12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/11/2019
வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள்
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
கீழ்க்காணும் சார்புகளை வரைக:
y = \(\frac { { x }^{ 2 }+1 }{ { x }^{ 2 }-4 } \)
2.
ஒரு உருளையின் கன அளவு V = \(\pi \)r2h. மேலும் r + h = 6 எனில் கன அளவின் மீப்பெரு மற்றும் மீச்சிறு மதிப்புகளைக் காண்க.
3.
ஒரு விவசாயி ஒரு நதியை ஒட்டிய செவ்வக மேய்ச்சல் நிலத்திற்கு வேலி அமைக்க திட்டமிட்டுள்ளார். மந்தைகளுக்கு போதுமான புல் வழங்க மேய்ச்சல் நிலம் 1,80,000 சதுர மீட்டர் பரப்பளவு இருக்க வேண்டும். ஆற்றின் குறுக்கே வேலி அமைக்கத் தேவையில்லை. வேலி அமைக்க தேவையான குறைந்தபட்ச வேலிக் கம்பியின் நீளம் என்ன?
4.
f(x) = 4x3 + 3x2 - 6x +1 என்ற சார்பிற்கு ஓரியல்பு இடைவெளிகள், இடஞ்சார்ந்த அறுதி மதிப்புகள், குழிவு இடைவெளிகள் மற்றும் வளைவு மாற்றப் புள்ளிகளைக் காண்க.
5.
இரண்டாம் வகைக்கெழு சோதனையை பயன்படுத்தி இடஞ்சார்ந்த அறுதி மதிப்புகளைக் காண்க.
f(x) =-3x5 + 5x3
6.
கீழ்க்காணும் சார்புகளுக்கு ஓரியல்பு இடைவெளிகளைக் கணக்கிட்டு அதிலிருந்து இடஞ்சார்ந்த அறுதி மதிப்புகளைக் காண்க:
\(f(x)=\frac{x^{3}}{3}-\log x\)
7.
தலைகீழாக வைக்கப்பட்ட ஒரு நேர்வட்ட கூம்பின் வடிவில் உள்ள ஒரு நீர்நிலைத் தொட்டியின் ஆழம் 12 மீட்டர் மற்றும் மேலுள்ள வட்டத்தின் ஆரம் 5 மீட்டர் என்க. நிமிடத்திற்கு 10 கன மீட்டர் வேகத்தில் நீர் பாய்ச்சப்படுகிறது எனில், 8 மீட்டர் ஆழத்தில் நீர் இருக்கும்போது நீரின் ஆழம் அதிகரிக்கும் வேகம் என்ன?
8.
s(t) = 2t3-9t2+12t-4, இங்கு t ≥ 0 எனும் விதிப்படி ஒரு கோட்டில் ஒரு துகள் நகர்கிறது.
முதல் 4 வினாடிகளில் துகள் பயணித்த தூரம் என்ன?
9.
கீழ்க்காணும் வளைவரைகளுக்கு தொலைத்தொடுகோடுகளைக் காண்க:
\(f(x)=\frac { { x }^{ 2 }-6x-4 }{ 3x-6 } \)
10.
x பக்க அளவு கொண்ட ஒரு கன சதுரத்தின் கன அளவு v = x3 எனில் x = 5 அலகுகள் எனும்போது x -ஐப் பொறுத்து கன அளவு மாறுவீதம் காண்க.
11.
கீழ்க்காணும் எல்லைகளை, தேவைப்படும் இடங்களில் லோபிதாலின் விதியை பயன்படுத்தி காண்க :
\(\underset{x\rightarrow 1^{+}}{\lim}(\frac{2}{x^{2}-1}-\frac{x}{x-1})\)
12.
கீழ்க்காணும் சார்புகளுக்கு மெக்லாரனின் விரிவைக் காண்க:
\(\log(1-x); -1\le x<1\)
13.
கொடுக்கப்பட்ட சார்புகளுக்கு கொடுக்கப்பட்ட இடைவெளியில் லெக்ராஞ்சியின் சராசரி மதிப்புத் தேற்றம் ஏன் பயன்படுத்த முடியாது என்பதை விளக்குக.
\(f(x)=\cfrac { x+1 }{ x } ,x\in \left[ -1,2 \right] \)
14.
ரோலின் தேற்றத்தைப் பயன்படுத்தி கீழ்க்காணும் சார்புகளுக்கு x -ன் எம்மதிப்புகளில் வரையப்படும் தொடுகோடு x -அச்சிற்கு இணையாக இருக்கும்?
\(f(x)=\sqrt{x}-\frac{x}{3}, x\in [0,9]\)
15.
கீழ்க்கண்ட வளைவரைகளின் மீது கொடுக்கப்பட்ட புள்ளிகளில் தொடுகோடு மற்றும் செங்கோடுகளின் சமன்பாடுகளைக் காண்க.
\(y=x \sin x; (\frac{\pi}{2}, \frac{\pi}{2})\)
1.
1) கொடுக்கப்பட்ட சார்பின் சார்பகம்
\(\left( -\infty ,-2 \right) \cup \left( -2,2 \right) \cup \left( 2,\infty \right) \)
அதாவது \(x<-2\) (அல்லது) -2 < x <2.
2) f(x)ன் வீச்சகம் \(\left( -\infty ,-\frac { 1 }{ 4 } \right) \cup \left( 1,\infty \right) \)
அதாவது,\(f(x)\le -\cfrac { 1 }{ 4 } \) (அல்லது) f (x)>1.
3) y=0 எனப் பிரதியிட,'x' என்பது மெய் அல்ல.
எனவே,x-வெட்டுத்துண்டு கிடையாது.x=0 எனப் பிரதியிட,நாம் பெறுவது
\(y=-\cfrac { 1 }{ 4 } \) , \(\therefore\) y வெட்டுத்துண்டு \(\left( 0,-\cfrac { 1 }{ 4 } \right) \)
4) \(f'\left( x \right) =\cfrac { 10x }{ \left( { x }^{ 2 }-4 \right) ^{ 2 } } \)
\(f'\left( x \right) =0\Rightarrow x=0\) .
\(\therefore\) நிலை எண்கள் x=0ல் உள்ளது.
5) \(f''\left( x \right) =\cfrac { 10\left( { x }^{ 2 }-4 \right) \left( { 3x }^{ 2 }+4 \right) }{ \left( { x }^{ 2 }-4 \right) ^{ 4 } } \)
\(f''\left( 0 \right) =-\cfrac { 5 }{ 8 } <0,\therefore x=0\) ல் f(x) பெருமமாகிறது.
எனவே, இடஞ்சார்ந்த பெரும மதிப்பு \(f(0)=-\cfrac { 1 }{ 4 } \) .
6) வளைவரைக்கு,வளைவு மாற்றப் புள்ளிகள் கிடையாது.
7) \(x=\pm 2\) எனும்போது,\(y=\infty \)
\(\therefore x=2\) மற்றும் x = - 2 என்பன நிலைக்குத்துத் தொலைத் தொடுகோடுகள் மற்றும் y=1 என்பது கிடைமட்டத் தொலைத் தொடுகோடாகும்.
2.
கொடுக்கப்பட்டது:
\(r+h=6\)
\(\Rightarrow r=6-h\)
கனஅளவு \(V={ \pi r }^{ 2 }h\)
\(V=\pi \left( 6-h \right) ^{ 2 }h\)
\(\cfrac { dV }{ dh } =\pi \left[ \left( 6-h \right) ^{ 2 }\left( 1 \right) +2h\left( 6-h \right) \left( -1 \right) \right] \)
= \(\pi \left( 6-h \right) \left[ 6-3h \right] \)
பெருமம் அல்லது சிறுமத்திற்கு
\(\cfrac { dV }{ dh } =0\Rightarrow \pi \left( 6-h \right) \left( 6-3h \right) =0\)
\(\Rightarrow h=6,h=2\)
r+h=6 என்பதால் r=6 என்பது சாத்தியமல்ல
\(\therefore h=2\)
\(\cfrac { { d }^{ 2 }V }{ { dh }^{ 2 } } =\pi \left[ (6-h)(-3)+(6-3h)(-1) \right] \)
= \(\pi \left[ 6h-24 \right] \)
\(h=2\) ,ல் \(\quad \cfrac { { d }^{ 2 }V }{ { dh }^{ 2 } } <0\)
\(\therefore\) h=2 எனும்போது உருளையின் கனஅளவு பெருமமாகிறது மற்றும் r=6-2=4
கன அளவின் மீப்பெரு மதிப்பு \(V=\pi \left( 4 \right) ^{ 2 }\left( 2 \right) =32\pi \)
கன அளவின் மீச்சிறு மதிப்பு V=0
3.
மேய்ச்சல் நிலத்தின் நீளம் 'x' மீ என்க.
மேய்ச்சல் நிலத்தின் அகலம் 'y' மீ என்க.
கொடுக்கப்பட்ட பரப்பு = 1,80,000
xy=1,80,000
\(y=\cfrac { 1,80,000 }{ x } \)
வேலி அமைக்கத் தேவைப்படுவது 2y+x
(ஒரு பக்கம் ஆறு உள்ளது)
P=2y+x என்க
\(P=2\left( \cfrac { 180000 }{ x } \right) +x=\cfrac { 360000 }{ x } +x\)
\(\cfrac { dP }{ dx } =-\cfrac { 360000 }{ { x }^{ 2 } } +1\)
பெருமம் அல்லது சிறுமத்திற்கு
\(\cfrac { dp }{ dx } =0\)
\(\Rightarrow -360000+{ x }^{ 2 }=0\)
\({ x }^{ 2 }=360000\)
\(x=\pm 600\)
[x=-600 என்பது சாத்தியமல்ல]
\(\therefore x=600\)
இப்போது,\(\cfrac { { d }^{ 2 }P }{ { dx }^{ 2 } } =\cfrac { 720000 }{ { x }^{ 3 } } \)
x=600ல்,\(\cfrac { { d }^{ 2 }P }{ { dx }^{ 2 } } >0\)
\(\therefore x=600\) ல் \(\cfrac { { d }^{ 2 }P }{ { dx }^{ 2 } } >0\)
\(\therefore x=600\) எனும்போது P என்பது சிறுமமாகிறது.
\(y=\cfrac { 180000 }{ 600 } =300\)
\(\therefore\) வேலி அமைக்கத் தேவைப்படும் குறைந்தபட்ச வேலிக் கம்பியின் நீளம்
= \(2y+x=2\left( 300 \right) +600=1200\) மீ
4.
\(f(x)={ 4x }^{ 3 }+{ 3x }^{ 2 }-6x+1\)
ஓரியல்பு
\(f(x)={ 4x }^{ 3 }+{ 3x }^{ 2 }-6x+1\)
\(f'\left( x \right) ={ 12x }^{ 2 }+6x-6\)
\(f'(x)=0\Rightarrow 6\left( { 2x }^{ 2 }+x-1 \right) =0\)
\(x=-1,\cfrac { 1 }{ 2 } \) (நிலை எண்கள்)
\(\therefore\) ஓரியல்பு தன்மையின் இடைவெளிகள்
\(\left( -\infty ,-1 \right) ,\left( -1,\cfrac { 1 }{ 2 } \right) \) மற்றும் \( \left( \cfrac { 1 }{ 2 } ,\infty \right)\)
\(\left( -\infty ,-1 \right) \quad f'(x)>0\Rightarrow f(x)\) திட்டமாக ஏறுகிறது.
\(\left( -1,\cfrac { 1 }{ 2 } \right) \) ல்,\(\quad f'\left( x \right) <0f(x)\) திட்டமாக இறங்குகிறது.
\(\left( \cfrac { 1 }{ 2 } ,\infty \right) \) ல் \(f'\left( x \right) >0\Rightarrow f(x)\) திட்டமாக ஏறுகிறது.
x =-1 ஐக் கடக்கும்போது f'(x)ன் குறி மிகையிலிருந்து குறைக்கு மாறுவதால்,f(x) என்பது இடஞ்சார்ந்த பெருமத்தை அடைகிறது.
\(\therefore\) இடஞ்சார்ந்த பெரும மதிப்பு
\(f(-1)=-4+3+6+1=6\)
\(x=\cfrac { 1 }{ 2 } \) ஐக் கடக்கும்போது \(f'\left( x \right) \) ன் குறி குறையிலிருந்து மிகைக்கு மாறுவதால்,f(x) என்பது இடஞ்சார்ந்த சிறுமத்தை அடைகிறது.
\(\therefore\) இடஞ்சார்ந்த பெரும மதிப்பு
\(f\left( \cfrac { 1 }{ 2 } \right) \)
= \(4\left( \cfrac { 1 }{ 8 } \right) +3\left( \cfrac { 1 }{ 4 } \right) -6\left( \cfrac { 1 }{ 2 } \right) +1\)
= \(\cfrac { 1 }{ 2 } +\cfrac { 3 }{ 4 } -3+1=-\cfrac { 3 }{ 4 } \)
\(f(x)={ 4x }^{ 3 }+3{ x }^{ 2 }-6x+1\)
\(f'(x)={ 12x }^{ 2 }+6x-6\)
\(f''(x)=24x+6\)
\(f''(x)=0\Rightarrow 24x+6=0\)
\(x=-\cfrac { 6 }{ 24 } =-\cfrac { 1 }{ 4 } \) (தேக்கநிலைப் புள்ளிகள்)
\(\therefore\) இடைவெளிகள் \(\left( -\infty ,-\cfrac { 1 }{ 4 } \right) \) மற்றும் \(\left( -\cfrac { 1 }{ 4 } ,\infty \right) \)
இடைவெளி \(\left( -\infty ,-\cfrac { 1 }{ 4 } \right) \) ல்,\(f''(x)<0\)
\(\Rightarrow \) வளைவரை மேல்நோக்கி குழிவாகவும்,
\(\left( -\infty ,-\cfrac { 1 }{ 4 } \right) \) ல் கீழ்நோக்கி குழிவாகவும் உள்ளது.
\(x=-\cfrac { 1 }{ 4 } \) ஐக் கடக்கும்போது,\(f''(x)\) ன் குறி மாறுகிறது.
இப்போது \(f\left( -\cfrac { 1 }{ 4 } \right) =4\left( -\cfrac { 1 }{ 64 } \right) +3\left( \cfrac { 1 }{ 16 } \right) -6\left( -\cfrac { 1 }{ 4 } \right) +1\)
= \(-\cfrac { 1 }{ 16 } +\cfrac { 3 }{ 16 } +\cfrac { 3 }{ 2 } +1=\cfrac { 21 }{ 8 } \)
\(\therefore\) வளைவு மாற்றப் புள்ளி \(\left( -\cfrac { 1 }{ 4 } ,\cfrac { 21 }{ 8 } \right) \)
5.
\(f(x)=-3{ x }^{ 5 }+5{ x }^{ 3 }\)
\(f'(x)=-15{ x }^{ 4 }+{ 15 }x^{ 2 }\)
பெரும மற்றும் சிறும மதிப்புகளுக்கு \(f'(x)=0\)
\(\Rightarrow -15{ x }^{ 2 }\left( { x }^{ 2 }-1 \right) =0\)
\(x=0,1-1\) [x=0 என்பது அறுதி மதிப்பைத் தராததால் இது சாத்தியமல்ல.
\(f''(x)=-60{ x }^{ 3 }+30x\)
\(f''\left( 1 \right) <0\Rightarrow f(x)\) என்பது சிறுமத்தை அடைகிறது.
\(f(-1)=-3(-1)+5(-1)=-2\)
இடஞ்சார்ந்த பெரும மதிப்பு
\(f(1)=-3\left( 1 \right) +5\left( 1 \right) =2\)
6.
\(f'(x)={ x }^{ 2 }-\cfrac { 1 }{ x } \)
\(f'(x)=0\Rightarrow { x }^{ 3 }-1=0\Rightarrow x=1\)
\(\therefore\) இடைவெளிகள் (0, 1) மற்றும் \((1,\infty )\)
அதாவது, \(x>0\) எனும்போது,சார்பு வரையறுக்கப்பட்டுள்ளது.
(0, 1) என்ற இடைவெளியில் \(f'\left( x \right) <0\)
\(\therefore\) f(x) என்பது (0,1)ல் திட்டமாக இறங்குகிறது.
\(\\ \left( 1,\infty \right) \) என்ற இடைவெளியில் \(f'\left( x \right) <0\)
\(\therefore\) f(x) என்பது \(\\ \left( 1,\infty \right) \) ல் திட்டமாக ஏறுகிறது.f'(x)ன் குறி x=1 ஐக் கடக்கும்போது குறையிலிருந்து மிகைக்கு மாறுவதால்,f(x) என்பது இடஞ்சார்ந்த சிறும மதிப்பை அடைகிறது.
\(\therefore\) இடஞ்சார்ந்த சிறும மதிப்பு
\(f(1)=\cfrac { 1 }{ 3 } -\log1=\cfrac { 1 }{ 3 } -0=\cfrac { 1 }{ 3 } \)
7.
படத்திலிருந்து,\(\cfrac { r }{ h } =\cfrac { 5 }{ 12 } \) \(\Rightarrow\) \(r=\cfrac { 5h }{ 12 } \)
கொடுக்கப்பட்ட கன அளவின் மாறுவீதம் \(\cfrac { dv }{ dt } =10\)
h=8 எனும்போது \(\cfrac { dh }{ dt } \) ஐக் காண வேண்டும்
கூம்பின் கன அளவு \(V=\cfrac { 1 }{ 3 } { \pi r }^{ 2 }\)h
\(V=\cfrac { \pi }{ 3 } \left( \cfrac { 5h }{ 12 } \right) ^{ 2 }h\)
\(V=\cfrac { \pi }{ 3 } \left( \cfrac { 25{ h }^{ 3 } }{ 144 } \right) =\cfrac { 25\pi }{ 432 } { h }^{ 3 }\)
't' ஐப் பொறுத்து வகைப்படுத்த
\(\cfrac { dv }{ dt } =\cfrac { 25\pi }{ 432 } \left( 3{ h }^{ 2 } \right) \cfrac { dh }{ dt } \)
\(10=\cfrac { 25\pi }{ 432 } \left( 3\left( 8 \right) ^{ 2 } \right) \cfrac { dh }{ dt } \) \(\left[ \therefore h=8 \right] \)
\(\therefore \cfrac { dh }{ dt } =\cfrac { 1 }{ \pi } \cfrac { 432\times 10 }{ 3\times 25\times 64 } =\cfrac { 4320 }{ 4800\pi } \)
= \(\cfrac { 0.9 }{ \pi } =\cfrac { 9 }{ 10\pi } \)
ஃ நீரின் ஆழம் நிமிடத்திற்கு \(\cfrac { 9 }{ 10\pi } \) மீ வேகத்தில் அதிகரிக்கிறது.
8.
முதல் 4 வினாடிகளில் துகள் பயணித்த தூரம்
\(s(0)=-4\)
\(s(1)=2\left( 1 \right) ^{ 3 }-9\left( 1 \right) ^{ 2 }+12(1)-4\)
= 2-9+12-4 = 1
\(s(2)=2(2)^{ 3 }-9\left( 2 \right) ^{ 2 }+12(2)-4\)
= \(16-36+24-4\) = 0
\(s(3)=2\left( 3 \right) ^{ 3 }-9\left( 3 \right) ^{ 2 }+12\left( 3 \right) -4\)
= \(54-81+36-4\) = 5
\(s(4)=2\left( 4 \right) ^{ 3 }-9\left( 4 \right) ^{ 2 }+12(4)-4\)
= \(128-144+48-4\) = 28
முதல் 4 வினாடிகளில் துகள் பயணித்த தூரம்
= \(|s(0)+s(1)|+|s(1)-s(2)|+|s(2)-s(3)|+|s(3)-s(4)|\)
= \(|-4-1|+|1-0|+|0-5|+|5-28|\)
= \(|-5|+|1|+|-5|+|-23|\)
= 5+1+5+23 = 34 மீ .
9.
x=2 எனும்போது சார்பு வரையறுக்கப்படாததாகிறது.
\(\therefore x=2\) என்பது நிலைக்குத்துத் தொலைத் தொடுகோடு,வளைவரைக்கு கிடைமட்டத்தொலைத்தொடுகோடு இல்லை,சாய்ந்த தொலைத் தொடுகோட்டை,பல்லுறுப்புக் கோவைகளின் நீண்ட வகுத்தல் மூலம் காணலாம்.
\(\therefore y=\cfrac { x }{ 3 } +\cfrac { 8 }{ 3 } \) (அல்லது) \(3y=x+8\) என்பது சாய்ந்த தொலைத்தொடுகோடாகும்.
10.
கன சதுரத்தின் கன அளவு \(v={ x }^{ 3 }\)
மாறுவீதம் \(\cfrac { dv }{ dx } ={ 3x }^{ 2 }\)
x = 5 அலகுகள் எனும்போது \(\cfrac { dv }{ dx } =3(5)^{ 2 }=3(25)\)
= 75 அலகுகள்.
11.
\(\underset{x\rightarrow 1^{+}}{\lim}(\frac{2}{x^{2}-1}-\frac{x}{x-1})\) [ \(\infty -\infty \) தேரப்பெறா வடிவம் சுருக்கக் கிடைப்பது
= \(\underset { x\rightarrow { 1 }^{ + } }{ \lim } \left[ \cfrac { 2-x(x+1) }{ { x }^{ 2 }-1 } \right] \)
= \(\underset { x\rightarrow 1^{ + } }{ \lim } \left[ \cfrac { 2-{ x }^{ 2 }-x }{ { x }^{ 2 }-1 } \right]\) \([\frac{0}{0}\) தேரப்பெறா வடிவம் லோபிதாலின் விதியைப் பயன்படுத்த,
= \(\underset { x\rightarrow { 1 }^{ + } }{ \lim } \cfrac { -2x-1 }{ 2x } =-\cfrac { 3 }{ 2 } \)
12.
\(f(x)=log\left( 1-x \right)\) என்க\(-1\le x<1\)
\(f(x)=log\left( 1-x \right) \quad f(0)=0\)
\(f'(x)=-\cfrac { 1 }{ 1-x } \quad f'(0)=-1\)
\(f''(x)=-\cfrac { 1 }{ \left( 1-x \right) ^{ 2 } } \quad f''(0)=-1\)
\(f'''(x)=-\cfrac { 2 }{ (1-x)^{ 3 } } f'''(0)=-2\)
\({ f }^{ IV }\left( x \right) =-\cfrac { 6 }{ (1-x)^{ 4 } } { f }^{ IV }(0)=-6\)
மெக்லாரின் விரிவு
\(f(x)=\overset { \infty }{ \underset { n=0 }{ \Sigma } } \cfrac { { f }^{ (n) }(0){ x }^{ n } }{ n! } \)
\(f(0)+\cfrac { f'(0) }{ 1! } x+\cfrac { f''(0) { x }^{ 2 }}{ 2! }+...+\cfrac { { f }^{ (n) }(0){ x }^{ n } }{ n! } +...\)
\(\log(1-x)=0\cfrac { 1 }{ 1! } x-\cfrac { 1 }{ 2! } { x }^{ 2 }-\cfrac { 2 }{ 3! } { x }^{ 3 }-\cfrac { 6 }{ 4! } { x }^{ 4 }+...\)
\(=-\left[ x+\cfrac { { x }^{ 2 } }{ 2 } +\cfrac { { x }^{ 3 } }{ 3 } +\cfrac { { x }^{ 4 } }{ 4 } +... \right] \)
13.
\(f(x)=\cfrac { x+1 }{ x } ,x\in \left[ -1,2 \right] \)
f(0)=வரையறுக்கப்படாதது.
f(0)= என்பது x=0 ல் தொடர்ச்சியற்றது.
எனவே, லெக்ராஞ்சியின் சராசரி மதிப்புத் தேற்றத்தைப் பயன்படுத்த முடியாது.
14.
\(f(x)=\sqrt { x } -\cfrac { x }{ 3 } ,x\varepsilon \left[ 0,9 \right] \)
\(f(0)=0,f(9)=\sqrt { 9 } -\cfrac { 9 }{ 3 } =3-3=0\)
\(\Rightarrow f\left( 0 \right) =0=f(9)\)
f(x) என்பது [0,9]ல் தொடர்ச்சியானது
f(x) என்பது (0,9)ல் வகையிடத்தக்கது.
இப்போது \(f'\left( x \right) =\cfrac { 1 }{ 2\sqrt { x } } -\cfrac { 1 }{ 3 } \)
தொடுகோடு, x அச்சுக்கு இணை என்பதால்,
\(f'(x)=0\)
\(\cfrac { 1 }{ 2\sqrt { x } } -\cfrac { 1 }{ 3 } =0\Rightarrow \cfrac { 1 }{ 2\sqrt { 3 } } =\cfrac { 1 }{ 3 } \)
\(\sqrt { x } =\cfrac { 3 }{ 2 } \)
\(x=\cfrac { 9 }{ 4 } \)
\(x=\cfrac { 9 }{ 4 } \in \left( 0,9 \right) \)
15.
\(y=x \sin x;\left( \cfrac { \pi }{ 2 } ,\cfrac { \pi }{ 2 } \right) \)
'x' ஐப் பொறுத்து வகைப்படுத்த
\(\cfrac { dy }{ dx } =x \cos x+ \sin x\)
தொடுகோட்டின் சாய்வு \('m'=\left( \cfrac { dy }{ dx } \right) _{ \left( \pi /2,\pi /2 \right) }\)
= \(\cfrac { \pi }{ 2 } cos\cfrac { \pi }{ 2 } +sin\cfrac { \pi }{ 2 } =1\)
செங்கோட்டின் சாய்வு \(-\cfrac { 1 }{ m } =-1\)
தொடுகோட்டின் சமன்பாடு
\(y-{ y }_{ 1 }=m(x-{ x }_{ 1 })\)
\(\Rightarrow y=\cfrac { \pi }{ 2 } =1\left( x-\cfrac { \pi }{ 2 } \right) \)
\(\Rightarrow x-y=0\)
செங்கோட்டின் சமன்பாடு
\(y-{ y }_{ 1 }=-\cfrac { 1 }{ m } \left( x-{ x }_{ 1 } \right) \)
\(\Rightarrow y-\cfrac { \pi }{ 2 } =-1\left( x-\cfrac { \pi }{ 2 } \right) \)
\(\Rightarrow y-\cfrac { \pi }{ 2 } =-x+\cfrac { \pi }{ 2 } \)
\(\Rightarrow x+y-\pi =0\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards