12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 31/10/2019
தனிநிலைக் கணிதம்
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
ℤ0 = அனைத்து ஒற்றை முழு எண்களின் கணம் எனில் ℤo -ன் மீது இயற்கணித செயலி + ஆனது (i) அடைவு பண்பு (ii) பரிமாற்றுப் பண்பு (iii) சேர்ப்புப் பண்பு (iv) சமனிப் பண்பு மற்றும் (v) எதிர்மறைப் பண்பு ஆகியவற்றைப் பெற்றுள்ளதா எனச் சரிபார்க்க.
2.
ℤe ன் மீது + என்ற ஈருறுப்புச் செயலி (i) அடைவுப் பண்பு (ii) பரிமாற்றுப் பண்பு (iii) சேர்ப்புப் பண்பு (iv) சமனிப் பண்பு மற்றும் (v) எதிர்மறைப் பண்பு ஆகியவைகளை பெற்றுள்ளதா எனச் சரிபார்க்க. இங்கு ℤe = அனைத்து இரட்டை முழு எண்களின் கணம்.
3.
ℤ -ன் மீது இயற்கணித செயலி ' − ' ஆனது
(i) அடைவுப் பண்பு (ii) பரிமாற்றுப் பண்பு (iii) சேர்ப்புப் பண்பு (iv) சமனிப் பண்பு மற்றும் (v) எதிர்மறைப் பண்பு ஆகியவைகளை கொண்டுள்ளதா எனச் சரிபார்க்க.
4.
R -ன் மீது ∗ ஆனது (a * b) = a + b + ab - 7 என வரையறுக்கப்பட்டால் ∗ , R -ன் மீது அடைவு பெற்றுள்ளதா? அவ்வாறெனில் \(3\ast \left( \frac { -7 }{ 15 } \right) \) காண்க.
5.
Z -ன் மீது \(*\) என்ற செயலி பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது. (m \(*\) n) = mn + nm: ∀m,n \(\in\) Z. \(*\) ஆனது Z -ன் மீது அடைவுப் பண்பை பெற்றுள்ளதா?
6.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு கூற்றுகள் p மற்றும் q -க்கு பின்வருபவைகளை எழுதுக.
(i) நிபந்தனைக் கூற்று
(ii) மறுதலைக் கூற்று
(iii) எதிர்மறைக் கூற்று
(iv) நேர்மாறுக் கூற்று p : பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது
q: ஊட்டி கேரளாவில் உள்ளது.
7.
இன்று திங்கள் எனில், பிறகு 4 + 4 = 8, என்பதனை p→q -ஆகக் கருதுக,
8.
\(\mathbf{A}=\{a+\sqrt{5} \mathbf{b}: \mathbf{a}, \mathbf{b} \in \mathbb{Z}\}\) என்க. வழக்கமான பெருக்கல் A -ன் மீது ஓர் ஈருறுப்புச் செயல் ஆகுமா என பரிசோதிக்க.
9.
பின்வருபவைகளில் எது உண்மையல்ல?
ஒரு கூற்றின் மறுப்பின் மறுப்பு அக்கூற்றேயாகும்.
ஒரு மெய்மை அட்டவணையில் இறுதி நிரல் முழுவதும் T எனில் அது ஒரு மெய்மமாகும்.
ஒரு மெய்மை அட்டவணையில் இறுதி நிரல் முழுவதும் F எனில் அது ஒரு முரண்பாடாகும்.
p மற்றும் q ஏதேனும் இரு கூற்றுகள் எனில் p ↔ q என்பது ஒரு மெய்மமாகும்.
10.
p ∧ (¬p V q) என்ற கூற்று _______.
ஒரு மெய்மம்
ஒரு முரண்பாடு
p Λ q -க்கு தர்க்க சமானமானவை
p V q -க்கு தர்க்க சமானமானவை
11.
¬( p V q) V [ p V ( p Λ ¬r)] -ன் இருமம் _______.
¬( p Λ q) Λ [ p V ( p Λ ¬r)]
( p Λ q) Λ [ p Λ ( p V ¬r)]
¬( p Λ q) Λ [ p Λ ( p Λ r)]
¬( p Λ q) Λ [ p Λ ( p V ¬r)]
12.
பின்வருபவைகளில் எது சரியல்ல? p மற்றும் q ஏதேனும் இரு கூற்றுகளுக்கு பின்வரும் தர்க்க சமானமானவைகள் பெறப்படுகிறது.
¬( p V q) ≡ ¬p Λ ¬q
¬( p Λ q) ≡ ¬p V ¬q
¬( p V q) ≡ ¬p V ¬q
¬ (¬p) ≡ p
13.
ㄱ( p V ㄱq) -ன் மெய்மை அட்டவணையில் கடைசி நிரலில் வரும் மெய் மதிப்பு 'F' விளைவுகளின் எண்ணிக்கை_______.
1
2
3
4
1.
ℤo = {2k + 1:k ∈ ℤ} = {...,−5,−3,−1,1,3,5,...} என்ற அனைத்து ஒற்றை முழுக்களைக் கொண்ட கணத்தைக் கருதுக. கூட்டல் + ஆனது ℤo -இன் மீது ஓர் ஈருறுப்புச் செயல் ஆகாது. ஏனெனில், x = 2m + 1,y = 2n + 1 எனும்பொழுது x + y = 2(m + n)+2 என்பது அனைத்து m,n-க்கும் இரட்டை எண்ணாகவே அமையும். எடுத்துக்காட்டாக, 3, 7 ∈ ℤo என்ற இரு ஒற்றை எண்களைக் கருதுக. அவைகளின் கூடுதல் 3 + 7 = 10 என்பது ஓர் இரட்டை எண்ணாகும். பொதுவாக, x, y∈ ℤ0 எனில், (x+y)∉ℤ0 ஆகும். + ஆனது ℤo ன் மீது ஓர் ஈருறுப்புச் செயல் அல்லாததால் ஏனையப் பண்புகளைச் சரிபார்க்க வேண்டிய அவசியமில்லை.
2.
ℤe ={2k | k ∈ ℤ}={...,−6,−4,−2,0,2,4,6,...} என்ற இரட்டை முழு எண்களின் கணத்தைக் கருதுக.
ℤe -ன் மீது கூட்டலின் ' + ' என்ற ஈருறுப்புச் செயலியைக் கொண்டு பின்வரும் பண்புகளைச் சரிபார்க்கலாம்.
(i) ஏதேனும் இரண்டு இரட்டை முழு எண்களின் கூடுதல் ஓர் இரட்டை முழு எண் ஆகும்.
ஏனெனில், x y ∈ ℤe ⇒ x = 2m , மற்றும் y= 2n, m,n ∈ ℤ.
எனவே , (x+y) =2m + 2n = 2(m+n) ∈ ℤe . எனவே , ℤe -ன் மீது ' + ' ஆனது அடைவுப் பண்பு பெற்றுள்ளது.
(ii) ∀x, Y∈ ℤe , (x+y)=2(m+n)=2(n+m)=(2n+2m)=(y+x).
எனவே , + ஆனது பரிமாற்று விதியை நிறைவு செய்கிறது.
(iii) இதேபோல், ∀x, y z ∈ ℤe , (x+y)+z=x+(y+z).
எனவே, சேர்ப்பு விதியும் உண்மையாகிறது.
(iv) x= 2k எனக் கொள்க . 2k+e=e+2k=2k⇒e=0.
எனவே ,∀x ∈ ℤe ∃0∈ ℤe ⋺x+0=0+x=x .
ஆகையால், 0 சமனி உறுப்பாகும்.
(v) x= 2k என எடுத்துக் கொண்டால், இதன் எதிர்மறை x′ ஆனது பின்வருமாறு பெறப்படுகிறது.
2k+x'=0=x'+2k⇒x'=−2k. அதாவது x'= −x.
எனவே , ∀x ∈ ℤe ,∃−x∈ℤe ⋺x+(−x)=(−x)+x=0
எனவே , −x என்பது x -ன் எதிர்மறை ஆகும்.
3.
(i) கழித்தல் '− ' ஆனது ℕ ன் மீது ஓர் ஈருறுப்புச் செயல் அல்ல . ஆனால் ℤ ன் மீது ஓர் ஈருறுப்புச் செயல் ஆகும். எனவே , மேலும் சில பண்புகளை '–' என்ற ஈருறுப்புச் செயலியைக் கொண்டு ℤ ன் மீது எளிதான மதிப்புகளுக்குச் சரிபார்ப்பது நல்லது.
(ii) m = 4 , n = 5 எனில், (m−n) = (4−5) = −1 மற்றும் (n−m)=(5−4)=1.
இங்கு (m−n) ≠ (n−m). எனவே , ' − ' ஆனது ℤ -இன் மீது பரிமாற்றுப் பண்பை நிறைவு செய்யாது.
(iii) (m−n)− p மற்றும் m−(n−p) போன்றவரில் m=4,n=5 மற்றும் p = 7 என்ற
(m−n)−p=(4−5)−7=(−1−7)=−8 மற்றும் ...(1)
m−(n−p)=4−(5−7)=(4+2)=6. ...(2)
(1), (2) -லிருந்து (m−n)−p≠m−(n−p).
எனவே , '–' ஆனது ℤ -ன் மீது சேர்ப்புப் பண்பை நிறைவு செய்யாது.
(iv) சமனி உறுப்பு இல்லை. (ஏன்?)
(v) எதிர்மறை உறுப்பு இல்லை (ஏன்?)
4.
\((\mathrm{a} * \mathrm{~b})=\mathrm{a}+\mathrm{b}+\mathrm{ab}-7, \forall a, b \in \mathbb{R}\)
\(a \in \mathbb{R}, b \in \mathbb{R}\) எனில் \(a b \in \mathbb{R}\)
\(\therefore(a * b)=a+b+a b-7 \in \mathbb{R}\)
உதாரணமாக\(\ 1,2\in R\) என்க.
\(\\ (1\ast 2)=1+2+(1)(2)-7\)
= \(-2 \in \mathbb{R}\)
\(\therefore \ast \) என்பது R-ன் மீது ஈருறுப்புச் செயலியாகும்.
இப்போது \(3\ast \left( -\cfrac { 7 }{ 15 } \right) =3+\left( -\cfrac { 7 }{ 15 } \right) +3\left( -\cfrac { 7 }{ 15 } \right) -7\)
= \(3-\cfrac { 7 }{ 15 } -\cfrac { 21 }{ 15 } -7\)
= \(-\cfrac { 88 }{ 15 } \)
5.
\((\mathrm{m} * \mathrm{n})=\mathrm{m}^{\mathrm{n}}+\mathrm{n}^{\mathrm{m}}, \forall \mathrm{m}, \mathrm{n} \in \mathbb{Z}\)
\(-2,2 \in \mathbb{Z}\) என்பதைக் கருதுவோம்.
\((\mathrm{m} * \mathrm{n})=(-2 * 2)=(-2)^2+(2)^{-2}\)
= \(4+\cfrac { 1 }{ 4 } =\cfrac { 14 }{ 7 } \notin Z\)
எனவே \(*\) என்பது Z ல் அடைவுப் பண்பை பெறவில்லை.
6.
p மற்றும் q சம்பந்தப்பட்ட நான்கு விதமான நிபந்தனைக் கூற்றுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
(i). p → q: (நிபந்தனைக் கூற்று) “பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது எனில் பின்னர் ஊட்டி கேரளாவில் உள்ளது”.
(ii). q → p: (மறுதலைக் கூற்று) “ஊட்டி கேரளாவில் உள்ளது எனில், பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது”
(iii). ¬ p → ¬q (எதிர்மறைக் கூற்று) “பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது அல்ல எனில், ஊட்டி கேரளாவில் இல்லை”.
(iv). ¬ q → ¬p (நேர்மாறுக் கூற்று) “ஊட்டி கேரளாவில் இல்லை எனில், பின்னர் பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது அல்ல”.
7.
இங்கு உள்கூற்றுகள் p மற்றும் q பின்வருமாறு கொடுக்கப்படுகிறது.
p: இன்று திங்கள் கிழமை; q: 4 + 4 = 8.
q –ன் முடிவானது T என்பதால் p → q -ன் மெய்மதிப்பு T ஆகிறது.
ஒரு முக்கியமான கருத்து என்னவென்றால் p மற்றும் q-ன் வாக்கியங்களின் அர்த்தங்களை கருத்தில் கொண்டு p → q ஐ செயல்படுத்தக்கூடாது. மேலும் p என்பது q வுடன் தொடர்புடையதாக இருக்கவேண்டிய அவசியமில்லை.
விளைவுகள் :
p → q என்ற நிபந்தனைக் கூற்றிலிருந்து மேலும் மூன்று நிபந்தனைக் கூற்றுகள் வருவிக்கப்படுகின்றன. அவைகள் கீழே பட்டியலிடப்படுகிறது.
(i) மறுதலைக் கூற்று (Converse statement) q → p .
(ii) எதிர்மறைக் கூற்று (Inverse statement) \(\neg p \rightarrow \neg q .\)
(iii) நேர்மாறுக் கூற்று (Contrapositive statement) \(\neg q \rightarrow \neg p\)
8.
\(\begin{aligned}
A=\{a+\sqrt{5} b ; a, b \in \mathbb{Z}\}
\end{aligned}\)
\(\begin{aligned}
1,2 \in \mathbb{Z} \Rightarrow a+\sqrt{5} b=1+2 \sqrt{5} \in A
\end{aligned}\) மற்றும்
\(\begin{aligned}
2,3 \in \mathbb{Z} \Rightarrow a+\sqrt{5} b=2+3 \sqrt{5} \in A
\end{aligned}\) என்க.
வழக்கமான பெருக்கலை ஈருறுப்புச் செயலியாகக் கொள்க.
\((1+2 \sqrt{5}) \cdot(2+3 \sqrt{5})=(32+7 \sqrt{5}) \in A\) எனவே, வழக்கமான பெருக்கல், Aன் மீது ஓர் ஈருறுப்புச் செயலி ஆகும்.
9.
p மற்றும் q என்பன ஏதேனும் இரு கூற்றுகள் எனில்
p ↔ q என்பது ஒரு மெய்மம் ஆகும்.
p ↔q என்பது ஒரு நிச்சயமின்மை.
10.
\(\mathrm{p} \wedge(\neg \mathrm{p} \vee \mathrm{q}) \equiv(\mathrm{p} \wedge \neg \mathrm{p}) \vee(\mathrm{p} \vee \mathrm{q}) \equiv \mathbb{F} \vee(\mathrm{p} \wedge \mathrm{q}) \equiv \mathrm{p} \wedge \mathrm{q}\)
11.
இரட்டைத் தன்மை என்பது Λ, V ஆகியவற்றுக்கு முறையே V, Λ களை பதிலிடுவதன் மூலம் பெறப்படுகிறது.
12.
(c)
¬( p V q) ≡ ¬p V ¬q
13.
| p | q | \(\neg \mathbf{q}\) | \(\mathbf{p} \vee(\neg \mathbf{q})\) | \(\neg(\mathbf{p} \vee(\neg \mathbf{q}))\) |
| T | T | F | T | F |
| T | F | T | T | F |
| F | T | F | F | T |
| F | F | T | T | F |
கடைசி நிரலில் உள்ள 'F' களின் எண்ணிக்கை 3
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards