12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 17/01/2020
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
ஜெர்மன் தேசத்திற்கு தொடர் சொற்பொழிவுகளை வழங்கியவர் ________ ஆவார் .
ஜோஹன் வான் ஹெர்டர்
பிரைட்ரிக் ஷெலிகெல்
J.G. ஃபிக்ட்
ஆட்டோ வான் பிஸ்மார்க்
2.
சோவியத் யூனியன் ________ இல் சிதறுண்டது.
நவம்பர் 17, 1991
டிசம்பர் 8, 1991
மே 1, 1991
அக்டோபர் 17, 1991
3.
_______ க்குப் பின் ஷிமனோசெகி ஒப்பந்தம் கையெழுத்திட்டப்பட்டது
ரஷ்ய-ஜப்பனியப் போர்
இரண்டாம் அபினிப் போர்
இரண்டாம் ஆங்கிலோ-சீனப் போர்
சீன-ஜப்பானியப் போர்
4.
போப்பாண்டவரால் கட்டப்பட்ட ரோமில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தை நவீனமயமாக்கியவர் யார்?
டோனிடெல்லா
ரபேல்
லியானர்டோ டாவின்சி
மைக்கேலாஞ்சலோ
5.
கூற்று: 1770 இல் இங்கிலாந்து தேயிலையைத் தவிர ஏனைய பொருட்களின் மீதான வரிகளை ரத்து செய்தது.
காரணம்: காலனி நாடுகளின் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரிவிதிக்கும் உரிமை ஆங்கிலேய பாராளுமன்றத்திற்கு உண்டு என்பதை உறுதிப்படுத்தவே தேயிலையின் மீதான வரி தக்கவைத்துக் கொள்ளப்பட்டது.
கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
கூற்று சரி, காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி.
6.
தக்லா என்ற மலைப்பகுதியில் சீனப்படைகள் எப்போது தாக்குதல் நடத்தின?
1962, செப்டம்பர் 8
1962, செப்டம்பர் 18
1965, செப்டம்பர் 8
1962, செப்டம்பர் 28
7.
முத்துத் துறைமுகம் எந்த நாட்டால் தாக்கப்பட்டது?
சீனா
பங்காள தேசம்
இந்தியா
ஜப்பான்
8.
காங்கிரசின் முதல் கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள் எண்ணிக்கை யாது?
172
79
75
72
9.
தூக்கிலிடுவதற்குப் பதிலாகச் சுட்டுக் கொல்லுங்கள் என்று கோரியவர்கள் யாவர்?
பகத்சிங் மற்றும் நண்பர்கள்
வாஞ்சிநாதன்
சுபாஷ்
யாருமில்லை
10.
கேசரி என்ற பத்திரிகையை எழுதிய தலைவரின் பெயரைக் எழுதுக.
காந்தி
திலகர்
சுபாஷ்
அம்பேத்கர்
11.
தொழிற் புரட்சி முதலில் எந்த நாட்டில் நடைபெற்றது?
அமெரிக்கா
இங்கிலாந்து
இரஷ்யா
ஜெர்மனி
12.
சாம்பரான் சத்யாகிரக சோதனை நடைபெற்ற ஆண்டு எது ?
1918
1915
1919
1917
13.
கதர் கட்சியைத் தொடங்கியவர் யார்?
லாலா ஹர்தயாள்
திலகர்
லாலா லஜபதி ராய்
சுபாஷ் சந்திரபோஸ்
14.
பிரிட்டிஷார் எந்தக் காலத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தனர்?
ஆகஸ்ட் 15, 1947
ஜனவரி 26, 1950
ஜூன், 1948
டிசம்பர், 1949
15.
கூற்று: பி.ஆர். அம்பேத்கர் மஹத் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்.
காரணம்: அவர் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களை ஒருங்கிணைக்க முயன்றார்.
கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்று சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரி, காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி
16.
கூற்று: பிரிட்டிஷ் அரசாங்கம் வகுப்புவாதத்தை வளர்க்கவும் பரப்பவும் பின்பற்றியது தனித்தொகுதிக் கொள்கையாகும்.
காரணம்: மக்கள் இரண்டு தனித்தொகுதிகளாக பிரிக்கப்பட்டதால் வகுப்புவாத அடிப்படையிலேயே வாக்களித்தனர்.
கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரி, காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் தவறு
கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
17.
கூற்று: ஜின்னாவை இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் தூதர் என்று சரோஜினி அம்மையார் அழைத்தார்.
காரணம்: லக்னோ ஒப்பந்தத்தின் தலைமைச் சிற்பி ஜின்னா ஆவார்.
கூற்று சரி. காரணம் கூற்றிற்கான விளக்கமல்ல
கூற்று சரி. காரணம் கூற்றிற்கான விளக்கம்
கூற்று தவறு. காரணம் சரி
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
18.
19.
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்க.
| (அ) இந்தியப் பத்திரிகைச் சட்டம், 1910 | 1. சுய ஆட்சி |
| (ஆ) விடிவெள்ளிக் கழகம் | 2. சார்ந்திருக்கும் நிலைக்கு எதிரான புரட்சி |
| (இ) சுயராஜ்யம் | 3. தேசிய அளவிலான செயல்பாடுகளை நசுக்கியது. |
| (ஈ) சுதேசி | 4. கல்விக்கான தேசியக் கழகம் |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 4 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 3 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 4 | 3 |
20.
“இந்தியாவின் முதுபெரும் மனிதர்” என அழைக்கப்படுபவர்_______.
பாலகங்காதர திலகர்
M.K. காந்தி
தாதாபாய் நெளரோஜி
சுபாஷ் சந்திர போஸ்
21.
கல்பனா தத் (1913 - 1995) பற்றி விரிவாக எழுதுக.
22.
கிரிப்ஸின் முன்மொழிவு கருத்துக்களைக் தொகுத்து எழுதுக?
23.
காங்கிரஸ் அமைத்த முதல் அமைச்சரவைகள் பற்றி விவரி?
24.
வங்கப்பிரிவின் விளைவுகளைப் பற்றி விவரி?
25.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முக்கியத்துவம் பெற்ற கூட்டு சிந்தனையாளர்களை (Collectivist Thinkers) அடையாளப்படுத்தி அவர்கள் சோஷலிச சிந்தனையை செழுமையாக்க ஆற்றிய பங்கைக் கூறுக.
26.
"அமெரிக்க புரட்சியும் பிரெஞ்சுப் புரட்சியும் ஹைட்டியில் புரட்சி ஏற்படத் தூண்டுகோலாய் அமைந்தன". இக்கூற்றை உறுதிப்படுத்தவும்.
27.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை தேசிய அரசுகளாக உருவெடுத்தமை பற்றி ஒருங்கிணைந்த முறையில் ஆராயவும்.
28.
29.
30.
ஒத்துழையாமை இயக்கத்திலிருந்து சட்ட மறுப்பு இயக்கம் எவ்வழிகளில் மாறுபட்டிருந்தது?
31.
சுதந்திரப் போராட்டத்தை இந்திய தேசிய இராணுவ விசாரணை எவ்வாறு தீவிரப்படுத்தியது?
32.
மலபார் மாப்பிள்ளை கிளர்ச்சியின் காரணங்கள் மற்றும் துயர விளைவுகளைப் பற்றி விவாதிக்கவும்.
33.
இந்திய தேசிய இயக்கத்தில் லால்-பால்-பால் ஆகிய மூவரின் பங்களிப்பினை மதிப்பிடுக.
34.
இந்திய தேசிய காங்கிரசின் நோக்கங்களையும் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கு ஆரம்ப கால தேசியவாதிகள் அளித்த பங்கினையும் விளக்குக.
35.
ஸ்டேன்ஸ் நூற்பு மற்றும் நெசவு ஆலை கோவை பற்றி எழுதுக.
36.
நேரடி நடவடிக்கை நாளின் வன்முறைக் காட்சி பற்றி எழுதுக.
37.
இந்து மகா சபை பற்றி எழுதுக.
38.
இத்தாலியை மெட்டர்னிக் "வெறும் பூகோள வெளிப்பாடே" என ஏன் கூறினார்?
39.
பனிப்போர் காலகட்டத்தைச் சேர்ந்த ‘மறைமுக’ போர்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.
40.
பால்கன் சிக்கலின் விளைவுகள் உள்ளடக்கிய சிறப்புக்கூறுகளை எழுதுக.
41.
சமதர்ம சமூக அமைப்பு என்பதைப் பற்றி நீர் அறிந்ததென்ன?
42.
லக்னோ ஒப்பந்தத்தின் சிறப்பு என்ன?
43.
கிரிப்ஸ் முன்மொழிவைக் காங்கிரஸ் ஏன் நிராகரித்தது?
44.
பி.ஆர். அம்பேத்கரால் வழிநடத்தப்பட்ட மஹத் சத்தியாகிரகம் பற்றி அறிவது என்ன?
45.
மகாதேவ் கோவிந்த் ரானடே சுதேசிக் கொள்கையினை எவ்வாறு விளக்குகிறார்?
46.
இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம், மற்றும் அதன் கோரிக்கைகள் யாவை?
47.
இந்திய, பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட மதக் கலவரத்தை விவரி?
48.
முகமது அலி ஜின்னா பற்றியும் அவரின் சிறப்பு பற்றி எழுதுக.
49.
பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் நீண்டகால பெருமந்த காலத்தில் உருவான தொழிலாளர் வர்க்கப் போராட்டங்கள் பற்றி குறிப்பு வரைக.
50.
தென்அமெரிக்காவில் முதன்முதலாகப் பிரேசிலில் அரசியலமைப்பு சார்ந்த முடியாட்சி அரசு அமைந்ததற்கான சூழ்நிலைகளை எடுத்துரைக்கவும்.
51.
போர்த்துகீசிய கடல்பயணி பெட்ரோ காப்ரல் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் பற்றி குறிப்பிடுக.
52.
இந்திய அரசமைப்பின் தனித்தன்மைகள் யாவை?
53.
மூன்று வட்டமேசை மாநாடுகளின் முடிவின் தோல்விக்குப் பிறகு ஏன் காங்கிரஸ் தடை செய்யப்பட்டது?
54.
டாடா இரும்பு எஃகு நிறுவனம் (TISCO) பற்றி குறிப்பு எழுதுக.
1.
(c)
J.G. ஃபிக்ட்
2.
(b)
டிசம்பர் 8, 1991
3.
(d)
சீன-ஜப்பானியப் போர்
4.
(d)
மைக்கேலாஞ்சலோ
5.
(a)
கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
6.
(a)
1962, செப்டம்பர் 8
7.
(b)
பங்காள தேசம்
8.
(d)
72
9.
(a)
பகத்சிங் மற்றும் நண்பர்கள்
10.
(b)
திலகர்
11.
(b)
இங்கிலாந்து
12.
(d)
1917
13.
(a)
லாலா ஹர்தயாள்
14.
(a)
ஆகஸ்ட் 15, 1947
15.
(c)
கூற்று சரி, காரணம் தவறு
16.
(d)
கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
17.
(b)
கூற்று சரி. காரணம் கூற்றிற்கான விளக்கம்
18.
(c)
19.
(c)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
20.
(c)
தாதாபாய் நெளரோஜி
21.
(i) 1920 - களின் பிற்பகுதியில் கல்பனா தத் என்னும் ஓர் இளம் பெண் கம்யூனிஸ்ட் தலைவர் பி.சி.ஜோஷியைத் திருமணம் செய்து கொண்ட பின்னர் கல்பனா ஜோஷி என்று அறியப்பட்டார்.
(ii) சிட்டகாங் ஆயுதப் படைத்தளத்தைத் துணிகரமாகத் தாக்கியதால் மூலம் இளம் நெஞ்சங்களின் தேசபக்தியைக் கனன்றெழச் செய்தவர்.
(iii) கல்பனா தத்தின் வீரத்தை அறிந்து கொள்வதற்கு இந்த இலட்சியங்களின் பால் அவரைப் போன்ற பெண்களை ஈர்த்த தேசியத்தின் புரட்சிகரத் தன்மையைக் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.
(iv) பிரிட்டிஷ் இந்தியாவில் பல புரட்சிக் குழுக்கள் இருந்தன.
(v) ஆணாதிக்கமிக்க இச்சமூகத்தில் தாய்நாட்டை காப்பதற்காய் இளம்பெண்களின் பிரதிநிதியாய் விடுதலைப்போரில் ஆயுதந்தாங்கி கல்பனா தத் போன்றோரும் பங்கேற்றனர்.
(vi) புரட்சிகர சட்டகாங் இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றதினால் கல்பனா தத் கைது செய்யப்பட்டு வாழ்நாள் முழுவதும் நாடுகடத்தப்பட்டார்.
22.
1. கிரிப்ஸ் டொமினியன் அந்தஸ்தையும் போருக்குப் பின் அரசியல் சாசன வரைவுக் குழுவை உருவாக்குதலையும் ஆதாரித்தார்.
2. அரசியல் சாசன வரைவுக் குழு மாகாண சபைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டும் சுதேச அரசர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து நியமிக்கப்பட்டவர்களைக் கொண்டும் ஏற்படுத்தப்படும் என்றது.
3. மேலும் பாகிஸ்தான் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது.
4. தனிப்பட்ட ஒப்பந்தம் ஏற்படுத்த உரிமை இருப்பதாக கிரிப்ஸ் முன்மொழிவு அறிவித்தது.
5. ஆனால் 29 ஜூலை 1946 அன்று பேசிய ஜின்னா முஸ்லிம் லீக் அம்மொழியை நிராகரிப்பதாக அறிவித்தார்.
23.
1. இந்திய தேசிய காங்கிரசை பல்வேறு மதங்களுக்கு அப்பாற்பட்ட ஓர் அரசியல் அடையாளத்தை தோற்றுவிக்க காந்தியடிகள் விரும்பினார்.
2. பல்வேறு சாயல்களைக் கொண்ட அரசு ஆதரவு பெற்ற வகுப்புவாத சக்திகள் இருந்தபோதிலும் இந்தியாவில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் பெரும் செல்வாக்குப் பெற்ற சக்தியாகத் திகழ்ந்தது .
3. 1937-இல் தேர்தல் நடைபெற்ற பதினோரு மாகாணங்களில் ஏழு மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றி வாகை சூடியது.
4. மேலும் மூன்று மாகாணங்களில் மிகப்பெரும் கட்சியாகத் திகழ்ந்தது.
5. முஸ்லிம் லீக்கின் செயல்பாடு மோசமாகவே அமைந்தது. மொத்த முஸ்லிம் வாக்குகளில் 4.8 விழுக்காடு வாக்குகளைப் பெறுவதில் மட்டுமே முஸ்லிம் லீக் பெற்றது காங்கிரஸ் மதசார்பற்ற மாபெரும் மக்கள் கட்சியாக எழுச்சிப் பெற்றது.
24.
1. வங்கப்பிரிவினை வங்காள மக்களை மதத்தின் அடிப்படையில் பிரிப்பதற்குப் பதிலாக அவர்களை ஒன்றுபடுத்தியது.
2. ஜாதி, வர்க்கம், மதம், பிராந்தியம் ஆகியத் தடைகளைத் தாண்டி மக்களிடையே வளர்ந்து கொண்டிருந்த வங்காளிகள் எனும் அடையாளம் வலுப்பெற்றது.
3. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சமூகத்தின் பெரும்பகுதியினரிடையே வங்காள ஒற்றுமை எனும் வலுவான எண்ணம் வளர்ந்து விட்டது.
4. ரவீந்தரநாத் தாகூரை மையமாகக் கொண்டு வங்கமொழி இலக்கிய மதிப்பை பெற்றுவிட்டது.
5. வட்டாரமொழிப் பத்திரிக்கைகளின் வளர்ச்சி ஒற்றுமை தொடர்பான கதை வடிவிலான விவரிப்புகளைக் கட்டமைப்பதில் பங்காற்றியது.
6. இதைப்போலவே மீண்டும் மீண்டும் தோன்றிய பஞ்சங்கள், வேலையின்மை, பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட சறுக்கல் ஆகியவை காலனிய எதிர்ப்பு உணர்வுகளைத் தோற்றுவித்தன.
7. வங்கபிரிவினையின் விளைவாக சமிதிகள், மற்றும் பிரிவினை எதிர்ப்பு இயக்கங்களாகிய முஸ்லிம் லீக், ஹோம் ரூல் இயக்கம் போன்றவை தோன்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தின.
8. ஆங்கிலப் பொருட்களைப் புறக்கணிப்பது, இந்தியப் பொருட்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றை வலியுறுத்தும், சுதேசி இயக்கம் ஏற்பட்டு, இந்திய மக்களிடையே ஆங்கில அரசுக்கு எதிரான விழிப்புணர்வை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியது, போன்றவை வங்கப்பிரிவின் விளைவுகள் ஆகும்.
25.
1. நவீன கால அடிப்படையில் சோஷலிச சிந்தனை இயலாட்சி ஆதரவாளர்கள் (Physiocrats) அல்லது பொருளாதார நிபுணர்களால் உணவு மற்றும் சரக்கு ஆகியவற்றின் உற்பத்தியையும்,விநியோகத்தையும் குறித்த விசாரணை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
2. எட்டியன் கேப்ரியல் மோராலி (Etienne -Gabriel Morelly) 1755 இல் தான் இயற்றிய நூலான கோட் டி நேச்சர் (code de la nature) என்பதில் தனியுடைமையைக் கண்டனத்திற்கும் உட்படுத்தியதோடு சமூகத்தைப் பொதுவுடைமை அமைப்பாக மாற்ற வேண்டி ஒரு முன்மொழிவை வெளிப்படுத்தினார்.
3. செயின்ட் சைமன் பிரிட்டிஷாருக்கு எதிராக அமெரிக்க சுதந்திரப் போரில் பங்கேற்ற ஒரு பிரெஞ்சு உயர்குடிமகனாவார். விஞ்ஞானத்திலும் முன்னேற்றத்திலும் பெரும் நம்பிக்கை கொண்டிருந்த அவர் தன் சமகால பிரெஞ்சு சமூகம் நிலப்பிரபுத்துவத்தின் பிடியில் சிக்கியிருப்பதாக விமர்சித்தார்.
4. சார்லஸ் ஃபூரியர் ஆரம்பகால கற்பனைவாத சோஷலிஸ்டுகளில் ஒருவராவார். அவர் சமூக சூழலே மனித இனத்தின் கவலைகளுக்கு முதல் காரணம் என்று நம்பினார்.
5. மான்செஸ்டர் நகரின் தொழிற்சாலை ஊழியர்களின் கொடுமையான வாழ்க்கைச் சூழலைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அவரது தொழிற்சாலையில் அவர்களின் மேம்பாட்டிற்காகப் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்.
6. பிரெஞ்சு அரசின்மைவாத சிந்தனையாளராகக் (anarchist) கருதப்படும் புரூதன் சோஷலிச சிந்தனை செழுமை பெற முக்கியப் பங்காற்றியுள்ளார்.
7. தேசிய அரசுகளின் இடத்தில் தன்னாட்சி கொண்ட கூட்டு சமூகங்களின் கூட்டமைப்பு தோன்றவேண்டுமென வலியுறுத்தினார்.
8. அரசு அதிகாரத்தின் துணை இல்லாமல் சோஷலிச சமூகத்தை எட்ட முடியாது என்றும் லூயி பிளாங்க் வாதிட்டார்.பிரான்ஸ் நாட்டில் 1848 இல் உருவான தற்காலிக அரசின் உறுப்பினராகப் பங்குவகித்த அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பற்றோருக்கான பணிமனைகளை உருவாக்கி தேவைப்பட்டோருக்கு பணி கிடைக்க வழிவகை செய்தார்.
9. கார்ல் மார்க்சும் (1818 - 1883) பிரெட்ரிக் ஏங்கல்சும் ( 1820 - 1895 ) சோஷலிச சிந்தனைக்கு அரும் பங்களிப்பை வழங்கியுள்ளார்.
10. மார்க்சும் ஏங்கல்சும் 1848 ஆம் ஆண்டின் புரட்சி நடந்த சமகாலத்தில் தங்களின் கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டா என்ற நூலை வெளியிட்டார்கள்.அதிகவும் புகழ்பெற்ற தொழிலாளர்களைத் திரட்டும் கூக்குரலான "உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! நீங்கள் இழப்பதற்கு ஏதுமில்லை,அணிந்திருக்கும் விலங்குகளைத் தவிர" என்பது இடம் பெற்றிருந்தது.
26.
1.முன்னாளில் செயின்ட்-டோமிங்கோ (பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் காலனிகளை அவ்வாறு அழைத்தனர்) என்றறியப்பட்ட ஹைட்டி,கரீபியன் கடலில் இருந்த மிக வளமான பிரெஞ்சு காலனி.
2.அது ஐரோப்பாவின்,ஏனைய கரீபியன் அமெரிக்கக் காலனிகளின் மொத்த சர்க்கரை உற்பத்தியைக் காட்டிலும் அதிக சர்க்கரையை உற்பத்தி செய்யும் பண்ணைகளைக் கொண்டிருந்தது.
3.பாஸ்டில் சிறை வீழ்த்தப்பட்டது எனும் செய்தியைத் தொடர்ந்து முடியாட்சியரசின் ஆளுநருக்கு எதிராக ஆயுதமேந்திய எதிர்ப்பு ஒன்று நடைபெற்றது.
4.முலாட்டோ பிரிவைச் சேர்ந்த வின்சென்ட் ஓஜ் என்பவர் காலனிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காகப் பாரிஸின் நகரச் சட்டமன்றத்தின் ஆதரவைத் திரட்டிக் கொண்டிருந்தார்.
5.1790 இன் இறுதியில் அவர் தலைமையில் கிளர்ச்சி நடைபெற்றது.ஆனால் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
6.1791 மே மாதத்தில் பிரான்சின் புரட்சி அரசாங்கம் வசதி படைத்த முலாட்டோக்களுக்குக் குடியுரிமை வழங்கியது.
7.இரண்டு மாதங்களுக்குள்ளாக ஐரோப்பிய வெள்ளை இனத்தாருக்கும் முலாட்டோக்களுக்குமிடையே ஆங்காங்கே மோதல்கள் வெடித்தன.
27.
ஸ்பெயின் தேசிய அரசு:
1.அராபிய அரசர்களின் வழித்தோன்றல்களாகிய முஸ்லிம் மன்னர்களாகிய மூர்களின் கட்டுப்பாட்டில் ஸ்பெயினின் பெரும்பாலான பகுதிகள் இருந்தன.
2.அராகன்,காஸ்டைல் என இரண்டு முக்கிய அரசுகள் அங்கிருந்தன.
3.ஸ்பெயின் நாட்டின் வரலாற்றின் ஒரு திருப்புமுனையாக அராகன் அரசர் பெர்டினான்ட் காஸ்டைல் இளவரசி இசபெல்லாவை திருமணம் செய்தார்.
4.1479 இல் அரசரும் அரசியும் தங்கள் கைகளில் அதிகாரத்தை எடுத்தனர்.
5.மன்னர் சபையில் இருந்து பிரபுக்களை நீக்கியதன் மூலம் அவர்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்.ஸ்பெயின் ஒரு தனி நாடாக உருவெடுத்தது.
இங்கிலாந்து அரசு:
1.அரச சிம்மாசனத்தை அடைய யார்க் குடும்பம் மற்றும் லாங்காஸ்டர் குடும்பம் என இரண்டு அரச குடும்பங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
2.இதன் விளைவாக ரோஜாப்பூக்கள் போர் நடந்தது.அவர்கள் முறையே வெள்ளை மற்றும் சிவப்பு ரோஜாக்கள் உடைய அடையாளக்குறிகளை அணிந்தனர்.அதனால் இப்பெயர் பெற்றது.
3.இந்த உள்நாட்டுப்போரில் ஹென்றி டியூடர் வெற்றி வாகை சூடி,இங்கிலாந்தில் புதிய அரசாட்சி அமைய வழிவகுத்தார்.
4.ஏழாம் ஹென்றி என்று பட்டம் சூட்டிக்கொண்ட அவர் யார்க் குடும்பத்தைச் சேர்ந்த எலிசபெத் உடன் திருமண ஒப்பந்தத்தில் ஈடுபட்டார்.இதனால் இங்கிலாந்து ஒரு தேசிய அரசராக உருவெடுத்தது.
5.பிரான்சின் கிழக்கே உள்ள பர்கண்டி என்பது ஒரு சக்திவாய்ந்த நாடாகும்.பெயரளவிற்கே பிரான்ஸ் அரசரின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த கிளர்ச்சிமிகுந்த பகுதியான பர்கண்டியை ஆங்கிலேயர்கள் பிரான்சுக்கு எதிராக ஆக்கிரமித்தனர்.
6.பிரெஞ்சு அரசர் ஏழாம் சார்லசுக்குக்காக ஜோன் ஆஃப் ஆர்க் என்ற பெயருடைய ஒரு இளம்பெண் வீரதீரமாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் போரை வென்றார்.ஆர்லியன்ஸின் பணிப்பெண் (Maid of Orleans) என்ற பட்டம் ஜோன் ஆஃப் ஆர்க் மங்கைக்கு வழங்கப்பட்டது.
7.ஜோன் ஆஃப் ஆர்க்கின் மறைவுக்குப் பிறகு நூறாண்டுகள் போரைத் தொடர்ந்த பிரெஞ்சு அரசு அதில் வெற்றி பெற்றது.
8.கிளர்ச்சி மிகுந்த இந்தப்பகுதி இறுதியாக 1483 ஆம் ஆண்டு பிரான்சின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
9.பிரான்ஸ் ஒரு வலுவான மத்திய மன்னராட்சி நடைபெறும் அரசாக பதினோராம் லூயி உருவெடுத்தது.
28.
29.
30.
1. 1929 - டிசம்பர் -31 இல் லாகூரின் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி -26 ஆம் நாள் விடுதலை நாள் கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டது.
2. சட்ட மறுப்பு இயக்கம் காந்தி தலைமையில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
3. லண்டனில் ஒரு வட்ட மேசை மாநாட்டைக் கூட்டவிருப்பதாக அரசு அறிவித்தது. ஆனால் சுதந்திரம் பெற்றே ஆக வேண்டும் என்ற கருத்தில் இந்த வட்ட மேசை மாநாட்டை புறக்கணிக்கப் போவதாகக் காங்கிரஸ் அறிவித்தது.
4. காங்கிரஸ் பங்கேற்காவிட்டால் மாநாட்டை அரசு நடத்துவது பயன் இல்லை என்று அனைவரும் அறிந்திருந்தனர்.
5. காங்கிரஸ் பேச்சுக்கள் தொடங்கின 1931 - மார்ச் - 5 இல் காந்தி இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது.
6. இந்தியாவில் சட்ட மறுப்பு இயக்கத்தின் முடிவைக் குறிப்பதாக அது அமைந்தது.
31.
(i) டெல்லியின் செங்கோட்டையில் இந்திய தேசிய இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட விசாரணையில் இந்தியா காங்கிரஸ் தனது மிகச் சிறந்த சட்ட நிபுணர்களைக் கொண்டு அவர்கள் சார்பாக வாதாடியது இந்திய வரலாற்றில் சிறப்பு அம்சம் ஆகும்.
(ii) காந்தியடிகளின் குரலுக்கு இசைந்து ஜவஹர்லால் நேரு, நீண்ட இடைவேளைக்குப் பின் தனது கருப்பு அங்கியை அணிந்து இந்திய தேசிய இராணுவ வீரர்களின் சார்பில் வழக்கில் ஆஜரானார்.
(iii) இந்திய தேசிய காங்கிரசும் 25 ஜூன் முதல் 14 ஜூலை 1945 வரை நடைபெற்ற சிம்லா மாநாட்டில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததை அடுத்து நேரடியாக மக்களைத் திரட்டும் பொருட்டு நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தியது.
(iv) இப்பின்புலத்தின் காலனிய ஆட்சியாளர்கள்-ஷா நவாஸ்கான், P.K. சேகல் மற்றும் G.S> தில்லான் ஆகிய இந்திய தேசிய இராணுவத்தின் மூன்று முக்கிய அதிகாரிகளைப் பிரித்தெடுத்து விசாரணை நடத்தியது.
(v) இந்தியா நாட்டின் பத்திரிகைகள் யாவும் இவ்விசாரணையை உணர்ச்சிகரமாக பிரசுரித்ததோடு தலையங்கங்கள் அனைத்திலும் அவர்தம் விடுதலைக்காகக் கோரிக்கை வைத்தன.
(vi) கடையடைப்புகளும், ஊர்வலங்களும், பொது வேலைநிறுத்தங்களும் இந்திய தேசிய இராணுவ வாரம் கடைபிடிக்கப்பட்டபோது நடந்தேறியதோடு வீரர்களின் உடனடி விடுதலையும் வலியுறுத்தப்பட்டது.
(vii) வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் அதுவரை தங்களைத் தனிமைப்படுத்தி வைத்திருந்த முஸ்லீம் லீக், சிரோமணி அகாலி தளம், இந்து மகாசபா போன்ற அமைப்புகள் எதிர்ப்புகள் கூட்டங்களில் கலந்துகொள்ளத் துவங்கினர்.
(ix) மேலும் சிறைப்பட்ட வீரர்களின் வழக்குச் செலவிற்காக நிதி திரட்டவும் செய்தன.
(x) விசாரணை நீதிமன்றம் சேகல், தில்லான், ஷா நவாஸ்கான், ஆகியோரின் குற்றத்தை ஊர்ஜிதப்படுத்தினாலும் முப்படைகளின் தளபதி, அவர்களின் தண்டனையைக் குறைத்ததோடு 6 ஜனவரி 1946 அன்று அவர்களை விடுதலை செய்தனர்.
(xi) இந்திய தேசிய இராணுவத்தின் விசாரணை பிப்ரவரி 1946 இல் இந்திய தேசிய இயக்கத்தை மற்றுமொரு முக்கியமான நிகழ்வுக்கு எடுத்துச் செல்ல மேடையமைத்தது.
32.
1. கிலாபத் விஷயம் பல பிரிவினரால் பலவாறாக எடுத்துரைக்கப்பட்டது.
2. உத்தரப்பிரதேசத்தில் இருந்த முஸ்லிம்கள் கிலாப்(எதிர்ப்பு) என்ற அர்த்தமுடைய உருது மொழி வார்த்தையை நிர்வாகத்துக்கு எதிரான பொதுக்கிளர்ச்சியின் அடையாளமாகப் பயன்படுத்தினார்கள்.
3. இவ்வாறே, மலபாரைச் சேர்ந்த மாப்பிள்ளைகள் இதனை நிலப்பிரபுகளுக்கு எதிரான கிளர்ச்சியாக உருமாற்றம் செய்தனர்.
4. இயந்திரங்களின் அறிமுகம், உற்பத்திக்கான புதிய முறைகள், சில பெரிய மாநகரங்களில் தொழிற்சாலைகளின் பெருக்கம் ஆகியவை காரணமாக ஊதியம் ஈட்டுவோராகத் தொழிற்சாலைப் பணியாளர்கள் என்ற புதிய வர்க்கத்தினர் உருவானார்கள்.
5. இந்தியாவில் பெரும்பாலும் கிராமங்களைச் சேர்ந்த தொழிற்சாலை பணியாளர்கள் முதலில் மிகப் பணிவுடனும் முறைசாராமலும் இருந்தனர்.
6. பம்பாயின் சோரப்ஜீ ஷபூர்ஜீ மற்றும் என்.எம்.லோக்காண்டே, வங்காளத்தின் சசிபாத பானர்ஜி ஆகியோர் தொழிற்சாலை பணியாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகத் தங்களின் குரல்களை எழுப்பினர்.
7. பணியாளர்களுக்கான பணி நிலைமைகள் மிக மோசமாக இருந்தது.
8. மதிய உணவுக்குக் குறுகிய கால இடைவெளி தொழிலாளர்கள் மீது ஐரோப்பிய உதவியாளர்கள் அடிக்கடி நடத்திய தாக்குதல்கள், போதுமான ஊதியம் வழங்காதது ஆகிய இந்த கிளர்ச்சியின் துயர விளைவுகள் ஆகும்.
33.
(i) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் புத்தாண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசுக்குள்ளே மிதவாத அரசியலுக்கு எதிராக வெளிப்படையான வெறுப்பு நிலவியது.
(ii) இவ்வேறுப்பு முடிவில் ஒரு புதிய போக்காகத் தோற்றம் பெற்று அது தீவிர தேசியவாதப் போக்கெனக் குறிப்பிடப்பட்டது.
(iii) இத்தீவிர தேசியவாதிகள் அல்லது முற்போக்காளர்கள் அல்லது போர்க்குணமிக்கவர்கள் ஆவார்கள்.
(iv) தீவிர தேசியவாதத் தலைவர்களாகிய லால்-பால்-பால் ஆகியோர் மிதவாதிகளின் கவனமான அணுகுமுறை, ஆங்கிலேயரிடம் மன்றாடுதல் மனு சமர்ப்பித்தல் போன்ற மிதவாதிகளின் "இறைஞ்சுதல் கொள்கைகளை" கடுமையாக விமர்சித்தனர்.
(v) மகாராஷ்டிராவில் பாலகங்காதர திலகர் வங்காளத்தில் பிபின் சந்திரபால், பஞ்சாபில் லாலா லஜபதிராய் ஆகியோரின் தலைமையில் இப்போர்க்குணம் வளர்ச்சி பெற்றது.
(vi) இதற்கு காரணங்கள், காங்கிரசுக்குள் உருவான உட்குழுக்கள், மிதவாதிகளின் அரசியல் நடவடிக்கைகளால் ஏற்பட்ட மனச்சோர்வு மற்றும் வங்காளத்தை பிரிப்பதற்காகக் கர்சன் மீது ஏற்பட்ட சினம் ஆகும்.
(vii) இவர்களால் சுதேசி இயக்கம் வளர்ச்சி பெற்றது. பல உத்திகள் முன்னெடுக்கப்பட்டன.
(viii) அந்நியப் பொருட்களைப் புறக்கணிப்பது, அரசால் நிர்வகிக்கப்படும் கல்வி நிலையங்களைப் புறக்கணிப்பது ஆகியன சுதேசி இயக்கத்தின் ஆக்கபூர்வமானத் திட்டங்களாக இருந்தன.
(ix) வங்கப் பிரிவினையைத் தடுப்பதில் ஏற்பட்ட தோல்வி பிபின் சந்திரபால் கொடுத்த அழுத்தம் காரணமாக மிதவாத தேசியவாதிகள் ஆங்கிலப் பொருட்களைப் புறக்கணிப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.
(x) மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பாலகங்காதர திலகர் "சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்" என்று முழங்கினார்.
(xi) பிபின் சந்திரபாலின் கருத்துப்படி சுயராஜ்ஜியம் என்பது அந்நியர் ஆட்சியிலிருந்து முற்றிலுமாக விடுதலையடைதல் என்பதாகும்.
(xii) வ.உ.சி.யின் சுதேசி இயக்க கப்பல் நிறுவனத்தின் வெற்றி குறித்து லோகமான்ய திலகர் தன்னுடைய கேசரி, மராட்டா பத்திரிகைகளில் எழுதினார்.
(xiii) பாலகங்காதர திலகர், பிபின் சந்திரபால், லாலா லஜபதிராய் (லால்-பால் -பால், Lal-bal-pal ) எனக் குறிப்பிடப்படும் முப்பெரும் தலைவர்களின் இயக்க நடவடிக்கைகளின் விளைவாக மகாராஷ்டிரம், வங்காளம், பஞ்சாப் ஆகிய மூன்றும் சுதேசி இயக்கக் காலப்பகுதியில் தீவிர தேசியவாதத்தின் மையப்புள்ளிகளாகத் திகழ்ந்தன.
34.
1. 1875 க்கும் 1885 க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் ஆங்கிலேயரின் கொள்கைக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றன.
2. 1877 இல் அரசுப் பணிகள் இந்திய மயமாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை ஓங்கி ஒலித்தது.
3. இந்திய தேசிய காங்கிரஸ் "இந்தியா ஒரே நாடு" எனும் கருத்து அவ்வமைப்பின் பெயரில் பிரதிபலித்தது.
4. இந்திய தேசியக் காங்கிரஸ் 1885 டிசம்பர் 28-இல் பம்பாயில் உருவாக்கப்பட்டது.
5. W.C. பானர்ஜி இவ்வமைப்பின் முதல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
6. இவ்வமைப்பு தேசியவாதம் எனும் கருத்தையும் அறிமுகம் செய்தது.
7. இந்தியரை ஒரே நாடாக ஒருங்கிணைப்பதே இந்திய தேசிய காங்கிரசின் இன்றியமையா நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.
8. இந்தியர்கள் தாங்கள் அனைவரும் ஒரே நாட்டின் குடிமக்கள் என உணர்ந்தால் மட்டுமே காலனியாட்சிக்கு எதிரான போராட்டங்கள் வெற்றி பெறுமென்பதை இந்திய தேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் நன்குணர்ந்தனர்.
9. பிபின் சந்திரபால், பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்ற ஆரம்பகால தேசியவாதிகள் மனுக்கள் எழுதுவது, மன்றாடிக் கேட்டுக்கொள்வது போன்றவற்றிற்கு மாறாக தீவிரமான அணுகுமுறைகளை பரிந்துரைத்தனர்.
35.
(i) சென்னை மாகாணத்தில் தொழில்துறை வளர்ச்சி கணிசமானதாக இருந்தது.
(ii) குறைந்த வட்டி விகிதத்தில் கடன் போன்றவை கோயம்புத்தூரில் ஜவுளித்துறையில் விரிவாக்கத்திற்கு வழிவகுத்தன.
(iii) 1929 - 37 களில் அதிக அளவு மாற்றத்தை ஏற்படுத்தியது.
(iv) அதிக மக்கள் வேலை வாய்ப்பை பெற்றார்கள்.
36.
1. முஸ்லிம் லீக் ஆகஸ்ட் 1946 அன்று நேரடி நடவடிக்கை செயலில் இறங்க இஸ்லாமியர்களுக்கு அறைகூவல் விடுத்தது.
2. கல்கத்தாவிலும் டெல்லி உட்பட பிற பகுதிகளிலும் இரத்த ஆறு ஓடியது.
3. காந்தியடிகள் 1946-இல் அவர் "இஸ்லாமியர்களும் இந்தியர்களே! அதனால் அவர்களைப் பாதுகாப்பது நமது கடமை" என்று கூறினார்.
37.
1. வகுப்புவாதம் பஞ்சாபில் ஒரு வலுவான இயக்கமாக முழுமையாக நிலை கொண்டது.
2. 1924 இல் பஞ்சாப் மாகாணம் இந்து, முஸ்லிம் மாகாணங்களாகப் பிரிக்கப்பட வேண்டுமென லாலா லஜபதி ராய் வெளிப்படையாகக் கூறினார்.
3. அரசியல் காலத்தில் இந்து மத மறுமலர்ச்சிக்கு ஆதரவான சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்து மகா சபை "அகண்ட இந்துஸ்தான்" என்னும் முழக்கத்தை முன்வைத்தது.
38.
1.வியன்னா காங்கிரசால் இத்தாலி எட்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது.
2.இத்தாலியின் வட பகுதி ஆஸ்திரியர்களின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
3.19 ஆம் நூற்றாண்டில் இத்தாலி 12 மாநிலங்கள் மற்றும் பல குறுநிலங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது.
4.எனவே இத்தாலி வெறும் பூகோள வெளிப்பாடே என்று மெட்டர்னிக் குறிப்பிட்டார்.
39.
1.அமெரிக்கா,ரஷ்யாவிற்கும் இடையே மறைமுகப் போர்கள் நடந்தன.
2.1950-1953ல் ஏற்பட்ட கொரியப் போரும்,1955-1975 ல் ஏற்பட்ட வியட்நாம் போரும் மறைமுகப் போர்களாகும்.
3.வடகொரியா,வட வியட்நாமிற்கு ரஷ்யாவும் தென்கொரியா தென் வியட்நாமிற்கு அமெரிக்காவும் துணையாக நின்றது.
40.
1.பல்கேரியர்கள் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதாக உணர்ந்து அதற்காக செர்பியர்களை பழிவாங்க துடித்தனர்.
2.செர்பியர்கள் மிதமிஞ்சிய வெற்றிக் களிப்பில் திளைத்தார்கள்.
3.ஆஸ்திரியர்களுக்கு எதிரான போராட்டங்கள் செர்பியாவிலும் போஸ்னியாவிலும் தீவிரவாதத் தன்மை கொண்டதாய் மாறியது.
41.
1.ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பது.
2.சுரண்டலை ஒழிப்பது.
3.செல்வம் ஓரிடத்தில் குவிக்கப்படுவதை தடுப்பது ஆகியன சமதர்ம சமூக அமைப்பு ஆகும்.
42.
1. இந்து, முஸ்லீம் ஒற்றுமைக்கும் விடுதலை இயக்கத்துக்கும் லக்னோ இயக்கம் வழிவகுத்தது.
2. ஜின்னாவை "இந்து - முஸ்லீம் ஒற்றுமையின் தூதர்" என்று சரோஜினி நாயுடு அழைத்தார்.
43.
(i) டொமினியன் அந்தஸ்து வழங்குவதென்பது ஏமாற்றமளிக்கக் கூடிய குறுகிய நடவடிக்கையாகும்.
(ii) பிற மாகாணங்களைப் போல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மாற்றாக உறுப்பினர்களால் நியமிக்கப்படும் முறையை காங்கிரஸ் நிராகரித்தது.
(iii) ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டு அவ்வாறே நிகழ்ந்தது.
44.
1. ஊருணிகள் மற்றும் கிணறுகளில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தரவேண்டிய அடிப்படை உரிமைகளை மீட்டுத்தர மஹத் சத்தியாகிரகம் என்ற அமைப்புத் தொடங்கினார்.
2. ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்காலம் குறித்து அம்பேத்கர் பெரிதும் கவலை அடைந்தார்.
3. அம்பேத்கரின் அறிவாற்றல் மற்றும் பொது நடவடிக்கைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
45.
1. சுதேசி என்பதன் பொருள் "ஒருவரது சொந்த நாடு" மற்றும் அன்னியப்பொருள் எதிர்ப்பு என்பதாகும்.
2. ரானடேயின் கருத்துப்படி ஒருவரது சொந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு அப்பொருட்களின் பயன்பாடு குறைவான மனநிறைவைக் கொடுத்தபோதிலும் முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.
46.
1. இந்திய தேசிய காங்கிரஸ் 1885 டிசம்பர் 28 இல் பம்பாயில் A.O ஹீயூம் என்பவரால் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பை உருவாக்கிய முக்கிய உறுப்பினராக W.C பானர்ஜி இவ்வமைப்பின் முதல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
2. இந்தியரை ஒரே நாடாக ஒருங்கிணைப்பதே இந்திய தேசிய காங்கிரசின் இன்றியமையா நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.
3. இந்தியர்கள் தாங்கள் அனைவரும் ஒரு நாட்டின் குடிமக்கள் என உணர்ந்தால் மட்டுமே காலனியாட்சிக்கு எதிரானப் போராட்டங்கள் வெற்றி பெறுமென்பதை அவர்கள் நன்குணர்ந்தனர்.
4. இந்திய தேசியக் காங்கிரஸ் முக்கிய நோக்கங்களும் கோரிக்கைகளாக அரசியல் அமைப்பு, பொருளாதாரம், நிர்வாகம், நீதித்துறை ஆகிய நான்கும் கருதப்பட்டது.
47.
1. பிரிவினைக்குப் பின் இந்தியாவில் 42 மில்லியன் முஸ்லிம்களும், பாக்கிஸ்தானில் 20 மில்லியன் முஸ்லிம் அல்லாத இந்துக்கள், சிந்தியர்கள் மற்றும் சீக்கியர்கள் இருந்தனர்.
2. இந்து - முஸ்லிம் வன்முறைகளுக்கு இடையே ஏற்பட்ட உயிர்க் கொலைகள், அதிகாரப் பரிமாற்றம் மென்மையாக நடைபெறவில்லை.
3. இந்திய ராயல் கப்பற்படை கலகம், ஐ.என்.ஏ வழக்குகள் ஆகியவற்றின் போது நிலவிய இந்து முஸ்லிம் ஒற்றுமை தற்போது குலைந்து வெடிக்கும் எரிமலை போல் மாறியிருந்தது.
4. வகுப்பு வாதக் கலவரங்கள் இந்தியா எங்கும், குறிப்பாக வங்காளம், மற்றும் பஞ்சாப்பில் அதிகமாக நடைபெற்றன.
48.
1. முதலில் ஜின்னாவோ நவாப் ஜாஃபருல்லா கானோ முஸ்லிம்களுக்கு தனி நாடு உருவாக்குவது சாத்தியமாகும் என்று கருதவில்லை.
2. இருந்தபோதிலும் 1940 மார்ச் 23 இல் முஸ்லிம் லீக் பின்வருமாறு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. தீர்மானத்தின் வாசகங்கள் பின்வருமாறு.
3. இது அகில இந்திய முஸ்லிம் லீக்கின் இந்த அமர்வின் ஒருங்கிணைந்த கருத்தாகும்.
4. 1933 இல் செளத்ரி ரஹமத் அலி பாகிஸ்தான் எனும் பெயர் உருவாக்கினார். இதை முகமது அலி ஜின்னா பரவலாக்கினார்.
5. ஜின்னா 1947 இல் மார்ச் 27-யை பாகிஸ்தான் தினமாக கொண்டாடினார்.
6. பாகிஸ்தானின் முதல் பிரதம அமைச்சராக முகமது அலி ஜின்னா பதவி ஏற்றார்.
7. "இந்து முஸ்லிம் ஒற்றுமையின் தூதுவர்" என சரோஜினி நாயுடுவால் புகழப்பெற்றவர் ஜின்னா ஆவார்.
49.
1.1894 இல் அமெரிக்க இரயில்வே தொழிற்சங்கம் பங்குபெற்ற புல்மேன் வேலை நிறுத்தப் போராட்டம் ஆயுதமேந்திய காவலரை ஒடுக்கியது.
2.நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட பிங்கர்டன் தனியார் உளவு நிறுவனத்தாரையும் ஒடுக்கியது.
3.1880 ல் பிரிட்டனில் மகளிர் தீப்பெட்டி தொழிலாளர் போராட்டம் வெற்றி அடைந்தது.
4.1889 ல் கப்பல் செப்பனிடும் பட்டறை தொழிலாளர் போராட்டம் வெடித்தது.
50.
1.நெப்போலியன் போர்த்துகலின் மீது படையெடுத்த போது போர்த்துகலின் அரசர் டாம் ஜோவா பிரேசிலுக்கு தப்பி ஓடினார்.
2.பிரேசில் முன்னேற்றமடைய அவர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
3.தனது மகன் டாம் பெட்ரோவிடம் பிரேசிலை ஒப்படைத்து விட்டு போர்த்துகல் திரும்ப முடிவு செய்தார்.
4.பிரேசிலின் மேட்டுக்குடி மக்கள் ஆப்பிரிக்க அடிமைகளைச் சார்ந்திருந்தனர்.
5.டாம் பெட்ரோ பிரேசிலின் சுதந்திரத்தை அறிவித்து விட்டு அங்கேயே தங்கிவிட்டார்.1822 ல் பிரேசில் போர்த்துகல்லிடமிருந்து விடுதலை பெற்றது.
51.
1.1500 ல் பெட்ரோ காப்ரல் மேற்கு நோக்கி பயணித்து பிரேசிலை கண்டுபிடித்தார்.
2.இத்தீவிற்கு ஐலாண்ட் ஆப் தி ட்ரூ கிராஸ் என பெயரிட்டார்.
3.வாஸ்கோடகாமாவை தொடர்ந்து காப்ரல் கோழிக்கோட்டை சென்றடைந்தார்.
4.தெற்கில் உள்ள கொச்சினுக்கு புறப்பட்டுச் சென்றார்.
5.1501 ஜனவரி 16ல் நறுமணப் பொருட்கள் நிரப்பப்பட்ட ஆறு கப்பல்களுடன் போர்ச்சுகலுக்கு பயணம் மேற்கொண்டார்.
52.
(i) இந்திய அரசமைப்பு உலகிலேயே நீண்ட எழுதப்பட்ட அரசமைப்பு ஆகும்.
(ii) இந்தியா இறையாண்மையுள்ள, சமதர்ம, சமயசார்பற்ற, மக்களாட்சிக் குடியரசு என்று அரசமைப்பு முகவுரை கூறுகிறது.
(iii) அடிப்படை உரிமைகள், குறிக்கோள், தீர்மானத்தின் ஐந்தாம் பிரிவிலிருந்து உருவாக்கப்பட்டன.
(iv) இந்திய அரசமைப்பு இந்திய நாட்டிற்குச் சுதந்திரமான தேர்தல் ஆணையத்தை உருவாக்குகிறது.
(v) வயதுவந்தோர் அனைவருக்குமான வாக்குரிமையும் உறுதி செய்தது.
(vi) நீதித்துறையின் சுதந்திரத் தன்மையுடன் உறுதி செய்தது.
53.
1. சட்ட மறுப்பு இயக்கத்தை மீண்டும் கையில் எடுப்பது என்று காங்கிரஸ் தீர்மானித்தது பொருளாதார வீழ்ச்சி காரணமாகக் குறிப்பாக விவசாயிகள் உட்பட பொதுவாகவே நாட்டு மக்களின் பொருளாதார நிலைமை மோசமடைந்தது.
2. தேசியவாதம் தொடர்பான பிரசுரங்கள் அனைத்தும் சட்டத்துக்குப் புறம்பானவை என அறிவிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
3. இந்த இயக்கம் பொதுவாக மந்த நிலையை அடைந்து 1933 மே மாதம் அதிகாரப்பூர்வமாக
நிறுத்தப்பட்டது.
4. பின்னர் மே 1934-இல் முற்றிலும் முடிவுக்கு வந்தது.
54.
(i) 1907 இல் பீகாரிலுள்ள சாகி நகரில் டாடா குழுமத்தால் டாடா இரும்பு மற்றும் எ∴கு நிறுவனம் ( TISCO ) முதன்முதலில் சுதேசி இயக்கத்தின் ஒரு நிகழ்வாக அமைக்கப்பட்டது.
(ii) ஜே. என். டாடா எனப் பிரபலமாய் அறியப்பட்ட "ஜாம்ஷெட்ஜீ " நுஸர்வஞ்சி டாடா- ( 1839 - 1904 ) பரோடாவில் உள்ள நவ்சாரி என்ற இடத்தில் ஒரு பார்சி ஜொராஸ்ட்ரியன் வணிகக் குடும்பத்தில் இருந்து வந்தார்.
(iii) இந்தியாவின் முதல் வெற்றிகரமான தொழிலதிபர் ஆவார்.
(iv) இந்திய நவீன தொழிலகங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
(v) 1910 இல் மிகப் பெருமளவில் டாடா நீர்மின் சக்தி நிறுவனம் உதயமானது.
(vi) டாடா இரும்பு மற்றும் எ∴கு உற்பத்தி 1912 - 13- ல் 31, 000 டன்னிலிருந்து 1971 - 78 இல் 1, 81, 000 டன்னாக அதிகரித்துள்ளது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards