகழப்பெற்றவர் ஜின்னா ஆவார்.
15.
1. பாகிஸ்தான் என்ற எண்ணவோட்டம் 1940-இல் முஸ்லிம் லீக் மேடைகளில் இருந்து வெளிப்பட்டாலும் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே கவிஞரும் அறிஞருமான முகமது இக்பாலால் சிந்திக்கப்பட்டதாகும்.
2. 1930 இல் அலகாபாத்தில் நடைபெற்ற முஸ்லிம் லீக்கின் ஆண்டு மாநாட்டில் இக்பால் ஒருங்கிணைக்கப்பட்ட வடமேற்கு இந்திய முஸ்லிம் அரசைத் தான் காணவிரும்புவதாக கூறினார்.
3. இது பின்னர் கேம்பிரிட்ஜ் மாணவர்களில் ஒருவரான ரஹமத் அலியால் வலுவாக வெளிப்படுத்தப்பட்டது.
16.
1. முதலில் ஜின்னாவோ நவாப் ஜாஃபருல்லா கானோ முஸ்லிம்களுக்கு தனி நாடு உருவாக்குவது சாத்தியமாகும் என்று கருதவில்லை.
2. 1940 மார்ச் 23 இல் முஸ்லிம் லீக் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதில் "இது அகில இந்திய முஸ்லிம் லீக்கின், இந்த அமர்வின் ஒருங்கிணைந்த கருத்தாகும்.
3. நிலவியல் அடிப்படையில் நிர்ணயித்து அடுத்தடுத்து அமைந்துள்ள பகுதிகள் மண்டலங்களாக அவற்றின் எல்லைகள் வரையறை செய்யப்பட வேண்டும் என முஸ்லிம் லீக் வலியுறுத்தியது.
4. தேவைக்கேற்றவாறு மாற்றப்பட்ட, நிலப்பகுதிகளைக் கொண்டவைகளாக அவைகள் அமைதல் வேண்டும்
5. முஸ்லிம்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் சுதந்திரமான தனி மாநிலமாக அமைக்கப்பட வேண்டும் என முஸ்லிம் லீக் கூறியது.
6. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை விட்டுச் செல்லும் முன் நாட்டை இந்திய யூனியன் மற்றும் பாகிஸ்தான் யூனியன் என பிரிவினை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் லீக் தீர்மானித்தது.
7. ஜின்னா தன் பிடிவாதத்தால் அமைச்சரவை தூதுக்குழுவின் திட்டத்தை ஏற்று ஒரு முடிவுக்கு வராமல் நேரடி நடவடிக்கை நாளுக்கு அழைப்பு விடுத்ததால் 1946 இல் கல்கத்தாவில், உள்நாட்டுப் போர் போன்ற நிலை உருவாகி, இறுதியில் நாட்டினை இந்தியா, பாகிஸ்தான் என்று இரு நாடுகளாக பிரிவினை செய்யும் நிலைக்கு இட்டுச் சென்றது.
17.
1. அகில இந்திய முஸ்லிம் லீக் உருவாக்கப்பட்டதையும் 1909 ஆம் ஆண்டு இந்தியக் கவுன்சில் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதையும் தொடர்ந்து ஒரு இந்து அமைப்பை தொடங்கவேண்டும் என்ற எண்ணம் பரவலாக எழுந்தது.
2. 1915-இல் இந்துக்களின் முதல் அகில இந்திய மாநாடு ஹரித்துவாரில் கூட்டப்பெற்றது.
3. அங்குதான் டேராடூனைத் தலைமையிடமாகக் கொண்டு அகில இந்திய மகாசபை தொடங்கப் பெற்றது.
4. இதனைத் தொடர்ந்து மாகாண இந்துசபைகள் அலகாபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஐக்கிய மாகாணத்திலும், பம்பாயிலும், பீகாரிலும் தொடங்கப் பெற்றன.
5. பம்பாயிலும், பீகாரிலும் இவ்வமைப்புகள் திறம்பட செயல்படவில்லை.
6. சென்னையிலும் வங்காளத்திலும் ஓரளவிலான ஆதரவேயிருந்தது.
7. நகர்ப்புற இயல்பினை அதிகம் கொண்டிருந்த இம்மகாசபை வட இந்தியாவின் பெரும் வணிகநகரங்களில் குறிப்பாக அலகாபாத், கான்பூர், பனாரஸ், லக்னோ, லாகூர் போன்ற நகரங்களில் வீரியத்துடன் செயல்பட்டது.
8. ஐக்கிய மாகாணத்திலும் பீகாரிலும் பெரும்பாலும் படித்த இடைத்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த தலைவர்களால் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது.
9. 1921 இல் வேல்ஸ் இளவரசரின் வருகையைப் புறக்கணிக்க மக்களைத் திரட்டுகையில் சுவாமி சிரத்தானந்தா பசுப்பாதுகாப்பைப் பரப்புரை செய்வதன் மூலம் இந்து மகாசபைக்கு புத்துயிர் அளிக்க முனைந்தனர்.
18.
1. அனைத்து இந்திய முஸ்லிம் லீக்கானது முதல் முறையாக முஸ்லிம்களுக்கென பிரத்தியேகமான மையப்படுத்தப்பட்ட ஓர் அரசியல் கட்சியாக இருந்தது.
2. இந்திய முஸ்லிம்கள் பிரிட்டிஷ் அரசிடம் உண்மையுடனும் நன்றியுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்ற உணர்வை அவர்களிடம் ஏற்படுத்துதல்.
3. இந்திய முஸ்லிம்களை விருப்பங்கள் மற்றும் அரசியல் உரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்துதல்.
4. இந்திய முஸ்லிம்கள் மற்ற இனத்தவரிடம் எவ்விதப் பகைமை பாராட்டுவதையும் முன்விரோதம் கொள்வதையும் தடுத்தல்.
5. 1916-இல் முஸ்லிம்களின் தனி அரசியல் அடையாளத்திற்கான அலுவல் முத்திரையை முஸ்லிம் லீக்கிற்கு வழங்கியது.
19.
1. இந்திய தேசிய காங்கிரசை பல்வேறு மதங்களுக்கு அப்பாற்பட்ட ஓர் அரசியல் அடையாளத்தை தோற்றுவிக்க காந்தியடிகள் விரும்பினார்.
2. பல்வேறு சாயல்களைக் கொண்ட அரசு ஆதரவு பெற்ற வகுப்புவாத சக்திகள் இருந்தபோதிலும் இந்தியாவில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் பெரும் செல்வாக்குப் பெற்ற சக்தியாகத் திகழ்ந்தது .
3. 1937-இல் தேர்தல் நடைபெற்ற பதினோரு மாகாணங்களில் ஏழு மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றி வாகை சூடியது.
4. மேலும் மூன்று மாகாணங்களில் மிகப்பெரும் கட்சியாகத் திகழ்ந்தது.
5. முஸ்லிம் லீக்கின் செயல்பாடு மோசமாகவே அமைந்தது. மொத்த முஸ்லிம் வாக்குகளில் 4.8 விழுக்காடு வாக்குகளைப் பெறுவதில் மட்டுமே முஸ்லிம் லீக் பெற்றது காங்கிரஸ் மதசார்பற்ற மாபெரும் மக்கள் கட்சியாக எழுச்சிப் பெற்றது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards