12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 31/10/2019
புரட்சிகளின் காலம்
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
பிரெஞ்சுப் புரட்சியின் போது அறிவிக்கப்பட்ட மனிதன் மற்றும் குடிமக்கள் உரிமைகள் பிரகடனம் பெண்களைத் தவிர்த்துவிட்டதால் அதன் மேல் ____ அதிருப்தி கொண்டிருந்தார்.
ஒலிம்பே டி கோஜெஸ்
மேரி அன்டாய்னெட்
ரோஜெட் டி லிஸ்லி
ரோபஸ்பியர்
2.
டென்னிஸ் மைதான உறுதிமொழிக்கு இட்டுச் சென்ற எதிர்ப்புக்கு தலைமையேற்ற பிரபு _____ ஆவார்.
மார்ட்
டாண்டன்
லஃபாயட்
மிராபு
3.
அமெரிக்க சுதந்திரப் போரில் ஆங்கில படைகளுக்குத் தலைமை தாங்கியவர்_____.
ரிச்சர்ட் லீ
ஜார்ஜ் வாஷிங்டன்
வில்லியம் ஹோவே
ராக்கிங்காம்
4.
பாஸ்டன் தேநீர் விருந்து நிகழ்வு ______ இல் நடைபெற்றது.
1775
1773
1784
1799
5.
நியூ ஆம்ஸ்டர்டாமிற்கு ______ என மறுபெயர் சூட்டப்பட்டது.
வாஷிங்டன்
நியூயார்க்
சிக்காகோ
ஆம்ஸ்டர்டாம்
6.
இலத்தீன் அமெரிக்க விடுதலைக்கு சைமன் பொலிவரின் பங்களிப்பை சுருக்கமாய் வரைக.
7.
மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைப் பிரகடனத்தின் சாராம்சத்தை அடிக்கோடிட்டுக் காட்டவும்.
8.
சரடோகா போரின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுக.
9.
"செப்டம்பர் படுகொலைகள்" எதனால் ஏற்பட்டது?
10.
"1789 ஆம் ஆண்டு புரட்சிக்கு நீண்ட காலத்திற்கு முன்னதாகவே கருத்துக்களின் களத்தில் ஒரு புரட்சி நடந்தது " - விளக்குக.
11.
அமெரிக்க புரட்சியின் முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்க.
12.
"அமெரிக்க புரட்சியும் பிரெஞ்சுப் புரட்சியும் ஹைட்டியில் புரட்சி ஏற்படத் தூண்டுகோலாய் அமைந்தன". இக்கூற்றை உறுதிப்படுத்தவும்.
13.
பாஸ்டில் சிறை தகர்ப்பு முதல் ரோபஸ்பியர் கொல்லப்பட்டது வரையிலுமான பிரெஞ்சுப் புரட்சியின் போக்கினை வரைக.
1.
(a)
ஒலிம்பே டி கோஜெஸ்
2.
(d)
மிராபு
3.
(c)
வில்லியம் ஹோவே
4.
(b)
1773
5.
(b)
நியூயார்க்
6.
1.பொலிவர் கராகஸ் பகுதியின் கிரியோல் வகுப்பைச் சேர்ந்தவர்.
2.ஸ்பானியர்களின் காலனி ஆதிக்கத்தை விமர்சித்தார்.
3.பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியிலும் இருபதாம் நூற்றாண்டிலும் கூடிய லத்தீன் அமெரிக்க விடுதலை இயக்கங்களும் இடது சாரிகளுக்கும் உத்வேக மூட்டும் ஒரு சக்தியாக பொலிவர் விளங்கினார்.
7.
1.1789 ஆகஸ்ட் 26ல் மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைப் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2.அரசரைச் சட்டத்தின் ஆட்சிக்குத் துணையாய் இருக்க செய்த இப்பிரகடனம் தனிமனித உரிமைகளையும் கூட்டு உரிமைகளையும் வரையறை செய்தது.
3.ஒரு முகவுரையையும் 17 பிரிவுகளையும் கொண்டுள்ளது.
4.அனைத்து மக்களும் தங்கள் வருவாய் ஆதாரங்களுக்கு ஏற்றவாறு வரி செலுத்த வேண்டுமென கூறுகிறது.
8.
1.1777 இல் சரடோகா போர் முனையின் ஆங்கிலேயப் படைத்தளபதி ஜெனரல் புர்கோய்ன் சரணடைய நிர்ப்பந்திக்கப்பட்டார்.
2.1787ல் யார்க்டவுன் என்ற இடத்தில் இங்கிலாந்து படைகள் அமெரிக்க படைகளிடம் சரணடைந்தன.
3.இவ்வெற்றிகளால் வட பகுதி குடியேற்றங்கள் சுதந்திரம் பெற்றன.
9.
1. முடியாட்சி தூக்கி எறியப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் எதிர்புரட்சியாளர்கள் தீட்டிய சதியொன்றில் இணையப் போவதாக மக்கள் நம்பினர்.
2. அரச குடும்ப ஆதரவாளர்கள் எனக் கருதப்பட்ட அனைவரும் கேள்வி முறையின்றி கொல்லப்பட்டனர்.
3. 1792 செப்டம்பர் 2ல் பாரிஸ் நகரின் சிறையில் தொடங்கிய இப்படுகொலை நகரின் ஏனைய சிறைகளிலும் மேற்கொள்ளப்பட்டு அடுத்த நான்கு நாட்களும் தொடர்ந்தது.
4. இந்நிகழ்வே செப்டம்பர் படுகொலை ஆகும்.
10.
1.அறிவொளிச் சிந்தனைகளால் எழுச்சியூட்டப்பட்டிருந்த அறிவார்ந்த மக்கள் அனைத்து அறிவுத் துறைகளையும் காரண காரியங்களோடு பார்க்கத் துவங்கினர்.
2. வால்டேர், ரூஸோ, மாண்டெஸ்கியூ ஆகியோரின் எழுத்துகள் 1789 ஆம் ஆண்டு புரட்சிக்கு தூண்டுகோலாய் அமைந்தன.
3. மாண்டெஸ்கியூவின் சட்டங்களின் சாரம்,வால்டேரின் பதினான்காம் லூயியின் காலம்,ரூஸோவின் சமூக ஒப்பந்தம் போன்ற நூல்கள் புரட்சி ஏற்பட தூண்டுகோலாக அமைந்தன.
11.
1.அமெரிக்க புரட்சி உலக வரலாற்றில் பல அணுகுமுறைகளை (avenues) ஏற்படுத்தியது .
2.மக்களாட்சி,குடியரசு போன்ற கோட்பாடுகள் மேலும் விரிவாகப் பரவலாயின.
3.அரசியல்,சமூக மாற்றங்கள் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் அடிப்படையாக கொண்டிருந்தன.
4.குடியேறியவர்கள் அனைவருக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் சுதந்திரத்தையும் வாய்ப்புகளையும் வழங்கும் நாடானது.
5.கல்வியின் முக்கியத்துவம் சிறப்பிடத்தைப் பெற்றது.
6.கூட்டாட்சிக் கோட்பாடு பரவலானது.
7.அமெரிக்க புரட்சி காலனியாதிக்கத்திற்கு ஒரு பின்னடைவாகும். தங்கள் காலனிய எஜமானர்களுக்கு எதிராக குடியேற்ற நாடுகளின் விடுதலைக்கான கோரிக்கை உலகின் பல்வேறு பகுதிகளில் பரவியது.
8.ஒவ்வொரு தனி மனிதருக்கும் பேச்சு சுதந்திரம், மத சுதந்திரம் மற்றும் சமவாய்ப்பு ஆகியன வழங்கப்பட்ட சுதந்திர சமுதாயம் உருவாவதற்கு இப்புரட்சி வழிகோலியது.
12.
1.முன்னாளில் செயின்ட்-டோமிங்கோ (பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் காலனிகளை அவ்வாறு அழைத்தனர்) என்றறியப்பட்ட ஹைட்டி,கரீபியன் கடலில் இருந்த மிக வளமான பிரெஞ்சு காலனி.
2.அது ஐரோப்பாவின்,ஏனைய கரீபியன் அமெரிக்கக் காலனிகளின் மொத்த சர்க்கரை உற்பத்தியைக் காட்டிலும் அதிக சர்க்கரையை உற்பத்தி செய்யும் பண்ணைகளைக் கொண்டிருந்தது.
3.பாஸ்டில் சிறை வீழ்த்தப்பட்டது எனும் செய்தியைத் தொடர்ந்து முடியாட்சியரசின் ஆளுநருக்கு எதிராக ஆயுதமேந்திய எதிர்ப்பு ஒன்று நடைபெற்றது.
4.முலாட்டோ பிரிவைச் சேர்ந்த வின்சென்ட் ஓஜ் என்பவர் காலனிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காகப் பாரிஸின் நகரச் சட்டமன்றத்தின் ஆதரவைத் திரட்டிக் கொண்டிருந்தார்.
5.1790 இன் இறுதியில் அவர் தலைமையில் கிளர்ச்சி நடைபெற்றது.ஆனால் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
6.1791 மே மாதத்தில் பிரான்சின் புரட்சி அரசாங்கம் வசதி படைத்த முலாட்டோக்களுக்குக் குடியுரிமை வழங்கியது.
7.இரண்டு மாதங்களுக்குள்ளாக ஐரோப்பிய வெள்ளை இனத்தாருக்கும் முலாட்டோக்களுக்குமிடையே ஆங்காங்கே மோதல்கள் வெடித்தன.
13.
பாஸ்டில் சிறை தகர்ப்பு :
1.அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் அல்லல்பட்ட பெண்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.அரசர் பாரிஸ் நகர வீதிகளுக்கு செல்லும்படி படைகளுக்குக் கட்டளையிட்டார்.இதனால் கோபம் கொண்ட மக்கள் 1789 ஜூலை 14-ல் பாஸ்டில் சிறையை தகர்த்து கைதிகளை விடுவித்தனர்.
தேசிய மன்றம்:
1.பாஸ்டில் சிறை தகர்ப்பால் ஊக்கம் பெற்ற தேசிய சட்டமன்றம் 1791ல் அரசியலமைப்பை உருவாக்கியது. புதிய அரசியலமைப்பு மூன்று வெவ்வேறு அங்கங்களை பரிந்துரைத்தது.
குழுக்களின் தோற்றம்:
1.தேசிய சட்டமன்றம் உருவாக்கப்பட்ட பின்னரும் கூட சாதாரண மக்களின் துயரங்கள் தொடர்கதையாக இருந்தன. மனநிறைவு பெறாத மக்கள் தங்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விவாதம் செய்ய அரசியல் குழுக்களை உருவாக்கத் தொடங்கினர்.
2.முக்கியமான குழு ஜேக்கோபியன் குழு ஆகும்.இதன் தலைவர் மாக்ஸ்மிலியன் ரோபஸ்பியர் ஆவார்.கார்டிலியர் கிளப்பில் செல்வாக்கு பெற்றவர் டாண்டன் ஆவார்.
3.ஜேக்கோபியன் குழுவிற்குள் இருந்த கிராண்டியர்கள் அரசரின் ஆதரவாளராக இருந்தனர்.
ஜேக்கோபியன்களின் ஆட்சி:
1.1793க்கும் 1794க்கும் இடைப்பட்ட காலம் தீவிர சீர்திருத்தங்களுக்கான காலமாகும்.1794 பிப்ரவரி 4ல் ஜேக்கோபியர்கள் அதிகம் இருந்த சட்டமன்றம் பிரான்சின் அனைத்துப் பகுதிகளிலும் அடிமைமுறையை ஒழித்து ஆணை பிறப்பித்தது.அரசாங்கமும்,சமூகத்தின் அடித்தளமும் அளவுக்கு மேலாக தீவிரமயமாக்கப்பட்டதால் கோபம் கொண்ட உறுப்பினர்கள் ரோபஸ்பியரை 1794ல் தூக்கிலிட்டனர்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards