12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
\(p\rightarrow (\neg q\vee r)\equiv \neg p\vee (\neg q\vee r)\) என்பதை மெய்மை அட்டவணையைப் பயன்படுத்தி நிறுவுக.
2.
மெய்மை அட்டவணையைப் பயன்படுத்தி ¬( p V q) V (¬p ∧ q) மற்றும் ¬p என்ற கூற்றுகள் தர்க்க சமானமானவை எனச் சோதிக்க.
3.
\(\neg (p\wedge q)\equiv \neg p\vee \neg q\) எனக் காட்டுக.
4.
பின்வரும் கூட்டு கூற்றுகளில் எவைகள் மெய்மம் அல்லது முரண்பாடுகள் அல்லது நிச்சயமின்மை என்று காண்க.
(( p ⟶ q) ∧ (q ⟶ r)) ⟶ ( p ⟶ r)
5.
\(\mathbf{M}=\left\{\left(\begin{array}{ll} x & x \\ x & x \end{array}\right): x \in R-\{0\}\right\}\) என்க. \(*\) என்பது அணிப் பெருக்கல் எனக் கொள்க. \(*\) ஆனது M-ன் மீது அடைவு பெற்றுள்ளதா எனத் தீர்மானிக்க. அவ்வாறெனில், \(*\) ஆனது M -ன் மீது பரிமாற்றுப் பண்பு, சேர்ப்புப் பண்புகளையும் நிறைவு செய்யுமா எனச் சோதிக்க.
6.
\(*\) என்ற ஓர் ஈருறுப்புச் செயலி \(\mathbb{Q}\) -ன் மீது பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது இந்த \(*\) ஆனது, அடைவுப் பண்பு, பரிமாற்றுப் பண்பு, சேர்ப்புப் பண்பு ஆகியவற்றை நிறைவு செய்கிறதா எனச் சோதிக்க \(\mathrm{a} * \dot{\mathrm{b}}=\left(\frac{\mathrm{a}+\mathrm{b}}{2}\right) ; \forall \mathrm{a}, \mathrm{b} \in \mathbb{Q}\)
7.
மட்டுக் கூட்டல் 5 செயலி அட்டவணையைப் பயன்படுத்தி கணம் \(\mathbb{Z}_5\) -ன் மீது +5 என்ற செயலிக்கு (i) அடைவு பண்பு (ii) பரிமாற்றுப்பண்பு (iii) சேர்ப்புப்பண்பு (iv) சமனிப்பண்பு மற்றும் (v) எதிர்மறைப் பண்பு ஆகியவைகளைச் சரிபார்க்க.
8.
ℤ என்ற கணத்தில் '+' என்ற ஈருறுப்புச் செயலி கொண்டு (i) அடைவுப் பண்பு (ii) பரிமாற்றுப் பண்பு (iii) சேர்ப்புப் பண்பு (iv) சமனிப் பண்பு மற்றும் (v) எதிர்மறைப் பண்பு ஆகியவைகளைப் பெற்றுள்ளதா எனச் சரிபார்க்க.
9.
பின்வரும் கூற்றுகளுக்கு மெய்மை அட்டவணைகளை அமைக்க.
\(\neg(p \wedge \neg q)\)
10.
p என்பது " ஜூபிடர் ஒரு கோளாகும்" மற்றும் q என்பது "இந்திய ஒரு தீவு”. பின்வரும் கூற்றுகளுக்குரிய வார்த்தைகளுடன் கூடிய வாக்கியங்களை அமைக்க.
p ⟶ ¬q
11.
பின்வரும் கூற்றின் வாய்ப்பாடுகளுக்கு எத்தனை நிரைகள் தேவைப்படும்?
\(((p\wedge q)\vee (\neg r\vee \neg s))\wedge (\neg t\wedge v)\)
12.
\(*\) என்ற ஈருறுப்புச் செயலி ஆனது A = {a, b, c} என்ற கணத்தின் மீது பரிமாற்று விதிக்கு கட்டுப்பட்டால் பின்வரும் பட்டியலைப் பூர்த்தி செய்க.
| * | a | b | c |
| a | b | ||
| b | c | b | a |
| c | a | c |
13.
\(\mathbf{A}=\{a+\sqrt{5} \mathbf{b}: \mathbf{a}, \mathbf{b} \in \mathbb{Z}\}\) என்க. வழக்கமான பெருக்கல் A -ன் மீது ஓர் ஈருறுப்புச் செயல் ஆகுமா என பரிசோதிக்க.
14.
\(A =\left[ \begin{matrix} \begin{matrix} 0 & 1 \end{matrix} \\ \begin{matrix} 1 & 1 \end{matrix} \end{matrix} \right] , B =\left[ \begin{matrix} \begin{matrix} 1 & 1 \end{matrix} \\ \begin{matrix} 0 & 1 \end{matrix} \end{matrix} \right] \) ஆகிய இரண்டும் ஒரே வகையான பூலியன் அணிகள் எனில், A∨B மற்றும் A∧B ஆகியவற்றைக் காண்க.
15.
p → q மற்றும் q → p ஆகியவைகள் சமானமற்றவை எனக் காட்டுக.
16.
\((p\overset { \_ \_ }{ \vee } q)\wedge (p\overset { \_ \_ }{ \vee } \neg q)\) -ன் மெய்மை அட்டவணையைத் தருக.
17.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு கூற்றுகள் p மற்றும் q -க்கு பின்வருபவைகளை எழுதுக.
மறுதலைக் கூற்று
p: பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது
q: ஊட்டி கேரளாவில் உள்ளது
18.
Let \(A=\left( \begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix} \right) ,\quad B=\left( \begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix} \right) ,\quad C=\left( \begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix} \right) \)என்பவைகள் ஒரே மாதிரியான வகையினை உடைய ஏதேனும் மூன்று பூலியன் அணிகள் எனில் (A ∨ B) ∧ C ஆகியவைகளைக் காண்க.
19.
R -ன் மீது ∗ ஆனது (a * b) = a + b + ab - 7 என வரையறுக்கப்பட்டால் ∗ , R -ன் மீது அடைவு பெற்றுள்ளதா? அவ்வாறெனில் \(3\ast \left( \frac { -7 }{ 15 } \right) \) காண்க.
20.
Z -ன் மீது \(*\) என்ற செயலி பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது. (m \(*\) n) = mn + nm: ∀m,n \(\in\) Z. \(*\) ஆனது Z -ன் மீது அடைவுப் பண்பை பெற்றுள்ளதா?
21.
Z என்ற கணத்தில் \(a\ast b=a+b=1\) என வரையறுக்கப்படுகிறது எனில் * ஐப் பொறுத்து என்பது
1
0
-1
2
22.
R என்ற மெய்யெண்களின் கணத்தில்,* என்பது \(a\ast b=a^{ 2 }-{ b }^{ 2 }\) என வரையறுக்கப்படுகிறது எனில்,\(\left( 3\ast 5 \right) \ast 4\) ன் மதிப்பு
-240
240
-72
72
23.
\((p\vee q)\rightarrow r\) -ன் நேர்மாறுக் கூற்று எது?
\(\neg r \rightarrow(\neg p \wedge \neg q)\)
\(\neg r \rightarrow(p \vee q)\)
\(r \rightarrow(p \wedge q)\)
\(p \rightarrow(q \vee r)\)
24.
ஒரு கூட்டுக்கூற்றில் 3 தனிக்கூற்றுகள் உட்படுத்தப்பட்டிருந்தால் அம்மெய்மை அட்டவணையின் நிரைகளின் எண்ணிக்கை _______.
9
8
6
3
25.
* என்ற ஈருறுப்புச் செயலி \(a\ast b=\frac { ab }{ 7 } \) என வரையறுக்கப்படுகிறது. * எதன் மீது ஈருறுப்புச் செயலி ஆகாது?
26.
27.
ஓர் ஈருறுப்புச் செயலி S என்ற ஒரு கணத்தின் மீது ஒரு சார்பாக பின்வரும் எவற்றிலிருந்து பெறப்படுகிறது.
S➝S
(S X S)➝S
S➝(S X S)
(S X S)➝(S X S)
28.
p ∧ (¬p V q) என்ற கூற்று _______.
ஒரு மெய்மம்
ஒரு முரண்பாடு
p Λ q -க்கு தர்க்க சமானமானவை
p V q -க்கு தர்க்க சமானமானவை
29.
¬( p V q) V [ p V ( p Λ ¬r)] -ன் இருமம் _______.
¬( p Λ q) Λ [ p V ( p Λ ¬r)]
( p Λ q) Λ [ p Λ ( p V ¬r)]
¬( p Λ q) Λ [ p Λ ( p Λ r)]
¬( p Λ q) Λ [ p Λ ( p V ¬r)]
30.
ㄱ( p V ㄱq) -ன் மெய்மை அட்டவணையில் கடைசி நிரலில் வரும் மெய் மதிப்பு 'F' விளைவுகளின் எண்ணிக்கை_______.
1
2
3
4
1.
| p | q | r | \(\neg p\) | \(\neg q\) | \(\neg q\vee r\) | \(p\rightarrow \left( \neg q\vee r \right) \) | \(\neg p\vee \left( \neg q\vee r \right) \) |
| T | T | T | F | F | T | T | T |
| T | T | F | F | F | F | F | F |
| T | F | T | F | T | T | T | T |
| T | F | F | F | T | T | T | T |
| F | T | T | T | F | T | T | T |
| F | T | F | T | F | F | T | T |
| F | F | T | T | T | T | T | T |
| F | F | F | T | T | T | T | T |
அட்டவணையிலிருந்து \(p\rightarrow \left( \neg q\vee r \right) \) மற்றும் \(\neg p\vee \left( \neg q\vee r \right) \) ஆகியவற்றின் நிரல்கள் ஒரே மாதிரியாக உள்ளன என்பது தெளிவாகிறது.
\(\therefore p\rightarrow \left( \neg q\vee r \right) =\neg p\vee \left( \neg q\vee r \right) \) எனவே நிறுவப்பட்டது.
2.
| p | q | \(\neg p\) | \(p\vee q\) | \(\neg \left( p\vee q \right) \) | \(\neg p\wedge q\) | \(\neg \left( p\vee q \right) \vee \left( \neg p\wedge q \right) \) |
| T | T | F | T | F | F | F |
| T | F | F | T | F | F | F |
| F | T | T | T | F | T | T |
| F | F | T | F | T | F | T |
மெய்மை அட்டவணையிலிருந்து
\(\neg p\) மற்றும் \(\neg \left( p\vee q \right) \vee \left( \neg p\wedge q \right) \) என்பன தர்க்க சமமானவை என்பது தெளிவு.
அதாவது \(\neg (p\vee q)\vee \left( \neg p\wedge q \right) =\neg p\)
3.
| p | q | \(p\wedge q\) | \(\neg \left( p\wedge q \right) \) | \(\neg p\) | \(\neg q\) | \(\neg p\vee \neg q\) |
| T | T | T | F | F | F | F |
| T | F | F | T | F | T | T |
| F | T | F | T | T | F | T |
| F | F | F | T | T | T | T |
மெய்மை அட்டவணையில் \(\neg \left( p\wedge q \right) \) மற்றும் \(\neg p\vee \neg q\) ஆகியவற்றிற்கான நிரல்கள் ஒரே மாதிரியாக உள்ளன.எனவே அவை தர்க்க சமமானவை.
4.
| p | q | r | \(p\rightarrow q\) | \(\quad q\rightarrow r\) | \(p\rightarrow r\) | \((p\rightarrow q)\wedge (q\rightarrow r)\) | (\((p\rightarrow q)\wedge (q\rightarrow r)\)) \(\rightarrow\) (p\(\rightarrow\)r) |
| T | T | T | T | T | T | T | T |
| T | T | F | T | F | F | F | T |
| T | F | T | F | T | T | F | T |
| T | F | F | F | T | F | F | T |
| F | T | T | T | T | T | T | T |
| F | T | F | T | F | T | F | T |
| F | F | T | T | T | T | T | T |
| F | F | F | T | T | T | T | T |
மெய்மை அட்டவணையில் கடைசி நிரலில் T மட்டுமே உள்ளதால்,கொடுக்கப்பட்டது ஒரு மெய்மம் ஆகும்.
5.
\(M=\left\{\left(\begin{array}{ll} x & x \\ x & x \end{array}\right): x \in R-\{0\}\right\}\) என்க
அடைவுப் பண்பு:
\(A=\left\{ \begin{matrix} x & x \\ x & x \end{matrix} \right\} \in M\) மற்றும்
\(B=\left( \begin{matrix} y & y \\ y & y \end{matrix} \right) \in M\) என்க.
எனவே,\(AB=\left( \begin{matrix} 2xy & 2xy \\ 2xy & 2xy \end{matrix} \right) \)
\(x\neq 0,y\neq 0\) என்பதால் \(2xy\neq 0\) என்பதைக் காண்கிறோம்.மேலும் \(AB \in M\) .இது அணிப்பெருக்கலின் கீழ் M என்பது அடைவைப் பெற்றுள்ளது என்பதைக் காட்டுகிறது.
பரிமாற்றுப் பண்பு:
\(AB=\left( \begin{matrix} 2xy & 2xy \\ 2xy & 2xy \end{matrix} \right) \)
= BA எல்லா \(A, B \in M\)
இங்கு அணிப்பெருக்கல் என்பது பரிமாற்றுப் பண்பை நிறைவு செய்கிறது.
சேர்ப்புப் பண்பு:
அணிப்பெருக்கல் எப்போதும் சேர்ப்புப் பண்பை நிறைவு செய்யும்.எனவே M-ன் மீது அணிப்பெருக்கல் சேர்ப்புப் பண்பை நிறைவு செய்கிறது.
6.
கொடுக்கப்பட்டது \(\mathrm{a} * \mathrm{~b}=\left(\frac{a+b}{2}\right) ; \mathrm{a}, \mathrm{b} \in \mathbb{Q}\)
(i) \(a \in \mathbb{Q}\) மற்றும் \(\mathrm{b} \in \mathbb{Q} \Rightarrow \mathrm{a} * \mathrm{~b}=\frac{a+b}{2} \in \mathbb{Q}\)
எனவே \(*\) என்பது \(\mathbb{Q}\) ன் மீது ஓர் ஈருறுப்புச் செயலியாகும்.
\(a\ast b=\cfrac { a+b }{ 2 } \\ b\ast a=\cfrac { b+a }{ 2 } =\cfrac { a+b }{ 2 } \\ \left[ \because a+b=b+a \right] \)
\(\therefore \) ஈருறுப்புச் செயலி \(*\) பரிமாற்றுப் பண்பை நிறைவு செய்கிறது.
\(a\ast (b\ast c)=a\ast \left( \cfrac { b+c }{ 2 } \right) \\ =\cfrac { a+\frac { b+c }{ 2 } }{ 2 } =\cfrac { a+b+2c }{ 4 } \\ a\ast (b\ast c)=\left( \cfrac { a+b }{ 2 } \right) \ast c=\cfrac { a+b+2c }{ 4 } \)
எனவே,\(a\ast (b\ast c)\neq \left( a\ast b \right) \ast c\)
எனவே, ஈருறுப்புச் செயலி \(*\) என்பது சேர்ப்புப் பண்பை நிறைவு செய்யவில்லை.
7.
\(\mathbb{Z}_5\) = {[0], [1], [2], [3], [4]} மட்டு 5 கூட்டல் செயலி அட்டவணை பின்வருமாறு பெறப்படுகிறது. மீதிகளின் கணமானது {0,1,2,3,4} {[0],[1],[2],[3],[4]} என்ற தொகுப்பு அமைப்பைக் குறிக்கிறது.
(i) செயலி அட்டவணையில் உள்ள எல்லா வெற்றிடங்களும் ℤ5 -ன் சரியாக ஓர் உறுப்பு மூலம் நிரப்பப்பட்டிருந்தால் a+ 5 b -ன் விளைவு ஒருமைத்தன்மை வாய்ந்தது. எனவே , +5 ஆனது ℤ5 –ன் மீது அடைவு பெற்றுள்ளது.
(ii) அட்டவணையில் உள்ள பதிவுகள் முதன்மை மூலைவிட்டத்துடன் சமச்சீராக வைக்கப்பட்டுள்ளதால் +5 ஆனது பரிமாற்றுப் பண்புடையது.
(iii) சேர்ப்புப் பண்பை சரிபார்ப்பதற்கு செயலி அட்டவணையை நேரடியாகப் பயன்படுத்த முடியாது. எனவே , இதை வழக்கம்போல ஓர் எடுத்துக்காட்டின் மூலம் சரிபார்க்க வேண்டும்.
2,3,4 ∈ ℤ5 எனில், (2 +5 3) + 5 4 = 0 + 5 4 = 4 (மட்டு 5)
2 +5(3 + 54) = 2 +5 2 = 4 (மட்டு 5)
எனவே , (2 +53) + 5 4 = 2 +5 (3 + 5 4) .
இது போன்று தொடர்ந்தால் எல்லா சாத்தியமான மும்மூன்று உறுப்புகளின் தொகுப்பிற்கும் இதை சரிபார்க்க முடியும். முடிவாக, +5 ஆனது சேர்ப்புப் பண்பை நிறைவு செய்யும் எனக் காட்டலாம்.
(iv) 0 தலைமையிலான நிரை மற்றும் நிரல் ஒரே மாதிரியானவை . எனவே , 0 ∈ ℤ5 என்பது சமனி உறுப்பாகும்.
(v) ஒவ்வொரு நிரை மற்றும் நிரலிலும் சமனி உறுப்பு 0 உள்ளதால் எதிர்மறை உறுப்பு உறுதி செய்யப்படுகிறது. எனவே, அட்டவணை -லிருந்து எதிர்மறைப் பண்பு உண்மை என்பது தெளிவாகிறது.
எடுத்துக்காட்டாக
1. ℤ5 -ன் உறுப்புகளில் ஏதேனும் ஓர் உறுப்பு ‘2’ இன் எதிர்மறையைக் காணும் முறை கீழே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
2. 2 தலைமையிலான III வது நிரையில் சமனி உறுப்பின் நிலையை முதலில் கண்டறியவும். III வது நிரையில் கிடைமட்டமாக நகர்ந்து 0 ஐ அடைந்த பிறகு IV வது நிரலில் 0 –க்கு மேலே நகரும்போது கிடைக்கும் 3-ஐதான் 2-ன் எதிர்மறை உறுப்பாகக் கொள்வர். மேலும் இதற்கு அத்தாட்சியாக 2 + 3 ≡ 0 (மட்டு 5) என்பதும் உண்மையாவதாகக் காணலாம். ஏனெனில், 0 ஆனது III வது நிரை மற்றும் IVவது நிரலை இணைக்கும் உறுப்பாகும். IV வது நிரலில் மிக உயர்ந்த நிலையில் கிடைக்கப்பெற்ற உறுப்பு 3 ஆகும். எனவே 2-ன் எதிர்மறை உறுப்பு 3 ஐத் தவிர வேறில்லை. இதேவழியில் ℤ5 -ன் ஒவ்வோர் உறுப்பின் எதிர்மறையைப் பெறலாம்.
3. இவ்வாறாக 0-ன் எதிர்மறை 0∈ℤ5 1 –ன் எதிர்மறை 4∈ℤ5 , 2–ன் எதிர்மறை 3∈ℤ5 , 3–ன் எதிர்மறை 2∈ℤ5 , 4 –ன் எதிர்மறை 1∈ℤ5 ஆகும்.
8.
(i) m + n ∈ ℤ, ∀,m, n ∈ ℤ . எனவே , ' + ' ஆனது, ℤ -ன் மீது ஓர் ஈருறுப்புச் செயலி ஆகும்.
(ii) மேலும் m + n = n + m, ∀m, n ∈ ℤ . எனவே , பரிமாற்றுப் பண்பு உண்மையாகும்.
(iii) ∀m,n, p ∈ ℤ,m+(n+p) = (m+n) + p . எனவே , சேர்ப்புப் பண்பு உண்மையாகும்.
(iv) m + e = e + m = m ⇒ e = 0. எனவே , ∃ 0 ∈ ℤ ⋺(m + 0) = (0 + m) = m . எனவே சமனிப்பண்பு உள்ளது.
(v) m + m' = m' + m = 0 ⇒ m' = −m. எனவே, ∀m ∈ ℤ,∃ −m ∈ ℤ ⋺
m + (−m) = (−m) + m =0. எனவே, எதிர்மறைப் பண்பும் உள்ளது. இவ்வாறாக, கூட்டல் செயலி + ஆனது, ℤ -ன் மீது மேற்கண்ட ஐந்து பண்புகளை நிறைவு செய்யும்.
கூட்டல் சமனி =0 மற்றும் ஏதேனும் ஒரு முழு எண் m -ன் கூட்டல் எதிர்மறை −m என்பதைக் கவனத்தில் கொள்வோம்.
9.
| p | q | ¬q | p ∧ ¬q | ¬(p ∧ ¬q) |
| T | T | F | F | T |
| T | F | T | T | F |
| F | T | F | F | T |
| F | F | T | F | T |
10.
p ⟶ ¬q: ஜூபிடர் ஒரு கோள் எனில் பின்னர் இந்தியா ஒரு தீவு அல்ல.
11.
\(((p\wedge q)\vee (\neg r\vee \neg s))\wedge (\neg t\wedge v)\) என்ற கூற்றில் p, q, r, s,t, v என்ற 6 மாறிகள் இடம் பெறுவதால் அதன் மெய்மை அட்டவணையில் 26 = 64 நிரைகள் இடம்பெறும்.
12.
கொடுக்கப்பட்டது:\(*\) என்பது A={a,b,c} என்ற கணத்தின் மீது பரிமாற்றுப் பண்பை நிறைவு செய்கிறது.
| * | a | b | c |
| a | b | c | a |
| b | c | b | a |
| c | a | a | c |
அட்டவணையிலிருந்து b \(*\) a = c என கொடுக்கப்பட்டுள்ளது.
\(\Rightarrow a\ast b=c\)
\(*\) என்பது பரிமாற்றுப் பண்பை நிறைவு செய்வதால்
\(c\ast a=a=a\ast c\) மற்றும் \(b\ast c=a=c\ast b\)
13.
\(\begin{aligned}
A=\{a+\sqrt{5} b ; a, b \in \mathbb{Z}\}
\end{aligned}\)
\(\begin{aligned}
1,2 \in \mathbb{Z} \Rightarrow a+\sqrt{5} b=1+2 \sqrt{5} \in A
\end{aligned}\) மற்றும்
\(\begin{aligned}
2,3 \in \mathbb{Z} \Rightarrow a+\sqrt{5} b=2+3 \sqrt{5} \in A
\end{aligned}\) என்க.
வழக்கமான பெருக்கலை ஈருறுப்புச் செயலியாகக் கொள்க.
\((1+2 \sqrt{5}) \cdot(2+3 \sqrt{5})=(32+7 \sqrt{5}) \in A\) எனவே, வழக்கமான பெருக்கல், Aன் மீது ஓர் ஈருறுப்புச் செயலி ஆகும்.
14.
A∨B = \(\left[ \begin{matrix} \begin{matrix} 0 & 1 \end{matrix} \\ \begin{matrix} 1 & 1 \end{matrix} \end{matrix} \right] \)v\(\left[ \begin{matrix} \begin{matrix} 1 & 1 \end{matrix} \\ \begin{matrix} 0 & 1 \end{matrix} \end{matrix} \right] \) = \(\left[ \begin{matrix} \begin{matrix} 0\quad \vee & 1 \\ 1\quad \vee & 0 \end{matrix} & \begin{matrix} 1\quad \vee & 1 \\ 1\quad \vee & 1 \end{matrix} \end{matrix} \right] \) = \(\left[ \begin{matrix} \begin{matrix} 1 & 1 \end{matrix} \\ \begin{matrix} 1 & 1 \end{matrix} \end{matrix} \right] \)
A∧B = \(\left[ \begin{matrix} \begin{matrix} 0 & 1 \end{matrix} \\ \begin{matrix} 1 & 1 \end{matrix} \end{matrix} \right] \)∧\(\left[ \begin{matrix} \begin{matrix} 1 & 1 \end{matrix} \\ \begin{matrix} 0 & 1 \end{matrix} \end{matrix} \right] \) = \(\left[ \begin{matrix} \begin{matrix} 0\quad \wedge & 1 \\ 1\quad \wedge & 0 \end{matrix} & \begin{matrix} 1\quad \wedge & 1 \\ 1\quad \wedge & 1 \end{matrix} \end{matrix} \right] \) = \(\left[ \begin{matrix} \begin{matrix} 0 & 1 \end{matrix} \\ \begin{matrix} 0 & 1 \end{matrix} \end{matrix} \right] \)
15.
| p | q | \(p\rightarrow q\) | \(q\rightarrow p\) |
| T | T | T | T |
| T | F | F | T |
| F | T | T | F |
| F | F | T | T |
மெய்மை அட்டவணையிலிருந்து
\(\mathrm{p} \rightarrow \mathrm{q} \not \equiv \mathrm{q} \rightarrow \mathrm{p}\) என்பது தெளிவு.
16.
| p | q | ¬ q | \(r:(p\overset { \_ \_ }{ \vee } q)\) | s:\((p\overset { \_ \_ }{ \vee } \neg q)\) | r ∧ s |
| T | T | F | F | T | F |
| T | F | T | T | F | F |
| F | T | F | T | F | F |
| F | F | T | F | T | F |
மேற்காணும் முடிவை மெய்மை அட்டவணைகளை பயன்படுத்தாமல் நிரூபிக்க முடியும். இதனைத் தர்க்க சமானமானவை பற்றி அறிந்த பிறகே வழங்க முடியும்.
17.
q → p: (மறுதலைக் கூற்று) “ஊட்டி கேரளாவில் உள்ளது எனில், பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது”
18.
கொடுக்கப்பட்ட பூலியன் அணிகள்
\( A=\left( \begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix} \right) ,\quad B=\left( \begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix} \right) ,\quad C=\left( \begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix} \right) \)
\((A\vee B) \wedge C=\left( \begin{matrix} 1 & 1 & 1 & 1 \\ 1 & 1 & 1 & 1 \\ 1 & 0 & 0 & 1 \end{matrix} \right) \wedge \left( \begin{matrix} 1 & 1 & 0 & 1 \\ 0 & 1 & 1 & 0 \\ 1 & 1 & 1 & 1 \end{matrix} \right) \)
\(=\left( \begin{matrix} 1\wedge 1 & 1\wedge 1 & 1\wedge 0 & 1\wedge 1 \\ 1\wedge 0 & 1\wedge 1 & 1\wedge 1 & 1\wedge 0 \\ 1\wedge 1 & 0\wedge 1 & 0\wedge 1 & 1\wedge 1 \end{matrix} \right) \)
\((A\vee B)\wedge C=\left| \begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix} \right| \)
19.
\((\mathrm{a} * \mathrm{~b})=\mathrm{a}+\mathrm{b}+\mathrm{ab}-7, \forall a, b \in \mathbb{R}\)
\(a \in \mathbb{R}, b \in \mathbb{R}\) எனில் \(a b \in \mathbb{R}\)
\(\therefore(a * b)=a+b+a b-7 \in \mathbb{R}\)
உதாரணமாக\(\ 1,2\in R\) என்க.
\(\\ (1\ast 2)=1+2+(1)(2)-7\)
= \(-2 \in \mathbb{R}\)
\(\therefore \ast \) என்பது R-ன் மீது ஈருறுப்புச் செயலியாகும்.
இப்போது \(3\ast \left( -\cfrac { 7 }{ 15 } \right) =3+\left( -\cfrac { 7 }{ 15 } \right) +3\left( -\cfrac { 7 }{ 15 } \right) -7\)
= \(3-\cfrac { 7 }{ 15 } -\cfrac { 21 }{ 15 } -7\)
= \(-\cfrac { 88 }{ 15 } \)
20.
\((\mathrm{m} * \mathrm{n})=\mathrm{m}^{\mathrm{n}}+\mathrm{n}^{\mathrm{m}}, \forall \mathrm{m}, \mathrm{n} \in \mathbb{Z}\)
\(-2,2 \in \mathbb{Z}\) என்பதைக் கருதுவோம்.
\((\mathrm{m} * \mathrm{n})=(-2 * 2)=(-2)^2+(2)^{-2}\)
= \(4+\cfrac { 1 }{ 4 } =\cfrac { 14 }{ 7 } \notin Z\)
எனவே \(*\) என்பது Z ல் அடைவுப் பண்பை பெறவில்லை.
21.
(c)
-1
22.
(a)
-240
23.
\(\begin{aligned}
(p \vee q) & \rightarrow r
\end{aligned}\)
நேர்மாறு \(\begin{aligned}
\neg r & \rightarrow \neg(p \vee q)
\end{aligned}\)
\(\begin{aligned}
\neg r & \rightarrow(\neg p \wedge \neg q)
\end{aligned}\)
24.
கூற்றுகளின் எண்ணிக்கை =3
மெய்மை அட்டவணையில் நிரைகளின் எண்ணிக்கை = 23 = 8 நிரைகள்
25.
\(\mathbb{Z}\) என்பது அனைத்து முழு எண்களின் கணம் என்பதால்
\(\mathrm{a} * \mathrm{~b}=\frac{a b}{7} \notin \mathbb{Z}\)
26.
(c)
27.
(a)
S➝S
28.
\(\mathrm{p} \wedge(\neg \mathrm{p} \vee \mathrm{q}) \equiv(\mathrm{p} \wedge \neg \mathrm{p}) \vee(\mathrm{p} \vee \mathrm{q}) \equiv \mathbb{F} \vee(\mathrm{p} \wedge \mathrm{q}) \equiv \mathrm{p} \wedge \mathrm{q}\)
29.
இரட்டைத் தன்மை என்பது Λ, V ஆகியவற்றுக்கு முறையே V, Λ களை பதிலிடுவதன் மூலம் பெறப்படுகிறது.
30.
| p | q | \(\neg \mathbf{q}\) | \(\mathbf{p} \vee(\neg \mathbf{q})\) | \(\neg(\mathbf{p} \vee(\neg \mathbf{q}))\) |
| T | T | F | T | F |
| T | F | T | T | F |
| F | T | F | F | T |
| F | F | T | T | F |
கடைசி நிரலில் உள்ள 'F' களின் எண்ணிக்கை 3
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards